பெரும்பாலுமான வேத மொழிப்பெயர்ப்புகளில் (கிங் ஜேம்ஸ் உட்பட) 1 யோவான் 5:7 ஒன்று அடைப்பு குறிக்குள் (Bracket) போட்டு இருப்பார்கள், சில மொழிப்பெயர்ப்புகளில் அந்த குரிப்பிட்ட வசனம் சேர்த்துக்கொள்ளப்பட்டது என்று எடுத்து விட்டு அடி குறிப்பாக (Foot note) போட்டிருப்பார்கள்!! ஆனால் திரு ராஜ்குமார் (வேறு எங்கே தமிழ் கிறிஸ்தவ தளம் தான்) அவர்கள் "இயேசு நாதர்" என்று ஒரு புதிய மார்கத்தை உருவாக்கிய காலம் சென்ற திரு டீ.ஜீ.எஸ் தினகரன் அவர்கள் அந்த "இல்லாத" வசனத்தை கொண்டு திரித்துவத்தை அழகாக விளக்கியிருக்கிறார் என்று பதிந்து இருக்கிறார்!!
என்று இயேசு கிறிஸ்து போதித்திருந்தாலும், அவரின் இயேசு "நாதர்" அல்லது அருள் "நாதர்" இவரை பல முறை பரலோகம் கூட்டி சென்று அங்கு கட்டப்படும் கட்டிடங்கள், இன்னும் எத்துனையோ விதமான காட்சிகளை காண்பித்ததாக எழுதியிருக்கிறார்!! இயேசு கிறிஸ்து போக முடியாது என்று சொன்ன இடத்திற்கு இவர்களின் இயேசு "நாதர்", அருள் "நாதர்" அடிக்கடி கூட்டி போய் இருக்கிறார் என்றால் யார் அவர்? இப்படி கிறிஸ்து சொன்னதிற்கு முறனாக பரலோகம் போய் வந்த ஒருவர் 1 யோவன் 5:7ஐ அழகாக விளக்கியிருக்க கூடும்!! நான் காலம்சென்ற ஒரு மனிதனை கொச்சை படுத்தவில்லை என்பதை சொல்லிக்கொண்டு, அவர் கொடுத்த எழுத்துக்களை மாத்திரமே விமர்சனம் செய்கிறேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன் ஆகிலும் பண்பாடு கருதி காலம் சென்ற டீஜீஎஸ் அவர்களை நான் கொச்சைப்படுத்தினேன் என்று நம்புவோரிடம் நான் மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன்!! ஆனால் சத்தியத்திற்கு விரோதமான அவர்களின் வார்தைகளுக்கு விரோதமாக எழுத தயங்மாட்டேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்!!
திரு ராஜ்குமார் எழுதியது //ஆதியில் அசைவாடினவர் இன்றும் நம்மோடு இருப்பவருமானவரையும், நமக்குத் தெளிவாக விளக்குகிறார் பார்த்து கேட்டு பயனடையுங்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவுக்கே சகல துதியும் கணமும் மகிமையும் என்றும் என்றும் சதாக்காலமும் உண்டாவதாக ஆமென்//
தேவனுக்கு செலுத்த வேண்டியதை இயேசு கிறிஸ்து ஒரு போதும் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது இவர்களுக்கு தெரியவில்லை!! வார்த்தைகளை ஜோடித்து எழுதுவது ஜெபம் கிடையாது!! சரியானதை சரியானவரிடத்தில் சரியான முறையில் சொல்லுவதே ஜெபம்!! எல்லா துதியும் கணமும் மகிமையும் இயேசு கிறிஸ்துவிற்கே என்று தமிழ் கிறிஸ்தவ தளம் நடத்தும் சபைகளில் போதிக்க படுகிறது என்றால் மிகையாகாது என்றே நான் நினைக்கிறேன்!! வேதத்தில் இல்லாத வரிகள்!! வேதத்தில் சொல்லப்படாத துதி!!
தமிழ் கிறிஸ்தவ தளத்திற்கு நம் தளம் துருபதேச தளம் என்று தோன்றுவது அவர்களின் பாரம்பரிய விசுவாசத்தின் அடிபடையில் தான்!! ஆனால் சகல துதியும் கணமும் மகிமையும் இயேசு கிறிஸ்துவிற்கே என்பது இவர்களுக்கு சரியான போதனை போல்!!