தேவ தூஷனம் செய்பவர்கள் முதலில் தேவன் யார் என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும். தேவனை நாம் காப்பாற்றவும், அவருக்கு தெரியாது, ஆனால் நாம் தான் தேவனுக்கு நல்ல பெயர் எடுத்து தருகிறோம் என்கிற மாயையில் இருக்கிறார்கள். இதற்கு சில காரணங்கள் உண்டு. இன்று சிலர் வேறு மதங்களிலிருந்து கிறிஸ்துவம் நல்லா இருக்கிறது என்று கருதி வருவது உண்டு. அதில் பலர் இப்படி தேவனை முற்றிலுமாக தெரியாமல், அவரின் தன்மைகளை அறியாமல், அறியாமையின் ஆவியில் இருந்துக்கொண்டு, தேவன் எனக்கு வெளிப்படுத்திய காரியங்கள் என்று சொல்லுபவர்கள் உண்டு,
ஐய்யோ, தேவன் நீதியுள்ளவர் ஆச்சே, அவர் எப்படி தீமையை அனுமதிக்க முடியும், ஒரு வேளை கொடுக்கப்பட்ட வசனம் தான் அவருக்கு விரோதமாக இருக்கிறது போல், அதை வேதத்தை ஆறாய்கிறவர்கள் சரியாக புரிந்துக்கொள்ளவில்லை போல், என்று சிலர் கிளம்பி, தேவனின் நாமத்தை காப்பாற்றும் வீண் படலத்தில் இறங்கியிருக்கிறார்கள். வேதத்தில் ஒரு வசனமும் (சில வசனங்கள் தேவைக்கேற்பு இருண்ட காலங்களில் கத்தோலிக்கர்களால் சேர்த்துக்கொள்ளட்டதை தவிர) வீணானது கிடையாது.
இப்படி ஒரு வசனம் இருப்பதால், இதை எழுதியவரும் நிச்சயமாக தன் சுய சித்தத்தினால் (இன்று பலர் என்னிடம் தேவன் பேசுகிறார் என்று சொல்லுபவர்கள் போல்) எழுதாமல், தேவ ஆவியின் தூண்டுதலால் தான் எழுதியிருக்கிறார். ஆனால் தேவன் யார் என்று தெரியாதவர்கள், அது எப்படி தேவன் தீமைய உண்டாக்குகிறவராக இருக்க முடியும் என்று வாதிடுகிறார்கள். இந்த வசனம் மாத்திரம் இல்லை, இதற்கு தொடர்பான இன்னும் பல வசனங்கள் நாங்கள் கொடுத்திருந்தோம், ஆனால் அது எங்களை விமர்சிப்பவர்களின் கண்களுக்கு படுவதில்லை போல். எரி நரகம், அக்கினி ஒன்றே குறியாக இருக்கும் "அன்பு நிறைந்தவர்கள்" தேவனை காப்பாற்ற கிளம்பியிருக்கிறார்கள். முதலில் தேவனின் தன்மையை தெரிந்துக்கொள்ளட்டும். வசனத்தை யார் புரிந்துக்கொள்ளவில்லை என்பது நன்றாக தெரிகிறது. நாங்கள் ஒன்றும் தேவன் தீமையை செய்கிறார் என்று சொல்லவில்லை, தேவன் தீமை படைத்து அதை அனுமதிக்கிறார் என்று சொல்கிறோம், ஏனென்றால் வேதம் அதை தான் இந்த வசனங்கள் மூலமாக சொல்லுகிறது. மற்றபடி தேவனிடத்தில் (!!) அன்றாடம் பேசுபவர்கள் வேறு அர்த்தக் வைத்திருக்கிறார்களோ!!
தேவனிடத்தில் நான் பேசுகிறேன் அல்லது தேவன் என்னிடத்தில் வந்து தினம் பேசுகிறார் வெளிப்படுத்துகிறார் என்பதை காட்டிலும் பெரிய தேவதூஷனம் ஒன்றும் இல்லை.
புதிய ஏற்பாட்டில் எதிராளியை ஏழெழுபது முறை மன்னிக்கச் சொன்ன தேவன் பழைய ஏற்பாட்டில் ஒரு மன்னிக்காத தேவனாகத்தான் தன்னைக் காண்பிக்கிறார். கல்லெறிந்து கொல்லச்சொல்வதும், கொலை செய்யப்படக் கடவன் என்பதும் பழைய ஏற்பாட்டில் வெகு சாதாரண விஷயங்கள். சங்கார தூதனை அனுப்பி தலைச்சன்களை (என்ன பாவம் செய்தார்கள்?) அழித்ததும், ஒரு பார்வோனுக்காக எகிப்து ஜனம் முழுவதையும் வாதித்ததையும் (பாவப்பட்ட ஜனங்கள்) நாம் நன்கறிவோம். இதெல்லாம் அந்த ஜனங்களுக்கு 'தீமை'யன்றி வேறென்ன?
தீமை என்று ஒன்று இருந்தால் அதன் விளைவுகளாக எது வேண்டுமானாலும் இருக்கும் என்று மனிதன் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் காரணம். வெளிச்சத்தின் மேன்மையை அறிய வேண்டுமானால் இருள் இருந்தே ஆக வேண்டும். இதைப் புரிந்து கொள்ளாத அனேகர் தாங்கள் தேவன் மேல் வரும் 'களங்கத்தை' மாற்றி தேவனையே ரட்ச்சிக்கும் மாபெரும் பணியைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் சொல்வதெல்லாம் இதுதான். God is in FULL CONTROL. இவர்கள் புரிந்து கொண்டதைப் போல ஏதோ சாத்தான் முழு வீச்சில் அவனது காரியங்களை நடத்திக்கொண்டிருப்பது போலவும்; தேவன் ஒரு கையாலாகாதவராக தான் படைத்த ஜனங்களைக் காப்பாற்றத் திராணியற்றவராகக் காண்பித்து ஒரு மாபெரும் தேவதூஷணம் செய்துகொண்டிருக்கின்றனர். இவர்களையும் தேவனே மாயைக்குக் கீழ்ப்படுத்தியிருக்கிறார் என்பது இவர்களுக்கே தெரியாது!!!
அறியாமை உள்ளவர்களை இயேசு கிறிஸ்து, "ஆவியில் எளிமை" உள்ளவர்களே என்று எல்லாம் சொன்னார், ஆனால் அகந்தை பிடித்து, தாங்கள் தான் தேவனிடம் தொடர்ப்பு வைத்திருக்கிறோம் என்கிற ஆனவத்தில் இருப்பவர்களை தான் இயேசு கிறிஸ்து, "வெள்ளை அடிக்கப்பட்ட கல்லறைகளே" "உங்கள் பிதாவாகிய சாத்தனுக்கு பிறந்தவர்கள்" போன்ற வார்த்தைகளால் அர்சித்தார். யோவான் ஒரு படி மேலே போய், 'விரியன் பாம்பின் குட்டிகளே" என்றெல்லாம் சொன்னார். பவுலோ, இந்த தேவ தூஷனத்துக்காரர்களை, "ஓநாய்கள்" என்று சொன்னார்.
எல்லாம் நிறைவேறிற்று என்று சொன்னவர் இன்னும் இவர்களை கொண்டு தன் திட்டங்களை நிறைவேற்றுகிறார் என்று சொல்லுவது அபத்தம். விளக்கம் அளிக்க முடியாமல் மழுப்பும் இவர்கள், வேதத்தை ஆராய முடியாமல், தங்களையே பவுலுக்கும் பேதுருவுக்கும் இனையானவர்கள் என்று நிருபிக்க வீணான முயற்சிகள் எடுத்து வருகிறார்கள்!
வேதத்தில் இருப்பதையே முழுசாக விளக்க முடியாத இவர்கள் வேதத்தில் தேவன் கொடுக்க மறந்து (!!) போனதை இவர்களிடம் கொடுத்து தன் திட்டங்களுக்கு இவர்களை பயன் படுத்துகிறாராம். "மனிக்தர்களால் இது கூடாதது தான், தேவனால் எல்லாம் கூடும்" என்கிற ஒரு வசனத்தை கூட இவர்கள் புரிந்துக்கொள்ளாமல் ஏதோ தங்களையே பவுல்களாகவும், பேதுருக்களாகவும் சித்தரிக்க விரும்புகிறார்கள். முழு வேதத்தையும் மனிதர்களுக்கு கொடுத்து விட்ட பிறகு இனியும் அவர் மனிதர்களிடம் பேசும்படியாக என்ன இருக்கிறது. எங்களிடம் தேவன் பேசினார் என்பதில் என்ன ஒரு பெருமை? அப்படி என்றால் மேட்டிமை நிறைந்தவர்களாக தானே தங்களை இவர்கள் காண்பிக்க விரும்புகிறார்கள். நாங்களும் சில கோட்பாடுகளை இவர்களை போல், கற்பனையாக "தேவன் தான் எங்களிடம் வந்து பேசி தந்துவிட்டு போனார்" என்று சொல்ல எவ்வுளவு தான் நேரம் எடுக்கும், ஆனால் இருதயத்தில் சுத்தம் இருந்தால் இது போன்ற பொய் பித்தட்டாங்களுக்கு இடம் கொடுக்க முடியாது. தங்களையே உயர்த்த நினைக்கும் இவர்கள் அடுத்தவர்களை குறை சொல்ல தகுதி இழந்தவர்கள்.
இப்பொழுதோ இப்பிரபஞ்சத்தில் ஆளுகை செய்கிற பிசாசின் காரியங்கள் தான் பூமியில் நடந்து வருகிறது, இது தேவன் அனுமதித்ததே. உங்களை போன்ற "பரிசுத்தவான்கள்" தேவனை காப்பாற்ற எடுக்கும் முயற்சி, தேவன் தீமையை அனுமதிப்பதில்லை என்பது. தேவன் தீமை செய்கிறவர் என்று ஒரு போதும் தூஷனமாக நாங்கள் பேசவில்லை, மாறாக தேவன் தீமையை அனுமதிக்கிறார் என்று வேத வசனங்களை எடுத்து காண்பித்தால் பதில் தர இயலாமல் ஏதேதோ எழுதி வருகிறார், "இறைவன்" தள நிர்வாகி. அவர் எங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தே ஆக வேண்டும் என்று நாங்கள் ஒன்றும் அவர் பாதத்தில் விழுந்து மன்றாடவில்லை, இது போன்ற கேள்விகளுடன் இன்று அநேகர் இருந்துக்கொண்டு இருக்கிறார்கள். தங்களிடம் தேவன் பேசுகிறார் என்கிற ஓநாய்கள், இப்படி பட்ட சந்தேகம் உடையவர்களிடம், தேவ ஊழியரை குற்றம் கூற கூடாது போன்ற மழுப்பலான பதிலால மிரட்டி விடுகிறார்கள்.
தேவன் தான் நினைத்ததை செய்து முடிப்பார் என்றும் அவர் சித்தம் நிறைவேறும் என்பது தான் நாங்கள் சொல்லுவது. ஆனால் அதற்கென்று ஒரு காலத்தை தேவன் வைத்திருக்கிறார், "உமது சித்தம் செய்யப்படுவதாக" என்று இயேசு கிறிஸ்து கற்பித்தது அந்த காலத்தை குறித்து தான். இயேசு கிறிஸ்து ஏதோ தேவனின் திடீர் திட்டம் இல்லை, மாறாக உலகம் தோற்ற முதல் இருக்கும் திட்டமே. தயவு செய்துய் தங்களை இயேசு கிறிஸ்துவிற்கோ அப்போஸ்தலர்களுக்கு ஈடாக இனையாக நினைத்தி வைத்திருக்கும் என்னங்களை முதலாவது தூக்கி எறியுங்கள். வேத புத்தகம் தானாகவே புரியவரும்.
இறைவன் தளத்தில் யாரும் கோவைபெரெயன்ஸ் தளத்தில் கேட்க்கப்படுகிற கேள்விகளுக்கு பதிலோ விமர்சனமோ தர நாங்கள் கேட்கவில்லை, ஏனென்றால் தாகம் இருக்கும் ஒருவனுக்கு தண்ணீர் கிடைக்கும் இடமும் தெரியும். ஆனால் நாங்ள் அப்படி அல்ல. தேவதூஷனம் நடக்கும் எந்த ஒரு தளத்தை கோவைபெரெயன்ஸ் தளம் கண்டிப்பாக விமர்சிக்கும் என்பதை இத்தளத்தின் நிர்வாகி என்கிற முறையில் தெரியப்படுத்துகிறேன்.
//இரண்டாவது "தேவனால் எல்லாம் முடியும்" என்று சாதிக்கும் இவர்கள் அவரால் ஒரு மனிதனிடம் "இன்றும் பேச முடியும்" என்று சொன்னால் "அது முடியாது" அப்படி சொல்வது தேவ தூஷணம் என்று சொல்கின்றனர். சர்வவல்ல தேவனை ஒரு மனிதனிடம் நினைத்த நேரத்தில் பேச முடியாதவராக சித்தரிக்கும் தேவதூஷனத்தை தங்களை அறியாமலே செய்து வருகின்றனர்.//
என்று ஏதோ தான் பெரிதாக ஏதோ சொல்லி தேவன் தன்னிடம் பேசுகிறார் என்பதை உறுதிப்படுத்த முயற்சித்துள்ளார். அதாவது தேவன் இவர்கள் போன்ற ஒரு சில 'மஹா பரிசுத்தவான்களோடு' மட்டும் பேசுவாராம். தேவன் வேதத்தில் கடைசியாக யோவானுக்கு வெளிப்படுத்தியதோடு (அதுவும் தரிசனத்தில்தான்) சரி. அதன்பின் வேதம் முழுமையடைந்துவிட்டதால் வேறு யாரோடும் அவர் "பேச" வேண்டிய அவசியமில்லை. மேலும் அதி முக்கியமான விஷயம் என்னவென்றால் பழைய ஏற்பாட்டிலோ அல்லது புதிய ஏற்பாட்டிலோ தேவன் யாரோடு என்ன பேசினார் என்பது வேதத்தில் தெள்ளத் தெளிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர தேவன் யாருடனும் எதுவும் பேசவே கிடையாது. அப்படியிருக்க இக்காலத்தில் தேவன் இது போன்ற ஆயிரக்கணக்கான முட்டாள்களிடம் "பேசி"யதை எந்த ஏற்பாட்டில் பதிவு செய்யப்போகிறார்களோ?
வேதத்தில் இல்லாத எதுவும் பொய்தான். சபைக்குத் தெரியவேண்டிய அனைத்துக் காரியங்களையும் தேவன் எழுத்துவடிவில் பதித்துவிட்டார். அதை ஆராய்ந்து பார்க்கச்சொல்லித்தான் (அப்போதுதான் உண்மை தெரியும்) என்று கட்டளையிட்டுள்ளார். புதிய ஏற்பாடு முற்றிற்று என்ற "கடைசி வசனம்" உண்மைதான். இந்த லூசுகள்தான் இன்னும் தொடரும், தேவன் என்னோடு பேசுகிறார், என்னை நரகத்துக்கு கூட்டிச்சென்றார் என்று 3D effect, 5.1 surround sound டுடன் எனக்கு பரலோக, நரக தரிசனம் காண்பித்தார் என்று பீலாவிட்டுக்கொண்டு கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தங்களை அப்போஸ்தலர்களுக்கு நிகராகக் காண்பித்துக்கொள்கிறார்கள்.
தேவன் என்னோடு பேசினார் என்று எந்தக் கொம்பன் சொன்னாலும் அவன் மஹா பாபிலோனாகிய வேசி சபையில் அங்கம் வகிக்கிறான் என்று அர்த்தம். எவ்வள்வு நெஞ்சழுத்தம் இருந்தால் கர்த்தாதி கர்த்தர் என்னுடன் நேரடியாகப் பேசினார் என்று ஒரு உலகமஹா பொய்யை தைரியமாகச் சொல்லுவார்கள். இத்தகைய கள்ளத்தீர்க்கதரிசிகளுக்குத்தான் எச்சரிக்கையாக இருங்கள் என்று வேதத்தில் மறுபடி மறுபடி வாசிக்கிறோம். இவர்கள்தான் ஓ........நாய்ய்ய்ய்ய்ய்கள். மரணத்தைப்பற்றி ஒரு மாபெரும் குழப்பத்தில் உள்ள இந்த ஓஓஓ...... நாய்களுக்கு வேதவசனமே சவுக்கடி. அந்நிய பாஷையில் ஊளையிடும் இந்த ஓநாய்கள் அதற்கு அர்த்தம் கேட்டால் சைலண்ட் ஆகிவிடுதுகள். சுகமாக்கும் ஊழியம் செய்யும் ஓநாய்கள் தன் கண்ணே குருடாகி அதற்கு கண்ணாடி போட்டுக்கொள்ளும். இருமி இருமியே செத்துப்போன சுகமாக்கும் ஊழிய ஓநாய்களை நாடறியும். எங்கள் ஊர் பிரபல சுகமாக்கும் ஓநாய் ஒன்று தனது வைத்தியத்துக்கு நானறிந்த ஹோமியோபதி மருத்துவரிடம் ரகசியமாக வரும். அந்த ஓநாய் பெயர் ஜவகர் சாமுவேல். இவனது முதல் மற்றும் இரண்டாவது மனைவிகள் இறந்தது வியாதியினால்தான். மூன்றாவதற்கு அடிபோட்டாலும் ஆச்ச்ரியமில்லை. தீர்க்கதரிசனம் சொல்லும் காமெடி ஓநாய்களும் உண்டு. கேட்பதற்கு முட்டாள்கள் இருக்கும்வரை இதுபோன்ற ஓ நாய்களுக்கும் ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யும். டி ஜி எஸ் என்ற ஓநாய் கடைசியில் வியாதிப்படுக்கையில் இருந்து பரிதாபமாக செத்துப்போனதும் அந்தச் சாவை மகன் ஓ நாய் காசாக்கியதும் யாவரும் அறிந்த ஒன்று. அலன் பால் என்ற நூதனத்திருடன் மற்றும் ஆக்ஷன் காமெடியன், ரீல் மன்னன் இவர்களையெல்லாம் மிஞ்சிவிடுவான் போல.... இதெல்லாம் போக இவர்களையெல்லாம் திட்டுவதால் தனக்குப் பேர் சேர்த்துக்கொள்ளும் அகஸ்டின் ஜெபக்குமார்போல ஸ்மார்ட் ஓநாய்களும் உண்டு. இந்த ஓநாய்களில் சில தங்களை கூசாமல் அப்.டேவிட் பிரகாசம், அப்.அகஸ்டின் ஜெபக்குமார், அப்.பால்தங்கையா என்றெல்லாம் அழைத்துக்கொள்வது வேசித்தனத்தின் உச்சம். ஆனாலும் நாம் என்னதான் எழுதினாலும் இந்த ஓஓஓ...நாய்களுக்கு சொரணைவந்து திருந்தவா போகிறது?
ஏ... கிறிஸ்தவ அப்பாவி ஜனமே சத்தியத்தை வேத வசனத்தில் மட்டும் தேடு. ஏனென்றால் எந்த மனுஷனும் பொய்யன்.....