kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1 யோவான் 3:9


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
1 யோவான் 3:9


1 யோவான் 3:9. தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது; அவன் தேவனால் பிறந்தபடியினால் பாவஞ்செய்யமாட்டான்.

இது தவறான ஒரு மொழிபெயர்ப்பு. மொழிபெயர்ப்பை மாத்திரமே பரிசுத்த ஆவியின் வார்த்தைகள் என்று நம்புவோர் தயவு செய்து பிற மொழிப்பெயர்ப்புகளையும் பாருங்களேன்.

1 John 3:9 (King James Version)
 Whosoever is born of God doth not commit sin; for his seed remaineth in him: and he cannot sin, because he is born of God.

1 John 3:9 (New International Version)
No one who is born of God will continue to sin, because God's seed remains in him; he cannot go on sinning, because he has been born of God.

1 John 3:9 (Amplified Bible)
No one born (begotten) of God [deliberately, knowingly, and [a]habitually] practices sin, for God's nature abides in him [His principle of life, the divine sperm, remains permanently within him]; and he cannot practice sinning because he is born (begotten) of God.

இப்படி கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பை தவிர மற்ற எல்லா மொழிப்பெயர்ப்புகளிலும் மிகவும் தெளிவாக சரியாக மொழி பெயர்த்திருக்கிறர்கல். இந்த வசனம் இப்படியாக இருந்திருக்க வேண்டும்:

தேவனால் பிறந்த எவரும் பாவத்தில் நிலைத்திருக்க மாட்டான் (அல்லது தொடர்ந்து பாவம் செய்துக்கொண்டு இருக்க மாட்டார்) ஏனென்றால் தேவனின் சிந்தை அவனுக்குள் இருக்கிறது, அவன் தேவனால் பிறந்ததினால் அவன் பாவத்தில் நிலைத்திருக்க மாட்டான்.

இப்படி மொழிபெயர்க்கவேண்டிய ஒரு வசனத்தை நாங்கள் மூல பாஷையில் இருந்து மொழிபெயர்த்திருக்கிறோம் என்று ஒரு பொய்யை தந்து விட்டு, கிங் ஜேம்ஸை மொழிப்பெயர்த்திருக்கிறார்கள் நம் தமிழ் "பரிசுத்த வேதாகமத்தை" தந்த பைபிள் சொசைட்டி ஆஃப் இந்தியா.

1 யோவான் 1:8. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாயிருப்போம், சத்தியம் நமக்குள் இராது. என்று யோவானை எழுத வைத்து விட்டு, 3ம் அதிகாரத்தில் அவரையே இப்படி எழுத வைத்திருப்பது முரன்பாடாக இல்லையா. மொழிப்பெயர்ப்பை கண்மூடித்தனமாக ஏற்காமல் தெளிவு அடைவோமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:15:45 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இருக்கும் தேவ வார்த்தைகளில் ஒன்றையும் சேர்க்க வேண்டாம் என்று தான் சொல்லுகிறோமே தவிர வேதத்தை வேண்டாம் என்று சொல்லவில்லை. சபைகளில் இன்று வெளிப்படுத்தன விசேஷம் எடுக்க பயம், காரணம் அர்த்தம் தெரிந்தால் தானே அதை பிரசங்கிக்க, ஆகவே வெறுமனே அதை படித்தால் போதும், அவன் பாக்கியவான் என்று போட்டிருப்பதால் அதை படியுங்கள் என்று போதிக்கும் சபைகள் உண்டு. என்னமோ போதக ஊழிய வரம் பெற்றிருக்கிறோம் என்று இப்படி சொல்ல வெடக்க படுவதில்லையா? இன்னும் சில சபைகளில் வெளி.ஐ பயங்கரமான சம்பவங்களால் அலங்கரித்து சொல்லுவார்கள்.

வசனம் சரியாக மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிரதா அல்லது வந்தது வந்தப்படியே அதற்கு தகுந்தாற்போல் பிரசங்கிக்கலாமா என்பதில் இல்லை காரியம். நான் எடுத்துக்காட்டாக கொடுத்த வசனம் தப்பாக மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறதே, அதை நீக்க சொல்லவில்லை, சரியானதை கொடுத்து குழப்பத்தை நீக்கலாமே. ஒரே புத்தகத்தின் ஒரு அதிகாரத்தில் ஒரு கருத்தும், மற்றோரு அதிகாரத்தில் வேறு கருத்தும் இருப்பது முரன்பாடு. இத்துனை நாள் ஆவிக்குறிய வியாபாரிகள் இதை கூட கவணிக்காமல் தங்கள் தொழிலில் மும்முறமாக இருந்தார்கள். சரி வேறு மொழிப்பெயர்ப்புகளிலிருந்து தெளிவு அடையளாமே. போதிக்கும் முன் சரியாக தங்களை தயாரித்துக்கொள்ளாலாமே! நான் போதிக்கும் போது யார் என்னிடம் கேள்விகள் கேட்டு விடுவார்கள் என்கிற மமதை தானே. கற்று கொள்ள தேவை இல்லை என்கிற மேட்டிமை தானே!! எல்லாம் எனக்கு தெரியும் என்கிற அகம்பாவம் தானே!!

நான் முன்னமே எழுதியது போல் நான் எந்த குழுவையோ குழுமத்தையோ சாராதவன் என்றும் ஆகவே அதற்கு வக்காலத்து வாங்க வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை. சபைகளில் எல்லாம் சரியாக தான் நடக்கிறது, ஊழியரை குறை சொல்லக்கூடாது, வேத மொழிப்பெயர்ப்புகளில் எழுதியது எல்லாம் பரிசுத்த ஆவி தந்தது போன்ற சிந்தனைகள் முதிர்ச்சி பெற்றவனின் சிந்தை இல்லை மாறாக பால் குடிக்கும் பருவம்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:15:30 PM

__________________
"Praying for your Success"


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

பேசாமல் சபைகளில் நன்றியுணர்ச்சியையும், தேவ அன்பையும் பொங்கவைக்க வேண்டியதுதானே, மற்றவைகளை 'ஆவியானவரே' போதிக்க விட்டுவிடவேண்டியதுதானே. வேதம் எதற்கு?

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:14:44 PM

__________________
"Praying for your Success"
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard