மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
லூக்கா 4:8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.
இந்த வசனங்கள் எல்லாம் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொன்னதே!! வேதத்தில் இப்படி இருக்க, கிறிஸ்துவையே ஆராதித்து அவரையே தொழுதுக்கொள்ள வேண்டும் என்று யெளவன ஜனம் தளத்தில் பதிவுகள் இருக்கிறது!! வேதம் சொல்லுவது சரியானதா அல்லது மனிதன் தன் சுய இச்சையினால் எழுதுவது சரியானதா!!??
இயேசுவை தெய்வமா தொழுவோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு அனுதாபத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!! இயேசுவே சொல்லியிருக்கிறார், பிதா ஒருவருக்கே ஆராதனை செலுத்த வேண்டும் என்று, அதன் பின்பும், வெகு ஜனங்களை அறியாமையிலும், இருளிலும் கிறிஸ்துவின் பெயரை சொல்லியே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது யெளவன ஜனம் தளம்!! இயேசு சொன்னதையே தவறாக போதித்து, இயேசுவை தொழுதுக்கொள்ள்வோர் மற்றும் அவரை ஆராதனை செய்வோரே கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு புதிய மார்கத்தை கொண்டு வருகிறது யெளவன ஜனம் தளம்!!
கிறிஸ்தவர்கள் இயேசுவை ஆராதிக்க சொல்லியோ, தொழுதுக்கொள்ள சொல்லியோ வேதத்தில் ஒரு வசனமும் இல்லையே!! இப்படி சொல்லுவதினால் யெகோவா சாட்சிகளின் தாக்கம் இருக்கிறது என்று சொல்லுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது!! வேதத்தில் இருக்கிறதை சொல்லுவது முட்டாள்த்தனமா அல்லது வெகு ஜனங்களை கவர்ந்து பாரட்டுகள் பெறுவதற்காக வேதத்தில் இல்லாததை சொல்லுவது முட்டாள்த்தனமா!!
ஹிந்து மார்க்கத்திலும் சித்தர்கள், கடவுள் ஒளியாக இருக்கிறார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள்!! வேதத்திலும் ஜோதிகளின் பிதா என்று இருப்பதால், யெளவன ஜனத்தின் படி, தேவன் ஒளியாக இருக்கிறார் என்று சொன்னால், உங்களுகு சித்தர்களின் தாக்கமும் இருக்கிறது என்று எழுதுவார் போல்! பாராட்டு பெறுவதற்கு அல்ல பாடுகள் பெறவே கிறிஸ்தவம் என்பதை எழுத்தினால் மாத்திரம் அல்ல, வாழவும் செய்யனும்!!
மத்தேயு 19:17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; மாற்கு 10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே; லூக்கா 18:19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
இந்த வார்த்தைகளையும் கிறிஸ்து இயேசுவே சொன்னது!! அவர் சொன்னதை நாம் சொன்னால் கள்ள போதகர்கள் என்று சொல்லி விடுகிறார்கள்!! இப்படி கிறிஸ்து இயேசு சொன்ன அந்த தேவனுக்கு தானே ஆராதனை என்று வேதம் சொல்லுவதை நாங்கள் எழுதுவதில் என்ன தவறு இருக்கிறது!! தேவனுக்கு தான் ஆராதனை என்று சொல்லுவதால் கிறிஸ்துவை நாங்கள் அவருக்கு உரிய கணத்தை செலுத்த தான் செய்கிறோம் என்பதையும் தெரிந்துக்கொள்ள வேண்டும்!!
வேதம் சொல்லுகிற பிரகாரம், கிறிஸ்துவின் நாமத்தில் பிதாவை தான் ஆராதிக்கிறோம், அவரிடம் விண்ணப்பங்கள் ஏறெடுப்பது கிறிஸ்துவின் நாமத்தில் தான்!! கிறிஸ்து தான் பிதாவினடத்திற்கு சேரும் வழி என்பதையும் அறிந்திருக்கிறோம்!! அவர் வழியாக அன்றி ஒருவனும் பிதாவின்டத்திற்கு செல்ல முடியாது என்பதையும் அறிந்திருக்கிறோம்!! கிறிஸ்துவே சபைக்கு பரிந்துரையாளர் என்றும், தேவனுக்கும் மமனுஷருக்கும் (உலகத்தாருக்கும்) மத்தியஸ்தர் என்றும் அறிந்திருக்கிறோம்!! இவர் பிதாவினால் அனுப்பப்பட்டு, பிதாவின் சித்தம் நிறைவேற்ற வந்தவர் என்பதும் அறிந்திருக்கிறோம், சித்தம் நிறைவேற்றி விட்டு, பிதாவினால் உயிர்ப்பிக்கப்பட்டு, இப்பொழுது பிதாவாக அல்ல, பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் என்பதையும் அறிவோம்!! இதற்கு மேல் வேதம் ஒரு இடத்திலும் கிறிஸ்து எல்லா ஆராதனைக்குறியவரும், அவரையே தொழுத்துக்கொள்ள வேண்டும், என்று போதிப்பது இல்லையே!!
இயேசுவே உமக்கு ஆராதனை, பரிசுத்த ஆவியான தேவனே உமக்கு ஆராதனை என்பது எல்லாம் மனிதனின் பாடல்கள் வரி, இதை வைத்துக்கொண்டு விசுவாசத்தை வளர்க்க முடியாது, சங்கீத ஞானத்தை தான் வளர்க்க முடியும்!! வேதத்தில் இல்லாத ஒன்றை எவனாவது பாராட்டுகள் பெற எழுதுவதும், அதை தந்திரமாக பிசாசு பயன்படுத்தி சபைக்குள் புகுத்தியதும், இப்பொழுது வேதத்தை காட்டிலும் இப்படி பட்ட பாடல்களும், ஜெபங்களும் முக்கியத்துவம் பெறுகிறன என்பது யெளவன ஜனம், தமிழ் கிறிஸ்தவ தளம் போன்ற கூட்டம் சேர்க்கும் தளங்கள் சாட்சியாக இருக்கின்றன!!