இறைவன் என்கிற தளத்தில் நரகம் / பாதாளம் / அவியாத அக்கினி என்கிற ஒரு பதிவை பார்க்க நேர்ந்தது.
நரகம்: (HELL) Meaning: 1. the place or state of punishment of the wicked after death; the abode of evil and condemned spirits; Gehenna or Tartarus. 2. any place or state of torment or misery Hell is a place of suffering and punishment in the afterlife- Wiki
பாதாளம் (HADES) –noun 1. Classical Mythology . a. the underworld inhabited by departed souls
அவியாத அக்கினி கடல்: (GEHANNA)
NOUN- 1 Gehenna - a place where the wicked are punished after death where sinners suffer eternal punishment
என்று பதிவாகியிருந்தது. இது உண்மையா அல்லது நித்திய தண்டனை இருக்கிறது என்பதை நிறுபிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளா என்பதை பார்ப்போம்.
ஒரே எபிரேய வார்த்தையான ஷியோல் (Sheol) 31 தடவை பாதாளம் (கல்லறை, Grave) என்றும், 31 தடவை நரகம் () என்றும், 3 முறை படுகுழி (Pit) என்றும் கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்பில் இருக்கிறது. நமது கைகளில் இருக்கும் "பரிசுத்த வேதாகமம்" என்கிற வேதம் மூல பாஷையின் மொழிப்பெயர்ப்பாக அல்லாமல் கிங் ஜேம்ஸின் மொழிப்பெயர்ப்பாக இருப்பதால் அதில் உள்ள வார்த்தைகளையே மொழிப்பெயர்த்து போட்டிருக்கிறார்கள். ஷியோல் (sheol) என்கிற வார்த்தைக்கு அர்த்தம் "மறைவானது" (Hidden state) என்பது தான், ஆகவே தான் பழைய ஆங்கிளத்தில் (Hell) என்று மொழிப்பெயர்த்தார்கள், ஏனென்றால் (hell) என்றால் பழமையான ஆங்கிளத்தில் "புதைப்பது" அல்லது "மறைப்பது" என்று தான் அர்த்தம். கால போக்கில் கத்தோலிக்க போப்மார்கள், மக்களை பயப்படுத்து கிறிஸ்துவத்திற்குள் சேர்க்க, இன்று பிரபலமாக இருக்கும் "நரகம்" (hell) என்கிற அர்த்தம் மறுவியது.சற்று யோசிக்யுங்கள், அதே எபிரேய ஷியோல்க்குள் தான் யோசேப்பு போகிறார், (ஆதி. 37:35; 42:38) ஆனால் நம்மவர்கல் இந்த இடத்தில் ஷியோலை கல்லறை அல்லது பாதாளம் (ஆங்கிளத்தில் இதன் அர்த்தம் என்று தான் உள்ளது) என்று மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள். ஏனென்றால் நல்லவர்கள் நரகம் என்று மறுவிய ஷியோலுக்கு போக முடியாதே!!
அடுத்து, தீயவர்கள் செல்லும் இடம் எபிரேய ஷியோல் ஆனால் தமிழில் நரகம் (hell) என்று மாறியது. என்ன தமாஷ் இது. ஒரே வார்த்தையை நல்லோருக்கும் தீயோருக்கும் வேறு வேறு வார்த்தையாக மாறியது.
இந்த ஷியோலின் நேரடியான கிரேக்க பதம் தான் ஹேடஸ் (கல்லறை, Grave). 12 இடங்களில் கெஹென்னா (Gehenna) என்று புதிய ஏற்பாட்டில் இருக்கிறது. கெஹென்னா என்றால் இம்மோன் பள்ளத்தாக்கு (Valley of Himmon). அக்கினியில் எரித்து பலி செலுத்திய இடம் பின்பு அனாதை பினங்கள் எறிக்கப்பட, நகரத்தின் குப்பக் எறிக்கப்பட உபயோகப்படுத்தப்பட்ட பள்ளத்தாகு தான் இந்த இம்மோன் பள்ளத்தாக்கு. இந்த வார்த்தை உபயோகிக்கப்பட்ட இடம் எல்லாம் உவமைகளாகும். இதற்கும் மரணத்திற்கு பிறகு உத்தேசிக்கப்பட்டு சொல்லப்படுகிற அக்கினிக்கும் சம்பந்தமே கிடையாது. மேலும் 2 பேது 2:4ல் டார்ட்டரு (Tartaru) என்கிற வார்த்தையை நரகம் என்று மொழிப்பெயர்த்திருக்கிறார்கள். டார்ட்டரு என்றால் ஒரு இடம் இல்லை மாறாக ஒரு தன்மை தான். அதாவது பாவம் செய்த ஆவிகள் (நோவா காலத்தில் மனுஷ ரூபம் எடுத்து மனுஷ குமாரத்திகளை திருமணம் செய்த ஆவிகள்) இனியும் அப்படி செய்ய இயலாமல் இருக்கும் படியாக ஒரு இடத்தில் வைக்காமல் அவர்கள் மீண்டும் ரூபம் மாறாதபடி அவைகளை வைத்திருக்கிறார் தேவன்.
