kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யாருக்கு ஆராதனை??


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
யாருக்கு ஆராதனை??


மத்தேயு 4:10 அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

லூக்கா 4:8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

பிலிப்பியர் 3:3 ஏனெனில், மாம்சத்தின்மேல் நம்பிக்கையாயிராமல், ஆவியினாலே தேவனுக்கு ஆராதனைசெய்து, கிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மைபாராட்டுகிற நாமே விருத்தசேதனமுள்ளவர்கள்.

இந்த வசனங்கள் எல்லாம் புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து சொன்னதே!! வேதத்தில் இப்படி இருக்க, கிறிஸ்துவையே ஆராதித்து அவரையே தொழுதுக்கொள்ள வேண்டும் என்று யெளவன ஜனம் தளத்தில் பதிவுகள் இருக்கிறது!! வேதம் சொல்லுவது சரியானதா அல்லது மனிதன் தன் சுய இச்சையினால் எழுதுவது சரியானதா!!??

இயேசுவை தெய்வமா தொழுவோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு அனுதாபத்தை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்!! இயேசுவே சொல்லியிருக்கிறார், பிதா ஒருவருக்கே ஆராதனை செலுத்த வேண்டும் என்று, அதன் பின்பும், வெகு ஜனங்களை அறியாமையிலும், இருளிலும் கிறிஸ்துவின் பெயரை சொல்லியே ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது யெளவன ஜனம் தளம்!! இயேசு சொன்னதையே தவறாக போதித்து, இயேசுவை தொழுதுக்கொள்ள்வோர் மற்றும் அவரை ஆராதனை செய்வோரே கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு புதிய மார்கத்தை கொண்டு வருகிறது யெளவன ஜனம் தளம்!!

கிறிஸ்தவர்கள் இயேசுவை ஆராதிக்க சொல்லியோ, தொழுதுக்கொள்ள சொல்லியோ வேதத்தில் ஒரு வசனமும் இல்லையே!! இப்படி சொல்லுவதினால் யெகோவா சாட்சிகளின் தாக்கம் இருக்கிறது என்று சொல்லுவது முட்டாள்த்தனமாக இருக்கிறது!! வேதத்தில் இருக்கிறதை சொல்லுவது முட்டாள்த்தனமா அல்லது வெகு ஜனங்களை கவர்ந்து பாரட்டுகள் பெறுவதற்காக வேதத்தில் இல்லாததை சொல்லுவது முட்டாள்த்தனமா!!

ஹிந்து மார்க்கத்திலும் சித்தர்கள்,  கடவுள் ஒளியாக இருக்கிறார் என்று எழுதிவைத்திருக்கிறார்கள்!! வேதத்திலும் ஜோதிகளின் பிதா என்று இருப்பதால், யெளவன ஜனத்தின் படி, தேவன் ஒளியாக இருக்கிறார் என்று சொன்னால், உங்களுகு சித்தர்களின் தாக்கமும் இருக்கிறது என்று எழுதுவார் போல்! பாராட்டு பெறுவதற்கு அல்ல பாடுகள் பெறவே கிறிஸ்தவம் என்பதை எழுத்தினால் மாத்திரம் அல்ல, வாழவும் செய்யனும்!!

மத்தேயு 19:17 அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே;
மாற்கு 10:18 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனுமில்லையே;
லூக்கா 18:19 அதற்கு இயேசு: நீ என்னை நல்லவனென்று சொல்வானேன்? தேவன் ஒருவர் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.

இந்த வார்த்தைகளையும் கிறிஸ்து இயேசுவே சொன்னது!! அவர் சொன்னதை நாம் சொன்னால் கள்ள போதகர்கள் என்று சொல்லி விடுகிறார்கள்!! இப்ப‌டி கிறிஸ்து இயேசு சொன்ன‌ அந்த‌ தேவ‌னுக்கு தானே ஆராத‌னை என்று வேத‌ம் சொல்லுவ‌தை நாங்க‌ள் எழுதுவ‌தில் என்ன‌ த‌வ‌று இருக்கிற‌து!! தேவ‌னுக்கு தான் ஆராத‌னை என்று சொல்லுவ‌தால் கிறிஸ்துவை நாங்க‌ள் அவ‌ருக்கு உரிய‌ க‌ண‌த்தை செலுத்த‌ தான் செய்கிறோம் என்ப‌தையும் தெரிந்துக்கொள்ள‌ வேண்டும்!!

வேத‌ம் சொல்லுகிற‌ பிர‌கார‌ம், கிறிஸ்துவின் நாம‌த்தில் பிதாவை தான் ஆராதிக்கிறோம், அவ‌ரிட‌ம் விண்ண‌ப்ப‌ங்க‌ள் ஏறெடுப்ப‌து கிறிஸ்துவின் நாம‌த்தில் தான்!! கிறிஸ்து தான் பிதாவினட‌த்திற்கு சேரும் வ‌ழி என்ப‌தையும் அறிந்திருக்கிறோம்!! அவ‌ர் வ‌ழியாக‌ அன்றி ஒருவ‌னும் பிதாவின்ட‌த்திற்கு செல்ல‌ முடியாது என்ப‌தையும் அறிந்திருக்கிறோம்!! கிறிஸ்துவே ச‌பைக்கு ப‌ரிந்துரையாள‌ர் என்றும், தேவ‌னுக்கும் மம‌னுஷ‌ருக்கும் (உல‌க‌த்தாருக்கும்) ம‌த்திய‌ஸ்த‌ர் என்றும் அறிந்திருக்கிறோம்!! இவ‌ர் பிதாவினால் அனுப்ப‌ப்ப‌ட்டு, பிதாவின் சித்த‌ம் நிறைவேற்ற‌ வ‌ந்த‌வ‌ர் என்ப‌தும் அறிந்திருக்கிறோம், சித்த‌ம் நிறைவேற்றி விட்டு, பிதாவினால் உயிர்ப்பிக்க‌ப்ப‌ட்டு, இப்பொழுது பிதாவாக‌ அல்ல‌, பிதாவின் வ‌ல‌து பாரிச‌த்தில் வீற்றிருக்கிறார் என்ப‌தையும் அறிவோம்!! இத‌ற்கு மேல் வேத‌ம் ஒரு இட‌த்திலும் கிறிஸ்து எல்லா ஆராத‌னைக்குறிய‌வ‌ரும், அவ‌ரையே தொழுத்துக்கொள்ள‌ வேண்டும், என்று போதிப்ப‌து இல்லையே!!

இயேசுவே உம‌க்கு ஆராத‌னை, ப‌ரிசுத்த‌ ஆவியான‌ தேவ‌னே உம‌க்கு ஆராத‌னை என்ப‌து எல்லாம் ம‌னித‌னின் பாட‌ல்க‌ள் வ‌ரி, இதை வைத்துக்கொண்டு விசுவாச‌த்தை வ‌ள‌ர்க்க‌ முடியாது, ச‌ங்கீத‌ ஞான‌த்தை தான் வ‌ள‌ர்க்க‌ முடியும்!! வேத‌த்தில் இல்லாத‌ ஒன்றை எவ‌னாவ‌து பாராட்டுக‌ள் பெற‌ எழுதுவ‌தும், அதை த‌ந்திர‌மாக‌ பிசாசு ப‌ய‌ன்ப‌டுத்தி ச‌பைக்குள் புகுத்திய‌தும், இப்பொழுது வேத‌த்தை காட்டிலும் இப்ப‌டி ப‌ட்ட‌ பாடல்க‌ளும், ஜெப‌ங்க‌ளும் முக்கிய‌த்துவ‌ம் பெறுகிற‌ன‌ என்ப‌து யெள‌வ‌ன‌ ஜ‌ன‌ம், த‌மிழ் கிறிஸ்த‌வ‌ த‌ள‌ம் போன்ற‌ கூட்ட‌ம் சேர்க்கும் த‌ள‌ங்க‌ள் சாட்சியாக‌ இருக்கின்ற‌ன‌!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஒரே தேவ‌ன், அந்த‌ ஒரே தேவ‌னுக்கு ஆராத‌னை, அவ‌ரின் குமார‌னும் நம் (சபையின்) மூத்த‌ ச‌கோத‌ர‌ருமான‌ கிறிஸ்துவின் வ‌ழியாக‌ அந்த‌ ஆராத‌னை, எத்துனை சரியாக வேத‌ம் சொல்லியிருப்ப‌தை பார‌ம்ப‌ரிய‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள், துதிப்பாட‌ல்க‌ள், த‌னிப்ப‌ட்ட‌ ஜெப‌ங்க‌ள் போன்ற‌வை திரித்து ம‌றுத‌லிக்கிறார்க‌ளே!! என்ன‌ வேத‌னை!! நாங்க‌ள் ஒரு போதும் கிறிஸ்துவை க‌ண‌வீன‌ம் ப‌டுத்த‌வில்லை, அவ‌ருக்கு உண்டான‌ க‌ண‌த்தை செலுத்துகிறோம், ஆனால் ஆராத‌னை செய்வ‌து பிதா ஒருவ‌ருக்கே, கிறிஸ்து இயேசுவின் நாம‌த்தில்!!

கிறிஸ்துவிற்கு ஆராத‌னை, பிற‌கு தேவ‌னுக்கும் ஆராத‌னை என்றால் எத்துனை தேவ‌னை வ‌ழிப்ப‌டுகிற‌வ‌ர்க‌ளாக‌ இருக்கிறீர்க‌ள்!! கிறிஸ்துவுக்கு ஆராத‌னை செய்யாதாவ‌ர்க‌ள் எல்லாம் யெகோவா சாட்சிக‌ள் என்ப‌து எல்லாம் சில்சாமின் அறியாமை அவ்வ‌ள‌வே!! யெகோவா சாட்சிக‌ள் கிறிஸ்துவை குறித்து என்ன‌ நினைக்கிறார்க‌ள் என்ப‌தை ஒரு யெகோவா சாட்சி த‌ள‌த்திலிருந்து தான் சேக‌ரிக்க‌ வேண்டுமே த‌விர‌, பெந்த‌கோஸ்தே த‌ள‌ங்க‌ளை நாடினால் இப்ப‌டி தான் த‌வ‌றான‌ புரிந்துக்கொள்ளுத‌ல் ஏற்ப‌டும்!!

கிறிஸ்துவை ஆராத‌னை செய்யாத‌வ‌ர்க‌ள் கிறிஸ்த‌வ‌ர்க‌ளே கிடையாது என்று சொல்லுவ‌தெல்லாம் சில்சாமின் த‌னிப்ப‌ட்ட‌ விம‌ர்ச‌ன‌ம்!! ஒரே ராக‌ம் பாடும் த‌மிழ் கிறிஸ்த‌வ‌ த‌ள‌மும் அதையே ஆமோதிக்கும்!! ஆனால் கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கு என் த‌ள‌மோ, சில்சாமின் எழுத்தோ, அல்ல‌து த‌மிழ் கிறிஸ்த‌வ‌ த‌ள‌த்தின் ராக‌மோ முக்கிய‌ம் இல்லை, வேத‌ம் என்ன‌ சொல்லுகிற‌து என்ப‌து தான் முக்கிய‌ம்!!

வேத‌ம் சொல்லுகிற‌து தேவ‌ன் ஒருவ‌ருக்கே ஆராத‌னை என்றால் அதை மாற்ற‌ சில்சாமோ த‌மிழ் கிறிஸ்த‌வ‌ த‌ள‌த்திற்கோ எந்த‌ அதிகார‌ம் கிடையாது!! தேவ‌ தூஷ‌ன‌ம் என்ப‌து குமார‌னை குமார‌ன் என்று சொல்லுவ‌தில்லை, குமார‌னை பிதா என்று சொல்லுவ‌தில் தான்!! உள்ள‌தை உள்ள‌ப்ப‌டியே சொல்லி ப‌ழ‌க‌னும், கிறிஸ்த‌வ‌ர்க‌ள் என்று பெய‌ர் வ‌ந்த‌து அவ‌ரை ஆராதிக்கும் கூட்ட‌த்தின‌ரால் அல்ல‌, மாறாக‌ அவ‌ரின் சிஷ‌த்துவ‌த்தை ஏற்ற‌தினால் என்ப‌து தான் வேத‌ம் சொல்லுவ‌து!!

தொட‌ரும்....................................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard