kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!!


எபி. 1:1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,

2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;"

பிதாவாகிய‌ தேவ‌ன் மூல‌மாக‌ வ‌ந்த‌ வெளிப்பாடுக‌ளை ப‌ழைய‌ ஏற்பாட்டு தீர்க்க‌த‌ரிசிக‌ள் ப‌ரிசுத்த‌ ஆவியின் துனையால் த‌ன் சொந்த‌ புத்தியை உப‌யோகிக்காம‌ல் எழுதினார்க‌ள், அப்ப‌டியே அவ‌ரின் குமார‌னான‌ இயேசு கிறிஸ்துவின் மூல‌மாக‌ திருவுள‌ம்ப‌ற்றிய‌ தேவ‌ன் அப்போஸ்த‌ல‌ர் மூல‌மாக‌ அதை எழுத்து வ‌டிவ‌ம் கொடுக்க‌ அந்த‌ ப‌ரிசுத்த‌ ஆவியை த‌ந்த‌ருளினார். ஆக‌ இவ‌ர்க‌ள் மூல‌மாக‌ ந‌ம‌க்கு இன்று வாசிக்கும் வேத‌ம் கிடைத்த‌து, அதை எழுதுவத‌ற்கு அவ‌ர்க‌ளிட‌ம் ச‌ரியான‌ காகித‌ம் இல்லை, ஆனாலும் அவ‌ர்க‌ள் சிந்திக்க‌வோ, எதையும் த‌ட‌ங்க‌ளாக‌ நினைக்க‌வில்லை, அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணியை சிற‌ப்பாக‌ செய்தார்க‌ள்!

இன்று க‌ள்ள‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் தோன்றி, தேவ‌ன் த‌ந்த‌ வெளிப்பாடு என்று ப‌ல‌தை சொல்லுகிறார்க‌ள்! வேத‌த்தில் இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ள் என்றும் சொல்லுகிறார்க‌ள், ஆனால் தேவ‌ன் த‌ந்த‌ வெளிப்பாடு தான் என்றும் சொல்லுகிறார்க‌ள். இவ‌ர்க‌ள் எந்த‌ ஆவியில் இந்த‌ வெளிப்பாடுக‌ளை பெறுகிறார்க‌ள் என்று தெரிய‌வில்லை. மெய்யாக‌வே தேவ‌னிட‌த்திலிருந்து தான் வ‌ருகிற‌து என்றால், எழுத்து வ‌டிவ‌த்தில் கொண்டு வ‌ர‌ அப்ப‌டி என்ன‌ த‌ட‌ங்க‌ள் என்று புரிய‌வில்லை. அப்போஸ்த‌ல‌ர்க‌ள் கால‌த்தில் ப‌ழைய‌ ஏற்பாட்டு கால‌த்து தீர்க்க‌த‌ரிசிக‌ளிட‌ம் இன்றைய‌ கால‌த்து வ‌ச‌திக‌ள் இல்லாம‌ல் இருந்தும் அவ‌ர்க‌ள் தெளிவாக‌ தேவ‌னின் திட்ட‌ங்க‌ளை எழுதியிருக்கிறார்க‌ளே! இன்று நாம் ந‌ம் யோச‌னைக‌ளை போட்டு க‌ச‌க்குவ‌தால் ஏற்ப‌டும் க‌ண‌வுக‌ள் தேவ‌ன் த‌ந்த‌ வெளிப்பாடு என்று ந‌ம்புவ‌தால் ஏற்ப‌டும் குழ‌ப்ப‌ம் தான் அதிக‌ம், குழ‌ம்புவ‌தும் அதிக‌ம், குழ‌ப்புவ‌தும் அதிக‌ம்.

இன்று அநேக‌ர் இப்ப‌டி தோன்றி கிறிஸ்த‌வ‌ம் சொல்லாத‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை சொல்லி இது தேவ‌னிட‌த்திலிருந்து வ‌ந்த‌து என்று சொல்லுவ‌தில் ச‌ற்றும் அச்ச‌ம் கொள்வ‌தில்லை. தேவ‌னின் மெய்யான‌ வார்த்தைக‌ள் வேத‌த்தில் மாத்திர‌மே. அவ‌ரின் திட்ட‌ம் அதில் தெளிவாக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அதே வேத‌த்தில் தான் இது போன்ற‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ளும் வ‌ருவார்க‌ள், விசுவாசிக்கிற‌வ‌ர்க‌ளையே ஏமாற்றுவார்க‌ள் அவ‌ர்க‌ளுக்கு எச்ச‌ரிக்கையாக இருங்க‌ள் என்று இருக்கிற‌து. இந்த‌ வேத‌த்தை தெளிவாக‌ வாசித்தாலே இது போன்ற‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ளிட‌ம் ஜ‌ன‌ங்க‌ள் எச்ச‌ரிக்கையாகி விடுவார்க‌ள்!! வேத‌த்தின் க‌டைசி புத்த‌க‌த்திலேயே, இத்துட‌ன் எதையும் சேர்க்க‌ கூடாது என்றும், எடுக்க‌வும் கூடாது என்று போட்டு இருந்தும், இதை எல்லாம் எழுதி கொடுத்த‌ தேவ‌ன், இந்த‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ள் (அப்போத‌ல‌ர்க‌ள் என்று இவ‌ர்க‌ளை சொல்ல‌ கூட‌ க‌ஷ்ட்ட‌மாக‌ இருக்கிற‌து) மூல‌மாக‌ அவ‌ரே அவ‌ர் எழுதிய‌திற்கு மாறாக‌ இவ‌ர்க‌ள் மூல‌மாக‌ புதிய‌ வெளிப்பாடுக‌ளை த‌ருவாரா? இந்த‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ளை ந‌ம்புவோர் வேத‌த்தை வாசித்து இவ‌ர்க‌ளின் கோமாளித்த‌ன‌த்திற்கு முற்று புள்ளி வைய்யுங்க‌ள்!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது:......" வெளி22:18
இந்த வசனத்தை தியானித்தாலே விஷயம் புரியும், "தீர்க்கதரிசனங்களைக் கேட்கிற" என்றால் இவைகள் எல்லாம் எனக்கு தேவன் வெளிப்படுத்தினார் என்று கூறும் கோமாளிகளை நம்பவேண்டாம் என்றுதான் எச்சரிக்கிறார். "வாசிக்கிற யாவருக்கும்" என்றிருந்தால் இதில் உள்ள மொழியாக்கக் குளறுபடிகளை கருத்தில் கொள்ளலாம். "கேட்கிற" என்றிருப்பதால் இதை வியாக்கியானம் செய்பவர்கள் எதையாகிலும் "கூட்டி" போதித்தால்... என்றுதான் எண்ணவேண்டும். சகோதரர் பதித்தது போல "அப்போஸ்தலனாகிய டேவிட் பிரகாசத்துக்கு வெளிப்படுத்தின விசேஷம்", "அப். பால்தங்கையாவுக்கு வெளிப்படுத்தின விசேஷம்", "பால் தினகரன் காருண்யாவிலுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதிய நிருபம்" என்றெல்லாம் எழுத்துப்பூர்வமாக சேர்த்துக்கொள்ளலாமே!



-- Edited by soulsolution on Sunday 4th of July 2010 10:06:58 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

மிகமுக்கியமானதொரு பதிவைத் தந்த சகோ.பெரியன்ஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

அவரது பதிவிலுள்ள எழுத்துப்பிழை மற்றும் வார்த்தை அமைப்பு பிழை காரணமாக, அவரது பதிவைப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் ஒருசிலருக்கு சிரமமாக இருக்கலாம். எனவே அப்பதிவை ஓரளவு திருத்தித் தந்துள்ளேன்.

திருத்தப்பட்ட பதிவு:

எபிரெயர் 1:1. பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன்,

2. இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம்பற்றினார்;


பிதாவாகிய‌ தேவ‌ன் மூல‌மாக‌ வ‌ந்த‌ வெளிப்பாடுக‌ளை ப‌ழைய‌ ஏற்பாட்டு தீர்க்க‌த‌ரிசிக‌ள் த‌ங்கள் சொந்த‌ புத்தியை உப‌யோகிக்காம‌ல், ப‌ரிசுத்த‌ ஆவியின் துணையால் எழுதினார்க‌ள், அப்ப‌டியே அவ‌ரின் குமார‌னான‌ இயேசு கிறிஸ்துவின் மூல‌மாக‌ திருவுள‌ம்ப‌ற்றிய‌ தேவ‌ன், அப்போஸ்த‌ல‌ர் மூல‌மாக‌ அதை எழுத்து வ‌டிவ‌ம் கொடுக்கும்படி, அதே ப‌ரிசுத்த‌ ஆவியை த‌ந்த‌ருளினார். இப்படியாக‌ அவ‌ர்க‌ள் மூல‌ம் நாம் இன்று வாசிக்கிற வேத‌ம் நமக்குக் கிடைத்த‌து. அதை எழுதுவத‌ற்கு அவ‌ர்க‌ளிட‌ம் ச‌ரியான‌ காகித‌ம் இல்லை, ஆனாலும் அவ‌ர்க‌ள் சுயமாக சிந்திக்க‌வுமில்லை, எதையும் த‌ட‌ங்க‌லாக நினைக்க‌வுமில்லை. மாறாக, அவ‌ர்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ ப‌ணியை சிற‌ப்பாக‌ செய்தார்க‌ள்!

