ப்லெஸிங் டீ.வி. என்கிற தொலைக்காட்சியின் சொந்தக்காரரும் பிரபலமான ஊழியக்காரருமான (!!) ஆலன் பவுல் என்கிறவர் எப்படி வேதத்தை புறட்டி மக்களை பயபடுத்தி வருகிறார் என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டு:
யூதா: 7. அப்படியே சோதோம் கொமோரா பட்டணத்தார்களும், அவைகளைச் சூழ்ந்த பட்டணத்தார்களும், அவர்களைப் போல் விபசாரம்பண்ணி, அந்நிய மாம்சத்தைத் தொடர்ந்து, நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைந்து, திருஷ்டாந்தமாக வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
நித்திய அக்கினியின் ஆக்கிணையை அடைந்து என்கிற இந்த புதியை மாத்திரம் பிடித்துக்கொண்டு அவரின் விரலை நீட்டி எச்சரிக்கிறார், எப்படி என்றால், "நித்திய அக்கினியின் ஆக்கினையை அடைவார்கள்" என்று. எப்படி துனிச்சலாக வேதத்தை புறட்டி, வேதத்தை கைகளில் வைத்தும் அதை ஆராய மறுக்கும் மக்களை பயமுறுத்தி வருகிறார் இந்த பிரபலமான (!!) ஊழியர் (??).
இவரின் பிற வெளிப்பாடுகள் (தேவன் இவருக்கு சொன்னதாம்)
1. 12 மாதங்கள் தசமபாகம் தந்து தேவனை சோதித்து பார்கலாமாம், அப்படி நண்மை ஏதும் நடக்கவில்லை என்றால் 13ம் மாதத்திலிருந்து நிறுத்திக்கொள்ளலாமாம்!!
தேவனையே சோதிக்க இவரிடம் தேவனே சொன்னாராம்!! தசமபாகத்தை வெறித்தனமாக பிரசங்கம் செய்பவர் இவர். யூதனுக்கு நியாயப்பிரமான சட்டமான தசமபாகத்தை இவரை போல் உள்ள நவீன ஊழியர்கள் கிறிஸ்தவர்களுக்குள் ஏன் தான் இதை புகுத்துகிறார்களோ!!