விஷசெடிகள் எப்படிப்பட்டவைகள் என்று தெரிந்துக்கொள்ளலாம்,
1. கிறிஸ்தவர்கள் என்று சொல்லுவதை காட்டிலும், தங்கள் சபையின் பெயரை சொல்லுவதில் தான் பெறுமைக்கொள்வார்கள் (எங்கள் சபை, எங்கள் பாஸ்டர், இரட்சிப்பு)!!
2. வேதத்தில் இல்லாததை பாரம்பரியமாக வந்ததை விசுவசித்தே ஆக வேண்டும் என்று அவசியம் போதிப்பார்கள் திரித்துவம் அதில் பிரதானம், ஏனென்றால் இதற்கு வசனம் அவசியம் இல்லை, சொந்த அனுபவங்கள், கரண்ட் கம்பி, ஐஸ் கட்டி, சுடு தண்ணி, ஆவியாக போவது, பழாப்பழம், இதைக்கொண்டு தான் திரித்துவத்தை விளக்குவார்கள், வேஎத வசனம் இல்லாததினால்!!
3. மற்ற மார்க்காத்தார் போல் இயேசு கிறிஸ்துவை வேதத்தில் சொல்லாதப்படி ஒரு ஸ்தானத்தை கொடுத்து வைப்பார்கள்!! கேட்டால் இயேசுவை தேவன் என்று தொழுதுக்கொள்வோர்கள் தான் கிறிஸ்தவர்கள் என்று வேதத்தில் இல்லாத ஒரு கருத்தை போதிப்பார்கள்!!
4. வேதம் சொல்லுகிற பிரகாரம் கிறிஸ்து தேவனின் குமாரன் என்றோ, அவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்து தேவனுக்கு வலது பாரிசத்தில் உட்கார்ந்தார் என்று வாசித்தாலும், அதை அப்படியே விசுவசியாமல் தன் சபை மக்களையும் கெடுப்பார்கள், ஏனென்றால் பாரம்பரிய விசுவாசத்தின்படி இயேசு தான் பிதா, பிதா தான் இயேசுவாயிற்றே, அவரே அவராக அவரின் வலது பாரிசத்தில் எப்படி அமர்ந்திருக்க முடியும்!!
5. பென்ஸ், ஹோண்டா அக்கார்ட், கார்களிலும், ஏன் சிலர் விமானங்கள் வைத்துக்கொண்டு ஊர் ஊராக சுற்றி திரிந்து தங்களை பவுல்க்கும் பேதுருவிற்கு ஒப்பீட்டு பேசுவார்கள்!!
6. தேவன் (கிறிஸ்து, பிதா, அல்லது வேதத்தில் சொல்லப்படாத பரிசுத்த ஆவியான தேவன் என்று மாற்றி மாற்றி சொல்லுவார்கள்) பேசிவிட்டு போனார் என்று சொல்லுவார்கள் இந்த விஷ கிருமிகள்!! பவுல் கிறிஸ்துவை தரிசித்து மூன்று நாட்கள் குருடாகி படுத்திருந்தார், ஆனால் கிறிஸ்து இவர்களின் காரிலோ, இவரின் சோஃபாவிலோ உட்கார்ந்து பேசி விட்டு போவாராம், அதினால் இவர்கள் வசனம் தெரியாத குருடர்களாகி போகிறார்கள்!!
தொடரும்................
-- Edited by bereans on Monday 10th of January 2011 07:30:00 AM
7. மரணம், ஆத்துமா என்றால் என்ன என்று கேட்டால், வேதத்தில் இல்லாத விஷயங்களை சொல்லி குழப்புவார்கள்!!
8. ஒரே விசுவாசம் என்று, திரித்துவம், ஞானஸ்நானம் என்று எல்லாம் சொன்னாலும் 2000 சபைகள் வைத்திருப்பார்கள்!!
9. அடுத்த சபையிலும் இவர்கள் சொல்லும் திரித்துவம் தான் போதிக்கப்படுகிறது என்றாலும், தன் சபையின் வருமானம் போய் விடும் என்கிற ஒரே காரணத்தினால், தன்னிடன் மாட்டியிருக்கும் ஆடு (விசுவாசி என்று பிரித்து வைக்கப்பட்டவர்கள்) எக்காரணம் கொண்டும் அடுத்த சபைக்கு போய் விட கூடாது என்று இருப்பவர்கள்!!
10. காணிக்கைகளும் தசமபாகங்களும் சரியாக தந்துக்கொண்டிருந்தால் விசுவாசிகளுக்கு ஆசிர்வாதம், இல்லாட்டி தான் இருக்கிறது சாபத்தின் பட்டியல்!!
11. வசனத்தை காட்டிலும் பாரம்பரியத்தை போதிக்கவே பிரியப்படுவார்கள், வேத வாக்கியங்களை காட்டிலும் தன் சொந்த அனுபவங்களை சொல்லியே போதிபொபார்கள்!! பரிசுத்தத்திற்கும் விசுவாசத்திற்கும் தன்னையே எடுத்துக்காட்டாக சொல்லுவார்கள்!!
12. அபிஷேகத்தை தன் கைக்குட்டையில் எடுத்து திரிவார்கள்!!