kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உன் இருதயத்தைக் காத்துக்கொள் - நீதிமொழிகள் 4:23


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:
உன் இருதயத்தைக் காத்துக்கொள் - நீதிமொழிகள் 4:23


தொல்லை நிறைந்த இந்த உலகில், நாம் அன்றாடம் பல தீர்மானங்கள் எடுக்க வேண்டி இருக்கிறது; அப்படிப்பட்ட தீர்மானங்களுக்கும் கடவுளுக்கு கீழ்ப்படிவதற்கும் சம்பந்தம் இருக்கிறது. நாம் எடுக்கிற தீர்மானங்கள் கடவுளுக்குப் பிரியமானவைகளா, இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்? இதற்கு தேவன் தந்துள்ள ஒரு பரிசு நமக்குப் பெரிதும் உதவும். அதுவே மனசாட்சி. மனசாட்சி என்றால் என்ன ? நம்மை நாமே எடை போட்டுப் பார்க்க உதவும் ஒரு விஷேசத் திறமையாகும். அது, நமக்குள்ளே ஒரு நீதிபதியைப் போல செயல்படுகிறது. நாம் செய்யப்போகும் தீர்மானத்தை அல்லது செய்துவிட்ட செயலைச் சிந்தித்துப் பார்க்க உதவுகிறது. அதோடு நாம் எடுக்கும் திர்மானம் சரியா தவறா, நல்லதா கேட்டதா எனச் சீர்துக்கிப் பார்க்கவும் உதவுகிறது. (ரோமர் 2 : 14 - 15 ) 14. அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள்.

15. அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்க்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

ஆனால் நம் மனசாட்சிக்கு வரம்பு உள்ளது. உதாரணத்துக்கு நம் இருதயத்தின் ஆசைகள் நம்மை ஆட்டிபடைக்க நாம் அனுமதித்தால் தன்னல ஆசைகள் நம் மனசாட்சியைத் தவறான பாதையில் வழிநடத்தலாம். ( எரேமியா 17 : 9 ) பைபிளில் உள்ள நம்பகமான அறிவுரைகளை என்றும் மாறாத அறிவுரைகளை நாம் சார்ந்திராவிட்டால் மனசாட்சி இருந்தும் நமக்கு பிரயோஜனம் இருக்காது.
(சங்கிதம் 119 : 105 ) 105. உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.



-- Edited by anbu57 on Sunday 20th of February 2011 09:25:25 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

(2 ) ''ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்''.- சங்கிதம். 65 :2

யேகோவா தமது உண்மையுள்ள ஊழியர்கள் செய்கிற ஜெபங்களை ஒருபோதும் அசட்டை செய்வதில்லை. அவர் நமக்குச் செவிசாய்க்கிறார் என்பதில் நாம் உறுதியோடு இருக்கலாம். லட்சக்கணக்கான
''வேத மாணாக்கர்கள்'' ஒரே நேரத்தில் அவரிடம் ஜெபம் செய்தாலும், அவர்கள் ஒவ்வொருவருடைய ஜெபத்தையும் அவரால் கேட்கமுடியும். கடவுள் நம்முடைய ஜெபங்களுக்குப் பதிலளிக்க வேண்டுமானால், நாம் மனத்தாழ்மையோடு  ஜெபிக்க வேண்டும். (''கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார்''. சங்கிதம். 138 :6 ) தன்னை ஆராய்ந்து பார்க்கும்படி யேகோவாவிடம் தாவீது கேட்டார். ''தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். Hi 31:6; Ps 26:2;///   வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்''. என்று அவர் ஜெபம் செய்தார். ஜெபம் செய்யும்போது நாமும் இதே மனநிலையைக் காட்ட வேண்டும். ( சங்கிதம். 139 :23 ,24 ) இப்படி ஜெபம் செய்வதோடு அவர் நம்மை ஆராய்ந்து பார்க்க அனுமதிக்கவும் வேண்டும். அதுமட்டும் அல்ல, அவருடைய வார்த்தையிலுள்ள ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியவும் வேண்டும். அப்படிச் செய்யும்போது யேகோவா நம்மை ''நித்திய வழியிலே'' நடத்துவார், முடிவில்லா வாழ்வுக்கான வழியில் நடக்க நமக்கு உதவுவார்.

-- Edited by anbu57 on Sunday 20th of February 2011 09:27:07 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

(3)''கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.உம்முடைய சத்தியத்திலே என்னை நடத்தி, என்னைப் போதித்தருளும்; நீரே என் இரட்சிப்பின் தேவன், உம்மை நோக்கி நாள்முழுதும் காத்திருக்கிறேன்''.  சங்கீதம் 25 :4 ,5

