இயேசு கிறிஸ்து தேவனாகிய யெகோவாவின் முதல் சிருஷ்டி , இயேசுவே தன்னைத் தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியானவர் என்றும், அப். பவுல் இவரை “சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்” என்றும் கூறுகிறார். வெளி 3:14, கொலோ 1:15.
இவர் தேவனுடைய
''ஒரே பேறான குமாரன் ” ;என்றும் முதற்பேறானவர்” என்றும் அழைக்கப்படுகிறார். யோவா 3:16, சங் 89:27, எபி 1:6. இவர் ஒருவரே பிதாவாகிய தேவன் யேகோவாவினால் நேரடியாய் சிருஷ்டிக்கப்பட்டவர். மற்ற யாவையும் தேவன் தமது குமாரனாகிய இயேசுவின் மூலம் சிருஷ்டித்தார். ஆதலால் இவரை தேவனுடைய ஒரே பேறான குமாரன் என்று அழைக்கப்படுகிறார்.
சாலொமோன் ராஜா பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டு தேவனுடைய முதல் சிருஷ்டியாகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். “கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வ முதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். “யேகோவா தமது சிருஷ்டிகளில் என்னையே முதலாவதாக சிருஷ்டித்தார். அல்லது படைத்தார்.” என்று திருத்திய ஆங்கில மொழிபெயர்ப்புகளிலும், தமிழ் புதிய திருப்புதலிலும் அவ்வாறே இருக்கிறது.நீதி 8:22
பூமி உண்டாகும் முன்னும் ஆதி முதற்கொண்டும், அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன். ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகு முன்னே நான் ஜெநிபிக்கப்பட்டேன். மலைகள் நிலைப்பெறுவதற்கு முன்னும், குன்றுகள் உண்டாவதற்கு முன்னும், அவர் பூமியையும், அதன் வெளிகளையும், பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும், உண்டாக்கு முன்னும், நான் ஜெநிப்பிக்கப்பட்டேன். அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன் : அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும், உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து, சமுத்திரத்தின் ஊற்றுகளை அடைத்து வைக்கையிலும், சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு, பூமியின் அஸ்திவாரங்களை நிலைப்படுத்துகையிலும், நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன் : நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமூகத்தில் களி கூர்ந்தேன்:” என்று எழுதப்பட்டிருக்கிறது. நீதி 8:23-30.
தேவனுடைய முதற்பேறான குமாரனாகிய இயேசுவுக்கு “ஞானம் ” என்னும் ஓர் பெயரும் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத் 11:19; 1கொரி 1:31. ஜெநிப்பிக்கப்பட்டேன் என்பதற்கு பிறப்பிக்கப்பட்டேன் அல்லது சிருஷ்டிக்கப்பட்டேன் என்று அர்த்தம். ஆதி 1:20 இயேசு பிதாவாகிய தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்.
இயேசு கிறிஸ்துவுக்கு தேவனுடைய ''வார்த்தை'' என்ற ஓர் நாமமும் உண்டு. வெளி 19:13. அரசனுடைய பிரதிநிதியாக பேசுகிற ஒருவனை கிரேக்க பாஷையில் “LOGOS” – “லோகாஸ்” அதாவது “வார்த்தை” என்று அழைத்தார்கள். தேவனாகிய யேகோவா தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் உலகத்தாருடன் பேசியபடியால் அவருக்கு “தேவனுடைய வார்த்தை” என்னும் பெயர் பொருத்தமாயிருக்கிறது. யோவான் 12:49. உபா 18:18,19. அப் 3:22:23; எபி 1:1:2. இக்காரணத்தை முன்னிட்டு யோவான் 1:1-3யில் இவ்வாறு எழுதப்பட்டிருக்கிறது. “ஆதியிலே வார்த்தை இருந்தது. அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார். பிதாவாகிய தேவன் யோகோவாவிடம், வார்த்தை எனப்பட்ட குமாரனாகிய இயேசு, தேவனாக இருந்தார் என்று காட்டப்பட்டிருக்கிறது.
எபிரெய பாஷையில் “எல்லோயிம்” (“ELOHIM”) என்னும் பதம் “தேவன்” என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. “எல்லோயிம்” என்றால் “வல்லவர்” என்று அர்த்தம். இந்த அர்த்தத்தின்படி, வல்லவர்களான மோசே, நியாயாதிபதிகள், தூதர்கள், தேவனுடைய வார்த்தையைப் பெற்ற வேதனுடைய குமாரர்கள் யாவரையும் “தேவர்கள்” என்று அழைக்கப்பட்டிருக்கிறது. யாத் 4:16; 7:1. (தேவர்கள் = நியாயாதிபதிகள் யாத் 22:28) சங் 82:1-6. யோவான் 10:34-36. பொல்லாத கிரியைகளில் ஓர் வல்லவனாயிருக்கும் சாத்தானையும் “இப்பிரபஞ்சத்தின் தேவன்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. 2 கொரி 4:4.
கீழ்க்கண்ட இந்த வசனத்தை கிரேக்க பாஷையில் உள்ளபடி பார்த்தால், “In the beginning was the Logos, and the Logos was with THE GOD and a god was the word” என்று இருக்கிறது. இவ்விதமாய் கிரேக்க பாஷையில் பிதாவாகிய தேவனை “THE GOD ” - தி காட்= மகாதேவன் என்றும், வார்த்தையானவராகிய இயேசுவை “a god ” ஒரு தேவனாகவு மிருந்தார் (ஏ காட்) என்றும் வித்தியாசப்படுத்திக் காட்டப்பட்டிருக்கிறது. (Diaglott - john.1:1)
பிதாவாகிய தேவன் யேகோவாவை வேதாகமத்தில், தேவாதிதேவன், மகாதேவனும் எல்லா தேவர்களுக்கும் மகாராஜனும், எல்லா தேவர்களிலும் பயப்பட்டத்தக்கவர். தேவர்களை நியாயம் விசாரிக்கும் தேவன், என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. உபா 10:17; சங் 82:1; 95:3; 96:4; 97:7,9; 136:2; 138:1. வானத்திலும் பூமியிலும் தேவர்கள் என்பவர்கள் உண்டாயிருந்தாலும், நமக்கு பிதாவானவரே மெய்த்தேவன், மற்றும் இயேசு கிறிஸ்து, நமது கர்த்தர் 1கொரி. 8:5,6.
திருச்சபையிலுள்ள தேவனுடைய பிள்ளைகளை தேர்வகள் என்றும் சங் 82:1-6. யோவான் 10:34-36. திருச்சபைக்கு தலைவரான இயேசுவை வல்லமையுள்ள தேவன் என்றும் ஏசாயா 9:6, இயேசுவுக்கு தலைவரும், அவரைவிட சகலத்திலும் பெரியவரான பிதாவானவரை “சர்வ வல்லமையுள்ள தேவன்” என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆதி 17:1; 28:3; 35:11; யாத் 6:2,3; வெளி 1:8; 4:8.
அனுப்பப்பட்டவர் தன்னை அனுப்பினவரிலும் பெரியவரல்ல. என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார் என்று இயேசுவே கூறினார். யோவான் 13:16 14: 28 கிறிஸ்துவுக்கு தேவன் தலையாயிருக்கிறார். 1கொரி. 11:3.
பிதாவானவர் குமாரனுக்கு ஜீவனை கொடுத்திருக்கிறார். யோவான் 5:26, இயேசு பிதாவினால் பிழைக்கிறார். யோவான் 6:57; 2கொரி. 13:4. மரித்த இயேசுவை நமது
பிதாக்களின் தேவன் உயிரோடே எழுப்பினார். அப் 2:24-32; 5:30,31.
தேவன் தமது ஒரே பேறான குமாரனை இந்த உலகத்திற்கு அனுப்பினார். பிதாவினிடம் வார்த்தையாயிருந்தவார், மாம்சமானார். அதாவது பரிசுத்த ஆவியாகிய தேவ வல்லமையால் கன்னிமரியாளின் கர்ப்பத்தில் உற்பவித்து, பாலகனாய் பிறந்து, இயேசு என்று அழைக்கப்பட்டு, முப்பத்து மூன்றரை வருஷம் ஜீவித்து, உலகத்தின் பாவங்களுக்காக, தம்மைத்தாமே பரிசுத்த பலியாக மரணத்தில் ஒப்புக்கொடுத்து, பிறகு மூன்றாம் நாள் தேவனால் உயிரோடே எழுப்பப்பட்டு பரலோக மகிமையில் பிரவேசித்தார். யோவான் 1:14; 3:14,15; லூக்கா 1:26-35. எபி 1:1-3. அவர் பிதாவாகிய தேவனுடைய வலது பரிசத்தில் வீற்றிருக்கிறார்.
-- Edited by Dino on Wednesday 23rd of March 2011 02:12:31 AM
__________________
இழந்த இடத்தைப் பிடித்துக்கொள்ளலாம். இழந்த காலத்தையோ, ஒருபோதும் பிடிக்க முடியாது. - நெப்போலியன் ( தமிழ் கிறிஸ்தவ சபை )