சாத்தானின் தலை நசுக்கப்பட்டதா என்கிற ஒரு கேள்வி "இறைவன்" தளத்தில் ஆரம்பித்தது!
அதற்கு சம்பந்தமான ஒரு முக்கியமான வசனம்:
"ரோமர்16:20. சமாதானத்தின் தேவன் சீக்கிரமாய்ச் சாத்தானை உங்கள் கால்களின் கீழே நசுக்கிப்போடுவார். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபை உங்களுடனேகூட இருப்பதாக. ஆமென்"
இயேசு கிறிஸ்துவின் கிருபை என்னவென்றால் நம் அனைவருக்கும் உயிர்த்தெழுதலை உண்டு பண்ணினவர். ஆதி 3:15ல் சொல்லப்பட்ட தலை நசுக்குதல் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவது பவுல் ரோம் 16:20ல் சொல்லுவது போல் இயேசு கிறிஸ்துவை தலையாக கொண்டு அவரின் சரீரமான சபை மூலமாக தான் என்பதை வசனம் தெளிவாக சொல்லுகிறது.
இது சகோ சுந்தர் எழுதியது போல் மனிதர்களால் நிறைவேறும் காரியம் இல்லை, மாறாக கிறிஸ்துவும் சபையும் சேர்ந்து நிறைவேற்றப்போகும் காரியம். கிறிஸ்துவோடு ஆளுகை செய்யும் வாக்குப்பண்ணப்பட்ட ஒரு சிறிய மந்தை (அது யார் என்று இப்பொழுது மார்த்தட்டி சொல்லும் அளவிற்கு யாரும் உத்தமர்கள் அல்ல, ஏனென்றால் பலர் பல விதமான தரிசனங்கள் மூலமாக தங்களை ஏதோ ஸ்பெஷல் என்று என்னிவருவது இன்று கிறிஸ்துவ மண்டலத்தில் மிகவும் சகஜமான ஒரு விஷயமான இருக்கிறது, புதுசு புதுசா கிளம்பியிருக்கிறாங்க, கிறிஸ்தவர்களே ஜாக்கிறதை) மாத்திரமே. பவுல் போல் இன்றே , நல்ல போராட்டத்தை போராடினேன், நல்ல ஓட்டத்தை ஓடினேன், கிரீடம் எனக்கு காத்திருக்கிறது என்று சொல்லும் அலவிற்கு இன்று தங்களை பவுல் அளவிற்கு யாரும் என்னிக்கொள்ள வேண்டாம்.
ஆக வசனத்தை கேட்ட சகோ சுந்தருக்கு ரோம் 16:20 கண்டிப்பாக உதவும் என்று என்னுகிறேன். மேலும் சாத்தானின் தலை நசுக்கப்படுவது என்றவுடன் ஏதோ அவன் தலை நசுக்கப்பட்டு, அவன் கண்கள் பிதிங்கி, மூளை சிதைந்து போவது, பற்கள் வெளியே கொட்டி விடுவது, நாக்கு வெளியே தொங்கி விடுவது எல்லாம் கிடையாது. சாத்தானின் தலை நசுக்கப்படுவது என்றால் அவன் தற்போது இந்தப் பொல்லாத பிரபஞ்சத்தின் அதிபதியாக இருந்துக்கொண்டு கெடுக்கும் அதிகாரம் பரிக்கப்பட்டு இறுதியாக அப்படி ஒரு ஆவிக்குறிய ஜீவி இல்லாமல் செய்வது தான், தலை என்றால் அதிகாரத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும். அவ்வளவே!!