kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பரிசுத்தஆவி வருவது வெளியரங்கமாகத் தெரியுமா?


Executive

Status: Offline
Posts: 425
Date:
பரிசுத்தஆவி வருவது வெளியரங்கமாகத் தெரியுமா?


அன்பான சகோ.பெரியன்ஸ் அவர்களே!

பிதா, குமாரன், பரிசுத்த ஆவி குறித்து பின்வரும் தொடுப்பில் தாங்கள் இதுவரை கூறின கோட்பாடுகளும் விளக்கங்களும் வேதவசனங்களுக்கு இசைந்ததாகவே உள்ளன, பாராட்டுக்கள்!

http://www.activeboard.com/forum.spark?aBID=128972

ஒரு சந்தேகம் சகோதரரே! அப்போஸ்தலர் நடபடிகளின் சில சம்பவங்களில், ஒருவர் மீது பரிசுத்தஆவி வரும்போது அவரிடம் சில வெளிப்படையான காரியங்கள் நடைபெற்றதாகப் பார்க்கிறோம். உதாரணங்கள்:

அப்போஸ்தலர் 8:16-18 அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றுக்கொள்ளும்படி அவர்களுக்காக ஜெபம்பண்ணி, அவர்கள்மேல் கைகளை வைத்தார்கள், அப்பொழுது அவர்கள் பரிசுத்தஆவியைப் பெற்றார்கள். அப்போஸ்தலர் தங்கள் கைகளை அவர்கள்மேல் வைத்ததினால் பரிசுத்தஆவி தந்தருளப்படுகிறதைச் சீமோன் கண்டபோது, அவர்களிடத்தில் பணத்தைக் கொண்டுவந்து: நான் எவன்மேல் என் கைகளை வைக்கிறேனோ, அவன் பரிசுத்தஆவியைப் பெறத்தக்கதாக எனக்கும் இந்த அதிகாரத்தைக் கொடுக்கவேண்டும் என்றான்.

அப்போஸ்தலர் 10:46 பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்தஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.

அப்போஸ்தலர் 19:1-6 அப்பொல்லோ என்பவன் கொரிந்து பட்டணத்திலே இருக்கையில், பவுல் மேடான தேசங்கள் வழியாய்ப் போய், எபேசுவுக்கு வந்தான்; அங்கே சில சீஷரைக் கண்டு: நீங்கள் விசுவாசிகளானபோது, பரிசுத்தஆவியைப் பெற்றீர்களா என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரிசுத்தஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை என்றார்கள். அப்பொழுது அவன்: அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள் என்றான். அதற்கு அவர்கள்: யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம் என்றார்கள். அப்பொழுது பவுல்: யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாயிருக்கவேண்டும் என்று ஜனங்களுக்குச் சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானத்தைக் கொடுத்தானே என்றான். அதைக் கேட்டபோது அவர்கள் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றார்கள். அல்லாமலும் பவுல் அவர்கள்மேல் கைகளை வைத்தபோது, பரிசுத்தஆவி அவர்கள்மேல் வந்தார்; அப்பொழுது அவர்கள் அந்நியபாஷைகளைப் பேசித் தீர்க்கதரிசனஞ் சொன்னார்கள்.

இவ்வசனங்களின்படி பார்க்கையில், ஒருவன்மீது பரிசுத்தஆவி வருவதை அவனும் அவனைச் சுற்றியுள்ளவர்களும் உணரத்தக்கதாக இருக்கும் என்பதாகத் தோன்றுகிறது. ஆனால் நீங்களோ “பரிசுத்த ஆவியை பெறுவது என்பது தேவனின் சித்தத்தை அறிந்து அதன் படி நடக்க முயற்சிப்பதே ஆகும்!!” என்கிறீர்கள். இதைக் குறித்த தங்கள் விரிவான விளக்கத்தைத் தரும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
RE: பரிசுத்தஆவி வருவது வெளியரங்கமாகத் தெரியுமா?


நல்ல கேள்வி!மரங்களை அதன் கனிகளால் அறிவீர்கள் என்பது நமது கர்த்தர் நமக்குச் சொன்ன வார்த்தை. பரிசுத்த ஆவி ஒருவரிடம் இருப்பது என்பது இந்தக் கனிகளால் உறுதிசெய்யப்படுகிறது. கலாத்தியர் 5:22. :ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,

23. சாந்தம், இச்சையடக்கம்
;

இவைகள் இருக்கும் மனிதன் சந்தேகத்திற்கிடமின்றி பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறான் என்பதில் எள்ளளவும் சந்த்தேகமில்லை!!!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ ஆத்துமா எழுதியபடி வெளியரங்கமான அடையாளங்கள் ஆவியை பெற்ற ஒரு மனிதனிடம் வெளிப்படும்!! இப்படி இருப்பது தேவனுக்கு பிரியமாக இருப்பதால் தான் இதை தேவனின் சித்தம் அறிந்து அதன் படி செயல்படுவது என்று எழுதியிருக்கிறேன்!!

அப். நடபடிகளில் "சில" சம்பவங்களை தாங்கள் கான்பித்திருக்கிறீர்கள்!! இந்த சில சம்பவங்கள் பரிசுத்த ஆவி என்பது ஒரு வல்லமை என்பது தான் நிருபனம் ஆகிறது!! அப்போஸ்தர்களுக்கு பிதா யார் என்பதும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து யார் என்பது தெரிந்திருந்தது!! பரிசுத்த ஆவி அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டிருந்தது!! அந்த பரிசுத்த ஆவி எத்தகையானது என்பதை அவர்கள் அறியவே அப். 2ம் அதிகாரத்தில் பரிசுத்த ஆவி என்கிற அந்த தேவ வல்லமை 'பலத்த காற்றின்" வடிவில் அவர்கள் மேல் வந்தது!!


அப். 1:8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.

அப் 2:2. அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. 3. அல்லாமலும் அக்கினிமயமான நாவுகள்போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்களுக்குக் காணப்பட்டு அவர்கள் ஒவ்வொருவர்மேலும் வந்து அமர்ந்தது. 4. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.

பரிசுத்த ஆவி (இயேசு கிறிஸ்து ஆவியானவர் என்று சொல்லவில்லை) வரும் போது அதற்க் அடையாளமாக நீங்கள் பெலனடைவீர்கள் என்பதையே கிறிஸ்து இயேசு தன் அப்போஸ்தலர்களிடத்தில் சொல்லுகிறார்!! அதன் படியே அவர்கள் மேல் வீட்டு அறையில் பயந்து போய் உட்கார்ந்து கிறிஸ்து அவர்களுக்கு வாக்களித்த அந்த வல்லமைக்காக‌ (பரிசுத்த ஆவி) காத்துக்கொண்டு இருக்கும் போது தான் அந்த வல்லமையை அவர்கள் உணர்ந்துக்கொள்ளும்படியாக "பலத்த காற்று" அடிப்பது போலும், அவர்கள் அதை காணும் படியாக "அக்கினிமயமான நாவுகள்போல்" வந்தது!! நம் மொழிப்பெயர்ப்பாலர்கள் 2,3 வசனங்களில் அந்த ஆவியையை அது இது என்று எழுதிவிட்டு, தாம் இருகும் பாரம்பரியத்தின் படியே 4ம் வசனத்தில் "ஆவியானவர்" என்று எழுதியிருக்கிறார்கள்!!

அப். 1:8ல் pneuma  என்கிற  கிரேக்க வார்த்தைய ஆவி என்று எழுதி விட்ட நம்  மொழிப்பெயர்ப்பாளர்கல் அப் 2:4ல் அதே ஆவியை (pneuma) "ஆவியானவர்" என்று மொழிப்பெயர்த்து, தமிழ் வேதத்தை மாத்திரம் வாசிப்பவர்களுக்கு குழப்பத்தை கொண்டு வந்திருக்கிறார்கல்!!

மொழிப்பெப்யர்ப்பாளர்கள் செய்த குழப்படியால் அப். 1:8ல் உள்ள ஆவி அப் 2:4ல் வரும் போது "ஆவியானவர்" ஆகி விட்டது!! சாத்தானின் தந்திரம் உலக கிறிஸ்தவர்களை ஒரு குழப்பத்தில் வைப்பது தானே!!

போகட்டும், இந்த வல்லமை அப்போஸ்தலர்களிடத்தில் வந்த போது, அவர்கள் கிறிஸ்து இயேசு சொன்னமாதிரியே பெலன் பெற்றார்கள், தைரியமக வெளியே வந்து பிரசங்கித்தார்கள், உலகம் எங்கும் சென்றார்கள்!! அந்த வல்லமையினாலே, அதிகம் அல்லது ஒன்றுமே கல்லாத அவர்கள் பல மொழிகளில் (அச்ந்நிய பாஷை) பேச முடிந்தது, மரித்தவர்களை எழுப்ப முடிந்தது, அற்புதங்கள் செய்ய முடிந்தது!! இவை எல்லாம் ஒரு காலத்தில் தேவைப்பட்டது, ஏனென்றால் தேவனை குறித்தான அறிதல் மக்களிடத்தில் இல்லையே!! மக்களுக்கு இந்த வேத வார்த்தை கிடைக்கவில்லை!! கிறிஸ்து துவங்கிய ஒரு முது வழியில் மக்கள் வந்து நடக்க இந்த அற்புதங்கள், அடையாளங்கள், பாஷைகள் தேவைப்பட்டது!! ஆனால் இன்றோ பெரும்பாளும் பேசப்படுகிற எல்லா மொழிகளிலும் வேதம் வந்து விட்டதால், இன்னும் "அந்நிய பாஷை பேசுகிறோம்" என்று ஒரு கும்பல் மக்களை (சாதாரன விசுவாசிகளை) ஏமாற்றிக்கொண்டு வருவதை பார்க்க முடிகிறது!!

இந்த வெளியரங்கமான சில சம்பவங்கள் அப்போஸ்தர்களுக்கும்  அவர்கள் நேரடியாக கைகளை வைத்த சிலருக்கு மாத்திரமே நடந்தது!! "நிறைவான" வசனங்கள் வந்த பின் அந்த அடையாளங்கள் தேவையில்லாமல் போனது, அதற்கும் சாட்சி வேதத்தில் இருக்கிறது!!

எத்தனையோ அற்புதங்களை செய்த அப் பவுல்,

II தீமோத்தேயு 4:20 எரஸ்து கொரிந்துபட்டணத்தில் இருந்துவிட்டான்; துரோப்பீமுவை மிலேத்துவில் வியாதிப்பட்டவனாக விட்டுவந்தேன்
என்கிறார்,

அவருக்கே தன் கண்களுக்காக மன்றாடவேண்டியதாகவும் அதற்கு பெலன் கிடைக்காமல் போனதையும் நாம் அறிவோமே!!

இப்பொழுது வெளியரங்கமான அடையாளங்கள் என்பதே ஆவியின் கனிகள் மாத்திரமே!! இப்படி இருப்பக்து தேவனுக்கு சித்தமாக இருப்பதால் தான் இதை தேவ சித்தம் என்றும், தேவ சிந்தை என்றும், அதில் நடக்க பிரயாசிக்க வேண்டும் என்றும் எழுதினேன்!! மற்றப்படி பரிசுத்த ஆவி என்பது ஒரு ஆள் என்று எந்த நேரடியான வசனமும் இல்லை!! இலாத ஒன்றை நிருபிக்க எத்துனை குறுக்கு வழிகளை பயன் படுத்தினாலும், இல்லாத ஒன்று எப்படி இருப்பதாக மாற முடியும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard