kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்களே சிந்திக்கலாமே!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்தவர்களே சிந்திக்கலாமே!!


1 யோவான் 4:9. தம்முடைய ஒரே பேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது.

தேவனின் அன்பை குறித்து யோவான் எழுதிய மடலிலிருந்து வரும் வசனம் இது, இதே போல் அவரின் நற்செய்திலேயும் அவர் இதையே எழுதியிருக்கிறார்,

யோவான் 3:16. தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

தேவன் சாவாமையுள்ளவர், ஆகவே தானாக வராமல், ஆதாம் தொடங்கி கிறிஸ்துவை குறித்து வாக்குத்தத்தங்கள் மூலமாக தீர்க்கதரிசிகளுக்கு வெளிப்படுத்தி, உலகத்தோற்றமுதல் நியமிக்கப்பட்டிருந்த தன் குமாரனை அனுப்பினாராம்!! எத்துனை பெரிதான அன்பு இவர் வைத்திருக்கும் அன்பு!! நாம் மண் என்று அறிந்தும், அவர் நம் மேல் காட்டியிருக்கும் அன்பு அவரின் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவினால் நமக்கு விளங்கச் செய்தார்!! அவர் ஆதாமின் ஈடு பலியாக வேறு ஒரு மனிதனை தேர்ந்தெடுக்காமல், தன் குமாரன், அதுவும் தன் ஒரே பேறான குமாரனை இதற்காக அனுப்பித்தார்!! பரலோகத்திலிருந்து இறங்கி வந்து தன் ஜீவனை கொடுத்து அதை பிதாவினால் மீண்டும் பெற்றுக்கொண்ட கிறிஸ்து இயேசு தேவனின் குமாரனே அன்றி இன்று கிறிஸ்துவர்கள் சொல்லுவது போல் அவர் பிதா அல்ல என்பதற்கு மேலே யோவான் எழுதிய இந்த இரண்டு வசனங்கள் சாட்சியாக இருக்கிறது!!

இதை எதிர்த்து பேசுபவர்கள் உலகத்தார், ஆகவே உலகத்தார் பேசுவது போல் அவர்கள் கிறிஸ்துவை அறியாது இருக்கிறார்கள், மாமிசத்தில் வெளிப்பட்டவர் பிதா என்று சொல்லி வருகிறார்கள்!! ஆனால் வசனம் சொல்லுகிறது தேவன் தமது ஒரே பேறான குமாரனை தான் அனுப்பினார் என்று!! இந்த தூஷனம் பேசுவோருக்காக யோவான் எழுதுகிறார்,

1 யோவான் 4:5. அவர்கள் உலகத்துக்குரியவர்கள், ஆகையால் உலகத்துக்குரியவைகளைப் பேசுகிறார்கள், உலகமும் அவர்களுக்குச் செவிகொடுக்கும்.

ஆகையால் தான் இவர்கள் பேசுவதை கேட்க இத்துனை மக்கள் கூட்டம் கூடுகிறது, ஏனென்றால் இவர்கள் உலகத்தார் போல் பேசுகிறார்கள்!! பூமிக்கு அடுத்த ஆசிர்வாதங்களை தேடுகிறார்கள், ஆகையால் ஒரு கூட்டத்தார் எப்படி வேண்டுமென்றாலும் போதித்து திரளான ஒரு குட்டத்தாரை தம் வசப்படுத்தி வைத்திருப்பதை நாம் காண முடிகிறது!! இன்று கூட்டம் கூட்டமாக கிறிஸ்தவர்கள் எப்படி பட்ட ஆலயங்களுக்கு சென்றுக்கொண்டு இருக்கிறார்கள் என்று நாம் அறிவோம், திரித்துவம் போதிக்கப்படும் ஆலயங்கள், திரியேக தேவனை வழிப்படும் ஆலயங்கள், திரித்துவ தேவனை வழிப்படும் ஆலயங்கள், மொத்தத்தில் உலகத்தார் போல் போதிக்கப்படுகிற ஆலயங்களை நோக்கி தான் கிறிஸ்தவர்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள்!! "உலகமும் அவர்களுக்கு செவிக்கொடுக்கும்" என்று பரிசுத்த ஆவியில் நிறைந்த யோவான் எழுதுகிறார்!! ஆக உலகம் எந்த பக்கம் சென்றுக்கொண்டு இருக்கிறது என்பதை வைத்து, இவர்கள் உலகத்தார் தான் வேதம் சொல்லும் கிறிஸ்தவர்கள் அல்ல என்பதை தெரிந்துக்கொள்ள முடிகிறது!!

நான் இத்துனை ஆயிரம் பேருக்கு ஞானஸ்நானம் தந்தேன் என்று பாஸ்டர்கள் எண்ணிக்கை காண்பிக்கிறார்கள், என் ஆராதனைக்கும் இத்துனை ஜனங்கள் வருகிறார்கள் என்று ஒருவர் சொல்லுகிறார், அந்த போதகருக்கு பின்னால் அத்துனை ஆயிரம் ஜனக்கள் செல்கிறார்கள், அவர் வந்து பேசும் கூட்டத்திற்கு ஐந்து இலட்ட்ச்சத்திற்கு மேல் ஜனங்கள் கூடுகிறார்கள், என்று உலகத்துக்குரியவைகளை மாத்திரமே பேசுகிறார்கள்!! இவர்களுக்கு தேவன் யார் என்றும் அவரின் குமாரனை எதற்கு அனுப்பித்தார் என்கிற அடிப்படை சத்தியம் கூட தெரியாது!! இவர்கள் தங்களின் எண்ணிக்கைகளை காண்பித்துக்கொண்டிருக்கும் அதே வேளையில் நம் எஜ்மானனும், நம் மூத்த சகோதரருமான கிறிஸ்து இயேசுவை பார்த்தோமென்றால், அவரின் பின்னால் சென்றது ஒரு சிறிய கூட்டமே!! அத்துனை பெரிய இஸ்ராயெலில் இருந்து வெறும் 12 பேர் அப்போஸ்தலராகவும் என்னிவிடும்படியான சீஷர்களுமே அவருக்கு இருந்தார்!! ஏன்? ஏனென்றால் சத்தியத்தை பின் பற்றும் கூட்டம் ஒரு சிறிய கூட்டமாக தான் இருக்க முடியும் என்பதை நம் எஜமானன் கிறிஸ்து இயேசு சொல்லியும் இருக்கிறார்,

மத்தேயு 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.

கிறிஸ்து காண்பித்த அந்த இடுக்கமான வாசலை கண்டுபிடிப்பவர்களே சிலர் தான் என்கிறது வேதம்!! அப்படி என்றால் இன்று கோடிக்கணக்கான கிறிஸ்தவர்கள் எந்த பாதையில் நடந்து போயிக்கொண்டிருக்கிறார்கள்!! சிலர் தான் கண்டுபிடிக்க முடியும் என்று கிறிஸ்து இயேசு சொல்லியிருக்கும் அந்த பாதையில் அநேகர் எப்படி நடக்க முடியும்!! அநேகருக்கு அந்த புரிந்துக்கொள்ளுதல் எப்படி வரும்!! ஆகையால் தான் அவர்கள் அநேகராக இருந்துக்கொண்டு உலகத்தார் போல் பேசுகிறார்கள்!!

1 தீமோத்தேயு 2:5. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. 6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

ஆங்கிலத்தில் இந்த வசனத்தை பார்ப்போம்:

Common English Bible (CEB)
1 Timothy 2:
5 There is one God and one mediator between God and humanity, the human Christ Jesus, 6 who gave himself as a payment to set all people free. This was a testimony that was given at the right time.

English Standard Version (ESV)
1 Timothy 2:
5 For there is one God, and there is one mediator between God and men, the man Christ Jesus, 6 who gave himself as a ransom for all, which is the testimony given at the proper time.

Amplified Bible (AMP)
1 Timothy 2:
5 For there [is only] one God, and [only] one Mediator between God and men, the Man Christ Jesus, 6 Who gave Himself as a ransom for all [people, a fact that was] attested to at the right and proper time.

Worldwide English (New Testament) (WE)
1 Timothy 2:
5 There is one God. There is also one man who can open the way between God and all people. That man is Christ Jesus. 6 He gave his life to set all men free. This matter was told at the right time.

New International Reader's Version (NIRV)
1 Timothy 2:
5 There is only one God. And there is only one go-between for God and human beings. He is the man Christ Jesus. 6 He gave himself to pay for the sins of everyone. That was a witness given by God at just the right time.


தமிழில் 6வது வசனம் சொல்லுகிறது, இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது என்று ஆனால் மேலே ஆங்கிலத்தில் உள்ள எந்த வசனமும் அதை அப்படி சொல்லவில்லை, மாறாக கிறிஸ்து தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராம உயர்த்தப்பட்டார் என்பதை தேவன் ஏற்ற சமயத்தில் விளங்கப்பன்னினார் என்று தான் வசனம் இருக்கிறதே தவிர, விளங்கிவருகிறது என்பது தவறான மொழிப்பெயர்ப்பாகும்!! விளங்கப்பன்னினார் என்பதற்கும் விளங்கிவருகிறதற்கும் வித்தியாசம் இருக்கிறது!!

தேவன் என்பவர் ஒருவரே, அந்த தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே தான்!! கத்தோலிக்கர் நம்புவது போல் மரியாளோ, புனிதர்களோ அல்ல, அதன் பின் வந்த 2000 சபை பிரிவினை தலைவர்களும் அல்ல, அல்லது சுயமாக ஊழியம் என்கிற போர்வையில் இருக்கும் பால் தினகரனோ, ஆலன் பாலோ, மோஹன் சீ லாசரசோ, எசேக்கிய ஃப்ரான்ஸிஸோ, பென்னி ஹின்னோ, பால் யாங்கி சோவோ, மார்மோனோ, ரஸ்ஸலோ, ரூதர்ஃபோர்டோ, பிரன்ஹாமோ, மார்ட்டீன் லூத்தரோ, ஏன் இயேசு கூட இருந்த அப்போஸ்தலர் கூட அந்த மத்தியஸ்தர் பதவிக்கு தகுதியுடையவர்கள் கிடையாது!!

தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராக இருக்கும் ஒருவர், அபிஷேகம் செய்யப்பட்டவரும் அபிஷேகம் செய்தவரும் எப்படி ஒருவராக இருக்க முடியும்!?

கிறிஸ்தவர்களே சிந்திக்கலாமே!!


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard