பலத்தளங்களில் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால், உடனே பாவ மன்னிப்பு ஏற்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற்று விடுவோம் என்று தொடர்ந்து எழுதுகிறார்களே!!
ஞானஸ்நானம் எடுப்பது அது வரை செய்த பாவங்களிலிருந்து மன்னிப்பும், இனி செய்யப்போகும் பாவங்களுக்கு முன்னமே பாவமன்னிப்பிற்கு அடையாளமா!? அல்லது புதிய சிருஷ்டியாக மாறி இனி தன்னை முழுவதும் கிறிஸ்துவிர்கு ஒப்புகொடுப்பதின் அடையாளமா? ஏன் பரிசுத்த ஆவியின் 'அபிஷேகம்' பெறுபவர்கள் பாவம் செய்வதில்லையா!?
ஞானஸ்நானம் எடுத்தால் தான் பரிசுத்த ஆவியின் அபிஷேகமென்றால், கொர்நலேயு வீட்டில் நடந்தது என்ன?? விதிவிளக்கா அல்லது விதி மீறுதலா?? 'அபிஷேகம்' பெற்றவர்களிடமிருந்து பதில் வருமா??
நற்கிரியைகள் செய்தால் தேவனை அறிய முடியுமென்றால், தேவன் இல்லை என்று சொல்லுபவர்களும் தான் நற்கிரியைகளில் சிறந்து விளங்குகிறார்களே!! இயேசு கிறிஸ்து சொன்ன நற்கிரியைகள்:
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
இந்த நற்கிரியைகள் எல்லா மார்கங்களிலும் இருக்கிறதே!! ஏன் தேவன் இல்லை என்று சொல்லுபவர்களும் தான் இதை செய்கிறார்களே!! ஏன் நற்கிரியைகள் செய்தும் தேவனை அறிய முடியவில்லை?? இல்லை கிறிஸ்துவை அறிந்தவர்கள் நற்கிரியைகள் செய்வது சுயநமற்று தான் செய்கிறார்களா!? பதில் உண்டா!?