இன்று க‌ள்ள‌ அப்போஸ்த‌ல‌ர்க‌ள் ப‌ல‌ர் தோன்றி, தேவ‌ன் த‌ந்த‌ வெளிப்பாடு என்று ப‌ல‌தை சொல்லுகிறார்க‌ள்! வேத‌த்தில் இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ள் என்றும் சொல்லுகிறார்க‌ள், ஆனால் தேவ‌ன் த‌ந்த‌ வெளிப்பாடுதான் என்றும் சொல்லுகிறார்க‌ள். இவ‌ர்க‌ள் எந்த‌ ஆவியில் இந்த‌ வெளிப்பாடுக‌ளை பெறுகிறார்க‌ள் என்று தெரிய‌வில்லை. மெய்யாக‌வே தேவ‌னிட‌த்திலிருந்து தான் வ‌ருகிற‌து என்றால், எழுத்து வ‌டிவ‌த்தில் கொண்டு வ‌ர‌ அப்ப‌டி என்ன‌ த‌ட‌ங்க‌ல் என்று புரிய‌வில்லை. அப்போஸ்த‌ல‌ரின் கால‌த்திலும் ப‌ழைய‌ ஏற்பாட்டு தீர்க்க‌த‌ரிசிக‌ளின் காலத்திலும் இன்றைய‌ கால‌த்து வ‌ச‌திக‌ள் இல்லாம‌ல் இருந்தும் அவ‌ர்க‌ள் தெளிவாக‌ தேவ‌னின் திட்ட‌ங்க‌ளை எழுதியிருக்கிறார்க‌ளே! இன்று நாம் ந‌ம் யோச‌னைக‌ளை போட்டு க‌ச‌க்குவ‌தால் ஏற்ப‌டும் க‌னவுக‌ளை தேவ‌ன் த‌ந்த‌ வெளிப்பாடு என்று ந‌ம்புவ‌தால்தான் குழ‌ப்ப‌ம் அதிக‌ம், குழ‌ம்புவ‌தும் அதிக‌ம், குழ‌ப்புவ‌தும் அதிக‌ம்.

இன்று அநேக‌ர் இப்ப‌டி தோன்றி கிறிஸ்த‌வ‌ம் சொல்லாத‌ ப‌ல‌ க‌ருத்துக்க‌ளை சொல்லி இது தேவ‌னிட‌த்திலிருந்து வ‌ந்த‌து என்று சொல்லுவ‌தில் ச‌ற்றும் அச்ச‌ம் கொள்வ‌தில்லை. தேவ‌னின் மெய்யான‌ வார்த்தைக‌ள் வேத‌த்தில் மாத்திர‌மே. அவ‌ரின் திட்ட‌ம் அதில் தெளிவாக‌ விள‌க்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அதே வேத‌த்தில்தான், இதுபோன்ற‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ள் வ‌ருவார்க‌ள், விசுவாசிக்கிற‌வ‌ர்க‌ளையே ஏமாற்றுவார்க‌ள், அவ‌ர்க‌ளுக்கு எச்ச‌ரிக்கையாக இருங்க‌ள் என்றும் இருக்கிற‌து. இந்த வேத‌த்தை தெளிவாக‌ வாசித்தாலே இதுபோன்ற‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ளிட‌ம் ஜ‌ன‌ங்க‌ள் எச்ச‌ரிக்கையாகி விடுவார்க‌ள்!! வேத‌த்தின் க‌டைசி புத்த‌க‌த்திலேயே, இத்துட‌ன் எதையும் சேர்க்க‌ கூடாது என்றும், எடுக்க‌வும் கூடாது என்றும் போட்டிருந்தும், இதை எல்லாம் எழுதி கொடுத்த‌ தேவ‌ன், இந்த‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ள் (அப்போத‌ல‌ர்க‌ள் என்று இவ‌ர்க‌ளை சொல்ல‌க்கூட‌ க‌ஷ்ட‌மாக‌ இருக்கிற‌து) மூல‌ம், அவரே அவ‌ர் எழுதிய‌தற்கு மாறான புதிய‌ வெளிப்பாடுக‌ளை தருவாரா? இந்த‌ க‌ள்ள‌ ஆசாமிக‌ளை ந‌ம்புவோரே! வேத‌த்தை வாசித்து இவ‌ர்க‌ளின் கோமாளித்த‌ன‌த்திற்கு முற்று புள்ளி வைய்யுங்க‌ள்!!”

சகோ.பெரியன்ஸின் அனுமதியில்லாமல் அவரது பதிவில் திருத்தம் செய்த என்னை அவர் மன்னிப்பார் என நம்புகிறேன்.


-- Edited by anbu57 on Monday 5th of July 2010 07:05:26 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

நீண்ட நாட்களுக்கு பிறகு தளத்திற்கு வருகை தந்திருக்கும் சகோ அன்பு அவர்களை மீண்டும் வரவேற்கிறேன். உங்கள் தளத்திலும் உங்களின் சத்தம் கேட்கவில்லை என்று அடிக்கடி போய் பார்த்து வந்துக்கொண்டிருந்தேன். நலமாக இருக்கிறீர்களா? என் தமிழ் பிழையை திருத்தி கொடுத்த தொகுப்பிற்காக நன்றி. நான் பள்ளியில் தமிழை பாடமாக படிக்காததால் இந்த பிரச்சனை. தேவன் தந்திருக்கும் இந்த ஞானத்தினால் தான் ஏதோ கொஞ்சம் தமிழில் எழுதுகிறேன். ஆனாலும் வார்த்தை பிழையை திருத்துவதால் ஒன்றும் தவறில்லை. நீங்கள் தாராளமாக செய்யலாம் (கருத்து மாற்றம் இல்லாமல் இருந்தால் சரி) ஆக மன்னிப்பு கேட்கும் அளவிற்கு ஒன்று நடக்கவில்லை. தொடர்ந்து வாருங்கள்!! நன்றி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

குறைகளை மாத்திரமே பார்த்து பழகிய சிலருக்கு, தளம் முழுவதுமே குறை குறுவதாக தெரிகிறது. இந்த தளத்தில் பிரயோஜனமான எத்தனையோ சத்திய வசனங்களை வைத்து எழுதிய விஷயங்கள் இருந்தாலும், குறைகளை மாத்திரமே பதியும் தளம் என்று விமர்சிப்பவர்கள், அவர்களின் தளங்களின் மற்றவர்களின் கருத்துக்களுக்கு எந்த அளவிற்கு மதிப்பு தருகிறார்கள் என்று எனக்கு தெரியும். என் பதிவுகளை அனைத்தையும் அந்த தளத்தில் பதிந்து விட்டு பிறகு தள நிர்வாகியின் கருத்துக்களுக்கு ஒத்துவரவில்லை என்று நீக்கம் செய்ய நிர்பந்தம் செய்யப்பட்டேன். இப்படி தங்களின் கருத்துக்களை ஒத்த கருத்த்கள் மாத்திரமே பதிய வேண்டும் என்கிற தளங்களின் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்.

யாரை வேண்டுமென்றாலும் குறைகூறுவது இந்த தளத்தின் நோக்கம் அல்ல, ஆனால் வசனத்திற்கு மாற்றாக எந்த கருத்துகள் எந்த இடத்தில் இருந்தாலும், அதை எழுத்து வடிவில் எதிர்க்க எனக்கும் தேவன் ஞானத்தை தருகிறார் என்பதை தாழ்மையுடன் பதிவிடுகிறேன்.வேதத்தின் முடிவிலே "எதையும் சேர்க்க கூடாது, எதையும் குறைக்க கூடாது" என்கிற வசனம் தேவனே தந்து விட்டு இப்பொழுது அதே தேவனா தான் கொடுத்த வார்த்தைகளை விட்டு விட்டார். இல்லை இது இந்த பிரபஞ்சத்தின் தேவனின் வேலையாகும். தேவன் கொடுத்தது கொடுத்தது தான். அதில் யாரும் ஒன்றும் சேர்க்க கூடாது என்றால் சேர்க்க கூடாது தான். அதையும் மீறி நிச்சயமாக நம் தேவன் இப்படி புதிய வெளிப்பாடுகலை தந்து மக்களை குழப்பமடைய செய்ய மாட்டார் என்பது அதிக நிச்சயம். அதுவும் எதோ ஒரு 100, 200 ஜனங்கள் வாசிக்கும் படியாக வேதத்தில் இல்லாத எந்த ஒரு விஷயமும் தேவன் தருவதில்லை என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். இப்படி தான் உலகம் முழுவதும் ஆங்கொன்றும் இங்கொன்றும் என்று ஒரு சிலர் எழும்பி எனக்கு தேவன் இதை வெளிப்படுத்தினார் என்றும், அதை வெளிப்படுத்தினார் என்றும் கூறி வருவது இன்று அல்ல, அப்போஸ்தலர்கள் காலத்திலேயே தொடங்கியது. அவர்களை தான் வேதம் கள்ள அப்போஸ்தலர்கள் என்கிறது.

யாரும் அவர் அவர் தளத்தில் பதிய எல்லா சுதந்திரங்களும் உண்டு. இந்த தளத்தில் எனக்கு ஒத்து போகாத பல கருத்துக்கள் இருந்தாலும், விவாத மேடை என்கிற காரணத்தினால் அதை நான் நீக்குவது இல்லை, இதுவும் இந்த தளத்தின் சிறப்பாகாகும். எபி 1:1,2ல் உள்ளது போல், தேவனும், கிறிஸ்துவும், இந்த உலகத்திற்கு இரட்சிப்பை குறித்த அனைத்தையும் அவர்களின் கருவிகளான தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் ஏற்கனவே எழுதி விட்டார்கள், இனியும் புதிதாக சேர்த்துக்கொள்ளும் அளவிற்கு ஒன்றும் இல்லை. எத்துனை பேர் தான் இப்படி என்னிடம் தேவன் வெளிப்படுத்தினார் என்று கிளம்புவார்கள் என்று தெரியவில்லை, ஆனால் தேவனின் ராஜியம் வரும் மட்டும், இது நிச்சயம் தொடரும், ஏனென்றால் அது வரையில் இந்த பூமி "இந்த பிரபஞ்சத்தின் தேவனான சாத்தானிடம்" ஒப்பு கொடுக்க பாட்டிருக்கிறது என்பது வேதத்தை தியானிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். யாரும் இதை தரகுறைவான வார்த்தைகள் என்று எடுத்துக்கொள்ள அவசியம் இல்லை, ஏனென்றால் இந்த தளத்தில் பதிவுகள் தருவோருக்கும் வேதத்திலிருந்து வெளிப்பாடுகள் இருக்கிறது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆதாயம் தேடுவது என்றால் பணமோ, பதவியோ மாத்திரம் ஆதாயம் இல்லை. புகழ்சி ஒரு ஆதாயமே! நான் யாரையும் அவரின் தனி பட்ட வாழ்க்கை முறையை குற்றப்படுத்தவில்லை. தேவன் பேசுகிறார், தேவன் வெளிப்படுத்துகிறார் என்று வேதத்திற்கு புறம்பாக பேசுவோரை மாத்திரமே எதிர்த்து எழுதுகிறேன். அன்பை பற்றி வசனம் எழுதி விட்டு கடைசியில் "துன்மார்க்கர் அறுப்புண்டு போய் நாங்கள் பூமியை சுதந்தரிப்போம்" எத்தைகை வகை அன்போ!? சுய நீதியில் இருக்கும் போது நிச்சயமாக இது போன்ற நினைப்புகள் வரும்! ஆனால் நானோ, வேதத்தில் உள்ளப்படியே அனைவருக்கும் இரட்சிப்பு என்று 1 தீமோ 2:3,4,5ல் இருக்கிறபடியே விசுவாசித்து அதை தான் எழுதுகிறேன். இதற்காகவே இயேசு கிறிஸ்து அனைவருக்காகவும் மீட்கும் பொருளாக தன்னை கொடுத்தார் என்று வசனம் சொல்லுகிறது, ஆகவே அனைவரும் இரட்சிக்கப்படுவார்கள். இதில் தான் அன்பு நிலைத்திருக்கிறது. வெறுமனே, என்னிடத்தில் தேவன் வெளிப்படுத்துகிறார் என்கிற சுய நீதியின் மமதையில் இருக்க வேண்டியதில்லை.

தேவன் யாரிடமும் இப்பொழுது பேசுவதில்லை என்பது வேதம் நமக்கு தரும் நம்பிக்கை. அப்படி தேவன் பேசுகிறார் என்று நம்புவோர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இது யாரையும் தனிப்பட்ட குறை கூறுதல் அல்ல, மாறாக தேவன் பேசுகிறார் என்று நம்ப வைப்பவர்களின் இப்பேர் பட்ட கருத்தை மாத்திரமே எதிர்க்கிறேன், இப்படி எழுதுவதால் என்னிடம் அன்பு இல்லை என்று இல்லை. தேவனின் சிருஷ்ட்டியான மனிதர்கள் மேல் எனக்கு அன்பு இருக்கிறது. ஆனால் தேவன் என்னிடம் பேசுகிறார் என்று ஏமாற்றி வருவோரின் இப்படி பட்ட பேச்சுக்களின் மேல் மாத்திரமே வெறுப்பு. இப்படி பேசுவதே மனிதர்களை மோசம் போக்குவது தான். இல்லாத ஒன்றை நம்பவைப்பது மோசம் போக்குவது தான், இந்த மோசம்போக்குதல் அப்போஸ்தலர்கள் காலம் தொடங்கி, தேவனின் ராஜியம் வரும் மட்டும் நிச்சயமாக தொடரும் என்பதும் வேதம் தான் வெளிப்படுத்துகிறது. வேதத்தை வாசித்து இப்படி பட்ட கருத்துகளிலிருந்து எச்சரிக்கையாக இருப்போம்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

திரியின் தலைப்பு "க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!!

இது  என்ன  சகோதரரே? உங்கள் பெயரை நீங்களே திரியின் தலைப்பாக் வைத்திருக்கிறீர்கள்! யாரை "கள்ள ஆசாமி" என்று உலகில் சொல்வார்கள் என்பதை உங்கள் மனசாட்சியை தொட்டு கொஞ்சம் சொல்லுங்கள்.
 
"நீதி நேர்மையாய் நட/திருடாதே /ஏமாற்றாதே/ பொய் சொல்லாதே பிறருக்கு தீங்கு செயாதே" என்று சொல்பவர் கள்ள ஆசாமியா? 
 
அல்லது 
 
"இயேசு எல்லோருக்காகவும் மரித்துவிட்டார் இனி நீ என்ன செய்தாலும் தவறு கிடையாது. துணித்து என்ன வேண்டுமானாலும் செய். எல்லோரையும் தேவன் நிச்சயம் மீட்டுவிடுவார்" என்று பிறருக்கு தீங்கு செய்ய ஊக்குவிக்கும் நபர் கள்ள ஆசாமியா? என்பதை ஒரு சிறு குழந்தையிடம் போய் கேட்டுபாருங்கள்.    
 
bereans wrote:
///தேவன் யாரிடமும் இப்பொழுது பேசுவதில்லை என்பது வேதம் நமக்கு தரும் நம்பிக்கை.///
 
வேதம் இதுபோல் எங்கும் நம்பிக்கை தரவில்லை சகோதரே! இது சாத்தான் தரும் நம்பிக்கை. ஜீவனுள்ள தேவனை மனிதனிடம் பேசதெரியாத/பேசமுடியாத இயலாமை உள்ள ஒருவராக காட்டி இஸ்லாமியரை எமாற்றுவதுபோல உங்கள் போன்றவரையும் கள்ளத்தனமாக ஏமாற்றிக்கொண்டு வருகிறான். ஆனால் வேதத்தில் எங்கும் அப்படி சொல்லப்பட வில்லை.
 
ஆகினும் நீங்கள் சொல்வதிலும் சிலஉண்மைகள் இருக்கிறது சிலபேர் கூப்பிட்டாலும் தேவன் செவி கொடுக்கவோ மறு உத்தரவு கொடுக்கவோ மாட்டேன் என்றும சொல்லியிருக்கிறார். உதாரணமாக சவுல் கர்த்தரை விசாரித்த போது அவர் மறு உத்தரவு கொடுக்கவில்லை.     
  
I சாமுவேல் 28:6 சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும் போது, கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறு உத்தரவு அருளவில்லை.

இதிலிருந்து நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்!

சவுல் இருந்த
நிலையையும் அவன் எப்படி மாண்டான் என்பதையும் சற்று யோசித்து பாருங்கள்! 
 
ஆனால் பொதுவாக எல்லா அடியவர்களுக்கும் தேவன் சொல்லும் வார்த்தை "என்னை நோக்கி கூப்பிடு நான் உனக்கு மறுஉத்தரவு கொடுப்பேன்" என்பதுதான்
 
ஏசாயா 30:19 ;  உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்

ஏசாயா 58:9
அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்
 
இப்படி "என்னிடம் கேள் நான் உனக்கு உண்மையை சொல்வேன்" என்று அனேக வசனங்கள் வேதத்தில் இருக்க, தேவன் மனிதனிடம் பேசமாட்டார் என்று சாத்தான் சொல்லும் பொய்யை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதோடு, பிற ஜனங்களையும் தேவனுடைய வார்த்தைக்கு பயப்படாமல்/ கீழ்படியவிடாமல்  திசைதிருப்பி மோசம்போக்கி கொண்டு இருக்கும் உங்கள் போன்றவர்களுக்கு  பிறரை எவ்விதத்திலும் குறைகூற எந்த முகாந்திரமும் இல்லை என்பதை கருத்தில் கொள்க!
 

bereans wrote:
//ஆதாயம் தேடுவது என்றால் பணமோ, பதவியோ மாத்திரம் ஆதாயம் இல்லை. புகழ்சி ஒரு ஆதாயமே!///

தளங்களில் ஆண்டவரை பற்றி எழுதிய இத்தனை நாட்களில் எனக்கு யாரும் பட்டம் கொடுத்த்து  மாலைபோட்டு மரியாதை செலுத்தி புகழ்ந்து தள்ளவில்லை மாறாக உங்களை  போன்றவர்கள் கொடுத்த பட்டமாகிய  "முட்டாள்" "கள்ள ஆசாமி" "வஞ்சிக்கப்பட்டவன்" "ஏமாற்று பேர்வழி" "பயித்தியக்காரன்" "காதில் பூ சுற்றுபவன்" "சைக்கிள் பேர்வழி" போன்ற அனேக பட்டங்கள்தான் கிடைத்திருக்கின்றன!தளத்தில் எழுதுவதற்காக நான் மனமடிவாகி சோர்ந்துபோன நாட்கள்தான் அதிகமே தவிர  அதனால் எனக்கு எந்த பயனும் இல்லை, பெரிதாக எந்த புகழ்ச்சியும் இல்லை. அதை நான் விரும்பவும் இல்லை. நீங்களாக கற்பனை பண்ணிக் கொண்டு, உங்கள் மனது எதிர்பார்க்கும் புகழ்ச்சியை என் மேல் திணிக்க வேண்டாம்! 

bereans wrote
//"துன்மார்க்கர் அறுப்புண்டு போய் நாங்கள் பூமியை சுதந்தரிப்போம்" எத்தைகை வகை அன்போ!? //இந்த

கேள்வியை வசனத்தை எழுதிகொடுத்த தேவனிடம்தான் கேட்கவேண்டும். ஏனெனில் நான் வேதத்தில் உள்ள வசனத்தைதான் மேற்கோள் காட்டியிருக்கிறேன். நீங்களும் வசனம்படிதானே எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வீர்கள்!   இதுபோன்ற  வசனம் உங்கள் தவறான  நம்பிக்கைக்கு விரோதமாக இருப்பதால் "இவ்வாறு செய்வது என்னவித அன்பு? என்று வசனத்தை கொடுத்த  தேவனையே எதிர்கேள்வி கேட்கிறீர்களா?   


-- Edited by RAAJ on Wednesday 7th of July 2010 07:22:57 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

தங்களின் அத்துமீறலான ப‌திலும் சற்றும் நாகரீமற்ற வார்த்தைகள் (திரியின் தலைப்பு "க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!! இது  என்ன  சகோதரரே? உங்கள் பெயரை நீங்களே திரியின் தலைப்பாக் வைத்திருக்கிறீர்கள்!) தங்களின் உண்மை நிலையும் எந்த ஆண்டவன் தங்களிடம் பேசுகிறான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது. இப்படி பட்ட புத்தி படைத்த ஒரு மனிதனிடம் தேவன் பேசுவார் என்பது வெறும் பிதற்றல். வேதத்தில் இருக்கும் வசனங்கள் யாரை சார்ந்தது என்கிற அடிப்படை ஞானம் கூட இல்லாதவராக இருப்பவரிடம் நிச்சயமாகவே வேதத்தை குறித்து விவாதம் செய்வது செவிடன் காதில் சங்கு ஊதுவதற்கு ஒப்பாகும்.

"நீ கரு தாங்கி ஒரு மகனை பெற்றெடுப்பாய்" என்கிற வசனத்தை எப்படி அனைவரும், எடுத்துக்கொள்ள முடியாதோ, அப்படியே தான்,

ஏசாயா 30:19 ;  உன் கூப்பிடுதலின் சத்தத்துக்கு அவர் உருக்கமாய் இரங்கி அதைக் கேட்டவுடனே உனக்கு மறுஉத்தரவு அருளுவார்

ஏசாயா 58:9 அப்பொழுது நீ கூப்பிடுவாய், கர்த்தர் மறுஉத்தரவு கொடுப்பார்; நீ சத்தமிடுவாய்: இதோ, நான் இருக்கிறேன் என்று சொல்லுவார்

மேலே உள்ள வசனங்களும் அப்படியே. வாசிக்கும் அனைவருக்கும் இது பொருந்தாது என்கிற தெளிவு இல்லாதவர்களிடம் தான் சாத்தான் பேச முடியும், அது தான் உங்களுக்கு நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஆகவே தான் தேவன் என்னிடம் பேசி, வேதத்தில் இல்லாத பல வெளிப்படுகளை தருகிறார் என்று மக்களை மோசம் போக்கி கொண்டு இருக்கிறீர்கள்.

", தேவன் மனிதனிடம் பேசமாட்டார் என்று சாத்தான் சொல்லும் பொய்யை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதோடு, பிற ஜனங்களையும் தேவனுடைய வார்த்தைக்கு பயப்படாமல்/ கீழ்படியவிடாமல்  திசைதிருப்பி மோசம்போக்கி கொண்டு இருக்கும் உங்கள் போன்றவர்களுக்கு  பிறரை எவ்விதத்திலும் குறைகூற எந்த முகாந்திரமும் இல்லை என்பதை கருத்தில் கொள்க!"

பித‌ற்ற‌லின் உச்ச‌க்க‌ட்ட‌த்தில் வெளியான‌ வார்த்தைக‌ள் இவை. என்ன‌ பேசுகிறோம் என்கிற‌ அடிப்ப‌டி ஞான‌ம் கூட‌ இல்லாத‌ உங்க‌ளிட‌த்தில் பேசும் சாத்தான் தான் வேத‌த்தில் இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளை வெளிப்பாடுக‌ளை தொட‌ர்ந்து த‌ந்து கொண்டு இருக்கிறான்.இதை வைத்துக்கொண்டு வேத‌த்தில் இல்லாத‌ விஷ‌ய‌ங்க‌ளை சொல்லி யார் ம‌க்க‌ளை திசை திருப்பி மோச‌ம் போக்கி கொண்டு இருக்கிறார்க‌ள் என்று ம‌ன‌சாட்சியை அல்ல‌ தேவ‌னிட‌மே கேட்டு கொள்ளுங்க‌ள் (ஏனென்றால் உங்க‌ளை போல் ப‌ரிசுத்த‌வான்க‌ளிட‌ம் தான் தேவ‌ன் அடிக்க‌டி பேசுவாரே)!!

" இனி நீ என்ன செய்தாலும் தவறு கிடையாது. துணித்து என்ன வேண்டுமானாலும் செய். "
இப்ப‌டி நான் எழுதிய‌தாக பதியும் முன் தயவு செய்து நல்ல கண் மருத்துவரிடம் தங்களின் கண்களை பரிசோதித்து விட்டு எழுதுங்கள்! பிதற்றலாக எதையும் பதிய வேண்டாம். மேலும் உலகில் உங்களை போல் நீதியை போதிப்பவர் வேறு யாரும் இல்லை என்கிற மமதையிலிரும் இருக்க வேண்டாம். நான் அப்போ மட்டும் இல்லை, எப்பவும் வேதத்தில் இருக்கும்படியே, தாங்கள் சுற்றி காட்டிய நற்கிறியைகள் எதற்கும் உதவாது, தேவ கிருபையே உதவும என்பதை தான் சொல்லி வருகிறேன்.

பல கடவுள்கள் மேல் நம்பிக்கை வைத்து அதை எல்லாம் தங்களின் தளத்தில் எழுதி வருவது தங்களிடம் எந்த தேவன் வேசுகிறான் என்று தெளிவாக இருக்கிறது. நேரடியாக யாரையும் சொல்லாமல், இப்படி தேவன் என்னிடத்தில் பேசுகிறார் என்று சொல்பவர்களை பற்றி தான் தான் எழுதினேன், ஆனால் நேரடியாக உங்களை சுற்றி காட்டி, உங்களிடத்தில் பேசுவது சாத்தான் தான் என்று அனைவருக்கும் எடுத்து சொல்ல வைத்து விட்டீர்கள்.

