''அரும்பெரும் பொக்கிஷங்கள்!''-- ''ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு!!!'' இது போன்ற செய்திகள் அடிக்கடி தலைப்பு செய்திகளாக வெளிவந்து இருக்கின்றன. அவற்றில் சில சரித்திரப் புகழ் வாய்ந்தவையாகவோ, கலைனயமிக்கவயாகவோ இருக்கலாம்.
ஆனால் நம் அன்றாட வாழ்க்கைக்குப் பொதுவாக அவை பிரயோஜனமாக இருகின்றனவா ? இல்லை !!! என்றாலும் நம் வாழ்க்கைக்கு உண்மையிலேயே பிரயோஜனமான பொக்கிஷங்கள் இருகின்றன. அவற்றை தேடிக்கண்டு பிடிக்கும்படி கடவுளுடைய வார்த்தை நம்மை அழைக்கிறது, நம்மை மட்டுமல்ல எல்லாரையுமே அழைக்கிறது. இந்த அழைப்புக்கு இணங்கிச் செயல்படுவோருக்கு பொன், பொருள் போன்ற பொக்கிசங்களை விட மிகமிக மதிப்பு வாய்ந்த பொக்கிஷங்கள் கிடைக்கும். ( நிதிமொழிகள். 2 : 1 -6 )
1. என் மகனே, நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணும்பொருட்டு,
2. நீ என் வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு, என் கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்தி,
3. ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,
4. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,
5. அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய்.
6. கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.
தேடிக்கண்டு பிடிக்கும் படி தம்முடைய ஊழியர்களிடம் தேவன் சொல்கிற பொக்கிஷங்கள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தவை எனக் கவனியுங்கள். அந்தப் போக்கிசங்களில் ஒன்று, தேவனுக்கு பயப்படுகிற பயம், இந்தக் கொடிய காலங்களில் அது நமக்கு பாதுக்காப்பை அழிக்கிறது. '' தேவனை அறியும் அறிவை'' நாம் கண்டடையும் போது உன்னதமானவரோடு ஓர் இனிய உறவுக்குள் நம்மால் வர முடிகிறது. கிடைப்பதற்கரிய மாபெரும் பாக்கியம் இது !!!
தெய்வீக ஜானம், அறிவு , பகுத்துணர்வு ஆகிய போக்கிசங்களும் நமக்கு மதிப்பு வாய்ந்தவையே. நம்முடைய அன்றாட பிரச்சனைகளையும், கவலைகளையும் வெற்றிகரமாக சமாலிக்க அவை நமக்கு உதவுகிறது. (நீதி. 9 : 10 ) 10. கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
தெய்வீகக் கல்வியேப் பெற நாம் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்? முக்கியமாய், நாம் சாந்தமும் மனத்தாழ்மையும் உள்ளவர்களாக இருக்கவேண்டும். ''யோகோவா ..... நல்லவரும் உத்தமருமாயிருக்கிறார்; ஆகையால் பாவிகளுக்கு வழியைத் தெரிவிக்கிறார்.சாந்தகுணமுள்ளவர்களை நியாயத்திலே நடத்தி, சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்''. எனச் சங்கிதக்காரனான தாவீது எழுதினார். (சங்கீதம். 25 :8 ,9 ) இயேசுவும் ஜெபத்தில் இவ்வாறு தெரிவித்தார்: ''பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்; ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது''. (லுக்கா. 10 :21 ) யோகோவாவின் ஊழியர்களாகிய நாம், சொந்தத் திறமைனாலும் ஜனத்தினாலும் தான் சத்தியத்தைக் கண்டுபிடித்தோமா? இல்லவே இல்லை!!! உண்மையில் நம்முடைய சொந்த முயற்சியால் கடவுளைப் பற்றி நாம் அறிந்திருக்கவே முடியாது: இயேசு இவ்வாறு சொன்னார்: '' என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்'': (யோவான் 6 :44 ) 'சகல ஜாதிகளையும் அசையப்பண்ணுவேன், சகல ஜாதிகளாலும் விரும்பப்பட்டவர் வருவார்; இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்'. (ஆகா.2 :7 ) யோகோவா தமது மகனிடம் ஈர்த்திருக்கிற ஆட்களில் நீங்களும் ஒருவராக இருப்பதற்கு நன்றி உள்ளவர்களாய் இருகிறிர்கள், அல்லவா? எரேமியா. 9:23 ,24 )
யெகோவாவின் ஊழியர்களான நாம் எப்பேர்ப்பட்ட முக்கியத் தகவல்களைத் தெரிந்து வைத்திருக்கிறோம்!!!! ஆம், உலகம் சீரழிந்து வருவதற்கு யார் காரணம் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். நிஜ எதிரியை மக்களுக்கு அம்பலப்படுத்துவதற்காக நாம் வெளி ஊழியத்தில் கலந்து கொள்ளத் தூண்டப்படுகிறோம், அல்லவா? அதோடு, உண்மைக் கடவுளான யெகோவாவின் பக்கம் இருப்பதிலும், சாத்தானுக்கும் மனித பிரச்சனைகளுக்கும் அவர் எப்படி முடிவுகட்டப்போகிறார் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதிலும் நாம் சந்தோசப்படுகிறோம், அல்லவா? உலக மக்கள் சந்திக்கிற பல பிரச்சனைகளுக்கு மட்டுமல்ல, கடவுளுடைய மக்கள் சந்திக்கிற எதிர்ப்புக்கும் சாத்தான் தான் காரணம். நம்மைச் சோதிக்க வேண்டும் என்பதில் அவன் குறியாக இருக்கிறான். அப்போஸ்தலன் பேதுருவிடம் இயேசு கிறிஸ்து, ''சீமோனே, சீமோனே, இதோ!! கோதுமையை சலித்தெடுப்பது போல உங்கள் எல்லாரையும் சலித்தெடுக்க வேண்டும் எனச் சாத்தான் கேட்டு இருக்கிறான்'' என்று சொன்னார் (லுக் 22 :31 ). அதேபோல், இயேசுவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிற நாம் ஒவ்வொருவருமே ஏதோவொரு விதத்தில் சோதிக்கப்டடுகிறோம். பிசாசு, ''கர்ச்சிக்கிற சிங்கம் போல் எவனை விழுங்கலாம் என்று அலைந்து திரிகிறான்'' என பேதுரு சொன்னார். 1 பேதுரு 5:8.
__________________
Page 1 of 1 sorted by
Truth Seekers -> Good News / நற்செய்தி -> கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது. (சங்கீதம்.19 :