ஆகா, நம்ம தேவ மனிதர்கள் கூட்டம் சாதாரன விசுவாசிகளை எப்படி எல்லாம் வேற் பிரித்து வைத்திருக்கிறார்கள். இந்த சாதாரன விசுவாசிகளிடமே காசை வாங்கி காரில் அலையும், பங்களா கட்டி வாழும் இந்த தேவ மனிதர்கள் சற்றும் தேவனுக்கு அஞ்சாதவர்களாக இருக்கிறார்களே!! இவர்கள் இந்த சாதரன விசுவாசிகளை ஊழியக்காரனை(!!??) கேள்வி கேட்க கூடாது, இல்லாட்டி நரகம் தான் போன்ற் வாக்குறுதிகளை தந்து மிரட்டி வைத்திருப்பதை நான் அறிவேன்.ஒரே சபைக்கு சென்று அல்லது ஒரே கன்வென்ஷன் (திறந்த வெளி ஏமாற்று) போன்றவற்றில் கலந்து, ஒரே ஆவியை பெறுகிறோம் என்று சொல்லி அது என்ன நீ சாதாரன விசுவாசி நான் மட்டும் தேவ மனிதன். இந்த தேவ மனிதர்கள் எந்த ஆகாயத்திலிருந்து குதித்து வந்தார்களாம் அல்லது எந்த தேவனுக்கு ஊழியர்களாக இப்படி பிதற்றிக்கொண்டு இருக்கிறார்கள். சில குறி சொல்லுதலினால் பிரபலமாகி தங்களையே அந்த தேவ மனிதர்கள் என்கிற ஸ்தானத்திற்கு உயர்த்துவதில்; இந்த தேவ மனிதர்கள் சற்றும் சலைப்பதில்லை. நகரம் முழுவதும் தங்கள் புகைப்படத்துடன் குடிய போஸ்டர்கள், குறும் தகடில் பாடல்கள் வெளியிட்டால், அதில் தங்களின் முழு உருவம் பதிந்த புகைப்படம், தங்களை மேன்மை படுத்திக்கொள்வதில் இவர்கள் காட்டும் அக்கறை இருக்கிறதே!!
கவர்மென்ட் உதியோகத்தில் இருந்தால் அதிகபட்சமாக ஒரு ஸ்கூட்டரோ அல்லது ஒரு பைக்கோ தான் வாங்கி சுற்ற முடியும், இப்படி தேவ மனிதர்கள் என்கிற போர்வையில் வந்தால் "ஹோண்டா அக்கார்ட்" போன்ற பல லட்சம் மதிப்புள்ள வாகனங்களில் உல்லாசமாக பல நாடுகளுக்கு சுற்று பயனம் போய் வரலாமே, இந்த சொகுசுகளை சம்பாதிப்பதே இந்த சோ கால்ட் சாதாரன விசுவாசிகளிடமிருந்து தான் என்று சற்று கூட நினைத்துப்பார்க்காத இந்த கூட்டம் தேவமனிதர்களா!?
கிறிஸ்துவிற்குள் ஒருவன் வந்தால் அவன் புது சிருஷ்டியாகிறான் என்பதை தான் வேதம் சொல்லுகிறதே தவிர அவன் தேவ மனிதனும், அவனை பின்பற்றுபவர்கள் சாதாரன விசுவாசிகள் என்றும் வேதம் வேர்பிரிக்கவில்லையே!! இந்த தேவ மனிதர்கள் கூட்டம் பெறுக உதவுவதே இந்த தங்களை அளவிற்கு அதிகமாக தாழ்த்தும் இந்த சாதாரன விசுவாசிகள் கூட்டம் தான்.
கிறிஸ்துவை பின் பற்ற நினைக்கும் கிறிஸ்தவர்களே, முதலில் நான் சாதாரன விசுவாசி என்றும் அவர் பெரிய தேவ மனிதன் என்கிற பாகுபாடை நீக்கி விடுங்கள், கிறிஸ்துவிற்குள் அனைவரும் சமமே! உங்கள் உழைப்பினால் வரும் பலன் தேவன் உங்களை ஆசிர்வதிப்பதினால் தானே அன்றி இந்த தேவ மனிதர்களின் ஜெபத்தினால் அல்ல! நல்லோர் மேலும் தீயோர் மேலும் ஒரே மழையை வருஷிக்கச்செயும் நம் தேவன் நிச்சயமாக ஒருவனை தேவ மனிதன் என்றும் ஒருவனை சாதாரன விசுவாசிகள் என்றும் பார்க்க மாட்டார். அவரின் பார்வையில் கிறிஸ்துவை பின்பற்றுகிறவர்கள் அனைவருமே சீஷர்கள் தான்!!
சாதாரண விசுவாசி என்பதை ஆங்கிலத்தில் "இவர் எங்கள் Church Believer" என்று பாஸ்டர்மார்கள் அறிமுகப்படுத்துவது நாம் அறிந்ததே. ஊழிய "அழைப்பு" பெற்று முழுநேர திருடர்களாக இருக்கும் இவர்கள் அடிக்கும் லூட்டிக்கு அளவே கிடையாது. தேவன் இவர்களிடம் மட்டும் தினந்தோறும் பேசுவார், முக்கியமாக சனிக்கிழமை இரவு அதிகமாக பேசுவார். இவர் அடுத்தநாள் "செய்தி" தரவேண்டுமல்லவா? அதுவும் கேடுகெட்ட ஜென்மங்கள் அதை "தேவ செய்தி கொடுப்பவர்" என்று விளம்பரம் செய்வார்கள். இந்தத் திருட்டுக்கும்பலுக்கு மட்டும் தேவன் ஸ்பெஷல் அப்பாயின்ட்மென்ட் கொடுத்து செய்தி கொடுப்பார். அறிவுகெட்ட சாதாரண விசுவாசி எனப்படும் கூட்டம் எதிர்த்துக் கேள்வி கேட்கத் துணிவதில்லை. ஆடுகள் என்றாலே மஞ்சள் நீராட்டி பலிக்குத் தலை ஆட்ட வேண்டியதுதான். ஆமேன் அல்லேலூயா? என்று. கேப்பையில் நெய் வடிகிறது என்றால் கேட்பவன் புத்தி எங்கே போனது. ஏமாறும் சாதாரண விசுவாசிகள் இருக்கும்வரை இந்த முழுநேர, அரைநேரங்களுக்குக் கொண்டாட்டம்தான். ம்ம்ம்ம் இன்னும் கொஞ்சகாலம்தான்.......