எல்லாவற்றையும் ஆவியின் மேல் தூக்கி போட்டு விட்டால் சரியாகிவிடுமா? தேவ ஆவி குழப்பத்தை கொண்டு வரும் ஒரு ஆவியில்லை என்பதை முதலில் இந்த ஆவியின் வியாபரிகளும் அவர்களுக்கு வக்காலத்து வாங்குவோரும் புரிந்துக்கொள்ளட்டும்.
யோவான் 16:13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
இந்த ஆவி (கிறிஸ்துவின் சிந்தை) ஒருவனிடம் வருவதினால், அவனுக்கு தேவனின் புதிய திட்டம் ஒன்றும் விளக்கப்படுவதில்லை, மாறாக இயேசு கிறிஸ்து சொல்லி போன விஷயங்களையே தெரியப்படுத்தி, வரப்போகிற காரியங்களை (குறி சொல்லுதல் இல்லை, உனக்கு வேலை கிடைத்துவிடும், உனக்கு சுகம் கிடைத்து விடும், உனக்கு வீடு கிடைத்து விடும், உனக்கு பாஸ்போர்ட் கிடைத்துவிடும், விஸா கிடைத்துவிடும் போன்றவைகளை அல்ல) என்றால் ராஜியத்தை குறித்தான புரிந்துக்கொள்ளுதலை ஏற்படுத்தும் என்பதே வசனம் சொல்லுகிறது. இதை வைத்துக்கொண்டு இந்த வியாபாரிகள், தங்களிடம் தேவன் 'ஜெப கோபுரம் கட்ட சொன்னார், டீவி நடத்த சொன்னார், பெரிய கட்டிடங்கள் கட்ட சொன்னார், கல்லூரி கட்ட சொன்னார்" என்றும் ஆனால் அதற்கு காசெல்லாம் இந்த பொய்களை நம்பும் அப்பாவி கிறிஸ்தவர்களிடம் இருந்து தான் கேட்க சொன்னார் என்றும் சொல்லி ஏமாற்றும் வியாபாரிகளை 'தேவ மனிதர்கள்" என்று எந்த ஆவியை கொண்டு பேசுகிறார்களோ தெரியவில்லை!!
'உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" என்று உலக பிரகரமான மனிதர்கள் அழகாக எழுதி வைத்திருக்கிறாரே! இந்த ஆறிவு கூட "ஆவி"யை பெற்ற "தேவ மனித"ர்களுக்கு இல்லை என்றால் அவர்கள் எந்த ஆவியை பெற்றிருக்கிறார்கள் என்பது கேள்வி குறி!!
வேதம் முழுவதும் 'இரட்சிப்பு" என்கிற ஒரே கரு தான் இருக்கிறது. அந்த இரட்சிப்பின் திட்டத்தை நிறைவேற்றி சென்றவர் இயேசு கிறிஸ்து மாத்திரமே! தேவன் இனி தனி தனியாக ஒவ்வொரு நாட்டிலும் "தேவ மனித"ர்களிடம் தன் புதிது புதிதான திட்டங்களை வெளிப்படுத்த என்ன அவசியம் இருக்கிறது!! "எல்லாம் நிறைவேரிற்று" "ஒன்றையும் சேர்க்க கூடாது" போன்ற வசனங்கள் வேதத்தில் இருந்தாலும் இந்த "தேவ மனிதர்கள்"க்கு மாத்திரம் எப்படி தான் புதிது புதிதான வியாபர தந்திரங்கள் கிடைக்கிறதோ!! இது தான் வெளிப்பாடுகளா! இது போன்ற ஆவிக்குரிய வியாபார தந்திரங்களை இந்த தளம் நிச்சயமாக முகதிரையை கிழித்து காண்பித்துக்கொண்டே இருக்கும்.
"என்னை ஏன் அடித்தாய்" என்று நியாயமான கேள்வியை இயேசு கிறிஸ்து கேட்டார்! அது போல் இந்த வியாபாரிகள் செய்யும் தந்திரங்களை கேட்பதினால் அது என்னமோ ஆவிக்குரிய "தேவ மனித"ர்களை நியாயம் தீர்க்கிறது என்று இல்லை. இவர்கள் பிறர் உழைப்பில் தங்கள் வீடுகளை நிறப்புவதில் எங்களுக்கு எந்த போறாமையும் கிடையாது இந்த ஈனமான சம்பாத்தியத்தின் மேல் எங்களுக்கு ஆசையும் கிடையாது. இப்படி பிறர் உழைப்பின் உன்பது எப்படி தான் செரிக்கிறதோ!! தேவ ஆவியை (அதன் அர்த்தமே தேரியாது இந்த வியாபாரிகளுக்கு) இந்த வியாபாரிகள் நிச்சயமாக வியாபார பொருளாக தான் நடத்துகிறார்கள்!!
அடுத்து கிறிஸ்தவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் தயவு செய்து ஒரு சிலரை "தேவ மனிதர்கள்" என்று வேற் பிரிக்காதீர்கள். தேவ ஆவி அப்படி பிரிவினை கொண்டு வருவதில்லை. எல்லோரும் ஒரே ஆவியை பெற்றவர்கள் என்பது தான் வேதம் சொல்லி கொடுக்கிறது. "சாதாரன விசுவாசி" என்று தயவு செய்து உங்களையே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். இந்த வியாபாரிகளிடம் ஏமாந்து போகாதீர்கள்.
மரித்து விட்ட டீஜிஎஸ் தினகரனை குறித்து நான் விவாதிக்கவில்லை. இப்பொழுது இந்த உலகத்தில் இருப்பவர்களை தான் சொல்லுகிறேன். இல்லதவர்கலை விவாதத்திற்கு இழுப்பது அநாகரீகம். ஆனால் இன்றைய ஊழியர்களின் போக்கிற்கு அவர் ஒரு ஆரம்பம் என்பது மாத்திரம் உண்மை.
இன்று அவரை பின் பற்றிக்கொண்டு தான் அநேகர் சாதாரனமான சம்பளம் பத்தாது என்றும் பென்ஸ் காரோ, ஹோண்டா அக்கார்ட் காரோ அந்த சாதாரன வருமானத்தில் கிடைக்காது என்று தான் தாங்கள் பார்த்துக்கொண்டு இருக்கும் வேலையை ஏதோ ஊழியத்திற்காக தியாகம் செய்வது போல் பேசுகிறார்கள். சரி அவர்கள் உடல் உழைப்பினால் சம்பாதித்த பணத்தில் எல்லா சொகுசுகளையும் சேர்த்துக்கொள்ளட்டும் யார் வேண்டாம் என்கிறார்கள். நாங்கள் உங்களுக்காக ஜெபிக்கிறோம், எங்களுக்கு காணிக்கை அனுப்புங்கள், தேவன் உங்கள் அனைவரையும் என் டீவீ ஊழியத்தை தாங்க சொன்னார் போன்றவற்றை சொல்லி ஏன் ஜனங்களை மோசம் போக்க வேண்டும். ஏன் மற்றவர்களிடம் பணம் வாங்கி நாங்கள் பள்ளி பிள்ளைகளை தாங்குகிறோம் என்று பெயர் எடுத்துக்கொள்ள வேண்டும். உன் இடது கை செய்வது உன் வலது கைக்கு தெரியாமல் இருக்கட்டும் என்று வேதம் சொன்னால், இவர்கள் பிறரிடத்தில் பணம் கேட்டு தங்களை ஏன் போஸ்டர்களில் போட்டு கொள்ள வேண்டும். இது தான் கிரிஸ்தவ ஒழுக்கமா? இது தான் ஊழியமா?
"இது எங்களால் ஆனது அல்ல, இது தேவன் செய்தது" என்று ஒதுங்கும் பவுல் பேதுரு எங்கே, இதற்கு மாறாக லாரன்ஸ் என்று மதுரையில் உள்ள ஒரு ஊழியர், "நான் அநேகரை மரணத்திலிருந்து எழுப்பியிருக்கிறேன்" என்கிற சுய விளம்பரம் எங்கே? இவர்களா ஊழியர்கள்? இவர்களா ஆவியை பெற்றவர்கள்?
