kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவ போதகரின் அறியாமை - 1 கொரி 8:7


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
திரித்துவ போதகரின் அறியாமை - 1 கொரி 8:7


http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40017791

இந்த தளத்திலிருந்து தன் ப‌திவுகளை நீக்கி தன் பேடித்தனைத்தையும் அறிவீனத்தையும் நிரூபித்த சில்சாம் தன் தளத்திலிருந்து கெர்ச்சிப்பது எங்களுக்கு கேட்கிறது!! வேறு என்ன, இவர் நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தை தன் கையில் எடுத்துக்கொண்டார் போல்!! அதான் இயேசு சொன்னாரே, கடைசி நாட்களில் என் நாமத்தில் அநேகர் வருவார்கள் என்று, இதோ வந்து விட்டார்!! கிறிஸ்துவிற்கு பிதா தந்த நியாயத்தீர்ப்பின் அதிகாரத்தை சில்சாம் எடுத்துக்கொண்டார் போல்!!

ம‌த். 24:5. ஏனெனில், அநேகர் வந்து, என் நாமத்தைத் தரித்துக்கொண்டு: நானே கிறிஸ்து என்று சொல்லி, அநேகரை வஞ்சிப்பார்கள்.

//எழுதப்பட்ட வார்த்தைக்கு தப்புந்தவறுமான வியாக்கியானங்களைக் கொடுத்து உங்களையும் உங்கள் ஸ்தானத்தையும் உங்கள் மேன்மையையும் நீங்களே கெடுத்துக்கொண்டு பந்தயப்பொருளையும் இழக்கும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதை அறியாமல் தேவத்துவத்துடன்  (Divinity) தொடர்ந்து மோதிக் கொண்டிருக்கிறீர்கள்.//

எழுதப்படாத வார்த்தையையே விசுவாசமாக்கி அதை கோட்பாடாக்கி, அநேகரை வஞ்சித்து அதற்கு வக்காலத்து வாங்கும் உங்களுக்கு இந்த விளக்கங்கள் எல்லாம் புரியவே புரியாது, ஏனென்றால் நீங்கள் அதற்கென்றே நியமிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பது என் கருத்து!!

1 பேது 2:8. அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாயிருந்து இடறுகிறார்கள்; அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்.

அவர்கள் என்பது இல்லாத திரித்துவத்தை துனிச்சலாக போதித்துக்கொண்டு இருப்பவர்கள் தான்!! வசனமே தெரியாதவர்கள் "எழுதப்பட்ட வார்த்தை"யை பேசாமல் இருப்பதே நல்லது!!

ச‌த்திய‌த்தை பேசுவோர் சில‌ர் உங்க‌ளுக்கு எதிரியாக‌ தான் நினைத்துக்கொள்வீர்கள்!! சாத்தானுக்கும் ச‌த்திய‌த்திற்கும் வெகு தூர‌ம்!! ஆனால் அவனுக்கு கூட கிறிஸ்து இயேசு தேவனின் குமாரன் என்று தெரியும், உமக்கு அது கூட தெரியாததில் ஆச்சரியம் இல்லை, அதற்கென்றே நியமிக்கப்படவர் தானே நீர்!!பார‌ம்ப‌ரிய‌ம், துதிப்பாட‌ல்க‌ள், "உண‌ர்வு பூர்வ‌மான‌ விசுவாச‌ம்" இவ‌ற்றில் தான் உங்க‌ளை போன்றோரின் ந‌ம்பிக்கை நிலைத்து இருக்கிற‌து!! நீங்க‌ள் எல்லாம் ஏன் தான் வ‌ச‌ன‌ம் எழுதுகிறீர்க‌ளோ!! ச‌பிக்கும் வ‌ச‌ன‌ங்க‌ள் தேட‌த்தானே!! வ‌ச‌ன‌ம் கொடுத்தாலும் தெளிவுப்ப‌டுத்த‌வே நாங்க‌ள் வ‌ச‌ன‌ம் கொடுப்போம், முடிந்தால் உங்க‌ள் த‌ள‌த்தில் இந்த‌ வ‌ச‌ன‌ம் என்ன‌ தான் சொல்லுகிற‌து என்று கேட்டு பாரும்:

நீதிமொழிகள் 30:4 வானத்துக்கு ஏறியிறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை வஸ்திரத்தில் கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் ஸ்தாபித்தவர் யார்? அவருடைய நாமம் என்ன? அவர் குமாரனுடைய நாமம் என்ன? அதை அறிவாயோ?

பிதா பிதா தான் , குமார‌ன் குமார‌ன் தான்!! யார் தேவத்துவத்துடன்  (Divinity) தொட‌ர்ந்து விளையாடுக்கொண்டு இருக்கிறார்க‌ள் என்று நீர் யோசித்து பாரும்!! வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு ம‌திப்பு கொடுக்காத‌ நீர்  எங்க‌ளை குறை கூறும் அருக‌தை இல்லாத‌வ‌ராக‌ இருக்கிறீர்!!

வேத‌ம் தெளிவாக‌ சொல்லுகிற‌து,

1 கொரி 8:5. வானத்திலேயும் பூமியிலேயும் தேவர்கள் என்னப்படுகிறவர்கள் உண்டு; இப்படி அநேக தேவர்களும் அநேக கர்த்தாக்களும் உண்டாயிருந்தாலும், 6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை

அந்த‌ அறிவு திரித்துவ‌ம் போதிப்ப‌வ‌ர், பிதாவும் குமார‌னும் ஒன்று தான் என்று சொல்லும் உம‌க்கு நிச்ச‌ய‌மாக‌ இல்லை!! எத்துனை முறை இந்த வசனத்தை கொடுத்திருந்தாலும் திரித்துவம் பேசுவோர் இதற்கு விளக்கம் தர முடியாமல் இருப்பது எங்களுக்கு என்ன தெரியாது என்று நினைக்கிறீர்களோ!! முதலில் தேவனை அறிகிற அறிவில் வளருங்கள், பிறகு மற்றவர்களை சபிக்கலாம்!!

அவரே எங்கள் விசுவாசத்தை  தன் தளத்தில் பிரபலப்படுத்தி அநேகரிடம் இதை கொண்டு சேர்க்கிறார்!! காதுள்ளவன் நிச்சயம் கேட்பான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard