kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: TV யில் ஜெபிக்கிற ஜெபம்....


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
TV யில் ஜெபிக்கிற ஜெபம்....


தற்காலத்தில் மிகப்பிரபலமாகிவரும் ஊழியங்களில் TV ஊழியங்களுக்குத்தான் முதலிடம் என்றால் மிகையாகாது. அனேகமாக எல்லா 'பிரபல' ஊழியர்களுமே இந்த ஊடகத்தை விட்டுவைக்கவில்லை. 
இதில் உச்சகட்ட வேடிக்கை என்னவென்றால் 'தேவ செய்தி' கொடுத்துமுடித்ததும் கடைசியில் இவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்கள்தாம். அதிலும் பெயர் சொல்லி அழைப்பது, வியாதியஸ்தர்களுக்கான ஜெபம், மாணவர்கள் பரீட்சைக்கு ஜெபம், அன்னியபாஷை ஜெபம் என்று ஏகப்பட்ட வெரைட்டி ஜெபங்களை காணலாம். அதுவும் சில வேளைகளில் இவர்கள் 'SPECIAL EFFECT' கொடுப்பதற்கு "வியாதிப்பட்ட இடத்தில் உஙகள் கைகளை வைத்துக்கொள்ளுங்கள்" என்று instruction வேறு.

மூல வியாதியுடைய சகோதரர்கள் இதைக்கேட்டு மிகவும் சங்கோஜப்படுகிறார்கள். 

அது போகட்டும், இப்படிப்பட்ட ஜெபங்களுக்கு தேவன் உண்மையிலேயே பதில் தருகிறாரா? என்பதே நமது கேள்வி. தருகிறார் என்று வாதாடும் சகோதரர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். கீழ்கண்ட வரிசையில் எந்த சந்தர்ப்பத்தில் தேவன் பதில் தருவார்?


1. ஊழியர் ஜெபம் செய்யும்காட்சி படப்பிடிப்பின்போது.
2. ஊழியர் ஜெபம் செய்யும் காட்சி ஒளிபரப்பபடும்போது.
3. மறுஒளிபரப்பின் போதும்
4. எப்போதெல்லாம் குறுந்தகடு போடப்படுகிறதோ அப்போதெல்லாம்.
5. மேற்கண்ட எல்லா சமயங்களிலும்...

இதில் ஒரு "சாதுவான" தாடிவைத்த தடிமாட்டு ஊழியர் "கண்ணுங்களா, செல்லங்களா TV முன்னாடி முழங்கால் போட்டிங்கலா" என்று சொல்லிவிட்டுத்தான் ஜெபம் செய்யும்.

ஏற்கனவே பதித்ததுதான் என்றாலும் புது பார்வையாளர்கள் கவனத்திற்குக் கொண்டுவர மறுபடியும் ஒரு பதிவு.
இன்னும் "DGS அங்கிள்" டிவி யில் ஜெபிக்கிறார், அறிவுகெட்ட ஜென்மங்கள் அதையும் பார்த்து "இர்ர்ர்ர்ரங்கும் ஆண்டவரே" என்று டிவி முன்னால் ஜெபிக்கிறதுகள்.

இன்னொரு முட்டாள் எண்ணி எண்ணி ஸ்தோத்திர பலி ஒளிபரப்புகிறான். பரலோகத்தில் ஆசீர்வாதம் டிவி மூலமாய் களிப்பல்ல நகைப்பே உண்டாயிருக்கும்.

என்ன யோசிக்கிறீர்களா?

இனியாகிலும் இதுபோன்ற 'வஞ்சிக்கிற ஆவி'களால் மோசம்போகாதபடிக்கு நாமும் எச்சரிக்கையாக இருப்போம் மற‌றவர்களயும் எச்சரிப்போம்!




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Member

Status: Offline
Posts: 7
Date:

I request you not to use Harsh & sharp words about these "oozhiyargal". . Because we don't have any right or authority to call any one as fools. Let us not forget we were all foolish once. We were once in darkness. Now we've seen the great marvelous light. 2 Cor 4 : 6. We can descern from their fruits. we all are servants of God. Rev. 22 : 8,9

For forty years Moses was in Egypt. another forty years with is father in law. But only at the age of eighty God called him to lead His people. But Pharaoh was not chosen by God. Like wise all these "oozhiyargal" and their fans are yet to be called by God. Definitely many will turn away from these so called ministries and come to the Truth. Mat.23 :2 - 7. Let us not fall into the snares of Satan by passing Judgment over them. We know his tricks. 2 Cor. 2:11. But don't stop to bring the lies to limelight.





-- Edited by R K MANI on Saturday 15th of January 2011 06:42:11 PM

__________________


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தங்களின் நல்ல கருத்து வரவேற்கப்படுட்கிறது அன்பர் மணி அவர்களே!! நன்றி!!

ஆனாலும் வேத வசனங்கள் ஒருவனை கண்டித்து உணர்த்தவும் இருக்கிறதே!!

ஒரு கண்ணத்தில் அடித்தால் மறு கண்னத்தையும் காண்பிக்க சொல்லி கொடுத்த நம் கர்த்தர் இயேசு கிறிஸ்து கூட ஒருவன் அவர் கண்னத்தில் அறைந்த போது "ஏன் என்ன அடித்தாய்" என்று தான் கேட்க்கிறார்!!

பொதுவாக நாம் இவர்களின் கருத்துகளுக்கு தான் எதிரி!! ஆனாலும் சிலர் எல்லை மீறும் போது, பவுல் சொல்லுகிறபடி,

2 தீமோ 2:15. நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு. 16. சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்; 17. அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் படரும்; இமெநேயும் பிலேத்தும் அப்படிப்பட்டவர்கள்; 18. அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள். 19. ஆகிலும் தேவனுடைய உறுதியான அஸ்திபாரம் நிலைத்திருக்கிறது; கர்த்தர் தம்முடையவர்களை அறிவாரென்பதும், கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லுகிற எவனும் அநியாயத்தைவிட்டு விலகக்கடவனென்பதும், அதற்கு முத்திரையாயிருக்கிறது.

இந்த ஊழியர்கள் என்று சொல்லி பிரபலமாகும் கூட்டத்தினர், திரளான ஜனங்களை மோசம்போக்கி கொண்டிருக்கிறார்கள், வசனம் சொல்லுகிறபடி, இவர்களின் இந்த போக்கினாலே, இருள் பூமியையும் காரிருள் ஜனங்களையும் மூடும்!! ஆனாலும் தேவனின் நாள் வருகிறது, நீதியின் சூரியன் உதிக்கும் போது, அவரின் செட்டைகளினால் ஆரோக்கியம் உண்டாகி அனைவரின் கண்கள் திறக்கப்பட்டு, முக்காடை விட்டு வெளியேறுவார்கல் என்பது வேதம் நமக்கு தரும் நம்பிக்கை!!

ஆகிலும் தங்களின் மேலான கருத்தை நிச்சயமாக மனதில் வைத்து பதிவுகளை தர வேண்டுகிறேன்!! நன்றி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard