kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவம் Vs சீஷத்துவம்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
கிறிஸ்தவம் Vs சீஷத்துவம்


கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் (சபை பாகுப்பாடு இல்லாமல்) அனைவருமே பரலோகம் சென்று விடுவோம் என்றே நினைத்திருக்கிறார்கள்!! அடுத்து, பூமியின் ஆசீர்வாதங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதால் கிடைக்கும் என்பது அடுத்த மிக பெரிய தவறு!!

கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் அனைவருமே கிறிஸ்துவர்களா!! வேதம் ஒரே இடத்தில் "கிறிஸ்தவர்கள்" என்பதை விளக்கியிருக்கிறது,

அப்போஸ்தலர் 11:26 அவர்கள் ஒரு வருஷகாலமாய்ச் சபையோடே கூடியிருந்து, அநேக ஜனங்களுக்கு உபதேசம்பண்ணினார்கள். முதல்முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.

அடுத்த கேள்வி யார் சீஷர்கள், ஏனென்றால் சீஷர்கள் தான் "கிறிஸ்தவர்கள்"

லூக் 14:26. யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான். 27. தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.

வேதத்தில் உள்ள அப்போஸ்தலர்களும் சரி சீஷர்களும் சரி மேலே சொல்லப்பட்டது மாதிரி தான் இருந்தார்கள்!! இன்று இருக்கும் சீஷர்கள் அல்லது ஊழியர்கள் பென்னி ஹின், பால் தினகரன், போன்றவர்கள் தான்!! தன் ஜீவனை வெறுக்கும் அளவிற்கு உள்ளவனையே வேதம் சீஷன் என்று சொல்லுகிறது, வேதத்தை கைகளில் வைத்துக்கொண்டு, மனப்பாடமாக வசனம் பேசும் கிறிஸ்தவர்களோ, ஊழியர்களோ நிச்சயமாக கிடையாது என்பதை நடைமுறையை வைத்து பார்க்க முடியும்!! இதை எழுதும் நானும் நிச்சயம் அந்த சீஷத்துவத்திற்குள் இருக்கிறேனா என்பதில் சந்தேகம் தான்!!

பெரும்பாலுமான கிறிஸ்தவர்கள் (அனைவரும் தான்) சராசரியாக உலக ஆசாபாசங்களில் தான் இருக்கிறார்கள்!! இதை வாசிப்பவர்கள் மனசாட்சியுடன் வாசித்தார்கள் என்றால் என் கருத்துடன் நிச்சயமாக ஒத்துக்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்

தொடரும்................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஒரு பக்கம் பெந்தகோஸ்தே போதகர்கள் "பாடுகள்" ஏற்க வேண்டும் என்றாலும், உண்மை அப்படி இல்லை!! இன்னோரு பக்கம், "ஐசுவரிய போதனை" என்கிற செழிப்பின் உபதேசம் செய்யும் கிறிஸ்தவ போதகர்களும் உண்டு, இவர்களுக்கு எப்படி என்றால் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு பாடுகளே கிடையாது, என்பது தான் போதனையே, இவர்களுக்கு பாடுகள் என்பது கிறிஸ்துவை ஏற்றுக்கொள்பவர்களுக்கு கிடையாது என்பதே போதனை, சென்னையை சேர்ந்த  சாம் செல்லதுரை போன்றவர்கள் இன்னும் மதுரையில் இப்படி பட்ட ஒரு போதகர் இருக்கிறார், இவர்களின் போதனைகளுக்கு சீஷத்துவத்திற்கும் சம்பந்தமே கிடையாது!!

தன்னை வெறுத்து, தன் சிலுவையை சுமந்து அவருக்கு பின் செல்லாதவர்கள் சீஷர்கள் கிடையாது என்கிறது வேஎதம்!! இப்படி பட்ட சீஷர்கள் உண்மையில் இன்றும் இருக்கிறார்களா!!

செழிப்பு என்று பார்த்தால் இன்று எந்த மதத்தில் அல்லது மார்க்கத்தில் செழிப்பு இல்லை!!

சீஷனாக இருப்பவன் கிறிஸ்துவோடு சேர்ந்து ஆளுகை செய்யும் அந்தஸ்து பெறவே இந்த பூமியில் பிரயாசிக்கிறான், தேவன் அப்படியே அவனை நடத்துகிறார்! சீஷன் அல்லதாவர்களை தேவன் பாராமுகமாக விட்டு விடவில்லை!! உலகத்தில் பிறந்தவர்கள் யாவரும் தேவனால் வந்தவர்களே, ஆகையால் அனைவரும் தேவனால் தேவையான செல்வத்தை, வேளை வாய்ப்புகளை, இன்னும் உலக பிரகாரமான காரியங்களை பெறுகிறார்கள்!! இவைகளை பெற ஒருவன் கிறிஸ்தவனாக (கிறிஸ்துவின் சீஷனாக) இருக்க வேண்டும் என்பது அவசியமே இல்லை!!

கிறிஸ்துவிடம் வருவது, செழிப்பை பெற அல்ல, மாறாக சிலுவையை சுமக்கவே!! இதை ஏற்காதவன் சீஷனாக இருக்கவே முடியாது, அவர் எத்துனை பெரிய கூட்டங்களை கூட்டும் பென்னி ஹின், பால் தினகரன், மோஹன் சீ லாசரஸ், ஆலன் பால், இல்லை சாம் ஜெபதுரையாக இருந்தாலும் சரி.

தன்னிடம் இருந்த எல்லாவற்றையும் குப்பை என்று என்னி விட்டு தான் பால் கிறிஸ்துவிடம் வந்தார்!! தன்னிடம் ஒன்னும் இல்லாத நிலையில் தான் இன்றைக்கு உள்ள ஊழியர்கள் வந்து பிறகு பென்ஸ், ஹோண்டா அக்கார்ட் போன்ற வாகனங்களில் உலா வருவதில் பிரிய படுகிறார்கள்!! கேட்டல் தேவ பிள்ளைகளுக்கு (!!) கிடைக்கும் ஆசிர்வாதமாம்!! பவுல் என்கிற தேவ பிள்ளைக்கு, பேதுரு என்கிற தேவப்பிளைக்கு கிடைக்காத ஆசீர்வாதம் இன்றைய தேவ பிள்ளைகளுக்கு (!!) கிடைப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது, ஏனென்றால் இவர்கள் எந்த தேவனுடைய பிள்ளைகள் என்பதை தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும்!! இப்பிரபஞ்சக்த்தின் தேவன் என்று ஒருவன் இருக்கிறான்!!

தொடரும்..................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard