ஆலன் பாலின் பெரும்பாலான போதனைகள் ஆரோக்கிய உபதேசங்களை கொண்டது ஆகவே தான் அவர் சகோ. ஆலன் பால்'ஆ அல்லது தசமபாகம் போன்ற கருத்துக்களின் ஒற்றுமை இருப்பதாலா!!
அவரின் கள்ள போதகத்தை புரட்சிகரமான கருத்துக்கள் என்று எழுதிவருபவர் எப்படி பெரும்பாலான போதனைகள் ஆரோக்கியமான உபதேசங்களை கொண்டிருக்க முடியும்?
பெரெயன்ஸை குறித்து எழுதியிருக்கிறார்! அவருக்கு நான் தமிழ் சொல்லி தர வேண்டியதில்லை என்றே நான் நினைக்கிறேன், மேலும் ஆங்கிளம் அவருக்கு அப்பன் பெயர் தெரியாத மொழி, ஆனால் என்ன செய்வது வசனம் புரியவேண்டும் என்றால் இரண்டு மொழிகளிலும் பார்க்க வேண்டியதாக இருக்கிறதே!
கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். Who is the image of the invisible God, the firstborn of every creature:
முந்தின பேறுமானவர் (முதலில் பெற்றெடுக்கப்பட்டவர்) என்பதற்கு என்ன வியாக்கியானம் வைத்திருக்கிறார் எங்களை துருபதேசக்காரார்கள் என்று சொல்லும் பரிசுத்தவான். ஆங்கிளத்தில் முந்தின பேறுமானவருக்கு () என்று தான் கொடுத்திருக்கிறது. நேரடியாக சொல்லப்பட்டதை போதிக்காதவன் கர்த்தருக்கு அருவருப்பானவன் என்பது தான் அவரின் கருத்து!! நான் ஒன்றும் வேதத்தில் இல்லாததை போதிக்கவில்லையே!! வேதத்தில் இல்லாததை போதிப்பவர்களை தங்களை கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொண்டு மாய்மாலம் செய்து வருகிறார்கள்! அப்படிப்பட்ட துருபதேசக்காரர்களை வெளிச்சம் போட்டு காண்பிக்க இந்த தளம் நிச்சயமாக தயங்காது!! எங்களை கிறிஸ்தவர்கள் அல்ல என்று சொல்லும் அடிப்படை தகுதிக்குட இவருக்கு கிடையாது!! என்னமோ வேதத்தை கைகளில் எப்பொழுதுமே வைத்திருப்பதால் ஒருவன் கிறிஸ்தவன் அல்ல. அல்லது பாரம்பரியமாக சொல்லப்படும் கள்ள உபதேசங்களை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்வதால் அது தான் சரியான உபதேசம் என்பதும் கிடையாது. ஏன் கத்தொல்லிக்கர்களும் தான் என்னிக்கையில் அதிகமாக இருக்கிறார்கள், அப்படி என்றால் அவர்கள் சொல்லுவது சரியா!! அதிலிருந்து வந்து அவர்கள் சொல்லும் துருபதேசத்தை தான் ஆவிக்குரிய சபைகள் என்று மார் தட்டிக்கொண்டு இவர்கள் சொல்லி வருகிறார்கள், ஒரு வித்தியாசமும் இல்லை!! சில்சாம் அவர்களுக்கு நாங்கள் கிறிஸ்தவர்கள் இல்லை என்று சொல்லுவதற்கு துளியளவும் அருகதையோ தகுதியோ கிடையாது என்பதை கோவைபெரெயன்ஸ் என்கிற என் தளத்தில் பதிவு செய்கிறேன்.
வேதத்தில் இல்லாததை போதிக்கும் ஆலன் பால் இவருக்கு சகோ ஆலன் பால் ஆகலாம், ஆனால் வேதத்தில் இருப்பதை போதிப்பது இவருக்கு துருபதேசக்காரர்களாக தெரிவது சகோ அன்பு சொல்லுவது போல் என்னே சில்சாமின் நியாயம்!!
எங்களுக்கு வசனம் எல்லாம் தெரியும், தமிழும் உங்களைவிட நல்லா தெரியும் என்பதில் பெருமையில்லை, வசனம் என்ன சொல்லுகிறது என்பதை கண்களை திறந்து வைத்து பார்ப்பதில் தான் இருக்கிறது!!
ஆலன் பால் ஒரு தசமபாக உபதேசக்காரர், ஆகவே அவர் இவருக்கு சகோ ஆலன் பால் என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை!!
இக்கருத்து முழுக்க முழுக்க சில்சாமின் சொந்தக் கருத்தாகும். ஏனெனில் யாரெல்லாம் கர்த்தருக்கு அருவருப்பானவர்கள் எனும் கேள்விக்குப் பதிலாக வேதாகமத்தில் காணப்படும் எந்தவொரு வசனத்திலும், சில்சாம் கூறுகிற இவ்விரு பிரிவினர்களும் இடம்பெறவில்லை. ஆக, வேதம் நேரடியாகச் சொல்லாததைத்தான் சில்சாம் கூறியுள்ளார். ஆக, அவரது கூற்றின்படி அவருங்கூட கர்த்தருக்கு அருவருப்பானவரே.
இதே சில்சாம் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு திரியில், “கிறிஸ்துவை தெய்வமாகத் தொழுபவர்களே கிறிஸ்தவர்கள்” எனும் கருத்தை வெளியிட்டுள்ளார்.
சில்சாமின் இந்தக் கருத்தாவது வேதத்தில் நேரடியாகக் கூறப்பட்டுள்ளதா எனத் தேடிப் பார்த்தால், இக்கருத்தும் வேதத்தில் நேரடியாகக் கூறப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அவரது கருத்து தொடர்பாக வேதாகமத்தில் ஒரேயொரு வசனம் மட்டும் இடம்பெற்றுள்ளது. அது:
அப்போஸ்தலர் 11:26 முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று.
அதாவது, இயேசுவின் சீஷர்களே கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டதாக வேதவசனம் கூறுகிறது. இயேசுவின் சீஷன் என்பவன் யார்? வேதாகமம் கூறுவதென்ன?
லூக்கா 9:23 ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்.
லூக்கா 14:27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்;
யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
யோவான் 13:35 நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.
வேதம் சொல்கிறதான மேற்கூறிய செயல்களைச் செய்வதன் மூலம் இயேசுவின் சீஷனாகி, கிறிஸ்தவன் என அழைக்கப்படுவது மிகக் கடினம் என சில்சாம் கருதியதாலோ என்னவோ, இயேசுவை தெய்வமாகத் தொழுது கொள்பவனே கிறிஸ்தவன் என்று சொல்லி, மிக எளிதாக கிறிஸ்தவர்கள் பிரிவில் தன்னைச் சேர்த்துக் கொண்டார்.
ஆம், இயேசுவை தெய்வமாகத் தொழுது கொள்தல் என்பது மிக எளிதான காரியம். இவ்வுலகில் பலரும் யாரையெல்லாமோ தெய்வமாகத் தொழுகையில், இயேசுவைத் தெய்வமாகத் தொழுதல் என்பது கடினமல்ல, நிச்சயம் எளிதானதே. அந்த எளிதான காரியத்தைச் செய்யும்படி வேதாகமம் நேரடியாகச் சொல்லியிருக்கிறதா எனத் தேடிப் பார்த்தால், நான் அறிந்தவரை அப்படி ஒரு செயலைச் செய்யும்படி வேதத்தின் எந்த வசனமும் கூறியதாகத் தெரியவில்லை.
இப்படியாக, பல செயல்கள் மூலம் சில்சாம் மீண்டும் மீண்டும் கர்த்தருக்கு அருவருப்பானவராகிக் கொண்டிருக்கிறார் (அவரது சொந்தக் கூற்றின்படி).
யொவன ஜனம் தளத்தில் வரும் அவரின் கருத்துக்களும் சரி பின்னூட்டுகளும் சரி, ஒரு கிறிஸ்தவராக அல்லாமல் ஒரு மதவாதியின் கருத்துக்களாக தான் வருகிறது. கிறிஸ்துவம் என்பது வெறிக்கொண்ட ஒரு மார்கம் கிடையாது, பிற மதங்களை குறை கூறுவது கிறிஸ்தவர்களின் நோக்கம் அல்ல. ஊழியம் என்கிற பெயரில் மத வெறியர்களாக இல்லாமல் கிறிஸ்துவை பின்பற்றும் கிறிஸ்தவர்களாக இருப்பதை தான் தேவன் விரும்புவார்!! யார் அருவருப்பானவர்கள் என்பதை அவரே முடிவு செய்துக்கொள்வார், சில்சாமின் சொந்த கருத்து முடிவு செய்யாது. அவரின் எல்லா பதிவுகளும் அவரின் சொந்த கருத்திற்கு முறனாக தான் இருக்கிறது. வேதத்தில் இல்லாததை சொல்லி, இருப்பதை சொல்லாமல் விட்டு விட்டு பாரம்பரியமான கிறிஸ்துவத்தை பின்பற்றி, பிறரை கிறிஸ்தவர்கள் அல்ல என்கிற முடிவு எடுப்பது போன்றவற்றினால் யார் கர்த்தருக்கு அருவருப்பானவர் என்றும் அவர் ஒரு கிறிஸ்தவரா அல்லது மதவாதியா என்பதை அவரே அல்லது அவரின் கூட்டத்தாரே முடிவு செய்துக்கொள்ளட்டும்!!