யாரையும் குறை சொல்லுவதில்லை என்று சொல்லிக்கொண்டு, இந்த தளத்தில் வந்து என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதிய உங்களிடத்தில் பேசுவது நிச்சயமாக வேதம் கூறுகிற அந்த ஒன்றான மெய் தேவனான யெகோவா தேவனோ, அல்லது அவரின் குமாரனான இயேசு கிறிஸ்துவோ கிடையாது, மாறாக இந்த பிரபஞ்சத்தின் தேவனான சாத்தான் தான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஏனென்றால் சவுல் போன்ற உதாரனங்களை வைத்து என்னை சொல்லி தங்களை பேரிய நீதிமான் என்றும் நியாயாதிபதி என்றும் முடிவு செய்தி இருக்கிறீர்கள் போல். என்னை நியாயம் தீர்க்க தேவன் இருக்கிறார், உங்களை போன்ற சுய நீதியில் பிரியப்படுகிறவர்கள் தேவை இல்லை என்பதை கூற விரும்புகிறேன்.

இனியும் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுத இந்த தளத்தில் வர முயற்சி செய்யாதீர்கள்.

http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=41&topicID=36864106



-- Edited by bereans on Wednesday 7th of July 2010 10:38:43 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

bereans wrote:

தங்களின் அத்துமீறலான ப‌திலும் சற்றும் நாகரீமற்ற வார்த்தைகள் (திரியின் தலைப்பு "க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!! இது  என்ன  சகோதரரே? உங்கள் பெயரை நீங்களே திரியின் தலைப்பாக் வைத்திருக்கிறீர்கள்!) தங்களின் உண்மை நிலையும் எந்த ஆண்டவன் தங்களிடம் பேசுகிறான் என்பதையும் தெளிவு படுத்தியிருக்கிறது. இப்படி பட்ட புத்தி படைத்த ஒரு மனிதனிடம் தேவன் பேசுவார் என்பது வெறும் பிதற்றல். 


காம் டவுன்  சகோதரர்  அவர்களே! உணர்ச்சிவசப்பட வேண்டாம்!
 
இது  என்னுடைய  பதிவு  
ஆதியில் இருந்து நடந்தது என்ன? என்பதை  தேவன் எனக்கு சரியாக அனேக வெளிப்பாடுகள் மூலம் புரிய வைத்திருந்தாலும் அதை எழுத்தில் கொண்டுவர என்னால் முடியவில்லை.

இது உங்கள் பதிவு:
க‌ள்ள‌ ஆசாமிக‌ள்!!
இவ‌ர்க‌ள் எந்த‌ ஆவியில் இந்த‌ வெளிப்பாடுக‌ளை பெறுகிறார்க‌ள் என்று தெரிய‌வில்லை. மெய்யாக‌வே தேவ‌னிட‌த்திலிருந்து தான் வ‌ருகிற‌து என்றால், எழுத்து வ‌டிவ‌த்தில் கொண்டு வ‌ர‌ அப்ப‌டி என்ன‌ த‌ட‌ங்க‌ள் என்று புரிய‌வில்லை.  
 
நீங்கள் யாரை குறித்து எழுதுகிறீர்கள் என்பது குழந்தைக்கு கூட புரியுமே!  ஏதோ யாரையுமே குறை சொல்லாத ஒரு உத்தமனை குறை சொல்லி விட்டது போல் எழுதுகிறீர்கள். அதாவது உங்கள் கொள்கைப்படி நேரடியாக குத்தகூடாது மறைந்திருந்து பின்னால் வந்து தெரியாமல்  குத்த வேண்டும் என்று சொல்கிறீர்கள் அப்படியா?  
 
தளம் முழுவதும் தேவ ஊழியர்களை நேரடியாக பெயர் சொல்லி தாக்கி எழுதிக்கொண்டு இருப்பது உங்கள் தளத்தில்தான். சும்மா ஒரு சாம்பிளுக்கு உங்களை அதுபோல் குற்றப்படுத்தினால் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு  உணர்த்துவதற்காகவே அப்பதிவை எழுதினேன். மனதில் ரொம்ப வலிக்கிறதல்லவா? அதுபோலத்தானே மற்ற ஊழியர்களும்!
 
 
போன்ற தலைப்புகளில்  தளம் முழுவதும் தேவ உழியர்களை  பெயர் சொல்லி குறைகூறி தீர்க்கிறீர்களே மற்றவர்களுக்கு எவ்வளவு வலிக்கும்? உலகில் உள்ள எல்லா ஊழியர்களையும் குறைசொல்லிவிட்டால் நாம் முன்னுக்கு வந்துவிடலாம் என்று நக்கீரன் பாணியில் செயல்படுகிறீர்களா?  
 
"உங்களை நீங்கள்  நேசிப்பதுபோல பிறரையும் நேசியுங்கள்" அது ஒன்றுபோதும்!  
 

 



__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த தலைப்புகள் மாத்திரமே தங்களின் கண்கன்களுக்கு தெரிந்திருப்பது வியப்பாக தான் இருக்கிறது. இதில் உள்ளவர்களை தாங்கள் வேண்டுமென்றால் தேவ ஊழியர்கள் (எந்த தேவனுக்கு என்று தெரியவில்லை) என்று வைத்துக் கொள்ளுங்கள், ஆனால் இவர்கள் எப்படி நாறி போயி இருக்கிறார்கள் என்று அங்கே அந்த பதிவுகளில் உள்ள தொடுப்புகளில் போய் பாருங்கள். தலை சாய்க்க இடம் இல்லை என்று சொன்ன இயேசுவின் நாமத்தினால் ஜனங்கலை கொள்ளை அடித்து பரம்பரை பரம்பரையாக உட்கார்ந்தும் என்ன முடியாத அலவிற்கு சொத்தும், சுகமும் வைத்து வாழும் இவர்களுக்கு பரிந்து பேசுகிறீர்கள் என்று புரிந்து போய் விடும். வெளி வேஷம் இட்டவர்களின் சாயம் அந்த நாடுகளில் வெளுத்துக்கிட்டு தான் இருக்கிறது என்பது இந்த ஓநாய்களின் சாயம் வெளுத்து வருவதை வைத்து புரிந்துக் கோல்வீர்கள்!!

வேதத்தில் பவுல் எப்படி பேதுருவின் வேஷத்தை கூச்சலிட்டு சொல்லுகிறாரொ, நாங்களும் அதையே செய்து வருகிறோம். இவர்களை தேவ ஊழியர்கள் என்று சொல்லுவதால் உங்களுக்கு ஒரு வேளை நாங்கள் இப்படி வெளிச்சம் போட்டு காட்டுவதால் கஷ்டமாக இருந்தால் வாசிக்காதீர்கள்!!

1500 பதிவுகளுக்கு மேல் தந்திருந்தும் அதில் உள்ள சத்தியங்களை எல்லாம் விட்டு விட்டு இந்த தலைப்புகள் மாத்திரம் உங்கள்  பார்வையில் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது!!

http://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=3&topicID=36864106



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

கள்ள தீர்க்கதரிசிகள் அப்போஸ்தலர்கள் காலம் முதல் இருக்கிறார்கள்.

1 கொரி. 13:8 "தீர்க்கதரிசனங்களானாலும் ஒழிந்துபோம்,

மேலும்,

9. நம்முடைய அறிவு குறைவுள்ளது, நாம் தீர்க்கதரிசனஞ் சொல்லுதலும் குறைவுள்ளது.

10. நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.

அந்த நிறைவான வேத புத்தகம் ஆதி முதல் (ஆதியாகமம்) வரும் காரியங்கள் வரை (தீர்க்கதரிசன புத்தகங்கள் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம்) அனைத்தையும் சொல்லி முடித்தாகி விட்டது. இனி தீர்க்கதரிசனம் என்றால் இதில் சொல்லப்பட்ட தேவனின் வார்த்தைகளை எடுத்து சொல்லுவது தானே அன்றி புதிதாக தேவன் தீர்க்கதரிசனங்களும், இதில் இல்லாததை வெளிப்பாடுகளாக தருகிறார் என்பது இல்லை. கள்ள தீர்கதரிசிகள் நிச்சயமாக இதில் இல்லாததை தான் சொல்லுவார்கள். நிறைவானது வந்துவிட்ட பிறகும் இன்னும் வெளிப்பாடுகள் தீர்க்கதரிசனங்கள் புதிதாக இருக்கிறது என்று சொல்லுவது நிச்சயமாகவே தேவன் தந்த வேதத்தை அவமதிக்கிறதாகவே இருக்கும். கள்ளதீர்க்கதரிசிகள் எந்த ஆவியில் பேசுகிறார்கள் என்பதை ஆறாய்ந்து அறிவதற்கும் வேத புத்தகமே நமக்கு உதவும்.

ப‌வுல் சொன்ன‌து போல், தேவ‌னிட‌த்தில் நேர‌டியாக‌ வெளிப்பாடுக‌ளாக‌ கிடைத்த‌ தீர்க்க‌த‌ரிச‌ன‌ங்க‌ள் ஒழிந்துபோயிற்று, ஆனால் வேத‌த்தில் உள்ள‌ தீர்க்க‌த‌ரிசன‌ங்க‌ளை எடுத்து உறைக்க‌ எந்த‌ த‌டையும் இல்லை, ஆனால் எழுதிய‌த‌ற்கு மிஞ்சி எண்ணாம‌ல் பேசினால் ச‌ரி தான். வேத‌ம் முழுவ‌தும் தேவ‌னின் திட்ட‌ம் அப்ப‌டியே எழுத‌ப்ப‌ட்டிருக்கிற‌து, தேவ‌னின் ஆவியை (சிந்தையை. கிறிஸ்துவின் சிந்தை உங்க‌ளுக்குள் இருக்க‌ட்டும்) பெற்ற‌ ம‌னுஷ‌னே அதை ப‌குத்த‌றிய‌ முடியும் என்கிற‌து வேத‌ம். வேத‌ புத்த‌க்க‌த்தை ந‌ம் பார்வையில் பார்க்காமல் தேவ‌னின் பார்வையில் பார்த்தோமென்றால், ந‌ம்மிட‌ம் இந்த‌ பிர‌ப‌ஞ்ச‌த்தின் தேவ‌ன் பேசி அதை தீர்க்க‌த‌ரிசன‌ம், வெளிப்பாடுக‌ள் என்று சொல்ல‌ அவ‌சிய‌ம் இருக்காது, மாறாக‌ வேத‌ புத்த‌க‌ம் ந‌ம‌க்கு ஒரு விசேஷ‌மான‌ புத்த‌க‌மாக‌ தோன்றும்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

sundar wrote in his site:

vedamanavan wrote:


 

1500 பதிவுகளுக்கு மேல் தந்திருந்தும் அதில் உள்ள சத்தியங்களை எல்லாம் விட்டு விட்டு இந்த தலைப்புகள் மாத்திரம் உங்கள்  பார்வையில் இருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது!!



  
உங்கள்  1500 பதிவுகளில்  உள்ள  சத்தியத்தை ஓரிரு  வரியில் சொல்லட்டுமா?
 
"உனது இஸ்டப்படி நீ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் தேவன் உன்னை மட்டுமல்ல  எல்லோரையும் மீட்டுவிடுவார். நரகமில்லை பாதாளமில்லை, தப்புக்கு தண்டனையே  இல்லை,  ஜெபம் வேண்டாம் சுவிஷேசம் வேண்டாம் என்பதுதானே.
 
இதைதான்  இன்று உலகில் தெய்வபயம் இல்லாத எல்லோருமே செய்துகொண்டு இருக்கிறார்கள்.  இதற்க்கு தனியாக ஒரு தளம் அமைத்து கொஞ்சம் வித்தியாசமாக இயேசு கொடுத்த இரட்சிப்பு என்னும் லைசென்ஸ் வழியாக எதை வேண்டுமானாலும் செய்யும் அனுமதி நமக்கு கிடைத்துள்ளது என்று போதிக்கிறீர்கள். நீங்கள் போதிக்காவிட்டலும் தெய்வபயம் இல்லாத எல்லோரும் அதைதான் செய்வார்கள் ஆனால் நீங்கள் சில வசனத்தையும் ஆதாரம் காட்டி சொல்வதால் அது தெரிந்து கொள்ளப்பட்டவர்களும் இடறி உலகத்தார் போல மாற வழி ஏற்ப்படுகிறது அவ்வளவுதான்.
 
சரி போதும் சகோதரரே!  நீங்களும் உங்கள் கூட்டாளியும் யார் என்பது புரிந்துவிட்டது. இனி உங்கள் தளத்தில் வந்து நான்  மூக்கை நுழைக்க மாட்டேன். 
 
நாம் இத்துடன்  விட்டுவிடுவோம்.  நீங்கள் சொல்வதுபோல் எல்லோருக்கும் மீட்பு மற்றும் நரகம் பாதாளம் எதுவுமே  இல்லாமல் பாதாளம்  என்பது   பிரேதகுளியாகவும்,  அவியாத அக்கினி என்பது எருசலேமில் உள்ள குப்பை  மேட்டில் எரியும் அக்கிநியாகவே இருந்துவிட்டு போகட்டும்   
   
அப்படியே   நடந்தாலும், சில வெளிப்பாடுகளை  எழுதி  இந்த தளத்தின் மூலம் நான் பிரதானமாக போதித்துவரும் உண்மை நேர்மை உத்தமம் இவைகளை கைகொண்டு பாவங்களை தவிர்க்கும்படி  போதிப்பதன் மூலம் யாருக்கும்  தீமை எதுவும் ஏற்ப்பட்டுவிட போவது இல்லை மாறாக
 
யோபு 35:8 உம்முடைய பாவத்தினால் உம்மைப்போன்ற மனுஷனுக்கு நஷ்டமும், உம்முடைய நீதியினால் மனுபுத்திரனுக்கு லாபமும் உண்டாகும்.

என்ற வார்த்தைகள்படி சக மனிதர்களுக்காவது நல்லது நடந்து விட்டு போகட்டும். மற்றபடி ஒருவரின் நீதியான நடக்கையினால் யாருக்கும் எந்த பாதிப்பும் நிச்சயம் வரப்போவது இல்லை! 

http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=36864106

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி-12:28)


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

My reply in lord.activeboard

"உங்கள்  1500 பதிவுகளில்  உள்ள  சத்தியத்தை ஓரிரு  வரியில் சொல்லட்டுமா?
 
"உனது இஸ்டப்படி நீ எப்படி வேண்டுமானாலும் வாழலாம் தேவன் உன்னை மட்டுமல்ல  எல்லோரையும் மீட்டுவிடுவார். நரகமில்லை பாதாளமில்லை, தப்புக்கு தண்டனையே  இல்லை,  ஜெபம் வேண்டாம் சுவிஷேசம் வேண்டாம்"  என்பதுதானே. "

பிசாசு காட்டும் வெளிப்பாடுகளில் பிழைத்து ஜனங்களை மோசம் போக்கி கொண்டிருப்போரு தேவனின் இரட்சிப்பை நிச்சயமாக இப்படி தான் அசட்டையாக புறிந்துக்கொள்வார்கள் என்பது தங்களின் இந்த வரிகள். "உன் இஷ்டப்படி வாழலாம்" என்று நான் ஒரு போதும் சொல்வதில்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளால் (1தீமோ 2:4,5,6) எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு என்று சொல்வதில் தயங்குவதில்லை. அவியாத அக்கினியில் தான் தேவ அன்பு வெளிப்படுகிறது என்று பிசாசின் வெளிப்பாடுகளை வைத்து தேவனை கொச்சை படுத்தும் உங்களை போல் இந்த வசனத்தை புரிந்துக்கொள்ள மாட்டார்கள், சொல்லவும் மாட்டார்கள். இருதயத்தில் நினைவுகளை வாய் பேசும் என்பது தான் வசனம். உங்களை போன்றோர் அவ்வித அன்பின்றி இருப்பதால் தான் அநேகரை தேவன் அக்கினியில் நித்தியத்திற்கும் போட்டு எடுப்பார் என்பது போன்ற என்னங்களும் அதினால் வரும் பிசாசின் கனவுகளை தேவ வெளிப்பாடு என்று தேவனை தூஷித்துக்கொண்டு எழுத துனிந்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு மாத்திரம் இல்லை உங்களை போல் அநேகர் இந்த தூஷனத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜெபிக்க வேண்டாம் என்பது எங்கள் கருத்து அல்ல, தேவ சித்தத்தின் படி ஜெபியுங்கள் என்பது தான் நாங்கள் எங்கள் தளத்தில் சொல்லுகிறோம். அப்படியே, இரட்சிப்பை தான் சுவிசேஷமாக சொல்லி வருகிறோம் அது நிசயமாக உங்களை போல் ஜனங்களின் அழிவை ரசிப்பவர்களுக்கு சுவிசேஷமாக தெரியாது. நாங்கள் நரகத்தை போதிக்காத‌தினால் அது உங்கள் பார்வையில் நாங்கள் சுவிசேஷம் சொல்லவில்லை என்று ஆகிவிட்டது. என்ன செய்வது அவர் அவர் இருதயத்தில் இருப்பது தானே வெளிபடும்.

மேலும் தாங்கள் போதிக்கும் நீதியின் போதகம் எல்லா மார்கங்களும் மதங்களும் சொல்லும் போதகம் தான். அது நால் தான் பிரமன்னை முதல் தேவனாக உங்களால் தைரியமாக எழுத முடிகிறது. இப்படி எல்லாம் தேவ ஞானம் உள்ள உங்களிடம் எந்த தேவன் வெளிப்பாடுகளை தருகிறான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.

உங்கள் தளத்தில் எழுதுவதில்லை ஆனால், எல்லா தேவ தூஷனங்களும் என் தளத்தில் நிச்சயமாக எதிர்த்து எழுதப்படும். வெளிப்பாடுகள் தரிசனங்கள் உட்பட. தேவ வெளிச்சம் மக்கள் மேல் வந்துக்கொண்டிருக்கும் காலம் இது, பிசாசின் தந்திரமான தரிசனங்கள் செயலிழந்துக்கொண்டிருக்கும் காலம் இது. மீண்டும் அனைவருக்கும் இரட்சிப்பு என்று தான் வேதம் சொல்லுகிறது என்று என் சுவிசேஷ பணியை செய்கிறேன்.



http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=36864106
__________________

"உம்முடைய‌ வசனமே சத்தியம்." யோவான் 17:17



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

Again Sundar's reply

சகோதரர்  அவர்களே உங்கள் பதிவுகளுக்கு எல்லாம் பதில்தர எனக்கு விருப்பம் உண்டு ஆனால் நாம் சுற்றிசுற்றி மீண்டும் அதே இடத்தி
ல்தான் வந்து நிற்ப்போம். நம்மால் ஒரு முடிவுக்கு வரவே முடியாது.   
 
VEDAMANANVAN WROTE:
///"உன் இஷ்டப்படி வாழலாம்" என்று நான் ஒரு போதும் சொல்வதில்லை.  ////
 
சமீபத்தில்  "எட்டாம்  வகுப்புவரை  யாரையும் பெயில் பண்ண கூடாது" என்றொரு சட்டம் வந்துள்ளது  என்பது   தங்களுக்கு தெரியும். இந்த திட்டம் முன்புறம் பார்பதற்கு யாரையுமே பெயிலாக்க விரும்பாத உத்தமர்கள் செய்வது போல தோன்றினாலும் அதன் பின்புறம் "நீ  ஸ்கூலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் பரீட்சை எழுதினாலும்  எழுதாவிட்டாலும் படித்தாலும் படிக்கவிட்டாலும் நீ நிச்சயம் பாஸ்" என்று சொல்லி மாணவர்களை கெடுப்பது போன்ற செயலே.

அவ்வாறு சட்டம்  சொன்னால் அதன் பொருள்
என்ன?

நீ எப்படி வேண்டுமானாலும் உன் இஸ்டப்படி நட ஆனாலும் நீ பாஸாகி
விடலாம் என்பதுதானே? அதுபோல்தானே உங்கள் கருத்து இருக்கிறது!
 
ஓரிரு வசனத்தை பிடித்துகொண்டு "எல்லோருக்கும் மீட்பு" என்று சொல்லும்  நீங்கள், சுமார்  ஐம்பது அறுபது வசனம் சொல்லும் "துன்மார்க்கருக்கு தண்டனை உண்டு" என்றும் அதுவும் "நித்திய ஆக்கினை உண்டு" என்றும் சொல்லும் வசனத்தை ஏன் கருத்தில் கொள்வதில்லை? அவ்வசனமும் வேதத்தில்தானே இருக்கிறது!   

சங்கீதம் 9:17 துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா ஜாதிகளும், நரகத்திலே தள்ளப்படுவார்கள்.
 
மாற்கு 9:43  நீ இரண்டு கையுடையவனாய் அவியாத அக்கினியுள்ள நரகத்திலே போவதைப்பார்க்கிலும், ஊனனாய் ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

VEDAMANANVAN WROTE:
///ஆனால், இயேசு கிறிஸ்துவின் மீட்கும் பொருளால் (1தீமோ 2:4,5,6) எல்லாருக்கும் இரட்சிப்பு உண்டு என்று சொல்வதில் தயங்குவதில்லை. ////


தாங்கள் சொல்வதுபோல் எல்லோருக்கும் மீட்பு என்ற திட்டம்
தேவனிடத்தில் உண்டு. அதுபற்றிய முழு விளக்கமும் என்னிடம் உண்டு அதைப்பற்றி   நான் தனியான ஒரு தொடுப்பில் தருகிறேன் அங்கு  விவாதிக்கலாம்
 

VETHAMANAVAN WROTE:
////அவியாத அக்கினியில் தான் தேவ அன்பு வெளிப்படுகிறது என்று பிசாசின் வெளிப்பாடுகளை வைத்து தேவனை கொச்சை படுத்தும் உங்களை போல் இந்த வசனத்தை புரிந்துக்கொள்ள மாட்டார்கள், சொல்லவும் மாட்டார்கள். இருதயத்தில் நினைவுகளை வாய் பேசும் என்பது தான் வசனம்.////
 
தேவன் அன்பானவர்தான் என்பதில் எந்தசந்தேகமும் இல்லை அவர் யாரையும் நரகத்துக்கு அனுப்ப விரும்புவதும் இல்லை என்பதும் உண்மையே. அனால்  இந்த  நித்தய அக்கினி பிசாசுக்காக ஆயத்தப்படுத்தபட்டது என்று வேதம் சொல்கிறது
 
மத்தேயு 25:41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

அங்குதான் நானும் போவேன் என்று பிடிவாதம் பிடிப்பவர்களை அன்பான தேவன் அவர்களது விருப்பபடியே பிசாசுடன் சேர்த்து அங்கு அனுப்பிவை க்கிறார் அவ்வளவுதான். அவர் விரும்பி அதை செய்யவில்லை!   
  
VEDAMANAVAN WROTE:  
///உங்களை போன்றோர் அவ்வித அன்பின்றி இருப்பதால் தான் அநேகரை தேவன் அக்கினியில் நித்தியத்திற்கும் போட்டு எடுப்பார் என்பது போன்ற என்னங்களும் அதினால் வரும் பிசாசின் கனவுகளை தேவ வெளிப்பாடு என்று தேவனை தூஷித்துக்கொண்டு எழுத துனிந்திருக்கிறீர்கள். இது உங்களுக்கு மாத்திரம் இல்லை உங்களை போல் அநேகர் இந்த தூஷனத்தை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.////
 
உம்முடைய வேதமே சத்தியம் என்று நீங்கள் நம்பும் வேதம் சொல்லும் வசனத்தை கருத்தில் கொண்டுதான் அதுபற்றி சொல்கிரோமேயன்றி அந்த அவியாத அக்கினிக்கு  யாரும் போகவேண்டும் என்பது எங்களது விருப்பம் அல்ல  சகோதரரே!
 
வெளி 20:௧௦ அவர்களை மோசம்போக்கின பிசாசானவன், மிருகமும் கள்ளத்தீர்க்கதரிசியுமிருக்கிற இடமாகிய அக்கினியும் கந்தகமுமான கடலிலே தள்ளப்பட்டான். அவர்கள் இரவும் பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள்.
15. ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

இங்கு  வசனம் மிக தெளிவாக இரவும் பகலும் சதா காலங்களிலும் வாதிக்கப்படுவார்கள் என்று சொல்கிறது
எனவே இதை நாங்கள் நம்பிதானே ஆகவேண்டியுள்ளது!
 
VEDAMANAVAN WROTE
////ஜெபிக்க வேண்டாம் என்பது எங்கள் கருத்து அல்ல, தேவ சித்தத்தின் படி ஜெபியுங்கள் என்பதுதான் நாங்கள் எங்கள்தளத்தில் சொல்லுகிறோம். //
 
I தீமோத்தேயு 2:௧ நான் பிரதானமாய்ச் சொல்லுகிற புத்தியென்னவெனில், எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;
பிலிப்பியர் 4:௬ நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.

மேலே சொல்லப்பட்ட வசனங்களில் எல்லோருக்காகவும் எல்லாவற்றை குறித்தும் வேண்டுதல் விண்ணப்பம் செய்ய வேண்டும்  என்று எழுதப்பட்டுள்ளது   நாம்  நமது கடமையை செய்வோம் தேவன் தனது சித்தப்படி எது தேவையோ அதை நிறைவேற்றட்டும். நமக்கு தேவனின் சித்தம்  முழுவதும் தெரியாது எனவே எல்லாவற்றையும் குறித்து ஜெபிப்பதில் எந்த தவறும் இல்லை! 
 
VEDAMANAVAN WROTE
///மேலும் தாங்கள் போதிக்கும் நீதியின் போதகம் எல்லா மார்கங்களும் மதங்களும் சொல்லும் போதகம் தான். அது நால் தான் பிரமன்னை முதல் தேவனாக உங்களால் தைரியமாக எழுத முடிகிறது. இப்படி எல்லாம் தேவ ஞானம் உள்ள உங்களிடம் எந்த தேவன் வெளிப்பாடுகளை தருகிறான் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது.////
 
எல்லா மார்க்கமும் சொல்லும் அதே நீதி நேர்மைதான் வேதாகமமும் சொல்கிறது கூடுதலாக சொல்லும் முக்கியமான ஓன்று "பாவிகளுக்கான இயேசுவின் மரணம் அதன் மூலம் நித்திய கிடைக்கும் ஜீவன்". அனால்அது அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு மட்டுமே பலிக்கும் என்று  வசனம் தெளிவாக சொல்கிறது.  
 
ரோமர் 3:௨௨ அது இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் தேவநீதியே; விசுவாசிக்கிற எவர்களுக்குள்ளும் எவர்கள்மேலும் அது பலிக்கும், வித்தியாசமே இல்லை.

அவர் கொடுக்கும் இரட்சிப்பை பெற்றுக்கொள்ள கவலையற்று இருப்பவர்களுக்கு தண்டனை உண்டு என்றும் வேதம் திட்டமாக  எச்சரிக்கிறது

எபிரெயர் 2:4
   இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக்குறித்து நாம் கவலையற்றிருப்போமானால்
தண்டனைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்.

VEDAMANAVAN WROTE 
 ////உங்கள் தளத்தில் எழுதுவதில்லை ஆனால், எல்லா தேவ தூஷனங்களும் என் தளத்தில் நிச்சயமாக எதிர்த்து எழுதப்படும்.///
 
இனி அதைப்பற்றி நான் கவலைப்பட போவது இல்லை சகோதரரே. தங்கள் எதிர்பார்க்கும் எல்லோருக்கும் மீட்பு என்ற தேவசித்தம் நிறைவேறவேண்டும் என்பதுதான் எனது ஆவலும் கூட,  அதற்காகவே தேவன்கொடுத்த் வெளிப்பாட்டின் அடிப்படையில் நானும்  பிரயாசப்படுகிறேன். அது  நிறைவேற நான் எனது பணியை தொடர்ந்து செய்கிறேன்.      


http://lord.activeboard.com/index.spark?aBID=134574&p=3&topicID=36864106
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி-12:28)


__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இவரின் கோட்பாடுகளும், இவர்களின் வெளிப்பாடுகளும் இவரின் தளத்தில் பதிந்திருக்கும் தரிசனங்களையும் வைத்து இங்கே பதிலாக தந்திருக்கும் பதிவை வாசித்து பாருங்கள், எத்துனை முறன்படுகள் இருக்கிறது.

எல்லாரும் இரட்சிக்கப்படவேண்டும் என்பது இவர் நினைக்கிறார் ஆனால் நரகம் இருக்கிறது என்று தேவன் இவருக்கு காண்பிக்கிறார், முறன்பாடாக இல்லை!!

ஆனால் வேதம் சொல்லுவது அனைவரின் இரட்சிப்பும் தான். அந்த இரட்சிப்பு ஏற்கனவே தீர்ப்பாக சொல்லப்பட்டுவிட்டது (ரோம் 5:19), இந்த இரட்சிப்பை தான் நாங்கள் இந்த தளத்தில் சுவிசேஷமாக சொல்லி வருகிறோம். சுந்தர் அவர்கள் எழுதிய பதில்களை வாசித்து அதில் இவர் சொல்ல வரும் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்ள அழைக்கிறேன்.

சுந்தர் எழுதுகிறார்:

"ஓரிரு வசனத்தை பிடித்துகொண்டு "எல்லோருக்கும் மீட்பு" என்று சொல்லும்  நீங்கள், சுமார்  ஐம்பது அறுபது வசனம் சொல்லும் "துன்மார்க்கருக்கு தண்டனை உண்டு" என்றும் அதுவும் "நித்திய ஆக்கினை உண்டு" என்றும் சொல்லும் வசனத்தை ஏன் கருத்தில் கொள்வதில்லை? அவ்வசனமும் வேதத்தில்தானே இருக்கிறது!  "

ஓஹோ, ஓரிரு வசனத்தில் தேவனின் முழுமையான இரட்சிப்பு இருந்தாலும் அந்த ஒரிரு வசனங்கள் பொய்யாகிவிடுமோ. வேதத்தை தேவனின் தன்மையிலிருந்து தான் புரிந்துக்கொள்ள வேண்டுமே தவிர, நாம் பார்க்கும் கணவுகளால் அல்ல. தேவன் அன்புள்ளவராக இருக்கிறார் என்றால் வேதத்தில் வரும் தண்டனை, அக்கினிக்கு என்ன அர்த்தமாக இருக்க முடியும் என்று பார்க்கவேண்டுமே தவிர உங்களின் மனவிருப்பத்தின்படி அல்ல!! ஒரு இரு வசனங்களும் வேதத்தில் இருப்பது உண்மையே, இல்லை என்றால் அந்த வசனங்களை தங்களின் வேதத்தில் இருந்து எடுத்து போட்டு விடுங்கள்!!

நரகம் மரணம் என்றால் என்ன என்று புரியாதவர்களுக்கு இந்த அக்கினி ஒரு சுவாரசியமான விஷயம் தான், செம்மறி ஆடு என்றால் நல்லவர்களாம், வெள்ளாடு என்றால் தீயவர்களாம், ஆனால் அக்கினி என்றால் மாத்திரம் அக்கினியாம். இது தான் உங்களை போன்றோர் உவமைகளை புரிந்துக்கொள்ளும் இலட்ச்சனம். சரி நீங்கள் தொடர்ந்து கணவுகளாக பார்த்து இல்லாத ஒரு அக்கினியை எழுதி தள்ளுங்கள், நாங்கள் எங்கள் வேலையை பார்க்கிறோம், அதான் தேவ அன்பை எடுத்து சொல்லுவது தான் எங்கள் வேலை, உங்களை போல் அழிவை விரும்புவது அல்ல‌!!



-- Edited by bereans on Friday 16th of July 2010 07:22:55 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"பாவத்தின் சம்பளம் மரணம்" என்று வேதம் மிகத்தெளிவாகக்கூறுவது இந்தக் கூறுகெட்ட ஜென்மங்களுக்கு விளங்காதது ஆச்சரியமில்லை. வெறும் தமிழ்வேதாகமத்தின் ஏதோ ஒரு அரைகுறை மொழிபெயர்ப்பை மாத்திரம் படித்து மனப்பாடம் செய்யும் அறிவிலிகளுக்கு தேவன் அருளிய வேதத்தின் மகத்துவங்கள் புரிய வாய்ப்பில்லை. இவர்கள் மஹா பாபிலோன் வேசியின் கோட்பாடுகளில் திளைத்து அவள் தரும் போதையில் கண்செருகிப்போய் இருப்பவர்கள். அவளது மதுவின் போதையில் மதிமயங்கிக்கிடக்கும் இவர்களிடம் இவ்வளவு வாதித்ததே வீண். தேவன் பொய்யை விசுவாசிக்கும்படி அனுப்பிய வஞ்சகத்தின் ஆவிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
மரணத்தைப்பற்றிய விளக்கமளிக்கத்தவறுபவர்கள் ஜீவனைப்பற்றி பேசுவது அபத்தத்திலும் அபத்தம். இவர்களது வேதத்தில் "பாவத்தின் சம்பளம் நரகம்" போலும். தேவன் எல்லாரையும் ரட்சிப்பது இவர்களுக்கு கேலிக்கூத்தாகத் தெரிகிறது. "தேவனால் கூடாதது ஒன்றுமில்லை" என்பதற்கு இவர்களால் விளக்கமளிக்கமுடியாது. இன்னும் தேவன் கொடுத்த வெளிப்பாடு என்று ஏமாற்றிகொண்டிருப்பவர்களை என்னவென்பது? கேட்டால் பவுலோடு பேசியவர் எங்களோடு பேசமாட்டாரா? என்பார்கள். இந்த அடிமுட்டாள்களோடு பேசும் தேவன் ஏன் எல்லாரிடமும் பேசிவிட வேண்டியதுதானே? மரணத்தைப்பற்றி விளக்கத்துப்புகெட்டவர்களுக்குத் தனியே தளம் வேறு. ஒரு ஹாஸ்யம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. "நீ பேசாதபோது நீ ஒரு வடிகட்டின முட்டாள் என்று முடிவுசெய்திருந்தேன், நீ பேசி அதை நிரூபித்துவிட்டாய்" . விட்டுத்தள்ளுங்கள்!






-- Edited by soulsolution on Friday 16th of July 2010 09:45:01 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard