kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேத‌த்தை திரிக்கும் திரித்துவ‌ பூத‌ங்க‌ள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
வேத‌த்தை திரிக்கும் திரித்துவ‌ பூத‌ங்க‌ள்!!


தமிழ் வார்த்தைகள் எல்லாமே யாராவது எழுதியதை தான் மீண்டும் மீண்டும் எழுதி வருகிறோம், அப்படி என்றால் சொந்த அறிவு இல்லை என்றா அத்தம்!! எழுதுவதற்கு வசனம் இல்லாட்டி இப்படி தான், பக்ககங்களை நிறப்ப சம்பந்தமே இல்லாமல் எழுதுவது சில்சாமின் வழக்கம்!!

ஒரு காலத்தில் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் தூக்கி எறியப்பட்ட போது எல்லாம் பேசியது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது!! இன்று அவருக்கு தஞ்சம் கிடைத்தவுடன் அடேங்கப்பா, "கடுங்கண்டனம்" தெரிவிக்கிறாராம்!! ஐய்யோ நான் பயந்து நடுங்கிட்டேன்!! திருப்தியா, சந்தோஷமா!?

நாங்கள் போதிப்பதையோ, எழுதுவதையோ அனைவரும் ஏற்றுக்கொள்ளுங்கள் என்று உங்களை போன்று ராகம் பாடுவது கிடையாது!! எழுதுகிறோம், வாசிக்கிறார்கள், மற்றபடி, நான் அறிந்த‌து எல்லாம்,

யோவான் 6:44 என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்;

நான் ஒன்றும் ஊழிய‌க்கார‌ன் இல்லை, என்னிட‌ம் தேவ‌ன் வ‌ந்து இதை எல்லாம் சொல்ல‌ சொன்னார் என்று பொய் சொல்லி எழுதுவ‌த‌ற்கு!! தேவ‌ன் பேசி முடிந்து விட்டார், அது தான் வேத‌ புத்த‌க‌மா ந‌ம் கைக‌ளில் இருக்கிற‌து, இவ‌ர்க‌ளை போல் இவ‌ர்க‌ளின் ஊழிய‌ர்க‌ளிட‌ம் இன்னும் தேவ‌ன் பேசிக்கொண்டு வெளிப்பாடுகளை த‌ந்துக்கொண்டு இருக்கிறார் என்று வேத‌த்தை திரித்து, தாறு மாறாக‌ பிர‌ச‌ங்கித்து வ‌ருவ‌தை பார்க்க‌ தான் செய்கிறோம்!!

பிதா ஒருவ‌னை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவ‌ன் கிறிஸ்துவினிட‌த்திற்கு வ‌ர‌ முடியாதாம்!!

சில்சாம் புதிதாக‌ ஒரு மொழியை க‌ண்டுபிடித்து அத‌ன் உரிம‌த்தை த‌ன் பெய‌ரில் வைத்து கொண்டு பித‌ற‌ட்டுமே!! இயேசு கிறிஸ்துவை பிதா என்று சொல்லி த‌ந்திர‌மாக‌ தேவ‌தூஷ‌ன‌ம் செய்யும் திரித்துவ‌வாதிக‌ளைவிட‌வா நான் எழுதிவிட்டேன்!! பிசாசு த‌ந்திர‌மான‌வ‌ன்!! வாக்கு வாங்க‌ அர‌சிய‌ல் வாதி த‌ந்திர‌ங்க‌ளை கையாளுவ‌து போல், திரித்துவ‌ம் போதிக்கும் சில்சாம், த‌ந்திர‌மாக‌ இயேசு பிதா, பிதா இயேசு என்று குழ‌ப்ப‌த்தின் உச்சிக்கு சென்று கொண்டு இருக்கிறார்!! மீண்டும் சொல்லுகிறேன், பிசாசான‌வ‌ன் த‌ந்திர‌மாக‌ கொண்டு வ‌ந்த‌ பார‌ம்ப‌ரிய‌த்தை தான் மார் த‌ட்டி போதிக்கிறார்க‌ள்!! அய்யா திரித்துவ‌ம் சொல்லும் சில்சாம், திரித்துவ‌ம் என்கிற‌ வார்த்தையே இல்லாம‌ல் ஏன் தான் வேத‌த்தை திரித்து பேசுகிறீர்க‌ள்!! அப்ப‌டி என்ன‌ உங்க‌ளுக்கு இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌னுட‌ன் கூட்டு!! 2000ம் வ‌ருட‌ங்க‌ளாக‌ வ‌ஞ்சிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌க்க‌ளிட‌ம் ஏதோ எங்க‌ளை தேவ‌ன் ப‌ய‌ன்ப‌டுத்துகிற‌ப‌டி செய‌ல்ப்ப‌டுகிறோம், ச‌த்திய‌த்தை சொல்லுகிறோம், அவ‌ர்க‌ளை ஏற்றுக்கொள்ள‌ க‌ட்டாய‌ப்ப‌டுத்த‌வில்லை, ஏனென்றால் எங்க‌ளுக்கு தெரியும் இது எங்களால் ஆகும் காரிய‌ம் அல்ல‌, இது தேவ‌னின் செய‌ல், அவ‌ரின் ச‌பை, அவ‌ர் எப்ப‌டி அன்று இயேசு கிறிஸ்து அப்போஸ்த‌ல‌ர்க‌ளை தேர்ந்தெடுக்க‌ உதவினாரோ, அப்ப‌டியே த‌ன் குமார‌னின் ச‌ரீர‌மான‌ ச‌பையை தெரிந்துக்கொடுப்பார்!!

வேதத்தை திரித்க்கும் திரித்துவ‌ பூத‌ங்க‌ளின் அறிவீன‌த்தை வேத வசனங்களைக் கொண்டு அட‌க்குவோம்!! தொட‌ரும்......................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: வேத‌த்தை திரிக்கும் திரித்துவ‌ பூத‌ங்க‌ள்!!


//சிறிய அளவில் இருப்பது சிறந்ததாம்,பெரிய அளவில் இருப்பது துருபதேசமாம்; எத்தனை நகைப்புக்குரிய கருத்தல்லவா..? நோவாவின் பேழையில் சுத்தமான மிருகங்கள் ஏழு ஜோடும் அசுத்தமானவை ஒரே ஒரு ஜோடும் மட்டுமே சேர்த்துக்கொள்ளப்பட்டது;அங்கே உங்கள் விகிதாச்சாரம் செல்லுபடியாகாதோ..?//

காமெடி நடிகர் வடிவேலு மாதிரி ரெண்டு ஐய்யோன்னு சொல்ல தான் தோனுது!! மிருக புத்தியுள்ளவருக்கு மிருகங்கள் அதுவும் அசுத்தமான மிருகங்கள் தான் நினைவில் இருக்கிறது!! ஒவ்வொரு விதமான மிருகங்களிலும் இருந்து ஒவ்வொரு ஜோடி தானே பிரிக்கப்பட்டது!! இன்று சபைக்குள் 2000 வருடங்களாக உம்மை போல் கள்ள போதகம் செய்து வருபவை தான் அந்த அசுத்தமான மிருகங்கள்!! தேவன் தான் படைத்த அனைத்தையும் அழிந்து போகாதப்படி ஜோடி ஜோடியாக வைக்க சொன்னார், நோவா செய்தான்!! பார்க்க வேன்டியது, எத்துனை பெரிய கூட்டத்திலிருந்து அத்துனை சிறிய கூட்டம் பேழைக்குள் சேர்க்கப்பட்டது!! எப்படி சிறிய அளவில் களை விதைக்கப்பட்டலும் அது வயல் முழுவதும் பரவி விடுகிறது, அப்படியே ஒரு ஜோடு அசுத்தமான மிருகங்கள் சபைக்குள் இன்று பெருகி சபையை திரித்துவம் போன்ற போதனைகளால் அசுத்தப்படுத்தி வைத்திருக்கிறது!!

நீர் மனிதர்களை நம்புவர், ஆனால் நான் தேவனை நம்புகிறேன்!! இதற்கு முன் சிறிய அளவில் வந்த போதும் நான் இப்படியே தான் எழுதினேன், இப்பொழுதும் எந்த ஒரு மாற்றம் இல்லாமல் அதே கருத்துக்களை தான் எழுதி வருகிறேன்!! உம்மை போல் தளத்திற்கு தளம் தாவி வேஷம் போட தெரியாது!! உம் தயவு எனக்கு ஒன்றும் தேவையில்லை, உம்மால் வந்த கூட்டம் என்று நம்புகிறவர்களை தாராளமாக நீர் வேண்டாம் என்றும் சொல்லிக்கொள்ளும்!! நான் ஒன்றும் இங்கே மெகா சீரீயல் வெளியிடவில்லை, பாராட்டு பெற, அது எல்லாம் உமக்கு உரிய தந்திரங்கள், உமக்கு தான் கூட்டம் சேர்க்கும் வியாதி, எனக்கு அல்ல!! ஐய்யோ, எனக்குன்னு ஸப்போர்ட்டாக எழுத ஒருவரும் இல்லையே என்று தளத்தில் புளம்பி மனிதர்களை நமபுபவன் என்று வெளிப்படுத்திய மனிதர் தானே நீர்!! உம் சகவாசமே தேவையில்லை, நீர் அனுப்பும் மனிதர்கள் மாத்திரம் எனக்கு தேவையா!! நான் விளம்பிரத்திற்காகவோ, பெயர் புகழுக்காகவோ இங்கே எதையும் எழுத வரவில்லை!!

உம்மை போல் நான் அழுது புழம்பி, ஐய்யோ என் தளத்தில் யாரும் எழுதுவதில்லையே என்பது எனக்கு கிடையாது!! மேலும் சுந்தர் தளத்தில் நான் எழுதியதை நீக்கி விட்டு அங்கே எழுதி பல காலம் ஆகி விட்டது!! இப்பொழுதும் ஏதோ ஒன்றோ இரண்டோ பொதுவான கருத்துக்கள் தான் பதிவாகியிருக்கிறது!! சுந்தரையோ, சகோ அன்பு அவர்களையோ நான் வசியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, அது எல்லாம் கூட்டம் சேர்க்கவும் பாராட்டுகள் பெற எழுதும் உம்மை போன்றோருக்கு மாத்திரமே தகும்!! அதினால் தானே உம் கருத்துக்கு ஒத்து ராகம் போடுவோர் எல்லான் உமக்கு சகோதரர்களாகி இருக்கிறார்கள்!! உம் துருபதேசந்த்தினால் நீர் எத்துனையோ பேரை வஞ்சித்து இருப்பது எனக்கு தெரியதா!!

//நீங்கள் கிறித்துவைத் தலைவர் என்று கூறிக்கொள்ள உங்களுக்கு எந்த  தகுதியுமில்லை;ஏனெனில் நீங்கள் அவர் ஏற்படுத்திய அமைப்பை தூஷிக்கிறீர்கள்//

உமக்கு புத்தி சுத்தமாகவே இல்லை என்று தான் நினைக்கிறேன்!! உம்மை போல் துஷ்ட மிருகங்கள் சபைக்குள் குழப்பத்தை கொண்டு வந்ததை தான் நான் சாடுகிறேன்! அவர் ஏற்படுத்திய அமைப்பில் நீர் இருக்கிறீர் என்று சிறிது அளவிலும் நினைத்துக்கொள்ள வேண்டாம்!! அவர் பிதாவை ஆராதிக்க சொல்லி தந்தார், ஆனால் நீர் அதை மறுதலிக்கிறீர், ஏனென்றால் நீர் இயேசுவையே பிதா என்று தந்திரமாக மாற்றியவர்!! நான் செய்யாததையும் சொல்லாதத்தையும் சொல்லி உம் புத்தி எப்படி பட்டது என்று வெளிப்படுத்துகிறீர், அவ்வளவே!! நான் மீண்டும் சொல்லுகிறேன், கிறிஸ்துவை நாங்கள் தலையாக வைத்திருக்கிறோம், அது என்னூடைய எல்லா பதிவுகளிலும் இருக்கிறது, உம்மை போல் தினகரனையோ, மோஹ்ன் லாசரஸை பின்  பற்றி எப்படி ஊழிய தொழில் செய்ய வேண்டும் என்கிற அவசியம் எனக்கு இல்லை, ஆகவே தான் மனித தலைமையை நான் நாடுவது கிடையாது!! உங்களுக்கெல்லாம் கிறிஸ்து யாரென்றே தெரியாது, கிறிஸ்துவை பற்றி பேசுவதற்கே அருகதை இல்லாதவர்கள் தான் உங்கள் திரித்துவ பூதங்களின் கூட்டம்!! கிறிஸ்துவை தெரியாத தகுதியில் இருக்கும் நீர், கிறிஸ்துவை பிதா என்று தூஷிக்கும் நீரும் உம் கூட்டத்தாரும் பிசாசினால் வஞ்சிக்கப்பட்டு குறுடாகி போன ஒரு கூட்டம்!! உம் கண்களுக்கு வெளிச்சம் எட்டாது, அதான் ஒருவர் எழுதினாரே, கண்கள் கட்டுத்துனு!! சத்திய வெளிச்சம் வரும் போது அப்படி தான் கண் கட்டும், கூசி போகும், வெளிச்சத்தின் பக்கத்தில் வர பதறுவீர்கள், ஆனாலும் கிறிஸ்து அனைவருக்காகவும் செலுத்திய விலை கிரையத்தை மறுதலிக்கும் நீர், அவர் சாகவில்லை என்று போதிக்கும் நீர், அவர் பிதா என்று தூஷிக்கும் நீர் கூட அவரின் பலியினால் அனைத்தையும் கற்றுக்கொள்வீர் என்பது தான் வேதம் எனக்கு தருகிற நிச்சயம்!!

ஏசா 11:9. என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

உம் புத்தி எல்லாவற்றையும் தெரிந்த பிறகாவது மாறட்டும்!! இந்த இடத்தில் கர்த்தர் என்பது இயேசுவை அல்ல, பிதாவாகிய யெகோவா தேவன் என்பதையும் சேர்த்து எழுதுகிறேன், ஏனென்றால் தமிழ் வார்த்தையை மாத்திரம் வைத்து மாய ஜாலம் செய்யும் நீர், கர்த்தர் என்றவுடன் அது இயேசு கிறிஸ்து என்று உம் சீஷர்களிடம் போதிப்பீர்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நீர் குழம்பி போய் உம் சீஷர்களையும் குழப்பிக்கொண்டு இருக்கிறீர்!! யெகோவா சாட்சிக்காரர்களுக்கும் வேத மானவர்களுக்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு மந்த புத்தியுள்ளவராக இருக்கிறீர்!! என்னை பற்றி தெரியாமல் எதையும் அவதூறாக எழுத வேண்டாம் என்று திரும்பவும் சொல்லுகிறேன், அது உமக்கு நல்லதல்ல!! ஆனால் அப்படி தான் செய்வேன் என்றால் அது உம் புத்தி என்று நான் நினைத்துக்கொள்வேன்!!

நான் அப்போஸ்தலர்களின் விசுவாசத்தை கொண்டிருப்பதால் உமக்கு நான் எழுதுவது எல்லாம் மாறுபாடாக தான் தெரியும்!! நீர் பாரம்பரிய விசுவாசத்தில் இருப்பவர்!! பல தெய்வங்களை வனங்கி இருந்துக்கொண்டவர், கிறிஸ்தவத்திற்குள் வந்தாலும் அதை விட முடியவில்லை, ஆகவே பிதா என்கிற ஒரே தேவன் என்கிற கொள்கையை உம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, ஆகவே கலர் கலராக எழுதி பிதா தான் இயேசு இயேசு தான் பிதா என்று வேத வசனம் சொல்லாததை துனிந்து சொல்லிக்கொண்டு இருக்கிறீர்!! யார் மாறுபாடானதை போதிக்கிறார்கள் என்பது சீக்கிரமே தெரிய வரும்!! சத்தியத்தின் வெளிச்சம் பரவ தொடங்கியிருக்கிறது!! நீதியின் சூரியன் வெளிப்படும் போது, பிசாசு குறுடாக்கி வைத்திருக்கும் உங்கள் கண்கள் திறக்கப்பட்டு சத்திய வசனத்தை தெரிந்துக்கொள்வீர்கள், அது வரையில் இப்படியே கர்ஜிக்கும் சிங்கத்தை போல் இருங்கள்!!

எல்டர்ஷிப் என்பது வேதத்தில் இருக்கிறது தான், அப்போஸ்தலர்கள் மூப்பர்களை ஏற்படுத்தினார்களே, அது தான் எல்டர்ஷிப் என்பது உமக்கு தெரியாதா!! ஆனால் வேதத்தில் இல்லாத ரெவெரெண்ட் வைத்துக்கொண்டு இருக்கும் உம் கூட்டத்தாரை நான் என்னவென்று சொல்ல!! தேவன் ஒருவரே "ரெவரெண்ட்" என்று வேதம் சொல்லியும் நீங்கள் எல்லாம் இந்த பிரபஞ்சத்தின் தேவனை பின் பற்றுவதால் மனிதர்களையும் ரெவரெண்ட் என்று சொல்லிக்கொள்வதற்கு அஞ்சுவது கிடையாது!! நீர் யெகோவா சாட்சிகளுக்கும் வேத மானவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் எழுதுகிறீர்!! மேலும் நான் இந்த இரு பிரிவையும் சேர்ந்தவன் அல்ல என்பது ஏன் உம் புத்திக்குள் ஏற மாட்டேன் என்கிறது!! கத்தோலிக்கர்களும் திரித்துவம் போதிக்கிறார்கள், நீரும் திரித்துவம் போதிக்கிறீர், ஆகவே உம்மை கத்தோலிக்கர் என்று சொன்னால் சரியா!! அவர்களை போல தான் உம் தளத்திலும் படங்களை போட்டு காண்பிக்கிறீர், என்ன பெரிய வித்தியாசம்!! வேதத்தை திரித்து திரித்துவத்தை கொண்டு வந்த கத்தோலிக்கர் வழியில் விசுவாசத்தை பெற்றுக்கொண்ட நீர் கிறிஸ்தவர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதியை இழந்து நிற்கிறீர்!!

கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொண்டு அதில் உள்ள பிரிவை நீங்கள் எல்லாம் சொல்லிக்கொள்வீர்கள்!! நான் கத்தோலிக்கன், நான் பெந்தகோஸ்தே, நான் ஐபீஏ, என்று பிரிவுகளை சொல்லிக்கொள்வீர்கள்!! நான் கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்வதில் பெறுமை படுகிறேன்!! மாறுபாடானதை யார் போதிக்கிறார்கள் என்பது நீர் காண்பிக்கும் வசனங்களே சாட்சியாக இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
வேத‌த்தை திரிக்கும் திரித்துவ‌ பூத‌ங்க‌ள்!!


சங். 119:103. உம்முடைய வார்த்தைகள் என் நாவுக்கு எவ்வளவு இனிமையானவைகள்; என் வாய்க்கு அவைகள் தேனிலும் மதுரமாயிருக்கும்.

கைகளில் வேதபுத்தகத்தை வைத்துக்கொண்டு அதன் ருசி பார்க்க முடியாத தேனீ கூட்டத்தை சேர்ந்தவர்களே, அதை ருசித்து பாருங்கள், அப்பொழுது அதன் அர்த்தம் புரியும்!! தேனை கூடவே வைத்துக்கொண்டு தானும் சாப்பிட தெரியாமல் இருந்துக்கொண்டு எடுக்க வருகிறவனையும் கொட்டி கொண்டு இருக்க வேண்டாம்!! தேனீக்களை போல் கூட்டம் கூட்டமாக தானே இருக்கிறீர்கள்!!

//இயேசுவானவர் பிதாவின் தற்சொரூபமானவர் ;எனவே அவர் தொழத் தக்க ஒரே தெய்வம் ;//

இதை தான் சேத்துக்கொள்வது என்பது!! இயேசுவானவர் பிதாவின் தற்சொரூபமானவர் என்று வசனம் இருக்கிறது, எனவே அவர் தொழத்தக்க ஒரே தேய்வம் என்பது களையாக நீர் சேர்த்துக்கொள்வது!!

1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை

பிதாவாகிய ஒரே தேவன் என்கிற அறிவு இல்லாததினால் தான் நீர் இயேசு என்கிற ஒரே "தெய்வம்" என்கிற கள்ள போதகம் செய்கிறீர்!!

மத் 16:16. சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான்.

நீர் இயேசு தான் ஒரே தெய்வம் என்று சொல்லிக்கொண்டு உம்மை பேதுரு என்று சொல்லிக்கொள்கிறீர்!! நல்ல தமாசு தான்!! அறிவீனத்தின் உச்சியில், இப்பிரபஞ்சத்தின் தேவனால் கண்கள் குறுடாகி போய் இருக்கிறீர். பேதுருவின் பெயரை உச்சரிக்க கூட உமக்கு தகுதி கிடையாது!!

//இயேசுவானவர் பிதாவின் தற்சொரூபமானவர் ;எனவே அவர் தொழத் தக்க ஒரே தெய்வம் ;அவருக்கு செலுத்தும் அல்லது அவருடைய நாமத்தினால் செலுத்தும் துதி ஸ்தோத்திர பலிகள் சிருஷ்டிகளின் பிதாவுக்கே சென்று சேரும் ; //

நீர் எழுதிய இந்த எழுத்துக்களே நீர் குழப்பத்தின் உச்சியில் இருக்கிறீர் என்று தெரிகிறது, அல்லது சுத்தமாக மெண்டல் ஆகி விட்டீர் என்பதை காட்டுகிறது!! இயேசுவை பிதாவின் தற்சொரூபம் என்று எழுதிவிட்டு, அவரே ஒரே தெய்வம் என்கிறீர், அதற்கு பிறகு அவருடைய நாமத்தினால் செலுத்தும் துதி ஸ்தோத்திர பலிகள் சிருஷ்டிகளின் பிதாவுக்கே சென்று சேரும் என்று எழுதுகிறீர்!! நல்ல மன நல மருத்துவரிடம் ஒரு முறை பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள், உங்களை நினைத்தால் பரிதாபமகா தான் இருக்கிறது!! பிதாவையும் குமாரனையும் போட்டு குழப்பத்தின் உச்சிக்கே வந்து விட்டீர்கள், இதில் நீர் பேதுருவாம்!! பெதுரு தான் தெளிவாக கிறிஸ்து தேவனின் குமாரன் என்று சொல்லுகிறாரே, ஆனால் நீரோ, இயேசு தான் பிதா என்கிறீர்!!

உம் ஜெபங்கள் எனக்கு தேவையில்லை, ஏனென்றால் தேவன் யார் என்று தெரீயாமல் நீர் ஜெபித்துக்கொண்டு இப்பிரபஞ்சத்தின் தேவனான பிசாசிற்கு ஊழியம் செய்து வருகிறீர்கள்!! சுந்தரை நான் ஒன்னும் என்னிடம் கட்டி வைக்கவில்லை!! தேவையில்லாத தூஷனம் செய்யாமல் உறுப்படியாக ஏதாவது வேளை இருந்தால் போய் பாரும்!!

யூதாஸாக இருந்துக்கொண்டு மற்றவர்களை யூதாஸ் என்று சொல்லிக்கொள்ளாதேயும்!!

உம்முடைய எழுத்துக்களை பார்த்தால்,

II கொரிந்தியர் 11:14 அது ஆச்சரியமல்ல, சாத்தானும் ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வானே. 15. ஆகையால் அவனுடைய ஊழியக்காரரும் நீதியின் ஊழியக்காரருடைய வேஷத்தைத் தரித்துக்கொண்டால் அது ஆச்சரியமல்லவே; அவர்கள் முடிவு அவர்கள் கிரியைகளுக்குத்தக்கதாயிருக்கும்.

அந்த ஊழியன் நீர் தான் என்று முடிவு செய்துவிட்டேன்!! தெளிந்த புத்தியில் இருப்பவனிடம் பேசலாம், வாதம் செய்யலாம், ஆனால் குழப்பத்தின் உச்சியில் பிசாசிற்கு ஊழியம் செய்யும் உம்மிடம் வாதம் அல்ல, அப்பாலே போ சாத்தானே என்று துறத்த தான் முடியும்!! தேவனுக்கும் அவர் குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் நடுங்கும்!!

நீர் இப்பிரபஞ்சத்தின் தேவனால் கண்கள் குறுடாக்கப்பட்டவர் மாத்திரம் அல்ல, மூலை சலவை செய்யப்பட்டவராகவும் இருக்கிறீர்!! பிதாவை இயேசு என்றும் இயேசுவை பிதாவென்றும் தூஷிக்க தயங்காத மனுஷனாக இருக்கிறீர்!!  

நீலிக்கண்ணீர் வடித்து தங்களை நீதிமான்கள் என்று என்னிக்கொண்டு இருக்கும் நீர் உண்மையில் பிசாசின் ஊழியக்காரனே என்பதை உம் வார்த்தைகள் நிறுபிக்கிறது!! உமக்காகவும் கிறிஸ்து மரித்திருக்கிறார்!! ஆனால் அவர் மரிக்கவில்லை என்று போதிப்பவர் கூட்டம் தானே உம்முடைய கூட்டம்!!

சில்சாம் என்னை எதிரியாக சொல்லுவதால் அவருக்கு ஒரு வசனம்,

II கொரிந்தியர் 11:12. மேலும், எங்களை விரோதிக்கச் சமயந்தேடுகிறவர்களுக்குச் சமயம் கிடையாதபடிக்கு, தங்களைக்குறித்து மேன்மைபாராட்டுகிற காரியத்தில் அவர்கள் எங்களைப்போலக் காணப்படும்படி, நான் செய்வதையே இன்னும் செய்வேன்.

13. அப்படிப்பட்டவர்கள் கள்ள அப்போஸ்தலர்கள், கபடமுள்ள வேலையாட்கள், கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலரின் வேஷத்தைத் தரித்துக்கொண்டவர்களாயிருக்கிறார்கள்.

நான் ஒரு போதும் என்னை அப்போஸ்தலன், ஏன் ஒரு ஊழியக்காரன் என்று கூட சொன்னது கிடையாது, ஆனால் இவர்கள் தான் அநேக அப்போஸ்தலர்கள், மூத்த அப்போஸ்தலர்களை பின் பற்றுகிறவர்கள், இவர்களுக்கே இந்த வசனங்கள் பொருந்தும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: வேத‌த்தை திரிக்கும் திரித்துவ‌ பூத‌ங்க‌ள்!!


ஐய்யா தமிழ் பண்டிதரே, இந்த சங்கீதத்தை நடுச்சாமத்தில் இல்லை எப்போ படித்தாலும் அதற்கு நீர் புகுத்த நினைக்கும் அர்த்தம் வராது!!

"ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?

உம்மை போன்ற திரித்துவம் பேசும் ஜாதிகள் (இதை எழுதியவுடன், என்னை ஜாதியை வத்து கிண்டல் அடிக்கிறான் பெரேயன்ஸ் என்று ஒப்பாறி வைக்காதேயும், ஏற்கனவே சம்பந்தம் இல்லாமல் இது போல் நீர் எழுதியது உண்டு) என்றே நான் கருதுகிறேன்!! நாங்கள் பிதாவை பிதா என்றும், குமாரனை குமாரன் என்றும் தான் அறிக்கை செய்யும் ஜாதியாக இருக்கிறோம்!1

கர்த்தருக்கு விரோதமாகவும், அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பி நின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி:

இங்கேயும் ஒருவர் யெகோவா தேவன் மற்றவர் அபிஷேகம் பண்ணப்பட்ட குமாரனாகிய கிறிஸ்து இயேசுவே!! நீங்கள் நினைப்பது போல் இவரே அவர் அவரே இவர் அல்ல!! ஒருவர் அபிஷேகம் என்றால் மற்றவர் அபிஷேகம்ப்பண்னப்பட்டவர் என்பதை நிதானித்து வாசிக்கவும்!!

தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;

இயேசு கிறிஸ்துவே குமாரன் என்று சொல்லப்படும் ஒரு வசனம்!!

என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;

ஆக‌வே தான் இயேசு கிறிஸ்து த‌ன் பிதா சொன்ன‌ப்ப‌டியே அப்போஸ்த‌ல‌ர்க‌ள் முத‌ல் அனைவ‌ரையும் தேர்ந்தெடுத்தார், பிதா ஒருவ‌னை இழுத்துக்கொள்ளாவிட்டால் ஒருவ‌னும் கிறிஸ்துவின‌ட‌த்தில் வ‌ர‌ முடியாது!! கிறிஸ்துவின் ம‌ன‌வாட்டி ச‌பையை கிறிஸ்துவிற்கு உட‌ன் சுத‌ந்த‌ர‌வாளிக‌ளை நிய‌மிப்ப‌தே பிதாவாகிய‌ தேவ‌ன் தான்! குமார‌ன் சுத‌ந்திர‌வாளியாக தான் இருக்க‌ முடியும் பிதாவாக‌ அல்ல‌!!

பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.


இதுக்கு தான் மூல பாஷை தேவைப்படுகிறது!! தமிழ் வேதாகமத்தில் கர்த்தர் என்று பழைய ஏற்பாட்டில் யெகோவா தேவனை போட்டு விட்டு, புதிய ஏற்பாட்டில் கர்த்தர் என்று இயேசு கிறிஸ்துவை போட்டு விட்டு குழப்பி விட்டிருக்கிறார்கள்!!

பயத்துடனே யெகோவா தேவனை சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள் என்கிறது வசனம்!!

குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ் செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

அப்படி தேவனை சேவியாமல் வித்தியாசமான முறையில் ஆராதனை எல்லாம் நடாத்தாதீர்கள்!! பழைய ஏற்பாட்டின் போது இயேசு கிறிஸ்து என்கிற பரிந்துரையாளர் கிடையாது, நமக்கு இருக்கிறார்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சில்சாம் அவர்களே,

என் விசுவாசத்தை தெளிவாக ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்!! நீர் நினைக்கும் படி நான் யெகோவா சாட்சி கிடையாது என்பதை மீண்டும் சொல்லுகிறேன்!! வேத மாணவர்களின் புத்தகங்கள் படித்திருக்கிறேன் அவர்களிடமிருந்து நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கிறேன்!! நீர் பொய் பிரசங்கம் செய்வது போல் நான் ரஸ்ஸலின் போதனைகலை பரப்புபவனும் கிடையாது, எனக்கு அது தேவையும் இல்லை!! உம் தளத்தில் வசந்தகுமாரை பிரபலப்படுத்தும் கொல்வின் அவர்களை போல் நான் ஒரு போதும் ரஸ்ஸலை குறித்து இந்த தளத்தில் எழுதியது கிடையாது!!

வேதம் எனக்கு தரும் விசுவாசத்தின் படி, கிறிஸ்து இயேசு, யெகோவா தேவனின் ஒரே பேறான குமாரன்!! அவர் மாம்சத்தில் இயேசுவாக வருவதற்கு முன்பே இருந்தவர், ஆகவே தான் பரிசேயர்கள் சதுசேயர்களை பார்த்து நான் ஆபிரகாமுக்கும் முன்னே இருக்கிறேன் என்கிறார்!! கிறிஸ்துவை தேவன் என்று தமிழ் வார்த்தை போட்டு அழைப்பதில் தவறு ஒன்றும் இல்லை, ஆனால் தேவன் என்று சொன்னவுடன் அவரை பிதாவை குறிக்கும் தேவன் என்கிற அர்த்தத்தில் இல்லை!! ஏனென்றாஅல் பிதா ஒருவரே தேவன், கிரிஸ்து கர்த்தர், பிதாவால் அனுப்பட்டவர், நீர் கொப்டுத்த 2ம் சங்கீதமும் அதையே தான் சொல்லுகிறது!! கிறிஸ்து அபிஷேகம்ப்பண்ணப்பட்க்டவர், அப்படி என்றால் அவரை அபிஷேகம் செய்தவர் அவரை விட பெரியவராக தான் இருக்க வேண்டும் என்கிற ஒரு சாதாரன லாஜிக் கூட ஏற்றுக்கொள்லாத அளவிற்கு பாரம்பரியத்தின் கோட்பாடான திரித்துவம் கண்களை கட்டி வைத்திருக்கிறது!!

ஆகவே தான் கிறிஸ்துவை இருந்தவர் (மாம்சத்தில் வரும் முன் பிதாவுடன் இருந்தவர், பிதாவாக அல்ல), இருக்கிறவர் (மாம்சத்தில் வந்து, பிதாவைனால் மரித்தோர்களிலிருந்து எழுப்பப்பட்டு, சாவாமையை பெற்றுக்கொண்டவர்), இனிமேலும் வருபவர் (இந்த பூமியை நிய்யாம் தீர்க்கும் நாளில் இராஜாவாக வருபவராக இருக்கிறவர்) என்று வேதம் சொல்லுகிறது!!

பிதா சொல்லுவதை கீழ்ப்படிதலுடன் செய்பவரே அவரின் குமாரன் கிறிஸ்து இயேசு!! உயிர்த்தெழுந்து சர்வவல்லமை உள்ள பிதாவாகிய தேவனிடத்தில், வல்லமை உள்ள தேவனாக சபைக்கு பரிந்துரையாளராகவும், உலகத்தாருக்கு மத்தியஸ்தராகவும் இருக்கிறார்!! ஒருவன் பிதாவிடத்தில் சேருவது கிறிஸ்துவின் வழியாக தான் என்பதை நான் அறிவேன், அதையே தான் எழுதியும் வருகிறேன்!! தேவனும் கிறிஸ்துவும் இரு வேறு ஆள்தத்துவங்கள் என்பதே வேதம் எனக்கு தரும் விசுவாசம்!! இவரே அவர் என்றும் அவரே இவர் என்றும் குழப்புவது தான் பாரம்பரிய துருபதேசமான திரித்துவ கோட்பாடு!! வேதம் பிதா என்றும் குமாரன் என்றும் இரு வேறு நபர்கலையே போதிக்கிறது, திரித்துவவாதிகள் இருவரையும் ஒன்றாக மாற்றி போதாகுறைக்கும் இன்னுமொருவரையும் சேர்த்துக்கொண்டு மூன்றாக ஆக்கி விட்டார்கள் (நிசியா விசுவாசப்பிரமந்த்திற்கு பிறகே)!! அப்போஸ்தலர்களின் விசுவாசப்பிரமானம் சரீயானதாக இருக்கிறது!! பாரம்பரிய திரித்துவம் ஒரு துருபதேசம்!! ஏனென்றால்,

1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

இந்த‌ வ‌ச‌னத்திற்கு  ஒரு திரித்துவ‌ போத‌க‌னும் பதில் சொல்ல‌ முடியாது!! திரித்து வேண்டுமென்றால் பேசிக்கொண்டே இருக்க‌லாம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//நீர் நல்ல - தைரியமான ஆண்மகனாக இருந்தால் நள்ளிரவில் எழுந்து சத்தமாக இந்த சங்கீதத்தை வாசித்துப் பாரும்; விடிவதற்குள் உம்ம நிலைமை தலைகீழாகும்; இது நான் உமக்கு விடும் சவாலாகும்.//

தலைகீழான திரித்துவத்தை எல்லாம் விட்டு வந்தவன் தான் நான்!! ஆமாம், நான் பல இடங்களில் சுற்றி திரிந்தவன் தான், தேவன் தாமே என்னை ஒவ்வொரு முறையும் உளையான சேற்றில் சிக்கிக்கொள்ளாதப்படி தூக்கி எடுத்து வந்திருக்கிறார்!! அது தினகரனின் இயேசு அழைக்கிறாராக இருக்கட்டும் அல்லது ஆஞ்சலிக்காவின் ஷெக்கீனாவாக இருக்கட்டும்!! வேதத்தின் மேல் எனக்கு பிரியம் உண்டாக உண்டாக என் தேவனே என்னை நடத்தினார்!! இப்பொழுது இருக்கும் விசுவாசத்தில் நிச்சயமாக தெளிவாக சந்தோஷமாக இருக்கிறேன்!! நான் ஆண்மகன் தான், நள்ளிரவில் அல்ல, எப்ப எழுந்து இந்த சங்கீதத்தை வாசித்தாலும் இதில் பிதா குமாரன் என்கிற இருவரை குறித்து தான் இருக்கிறது!! யெகோவா தேவனுக்கு பயத்துடன் சேவை செய்யுங்கள் என்று இருக்கிறது, நீர் சொல்லுவது போல் குமாரனை ஆராதிக்கவோ தொழவோ சொல்லவில்லையே!!

உம்முடைய நிலமை எனக்கு காமெடி நடிகர் வடிவேலுவை தான் ஒப்பீட்டு பார்க்க வைக்கிறது, "நானாக தான் மாட்டிக்கிறேனோ"

நீர் கொடுத்த சங்கீதம் திரித்துவத்தையோ, குமாரனை ஆராதிக்க சொல்லியோ இல்லையே!! என் நிலைமை எல்லாம் சரியாகவே இருக்கிறது, நீர் உம்முடைய நிலைமையை மாற்றிக்கொண்டால் நல்லதாக இருக்கும்!! இந்த சங்கீதத்தை சரியாக புரிந்திருக்கிறேன், நான் நல்ல தைரியமான ஆண்மகன் தான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, என் தேவன் என்னை எப்படி படைத்தாரோ, எப்படி நடத்துகிறாரோ, அப்படியே நடக்கிறேன்!! உமக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால் நீர் நள்ளிரவில் அல்லது உமக்கு தோன்றும் எந்த பொழுதிலாவது இந்த சங்கீதத்தை தியானித்து வாசியும், திரித்துவம் என்கிற குப்பையை கலைந்து விட்டு!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஒரு யெகோவா சாட்சிக்காரன் தன்னை தைரியமாக யெகோவா சாட்சி என்று சொல்லுவது மாத்திரம் அல்ல, அதற்கான அடையாள அட்டையுடன் தான் சுற்றுவான்!! யெகோவா சாட்சிகளை பற்றி அறைகுறையாக தெரிந்து கொண்டு எழுத வேண்டாம் என்று சில்சாமிடம் திரும்பவும் சொல்லுகிறேன்!! இருப்பதை தைரியமாக ஒத்துக்கொள்ளும் பக்குவம் எனக்கு இருக்கிறது, இல்லாததை மறுக்க தான் முடியும், அதற்கு மேல் சூரியனை பார்த்து நாய் குறைத்தால் என்கிற கதை தான் சொல்ல முடியும்!! திரும்பவும் சில்சாமிற்கு சொல்லுகிறேன், என்னை யெகோவா சாட்சிக்காரன் என்று சொல்லி அவதூரு பரப்ப வேண்டாமென்று!! இல்லாத திரித்துவத்தை சொல்லி வருவது போல், நான் யெகோவா சாட்சியாக இல்லாத போது மீண்டும் மீண்டும் அதையே சொல்லி உம் புத்தியை காண்பிக்க வேண்டாம் என்று சொல்லுகிறேன்!!

நீர் விக்கிரக ஆராதனைக்கார கத்தோலிக்க சபையை சேர்ந்த திரித்துத்தை தானே பின்பற்றுகிறீர், உம்மை கத்தோலிக்கர் என்று சொல்லலாமா, அல்லது பாதி பெந்தகோஸ்தே என்றும் பாதி காத்தோலிக்கர் என்றும் சேர்த்து பெந்தோலிக்கர் என்று சொல்லலாமா!! சரியாக இருக்குமா!!

ஒருவன் தன் தாய் மொழியில் தான் அனைத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது என்ன சட்டமா!! எனக்கு தெர்நித மொழிகளை நீர் தெரிந்துக்கொண்டு என்ன செய்ய போகிறீர்!! வேதம் கொடுக்கப்பட்டது தமிழ் மொழியில் இல்லை என்பது மாத்திரம் எனக்கு தெரியும்!! அது திரித்துவத்தை தன் மண்டைகளில் அடைத்து வத்திருந்து மொழிப்பெயர்த்த சில மொழிப்பெயர்ப்பாலர்களின் கைவ்வன்னமே!! வேதம் வழங்கப்பட்ட மொழியில் அல்லது அதன் நேரடியான அர்த்தத்தில் வாசித்தாலே போதும்!!

ஸ்கூலுக்கு ஒழுங்காக போகாத உமக்கு இவ்வுளவு தான் அறிவு என்று நீரே நிறுபித்து வருகிறீர்!!

GOD was THE WORD அல்லது THE WORD was GOD என்று சொன்னாலும் ஒன்றே தான்!!

WORDக்கு தான் THE போட்டிருக்கிறதே தவிர WORD WAS THE GOD என்று இல்லை என்பதை உம் மங்கிபோன கண்களும் திரித்துவம் படிந்து போன உம் மனக்கண்களையும் திறந்து பாரும்!!

//உமது அறிவு மங்கலான- மறைவான- மலிவான‌ காரியங்களிலேயே அதிக ஆர்வம் கொண்டிருப்பதால் அறிவைத் தேடுவோரைக் கண்டால் உமக்கு பரியாசம் பண்ணவே தோன்றும்; ஆனால் நான் உமக்காக நல்லதொரு தெளிவான ஒப்பீட்டு வாக்கிய பிரதியைப் போட்டிருக்கிறேன், பாரும்; இதில் நீர் சொன்னபடியே  GOD எனும் சொல்லுக்கு முன்னால் The போடாவிட்டாலும் ஏதோ குழப்பத்தில் அந்த The-ஐ WORD-க்கு முன்னால் போட்டிருக்கிறார்கள்; இப்போது இதை என்ன செய்வதென்றே தெரியவில்லை; அப்படியானால் பிதாவாகிய தேவனைக் குறிப்பிடும் GOD-க்கு The-முன்னால் வரக்கூடாது அல்லவா? அதுபோல வேதத்தில் எங்குமே இல்லை என்று உம்மால் சொல்லமுடியுமா? அந்த தேவாதி தேவனே வார்த்தை வடிவாக இருந்தார் என்றும் அவரே மாம்சத்தில் வெளிப்பட்டார் என்றும் நீர் குறிப்பிடும் வார்த்தைகளே உமக்கு Return (boomerang..?) அடிக்கிறதே என்ன செய்யலாம்?//

இப்படி எழுதி உமக்கு இருக்கும் மங்கிய புத்தியை தான் வெளிப்படுத்தியிருக்கிறீர்!! நான் என்ன கேட்டேன், நீர் எழுதியது என்ன? ஏதோ பெரிய மேதாவியை போல் பிதற்யிருப்பதாக நினைப்பா!! நான் என்கிற அகந்தையே உம்மை அழித்துவிடும் என்பதை உம் எழுத்தை வைத்தே சொல்லுகிறேன்!! நான் கேட்ட‌து என்ன‌? நீர் முந்திரிக்கொட்டை மாதிரியே தான் உம் ப‌திவை த‌ந்திருக்கிறீர்!! நான் கேட்ட‌தையே திரித்துவம் மாதிரியே குழ‌ப்பி வைத்திருகிறீரே!! THE என்கிற‌ Definite Article ஒரே ஒருத்தரை (THE man) அல்ல‌து ஒரு பொருளை(THE Table) மாத்திரமே அல்லது ஒரே சமூகத்தை (THE Boys) சொல்ல‌ உப‌யோக‌ப்ப‌டுத்த‌ப்ப‌டும் வார்த்தை!! அப்ப‌டி சொல்ல‌ப்ப‌ட்ட‌து தான் THE God என்றால் பிதாவாகிய‌ ஒரே தேவ‌னை குறிக்கும் சொல்!! அப்ப‌டியே தான் THE Word என்றால் ஒருவ‌ர் தான் அந்த‌ வார்த்தை!! அந்த‌ வார்த்தை THE Godஆக‌ இல்லை மாறாக‌ Godஆக‌ இருந்தார்!! இப்போ புரியுதா THE Godக்கும் Godக்கும் உள்ள‌ வேற்றுமை!! நீர் கொடுத்திருக்கும் அந்த‌ வ‌ச‌ன‌த்தை ந‌ன்றாக‌ வாசித்து பாரும்.


(ASV)  In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

(BBE)  From the first he was the Word, and the Word was in relation with God and was God.

(CEV)  In the beginning was the one who is called the Word. The Word was with God and was truly God.

(ISV)  In the beginning, the Word existed. The Word was with God, and the Word was God.

(KJV)  In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.

(KJV+)  InG1722 the beginningG746 wasG2258 theG3588 Word,G3056 andG2532 theG3588 WordG3056 wasG2258 withG4314 God,G2316 andG2532 theG3588 WordG3056 wasG2258 God.G2316

(LITV)  In the beginning was the Word, and the Word was with God, and the Word was God.


நீர் த‌ந்திருக்கும் இந்த மொழிப்பெயர்ப்புகள் எல்லாம் திரித்துவ‌ம் என்கிற‌ குழ‌ப்ப‌ம் ச‌பைக்குள் வ‌ந்த‌ பிற‌கு எழுத‌ப்ப‌ட்ட‌து, ஆக‌வே ஹோ தியோஸ் என்ப‌தில் ஹோ வை எடுத்து விட்டு வெறும் தியோஸ் என்ப‌தையே மொழிபெய‌ர்த்து போட்டிருக்கிறார்க‌ள்!! இதை எல்லாம் யோசிப்ப‌தே கிடையாதா!!  நான் மங்கியதை தான் ஒட்டியிருக்கிறேன், ஆனால் நீரே மங்கி போய் இருக்கிறீரே, என்ன செய்வது!!

//இது உம்மைப் போன்ற திரித்துவ சத்திய மறுப்பாளர்களுக்கெல்லாம் சம்மட்டியான வெளிப்பாடாகும்; " GOD was THE WORD " என்பதை உம்மால் ஜீரணிக்கவே முடியாதே, ஒடம்பு அப்படியே உதறுமே..? அவர் ஆவி வடிவில் தானே இருந்தார், எப்போது வார்த்தை வடிவுக்கு ஜாகை மாறினார் என்று நீர் துடிக்கிறதை என் கற்பனையில் பார்க்கிறேன்.//

வேத வசனத்தில் இல்லாததை எப்படி தான் சத்தியம் அதுவும் திரித்துவ சத்தியம் என்கிறீரோ!! எழுதியதற்கு அதிகம் என்னாமல் இருங்கள் என்பது தான் வேதம் சொல்லுவது!! உம்மை போன்றோர் க‌ற்ப‌னையில் தான் எல்லாவ‌ற்றையும் பார்த்து திரித்துவ‌ம் போன்ற‌ பூத‌த்துட‌ன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறீர்க‌ள்!!  " GOD was THE WORD " என்பதை நான் ச‌ரி என்று தான் சொல்லுகிறேன், என‌க்கு ஏன் உட‌ம்பு உத‌றும்!!

அவ‌ருடைய‌ வார்த்தைக‌ளான‌ என் பிதா என்ரு சொல்லுவ‌தை தூக்கி எறிந்த‌வ‌ர்க‌ள் திரித்துவ‌ம் போதிப்ப‌வ‌ர்க‌ள் தான்!! அவ‌ரே இவ‌ர் இவ‌ரே அவ‌ர் என்று பித‌ற்றுப‌வ‌ர் திரித்துவ‌ போத‌க‌ர்க‌ள்!! நான் தெளிவாக‌ தான் இருக்கிறேன், பிதா யார் என்றும் குமார‌ன் யார் என்று!! உம‌க்கு 1 கொரி 8:6.7 ஒரு வ‌ச‌ன‌மே போதும்!! அந்த‌ அறிவு இன்னும் உம‌க்கு இல்லை என்ப‌த‌ற்கு!! நீர் த‌ட‌வி த‌ட‌வி த‌டுக்கி விழுந்துக்கொண்டு இரும், என்னை உளையான‌ சேற்றிலிருந்து தூக்கி விட்ட‌து போல் உம்மையும் தூக்கிவிடுவார், கால‌ம் ச‌மீப‌மாக‌ இருக்கிற‌து, அது வ‌ரையில் நீர் எப்ப‌டி வேண்டுமென்றாலும் க‌ர்ஜித்துக்கொண்டு இரும்!!

இப்படி தேவனை மூவர் என்றும் அவரே இவர், இவரே அவர் என்று சொல்லி சொல்லி,

ரோமர் 2:24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

நீதிமொழிகள் 27:22 மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது.

ஆனாலும் மனந்தளராமல் முயற்சிக்கும் பெரியென்ஸ்-க்கு வாழ்த்துக்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.

இப்படி ஒன்றான மெய்த்தேவனை இவர்கள் திரியேகமான தேவன் என்று திரித்துவ கோட்பாட்டை வைத்து திரித்து விட்டார்கள்!! இவர்களின் இந்த கோட்பாடு தான் இன்று விஷச்செடியாகவும், களையாகவும் உலகம் முழுவதும் பரம்பி கிடக்கிறது!! இதை கூட உணராமல் ஏதோ நான் புது கோட்ட்பாட்டை கொண்டு வந்து இவர்களை வஞ்சிக்கிறேனா!! திரித்துவ கோட்பாடு சபைகளுக்குள் நீசியா விசுவாசப்பிரமாணத்திற்கு பின் தான் வந்தது என்கிறதை கூட விசாரிக்காமல் என் தாத்தா இதை தான் சொன்னார் நானும் இதை தான் சொல்லுவேன் என்றால் எனக்கென்ன!!

இன்று சாத்தானின் மாயையில் சபை சிக்கிக்கொண்டு இருப்பது இவர்கள் கண்களுக்கு புலப்படவில்லை!! அந்த மாயையில் இருந்துக்கொண்டு ஏதோ நான் தான் புதிதாக ஒரு போதனையை கொண்டு வருவதாக இவர்கள் நினைக்கிறார்கள்!! ஏனென்றால் அப்போஸ்தலர்களின் போதனை இவர்களுக்கு வித்தியாசமாக தான் இருக்கும்!! சில்சாம் போன்ற அடாவடித்தனம் செய்கிறவர் தன்னை ஊழியன் என்கிற போர்வையில் வைத்துக்கொண்டு எப்படி சத்தம் போட்டாலும், வேதத்தில் திரித்துவம் என்கிற கோட்பாட்டை கொண்டு வர முடியாது (ஒரு வேளை அது போன்ற ஓநாய்கள் இனி எழும்புவார்களோ என்னவோ)!!

ஹோ தியோஸ் மற்றும் வெறும் தியோஸ் என்கிற இரு வேறு பதங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் ஏதோ தமிழிலும் ஆங்கிளத்திலும் நாலு வார்த்தைகள் கொடுத்து தன் அறிவீனத்தை தான் நிரூபித்துக்கொண்டு இருக்கிறார்!!

நான் கேட்ட கேள்விக்கு பதில் தராமல், இவர் WORDக்கு முன்னால் ஹோ போட்டதை கண்டு பிடித்ததாக சாதனை செய்து, அதினால் எனக்கு உடம்பு உதறும் என்கிற நப்பாசை வேறு!! THE WORD என்றாலே அவரும் ஒருவர் என்று தான் நான் எழுதியிருக்கிறேனே!! அட மூட கூட்டமே இதை கூடவா புரிந்துக்கொள்ள முடியவில்லை!! பிதாவாகிய தேவன் என்று வரும் இடத்தில் எல்லாம் தியோஸ் என்பதற்கு முன்பாக ஹோ என்று போடப்பட்டிருக்கிறது, கிறிஸ்துவை தியோஸ் என்று குறிப்பீட்ட இடங்களில் ஹோ இல்லை என்று நான் எழுதினால், இவர் லோகோஸ்க்கு முன்பாக ஹோ இருப்பதாக காண்பித்து எதையோ கண்டுபிடித்தாக எழுதுகிறார்!!

நீர் அடிக்கடி உபயோகித்து திரித்துவ கூட்டத்தாரை மகிழ வைக்க சொல்லும் வசனம் 1 தீமோ 3:16

தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார் என்பது!! யார் இல்லை என்று சொன்னல் ஆனால் இங்கே தேவன் என்று கொடுக்க்பட்டதை சர்வவல்லமை உள்ள தேவன் என்று நீர் நினைத்து போதித்திக்கொண்டு இருந்தால் அது தான் தவறு என்கிறேன்!! இங்கேயும் யோவான் 1:1ல் உள்ளது போல் பிதாவாகிய தேவனை குறிக்கும் சொல்லான ஹோ தியோஸ் கிடையாது!! வெறும் தியோஸ் என்பது லோகோஸான கிறிஸ்துவையே குறிக்கிறது!! பல்வேறு மொழிப்பெயர்ப்புகள் இப்பொழுது அந்த வசனத்தை "கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்டார்" என்றே இருக்கிறது!!

மேலும் இதற்கு ஆதாரமான ஜோடு வசனமும் இருக்கிறது,

1 யோவான் 4:2. தேவஆவியை நீங்கள் எதினாலே அறியலாமென்றால்: மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணுகிற எந்த ஆவியும் தேவனால் உண்டாயிருக்கிறது. 3. மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல; வருமென்று நீங்கள் கேள்விப்பட்ட அந்திக்கிறிஸ்துவினுடைய ஆவி அதுவே, அது இப்பொழுதும் உலகத்தில் இருக்கிறது.

ஆக‌, கிறிஸ்து இயேசு தான் மாம்ச‌த்தில் வ‌ந்தார் என்று அறிக்கை செய்கிற‌வ‌ன் தேவ‌னின் ஆவியினால் ந‌ட‌த்த‌ப்ப‌டுகிறான்!! சர்வவல்லமை உள்ள தேவ‌ன் மாம்சத்தில் வெளிப்பட்ட‌ர் என்று போதிப்ப‌வ‌ர் அந்திக்கிறிஸ்துவின் ஆவியில் இருப்ப‌தாக‌ வேத‌ம் சொல்லுகிற‌து!! நீர் எத்துனை கூச்ச‌ல் போட்டு உம‌க்கு கூட்ட‌ம் சேர்த்துக்கொண்டாலும், வேத‌த்தை மாற்ற‌ முடியாது!! வேத‌மும் அதை தான் சொல்லுகிற‌து, அநேக‌ர் தான் கேட்டுக்க்கு செல்லும் பெரும் பாதையை தேர்ந்தெடுப்பார்க‌ள் என்று!! மிக‌ சில‌ரே ஜீவ‌னுக்கு போகிற‌ குறுகிய‌ வாச‌ல் வ‌ழியே செல்வார்க‌ள் என்று!! இப்ப‌டி அநேக‌ராக‌ இருந்து அவ‌ர்க‌ளை நீரே ந‌ட‌த்தி செல்லும், எந்த‌ வாச‌ல் என்று தெரியும் தானே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பிதாவும் குமாரனும் வேறு என்று சொல்லும் இன்னும் பல வசனங்கள்:

மத்தேயு 7:21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

திரித்துவ கூட்டம் இதை தான் போதிக்கிறது!! இயேசுவை தொழுதுக்கொள்வதால் இவர்கள் கிறிஸ்தவர்கள் என்று, ஆனால் கிறிஸ்து சொல்லுவது வேறு!! இவர்கள் வேறுமனே கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லிக்கொண்டே இருக்கட்டும்!!

மத்தேயு 10:32 மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.

மத்தேயு 10:33 மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.

நானும் பரலோகத்தில் இருக்கிற என் பிதாவும் இவர்களுக்கு ஒருவரே என்பது தேவதூஷனத்தின் உச்சம்!!

மத்தேயு 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

இவர்களின் கூற்றை பார்த்தால் பிதா தன்னிடத்தில் தாமே பாத்திரம் நீங்கும்படியாக ஜெபிக்கிறார்!!

யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

கிறிஸ்து சுயமாக எதையும் செய்யாமல் அவரை அனுப்பியவரையே நோக்கி பார்த்து பெற்றுக்கொள்கிறார்!! என்னை அனுப்பிய பிதா என்று சொல்லுபவர் அவரும் பிதாவும் ஒன்றாக இருக்க முடியுமா என்று திரித்துவம் பேசுவோரின் கண்களை (மனக்கண்களையும் சேர்த்து தான்) இப்பிரபஞ்சத்தின் தேவன் பயங்கரமாக குறுடாகி வைத்திருக்கிறார்ன்!! அவர்களுக்கு தெரியவில்லை என்பது கூட பரவயில்லை, ஆனால் இப்படி இருட்டில் தான் சத்தியம் இருகிறது என்று போதிப்பது விநோதமாக இருக்கிறது!!

இவர்களுக்கு இனி வசனங்கள் தான் பதிலாக கொடுப்பேன், தேவனின் வார்த்தைகள் கிரியை செய்யட்டும், பிதா யார் என்றும் குமாரன் யார் என்றும் இவர்கள் தெரிந்துக்கொள்ளட்டும்

வசனங்கள் தொடரும்........................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

லூக்கா 1:35 தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

தேவதூதன் மரியாளிடம் கிறிஸ்துவின் பிறப்பை குறித்தான செய்தியை சொல்லும் போதும் பிறக்க இருப்பது தேவனுடைய குமாரன் என்றே சொல்லுகிறான், தேவன் என்று இல்லை!! குமாரன் வேறு, பிதா வேறு!! இருவ‌ரும் ஒரே கால‌த்திலிருந்து, ஒரே வ‌ல்ல‌மையோடு, ஒன்றுக்குள் ஒன்றாக‌ இருக்கிறார்க‌ள் என்ப‌து எல்லாம் க‌த்தோலிக்க‌ நிசியா விசுவாச‌ப்பிர‌மான‌ம் வ‌ந்த‌ பிற‌கு நுழைந்த‌ துருப‌தேச‌மே!! இதை சில்சாம் ஏற்றுக்கொள்ளாவிட்டால் என்ன‌, இது தானே உண்மை!! இது ச‌ரித்திர‌ம் வேறு!! வேத‌த்தை தான் மாற்றி த‌ன் போக்கில் மொழிப்பெய‌ர்த்து விட்டார்க‌ள், ச‌ரித்திர‌த்தையுமா மாற்றுவார்க‌ள்!! க‌த்தோலிக்க‌ர்க‌ள் கொண்டு வ‌ந்த‌ திரித்துவ‌த்தை தான் இன்று பெந்த‌கோஸ்தே ச‌பைக‌ளும் பின்ப‌ற்றுவ‌தில் ஒரு ஆச்ச‌ரிய‌மும் இல்லை!! துவ‌க்க‌த்தில் எதிர்த்த‌து போல் எதிர்த்து பிற‌கு மெதுவாக‌ அவ‌ர்க‌ளிட‌மிருந்து கிறிஸ்தும‌ஸ், ஈஸ்ட‌ர், குருத்து ஞாயிறு போன்ற‌ எல்லா விழாக்க‌ளிலும் விழுந்து போய் இனி வ‌ரும் கால‌த்தில் மீண்டும் க‌த்தோலிக்க‌த்தின் த‌லைமையை ஏற்று ச‌பைக‌ள் ஒன்று கூடும், அதுவும் துவ‌ங்கி விட்ட‌து!! போப்பின் த‌லைமையில் மீண்டும் ச‌பைக‌ள் ஒன்று கூடும் கால‌ம் வ‌ருகிற‌து, அது இப்பொழுதே ஆர‌ம்பித்து விட்ட‌து!1

வெளி 13:12 அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.

முந்தின‌ மிருக‌ம் (க‌த்தோலிக்க‌ மார்க‌த்தை ந‌ட‌த்தும் த‌லைமை, அது ஒரு போப் என்று இல்லாம‌ல், போப்புக‌ளின் வ‌ரிசையை குறிக்கும்)!! அது (இன்றைய‌ ம‌ற்ற‌ ச‌பைக‌ள்) முந்தின‌ மிருக‌த்தின் வ‌ழிமுறைக‌ளை பின்ப‌ற்றி, க‌த்தோலிக்க‌ ச‌பை ந‌ட‌ப்பித்ததை (விழாக்க‌ள், கொண்டாட்ட‌ங்க‌ள், ப‌ட‌ங்க‌ள் விக்கிர‌க‌ங்க‌ள்) ந‌ட‌த்தும்!! ஒரு கால‌த்தில் போப்பிற்கு இருந்த‌ செல்வாக்கு நிச்ச‌ய‌மாக‌ இன்று இல்லை, அதுவே அந்த‌ ச‌பைக்கு ஏற்ப‌ட்டிருக்கும் சாவுக்கேதுவான் காய‌ம்!! இந்த‌ ம‌ற்ற‌ ச‌பைக‌ள் சேர்ந்து, அந்த‌ காய‌த்தை ஆற்றி, மீண்டும் போபிற்கு செல்வாக்கு உண்டு ப‌ண்ணி, அனைவ‌ரும் போப்பை (கத்தோலிக்க மார்கத்தை) ப‌ழைய‌ப்ப‌டி இருந்த‌ நிலைக்கு எடுத்து செல்வார்க‌ள்!! க‌த்தோலிக்க‌ம் வெறும் ஒரு மார்க்க‌ம் அல்ல‌, பிசாசின் ச‌க‌ல‌ த‌ந்திர‌ங்க‌ளும் ம‌னித‌ கோட்பாடுக‌ள் நிறைந்த‌ பூமியை சார்ந்த‌ ஒரு ச‌பை!!

கிறிஸ்துவை தேவனின் சுதந்தரர் என்றும் அவரின் சபையை தேவனின் சுதந்தரர் என்றும் கிறிஸ்துவின் உடன் சுதந்தரர் என்றும் வேதம் சொல்லுகிறது,

ரோமர் 8:17 நாம் பிள்ளைகளானால் சுதந்தரருமாமே; தேவனுடைய சுதந்தரரும், கிறிஸ்துவுக்கு உடன் சுதந்தரருமாமே; கிறிஸ்துவுடனேகூட நாம் மகிமைப்படும்படிக்கு அவருடனேகூடப் பாடுபட்டால் அப்படியாகும்.

கிறிஸ்து தான் அந்த சர்வவல்லமையுள்ள தேவன் என்றால், கிறிஸ்துவின் உடன் சுதந்தரர்களான சபையும் சர்வவல்லமையுள்ளகர்கள் ஆவார்களே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

யோவான் 5:36 யோவானுடைய சாட்சியைப்பார்க்கிலும் மேன்மையான சாட்சி எனக்கு உண்டு; அதென்னவெனில், நான் நிறைவேற்றும்படிக்குப் பிதாவானவர் எனக்குக் கற்பித்ததும் நான் செய்துவருகிறதுமான கிரியைகளே பிதா என்னை அனுப்பினார் என்று என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறது.

சர்வவல்லமையுள்ள தேவன் மாம்சத்தில் இயேசுவாக வந்தார் (தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்) என்று சொல்லுபவர்களுக்கு இந்த வசனம் முறனாக தெரியவில்லையோ!! இயேசு கிறிஸ்து தேவனிடத்திலிருந்து கற்பித்துக்கொண்டு ஒரு நோக்கத்துடன் வந்தார், பிதாவே என்னை அனுப்பினார் என்று அவரே சொல்லுகிறார்!! இதை விட திரித்துவவாதிகளுக்கு என்ன சாட்சி வேண்டும், இன்னும்,

யோவான் 5:37 என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.

பிதா கொடுத்த சாட்சி, என்னவென்றால், கிறிஸ்து தேவனின் குமாரன் என்பதே!! இயேசுவாக மாமசத்தில் வந்த பிறகும் சரி, மாம்சத்தில் வரும் முன்பும், உயிர்த்தெழுந்த பிறகும், கிறிஸ்து பிதாவகிய தேவன் அல்ல என்பதை ஒவ்வொரு வசனமும் முத்தாய் சொல்லுகிறது!! காதுள்ளவன் கேட்டு கொள்வான்!!

யோவான் 5:43 நான் என் பிதாவின் நாமத்தினாலே வந்திருந்தும் நீங்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை, வேறொருவன் தன் சுய நாமத்தினாலே வந்தால் அவனை ஏற்றுக்கொள்வீர்கள்.

அந்த வேறொருவன் சொன்னதை தான் இன்று சபையினர் பின்பற்றி வருகிறார்களே!! தேவன் சொன்ன "நீங்கள் சாகவே சாவீர்கள்" என்பதை அவன் தான் "நீங்கள் சாகவே சாவதில்லை" என்று மாற்றினான், இன்று சபைகள் அந்த வேறொருவன் சொன்னதை தான் நம்புகிறார்கள்!! அப்படியே தான் பிதாவின் நாமத்தில் வந்தவரை, (நாமம் என்பது அதிகாரம்) பிதா என்று சொல்லிக்கொடுத்தான், அதுவே இன்று சபைக்கு மூல உபதேசமாக மாறி, பாரம்பரியமாக வந்துக்கொண்டு இருக்கிறது, இந்த பாரம்பரியத்தின் தொடக்கம், கான்ஸ்டண்டைன் என்பவன் கொன்டு வந்த மார்க்கமான கத்தோலிக்கத்திலிருந்து தான் ஆரம்பித்தது!!

யோவான் 8:42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.

தேவன் மாம்சத்தில் வெளிப்படவில்லை, மாறாக அவர் கிறிச்துவை அனுப்பினார் என்று இயேசு கிறிஸ்துவே சொன்ன பிறகு வேறு என்ன!! நான் தேவனாக இருந்து வந்தவன் என்றில்லாமல், நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன் என்று சொல்லி, கிறிஸ்து சுயமாய் வராமால் அனுப்பப்பட்டவர் என்பதை சொல்லியிருக்கிறார்!!

யோவான் 10:36 பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னை தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவதூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா?

பிதாவினால் அனுப்பட்டவர் அவரின் நேசக்குமாரன் தான், சர்வவல்லமை உள்ள தேவன் என்று நாங்களும் சொல்லுகிறோம், ஆனால் நாங்கள் தேவதூஷனம் செய்கிறோம் என்று குற்றம் சாட்டப்படுகிறோம்!!

இத்துனை வசனங்கள், அதுவும் கிறிஸ்துவே சாட்சியாக சொன்ன வசனங்கள் இருந்தும், இன்னும் கிறிஸ்து தான் சர்வவல்லமை உள்ள தேவன் என்றும், இவரே அவர், அவரே இவர் என்பவர்களுக்கு இன்னும் வசனங்கள் தொடரும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard