பைபிள் அங்கிள் (Bible Uncle) என்கிற ஒரு தளத்தை பார்வையிட நேர்ந்தது!! சில விஷயங்களை வைக்கிறேன், இது அந்த தளத்தை நடத்துபவர் காயப்படுவதற்கு அல்ல திருத்திக்கொள்வதற்கே,
Holy Spirit என்கிறதற்கு பதிலாக Holy Sprite என்று எழுதிவைத்திருக்கிறார்!! Spiritஐ Spriteஆக மாற்றிய முதல் தளம் என்று நினைக்கிறேன்!!
அந்த தளத்தின் விசுவாச பிரமானம்,
எங்கள் விசுவாச அறிக்கை வானமும், பூமியும், அதிலுள்ள காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் யாவையும் தேவனால் உண்டானது, பிதாவாகிய தேவனை விசுவாசிக்கிறோம், இந்த உலகத்தில் மாம்சமாக வந்த இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவகுமாரன், அவர் உலக மக்களின் பாவங்களுக்காக பாடுபட்டு சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்டு பாதாளத்தில் இறங்கினார், மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தார், பின்பு பரமண்டலத்துக்கு ஏறி பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார், மீண்டும் இப்பூமிக்கு உயிருள்ளோரையும் மரித்தோரையும் நியாயம் தீர்க்க வருவார், என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். பரிசுத்த ஆவியையும், பொதுவாய் இருக்கிற பரிசுத்த சபையையும், பரிசுத்தவான்களின் ஐக்கியமும், பாவமன்னிப்பும், சரீர உயிர்த்தெழுதலும், நித்திய ஜீவனும் உண்டென விசுவாசிக்கிறோம்..
இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவகுமாரன் என்கிறதை விசுவசிக்கிறார்களோ இல்லையோ, தெரியவில்லை, எழுதியிருக்கிறார்கள், ஏனென்றால் அதே தளத்தில் திரித்துவம் (Trinity) என்கிற கோட்பாடும் இருக்கிறது!! விசுவாசமும் கோட்பாடும் வித்தியசமாக இருக்கிறது!!