பழைய ஏற்பாட்டில் உள்ள வாக்குத்தத்தங்கள், கட்டளைகள் இன்று கிறிஸ்தவர்களும் பின் பற்ற வேண்டும் என்று பல முறை விவாதத்திற்கு வந்ததொன்றாகும். இதோ மேலும் சில வசனங்கள், காதுள்ளவர்கள் கேட்ககடவர்கள்,
ரோமர் 9:4. அவர்கள் இஸ்ரவேலரே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவாராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே; 5. பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே,"
ரோமர் 10:3. எப்படியென்றால், அவர்கள் (இஸ்ரவேலர்கள்; மாம்சத்தை பின்பற்றுகிற கிறிஸ்தவர்களும் தான்) தேவநீதியை அறியாமல், தங்கள் சுயநீதியை நிலைநிறுத்தத் தேடுகிறபடியால் தேவநீதிக்குக் கீழ்ப்படியாதிருக்கிறார்கள்.4. விசுவாசிக்கிற எவனுக்கும் நீதி உண்டாகும்படியாகக் கிறிஸ்து நியாயப்பிரமாணத்தின் முடிவாயிருக்கிறார்."
ஆக, இந்த பழைய ஏற்பாடு கட்டளைகள், அதினால் உண்டாகும் நீதி அனைத்தும் அந்த இஸ்ராயேல் மக்களுக்கே, நமக்கோ (கிறிஸ்துவை பின் பின்பற்றுபவர்களுக்கு) அந்த நீதி இன்று பெரும்பாலுமானோர் போதிக்கிறபடி நியாயப்பிரமான கிரியைகளினால் அல்ல மாறாக கிறிஸ்துவின் மேல் வைத்திருக்கும் விசுவாசமே அந்த நீதியை கொண்டு வரும்.