சுருக்கமாக: எபிரேய மொழியில் ஷியோல் (sheol) என்கிற ஒரே வார்த்தைக்கு பாதாளம், நரகம், படுகுழி என்று தப்பாக மொழிப்பெயர்த்தது. கிரேக்க மொழியில் ஷியோல் (sheol) என்கிற பதத்தின் நேரடி வார்த்தை (அதே அர்த்தம் கொண்ட வார்த்தை) ஹேடஸ் (hades) ஆகும். கெஹென்னா என்பது ஒரு பள்ளத்தாக்கு, அது இம்மோன் பள்ளத்தாக்கு. இன்னோரு வார்த்தை டாட்டரு, அது ஒரு இடம் இல்லை மாறாக ஒரு நிலை.
கத்தோலிக்க போப்மார்கள் செய்த அதே தவறை தான் இன்று தங்களை ஆவிக்குறியவர்கள் என்று சொல்லி வேதத்தை ஆறாயமல், வானத்தை ஆறாய்வதால் (அதாங்க, பரலோகம் நரகம் விஸிட் அடிப்பவர்கள்) வரும் குழப்பத்தின் உச்சத்தில் இருந்துக்கொண்டு, அநேகரை வஞ்சித்தும் வருகிறார்கள். வேதத்தை சரீயாக வாசித்து ஆறாய்ந்து எச்சரிக்கையாக இருப்பது நலமே!!
கொடுக்கப்பட்ட அர்த்தங்கள் அனைத்தும் உலக பிரகாரமான அர்த்தங்களே அன்றி சரியான அர்த்தங்கள் கிடையாது. இந்த அர்த்தங்களை வைத்து தான் பரலோகம் நரகம் போன்றவற்றை கான (heaven hell visitations) முடிகிறது போல். இப்படிப்பட்ட உலக பிரகாரமான அர்த்தங்களை இன்று ஆவிக்குறிய சபைகள் தவறான சபை என்று சொல்லும் கத்தோலிக்க சபை தான். இந்த தவறான சபையில் பிறந்த இவற்றை மாத்திரம் எப்படி தான் இன்று ஆவிக்குறிய சபை நண்பர்கள் ஏடுத்து பிரசிங்க்கிறார்களோ!! தவறான சபையின் போதனைகள் இப்பொழுது இவர்களுக்கு சுகமாக இருக்கிறதோ. இருண்ட காலத்தில் (dark ages during papal church) வேதத்தை வாசிக்க கொடுக்காமல் இந்த போப் சர்வாதிகாரியும் அவர்களை பின் பற்றியவர்களும் கொடுத்த அக்கிரமான அர்த்தங்களை தான் இறைவன் தளத்தில் பதிவாகியிருக்கிறது.
இப்படி பட்ட தவறான அர்த்தங்களை கொண்டு தேவ தூஷனம் செய்ய வேண்டாம் என்றும், தப்பான அர்த்தங்களை வைத்துக்கொண்டு இன்னும் அநேகர் பரலோக நரக விஸிட் அடிக்க கிளம்பி விட வேண்டாம். கல்லறை என்கிற ஒரு வார்த்தை மறுவி காலப்போக்கில் மரித்த பிறகு கிடைக்கும் தண்டனைக்கு உறித்தான இடம் என்பது எத்துனை அபத்தமான அர்த்தமாகும்.
II தெசலோனிக்கேயர் 2:12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.
இது தான் நடந்துக்கொண்டு இருக்கிறது. உண்மையான அர்த்தத்தை விட்டு விட்டு பொய்யான ஒரு அர்த்தம் அதுவும் தப்பான சபை என்று முத்திரைக்குத்தப்பட்ட சபையிலுர்ந்து வந்த அர்த்தங்களை வைத்து போதிப்பது அந்த சபையின் தப்பிதங்களை போதிப்பது தான். போய்யான ஒரு சபை சொன்ன அர்த்தங்களை அப்படியே எந்த ஒரு ஆராய்சியின்றி ஏற்றுக்கொண்டு அதை விசுவசித்து அதிலே சஞ்சரித்து பல புதுமையான விளக்கங்கள் வெளிவருவதே, தேவன் கொடிய வஞ்சகத்தை அனுப்பியதால் தான்!!
இனியும் தூக்கம் கலைந்து உற்சகமாய் தேவனின் வார்த்தைகளை தேவனின் பார்வையில் பார்த்து உன்னதபுத்தகமான வேதத்தை தேவனின் மீட்பின் திட்டத்தை நினைத்து கொண்டாடுவோம். அவரை நரபலி கேட்கிற ஒரு தேவனாக கருதாமல் அவரின் இயல்பு வேதத்திலிருந்து புரிந்துக்கொள்வோம்.!!
பாதாளத்தின் பொருள் என்னவென்று கேட்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக "பாதாளச்சாக்கடை" என்றால் என்ன? தீ எரிந்துக்கொண்டு அதில் ஒடும் சாக்கடையா/ இல்லை, இல்லை. மாறாக வெளியில் தெரியாமல் பூமியின் மேற்பரப்பில் இல்லாமல் சற்றே ஆழமான ஒரு இடம். அது கண்களுக்கு தெரியும் ஒரு இடமே அன்றி ஏதோ கற்பனையிலும் கதைகளிலும் வரும் இடம் இல்லை. வேதத்தில் மூல பாஷையில் பயன்படுத்தப்பட்ட ஷியோல் என்பதற்கு பாதாளம் சரியான மொழிப்பெயர்ப்பு தான், ஆனால் தேவனின் பெயரை சொல்லி அது ஏதோ பயங்கரமான இடம் போல் சொல்லி அநேகர் ஏமாற்றி வருகிறார்கள். இது ஒன்றும் இல்லாததை ஆறாய்ந்து எழுதியது கிடையாது. மறைபொருள் என்றால் என்னவென்று முதலில் தெரிந்துக்கொள்ளுங்கள்!! பாதாளம் என்று ஒரு வார்த்தையை வைத்து அதற்கு தேவன் வேறு ஒரு அர்த்தத்தை வைத்துக்கொண்டு அது ஒரு சிலருக்கு மாத்திரம் வெளிப்படுத்துவேன் என்று சொல்லுபவர் அல்ல. பாதாளம் என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும். தங்களை மாத்திரம் ஏதோ விசேஷமானவர்கள் என்று நினைப்பவர்கள் தான் அதற்கு புதுபுது அர்த்தங்கள் கொண்டு ஏமாற்று வேலையை செய்து வருகிறார்கள்.
தீர்க்கதரிசனங்கள் ஒரு போதும் மனுஷனின் யோசனையால் வருவதில்லை என்பது சரி தான், அதற்காக வேதத்தில் உபயோகபொபடுத்தும் வார்த்தைகளின் அர்த்தம் கூட ஏதோ ஜீம்பூம்பா செய்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. தேவன் ஒரு போதும் குழப்பத்தின் ஆவியை தரமாட்டார். அவரின் வார்த்தைகளும் அப்படியே. அதை புரிந்துக்கொள்ளுதலில் தான் விஷயமே இருக்கிறது. பாதாளம் என்கிற கல்லறையை சாதாரனமாக எடுத்துக்கொள்ளாமல் அது எதோ ஒரு பயங்கரமான இடம் போல் பாவித்து யோசித்து அதையே இரவும் பகலும் மனதில் தேக்கி வைத்தால் அதன் படியே தான் கனவுகள் வரும், அதை ஏதோ தேவன் தருகிற வெளிப்பாடு என்று அநேகர் ஏமாற்றி வருகிறார்கள். ஏன் தங்களை மாத்திரம் ஏதோ விசேஷ ஆள் என்று என்னுகிறார்களோ இந்த ஊழியர் கூட்டம் என்று புரியாத புதிராக இருக்கிறது. எல்லாம் நிறைவேறிற்று, இனி ஒன்றும் சேர்க்க வேண்டாம், ஒன்ரும் குறைக்க வேண்டாம் என்று வேதத்தில் எழுதியிருந்தாலும், இல்லை இல்லை, தேவன் வேதத்தில் சொல்லாதது இன்னும் நிறைய இருக்கிறது, அதை தான் தேவன் இப்பொழுது என்னிடத்தில் வெளிப்படுத்துகிறார் என்று இன்னும் எத்துனை பேர் தான் இந்த ஏமாற்று வேலையை செய்வார்களோ!!
நாங்கள் ஒன்றும் தேவனை ஆராயவில்லை, மாறாக அவர் தந்திருக்கும், அவரே ஆராய்ந்து பார்க்க சொன்ன வார்த்தைகளை தான் ஆராய்கிறோம். தேவனை நிச்சயமாக ஆராயும் அளவிற்கு அறிவு இல்லை தான், ஆனால் அவர் தரும் வெளிச்சத்தில் அவரின் வார்த்தைகலை ஆராய்வது சிறந்ததே!! ஏதோ ஒரு மாயாஜாலம் போல் இது எனக்கு மட்டும் தான் வெளிப்படுத்தினார் என்று சொல்லுவதை காட்டிலும், அவர் தந்திருக்கும் வார்த்தையை அர்த்தப்பூர்வமாக தெரிந்துக்கொள்வதில் எந்த தப்பும் இல்லை. மாயாஜாலத்திற்கு இது எவ்வுளவோ மேல்!!