இன்று மாலை ஒரு புதிய கிறிஸ்தவ சபையினரை சந்தித்தேன். அவர்கள் தங்களை இந்த மாம்சத்திலிருக்கும்போதே கிறிஸ்துவின் அவயவங்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள்! நீங்கள் மறுபடியும் பிறந்தவரா என்று வழக்கமாக கேட்கப்படும் கேள்வியை என்னிடம் கேட்டார்கள்! அதன் பின், நீங்கள் இரட்சிக்கப்பட்டவரா என்று கேட்டார்கள்!? இரட்சிப்பு என்றால் என்ன என்று கேட்டேன்! இதற்கு முன் அவர்கள் "ஆவியில்" மரித்தவர்களாக இருந்தார்களாம், பிறகு கிறிஸ்துவை ஏற்றவுடன், தேவன் இவர்களுக்குள் வாசமானாராம், ஆகவே நாங்கள் மறுபடியும் ஆவியில் பிறந்தவர்களாகினோம் என்றார்கள், இதையே இரட்சிப்பு என்றும், இந்த இரட்சிப்பில் கடைசி வரை நடந்துக்கொண்டிருக்கவேண்டும் என்றார்கள். நான் கேட்டேன், "முன்பு ஆவியில் மரித்தவர்கள் என்றால் பாவத்தில் இருந்தீர்களே" இப்பொழுது மறுபடியும் பிறந்து, தேவன் உங்களுக்குள் வாசமாக இருக்கிறார் என்று சொல்லுகிறீர்களே, இபொழுது தாங்கள் பாவம் செய்வதில்லையா என்று கேட்டேன்? இல்லை பிரதர் இப்பொழுதும் பாவம் செய்கிறோம் என்றார்கள், அப்படி என்றால், முன்பு இருந்த நிலைக்கும் இப்பொழுது நாங்கள் "மறுபடியும் பிறந்திருக்கோம்" என்று பெருமை பாராட்டுகிறார்களே, இரு நிலைக்கும் என்ன வித்தியாசம். அப்பொழுதும் பாவம் செய்தார்கள், இப்பொழுதும் அதே நிலை தானே. நான் கேட்டேன், மறுபடியும் பிறந்த மனிதன் காற்றை போல் இருப்பான் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே, அவரும் உயிர்த்தெழுந்து ஆவியாக அப்படி தானே இருந்தார் ஆனால் நீங்களோ, எனக்கு முன் உட்கார்ந்து இருப்பதும், நீங்கள் சாப்பிடுவதும், குடிப்பதும் என்னால் பார்க்க முடிகிறதே, எப்படி "மறுபடியும் பிறந்திருக்கிறீர்கள்" என்று கேட்டாள் பதில் இல்லை!? அவர்களின் கருத்தின்படி மனிதனுக்குள் "ஒரு மனித ஆவி" முழு நினைவு, முழு சிந்தனையோடு செயல் படுகிறது. அது ஒரு தனி ஆள்த்தத்துவம் என்கிறார்கள். கடவுளே, எத்துனை சபைகள், எப்படி எப்படி கோட்பாடுகள்.