kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் விசுவாசம்-என் முகபுத்தக நண்பர்களின் கவனத்துக்கு!!!!


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
என் விசுவாசம்-என் முகபுத்தக நண்பர்களின் கவனத்துக்கு!!!!


தாம் ஒருவராய் சாகாமையுள்ளவரும் ஒருவரும் சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும் ஆதியந்தமில்லாத ஏக சக்கிராதிபதியுமான யேகோவா என்னும் நாமமுள்ள ஒன்றான மெய்த்தேவனையே விசுவாசிக்கின்றோம்.  (1 தீமோ. 6:15,16; யாத் 6:3) 

அவருடைய ஒரே பேரான குமாரனும் நம்முடைய கர்த்தரும் இரட்சகருமான இயேசுக் கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறோம்.   (யோவா 3:16)

இவர் அதரிசனமான தேவனுடைய தற்சொரூபமும் சர்வசிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். தேவன் இவரைக் கொண்டும் இவருக்கென்றும் உலகங்களை எல்லாம் உண்டாக்கி இவரையே சர்வத்துக்கும் சுதந்திரவாளியாகவும் நியமித்தார்.  எல்லாம் இவருக்குள் நிலை நிற்கிறதென்றும் விசவாசிக்கிறோம். (கொலோ 1:15: எபி. 1:2.)

இவர் தேவ குமாரனாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருக்க எண்ணாமல், அக்கிரமங்களினால் ஜீவனை இழந்த மனுஷர் பேரில் மனதுருகி தம்மைத் தாமே வெறுமையாக்கி மனிதனாகி எல்லோரையும் மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனையே கொடுத்து தேவனுக்கும் மனுஷருக்கும் சமாதானத்தை உண்டு பண்ணினாரென்றும் விசுவாசிக்கின்றோம்.   (யோவா .10:36)

ஆதலால் தேவன் இவரை மரித்தோரிலிருந்து எழுப்பி நம்மைப்போல் குமாரனும் ஜீவனுடையவராயிருக்க அருள் செய்து, எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தி தம்முடைய வல்லமையின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கச் செய்தார்  என்றும் விசுவாசிக்கின்றோம்.  (அப். 3:15: யோவா 5:26).

இவரே தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தராகவும் சபையாகிய சரீரத்துக்குத் தலையாகவும் இருக்கிறார் என்றும் விசுவாசிக்கிறோம்.

இவர் பரலோகத்துக்கேறி, தாம் வாக்குத்தத்தம் பண்ணின, உன்னதத்திலிருந்து வரும் பெலனாகிய, பரிசுத்தாவியை, விசுவாசிகளடங்கிய சபைக்கு அருளி, தேவ சித்தத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தி, பலியின் ஜீவியத்தில் அவர்களை நடத்தி வருகிறாரென்றும் விசுவாசிக்கிறோம். (அப். 1:11) 

பிதா குறித்த காலத்தில், இவர், பலியின் மரணத்துக்குட்பட்டு முதலாம் உயிர்தெழுதலடையும், தம்முடைய சபையாகிய சகல பரிசுத்தவான்களோடும்(எண்ணிக்கை ), இப்பூமிமைய நீதியாய் நியாயந்தீர்த்து, சகல துரைத்தனத்தையும் அதிகாரத்தையும், வல்லமையையும் பரிகரித்து என்று அழியாத தம்முடைய நீதியுள்ள அரசாட்சியை ஸ்தாபிப்பர் என்றும் விசுவாசிக்கிறோம்.

மரணமடைந்த மற்றவர்கள், கிறிஸ்துவின் அரசாட்சி காலத்தில், அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்பட்டு, அவர் தம்முடைய மரணத்தினால் சம்பாதித்த, நித்திய ஜீவனையடைய வழி நடத்தப்பட்டு, பூரணப்படுவார்கள். ஆய்ரம் வருட ஆட்சிக்கு பின்பு   மனப்பூர்வமாய் சீர்திருந்தாதவர்கள், இரண்டாம் மரணத்திலே அழிக்கப்படுவார்கள் என்றும் விசுவாசிக்கிறோம்.  (வெளி.20:5: 1 கொரி.15:23)

எல்லாச் சத்துருக்களையும் தமது பாதபடியாக்கு மட்டும், இவர் ஆளுகை செய்து, கடைசிச் சத்துருவாகிய மரணத்தையும் பரிகரித்து எல்லாவற்றையும் முந்தினசீருக்குக் கொண்டு வந்து, பிதாவே சகலத்திலும் சகலமுமாய் இருப்பதற்கு, அவருக்கு இராஜ்யத்தை ஒப்புக்கொடுத்து, அவருக்குக் கீழப்பட்டிருப்பார் என்றும் விசுவாசிக்கிறோம். (1கொரி 15:25,26,28.) ஆமென்



-- Edited by Theneer Pookal on Sunday 23rd of January 2011 01:24:42 PM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: என் விசுவாசம்-என் முகபுத்தக நண்பர்களின் கவனத்துக்கு!!!!


வசனத்துடன் வரும் விசுவாசமே நிச்சயமாகவே சரியான விசுவாசமாக தான் இருக்க முடியும்!! பாரம்பரிய கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த வேதத்தின் விசுவாசம் தெளிவும் நிறைவுமானதாகவே இருக்கிறது!!

ஒன்றில் மாத்திரம் எனக்கு உடன்பாடில்லை!! இரண்டாம் மரணம்!! வெளிப்படுத்தின விசேஷத்தில் வந்த காரணத்தினால், இரண்டாம் மரணம் என்கிற வார்த்தைய ஏன் நேரடியான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கேள்வி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
என் விசுவாசம்-என் முகபுத்தக நண்பர்களின் கவனத்துக்கு!!!!


//இரண்டாம் மரணம் என்கிற வார்த்தைய ஏன் நேரடியான அர்த்தத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது என் கேள்வி!!//

உண்மைதான். இயேசுவின் இரண்டாம் வருகையின்போது இறந்தவர்கள் அனைவரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள். பின்பு ஆயிரம்வருட ஆட்சியின் போது உயிர்ப்பிக்கப்பட்ட அனைவருக்கும் தேவனின் சகல சத்தியங்களும் கற்பிக்கப்படும்.
இதில்
சத்தியத்தையும், தேவசித்தத்தையும் ஏற்காத அனைவரையும் தேவனின் சித்தத்துக்கு  அமைய இயேசுவானவர் அவர்களை அளிப்பார். இதையே நான் இரண்டாம் மரணம் என்று சொல்லர்த்தமாக குறிப்பிட்டு இருந்தேன்.


-- Edited by Theneer Pookal on Tuesday 25th of January 2011 01:41:39 AM

-- Edited by anbu57 on Tuesday 25th of January 2011 06:40:06 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard