எந்த மனிதனாவது எக்காலத்தில் வாழ்ந்தோரிலும் மிகப்பெரிய மனிதர் என்று கேள்விக்கிடமின்றி அழைக்கப்பட முடியுமா? ஒரு மனிதனின் மேன்மையே நீங்கள் எவ்வாறு அளவிடுகிறிர்கள்? அவனுடைய இராணுவ திறமைகளைக் கொண்டா? அல்லது அவனுடைய சரீர பலத்தைக் கொண்டா? அவனுடைய மன துணிச்சலைக் கொண்டா?
சரித்திர ஆசிரியர் H , G . வெல்ஸ், ஒரு மனிதனின் மேன்மை 'பிற்காலத்தில் வளருவதற்காக அவர் விட்டுச் செல்வதைக் கொண்டும், மற்றவர்கள் புதிய ரிதியில் அவருக்கு பிறகும் கூட, தொடர்ந்து இருக்கக்கூடிய வீரியத்தோடு சிந்தனை செய்வதற்கு அவர் ஆரம்பித்து வைத்தாரா' என்பதைக் கொண்டும் அளவிடப்படும் என்று சொன்னார். வெல்ஸ் தன்னை ஒரு கிறிஸ்தவன் என்று உரிமை பாராட்டிக் கொள்ளா விட்டாலும், '' இப்பரீட்சையில் இயேசு முதலாவது நிற்கிறார்'' என்று என்று ஒப்பிக்கொண்டார்.
மகா அலெக்சாந்தர், ( தன்னுடைய சொந்த வாழ்நாட் காலத்திலேயே ''மகா'' என்று அழைக்கப்பட்ட ) சார்லிமென்ட், நெப்போலியன் போனபார்ட் ஆகியோர் வல்லமை மிக்க ஆட்சியாளராக இருந்தனர். தங்களுடைய வெல்லமுடியாத பிரசன்னத்தின் மூலம், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர்கள் மீது மிகப் பெரிய பாதிப்பை செலுத்தினர். என்றபோதிலும், நெப்போலியன் இவ்வாறு சொன்னதாக அவரின் வரலாறு குறிப்புகள் சொல்கின்றன:- ''காணக்கூடிய சரீர பிரசன்னம் இல்லாமலே இயேசு கிறிஸ்து தன் அடியார்கள் மீது செல்வாக்கு செலுத்தி கட்டுப்படுத்தி இருக்கிறார்கள்.''
தமது ஆற்றல் வாய்ந்த போதகங்களின் மூலமாகவும், அதற்கு இசைவாக தாம் வாழ்ந்த விதத்தின் மூலமாகவும், ஜனங்களின் வாழ்கையே ஏறக்குறைய
இரண்டாயிரம் வருடங்களாக பலமாக பாதித்து இருக்கிறார்கள். ஓர் எழுத்தாளர் பொருத்தமாகவே அதை பின்வருமார் வெளிப்படுத்துகிறார்:- ''அணிவகுத்துச் சென்ற எந்தப் படையும், கட்டப்பட்ட எந்த கப்பட்படையும், அமர்த்தப்பட்ட எந்தச் சட்ட மாமன்றமும், ஆட்சி செய்த எந்த அரசனும் இந்தப் பூமியில் உள்ள மனிதனின் வாழ்கையே இந்த அளவு பலமாக பாதிக்கவில்லை.'' இது மத்தேயு; மாற்கு, லூக்க, யோவான் பதிவுகளை அடிப்படையாக கொண்டு தொடரும் ................
சிலர், இயேசு ஒருபோதும் வாழ்ந்ததில்லை - உண்மையில் அவர் முதல் நுற்றாண்டில் வாழ்ந்த சில மனிதர்களின் படைப்பு - என்று சிலர் சொல்வது விநோதமாக இருக்கிறது. அப்பேர்ப்பட்ட நண்பிக்கையற்றவர்களுக்கு பதிலளிப்பவராய் மதிப்புக்குரிய சரித்திர ஆசிரியன் வில் டுரான்ட் விவாதித்தார்: ''ஒரு சில சாதாரண மனிதர்கள் ஒரு சந்ததிக்குள் அத்தனை வல்லமையும், கவர்ச்சியும் வாய்ந்த ஒரு நபரையும், அத்தனை உயர்ந்த ஒரு நன்நேரயையும், மானிட சகோதரத்துவத்தின் அத்தனை உக்கமூட்டும் ஒரு காட்சியேயும் உருவாக்கிவிட முடியும் என்பது சுவிஷசங்களில் பதிவு செய்யப்பட்டு இருக்கும் எந்த அற்புதத்தைக் காட்டிலும் அதிக நம்ப முடியாததாய் இருக்கும்''.
உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள்:-எப்பொழுதுமே வாழ்ந்திராத ஒரு நபர் மானிட சரித்திரத்தை இவ்வளவு குறிப்பிடத்தக்க வகையில் பாதித்திருக்கக்குடுமா? சரித்திர ஆசிரியர்களின் உலக சரித்திரம் என்ற ஆராய்ட்சி நூல் குறிப்பிட்டது: ''உலகியல் சார்ந்த கண்டிப்பான நோக்கு நிலையில் இருந்து கூட சரித்திரத்தில் இருந்து மற்ற எந்த ஆளின் வேலைகளை விட இயேசுவின் வேலைகளின் சரித்திரப்பூர்வமான விளைவுகள் பெருஞ்சிறப்பு வாய்ந்தாக இருந்தன. உலகின் முக்கிய நாகரீகங்களால் அங்கீகரிக்கப்படும் ஒரு புதிய சகாப்தம் அவருடைய பிறப்பிலிருந்து கணக்கிடப்படுகிறது''
ஆம், அதைக்குறித்து சிந்தியுங்கள். இன்றுள்ள நாட்காடிகளிலும் கூட இயேசு பிறந்ததாக கருதப்படுகிற வருடத்தை சார்ந்து இருக்கின்றன. ''அந்த வருடத்துக்கு முன்னால் இருக்கும் தேதிகள் கி. மு அல்லது கிறிஸ்துவுக்கு முன் என்றும், அந்த வருடத்துக்கு பின்னால் இருக்கும் தேதிகள் கி. பி அல்லது அன்னோ டோமினி( நம் கர்த்தரின் வருடத்தில்) என்றும் பட்டியலிடப்படுகின்றன''. என்று WORLD BOOK என்சைகிலோபிடியா விளக்குகிறது.
அப்படிருந்தாலும், குறை காண்பவர்கள் இயேசுவைப் பற்றி உண்மையிலே நாம் அறிந்திருக்கும் எல்லாமே பைபளில் தான் காணப்படுகிறது என்று குறிப்பிட்டுக் காட்டுகின்றனர்.அவரைப் பற்றிய அதே காலத்துக்குரிய பதிவுகள் இல்லை என்பதாக அவர்கள் சொல்ல்கின்றனர். H . G வேல்ஸ்-ம்கூட எழுதினார்: ''பண்டைய ரோம சரித்திராசிரியர்கள் இயேசுவை முழுவதுமாக புறக்கணித்தனர்; அவர் காலத்து சரித்திரப் பதிவுகளில் அவர் தனிச் சிறப்பான பதிவு எதையும் விட்டுச் செல்லவில்லை''. ஆனால் இது உண்மையா?
இயேசு கிறிஸ்துவைப் பற்றிய ஆரம்ப கால உலகியல் சார்ந்த சரிதிறாசிரியர்களின் மேற்கோள்கள் மிகக் குறைவாக இருந்தாலும், அப்பேர்ப்பட்ட மேற்கோள்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ஒரு மதிப்புக்குரிய முதல் நுற்றாண்டு ரோம சரித்திர ஆசிரியன் கொர்நெர்லியஸ் டசிட்டாஸ் எழுதினார்: ''கிறிஸ்தவன் என்ற இந்தப் பெயர் கிறிஸ்துவிலிருந்து வருகிறது, இவரை திபெரயு ராயன் அரசாண்ட காலத்தில் ரோம பேரரசின் மாகாண அதிகாரி பொந்தியு பிலாத்து தூக்கில் இட்டான்.'' சுட்டோநியஸ்,பிளைனி என்ற இளையவன் போன்ற அக்காலத்து மற்ற ரோம எழுத்தாளர்களும் கூட கிறிஸ்துவைப் பற்றி குறிப்பிட்டனர். கூடுதலாக, முதல் கூற்றாண்டு யூத சரித்திராசிரியன் பிளளியஸ் யோசிபாஸ், யாக்கோபை ''கிறிஸ்து என்றழைக்கப் பட்ட இயேசுவின் சகோதரன்'' என்று அடையாளம் காட்டி எழுதினான்.
புதிய என்சைக்ளோபிடியா பிரிட்டானிக்கா இவ்வாறாக முடிக்கிறது: ''இந்தத் தனிப்பட்ட நபர்களின் அறிக்கைகள், பண்டைய காலத்தில் கிறிஸ்தவத்தின் எதிரிகள் கூட, இயேசு சரித்திரப் பூர்வமான நபர் என்பதை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்பதை நிரூபிக்கிறது. இது முதல் தடவையாக போதாத ஆதாரங்களின் அடிப்படையில், 18 - ம் நுற்றாண்டின் இறுதியில், 19 ஆம் நுற்றாண்டின் போது, 20 ஆம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.''
என்ற போதிலும், அடிப்படையாக இயேசுவைப் பற்றி அறியப்பட்டிருக்கும் எல்லாருமே முதல் நுற்றாண்டின் அவரைப் பின் பற்றியவர்களால் பதிவு செய்யப்பட்டது. அவர்களுடைய அறிக்கைகள் சுவிஷ்சங்களில் - மத்தேயு, மாற்கு, லூக்க, மற்றும் யோவானால் எழுதப்பட்ட பைபல் புத்தகங்களில் - பாதுகாத்து வைக்கப் பட்டிருகின்றன. இயேசு யார் என்பதைப் பற்றி இந்த அறிக்கைகள் என்ன சொல்லுகின்றனர் ?? இதை அடுத்த பகுதியில் தொடரும் ....
இயேசுவின் முதல் நூற்றாண்டு கூட்டாளிகள் அந்தக் கேள்வியே தீர எண்ணிப் பார்த்தனர். இயேசு பலத்த காற்றால் கொந்தளித்த கடலை அதட்டி, அற்புதகரமாக அமைதிப்படுத்தியதை பார்த்தபோது, அவர்கள் வியப்பால் அதிசயப்பட்டனர்:- ''இவர் யார்?'' பின்னர், மற்றொரு சமயத்தில் இயேசு தன் அப்போஸ்தலர்களை கேட்டார்:- ''நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறிர்கள்?'' - மாற்கு 4 :41 / மத்தேயு 16 :15
அந்தக் கேள்வி உங்களிடம் கேட்கப்பட்டால், நீங்கள் எவ்வாறு பதிலளிப்பிர்கள்? இயேசு உண்மையில் கடவுளாக இருந்தாரா? அநேகர் இன்று அவர் அவ்வாறாக இருந்ததாக சொல்கின்றனர். என்றபோதிலும், அவருடைய கூட்டாளிகள் அவர் கடவுள் என்பதாக ஒரு போதும் நம்பவில்லை? இயேசுவின் கேள்விக்கு அப்போஸ்தலனாகிய பேதுருவின் பிரதிபலிப்பு :- ''நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து'' என்றிருந்தது. மத்தேயு 16 :16
இயேசு தம்மை கடவுளாக ஒரு போதும் உரிமை பாராட்டவில்லை. ஆனால் அவர் தன்னை வாக்குபண்ணப்பட்ட மேசியாவாக அல்லது கிறிஸ்துவாக ஒப்புக்கொண்டார். அவர் தம்மை கடவுளாக அல்ல. ''தேவனுடைய குமாரன்'' என்பதாகவும் சொன்னார். ( யோவான் 4 : 25 ,26 10 :36 ) என்ற போதிலும் பைபல் இயேசுவை மற்ற மனிதர்களைப் போன்ற ஒரு மனிதன் என்பதாக சொல்லுகிறதில்லை. அவர் மிகவும் ஒரு விஷசேசித்த நபராக இருக்கிறார். ஏனென்றால் மற்ற எல்லா காரியங்களுக்கும் முன்பாக கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார். (கொலோ 1 :15 ) எண்ணற்ற கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, இந்தச் சடப்பொருளான பிரபஞ்சம் சிருஷ்டிக்கப் படுவதற்கு முன்பே, இயேசு ஓர் ஆவி ஆளாக பரலோகத்தில் வாழ்ந்தார்.
மேலும் மகத்தான சிருஷ்டிகராகிய தம் தகப்பன் யெகோவா தேவனோடு நெருக்கமான கூட்டுறவை அனுபவித்தார். - நீதி 8 .22 ,27 -31 .
பின்பு ஏறக்குறைய இரண்டாய்ரம் வருடங்களுக்கு முன்பு, கடவுள் தம் குமாரனின் ஜீவனை ஒரு பெண்ணின் கருப்பைக்கு மாற்றினார், இயேசு கடவுளின் ஒரு மானிட குமாரனாக ஆகினார். ஒரு பெண்ணின் மூலமாக இயல்பான முறையில் பிறந்தார். (கலாத்தியர் 4 :4 ) இயேசு கருப்பையில் உருவாகும் போதும், ஒரு பையனாக வளரும் போதும், தம்முடைய பூமிக்குரிய பெற்றோர்களாக கடவுள் தேர்ந்தேடுதவர்களின் பேரில் சார்ந்திருந்தார். இறுதியில் இயேசு முழு வளர்ச்சி பருவம் அடைந்தார். பரலோகத்தில் கடவுளோடு தமக்கு முன்பிருந்த கூட்டுறவின் முழு நினைவாற்றல் அவருக்கு அளிக்கப்பட்டது. - யோவான் 8 : 23 17 : 5