அப்போஸ்தலனாகிய பவுல் இப்படி பட்ட ஒரு வசனத்தை எழுதியிருந்தும், அந்த வசனத்தை இன்றும் சபைகளில் போதித்தாலும், 2000க்கும் மேற்பட்ட சபைகள் வந்து விட்டதே! இந்த சபைகள் அனைத்திலும் கருத்துவேறுபாடு, தரிசன வேறுபாடு, ஊழிய வேறுபாடு ( எனக்கு சுகமளிக்கும் ஊழியம், எனக்கு சுவிசேஷம், எனக்கு பாட்டு, எனக்கு தாளம், எனக்கு அது , எனக்கு எது) போதனை வேறுபாடு, கோட்பாடுகள் வேறுபாடு, ஊழியர்களின் நிலை வேறுபாடு என்று வசனத்திற்கு முறன்பாடாக ஒன்றாக இல்லாமல் இப்படி வேறுபாட்டுடன் தான் சபை இருக்கிறது. "லாபமான அனைத்தையும் நஷ்ட்டம் என்று கருதுகிறேன்" என்று சொன்ன பவுலின் இந்த வார்த்தைகளை மாற்றி, லாபமான அனைத்திற்கும் நாங்கள் ஒருமனப்படுவோம் என்று, 'பெரின்ப விழா" "சுவிசேஷ கூட்டங்கள்" "சுகமளிக்கும் கூட்டங்கள்" போன்ற விழாக்களை ஒன்று கூடி "பணம் பார்ப்பதில்" எகமனதுள்ளவர்களாக இருக்கிறார்கள். ஞாயிறு சபை விட்டு சபை மாறக்கூடாது என்று சொல்லும் அதே "மெய்ப்பன்" (பாஸ்டர் தான்) பெருவிழா கூட்டங்களில் மாத்திரம் கலந்துக்கொள்ள அனுமதிப்பார் (என்ன தாராள மனசு)!!
கேட்டாள் ஒரே ஆவியை பெற்றிருக்கிறோம் என்று சொல்லுகிறார்கள் ஆனால், இத்துனை வேறுபாடுகள் கொண்டிருக்கிறார்கள்! தசமபாகம் வேட்டை, தங்களை உயர்த்திக்கொள்வதில் காட்டும் ஆர்வம், விதவிதமான தரிசனங்களை சொல்லி காணிக்கை வேட்டை இவைகளில் ஒருமனப்பட்டவர்களாக இருக்கிறார்கள்!!
தேவைக்கு தகுந்தாற் போல் வசனங்களை மாத்தாமல் கோட்பாடுகளை மாற்றாமல் எங்கு எல்லாம் ஒரு சிறிய கூட்டம் கூடுகிறதோ அங்கு எல்லாம், இருவர் மூவராக இருந்தால் கூட பரவாயில்லை என்று கிறிஸ்துவிற்காக நிற்கும் இவர்கள் எங்கே, எங்கேடா காசு கிடைக்கும், உட்கார்ந்து வையிறு வளர்க்கலாம் என்று அளைந்து வசனத்தை திரிக்கும் இன்றைய ஊழியர் கூட்டம் எங்கே!