கேள்வி #3 பிறமதத் தலைவர் ஒருவர் மேடையில் வித்தைகள் செய்யும் போது அதற்க்கு என்ன தந்திரத்தைப் பயன்படுத்துகிறார் என்று ஆராயும் நாம், நமது ஊழியர்கள் மேடையில் பெயர் சொல்லி அழைக்கும் வித்தை, மல்லாக்க சாய்க்கும் வித்தைகளையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு நம்புவது ஏன்? இயேசுவும் அப்போஸ்தலரும் செய்யாததை என்ன ஆதாரத்தோடு அல்லது நோக்கத்தோடு செய்கிறார்கள் என்று நாம் ஆராய வேண்டாமா?
ஆராய தான் வேண்டும்!! அப்போஸ்தலர்களுக்கு அதிகாரம் கிடைத்திருந்தது, செய்தார்கள், ஆனால் இன்றைய கள்ள அப்போஸ்தலர்கள் எந்த அதிகாரத்தில் இப்படி மேடை போட்டு நாடகம் நடத்துகிறார்களோ என்பது தெரியவில்லை!! தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள பல விதமான யுக்திகளை ஒரு கதாநாயகன் கையாளுவது போல் இந்த ஊழிய நாயகர்கள் இறங்கியிருக்கிறார்கள்!! சில "ஆவிக்குரிய கூட்டங்கள்"க்கு சென்றால் ஏதோ மாய ஜால நிகழ்ச்சிகக்கு வந்துவிட்டோமோ என்கிற அளவிற்கு இருக்கும்!!
இப்படி பட்ட கூட்டங்களுக்கு சபைகள் என்று சொல்லி கட்டிடங்களில் கூடுகிற சிறிய சிறிய கூட்டங்களின் தலைகள் (அதான் போதகர்கள் / பாஸ்டர்கள்) தங்களுக்கு சாதகமான கூட்டங்களுக்கு போய்வர அனுமதிப்பார்கள் தமக்கு சாதகமில்லாத கூட்டத்திற்கு போக கூடாது என்றும் சொல்லுவார்கள்!! ஆவியில் பெலன் அடைவீர்கள் என்று தான் வசனம் இருக்கிறது, ஆனால் இவர்கள் வைத்திருக்கும் ஆவியின் வித்தையில் மேடையில் இருப்போல், பெலனிழந்து கிழே விழுவதில் தான் பெருமைக்கொள்கிறார்கள்!!
அப். 1:8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து,............."
இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் எல்லாரும் ஒரே பாணியில் விழுவார்கள், அவர்கள் விழும் போது அவர்களை தாங்கிக்கொள்ள இருவர் பின்னால் நிற்பார்கள்!! அப்படியே ஒரு மாய ஜால நிகழ்சியில் நடப்பது போன்றே இருக்கும்!!
விழா என்பார்கள் ஆனால் எல்லோரும் விழுந்துவிட்டு வருவார்கள்!!
மேடையில் பெயர் சொல்லி அழைப்பது இன்னுமொரு பெரிய தந்திரம்!! இது எப்படி என்று தெரியும், இங்கே எழுதினால் அநேகர் அதை பழகி விட்டு காசு பார்க்க ஆரம்பித்து விடுவார்கள், அதற்கு நான் உடந்தையாக இருக்க விரும்பவில்லை!! ஆனால் இந்த பெயர் சொல்லி அழைப்பது ஒரு சுத்த ரீல் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!! இது போன்ற விஷயங்கலை ஏன் நம்புகிறார்கள் என்றால், வேதத்தை வாசிக்காமல் இருப்பதினால் தான்!!
வேதத்தை ஆராய்ந்து பார்க்கிறோம் என்கிறவர்களே, ஒரே தேவனை மூன்றாக கூறு போடுகிறார்கள், இந்த ஆவிக்குரிய கூட்டத்தை நடத்துபவர்களும் அதையே தான் நம்புகிறார்கள்!! இது எப்படி என்றால், அடிப்படையில் இவர்களின் விசுவாசம் ஒன்று தான். அதை வெளிப்படுத்துவது ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாணியில்!! சிலர் மேடையில் வித்தை காண்பிப்பார்கள், சிலர் போதித்து கெடுப்பார்கள்!!
மத். 24: 23. அப்பொழுது, இதோ கிறிஸ்து இங்கே இருக்கிறார், அதோ அங்கே இருக்கிறார் என்று எவனாகிலும் சொன்னால் நம்பாதேயுங்கள். 24. ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்வார்கள். 25. இதோ, முன்னதாக உங்களுக்கு அறிவித்திருக்கிறேன். 26. ஆகையால்: அதோ, வனாந்தரத்தில் இருக்கிறார் என்று சொல்வார்களானால் புறப்படாதிருங்கள்; இதோ, அறைவீட்டிற்குள் இருக்கிறார் என்று சொல்வார்களானால் நம்பாதிருங்கள்.
வசனம் இப்படி சொல்லியிருக்க, இந்த தேவ மனுஷர்கள் தங்கள் கூட்டங்களில் சொல்லுவதை கவனியுங்கள்:
1. இதோ என் வலது பக்கத்தில் இயேசு கிறிஸ்து நின்று கொண்டு இருக்கிறார் 2. அதோ கூட்டத்தில் ஒருவரின் கான்ஸர் கட்டியை பிடிங்கி போடுகிறார் இயேசு கிறிஸ்து, இதை என் கண்களால் நான் பார்க்கிறேன்!! 3. இதோ மேடையில் மேல் பரிசுத்த ஆவியான தேவன் (!!) அசைவாடிக்கொண்டிருக்கிறார்!! 4. ஜட்ஸன் ஆபிரகாமின் தந்திர வார்த்தைகள்.......பாஆஆஆஆவர் (Powerrrrrrrrrrrrrr)!! 5. இதோ வீல் சேரில் வந்தவர் இறங்கி நடக்கிறார் (பெரிய அடையாளங்கள்)!! ஆனால் மேடையை விட்டு இறங்கியவுடன் மீண்டும் வீல் சேரில் போய் உட்காருவது அநேகருக்கு தெரியாது!!
வேதத்தை வாசித்து இவர்களின் கபடத்தன்மைக்கு விளகியிருங்கள் என்றே கேட்டுக்கொள்கிறேன்!!
எப்படி வேளாங்கண்ணியில் அற்புதங்கள் நடக்கிறது என்று சொல்லுகிறார்களோ, அப்படியே இவர்கள் நம்பும் "அருள் நாதர்" மூலமாகவும் நடக்கிறது!! இந்த கூட்டத்தினருக்கு இயேசு கிறிஸ்து என்பது தெரியாது!!