kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நியமிக்கப்பட்ட மனுஷன்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
நியமிக்கப்பட்ட மனுஷன்!!


அப்போஸ்தலர் 17:31 மேலும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார்; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக்கொண்டு, பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்; அந்த மனுஷனை மரித்தோரிலிருந்து எழுப்பினதினாலே அதின் நிச்சயத்தை எல்லாருக்கும் விளங்கப்பண்ணினார் என்றான்.

எவ்வுளவு தைரியம் இருந்தால் பவுல் இது போன்ற ஒரு தேவதுஷனத்தை அதுவும் "பரிசுத்த வேதாகமத்தில்" சொல்லியிருக்கலாம்!! உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்து, தேவனோடு ஐக்கியமான இயேசு கிறிஸ்து, பிதாவாகி போன இயேசு கிறிஸ்துவை குறித்து, திரியேக தேவனில் ஒரு அங்கமான இயேசு கிறிஸ்துவை "மனுஷன்" அதுவும் நியமிக்கப்பட்ட மனுஷன் என்று எழுதலாம்!! திரித்துவவாதிகளுக்கு இந்த வசனம் தெரியவில்லையென்றால் அல்லது பார்த்தும் பார்க்காதவர்கள் போல் இருந்திருந்தால் தயவு செய்து இந்த வசனத்தை வாசியுங்கள்!!

உயிர்த்தெழுந்து பரலோகத்தில் பிதாவின் வலது பக்கத்தில் வீற்றிருக்கும் இயேசு கிறிஸ்துவை, பவுல் இப்படியாக எழுதியிருக்கிறார்!! பவுலுக்கு திரித்துவ இரகசியம் புரியவில்லை போல், இல்லாவிட்டால், அவர் அப்படி எழுதாமல், "மேலும் ஒரு நாளைக்குறித்திருக்கிறார்; அதிலே அவரே கிறிஸ்துவாக பூலோகத்தை நீதியாய் நியாய்ந்தீர்ப்பார்" என்று எழுதியிருப்பார்!! யார் கண்டால், இந்த திரித்துவவாதிகள் இப்படி தான் இந்த வசனத்திற்கு விளக்கம் தருகிறார்களோ?!!

பவுல் எத்துனை தெளிவாக சர்வவல்லமையுள்ள தேவனை குறித்தும், இயேசு கிறிஸ்துவை குறித்தும் எழுதியிருக்கிறார்!! தேவன் தான் எழுப்பிய இயேசு கிறிஸ்துவை, திரித்துவவாதிகள் சொல்லுவது போல், இயேசு கிறிஸ்துவும் தேவனும் ஒருவரே என்றால், அவரே அவரை எழுப்பிக்கொண்டார் என்றால் அபத்தமாக இருக்கும்!! இயேசு கிறிஸ்து பரலோகத்தில் சென்று அமர்ந்த பிறகும் "நியமிக்கப்பட்ட மனுஷன்" என்றே பவுல் எழுதுகிறார்!! இது தான் தேவனை அறிகிற அறிவு!! பவுலுக்கு தெரியாத திரித்துவ இரகசியத்தை கத்தோலிக்க சபை தொடங்கி இன்றைய பெந்தகோஸ்தே சபை வரை பின்பற்றுவது ஒரு மாறுபாடான ஒற்றுமை தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பவுலுக்கு இயேசுவை குறித்தான் அறிவு இந்த வசனத்தில் வெளிப்படுகிறது!! திரித்துவவாதிகள் இயேசு கிறிஸ்துவை பிதாவாக்க முயற்சிக்கிறார்கள்!! அவ்வளவே!! பொய்யை கூட்டம் கூட்டி எத்துனை தான் சத்தமாக சொன்னாலும், சத்தியம் என்கிற சமட்டியால் மட்டமாக்கப்படும்!!

சாத்தான், சபைக்குள் கான்ஸ்டன்டைன் என்கிற அரசனை கொண்டு சபைக்குள் புகுத்தியது தான் "திரித்துவம்" "திரியேகத்துவம்" என்கிற விபரீதமான கொள்கை, கோட்பாடு!! இன்று மூடத்தனமாக, தேவனின் மகிமையை குறைக்கும் வகையில் செயல் படுகிறது சில தளங்கள்!! குப்பையை தலையில் தூக்கி வைத்துக்கொண்டும், சத்தியத்தை தன் காலின் கீழ் போட்டு கூட்டம் சேர்க்கிறது அந்த தளங்கள்!!

சர்வவல்லமை உள்ள தேவன் தன் சிருஷ்ட்டிப்பான லோகோஸை‌ (வார்த்தையை‌) இயேசு கிறிஸ்து என்கிற மனுஷனாக தான் இந்த பூமிக்கு அனுப்பினார் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இருக்கிறார்கள் இந்த திரித்துவவாதிகள்!! சாவாமையுள்ள தேவன் சிலுவை தூக்கி மரித்தார் என்கிற ஒரு பெரிய வஞ்சகத்தை சாத்தான் கொண்டு வந்திருக்கிறான், குழப்பத்தை கொண்டு வராத தேவனை பார்த்து குழம்பி நிற்கிறது ஒரு பெரிய "திரித்துவ" கும்பள்!! இது தான் உண்மை!! உண்மை பிசாசிற்கு பிடிக்காது தான் ஆனால் நாங்கள் உண்மையை எழுதிக்கொண்டே தான் இருப்போம், சாத்தானின் எத்துனை பெரிய கூட்டம் எதிர்த்து வந்தாலும்!!

தேவ‌ குமார‌ன் என்று வேத‌ம் தெளிவாக‌ சொல்லியிருக்கிற‌து ஆனால் இவ‌ர்க‌ளோ இல்லை இல்லை, அவ‌ர் தான் இவ‌ர் இவ‌ர் தான் அவ‌ர் என்கிற‌ பெரிய‌ குழ‌ப்ப‌த்திலிருந்தே இன்னும் மீளாம‌ல் இருக்கிறார்க‌ள்!! இவ‌ர்க‌ளும் இவ‌ர்க‌ளின் கூட்ட‌த்தாரும் பிசாசின் திரித்துவ‌ போத‌னையை கைக்கொண்டு அதையே ச‌த்திய‌ம் என்று விசுவாசித்து வ‌ருவ‌தால், தேவ‌ன் தாமே இவ‌ர்க‌ளுக்குள் அதை அப்படியே விசுவாசிக்கும்படியாகவும் மற்றவை எல்லாம் பிசாசின் உபதேசம் என்று இவர்களுக்கு தோன்றும்படியான கொடிய‌ வ‌ஞ்ச‌க‌த்தை அனுப்பியிருக்கிறார் (1 தெச 2:12)!! ஒரு நாள் உண்மை நிச்சயமாக தெரிய வ‌ரும்!!

1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

இந்த வசனத்தை எத்துனை முறை எழுதினாலும் சாத்தானின் போதனையில் இருக்கும் திரித்துவவாதிகளிடம் இதற்கு பதில் கிடையாது, ஏனென்றால் பவுல் தான் எழுதியிருக்கிறாரே, இந்த அறிவு அநேகருக்கு இல்லை!! அப்படி என்றால் சிலருக்கு, ஒரு சிறிய கூட்டத்திற்கு நிச்சயம் அந்த அறிவு இருக்கிறது!! இந்த‌ அறிவு எல்லாருக்கும் வ‌ரும் ஒரு கால‌ம் இருக்கிற‌து, அது வ‌ரையில் சாத்தானின் போத‌னையில் இருக்கும் இவ‌ர்க‌ளுக்கு இந்த‌ வ‌ச‌ன‌ம் புரிந்துக்கொள்ள‌ முடியாது!! வ‌ச‌ன‌த்தை கேட்டால், பார‌ம்ப‌ரிய‌த்தை கூப்பிட்டு வ‌ருவார்க‌ள் இவ‌ர்க‌ள்!!

பிதாவாகிய தேவன் ஒருவரே, அவர் இருவராகவோ, மூவராகவோ அல்லது அதற்கு மேலாகவோ கிடையாது!! அவர் ஒருவரே!! எத்துனை தெளிவான வசனம்!! ஒரே தேவன் என்று எத்துனை முறை வந்தாலும் திரித்துவவாதிகளின் அறிவிற்கு அது எட்ட வாய்ப்பே இல்லை!! இந்த ஒரே தேவனால் தான் சகலமும் உண்டாயிருக்கிறது என்கிறது வசனம்!! இவருக்கு அவதாரங்கள் தேவையில்லை!! ஏனென்றால் இவர் ஒருவரே சர்வவல்லமை உள்ள தேவன்!! By whom ALL things are made!!   மேலும், இயேசு கிறிஸ்து என்கிற ஒரே கர்த்தர் நமக்குண்டு என்கிறார் பவுல்!! (திரித்துவவாதிகள் இதை ஒப்புக்கொள்ளாமல் இல்லை இல்லை இவரே தான் பிதா என்பார்கள்)!! பிதாவினால் எல்லாம் உண்டாயிற்று என்றால், கிறிஸ்து மூலமாய் சகலமும் உண்டாயிருக்கிறது என்கிறது வசனம்!! Through him ALL things made!! There is a vast difference between By Him and Through Him!!

அவ‌ரால் ம‌ற்றும் அவ‌ர் மூல‌மாய் என்கிற‌து கூட‌ புரியாம‌ல் இத்துனை பெரிய‌ கூட்ட‌ம் இருக்கிற‌து!! ப‌வுல் ச‌ரியாக‌ தான் எழுதியிருக்கிறார், இந்த‌ அறிவு எல்லாரிட‌த்திலும் இல்லை என்று!! ஒரு த‌வ‌றும் கிடையாது!! ப‌வுல் கால‌த்தில் அல்ல‌, கான்ஸ்ட‌ன்டைன் முதல் இன்றைய‌ வேத‌ ப‌ண்டித‌ர்க‌ள் வ‌ரையில் இந்த‌ அறிவு இல்லை என்ப‌தற்கு "திரித்துவ‌" உப‌தேச‌ம் ஒன்றே போதும்!!

வேத‌த்தில் இல்லாத‌ ஒரு வார்த்தையை கோட்பாடாக‌ வைத்துக்கொண்டு இருக்கும் இந்த‌ திரித்துவ‌ கூட்ட‌த்தாரில் ஒருவ‌ராவ‌து இந்த‌ வ‌ச‌ன‌த்திற்கு அர்த்த‌ம் தெரியுமா!!

திரித்துவம் என்கிறது பவுலுக்கு கூட விளங்காத ஒரு இரகசியம், ஆனாலும் அநேகர் இதை தான் சத்தியம் என்று நம்புகிறார்கள்!!

Trinity is the biggest mystery which even Paul could not reveal, but then there are crores who follow Satan's biggest lie of making Jesus Christ, God the Father!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

The English word Trinity is derived from Latin Trinitas, meaning "the number three, a triad".[9] This abstract noun is formed from the adjective trinus (three each, threefold, triple),[10] as the word unitas is the abstract noun formed from unus (one).
The corresponding word in Greek is Τριάς, meaning "a set of three" or "the number three".[11]
The first recorded use of this Greek word in Christian theology (though not about the Divine Trinity) was by Theophilus of Antioch in about 170. He wrote:[12][13]
"In like manner also the three days which were before the luminaries, are types of the Trinity [Τριάδος], of God, and His Word, and His wisdom. And the fourth is the type of man, who needs light, that so there may be God, the Word, wisdom, man."[14]
Tertullian, a Latin theologian who wrote in the early 3rd century, is credited with using the words "Trinity",[15] "person" and "substance"[16] to explain that the Father, Son and Holy Spirit are "one in essence—not one in Person".[17]
About a century later, in 325, the First Council of Nicaea established the doctrine of the Trinity as orthodoxy and adopted the Nicene Creed, which described Christ as "God of God, Light of Light, very God of very God, begotten, not made, being of one substance (homoousios) with the Father".

Courtesy: Wikipedia on Trinity

325வ‌து ஆண்டு வ‌ந்த‌ ஒரு கோட்பாட்டை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ள் தான் திரித்துவ‌வாதிக‌ள்!! நிசியா தீர்மானம் கிறிஸ்துவை இப்படியாக சொல்லியது, "தேவனுக்கு தேவனாக, ஒளியின் ஒளியாக, மெய்யான தேவனாக, ஜெனிப்பிக்கப்பட்டவர், உண்டாக்ப்படவர் அல்ல, பிதாவுடன் ஒன்றானவர்"!! கவனிக்கவும், இந்த விசுவாசம் பரம்பியது வேதத்திலிருந்து இல்லை, நிசியா என்கிறா ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தினால் தான்!!

இந்த கோட்பாட்டில் குழம்பியிருக்கும் பலர், இது ஆதி அப்போஸ்தலிக்க சபையிலேயே இருந்தது என்கிறார்கள்!! இந்த விக்கிப்பீடிய தளம் வேதமாணவர்களையோ அல்லது திரித்துவவாதிகளையோ சார்ந்தது அல்ல!! 325வது வருஷம் வந்த ஒரு கோட்பாட்டிற்கே இத்துனை பேஎர் பரிந்து பேசுகிறார்கள் என்றால், எங்களை போல் சிலராவது, அப்போஸ்தலர்கள் சொன்னதை சொல்லிவிட்டு போகிறோமே!!

இன்னும்.........



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

வசனத்தை ஆறாய்ந்தாலும் சரி, வரலாற்றை ஆறாய்ந்தாலும் சரி, முடிவு ஒன்றாக தான் இருக்கும்!! பிதாவாகிய ஒரே தேவன் மற்றும் ஒரே கர்த்தராகிய  கிறிஸ்து இயேசு!!

கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.

தற்சுரூபம் என்கிற வார்த்தைக்கு அர்த்தம் பார்த்தோமென்றால்,

G1504  eikon  i-kone'
from G1503;
a likeness, i.e. (literally) statue, profile, or (figuratively) representation, resemblance.

ஒற்றுமை, உருவச்சிலை, முகக்குறிப்பு,  ஒப்பனை , பிரதிமை , தோற்றத்தில் ஒற்றுமை ஒத்திருத்தல்

இந்த‌ அர்த்த‌ங்க‌ளின் ஒரு அர்த்த‌ம் கூட‌ அவ‌ரே தான் இவ‌ர், இவ‌ரே தான் அவ‌ர் என்கிற‌தை சொல்லுவ‌தாக‌ இல்லையே!! இன்றைய‌ த‌ரிச‌ன‌க்கார‌ர்க‌ள், காரிலும், வீட்டிலும் த‌ரிச‌ன‌ங்க‌ள் பார்ப்ப‌து போல், அன்று கான்ஸ்ட‌ன்டைன் ஒரு த‌ரிச‌ன‌த்தை பார்த்து (வேத‌ வ‌ச‌ன‌ங்க‌ளை ந‌ம்பி அல்ல‌) கிறிஸ்த‌வ‌னாக‌ மாறிய‌தே சாத்தானின் ஒரு சூழ்ச்சி, இத்த‌க‌ பெரிய‌ ஒரு பொய் உப‌தேச‌மான‌ திரித்துவ‌த்தை கொண்டு வ‌ருவ‌து தான் நோக்க‌ம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நண்பர் கோல்வின் அவர்களின் வரலாற்று தொடரை ஆவலோடு எதிர்ப்பார்க்கிறேன்!! திரித்துவ உபதேசம் அப்போஸ்தலர்கள் மத்தியில் இருந்தது என்பது வேதத்தில் இல்லாதது!! ஒரு வேளை வரலாற்றில் இருந்தால் அவசியம் கான்பியுங்கள்!! மேலும் கடைசி காலம் என்றவுடன் ஏதோ 2000 வருஷங்கள் முடிந்து விட்டது, ஆகவே தான் இது கடைசி காலம் என்று என்ன வேண்டாம்!!

I பேதுரு 1:20 அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே குறிக்கப்பட்டவராயிருந்து, தமது மூலமாய் தேவன்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்காக இந்தக் கடைசிக்காலங்களில் வெளிப்பட்டார்.

I யோவான் 2:18 பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்

சகோ கோல்வின் அல்லது அவரை போல் நினைப்பவர்கள் கடைசி காலம் என்றவுடன் இது தான் என்று நினைக்க வேண்டாம்!! உங்களுக்கு முன்பே பேதுரு, யோவான் போன்றவர்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தையே கடைசி காலம் என்று சொல்லி விட்டு சென்றிருக்கிறார்கள்!! கடைசி காலம் என்றால் தேவனின் ஆதீனத்தின் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட கடைசி யுகம்!! அதாவது சுவிசேஷ யுகம்!! இந்த கடைசி காலம் என்பது அப்போஸ்தலர்கள் சுவிசேஷம் சொல்லும் காலத்திலேயே தொடங்கி விட்டது!! பல வசனங்கள் இருந்தாலும் இரண்டு வசனங்கள் தன்ந்திருக்கிறேன்!! மேலும் வரலாறு மற்றும், பிற பிரபல புத்தகங்கள் திரித்துவத்தை குறித்து என்ன சொல்லுகிறது என்று எனது ஆங்கில பதிவில் போட்டிருக்கிறேன், ஆதாரங்களுடன், பக்க எண்களுடன்!!

325ம் ஆண்டிற்கு முன் திரித்துவம் இருந்ததா என்று முதலில் நிருபியுங்கள், ஆதி சபை எதை தான் பின்பற்றினார்கள் என்று தானாகவே விளங்கி விடும்!! கான்ஸ்டன்டைன் இருந்ததும் கடைசி காலத்தில் தான் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்!!

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40017791



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

துருபதேசம் என்றால் என்னவென்று விரைவில் தெரிய தான் போகிறது!! எங்களை போன்று கொஞ்சம் பேர் சொல்லுவது துருபதேசம் கிடையாது!! மாறாக சாத்தானின் கைகளினால் பெரிய அடையாளங்கள், அற்புதங்கள், ஒன்றான மெய் தேவனை மூன்றாக பிரிப்பது போன்றவை தான், இதையே இன்று கிறிஸ்தவம் என்கிற ஒரு பெரிய கூட்டம் நம்பிக்கொண்டு இருக்கிறது!! நண்பர் கோல்வின் அவர்களே (நீங்கள் இதை வாசிப்பீர்களோ இல்லையோ, எனக்கு தெரியாது) வசனத்தை கேளுங்கள்:

ம‌த். 7:13. இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசியுங்கள்; கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழியாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். 14. ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.  15. கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள். 16. அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

இன்று அநேக‌ர் (ஏற‌குறைய‌ முழு கிறிஸ்த‌வ‌ மார்க‌ம்) திரித்துவ‌ம் என்ப‌தை ந‌ம்புகிறார்க‌ளே!! சில‌ரே அதை எதிர்க்கிறார்க‌ள்!! அநேக‌ர் என்றாலே அங்கே த‌வ‌று ந‌ட‌க்கிற‌து என்ப‌து வேத‌ம் ந‌ம‌க்கு ப‌ல‌ இட‌ங்க‌ளில் கான்பித்திருக்கிற‌து, க‌ண்க‌ள் தான் மூடியிருக்கிற‌து!! நிச்ச‌ய‌மாக‌வே வேத‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ப்ப‌டி இடுக்க‌மான‌ வாச‌ல் வ‌ழியே வெகு சில‌ரே ந‌ட‌க்க‌ பிர‌யாசிக்கிறார்க‌ள்!! யார் துருப‌தேச‌த்தை ப‌ர‌ப்பி எந்த‌ த‌ள‌ங்க‌ல் அத‌ற்கு ஒத்து போகிற‌து என்று வேத‌த்தில் வெளிச்ச‌த்தில் பாருங்க‌ள்!!

 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள் (மூல வியாதியிலேயே முக்கட்டும்... /  குத்தம் சொல்றவனுக்கு குஷ்டம் தான் பிடிக்கும்/  இரத்தம் சம்பந்தமான வியாதியினாலேயே அசிங்கமாக செத்துப்போவாய்..!/) அடேய‌ப்பா!! என்ன‌ க‌னிக‌ளோ!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆனாலும் அவர் ஏற்கனவே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரன் (ரோமர்.1:4) என்று பவுலடிகள்  கூறிவிட்டார்.//

ரோம‌ 1:4. இயேசுகிறிஸ்துவைக்குறித்துத் தேவன் தம்முடைய தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பரிசுத்த வேதாகமங்களில் முன்னே தம்முடைய சுவிசேஷத்தைப் பற்றி வாக்குத்தத்தம்பண்ணினபடி கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவானவர், 5. மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்று மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே பலமாய் ரூபிக்கப்பட்ட தேவகுமாரனுமாயிருக்கிறார்.


மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில் வந்தவர் மனுஷனே!! அவரை தேவ குமாரன் இல்லை என்று ஒரு போதும் நாங்கள் மறுத்தது கிடையாது!! நாங்கள் கேட்டு கொண்டது, 325ம் ஆண்டுக்கு முன்பு திரித்துவம் இருந்ததா? பிதாவும் குமாரனமும் ஒருவரே என்கிற கோட்பாடு இருந்ததா என்பதுதான்!!

பவுல் எழுந்திய எந்த வசனத்தை காண்பித்தாலும், கிறிஸ்து தேவனின் குமாரன் தான் என்பது தெளிவாக இருக்கிறது!! திரித்துவவாதிகளின் பார்வையில் தேவ குமாரன் பிதாவாகிவிடுகிறர்!! இது தான் இரகசியம்!? பவுலுக்கு கூட தெரியாத இரகசியம்!!

ரோம் 1:5ஐ 1:4 என்று எழுதும் போதே எந்த அளவிற்கு வசனங்களை பார்க்கிறார்கள் என்று புரிகிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Veteran Member

Status: Offline
Posts: 67
Date:

///325வ‌து ஆண்டு வ‌ந்த‌ ஒரு கோட்பாட்டை பின்ப‌ற்றுப‌வ‌ர்க‌ள் தான் திரித்துவ‌வாதிக‌ள்!! நிசியா தீர்மானம் கிறிஸ்துவை இப்படியாக சொல்லியது, "தேவனுக்கு தேவனாக, ஒளியின் ஒளியாக, மெய்யான தேவனாக, ஜெனிப்பிக்கப்பட்டவர், உண்டாக்ப்படவர் அல்ல, பிதாவுடன் ஒன்றானவர்"!! கவனிக்கவும், இந்த விசுவாசம் பரம்பியது வேதத்திலிருந்து இல்லை, நிசியா என்கிறா ஒரு இடத்தில் எடுக்கப்பட்ட ஒரு தீர்மானத்தினால் தான்!!இந்த கோட்பாட்டில் குழம்பியிருக்கும் பலர்,இது ஆதி அப்போஸ்தலிக்க சபையிலேயே இருந்தது என்கிறார்கள்!! இந்த விக்கிப்பீடிய தளம் வேதமாணவர்களையோ அல்லது திரித்துவவாதிகளையோ சார்ந்தது அல்ல!! 325வது வருஷம் வந்த ஒரு கோட்பாட்டிற்கே இத்துனை பேஎர் பரிந்து பேசுகிறார்கள் என்றால், எங்களை போல் சிலராவது, அப்போஸ்தலர்கள் சொன்னதை சொல்லிவிட்டு போகிறோமே!! ///

உங்களின் கருத்துக்கள் அனைத்தும் சரியானவையே !!!!   திரு.கொல்வின் அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே சில குழப்பமான போதனைகளை கேட்டு இருக்கிறார் போல. அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் அவர் கேட்கும் போதகம் அனைத்தும் சரியானதாக இருக்கா என்பதை வேதவசனங்கள் கொண்டு ஆராய்ந்து பார்க்க தவறிவிட்டார் போல என்றுதான் நினைக்கிறேன். இவரது போதனைகளைப் போன்றவற்றைக் கொண்டு பல விதத்தில் எங்களுடன்  வாதாடிய சிலபேரை நான் இந்த ஐரோப்பா நாட்டில் சந்தித்துள்ளேன்.  நாங்களும் விடாமுயற்சியுடன் தேவனின் கிருபையால் அவர்கள் அனைவருக்கும் சரியான சத்தியத்தை சொல்லி, அவர்களும் அதை ஏற்றுக்கொண்டு, எங்கள் சபையில் விசுவாசிகளாக இருப்பதை எங்கள் அனுபவத்துகுள்ளாக பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். திரு.கொல்வினுக்கு வேதஅறிவு இல்லை என்று நான் சொல்லவரவில்லை. தங்கள் செவிக்கு வரும் உபதேசம் சரியானதா என்று வேதம் கொண்டு ஆராய்ந்து பார்ப்பது நல்லது என்று நினைக்கிறேன். நன்றி


-- Edited by Theneer Pookal on Thursday 27th of January 2011 07:22:14 PM

-- Edited by anbu57 on Friday 28th of January 2011 04:15:19 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard