புற்றீசல் போல புறப்பட்டுக் கொண்டிருக்கும் புதுப்புது கிறிஸ்துவ சபைகள் தோன்றி, வளர்ந்து, தரம் உயரும் சபைகள் இன்றைய நாட்களில் ஏராளம். ஐந்தாறு பேர்களுடன் கீற்றுக்கொட்டைகையில் ஆரம்பமாகும் சபைக்கூடங்கள் குறுகிய காலத்திலேயே ஆற்று வெள்ளம்போல் பெருகி காங்கிரிட் ஜெபக்கூடங்களாகவும், ஏன் ஜெப கோபுரங்களாகவும் மாறும் நிலமைகளைக் காண்கிறோம். சைக்கிள், பைக்குகளில் ஊழியம் செய்த பைப்போதகர்கள் கொஞ்ச காலத்திலே சொகுசு கார்களுக்கு சொந்தக்காரர்களாகும் நிலையையும் பார்க்கிறோம். தேவன் இவர்களை அபரிமிதமாக ஆசீர்வதித்ததாகவும் இடங்கொள்ளாமல் போகுமளவுக்கு கொட்டிக்கொடுத்ததாகவும் சொல்லி வாக்குத்தத்த வசனங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அபரிமிதமான வளர்ச்சிக்கும், ஊழியக்காரர்களின் அந்தஸ்து உயர்வுக்கும் காரணம் என்ன? சபைகளை ஆரம்பிக்கும் ஊழியக்காரர்களும் போதகர்களும் தங்களை நம்பிவரும் விசுவாசிகளை அவர்களின் வருமானத்தில் பத்தில் ஒருபங்கான “தசமபாகம்” (TITHE) கொடுக்க வேண்டும் என வற்புறுத்திக் காணிக்கையை கட்டாயப்படுத்துவதே. வேதவசனங்கள் அடிப்படையில் தசமபாகக் காணிக்கையைப்பற்றி பைபிள் கூறும் கருத்துக்களை சிந்திக்க விசுவாசிகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
ஆபிரகாம் கொடுத்த தசம பாகம்
தசமபாகம் குறித்து ஆதியாகமத்தில் இரண்டு இடங்களில் பார்க்கிறோம். கெதர்லா கோமேரையும் அவனோடிருந்த இராஜாக்களையும் முறியடித்து திரும்பி வந்துகொண்டிருந்த ஆபிரகாமுக்கு, உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த சாலேமின் ராஜாவாகிய மெல்கிசேதேக்கு அப்பமும் திராட்சரசமும் கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். அவருக்கு ஆபிரகாம் எல்லாவற்றிலும் தசமபாகம் கொடுத்தான். (ஆதி 14:18-20) இந்த நிகழ்வை எபிரேய நிருப ஆசிரியரும் எடுத்துக் கூறியுள்ளார். (எபி 7:4)
யாக்கோப்பின் பொருத்தனை
யாக்கோபு, பெத்தேல் என்ற இடத்தில் தேவனோடு செய்து கொண்ட பொருத்தனையில், தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன் என்று சொன்னான் (ஆதி 28:22)
மோசேயின் நியாயப் பிரமாணத்தில் தசமபாகக் கட்டளை:
தேவன் ஆபிரகாமுக்கு வாக்குத்தத்தம் பண்ணினபடியே யாக்கோப்பின் குமாரர்களான இஸ்ரயேல் கோத்திரங்களை கானான் தேசத்திலே பிரவேசிக்கப்பண்ணி, அவர்களுக்கு அந்த தேசத்தை சுதந்திரமாகக் கொடுத்தார். லேவி யாக்கோப்பின் குமாரனாயிருந்தும் லேவி கோத்திரத்தாருக்கோ தேசத்தில் பங்கும் சுதந்திரமும் கொடுக்கவில்லை. யாக்கோப்பின் மற்ற குமாரர்களான பனிரெண்டு கோத்திரங்களுக்கு தேசம் காணியாட்சியாக யோசுவாவினால் பங்கிடப்பட்டது. ஆனால் மோசே சொன்னபடி லேவியின் புத்திரர்களுக்கு குடியிருக்கும் பட்டணங்களும் அவர்கள் ஆடுமாடுகள் மேய்வதற்கு அதை சுற்றிலுமுள்ள வெளிநலங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது. (யோசு 14:1-5) தேவன் லேவி கோத்திரத்ததை தனக்காக பிரித்தெடுத்துக்கொண்டார். (எண் 3:12) ஆசரிப்புக்கூடார பணிவிடைக்காகவும் ஆசாரிய ஊழியத்துக்கென்றும் பிரித்தெடுத்துக்கொண்டதினாலே தேசத்தில் அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்காமல் தேவனே அவர்கள் சுதந்திரமாக இருந்தார். (உபா10:9;18:1,2) லேவி கோத்திரத்தார் ஆசரிப்புக் கூடார பணிவிடைகளை மட்டுமே செய்தார்கள். லேவியர் தங்கள் பிழைப்புக்காக வேறெந்த தொழிலையும் செய்யாதிருந்தார்கள் ஆகவே லேவியர் போஜிக்கப்படும்படிக்கு லேவியின் மற்ற சகோதரர்கள் தங்கள் காணியாட்சியில் விளைந்த தானியங்களிலும் தங்கள் மந்தைகளிலும் மற்றும் தங்களுக்குண்டான எல்லாவற்றிலும் தசமபாகம் (TITHE-பத்தில் ஒரு பாகம்) தேவனுடைய காணிக்கையாக கொடுக்க வேண்டும். இஸ்ரயேலர்கள் தேவனுக்கு கொடுக்கும் தசமபாகம் லேவியரின் சுதந்திரமாயிற்று. (எண் 18:20-24) இஸ்ரயேலர் கையிலிருந்து லேவியர் வாங்கின தசமபாகத்தில் பத்தில் ஒரு பங்கை ஆசாரியருக்கு கொடுத்தார்கள் (எண் 18:26-28)
இஸ்ரயேலர் தங்கள் காணியாட்சியில் விளைந்த நிலத்தின் தானியத்திலும் விருட்சத்தின் கனிகளிலும் தங்கள் மந்தையிலுள்ள ஆடுமாடுகளிலும் பத்தில் ஒருபங்கு கொடுக்கும் தசமபாகம் தேவனுக்குரிய காணிக்கையாகும். (லேவி 27:30) லேவியர் தேவனின் ஊழியக்காரர்களாக ஆசரிப்புக்கூடாரத்துக்கடுத்த பணிவிடைகளை செய்வதால் தேவனுக்குரிய தசமபாக காணிக்கை லேவியர்களின் சுதந்திரமாயிற்று. மோசேயின் நியாயப்பிரமாணத்தில் இந்த தசமபாக காணிக்கை கட்டாயமாக வலியுறுத்தப்பட்டது. ஏனெனில் லேவியரும் ஆசாரியரும் போஜிக்கப்பட இஸ்ரயேல் ஜனங்கள் தசமபாகம் கொடுப்பது அவசியமாய் இருந்தது. தசமபாக பிரமாணத்தை உண்மையாய் நிறைவேற்றுவது இஸ்ரயேலருக்கு ஆசீர்வாதமாகும். தசமபாகத்தில் உண்மையில்லாது அதை வஞ்சிப்பது அவர்களுக்கு சாபமாகவும் இருக்கும். (மல் 3:8-10) ஆகவே தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரயேலர் தசமபாகத்தில் உண்மையாக இருக்கவேண்டும் என்பது தேவனுடைய சித்தமாய் இருந்தது. இவ்விதமாக லேவியர் தங்கள் சகோதரர்களான ஜனங்களின் கையிலேநியாயப்பிரமாணத்தின்படி தசமபாகம் வாங்குவதற்குக் கட்டளை பெற்றார்கள். (எபி 7:5)
நியாயப்பிரமாணம் முடிவுக்கு வந்தது
நிழலான பலிகளையும் காணிக்கைகளையும் குறித்த நியாயப்பிரமாணம் முழுவதையும் இயேசுகிறிஸ்து நிறைவேற்றி நியாயப்பிரமாணத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார். (ரோமர் 10:4). இயேசுகிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாக இருப்பதால் கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளான புதிய சிருஷ்டிக்கு நியாயப்பிரமாண கட்டளைகளை கைக்கொள்வது அவசியமல்ல. அது சபையின் ஆரம்ப காலத்திலேயே விலக்கி வைக்கப்பட்டது. நியாயப்பிரமாணம் நம்மாலும் நம்முடைய பிதாக்களாலும் சுமக்கக் கூடாதிருந்த நுகத்தடி இதை புறஜாதியாரிலிருந்து வந்த சீஷர்கள் கழுத்தில் சுமத்தக்கூடாது என எருசலேமில் கூடிய சபையாராலும் அப்போஸ்தலர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. (அப் 15:10) எங்களால் கட்டளை பெறாத சிலர் விருத்தசேதனத்தை அடையவும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவும் வேண்டும் என்று சொல்லி இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி உங்கள் ஆத்துமாக்களை புரட்டுகிறார்கள் என்றும் நியாயப்பிரமாண கட்டளைகளை அனுசரிக்க தேவையில்லையெனவும் புறஜாதி விசுவாசிகளுக்கு அப்போஸ்தலர்கள் எழுதி அனுப்பினார்கள். (அப் 15:24-29) கிறிஸ்துவ விசுவாசிகள் நியாயப்பிரமாணத்தை அனுசரிக்க தேவையில்லை என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் விவரித்து கூறுகிறார். இயேசு கிறிஸ்து நம்முடைய சமாதான காரணராகி இருதிறத்தாரையும் (இஸ்ரயேலர்,புறஜாதியார்) ஒன்றாக்கி, பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, சட்ட திட்டங்களாகிய நியாயப்பிரமாணத்தை தம்முடைய மாமிசத்திலே ஒழித்து இருதிறத்தாரையும் (இஸ்ரயேலர், புறஜாதியார்) தமக்குள்ளே ஒரே புதிய மனுஷனாக சிருஷ்டித்து, இப்படிச்சமாதானம் பண்ணி, பகையைச் சிலுவையினால் கொன்று அதினாலே இருதிறத்தாரையும் ஒரே சரீரமாக தேவனுக்கு ஒப்புரவாக்கினார். (எபே 2:14-16) நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் (நியாயப் பிரமாண சட்டங்களை) குலைத்து அதை நடுவிலிராதபடி எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து (சிலுவையில் ஆணியடிக்கப்பட்டவன் மரிப்பது போல் நியாயப்பிரமாணத்தை செத்ததாக்கி, செயலற்றதாக்கி) வெற்றி சிறந்தார். ஆகவே இப்படிப்பட்ட காரியங்களால் ஒருவனும் உங்களை குற்றப்படுத்தாதிருப்பானாக. அவைகள் வரும் காரியங்களுக்கு நிழல் என தனது நிருபங்களில் எழுதினார். (கொலோ.2:14-17) நியாயப்பிரமாணம் ஒருவனையும் பூரணப்படுத்துவதில்லை. நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை. (கலா 3:11) நியாயப்பிரமாணம் கிறிஸ்துவினிடத்தில் நம்மை வழிநடத்துகிற உபாத்தியாய் இருக்கிறது. விசுவாசம் கிறிஸ்துவின் மூலமாய் வந்த பின்பு நாம் உபாத்திக்குக் கீழானவர்கள் அல்ல, நியாயப்பிரமாணத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டிருக்கிறோம். (கலா 3:24-26, எபி 10:1, ரோம 7:4-6) ஒரு யூதனே இந்தப் பிரமாணத்திற்கு கீழ்ப்பட்டவனல்ல என்னும்போது புறஜாதியாரான நாம் கிறிஸ்துவுக்குள்ளான விசுவாசிகளான பின்பு நியாயப்பிரமாண சட்டத்திற்கு உட்பட்டவர்களல்ல. அப்போஸ்தலனாகிய பவுல் எழுதும்போது நியாயப்பிரமாணம் சொல்கிறதெல்லாம் நியாயப்பிரமாணத்திற்கு உட்பட்டவர்களுக்கே சொல்கிறது என்று எழுதினார். (கலா 2:16-21, ரோம 3:19)
தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பதும், வாங்க வேண்டும் என்பதும் மாமிச இஸ்ரயேலருக்கு கொடுக்கப்பட்ட நியாயப்பிரமாணக் கட்டளையேயாகும். இஸ்ரயேலர் தசமபாகம் கொடுக்க வேண்டிய அவசியத்தை குறித்து முன்பே விளக்கிக்கூறியுள்ளோம். அது ஆவியின் இஸ்ரயேலராகிய கிறிஸ்துவ விசுவாசிகளுக்கு கொடுக்கப்பட்ட கட்டளையல்ல. நாமோ மாமிசத்தின்படி யாக்கோப்பின் பிள்ளைகளுமல்ல, இஸ்ரயேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமும் அல்ல, தேசத்திலே காணியாட்சியைப் பெற்றவர்களாகவும் இல்லை. காணியாட்சியைப் பெறாத லேவி கோத்திரத்தாரும் நம்மிடத்தில் இல்லை. புறஜாதி விசுவாசிகளான நாமோ இஸ்ரயேலரின் காணியாட்சிக்குப் புறம்பானவர்கள் என்று வேதம் சொல்கிறது. (எபே 2:11,12)
மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரிய ஊழியம்
உன்னதமான தேவனுடைய ஆசாரியனாயிருந்த மெல்கிசேதேக்குக்கு ஆபிரகாம் தசமபாகம் கொடுத்தான் (ஆதி 14:20) இதன்படி ஆபிரகாமின் வழித்தோன்றலாகிய லேவியரும் ஆசாரியரும் ஆபிரகாம் மூலமாக மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தார்கள் என்று சொல்லலாம். ஆரோன் முறைமையின்படி தசமபாகம் வாங்க கட்டளைபெற்ற இவர்களே மெல்கிசேதேக்குக்கு தசமபாகம் கொடுத்தார்கள் என்றால் மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான ஆசாரிய ஊழியம் எவ்வளவு விஷேசித்தது? மெல்கிசேதேக்கின் முறைமையின்படியான பிரதான ஆசாரியர் என்று நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து தேவனால் நாமம் தரிக்கப்பட்டார். “ நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர்” என்று யேகோவா ஆணையிட்டார். (எபி 7:9-20, 5:10) ஆரோன் முறைமையின்படியான ஆசாரிய ஊழியம் மாற்றப்பட்டு, நியாயப்பிரமாணமும் மாற்றப்பட்டது. இயேசு கிறிஸ்து மெல்கிசேதேக்கின் முறைமையின் படியான பிரதான ஆசாரியராக இருக்கிறார். இயேசு கிறிஸ்துவோடுகூட அவரது சரீரமான சபையாரும் ஆவிக்கேற்ற பலிகளை செலுத்தும் ஆசாரியர்களாக இருக்கிறார்கள். (1 பேது 2:4,5,9) மெல்கிசேதேக்கு எவ்விதம் ராஜாவும் ஆசாரியருமாய் இருந்தாரோ அவ்விதமாக இயேசு கிறிஸ்துவும் ராஜாவும் ஆசாரியருமாய் இருக்கிறார். அவருக்குள்ளாக நாமும் ராஜாக்களும் ஆசாரியர்களுமாய் இருக்க தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிறோம். இயேசு கிறிஸ்துவுக்குள் இராஜாக்களும் நாமே ஆசாரியர்களும் நாமே என்றிருப்பதால் யார் யாருக்கு தசமபாகம் கொடுக்க வேண்டும்? சிந்திப்பீர்! நியாயப் பிரமாண பலிகளும் தசமபாக காணிக்கையும் ஒழிக்கப்பட்டு போயிற்று என்பதே உண்மை.
கிறிஸ்துவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாம் அனைவரும் கிறிஸ்துவைத் தரித்துக் கொண்டிருப்பதினாலே அவர்களுக்குள் யூதனென்றுமில்லை, கிரேக்கனென்றுமில்லை, கிறிஸ்துவுக்குள் வந்தவர்களில் லேவியனுமில்லை, ஆரோன் முறைமையின் படியான ஆசாரியனுமில்லை. எல்லாரும் தலையான கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாய் இருக்கிறார்கள். கிறிஸ்துவ விசுவாசிகள் அனைவரும் பிதாவாகிய தேவனுடைய பிள்ளைகளும் இயேசுகிறிஸ்துவுக்கு சகோதரர்களுமாய் இருக்கிறார்கள். உங்களுக்குள் ரபீ (போதகர்) என்றும், பிதா என்றும், குருக்கள் என்றும் அழைக்க வேண்டாம். நீங்கள் எல்லாரும் சகோதரர்களாயிருக்கிறீர்கள் என்று இயேசு கூறினார். (மத் 23:8-10) தசமபாக காணிக்கைகளைக் கொண்டுவந்து ஆலயத்திலுள்ள பண்டசாலையை நிரப்ப ஆலயமுமில்லை. பண்டசாலையுமில்லை. நீங்களே அந்த ஆலயம் என்றபடி விசுவாசிகளே தேவனுடைய ஆலயமாய் இருக்கிறார்கள். (1கொரி. 3:16,17) தசமபாகம் வாங்கிக்கொள்ள கிறிஸ்துவுக்குள் எந்த விசுவாசிக்கும் உரிமையில்லை. கொடுக்க கட்டளையும் இல்லை.
எல்லாவற்றையும் அர்ப்பணிக்கும் சீஷத்துவம்
முழுஇருதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு ஆத்துமாவோடும் தன்னை முழுதும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணிக்கும் சீஷத்துவப்பண்பு ஒரு கிறிஸ்துவனுக்கு இருக்க வேண்டும். எல்லாவற்றையும் இழக்கவும், கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு விசுவாசியும் தன்னை முழுதும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கக்கடனாளிகளாயிருக்கிறோம். (ரோம 12:1) காணிக்கைப்பெட்டியில் இரண்டு காசு போட்ட விதவை எல்லாரிலும் அதிகமாய் போட்டாள் என்று இயேசு கூறினார். எப்படியெனில் அவர்கள் எல்லாரும் தங்கள் நிறைவிலிருந்து போட்டார்கள். இவளோ, தன் ஜீவனுக்குண்டான எல்லாவற்றையும் போட்டாள் என்றார். (மாற் 12:41-44) பத்தில் ஒரு பங்கல்ல தனக்குண்டான எல்லாவற்றையும் தேவனுக்கு ஒப்புக்கொடுக்கவும் இழக்கவும் தயாராக இருக்க வேண்டும். தேவ ஊழியத்திற்கு கொடுக்கப் பிரியப்படுகிறவன் தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன். கட்டாயமாயுமல்ல, விசனமாயுமல்ல என்று பவுல் கூறுகிறார். (2கொரி. 9:7) நன்மை செய்யவும் தான தர்மம் பண்ணவும் மறவாதிருங்கள் . இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமாய் இருக்கிறார் என்று எபிரெயர் நிருபத்தில் வாசிக்கிறோம். (எபி 13:16) ஒரு விசுவாசி தசமபாகம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. தசமபாகம் கொடுக்காதது பாவமும் அல்ல. தசமபாகம் வாங்கவோ, கொடுக்கவோ உண்மை கிறிஸ்துவ ஜீவியத்தில் கட்டளை இல்லை என்பதை அறிவோமாக. தசமபாகத்தை சொல்லி பயமுறுத்தி விசுவாசிகளை வஞ்சிக்கிற போதகர்களிடம் எச்சரிக்கையாய் இருங்கள். அவர்கள் தேவனுக்கல்ல தங்களுக்கே தசம பாகம் வாங்குகிறார்கள். அப்படியிருக்க சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவ பலியாக ஒப்புக்கொடுக்க வேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்கிறேன். இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை. (ரோமர். 12:1)
ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். (யோவா 17:3)
Edited by Moderator to maintain the formatting and increase the font size without changing any of the views of the author!!
