சத்திய வசனங்களுக்கு விளக்கமளிக்க இயலாமல், வெட்டித்தனமாக வாதம் செய்து ஓடிப்போன அன்னாருக்கு (இத்தளத்திலிருந்து) இறுதி அஞ்சலி செலுத்துகிறோம். அன்னாரது பதிவுகளை அவர் இறுதித் தறுவாயில் நீக்கியிருந்தாலும் அதைப் படித்த அநேகர் அன்னாரது கோமாளித்தனத்தை அறிந்துகொண்டிருப்பர். இதே போலத்தான் கிறிஸ்துவின் வருகையின் பிரசன்னத்தினால் அறியாமை என்னும் இருட்டும் விலகி ஓடிவிடும். அந்நாள் வெகுதொலைவில் இல்லை. வாசகர்கள் முழுநேர ஊழியர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கவும். இந்த முழு நேரங்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காணிக்கையும் பாவமாகும். அதற்கு பதிலாக கஷ்டப்படும் ஒரு குடும்பத்துக்கோ, முதியோர்களுக்கோ கொடுக்கலாமே....
தன் கோடரியால் தன்னையே வெட்டிக்கொண்ட அன்னாரது ஆத்துமா அமைதியடையட்டும்
//எங்களை அதிகமாக நேசித்த D.G.S. தினகரன் ஐயா அவர்களை தேவன் தம்முடைய இராஜ்யத்திற்குள் எடுத்துக் கொண்டதை நினைக்கும்போது இன்றைக்கும் எங்கள் கண்களில் கண்ணீர் வருகிறது. //
முட்டாள்கள் தளத்தில் இவ்வாறு பதித்துள்ளனர். அதாவது டிஜிஎஸ் அய்யா வைத் தேவன் தன்னுடைய ராஜ்ஜியத்தில் எடுத்துக்கொண்டதை நினைத்து ஒரு ஊழியக்காரருக்கு கண்ணீர்வருகிறதாம். வரவேண்டியதுதான் சாத்தானின் ராஜ்ஜியமான நரகத்துக்குப் போகவேண்டிய ஆள் தேவராஜ்ஜியத்துக்குள் எப்படிப் போக முடியும். இப்ப கண்ணீர்விட்டு என்ன பயன்?
அனைவரையும் இரட்சிக்கவே கிறிஸ்து இயேசு அனைவருக்காகவும் மீட்கும் பொருளாக தன்னை ஒப்பு கொடுத்தார் என்கிற அடிப்படை ஞானம் இல்லாத "முழு நேர ஊழியர்கள்" (யார் கொடுத்த அழைப்போ!!) தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார்களே!! வேதத்தை உண்மையாக கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற என்னத்தோடு வாசித்தால் கிறிஸ்து இயேசு நமக்காக (கிறிஸ்தவர்களுக்காக அல்லது சபைக்காக) மாத்திரம் அல்ல, சர்வ லோகத்தின் பாவங்களுக்காக கிருபாதார பலியானார் என்று புரிந்துக்கொள்வார்கல், இதை நாங்கள் சொன்னால், அவர் (கிறிஸ்து இயேசு) பலியானார், ஆனால் அதில் கண்டிஷன் வைத்திருக்கிறார் என்று சொல்லி அந்த கண்டிஷன்களில் பாஸ் செய்ய வைப்பது தான் எங்கள் 'தொழில்' என்று முழு நேர ஊழியர்கள் சொல்லுகிறார்கள்!!
இந்த தளத்தில் முன்பு எழுதிய சில "ஊழியர்கள்" விசுவாசத்தில் வேற்பட்டு இருந்தாலும் "சகோதர" பாசத்தில் தான் இருக்கிறார்கள் இந்த தளத்தில் உள்ள விசுவாசத்தை கொச்சைப்படுத்தும் அளவிற்கு அவர்கள் சகோதரர்களே!! ஏதோ ஒரு ஆவியின் "அபிஷேகத்தில்" நனைந்து இருக்கிறார்கள் போல்!! போகட்டும், சகோ பாலாஜி அவர்களே!
திருத்துவம் என்கிற ஒரே வார்த்தையில் இவர்கள் பல கருத்துக்களை வைத்திருப்பதே இவர்கள் யாருக்கு ஊழியம் செய்கிறார்கள் என்று தெரியும்!! ஆனாலும் ஊழியர்களாம்!?