kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விசுவாசம்: வேதவசனம் Vs உணர்வு


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
விசுவாசம்: வேதவசனம் Vs உணர்வு


இன்று கிறிஸ்தவத்தை ஆளுகை செய்துக்கொண்டிருக்கும் 'திரித்துவம்" என்கிற வேதத்திற்கு புறம்பான ஒரு கோட்பாடு, பாரம்பரிய விசுவாசம் தான் எல்லா சபைகளுக்கும் பாலமாக இருக்கிறது!! ஒரு சபையை விட்டு மற்றோரு சபைக்கு போகக்கூடாது, என் ஆட்டை திருடிவிட்டான் அந்த மெய்ப்பன் என்கிற குற்றச்சாட்டுகளுக்கு நடுவிலும், திரித்துவம் என்கிற ஒரு பாலம் இனைத்து வைத்திருக்கிறது!!

சிலர் தங்களை மிகவும் தாழ்த்தி இருக்கிறோம் என்கிறபடி காண்பித்துக்கொள்கிறார்கள்!! அவ்வளவே!! விவாத மேடைகள், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு இங்கு பதில் கிடைக்கும் போன்ற தளங்கள் வைத்துக்கொண்டு, அவர்கள் கொண்டிருக்கும் விசுவாசத்திற்கு புறம்பான ஒரு கேள்வியை கேட்டால், கேட்பவர்கள் எதிரியாகிவிடுகிறார்கள்!! நான் தாழ்ந்திருக்கிறேன், என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்லுபவனும் மேட்டிமையில் தான் இருக்கிறான் என்பதையும் புரிந்துக்கொள்ள வேண்டும்!!

கோட்பாடுக‌ள் வ‌ச‌ன‌த்துட‌ன் இல்லாம‌ல் இருந்தால் அத‌ற்கு ஏன் த‌லை வ‌ண‌ங்க‌ வேண்டும்!! பார‌ம்ப‌ரிய‌த்தாலும், உண‌ர்சியில் பொங்கும் விசுவாச‌மும் விசுவாச‌ம் அல்ல‌!!

யோவான் 17:20 நான் இவர்களுக்காக வேண்டிக்கொள்ளுகிறதுமல்லாமல், இவர்களுடைய வார்த்தையினால் என்னை விசுவாசிக்கிறவர்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

அந்த‌ "இவ‌ர்க‌ள்" மூல‌மாக‌ வேத‌ம் ந‌ம் கைக‌ளுக்கு கிடைத்த‌து!! அந்த‌ வேத‌ வார்த்தைக‌ளின்ப‌டியே ந‌ம் விசுவாச‌ம் இருக்க‌ வேண்டுமே அன்றி பார‌ம்ப‌ரிய‌த்தினாலும், எங்க‌ள் தாத்தா, பாட்டி தொட‌ங்கி நாங்க‌ள் இப்ப‌டி தான் விசுவ‌சிக்கிறோம், நீங்க‌ள் என்ன‌ புதிதாக‌ போதிக்கிறீர்க‌ள் என்கிற‌தான‌து வேத‌த்தின் விசுவாச‌ம் இல்லை!!

நாங்க‌ள் போதிப்ப‌து ஒன்றும் புதிதான‌து அல்ல‌!! க‌ள்ள‌ உப‌தேச‌ங்க‌ள் ச‌பைக்குள் ஆழ‌மாக‌ நுழைந்துவிட்ட‌ கார‌ண‌த்தினால், அப்போஸ்ச்த‌ல‌ர்க‌ள் கொண்டிருந்த விசுவாச‌த்தை சொன்னால் அது இன்று கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு புதிதாக‌ இருக்கிற‌து, அப்ப‌டியென்றால் எந்த‌ அள‌விற்கு உண‌ர்சிக‌ளும், பார‌ம்ப‌ரிய‌ங்க‌ளும், செவிக்கு தின‌வான‌ போதனைக‌ளும் ச‌பைக்குள் புகுந்து விட்ட‌து!! இந்த‌ 2000 வ‌ருட‌ங்க‌ள் சென்ற‌ பிற‌கு க‌ள்ள‌ உப‌தேச‌ம் நுழைய‌வில்லை, மாறாக‌,

ம‌த். 13:25. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.

அப்போஸ்த‌ல‌ர்க‌ள் ம‌ரித்த‌வுட‌னே, ச‌த்திய‌ம் புற‌ட்ட‌ப்ப‌ட்டு விட்ட‌து!! க‌ள்ள போதனைக‌ள், துருப‌தேச‌ம், ம‌னித‌ போத‌னைக‌ள் ச‌பைக்குள் புகுந்து விட்ட‌து!! த‌ன் இச்சைக்கு த‌குந்த போத‌க‌ர்க‌ளை நிய‌மித்துக்கொண்டு, வ‌ச‌ன‌மே இல்லாத‌ போத‌னைக‌ள் ச‌பைக்குள் புகுந்து விட்ட‌து!!

ஒரு சில‌ர் இந்த‌ த‌ளத்தில் இயேசு கிறிதுவை ம‌றுத‌லிக்கிறார்க‌ள் என்றும் எங்க‌ளை குற்ற‌ம் சாற்றுகிறார்க‌ள்!! அத‌ற்கு கார‌ண‌ம் வேத‌த்தில் உள்ள‌ கிறிஸ்துவை அவ‌ர்க‌ள் அறியாத‌தினால் மாத்திர‌மே!!

தொட‌ரும்...........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

///கோட்பாடுக‌ள் வ‌ச‌ன‌த்துட‌ன் இல்லாம‌ல் இருந்தால் அத‌ற்கு ஏன் த‌லை வ‌ண‌ங்க‌ வேண்டும்!! பார‌ம்ப‌ரிய‌த்தாலும், உண‌ர்சியில் பொங்கும் விசுவாச‌மும் விசுவாச‌ம் அல்ல‌!!///

உங்களின் கருத்துக்கள் மிகவும் சரியே சகோதரர் ''
கோவை பெரேயன்ஸ்'' அவர்களே!

நான் இருக்கும் இடத்தில் இப்படியான போலியான போதகர்கள் அநேகம் பேர் உண்டு. அவர்களின் கோமாளித்தனத்தை பார்க்க சிரிப்பாகத்தான் இருக்கும்.  ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்து போதித்த போதனைகளை அல்லாது,  வெறும் ஆசிர்வாதம் மற்றும் உணர்ச்சிகள்  மட்டுமே கொண்ட போதனைகளை சொல்லிச் சொல்லியே ஒவ்வொரு விசுவாசிகளையும் தன்பக்கம் இழுத்துவைத்து இருக்கிறார்கள்.  அண்மையில் அந்த சபைகளுக்குப்  போகும் சிலபேரை நான் எனது ஊழியத்தின் போது சந்தித்தேன். அவர்கள் அனைவரும் பல வருடங்களாக போலியான கள்ள போதகரால் கவரப்பட்ட  விசுவாசிகள். அவர்களிடம் நானும் எனது மற்றைய சகோதரரும் சேர்ந்து  சத்தியத்தைச் சொல்ல சென்று இருந்தோம். அவர்களிடம் கதைக்கும் போது ஒன்று மட்டும் புரிந்தது. வேத அறிவு ஒரு சிறிய அளவு கூட அவர்களிடம் இல்லை. சத்தியத்தில் அடிப்படை விஷயம்கூட அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயம். பல வருடங்களாக அந்த சபை விசுவாசிகள், அத்துடன் அந்த சபை போதகர் அனைவரும் மிகவும் செல்வந்தர்கள். இவர்கள் இப்படி வசதியாக இருக்க, எப்படி இவ்வளவு வருமானம் வருகின்றது என்பதையும் நாம் அறிவோம். இயேசுகிறிஸ்து தனது ராஜ்யத்தை பற்றிய சுவிசேஷத்தை சொல்லச் சொன்னால், அதைத்தவிர உலகப்பிரகமான காரியங்களைக் குறித்தே பேசி ஒவ்வொரு விசுவாசிகளின் மனங்களையும் குழப்பி வைத்து இருப்பது மிகவும் பரிதாபகரமான செயல். நாங்கள் இந்த வருடம் எமது ஊழியத்தை அவர்களுக்காகவே செய்ய ஆரம்பித்திருக்கிறோம். சரியான  சத்தியத்தை அவர்களுக்குச் சொல்லி, தேவன் எமக்குக் கொடுத்த தேவஊழியத்தைத் தொடர எம்மை ஆண்டவராகிய யேகோவா தேவனாலும், அவரின் மகனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஊடாக எமது ஊழியங்களுக்காக ஜெபித்துக்  கொள்ளவும்  என்று  வேண்டிக்கொள்கிறேன் . நன்றி .


-- Edited by anbu57 on Tuesday 15th of February 2011 07:09:50 AM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வேதத்தில் இயேசு கிறிஸ்து யார் என்று சொல்லப்பட்ட பிரகாரமே நாங்கள் இந்த தளத்தில் அவரை அறிவிக்கிறோம்!! கொஞ்சம் கூடவோ குறையவோ அல்ல!! வேதம் கிறிஸ்துவை தேவ குமாரன் என்று மிகவும் தெளிவாக வசனங்களுடன் சொல்லுகிறது, இதோ,

மத்தேயு 16:16 சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். 17 இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார்.

இன்று மாம்ச‌த்திலும் இர‌த்த‌த்திலும் (சொந்த அறிவு) சில‌ர் கிறிஸ்து தேவ‌னின் குமார‌ன் இல்லை, அவ‌ரே பிதாவாகிய‌ தேவ‌ன் என்கிற‌தை துனிச்ச‌லாக‌ சொல்லிக்கொண்டு, ந‌ம்மை ந‌கைத்து பேசுகிறார்க‌ள்!! அவ‌ர்க‌ளுக்கு சொல்லுக்கொள்வ‌து, ப‌ர‌லோக‌த்திலிருக்கிற‌ பிதாவே எங்க‌ளுக்கும் இதை அவ‌ர் கொடுத்த‌ வ‌ச‌ன‌த்தின் மூல‌ம் வெளிப்ப‌டுத்துகிறார்!! ஏனென்றால், "உமது வசனமே சத்தியம்" யோவான் 17:17  என்கிற‌து வேத‌ம்!! அந்த‌ வார்த்தையின்ப‌டியே, கிறிஸ்து தேவ‌னின் குமார‌ன் என்று அறிக்கை செய்கிறோமே த‌விர‌, கிறிஸ்துதான் அந்த‌ உன்ன‌த‌மான‌ தேவ‌ன் என்றும் பிதா என்றும் சொல்லுவ‌தில்லை!! வேத‌த்திற்கு மாற்று போத‌னை உள்ள‌வ‌ர்க‌ளுக்கு த‌ங்க‌ள் பார‌ம்ப‌ரிய‌ங்க‌ளை விட்டு வில‌க‌ ம‌ன‌தில்லாத‌வ‌ர்க‌ளுக்கு கிறிஸ்து தேவ‌னின் குமார‌ன் என்று ஏற்றுக்கொள்வ‌தில் ச‌ற்று சிர‌ம‌ம் தான்!! அவ‌ர்க‌ள் அநேக‌ இட‌ங்க‌ளில் அப்ப‌டி சொல்லுவார்க‌ள், ஆனாலும் அவ‌ர்க‌ளின் விசுவாச‌ம், இருவ‌ரும் ஒருவ‌ரே என்ப‌து தான்!!

மத்தேயு 17:5 அவன் பேசுகையில், இதோ, ஒளியுள்ள ஒரு மேகம் அவர்கள்மேல் நிழலிட்டது. இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்,

மத்தேயு 27:54 நூற்றுக்கு அதிபதியும், அவனோடேகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் சம்பவித்த காரியங்களையும் கண்டு, மிகவும் பயந்து: மெய்யாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.

மாற்கு 1:1 தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தின் ஆரம்பம்.

மாற்கு 1:11 அன்றியும், நீர் என்னுடைய நேச குமாரன், உம்மில் பிரியமாயிருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று.

மாற்கு 14:61 அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். 62 அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வ வல்லவரின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார்.

மாற்கு 15:39 அவருக்கு எதிரே நின்ற நூற்றுக்கு அதிபதி அவர் இப்படிக் கூப்பிட்டு ஜீவனை விட்டதைக்கண்டபோது: மெய்யாகவே இந்த மனுஷன் தேவனுடைய குமாரன் என்றான்.

லூக்கா 1:32 அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்.

லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்கா 10:22 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரன் இன்னாரென்று அறியான், குமாரனும், குமாரன் அவரை எவனுக்கு வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனுந்தவிர, வேறொருவனும் பிதா இன்னாரென்று அறியான் என்றார்.

யோவான் 1:34 அந்தப்படியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன் என்றான்.

யோவான் 1:49 அதற்கு நாத்தான்வேல்: ரபீ, நீர் தேவனுடைய குமாரன், நீர் இஸ்ரவேலின் ராஜா என்றான்.

யோவான் 3:36 குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை,

யோவான் 6:69 நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நாங்கள் விசுவாசித்தும் அறிந்தும் இருக்கிறோம் என்றான்.

யோவான் 11:27 அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள்.

யோவான் 20:31 இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது.

அப்போஸ்தலர் 8:37 அதற்குப் பிலிப்பு: நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் தடையில்லையென்றான். அப்பொழுது அவன் இயேசுகிறிஸ்துவை தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறேன் என்று சொல்லி;

அப்போஸ்தலர் 9:20 தாமதமின்றி, கிறிஸ்து தேவனுடைய குமாரனென்று ஆலயங்களிலே பிரசங்கித்தான்.

ரோமர் 1:5 மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.

ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.

ரோமர் 8:29 தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

I கொரிந்தியர் 15:28 சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

கலாத்தியர் 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

கலாத்தியர் 4:6 மேலும் நீங்கள் புத்திரராயிருக்கிறபடியினால், அப்பா, பிதாவே! என்று கூப்பிடத்தக்கதாக தேவன் தமது குமாரனுடைய ஆவியை உங்கள் இருதயங்களில் அனுப்பினார்.

எபேசியர் 4:11 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும்வரைக்கும்,

கொலோசெயர் 1:13 இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
 
எபிரெயர் 5:5 அந்தப்படியே கிறிஸ்துவும் பிரதான ஆசாரியராகிறதற்குத் தம்மைத்தாமே உயர்த்தவில்லை; நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்று அவரோடே சொன்னவரே அவரை உயர்த்தினார்.

I யோவான் 1:3 நீங்களும் எங்களோடே ஐக்கியமுள்ளவர்களாகும்படி, நாங்கள் கண்டும் கேட்டும் இருக்கிறதை உங்களுக்கும் அறிவிக்கிறோம்; எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.

இப்படியாக இந்த தளத்தில் இருப்பவர்களின் ஐக்கியமும் அப்படியே!! இந்த தளத்தில் இருக்கும் போதனைகளும் பிதாவை பிதா என்றும் கிறிஸ்துவை தேவனின் குமாரன் என்கிற விசுவாசத்தோடு தான் இருக்கிறது!! உணர்வுகளினால் ஆயிரம் விசுவாசம் பிறக்கலாம், ஆனால் வசனத்தினால் ஒரே விசுவாசம் தான் பிறக்க முடியும்!! அது தான் சரியானதாக இருக்க முடியும்!! இத்துனை வசன சாட்சிகள் இருந்தும் அநேகர் இன்னும் கிறிஸ்து தான் பிதா என்று போதித்து வருவது, அவர்களின் உணர்வு பூர்வமான விசுவாசத்தை தான் காண்பிக்கிறதே தவிர, வேறு ஒன்றும் இல்லை!!  அவர்கள் நமக்கு சாபம் இடுவது போல், அல்லது அவர்களை (அதாவது எங்களை) உதாசீனப்படுத்துங்கள் என்கிற நினைப்பு எல்லாம் சாத்தானின் தந்திரமே!! உதாசீனப்படுத்தினோமென்றால், விலகி போனோமென்றால், இந்த வசனங்கள் அவர்கள் புரிந்துக்கொள்ளும் வாய்ப்பு இல்லாமல் போய் விடுமே!! இயேசு என்கிற பெயர் உச்சரித்துக்கொண்டு இருப்பதை காட்டிலும், அவர் யார் என்கிறதை வேதத்தின் மூலம் சரியாக அறிந்து தேவனுக்கு செலுத்த வேண்டிய மகிமை தேவனுக்கும், கிறிஸ்துவிற்கு தர வேண்டிய கனத்தை கிறிஸ்துவிற்கும் தருவதே சரியான விசுவாசமாகும்!!

சிலரின் அறீவினம் எங்களை இன்னும் புரிந்துக்கொள்ளாததில் வெளிப்படுகிறது!! இத்துனை வசனங்கள் இருந்தும், சிலர் மனிதர்கள் இதை குறித்து ஆராயந்ததை எழுதுகிறார்கள்!! எங்களுக்கு யோவான், அல்லது பேதுரு கொடுத்த சாட்சியை காட்டிலும், இன்றைய மாம்ச சிந்தை உள்ள மனிதர்களின் விளக்கம் நிறைந்த புத்தகங்கள் (காசு சம்பாதிக்கும் முறை) தேவை இல்லை!! கிறிஸ்துவை நாங்கள் மறுதலிப்போமென்றால், கிறிஸ்துவின் சீஷர்களாக நாங்கள் இருக்க பிரயாசம் கூட பட முடியாது!! கிறிஸ்து வழியாக தான் பிதாவை அடைய முடியும் என்கிற சத்தியம் எங்களுக்கும் தெரியும்!! இப்படி கிறிஸ்து தான் வழி என்றும், அவரின் பாத சுவடுகளை பற்றிக்கொண்டு நடப்பது தான் நம் விசுவாசம் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்!! கிறிஸ்துவை தொழுதுக்கொள்வதினால் நாங்கள் கிறிஸ்தவர்கள் அல்ல, மாறாக கிறிஸ்துவை தேவனின் குமாரன் என்றும், எங்கள் வழி, சத்தியம், ஜீவன் என்று ஏற்றுக்கொண்டபடியால் தான் கிறிஸ்தவர்களாக இருக்கிறோம்!! கிறிஸ்தவர்கள் என்றால், கிறிஸ்தவர்கள் மாத்திரமே, (ஏஜி, பெந்தகோஸ்தே, கத்தோலிக்கர், புரடஸ்டண்ட், இன்னும் பல பெயர் தெரியாத சபையாக இல்லை)!! கிறிஸ்தவர்களாக இருந்து கிறிஸ்துவுடையவர்களாக மாற பிரயாசிக்கிறோம்!!

இத்துனை வசனங்களிலும் கிறிஸ்து தேவனின் குமாரன் என்று இருக்கிறதே தவிர, கிறிஸ்து பிதா என்று இல்லையே!! வசனத்தை நம்புவதா, மனிதர்களின் உணர்வுகளை நம்புவதா, அவர்களின் பாதாள தரிசனங்களை நம்புவதா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard