இன்று சில பல ஊழியர்கள் அல்லது தேவ மனிதர்கள் என்று உயர்ந்திருப்பவர்கள் (உயர்த்திக்கொண்டவர்கள்) அடிக்கடி பேசும் ஒரு வாக்கியம், நேற்று இரவு தேவன் என்னிடம் பேசினார், இன்று காரில் வரும் போது தேவன் என்னுடன் பேசிக்கொண்டே வந்தார், ஊழியத்தில் என்ன பேச வேண்டும் என்று தேவன் நேரடியாக வந்து சொல்லி தந்தார், இன்னும் ஒரு படி மேலே சிலர் ஒரு இருக்கை பரிசுத்த ஆவியாகிய தேவனுக்கு (இப்படி ஒரு வார்த்தை வேதத்தில் இல்லாத போதும் துனிந்து சொல்லுவார்கள்) போட்டு வைப்பார்கள்!!
இது உண்மையா, தேவன் இன்றும் மனிதர்களிடம் நேரடியாக பேசுகிறாரா? சர்வ வல்லமை உள்ள தேவன் பாவம் பெறுகி இருக்கும் இந்த பூமியில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் பேசுவாரா?
எபி 1:1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், 2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;
என்று வசனம் சொல்லுகிறது!! பழைய ஏற்பாட்டில் எழுதப்பட்டது முழுவதும் தேவன் தீர்க்கதரிசிகளுக்கு சொல்லியதே, அதன் பின் புதிய ஏற்பாட்டில் உள்ள சுவிசேஷங்கள் அதன் பின் நிருபங்கள் எழுதப்படும் வரை தேவன் தன் குமாரனான கிறிஸ்து இயேசு மூலமாக காரியங்களை தெரியப்படுத்தினார்! அவ்வளவே, இன்னும் ஒரு படி மேலே போய், பலர் இன்று சொல்லி வருவது போல், நான் இரண்டாம் வருகை மட்டும் பேசிக்கொண்டே இருப்பேன் என்றோ, சிலரை மாத்திரம் தேவ மனிதர்கள் என்று சொல்லி அவர்களிடம் மாத்திரம் பேசி வருவேன் என்று வேதத்தில் ஒரு வசனமும் இல்லையே!! இனி வேத வசனங்களை நம்புவதா, அல்லது இந்த தேவ மனிதர்களின் வார்த்தைகளை நம்புவதா!!
தேவன் தான் கொடுத்திருக்கும் வசனங்களை புரியும்ப்படியாக அவரின் வல்லமையான ஆவியை தருகிறார், அதினால் வசனங்கள் புரிய வரும், ஆனால் அந்த புரிந்துக்கொள்ளுதளை போய் தேவன் என்னிடம் என்று பேசி தேவனின் மகிமையை கொச்சைப்படுத்தலாமா!? தேவனின் மகிமை என்னவென்று தெரியாமால் இருப்பது தான் இதன் காரணம்!!
இப்படி சொல்லுபவர்கள் குறைந்தப்பட்சம் ஒரு வசனத்தையும் தங்களுக்கு ஆதரவாக காண்பிக்க முடியாமல் இருக்கிறார்களே!! ஆனால் இன்னொருவர் இருக்கிறான், அவன் இன்றைய நாள் வரையில் பேசி பலரை குழப்பி கொண்டு இருக்கிறான், அவனை தான் வேதம் இந்த பிரபஞ்சத்தின் தேவன் என்று சொல்லியிருக்கிறது!! ஆக யார் நம்மிடம் வந்து பேசுகிறது என்று ஜாக்கிரதையாக இருப்போமே!!