-- Edited by bereans on Tuesday 1st of March 2011 07:40:50 AM
ஊழியர்கள் என்றும் விசுவாசிகள் என்றும் ஒரு விஷயத்தை உருவாக்கியதே துருபதேசத்தின் தாய் சபையான கத்தோலிக்க சபையே, அதை "ஆவி"க்குறிய பெந்தகோஸ்தே சபை தவறாமல் பின்பற்றுவதில் எந்த ஆச்சரியமும் இல்லையே!!
வெளி 14:8 வேறொரு தூதன் பின்சென்று: பாபிலோன் மகா நகரம் விழுந்தது! விழுந்தது! தன் வேசித்தனமாகிய உக்கிரமான மதுவைச் சகல ஜாதிகளுக்கும் குடிக்கக்கொடுத்தாளே! என்றான்.
தசமபாக என்கிற ஒரு கட்டளை யாருக்கு கொடுக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறீர்கள்,அதன் பின் நியாயப்பிரமான ஓய்ந்து போயிற்று!! இனியும் நியாயப்பிரமானத்தின் ஒரே ஒரு கட்டளை (அதுவும் லேவி கோத்திரத்திற்காக கொடுக்கப்பட்ட) தசமபாக கட்டளை மாத்திரம் உயிரோடு இருப்பது ஆச்சரியம் தான்!! அனனியால் சப்பரியால் என்பவர்கள் 50 சதவிதம் கொடுத்தும் மரித்து போனது இன்றைய குருட்டு ஊழியர்களுக்கு தெரியாது!! பணம் மாத்திரமே கண்களுக்கு முன்னால் வைத்திருப்பவர்களுக்கு தசமபாக கட்டளையை காண்பித்து மிரட்டும் ஆலன் பால் போன்றோர் தேவனுக்கு கணக்கு ஒப்புவிக்க வேண்டும்!!
ஆலன் பால் சொல்லுவது என்னவென்றால், தேவன் அவரிடத்தில் சொன்னாராம், என் ஜனங்கள் 12 மாதங்கள் தசமபாகம் கொடுத்து என்னை (தேவனை) சோதித்து பார்கலாம், 12 மாதங்களின் அவர்களுக்கு ஆசீர்வாதம் கிடைக்காவிட்டால் 13ம் மாதத்திலிருந்து அவர்கள் தசமபாகம் கொடுப்பதை நிறுத்திக்கொள்ளலாம்!! என்ன ஒரு துனிச்சலான தேவ தூஷனம்!! இதை நம்பி எத்துனை கோடிகள் குவிகிறது என்பது தெரியுமா!! தேவன் தன்னை சோதித்து பார்க்க மனிதர்களுக்கு உத்தரவு தருவது வேதத்தை கையில் எடுக்காதவர்களுக்கு வேண்டுமென்றால் செவிக்கு தேனாக இருக்கலாம், ஆனால் இனியும் ஏமாற்றும் காலம் செல்லாது!! தேவனின் ராஜியம் மிகவும் சமீபித்து இருக்கிறது!!
தசமபாகம் கொடுப்பவன் இன்னும் மாம்சத்துக்குறிய இஸ்ராயனாக தான் இருக்கிறான்!! கிறிஸ்துவும் அவரின் சபைக்கும் அவனுக்கு பங்கு இல்லை என்பது தான் சரியாக இருக்கும்!! கொடுப்பவன் ஒரு சட்டம் இல்லாமல் கொடுக்கட்டும்!! ஆனாலும் தகுதி அறிந்து பிச்சையிடு என்கிற உலகத்தானுக்கு தெரிந்தது கிறிஸ்தவர்களுக்கும் தெரிந்திருந்தால் நலமாக இருக்குமே!!
Bro. Reply to your message. A minister is doing God's work on full time. Who will feed him and his family? Giving tithe is a dicipline. If you come under the dicipline, you can develope your spiritual life. You can not go out of the frame work of God's law. Your earning 100% belongs to God. Then why don't you give tithe on it. It is not wrong.
-- Edited by Benedict on Wednesday 12th of October 2011 09:25:22 AM
Bro. Reply to your message. A minister is doing God's work on full time. Who will feed him and his family? Giving tithe is a dicipline. If you come under the dicipline, you can develope your spiritual life. You can not go out of the frame work of God's law. Your earning 100% belongs to God. Then why don't you give tithe on it. It is not wrong.
நடுநிலையுடன் கூடிய அருமையான கருத்துக்காக நன்றி, ஐயா..! ஒரு மருத்துவரான உங்கள் கருத்தையாவது நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுகிறார்களா பார்ப்போம்; உங்களுடைய ப்ரொஃபைலைப் பார்ப்பதற்காகவே நீண்ட நாளைக்குப் பிறகு இந்த தளத்தினுள் நுழைந்தேன்; தசமபாகம் என்பது மாத்திரமல்ல, வேதத்திலுள்ள எந்தவொரு கட்டளையையுமே அன்புடன் ஏற்று நிறைவேற்றினால் நன்மையே விளையும்;ஆனாலும் தசமபாகமோ அல்லது வேறெந்த கட்டளையோ நம்மை தேவனுக்கு உகந்தவர்களாக்க மாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்;ஆண்டவர் கட்டளைகளையும் பிரமாணங்களையும் மாற்றியிருந்தால் திருமணம் மற்றும் உறவுகள் சம்பந்தமான கட்டளைகளும் மாறியிருக்குமல்லவா? எனவே எதுவும் மாற்றப்படவில்லை;கட்டளையினை நிறைவேற்றும் தன்மையே மாறியுள்ளது என்பதை நினைவில் நிறுத்துவோம்.
//Bro. Reply to your message. A minister is doing God's work on full time. Who will feed him and his family? Giving tithe is a dicipline. If you come under the dicipline, you can develope your spiritual life. You can not go out of the frame work of God's law. Your earning 100% belongs to God. Then why don't you give tithe on it. It is not wrong. //
A minister is doing God's work in full time!! Is it so!!?? A minister of Paul like left everything of his to be a disciple of Christ!! A minister of Peter like left his job to follow Christ!! A minister of Mathew like left his job of collecting tax to follow Christ!! Hey Dr, people leave their earnings to follow a man, Christ Jesus who was not rich enough to buy his own tomb!!
Giving tithe was a Law for the Jews!! You should / would/ may follow this law/ discipline if you should have been a Jew!!?? Are you!!?? Under Christ you don't come under this discipline!!
2 Corinthians 5:17 So if any one [be] in Christ, [there is] a new creation; the old things have passed away; behold all things have become new: (Darby Translation (DARBY))
So Dr Benedict, if you feel that you are under Law (for the Jews) you are under the discipline of tithing!!
Doctor, I don't deny that my earnings, 100% belongs to God!! But God has His own plans, how I spend my earnings, which of course belongs to God!! Should I give it to some who don't want to work in the name of God, or should I give it to some who is not able to meet his ends meet!! Should I give it to one who left his Job just because he could use only a scooter and is now on a Honda Accord, or should I give to one who really needs money!!
Feed the one who deserves it!! Don't feed the one who makes you feel that he deserves it!! I may be less experienced, less in age, but God doesn't see our worldly status!!
Tithing is a law for Jews, not for Christians!! Neither Christ, nor his disciples asked for tithes!! Decide whether you are a Christian or a Jew!!