சென்னை கிறிஸ்தவ போதகரின் வீட்டில் பல இலட்சம் ருபாய் தோண்டி எடுக்கப்பட்டது என்றது நேற்றைய (29/09/2010) சன் செய்திகள்!!
கிறிஸ்துவின் சீஷனாக இருக்க வேண்டும் என்றாலே தன்னிடத்தில் உள்ளது அனைத்தையும் துறந்து கிறிஸ்துவை பின் பற்ற சொல்லுகிறது வேதம்!! அப்படி என்றால் ஒரு ஊழியக்காரரின் நிலைமையை யோசித்து பாருங்கள்!! ஒரு வேதத்தின் போதகர் இப்படி மானத்தை வாங்கியிருக்கிறாரே!! இத்துனை நாட்கள் அவனை அவன் சபை மக்கள் தேவனின் நேரடியான தூதன் என்று தானே நினைத்து பணம் கொடுத்து வந்திருப்பார்கள்!! இப்படி கிறிஸ்துவின் நிழலில் இருந்துக்கொண்டு பணத்தை புதைத்து வைத்து வாழ்ந்திருக்கிறார் "போதகர்"!! கடைசிக்காலத்தில் இப்படிப்பட்டவர்கள் தான் ஊழியர்கள் என்று என்னப்படுவார்கள்!! ஆனால் இவர்களோ கள்ள போதகர்கள் மற்றும் கள்ள தீர்க்கதரிசிகளே!!