இஸ்லாம் மதத்தினர் சொல்லுகிறார்கள், "இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை" என்று, அவார்கள் மாத்திரமல்ல கிறிஸ்தவர்களிலும் பெரும்பாளுமானோர், அவர் நேரடியாக மரிக்கவில்லை என்றே சொல்லுகிறார்கள். ஆவி மரணம், சரீர மரணம் என்று பல மரணங்களை குறித்து பிரசங்கிக்கிறார்கள், இந்த பரலோகத்தையும், நரகத்தையும் பார்த்து வந்த ஊழியர்கள். கேள்வி என்னவென்றால், "இயேசு கிறிஸ்து சிலுவையில் மரித்தாரா? அல்லது மரிக்கவில்லையா?"
மரணத்தைப் பற்றி கேட்டாலே காததூரம் ஓடுபவர்கள் கிறிஸ்துவின் மரணத்தைக் குறித்தா விவாதிக்கப்போகிறார்கள்? கிறிஸ்து மரித்தார் என்று அவரே கூறியிருக்கிறார். மரணம் என்றால் என்னவென்று விளக்கத்தெரியாதவர்கள் கிறிஸ்து மரித்தாரா என்பதற்கு எப்படி விளக்கமளிப்பார்கள்? "அவர் சரீரம்தான் மரித்தது பிரதர் அவர் ஆவி போய் வேறு ஆவிகளுக்கு 'பிரசங்கம்' செய்தது என்பதற்கு வசனம் காண்பிப்பார்கள்.
அதுசரி இம்மாதிரி கேள்விகளை இவர்கள் 'நடத்தும்' சபையார் கேட்டால் எப்படி சமாளிக்கிறார்கள் என்றறிந்தால் சுவாரசியமாக இருக்கும்
பிரச்சனையே அது தானே!! சபையார் இவர்களிடம் இது போன்ற கேள்விகள் கேட்டால் அது ஊழியக்காரனை கனவீனம் பண்ணுவதாக என்னப்படும், பிறகு நரகம் போன்ற பயங்களை காண்பித்து இது போன்ற கேள்விகள் எழும்பாதபடி பார்த்துக்கொள்வது ஊழியர்கள் பொறுப்பு அல்லவா!? சபை விசுவாசிகள் பாவம் தசமபாகம் கொடுத்து பரலோகம் செல்லும் பாதையை தேடிக்கொண்டிருக்கும் போது, இது போன்ற கேள்விகள் கேட்க நியாயம் இல்லைதான்!! விசுவாசிகளும் என்று தான் விழிப்பார்களோ!?
இதென்ன கேள்வி பிரதர்? "மரித்தேன் ஆனாலும் சதாகாலமும் உயிரோடிடுக்கிறேன்" என்று அவரே பதில் சொல்கிறாரே. தாம் ஒருவரே சாவாமையுள்ளவர் என்று பிதாவைக்குறித்து வாசிக்கிறோம். அவர் அநாதி தேவன் ஆதி அந்தம் இல்லாதவர். அவருக்கு ஈடு இணை கிடையவே கிடையாது. அவர் ஒருவராகத்தான் இருக்கிறார்.
ஆனால் கிறிஸ்து உருவாக்கப்பட்ட ஒரு சிருஷ்டி என்றுதான் வேதம் கூறுகிறது. முதன்மையான படைப்பாக அவர் இருப்பதால்தான் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர் என்கிறோம். இவர் மரித்து மூன்றாம் நாள்தான் தேவனால் உயிர்த்தெழுப்பப்பட்டார். ஆக இயேசுகிறிஸ்து மரித்தார்.
மரணம் என்றாலே என்னவென்று தெரியாத பாபிலோனிய போலி, வேசிக்கிறிஸ்தவம் இது பற்றி அறிய நியாயமில்லை. இனி இவர்களை "SOB" (Sons of Babylon) என்று அழைக்கலாம். இங்கு நாம் B என்று குறிப்பிடுவது Babylon தான் என்றும் வேறேதும் அர்த்தம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.