தேவனிடம் இருந்து இலவசமாக பெற்றதை இலவசமாகவே தரட்டுமே, அதை தானே வசனம் சொல்லுகிறது. அதற்கு மாறாக ஒரு மணி நேரத்திற்கு இவ்வுளவு, போக்கு வரத்து செலவு தனி என்று ஏன் கணக்கு போட வேண்டும். இது தான் ஊழியமா? இது தான் ஆவியை பெற்றிருக்கிறோம் என்பதா? இது ஆவிக்குரிய வியாபாரம் இல்லையா? தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்ன மனுஷக்குமாரன் எங்கே, அவரை பின் பற்றுகிறோம் என்று சொல்லும் இந்த வியாபாரிகள் எங்கே. மாட மாளிகையிலும், ஏ.சி கார்களிலும், காண்வென்ட்டில் மாத்திரமே படிக்கும் இவர்கள் குழந்தைகள் (படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, தேவன் இதற்கெல்லாம் உங்களிடம் இருந்து தான் பணம் கேட்க சொன்னார் என்று சொல்லி செய்வது அக்கிரமம் தானே!!) இவர்கள் எல்லாம் யார்? ஆவியை பெற்ற தேவ மனிதர்கள் என்று போற்றப்படுகிற இவர்கள் எந்த ஆவியை பெற்றிருக்கிறார்கள்? யார் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை தருவது.
இயேசு கிறிஸ்துவிடம் ராஜியங்களை எல்லாம் காண்பித்து, என் காலில் விழுந்து வணங்கு இதை எல்லம் உனக்கு தருகிறேன் என்று சொன்ன பிசாசின் ஆவியால் தான் இவர்கள் நடத்தப்படுகிறார்கள், ஆகவே தான் அரன்மனைகளுக்கும் கட்டிடங்களுக்கும் ஆசைப்படுகிறார்கள். கிறிஸ்தவர்கலே, இது போன்ற வியாபாரிகலை உற்சாகப்படுத்தாமல் இருந்தாலே போதும், இவர்களின் சாம்ராஜ்யங்கள் அழிந்து விடும்.
மறைந்த டிஜிஎஸ் தினகரன் ஆரம்பித்து வைத்ததைத்தான் அவரது புத்திரன் தொடர்கிறான். இயேசுவை முகமுகமாய்க் கண்டேன் என்று ரீல்விட ஆரம்பித்த தினகரன், எல்லாரையும் சுகமாக்க ஜெபித்தவர் பரிதாபமாக வியாதிப்படுக்கையில் கிடந்து இறந்ததே அவர் நம்பர் ஒன் பிராடு என்பதை நிரூபிக்கும். செத்துப்போனதால் அவர் செய்ததெல்லாம் யோக்கியமாகிவிடாது. ஒழுங்காக பிள்ளை வளர்க்கத்தெரியாதவன் அடுத்தவனுக்கு என்ன போதிப்பது....
எனக்குத்தெரிந்து எந்த வங்கிப் பணியாளரும் பென்ஸ்கார் வாங்கியதாகத் தெரியவில்லை. இயேசு அழைக்கிறார் என்ற கொள்ளைக் கூட்டம் அவர் இருந்த காலத்திலும்தான் கொள்ளையடித்துக்கொண்டிருந்தது. ஜாமக்காரன் வாசித்தால் தெரியும்.
ஆவி வியாபாரத்த்துக்கு தமிழ்நாட்டில் அஸ்திவாரம் போட்டதே "அங்கிள்"தான். தாய் எட்டடி பாய்ந்தது குட்டி 16 அடி பாய்ந்துகொண்டிருக்கிறது அதனுடைய குட்டி 16000 அடி பாயும்...
எதைத் தவிர்ப்பது எதைப் பதிப்பது என்று தெளிவான பாதையில்தான் போய்க்கொண்டிருக்கிறோம். செத்தவனைப் பத்தி எழுதினால் இவர்களுக்கென்ன கோபம் வருகிறது புரியவில்லை. புஷ்பராஜ் தினகரன் நரகத்தில்தான் இருப்பார் என்று எழுதுகிறார். நான் எவ்வளவோ மேல்...
இந்தத்தளம் இப்படித்தான் இருக்கும். கடிந்து கொண்டு புத்தி சொல்வது வேதத்தில் இல்லாமலில்லை. பென்னி ஹின் தினகரனை பிராடு என்று கூறுவது மறந்து விட்டதென்றால் இங்கு சொடுக்கவும். http://www.youtube.com/watch?v=bsfU7MxZPyc
ஒவ்வொரு பாஸ்டரும் அடுத்த பாஸ்டரை 'முடித்துக்கட்ட' எத்தனை பிரயாசப்படுகிறார்கள் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் வெளியில் "பிரைஸ்தலார்ட் பாஸ்டர்" என்று மாய்மாலம் பண்ணுவார்கள். நாங்கள் அப்படியல்ல.
ஏனென்றால் எங்களுக்கு எவன் தயவும் தேவையில்லை.
-- Edited by soulsolution on Thursday 2nd of September 2010 11:34:08 PM
chillsam wrote: //தாங்கள் குறிப்பிடுவது சகோதரன் டிஜிஎஸ் அவர்களையெனில் அனைவரும் அறிந்தவண்ணமாக அவர் தனது சொந்த திறமையினால் வங்கிப்பணியில் முன்னேறி ஒரு சிறப்பான பதவியிலிருந்து ஓய்வுபெற்றார்;//
//ஆனால் அவரது மகன் ஊழியம் என்ற பெயரில் செய்பவை முழுவதும் வியாபார நுணுக்கங்களுடன் என்பதில் மாற்று கருத்து இல்லை; காருண்யா கல்லூரி பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை;//
ஊழியம் என்ற பெயரில் பால் தினகரன் செய்கிற வியாபாரங்களுக்கு வித்திட்டவர் மட்டுமல்ல, அவற்றை தனது ஊழிய புகழ் மூலம் வளர்த்துவிட்டவரும் டிஜிஎஸ்-தான்.
காருண்யா பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லையாம்! ஏராளமான வருமானத்தை கொட்டித்தருகிற காருண்யா எனும் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்தை டிஜிஎஸ் என்ன தனது வங்கிப்பணி வருமானத்திலா உருவாக்கினார்? தேவஆசீர்வாதத்தை தருகிற சாவி என்று சொல்லி தங்கநிற சாவியை பெரும் பணமுதலாளிகளிடம் கூவிக்கூவி விற்று கிடைத்த பணத்தாலும், காருண்யாவுக்காக சிண்டிகேட் வங்கியில் வாங்கிய கோடிக்கணக்கான கடனைப் பற்றி தன் மீது பைத்தியக்காரத்தனமான பாசமும் அன்பும் வைத்துள்ள விசுவாசிகளிடமும் உலக ஆசீர்வாதத்தைப் பெறுவதற்காக காணிக்கையை அள்ளித்தர தயாராயிருக்கும் விசுவாசிகளிடமும் சொல்லி அழுது காணிக்கை என்ற பெயரில் வாங்கிய பணத்தாலும் அல்லவா காருண்யாவை உருவாக்கினார்.
வங்கி அதிகாரியான டிஜிஎஸ், தனது வங்கிப்பணி வருமானத்தில்தான் காருண்யா எனும் கோடிக்கணக்கான சொத்தை உருவாக்கினார் என்பதை டிஜிஎஸ்-க்கு பைத்தியக்காரத்தனமாக வக்கலாத்து வாங்குபவர்கள் சொல்லமுடியுமா?
ஏழை மாணவர்களுக்கென காருண்யா கல்லூரியை ஸ்தாபிக்கப்போவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்த டிஜிஎஸ், பிற தனியார் கல்லூரிகளுக்கு நிகராக தனது கல்லூரியிலும் நன்கொடை வாங்குவது உலகறிந்த விஷயம்.
இயேசு அழைக்கிறார் ஊழியத்திற்கு காணிக்கை அனுப்பினால் வருமானவரி விலக்கு கிடையாது, காருண்யாவுக்கு பணம் அனுப்பினால்தான் வருமானவைரி விலக்கு கிடைக்கும் என்று சொல்லி, ஊழியத்திற்கு சம்பந்தமில்லாத காருண்யாவுக்கு காணிக்கையை திசைதிருப்பியவர் டிஜிஎஸ்-தான் என்பது சிந்திக்க சக்தியற்றவர்களுக்கு புரியாதிருக்கலாம், ஆனால் எல்லோருக்குமல்ல.
ஊழியம் ஊழியம் என்று சொல்லி, பணம் வாங்கி பலகோடி மதிப்பு பெறும் சொத்துக்களை ஜெபக்கோபுரம் என்ற பெயரில் டிஜிஸ் உருவாக்கியுள்ளதை, சிந்தனா சக்தியற்றவர்கள் அறியாதிருக்கலாம், ஆனால் எல்லோருமல்ல.
புறத்தோற்றமே முக்கிய மூலதனமாக இருக்கும் சினிமா உலகிலுள்ளவரும் உலகப்பிரகாரமானவருமான திரு.ரஜினிகாந்த், தனது நரைமுடித் தோற்றத்தைப் பொருட்மடுத்தாமல் இருக்கையில், புறத்தோற்றம் தேவையில்லாததான தேவஊழியப் பணியைச் செய்த டிஜிஎஸ், தனது நரைமுடியை மறைத்து மாயம் பண்ணியதை கண்மூடித்தனமானவர்கள் அறியாதிருக்கலாம், ஆனால் எல்லோருமல்ல.
-- Edited by anbu57 on Friday 3rd of September 2010 03:03:18 PM
மத்தேயு 24:37-39 நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும். எப்படியெனில், ஜலப்பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள்வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண்கொண்டும் பெண்கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக்கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள்; அப்படியே மனுஷகுமாரன் வருங்காலத்திலும் நடக்கும்.
chillsam wrote: //Phi 1:18 இதனாலென்ன? வஞ்சகத்தினாலாவது, உண்மையினாலாவது, எப்படியாவது, கிறிஸ்து அறிவிக்கப்படுகிறார்; அதனால் சந்தோஷப்படுகிறேன், இன்னமும் சந்தோஷப்படுவேன்.//
டிஜிஎஸ் அவர்கள் வஞ்சகத்தினால் சுவிசேஷம் அறிவித்தாரா? அல்லது உண்மையினால் சுவிஷேம் அறிவித்தாரா?
இப்படிபட்ட ஊழியர்களுக்காகவே வசனம் இருந்தும் இவர்கள் எல்லாம் திருந்துவது போல் தெரியவில்லை!! இந்த வசனம் இன்றைய பிரபலமான ஊழியர்களுக்கு பொருந்துதா இல்லையா என்பதை மாத்திரம் சொல்லட்டும்!!
வெகுஜனத்தை கிறிஸ்துவின்பால் ஈர்க்கவில்லை இவர்கள் பால்தான் ஈர்த்தார்கள், ஈர்த்துக்கொண்டிருக்கிறார்கள். கர்த்தர் ஊழியம் செய்தே மிஞ்சியது 120பேர்தான். இவர்கள் லட்சோப லட்சம் மக்களை ஈர்ப்பது சுயலாபத்திற்காகத்தான். தினகரன் ஒரு கிழ(ஓ)நாய் அதனிடமிருந்து கற்றுக்கொண்ட தெரு(ஓ)நாய் பால்தினகரன், குட்டிகளாய் சில சொறிநாய்கள் கூட்டம்.... பாட்டுப்பாடி, டான்ஸ் ஆடி சிடி வியாபாரம், ஜெபிக்க ஒரு தொகை, கோபுரம்கட்ட ஒரு தொகை, டிவி வியாபாரத்துக்கு ஒரு பார்ட்னர். இதில் துணைக்கு இவர்களின் மனைவிமார்கள் வேறு. வெக்கங்கெட்ட ஜென்மங்கள்.....
முன்பு ஜில்லுன்னு ஒரு சந்திப்பு என்ற் விஜய் டிவி நிகழ்ச்சியில் இவாஞ்சலின் தினகரனுக்குப் பிடித்த இடம் என்ன என்ற கேள்விக்கு அந்தம்மா சொன்ன பதில் என்ன தெரியுமா? ஜெபகோபுரங்களோ, வேறு ஆன்மீகம் சார்ந்த இடங்களோ இல்லை. "ஸ்பென்சர் பிளாஸா".
தினகரன் செத்து சுண்ணாம்பாய்த்தான் போனான். அவன் பரலோகம் போய் இயேசுவுக்கே ஆலோசனை கொடுப்பதாக இவன்கள் நடத்தும் பிராடு பத்திரிக்கையில் அவன் செத்தவுடனேயே போட்டுவிட்டான்கள். மரணம்பற்றி தெரியாத மூடஜனங்களிடம் DGS Dhinakaran endowment fund என்று உடனடியாக வசூல்வேட்டை ஆரம்பித்தார்கள். பரலோக தரிசனம் என்று அவர் கடைசி புத்தகம் என்று ஒரு ரீல் புத்தகத்தையும் வெளியிட்டார்கள்.
anbu57-ன் கேள்வி: // டிஜிஎஸ் அவர்கள் வஞ்சகத்தினால் சுவிசேஷம் அறிவித்தாரா? அல்லது உண்மையினால் சுவிஷேம் அறிவித்தாரா? // chillsam-ன் பதில்: //டிஜிஎஸ் சுவிசேஷம் அறிவித்தார், உண்மையாக சுவிசேஷம் அறிவித்தார்,//
டிஜிஎஸ் உண்மையினால் சுவிசேஷம் அறிவித்தாரெனில், வஞ்சகத்தினாலும் விரோதத்தினாலும் சுவிசேஷம் அறிவித்தது யார்? அது சம்பந்தமான வசனங்களை (பிலிப்பியர் 1:16-18) chillsam மேற்கோள் காட்டியது யாருக்காக? அவ்வசனங்களை சம்பந்தமில்லாமல் இங்கு மேற்கோள் காட்டவேண்டிய அவசியமென்ன?
chillsam wrote: //நீர் என்னத்தான் சொன்னாலும் பரலோகத்தில் அவருடைய பலன் மிகுதியாகவே இருக்கும்;//
என்னதான் என எழுதுவதற்குப் பதில், என்னத்தான் என எழுதினால், அதன் அர்த்தம், என் அத்தான் என ஆகிவிடும் என்பதை அடிக்கடி பிறரது எழுத்துப்பிழை பற்றி விமர்சிக்கும் சில்சாம் அறிவாராக.
யாருக்குப் பரலோகத்தில் பலன் மிகுதியாக இருக்கும்? வேதவசனம் கூறுவதென்ன?
லூக்கா 6:22 22 மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.
மனுஷகுமாரன் நிமித்தமாக டிஜிஎஸை ஜனங்கள் பகைத்தார்களா, புறம்பாக்கினார்களா, அல்லது அவரது நாமத்தை தள்ளிவிட்டார்களா?
ஒருசிலரைத்தவிர அநேக ஜனங்கள் அவரைப் புகழ்ந்து துதிபாடி வருவதுதானே உண்மை? நாடாளும் தலைவன் முதல் எளிய குடிமகன் வரை அவரை அநேகர் அவரை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதே உண்மை.
அவரது நாமத்தை சென்னைப் பட்டணத்தின் ஒரு சாலைக்குச் சூட்டியுள்ளதிலிருந்தே, இவ்வுலகின் பெரும்பான்மையான ஜனங்களால் அவரது நாமம் தள்ளப்படவில்லை என்பதை சிறுகுழந்தை கூட அறியும். பாவம், சில்சாம் தான் அறியமாட்டார்.
ஆம், நிச்சயமாக. இவ்வுலக வாழ்வைப் பொறுத்தவரை, போனவருடைய நிலைமையைவிட என்னுடைய நிலைமை பரிதாபமானதுதான்! ஏனெனில், அவரைப் போன்று (ஊரார் பணத்தில்) சொகுசு வாழ்வை நான் வாழவில்லை. (கூறுகெட்ட) அநேக ஜனங்களால் நான் புகழப்படவில்லை, அவரது நாமத்தைப் போல் எனது நாமம் ஒரு சாலையின் பெயராக நிச்சயமாக சூடப்படபோவதில்லை. (ஊரார் பணத்தில் சேர்த்த) கோடிக்கணக்கான சொத்துக்கள் (காருண்யா பெயரிலும், ஜெபக்கோபுரம் பெயரிலும்) எனக்கு இல்லை. இப்படி அநேகம் சொல்லிக்கொண்டே போகலாம்.
-- Edited by anbu57 on Tuesday 7th of September 2010 05:02:35 AM