யெகோவாவின் சேவையில் அதிகத்தைச் செய்வதற்கான தூண்டுதல் இல்லாமல், சபையில் நாம் ஏதோ பேருக்குப் பிரஸ்தாபியாக இருக்குறோம் என்றால் என்ன செய்வது? பவுல் இவ்வாறு குறிப்பிட்டார்: ''உங்களை மனமுவந்து செயல்பட வைப்பதற்காக கடவுள்தான் தமக்குப் பிரியமானபடி உங்களிடையே செயல்பட்டு வருகிறார்''. உண்மைதான், நாம் மனம் உவந்து  செயல்படும்படி, அதாவது விருப்பப்பட்டுச் செயல்படும்படி, கடவுளால் நம்மீது செல்வாக்கு செலுத்த முடியும். (பிலி. 2 :13 /4 :13 ) அப்படியானால், ''யேகோவாவே, உங்களுக்குப் பிரியமானபடி என்னைச் செயல்பட வையுங்கள்'' என்று நாம் அவரிடம் கேட்க வேண்டும், அல்லவா? இன்று வேதம் வாசிக்கும்போது நான் அறிந்துகொண்டபடி, பூர்வ இஸ்ரவேல் ராஜாவான தாவீது அதைத்தான் செய்தார். தமக்குப் பிரியமான விதத்தில் நம்மைச் செயல்படவைக்கும்படி நாமும் யேகோவாவிடம் ஜெபம் செய்யலாம். நாம் யேகோவாவுக்கும் அவருடைய மகனுக்கும் விருப்பமான காரியங்களை செய்யும்போது அவர்கள் இருவரும் எந்தளவு சந்தோசப்படுவார்கள் என்பதை நினைத்துப் பார்ப்போமென்றால், நம் இருதயத்தில் நன்றிஉணர்வு பொங்கியெழும். (மத். 26 :6 -10 / லூக்கா. 21 :1 -4 ) யெகோவாவின் சேவையில் அதிகத்தை செய்வதற்கான விருப்பத்தைத் தரும்படி அவரிடம் கெஞ்சிக் கேட்க அந்த நன்றிஉணர்வு நம் உள்ளத்தைத் தூண்டலாம்.


-- Edited by Theneer Pookal on Tuesday 8th of February 2011 07:51:33 PM

-- Edited by anbu57 on Sunday 20th of February 2011 09:29:31 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

(4) தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும். மத்தேயு 21 : 43

கர்த்தர் தம் மக்களை, அதாவது பூர்வகால இஸ்ரவேல் தேசத்தாரை ஒட்டுமொத்தமாக ஊழியன் என அழைத்தார். ''ஏசாயா 43 அதிகாரம் 10. ''நானே அவரென்று நீங்கள் உணர்ந்து, என்னை அறிந்து விசுவாசிக்கும்படிக்கு நீங்களும் நான் தெரிந்துகொண்ட என் தாசனும் எனக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை''. என்று அவர் சொன்னார். ஆகவே, அந்த தேசத்தார் அனைவரும் ஊழியன் என்ற ஒரே வகுப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். என்றாலும் கவனிக்கவேண்டிய குறிப்பு என்னவென்றால், அந்தத் தேசதாருக்குக் கற்பிக்கும் பொறுப்பு ஆலய குருமார்களுக்கும் குருமார்கள் அல்லாத லேவியருக்கும் மட்டுமே இருந்தது. (2 நா. 35 : 3 மல்கியா 2 : 7 ) அப்படியானால் இஸ்ரவேல் மக்களைத்தான் அடிமை என மத்தேயு 24 : 45 இல் இயேசு குறிப்பிட்டாரா ? இல்லை. இயேசு தம் காலத்து யூதர்களிடம் சொல்லியதில் இருந்து இதைத் தெரிந்து கொள்ளலாம். நிச்சயமாகவே ஒரு மாற்றம் நிகழவிருந்தது. கர்த்தர் ஒரு புதிய தேசத்தை, அதாவது வேறு மக்களை பயன்படுத்த விருந்தார். என்றாலும் ஆன்மீக உணவளிக்கும் வேலையைப் பொருத்ததில், இயேசுவின் உவமையில் வரும் அடிமை, கடவுளுடைய ஊழியனான பூர்வகால இஸ்ரவேலரின் மாதிரியைப் பின்பற்றுகிறது.



-- Edited by Theneer Pookal on Sunday 13th of February 2011 04:10:38 AM

-- Edited by anbu57 on Sunday 20th of February 2011 09:31:58 PM

__________________


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

(5 ) நான் இந்த உலகத்தின் பாகமாக ......  இல்லை.-- யோவான் 17 : 16

நம்மைச் சுற்றியுள்ள உலகத்தாரின் சிந்தையும் நடத்தையும் நம்மைக் கெடுத்துவிடாதபடி பார்த்துக்கொள்ள நமக்குத்
தைரியம் தேவை. ஒழுக்க ரீதியிலும், சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், மத ரீதியிலும் வருகிற  அழுத்தங்களைக் கிறிஸ்தவர்கள் எதிர்பட வேண்டி இருக்கிறது. அவை யெகோவாவின் நீதியுள்ள வழிகளைவிட்டு அவர்களை விலகச் செய்கின்றன. அநேகருக்கு குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு வருகிறது. சில நாடுகளில், பரிணாமக் கோட்பாடு கல்வி நிறுவனங்களில் தீவிரமாக கற்பிக்கப்படுகிறது, நாத்திகக் கொள்கைகளும் பிரபலமாக வருகிறது. இப்படிப்பட்ட அழுத்தங்களை எதிர்படும்போது
நாம் வெறுமனே கைகட்டிக்கொண்டு இருக்கமுடியாது. இவற்றுக்கு இணங்கிவிடாதபடி நம்மைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதில் நாம் எப்படி வெற்றி காணலாம் என்பதை இயேசுவின் முன் மாதிரி காட்டுகிறது. அவர் இந்த உலகத்தின் செல்வாக்கிற்குக் கொஞ்சமும் இடங்கொடுக்கவில்லை. தாம் செய்துவந்த பிரசங்க வேலையே நிறுத்தவோ, உண்மை வணக்கம் மற்றும் நல்நடத்தை சமந்தமாக தாம் கடைப்பிடித்து வந்த நெறிமுறைகளை தளர்த்தவோ அவர் இந்த உலகத்தை அனுமதிக்கவில்லை; அவ்வாறே நாமும் அனுமதிக்கக் கூடாது. தைரியமாய் இருந்த கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பற்றிப் படிப்பதும் ஆழ்ந்து சிந்திப்பதும், இந்த உலகத்தின் பாகமாக இல்லாதிருக்க நமக்கு உதவுகிறது.


-- Edited by anbu57 on Sunday 20th of February 2011 09:33:46 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard