kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அந்திக்கிறிஸ்து‏


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
அந்திக்கிறிஸ்து‏


சொற்பொருள் விளக்கம்: அந்திக்கிறிஸ்து என்பதற்கு கிறிஸ்துவுக்கு எதிராக அல்லது பதிலாக என்பது பொருள்.
இயேசு கிறிஸ்துவைப்பற்றி பைபிள் சொல்வதை மறுதலிக்கும் எல்லாருக்கும், அவருடைய ராஜ்யத்தை எதிர்க்கும்
எல்லாருக்கும், அவரைப் பின்பற்றுவோரைத் தவறாக நடத்தும் எல்லோருக்கும் இந்தப் பெயர் பொருந்துகிறது. அது கிறிஸ்துவைப் பிரதிநிதித்துவம் செய்வதாகப் பொய் உரிமைபாராட்டுகிற அல்லது தங்களுக்கு மேசியாவின் பாகத்தைப் தவறாகப் பொருத்திக்கொள்ளும் தனிப்பட்ட நபர்களையும் அமைப்புக்களையும்
மற்றும் தேசங்களையும்  உள்ளடக்குகிறது.

பைபிள் ஒரேயொரு அந்திக் கிறிஸ்துவையே குறிக்கிறதா?
1  யோவான் 2 :18 ..... ''பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்''.
2 யோவான் 1 : 7 : ''மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்'. ( ''அனேக அந்திக்கிறிஸ்துக்கள்''
என்று 1 யோவான் 2 :18 -யில் குறிப்பிடப்பட்டது.  இங்கு மொத்தமாக ''அந்திக்கிறிஸ்து'' என்று குறிப்பிடப்படுவதை கவனியுங்கள்) மற்றும் இதைப்போன்ற கேள்விகளுக்கான விடை தலைப்புவாரியாக ''Verse explanations/ வசன விளக்கம்'' என்ற தலைப்பில் கொடுக்கப்படும். வழமைபோல உங்கள் கேள்விகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிடுங்கள். அத்துடன் உங்கள் கேள்விகளுக்கான பதிலை இங்கயே எழுதுகிறேன். படித்து தெளிவு பெறுங்கள். இந்த தளத்தை உங்கள் சபை விசுவாசிகளுக்கும் மறக்காமல் தெரியப்படுத்துங்கள்.


-- Edited by anbu57 on Monday 14th of February 2011 06:18:58 AM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

அந்திக்கிறிஸ்து வருவது ஏதோ எதிர்காலத்துக்கென ஒதுக்கிடு செய்யப்பட்டதா?

1 யோவான் 4 :3 ''
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது''. ( அது கி.பி முதல் நுற்றாண்டு முடியும் சமயத்தில் எழுதப்பட்டது)

1 யோவான் 2 :18
''இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்''. ( ''கடைசிக் காலம்'' என்று யோவான் சொன்னது தெளிவாகவே அப்போஸ்தலர் காலத்தின் முடிவைக் குறித்தது. மற்ற அப்போஸ்தலர்கள் மரித்துவிட்டார்கள் மற்றும் யோவான்தானே மிகவும் வயது சென்றவனாக இருந்தான்.)

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

அந்திக் கிறிஸ்து என அடையாளங் காட்டப்படும் சிலர் _

இயேசு உண்மையில் மேசியா என்பதை மறுக்கும் ஆட்கள்

1  யோவான் 2 :22  ''இயேசுவைக் கிறிஸ்து (அல்லது மேசியா; அபிஷேகம் செய்யப்பட்டவர் ) அல்ல  என்று மறுதலிக்கிறவனேயல்லாமல் வேறே யார் பொய்யன்? .......அந்திக்கிறிஸ்து''

இயேசுவை கடவுளுடைய தனித்தன்மை வாய்ந்த குமாரன் அல்ல என்று மறுதலிக்கும் எல்லோரும்

1  யோவான் 2 :22  ''பிதாவையும் குமாரனையும் மறுதலிக்கிறவனே அந்திக்கிறிஸ்து'' யோவான் 10 :36   லுக்கா 9:35   ஆகியவற்றை ஒப்பிட்டு பார்க்கவும்.

கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ளாமல் எதிர்க்கிற அல்லது தாங்களே மேசியா எனப் பொய்யாக உரிமை பாராட்டும் தனிப்பட்ட நபர்களும் மற்றும் தேசங்களும்

சங்கீதம் 2 :2  ''கர்த்தருக்கு (யேகோவாவுக்கு) விரோதமாகவும் அவர் அபிஷகம்பண்ணினவருக்கு (இயேசு அல்லது மேசியாவுக்கு) விரோதமாகவும் பூமியின் ராஜாக்கள் எழும்பி'' னார்கள். வெளிப்படுத்தல் 17 :3 , 12 -14 , 19 :11 -21  ஆகியவற்றை பாருங்கள்.

மத்தேயு 24 :24  ''கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள்''

இதில் கொடுக்கப்பட்ட கேள்விக்கான பதில்கள் ஓரளவுக்குப் போதும் என்று நினைக்கிறேன். அந்திக் கிறிஸ்து தொடர்பாக வேறு ஏதும் கேள்விகள் இருப்பின் எனக்கோ அல்லது நீங்களே  இந்த தளத்தில் அங்கத்தவர்கள் ஆகிக்கொண்டு நேரடியாக  எழுதிக் கேட்கலாம்.  அடுத்து கள்ளப் போதகர்களால் செய்யப்பட்டு வரும் அற்புதம், சுகப்படுதல், அந்நியபாசை பேசுதல், ஆவிக்கொள்கை போன்ற கேள்விகளுக்கு அதன் தலைப்பிலேயே கொடுக்கிறேன். (எனது அடுத்த பதிவு சுகப்படுத்தல்)



-- Edited by Theneer Pookal on Wednesday 16th of February 2011 11:56:28 PM



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard