வணக்கம், நண்பர்களே எனது பெயர் ராஜேந்தரம். பிறப்பிடம் யாழ்பாணம். தற்பொழுது ஜெர்மனியில் நிரந்தரமாக வசிக்கின்றேன். நான் ரோமன் கத்தோலிக்க சமயத்தைச் சார்ந்தவன். வேதத்தை அண்மைய காலமாக படித்துக்கொண்டு இருக்கிறேன். இதை அதிகமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். தேவனை அறியும் அறிவை அடைய தகவல்களை பெற்றுக்கொள்ள ''கூகுள்'' யில் தேடும்போது உங்கள் இணையதளத்தை கண்டுகொண்டேன். இதுவே தேவனின் சித்தம் என்றுதான் நினைக்கிறன். தேவனை அறியும் அறிவில் வளர இந்த இணையதள நண்பர்கள் உதவியை நாடி ''Theneer Pookal '' என்ற நாமத்தில் அறிமுகமாகும் நான்.
-- Edited by Theneer Pookal on Sunday 16th of January 2011 11:03:37 AM -- Edited by Theneer Pookal on Sunday 16th of January 2011 11:04:25 AM
-- Edited by anbu57 on Tuesday 25th of January 2011 06:33:21 AM
கோவை பெரேயன்ஸ் தளத்தின் சத்தியதேடகர்கள் விவாத மேடைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்!! சர்வவல்லமையுள்ள யெகோவா தேவனும் அவரின் ஒரே பேறான குமாரனாகிய நம் கர்த்தரும் எஜமானனுமான இயேசு கிறிஸ்த்வே தங்களை நடத்தட்டும்!! அவர்களின் ஆவியின் ஐக்கியத்தில் வளருங்கல்!!
தாங்களே வந்து தங்களை அறிமுகப்படுத்தி பதிவுகள் தந்தமைக்கு பாராட்டுகிறேன்!! இன்னும் அதிகமாக கலந்துக்கொண்டு கருத்துக்களை பங்கீட்டுக்கொள்வோம்!
தங்களின் கேள்விகள் விவாதங்கள், கட்டுறைகள் எதுவாக இருந்தாலும் தயங்காமல் எழுதுங்கள்!!
கிறிஸ்துவுக்குள் அன்பான ராஜேந்தரம் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
தங்கள் பதிவுகளைப் படித்தேன். வேதாகமக் கருத்துக்களை உள்ளபடியே வழங்கிவருகிறீர்கள். வசனங்களைப் புரட்டிப்போதிக்கும் பலருக்கு நடுவில் தங்களைப் போன்ற சிலரையும் எழுப்பிவரும் தேவனைத் துதிக்கிறேன்.
தமிழ் சரியாக அறியாத நீங்கள், சிரமப்பட்டு தமிழில் பதிவுகளைத் தர எடுக்கும் முயற்சிக்கு என் பாராட்டுக்கள்.
தொடர்ந்து பல பதிவுகளை வழங்குங்கள். தேவப்பணியை நிறைவேற்றுங்கள்.