kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 666 - இலக்கம் அறுநூற்றறுபத்தாறு!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
666 - இலக்கம் அறுநூற்றறுபத்தாறு!!


வெளி. 13:18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

அந்திகிறிஸ்து என்கிற இந்த தலைப்பு அநேக தளங்களில் எழுதப்பட்டு, அதற்கு பல விதமான அர்த்தங்கள் கொடுத்து வசனத்தை கவனியாது விட்டு விட்டார்கள்!! அந்திகிறிஸ்துவை குறித்து 2 தெச 2ம் அதிகாரத்தில் பார்த்தோமென்றால்,

2 தெச 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

எத்துனை தெளிவாக அந்திகிறிஸ்து என்பவன் ஒரு மனிதனையே குறிக்கிறது என்று இருக்கிறது!! ஆனாலும் பல தளங்களில், அந்திகிறிஸ்து என்ப(வன்)து பணம், கம்ப்யூட்டர், இண்டெர்நெட், போன்ற விஷயங்களோடு ஒப்பீட்டு எழுதுகிறார்கள்!! இவைகளில் ஒன்றாவது தேவனுடைய ஆலயத்தில் தேவனை போல் உட்கார்ந்து தன்னை தேவனென்று காண்பிக்கிறதாய் இருக்கிறதா என்பதை எல்லாம் யோசிப்பதே கிடையாது!!

அந்த அந்த காலத்தில் நீரோ தொடங்கி, இன்றைய ஹிட்லர், இடி அமீன் போன்றவர்களையும், அதன் பின் டெக்னாலட்ஜி முன்னேற்றம் அடைந்ததும் கம்ப்யூட்டர், மைக்ரோ சிப் போன்றவற்றை அந்திக்கிறிஸ்துவின் முத்திரை என்றும், அதை கொண்டுவரும் ஒரு மனிதன் தான் அந்திகிறிஸ்து என்றும் போதித்தும், இதை குறித்து பல புத்தகங்களும் எழுதியிருக்கிறார்களே, இவைகளில் ஒன்றாவது, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாக தன்னை உயர்த்துவது மாதிரியான தோற்றமாவது இருக்கிறதா!!

வெளிப்படுத்தின விசேஷத்தில் 666 என்கிற ஒரு எண்னினால் அந்த மனுஷன் சொல்லப்படுகிறான், மேலும் அத் மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது என்றும் சொல்லப்பட்டிருக்கிறது!!

இந்த 666 என்பது என்ன!! பயப்படுத்தும் ஒரு இலக்கமா? வேதத்திலிருந்து புரிந்துக்கொள்வோர் 7 என்பதை பூர்ணமானது என்று தெரிந்திருப்பார்கள்!! 6ம் நாளில் படைக்கப்பட்ட மனிதன் 6 என்கிற இலக்கத்திற்குறியவனாக இருக்கிறான்!! 6 என்பது மனிதனுக்கு உண்டான எண்!! அப்படி என்றால் ஞானமுள்ளவர்கள் புரிந்துக்கொள்ளும்படியாக, தேவன் இதை வெளிப்படுத்தின விசேஷத்தில் தந்திருக்கிறார்!! அடுத்த பதிவில் இதை குறித்து இன்னும் எழுதுகிறேன்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தானி 7:25. உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி,........

வெளி. 13:5. பெருமையானவைகளையும் தூஷணங்களையும் பேசும் வாய் அதற்குக் கொடுக்கப்பட்டது; ............

