பண்டைய காலங்களில் பொருள்கள் பெரும்பாலும் தராசில் நிறுக்கப்பட்டன. அதில் நிறுக்கவேண்டிய பொருள் ஒரு தட்டிலும் நிறைகள் மற்றொரு தட்டிலும் வைக்கப்படும். கடவுளுடைய மக்கள் சரியான தராசுகளையும் நிறை கற்களையும் பயன்படுத்த வேண்டிஇருந்தது. --நீதி . 11: 1
சாத்தானுடைய தாக்குதலுக்கு தேவபக்தி உள்ள யோபு இரையான போது இவ்வாறு சொன்னார் . ''சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக'' உத்தமத்துக்கு சோதனையாய் இருக்கும் நிறைய சூழ்நிலைகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால், தனக்கு வந்த சோதனையில் அவர் வெற்றி கண்டார். இதை யோபு 31 ஆம் அதிகாரத்தில் உள்ள பதிவில் இருந்து தெரிந்து கொள்கிறோம். யோபுவின் சிறந்த முன் மாதிரி, அவரைப் போல செயல்பட நம்மைத் தூண்டும். அதோடு சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல ''நானோ என் உத்தமத்திலே நடப்பேன்'' என்று உறுதியோடு சொல்லவும் தூண்டும்.
யோபு மிகக் கடுமையாக சோதிக்கப்பட்ட போதிலும் கடவுளுக்கு உண்மை உள்ளவராய் இருந்தார் . யோபுவுக்கு வந்த பயங்கரமான சோதனைகளையும் அவர் உண்மையாய் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு சிலர் அவரை மாமனிதராக சித்தரிக்கலாம். யோபுவுக்கு வந்ததைப் போன்ற சோதனைகள் நமக்கு வருவதில்லை. இருந்தாலும் நாம் உத்தமர்கள் என்பதையும் கடவுளின் ஆட்சியை ஆதரிப்பவர்கள் என்பதையும் காட்டுவதற்கு, பெரிய விஷயத்திலும் சரி சிறிய விஷயத்திலும் சரி உண்மையாய் இருக்கவேண்டும். --லுக்கா 16:10 வாசிக்கவும். (தொடரும்)
-- Edited by Theneer Pookal on Monday 17th of January 2011 12:49:12 AM
-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 04:41:40 AM
பண்டையக் காலங்களில் பொருள்கள் பெரும்பாலும் தராசில் நிறுக்கப்பட்டன. அதில் நிறுக்க வேண்டிய பொருள் ஒரு தட்டிலும் நிறைகள் மற்றொரு தட்டிலும் வைக்கப்படும். கடவுளுடைய மக்கள் சரியான தராசுகளையும் நிறை கற்களையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. --நீதி . 11: 1
சாத்தானுடைய தாக்குதலுக்கு தேவபக்தி உள்ள யோபு இரையான போது இவ்வாறு சொன்னார் . ''சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக'' உத்தமத்துக்கு சோதனையாய் இருக்கும் நிறைய சூழ்நிலைகளைப் பற்றி அவர் குறிப்பிட்டார். ஆனால், தனக்கு வந்த சோதனையில் அவர் வெற்றி கண்டார். இதை யோபு 31 ஆம் அதிகாரத்தில் உள்ள பதிவில் இருந்து தெரிந்து கொள்கிறோம். யோபுவின் சிறந்த முன் மாதிரி அவரைப் போல செயல்பட நம்மைத் தூண்டும். அதோடு சங்கீதக்காரனாகிய தாவீதைப் போல ''நானோ என் உத்தமத்திலே நடப்பேன்'' என்று உறுதியோடு சொல்லவும் தூண்டும்.
யோபு மிகக் கடுமையாக சோதிக்கப்பட்ட போதிலும் கடவுளுக்கு உண்மை உள்ளவராய் இருந்தார் . யோபுவுக்கு வந்த பயங்கரமான சோதனைகளையும் அவர் உண்மையாய் நடந்து கொண்ட விதத்தையும் கண்டு சிலர் அவரை மாமனிதராக சித்தரிக்கலாம். யோபுவுக்கு வந்ததைப் போன்ற சோதனைகள் நமக்கு வருவதில்லை. இருந்தாலும் நாம் உத்தமர்கள் என்பதையும் கடவுளின் ஆட்சியை ஆதரிப்பவர்கள் என்பதையும் காட்டுவதற்கு, பெரிய விஷயத்திலும் சரி சிறிய விஷயத்திலும் சரி உண்மையாய் இருக்கவேண்டும்.--லுக்கா 16:10 வாசிக்கவும்.(தொடரும்)
ஒழுக்க விஷயத்தில் உத்தமம் மிக முக்கியம்
ஜெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க, யோபுவைப் போல ஒழுக்க நெறிகளை நாம் உறுதியாய் கடைபிடிக்க வேண்டும். ''என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின் மேல் நினைப்பாய் இருப்பதெப்படி ?....என் மனம் யாதொரு ஸ்திரீயின் மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்ததுண்டானால் அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக, வேற்று மனிதர் அவள் மேல் சாய்வார்களாக'' என்று யோபு சொன்னார். யோபு 31:1,9,10
கடவுளுடைய சித்தப்படி உத்தமமாய் நடக்க யோபு திடதீர்மானமாய் இருந்ததால், எந்தவொரு பெண்ணையும் தவறான எண்ணத்தோடு பார்க்கவில்லை. அவர் திருமணமானவராக இருந்ததால், மணமாகாத எந்தப் பெண்ணுடனும் சரசமாடவில்லை, அல்லது மற்றவரின் மனைவியுடன் காதல் வயப்படவில்லை. மலைப் பிரசங்கத்தில், ஒழுக்கம் சம்பந்தமாக ஒரு முக்கிய குறிப்பை, இயேசு சொன்னார். மத்.5:27,28
-- Edited by Theneer Pookal on Monday 17th of January 2011 10:42:52 PM
-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 04:52:46 AM
ஜெகோவாவுக்கு உத்தமமாய் இருக்க, யோபுவைப் போல ஒழுக்க நெறிகளை நாம் உறுதியாய் கடைபிடிக்க வேண்டும். ''என் கண்களோடே உடன்படிக்கை பண்ணின நான் ஒரு கன்னிகையின் மேல் நினைப்பாய் இருப்பதெப்படி ?....என் மனம் யாதொரு ஸ்திரீயின் மேல் மயங்கி அயலானுடைய வாசலை நான் எட்டிப் பார்த்ததுண்டானால் அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக, வேற்று மனிதர் அவள் மேல் சாய்வார்களாக'' என்று யோபு சொன்னார். யோபு 31:1,9,10
கடவுளுடைய சித்தப்படி உத்தமமாய் நடக்க யோபு திடதீர்மானமாய் இருந்ததால், எந்தவொரு பெண்ணையும் தவறான எண்ணத்தோடு பார்க்கவில்லை. அவர் திருமணமானவராக இருந்ததால், மணமாகாத எந்தப் பெண்ணுடனும் சரசமாடவில்லை, அல்லது மற்றவரின் மனைவியுடன் காதல் வயப்படவில்லை. மலைப் பிரசங்கத்தில், ஒழுக்கம் சம்பந்தமாக ஒரு முக்கிய குறிப்பை, இயேசு சொன்னார். மத்.5:27,28
-- Edited by anbu57 on Thursday 27th of January 2011 04:50:05 AM