லூக்கா 23:43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
மிகவும் முறனான ஒரு மொழிப்பெயர்ப்பு. இந்த மொழிப்பெயர்ப்பின்படி வாசித்து போதித்து வருகிறார்கள் இன்றைய கிறிஸ்தவ போதகர்கள். அதாவது, இயேசு கிறிஸ்து அவனை (கள்ளனை) நோக்கி சொல்லுகிறார், இன்றைக்கே நீ என்னுடன் பரதீசிலிருப்பாய், என்று!!
நம்ப முடிகிறதா, மரித்து மூன்று நாட்கள் கல்லறையில் இருக்கும் இயேசு கிறிஸ்து அவனிடம் இப்படி சொன்னது!! கிறிஸ்து மரித்தோரிடமிருந்து தான் மூன்றாம் நாளில் தேவனால் உயிர்ப்பிக்கப்பட்டார் என்று வேதம் சொல்லுகிறதே!! அப்படி என்றால் இயேசு கிறிஸ்து அவனிடம் சொன்னது தான் என்ன, ஏன் நம் மொழிப்பெயர்ப்பாலர்கள் இப்படி ஒரு குழப்பத்தை உண்டாக்கினார்கள்!!
இந்த வசனத்தைன்படி, கிறிஸ்து மரித்த அன்றே பரதீசிக்கு போயிருக்க வேண்டும், அப்படி என்றால் அவர் மரித்தோரிலிருந்து மூன்றாம் நாளில் உயிர்ப்பிக்கப்பட்டார் என்கிற வசனம் தப்பாக இருக்கும்!!
ஆனால் உண்மை என்னவென்றால் இயேசு கிறிஸ்து மூன்று நாட்கள் மரித்து போய் இருந்தார்! அவர் அழிவைக்கானாதப்படிக்கு பிதா அவரை மூன்றாம் நாளில் உயிர்த்தெழச்செய்தார்!! இதுவே நம் உயிர்த்தெழுதலின் நம்பிக்கையும் கூட!!
கிறிஸ்து இயேசு மூன்று நாட்கள் மரித்து தான் இருந்தார் என்றால், ஏன் கள்ளனிடம் அப்படி சொல்ல வேண்டும்!! பிரியமானவர்களே, அவர் சொன்னது சரி தான், ஆனால் நம் மொழிப்பெயர்ப்பாளர்கள் அதை குதறி எடுத்து விட்டார்கள்!!
கிறிஸ்து சொன்னது இப்படி தான், "இன்றைக்கு நான் சொல்லுகிறேன், மெய்யாகவே நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய்" என்றே!!
பிதாவின் மகிமையான ராஜியமான அந்த பரதீசி இனி தான் இந்த பூமியில் வரயிருக்கிறது, அதிலே அந்த கள்ளனும், கிறிஸ்து இயேசுவின் மீட்கும் பொருளின் பயனை அடைவான். அதை தான் இயேசு கிறிஸ்துவும் அவனிடம் சொன்னது!!