2 தெச 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

அந்திகிறிஸ்து அல்லது வெளிப்படுத்தலில் மிருகம் என்று சொல்லப்பட்டதை குறித்தான் வசனங்களே இவைகள்!! இதை போய் கனிணியிலும், மைக்ரோ சிப்பிலும், தேடிக்கொண்டு இருக்கிறார்கள் நம் கிறிஸ்தவர்கள்!! இதோ இவைகள் நிறைவேறிய பகுதிகள். கத்தோலிக மதத்தின் தலைவர்களான போப் (ஆண்டவர்) தங்களை குறித்து உயர்த்தி எழுதிய சிலவற்றை பதிவு செய்கிறேன்:

கத்தோலிக்க மதம் தவிர உலகத்தில் இது வரை எந்த ஒரு மதமும் இப்படி தேவ தூஷனம் செய்ததே கிடையாது அல்லது செய்திருக்க வாய்ப்பில்லை. அவர்களின் கோட்பாட்டின் படி போப் என்பவர், "பூமியில் கிறிஸ்து"!! முறையான சொல் என்றால் கிறிஸ்துவின் விக்கார் (vicar) அல்லது கிறிஸ்துவிற்கு பதிலாக பூமியில் இருப்பவர்!! இருண்ட காலத்தில் (Dark ages) கத்தோலிக்க புனிதரான பெர்னார்ட் என்பவர் சொன்னது, "None except GOD is like the pope, in heaven or on earth."
அதாவது, வானத்திலும் பூமியிலும் தேவன் ஒருவரே போப்பை போல் இருப்பவராம்!! அடேங்கப்பா, தேவதூஷனம் பார்த்தீர்களா!! இன்னும் சில‌,

"எல்லா தலைமைகளிலும் புனிதமானவர் (Most divine of all Heads)" "தந்தைகளில் பரிசுத்த தந்தை (Holy Father of Fathers)" "கிறிஸ்தவ மதத்தின் கண்காணி (Overseer of the Christian Religion)", "மேய்ப்பர்களின் மேய்ப்பர் (Pastor of Pastors)", "அபிஷேகத்தால் கிறிஸ்து (Christ by Unction)", "பிதாக்களில் ஆபிரகாம் (Abraham by Patriachate)", "ஒழுங்கின்படி மெல்கிசெதேக் (Melchisedec in Order)", "அதிகாரத்தில் மோசே (Moses in Authority)", "நியாயாதிபதியான சாமுவேல் (Samuel in the Judicial Office)", "பிரதான குரு, சர்வ‌வல்லமையான பிஷப் (High Priest, Supreme Bishop)", "அப்போஸ்தலர்களின் வாரிசு, அதிகாரித்தில் பேதுரு (Heir to the Apostles; Peter in Power)", "பரலோக இராஜியத்தின் திற‌வுக்கோள் உடையவர் (Key-bearer of the Kingdom of Heaven)", "கிறிஸ்துவின் விக்கார் (Vicar of Christ, Vicar of the Son of God)", "எல்லா பரிசுத்த சபைகளின் தலைவர் (Head of all the Holy Churches)", ஒருமைப்பட்ட சபையின் தலை (Chief of the Universal Church)", "பிஷப்களின் பிஷப் (Bishop of Bishops)", "கர்த்தரின் இல்லத்தின் அதிகாரி (Ruler of the House of the Lord)", "அப்போஸ்தலிக்க கர்த்தர் மற்றும் பிதாக்களின் பிதா (Apostolic Lord and Father of Fathers)", "பிரதான மேய்ப்பர் மற்றும் போதகர் (Chief Pastor and Teacher)", "ஆத்துமாக்களின் மருத்துவர் (Physician of Souls)", "பாதாளத்தின் கதவுகள் ஜெயம்க்கொள்ள முடியாத பாறை (Rock against which the proud gates of hell prevail not)", "தவறாமை வரம் பெற்ற போப் (Infallible Pope)", "தேவனின் பரிசுத்த குருக்களின் தலைவர் (Head of All the Holy Priests of God)"

இப்போ புரியுதா,

வெளி. 13:18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

போப்பின் அதிகாரப்பூர்வமான மொழி லத்தினாகும்!! லத்தின் மொழியில் அவரின் அலுவலகத்தை (His Officஎ) "விக்காரிவ்ஸ் ஃபில்லி டீய்" (Vicarivs Filii Dei),
அதாவது உன்னத தேவனின் குமாரனான் கிறிஸ்துவின் விக்கார் என்று அர்த்தம்!! இந்த லத்தின் எழுத்துக்களில் ரோமன் எண் இட்டோமென்றால் (ரோமன் கத்தோலிக்கர் ரோம சாம்ராஜ்யத்திலிருந்து வந்தபடி தான்), என்ன வருகிறது என்று பாருங்கள்,

V=5

I=1

C=100

A=0

R=0

I=1

V=5

VICARIVS=112

F=0

I=1

L=50

I=1

I-1

FILII=53

D=500

E=0

I=1

DEI=501

VICARIVS FILII DEI - Vicar of The Son of God = 666

தொடரும்......................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

But bible told it in greek, you had calculated in english, am i right

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Bible Just mentions about the anti christ and not its language, dear Balaji!!

It does not say that 666 is in greek or latin or in english.  If christiandom can claim computers, micro chips and www as antichrist which is no way , number of a man, why not papacy which claims to be Vicar of Christ!! See, I don't mention about Pope as a man, but Papacy as a system!

Like Christ is Head and Body which is termed as Church, So is Anti-Christ a system (Papacy),

Rev 13:8 This calls for wisdom. Let the person who has insight calculate the number of the beast, for it is the number of a man.That number is 666.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

Somebody saying share market and money is 666. But 616 and 666 how it is possible dear sir,

__________________
T.balaji


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

And What is that 616, dear Balaji!! And what relation it has with 666!!

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

2 தெச 2:7. அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது; ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது.

அநேகர் அந்திகிறிஸ்து என்கிற ஒரு மனிதன் இனிமேல் வந்து ஆட்சி புரிந்து, கிறிஸ்தவர்களை மாற்றி, கிறிஸ்தவத்தை அழித்து என்று பல விதமான போதனைகள் நாம் கேட்டிருக்கிறோம்!! ஆனால் பவுல் சொல்லுவது என்னவென்றால், அந்திகிறிஸ்துவின் வேலைப்பாடுகள் (அக்கிரமத்தின் இரகசியம்) அவர் இருக்கும் பொழுதே துவங்கிவிட்டது என்று!! ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படும்முன்னே அது வெளிப்படாது, என்று அவர் காலத்திற்கு பிறகு வரப்போகும் ஒரு விஷயத்தை குறித்து எழுதுகிறார்!!

யார் இந்த தடைசெய்கிறவன்? பெந்தகோஸ்தே போதகர்களிடம் கேட்டால் அது தான் பரிசுத்த ஆவியானவர் என்பார்கள்!! என்ன இப்படி மரியாதை இல்லாமல் தடைசெய்கிறவன் என்று எழுதியிருக்கிறார் பவுல் என்று கேட்டால் பதில் இருக்காது!! ஏனென்றால் பவுல் இங்கு தடைசெய்கிறவன் என்று சொல்லியிருப்பது பரிசுத்த ஆவியே கிடையாது!! அப்படி என்றால் யார் இந்த தடைசெய்கிறவன்!!

கான்ஸ்டன்டைன் என்கிற பேரரசன் வரும் முன் ரோமர்கள் கிறிஸ்தவர்களை அழித்துக்கொண்டு தான் இருந்தார்கள்!! இதற்கு பலர் சாட்சியம் கேட்ப்பார்கள், ஆதாரம் கேட்பார்கள், வரலாறே இதற்கு ஆதாரம் என்கிற ஒரே பதில் தான் இருக்கிறது!! பொது வரலாறு, சபை வரலாறு என்று எதை எடுத்தாலும் தெரிந்துக்கொள்ளலாம், ரோமர்கள் கிறிஸ்தவர்களை எப்படி அழித்துக்கொண்டு இருந்தார்கள் என்று!! ஆனால் கான்ஸ்டன்டைன் சிலுவையை பார்த்து கிறிஸ்தவனாக மாறியவுடன் தான் கிறிஸ்தவர்கள் மேல் நடந்த தாக்குதல் நின்றது!! ஆனால் இங்கே தான் விஷயமே இருக்கிறது!! கிறிஸ்தவத்தை வளர விடாமல் தடை செய்த ரோமர்கள் இனி கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்ள ஆரம்பித்தவுடன், கிறிஸ்தவத்தில் தோன்றிய புதிய கோட்பாடுகள், வழிபாடு முறைகள், புதிதான தேவத்துவத்தின் இரகசியங்கள், திரித்துவ கோட்பாடுகள், நிசிய விசுவாசப்பிரமானம் போன்றவை கிறிஸ்தவத்திற்கு நுழைந்து, அப்போஸ்தலர்கள் கொண்டு வந்த விசுவாச பிரமானத்தை குழைத்து போட்டது!!

1 யோவான் 4:3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

அப்படியென்றால், அந்தி கிறிஸ்து இனிமேல் தான் வரயிருக்கிறான் என்று இல்லாமல், யோவான் காலத்திலும், பவுல் காலத்திலுமே அந்த ஆவி கிரியை செய்ய ஆரம்பமாகி விட்டது, அதற்கு எடுத்துக்காட்டு தான்,

2 தீமோ 2:18. அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

அன்றே சிலர் உயிர்த்தெழுதல் நடந்தாயிற்று என்று சொல்லி கிறிஸ்தவத்திற்குள் குழப்பமான ஒரு போதனையை கொண்டு வர முயற்சித்திருப்பதையும், அதில் வெற்றி பெற்றதையும் பவுல் சொல்லுகிறார்!! இது தான் அந்திகிறிஸ்துவின் செயல்!! இது ஏதோ இனி ஒருவன் வந்து செய்ய போவதில்லை!! ஆனால் பவுல் காலத்தில் தொடங்கிய அந்த கள்ள போதகம், தேவதூஷனம் ரோம சாம்ராஜ்யம் கிறிஸ்தவத்திற்கு எதிரியாக இருந்த வரை தடை செய்துக்கொண்டு இருந்தது, ஆனால் கான்ஸ்டன்டைன் என்கிற ரோம பேரரசன் கிறிஸ்தவனாக வந்தவுடன் தடை செய்தவன் (ரோம சாம்ராஜ்யம்) நீங்கிவிட்டு கிறிஸ்தவம் என்கிற மதத்தில் புற மதஸ்தரின் அனைத்து கோட்பாடுகளையும் அனுமதித்து விட்டான்!! போப் என்கிற மத குரு உருவாகி, கிறிஸ்தவத்தின் தலைமையில் அமர்ந்து,

2 தெச 2:4. அவன் எதிர்த்துநிற்கிறவனாயும், தேவன் என்னப்படுவதெதுவோ, ஆராதிக்கப்படுவதெதுவோ, அவையெல்லாவற்றிற்கும் மேலாகத் தன்னை உயர்த்துகிறவனாயும், தேவனுடைய ஆலயத்தில் தேவன்போல உட்கார்ந்து, தன்னைத்தான் தேவனென்று காண்பிக்கிறவனாயும் இருப்பான்.

என்கிற வசனத்தை நிறைவேற செய்தது போப் தான்!! இவரும் இவர் வழி வந்த மற்ற போப்புகளும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை இந்த தேவதூஷன (எனது முந்தய பதிவை பார்க்கலாம்) வார்த்தைகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு இருந்தவர்கள் தான்!! இந்த போப் வரிசையில் தானியேல் எழுதிய வசனமும் நிறைவேறுகிறது,

தானி 7:8. அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தினகொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.

தொடரும்..........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 46
Date:

bereans wrote:

And What is that 616, dear Balaji!! And what relation it has with 666!!


 if you have telugu friends, ask them 666 put notegiven as 616



-- Edited by balaji on Tuesday 8th of November 2011 02:09:25 PM

__________________
T.balaji
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard