kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகலமும் தேவ சித்தமே.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:
சகலமும் தேவ சித்தமே.


மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூயின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மனிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.

அப்17:26 ல் நடப்பவை எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது. மேலும், தேவன் நம்முடைய பிதாக்களைத் தெரிந்துகொண்டு, எகிப்து தேசத்தில் அவர்கள் பரதேசிகளாய் சஞ்சரித்தபோது ஜனங்களை உயர்த்தி, தமது புயபலத்தினாலே அதிலிருந்து அவர்களைப் புறப்படப்பண்ணி, .... அவர்களை ஆதரித்து... கானான் தேசத்தில் ஏழு ஜாதிகளை அழித்து, ...பங்கிட்டுக்கொடுத்து,.... 450 வருஷகாலமாய் நியாயாதிபதிகளை ஏற்படுத்திவந்தார்.... சவுலை நாற்பது வருஷகாலமாய் அவர்களுக்கு கொடுத்தார். பின்பு அவர் அவனைத்தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தினார்.... அப்13:17 முதல்23 வரை.
இவ்வாறு ஒரு இம்மி பிசகாமல் அனைத்தையும் தேவன் தம்முடைய சித்தப்படி நடத்திவருகிறார். ஆனால் ஒரு சிலர் சொல்வது போல அவர் ஒவ்வருவரது சித்தத்தின்படி தன்னுடைய திட்டங்களையும் தீர்மானங்களையும் மாற்றிக் கொண்டிருந்தால்.... வேதத்தில் கூறப்பட்ட எதுவுமே நடந்திருக்காது.
இஸ்ரவேல் மீண்டும் ஒரு தேசமாக உயிர்பெற வேண்டுமென்பது தேவசித்தம் எனவேதான் கி.பி70ல் காணாமல் போன தேசம் 1949ல் 'துளிர்த்து' தற்போது முழுவிருட்சமாக உள்ளது. இதெல்லாம் 'தற்செயலாக' நடக்கிறது என்று சொல்பவர்கள் வேதத்திலும், தேவ வல்லமையிலும் நம்பிக்கையில்லாதவர்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
வெளிப்படுத்தல் புத்தகம் முழுவதுமே கி.பி. முதல் நூற்றாண்டு முதல் வரப்போகும் கிறிஸ்துவின் ராஜ்ஜியம் வரையுள்ள காரியங்களின் சங்கேதக் குறிப்புகள்தான் என்று வேதத்தை சத்திய வெளிச்சத்தில் ஆராயும் அனைவரும் புரிந்துகொள்வார்கள்.
மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல

மத்தேயு 10:29 ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.


மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

மத்தேயு 18:14 இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.

மத்தேயு 26:39 சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

மத்தேயு 26:42 அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

யோவான் 5:30 நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது.

யோவான் 6:38 என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கிவந்தேன்.

ரோமர் 9:15 அவர் மோசேயை நோக்கி: எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன், எவன்மேல் உருக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் உருக்கமாயிருப்பேன் என்றார்.

I கொரிந்தியர் 1:1 தேவனுடைய சித்தத்தினாலே இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாகும்படி அழைக்கப்பட்டவனாகிய பவுலும், சகோதரனாகிய சொஸ்தெனேயும்,

I கொரிந்தியர் 12:11 இவைகளையெல்லாம் அந்த ஒரே ஆவியானவர் நடப்பித்து, தமது சித்தத்தின்படியே அவனவனுக்குப் பகிர்ந்துகொடுக்கிறார்.

அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

இயேசு கிறிஸ்துவுக்கே அவர் சுய‌சித்தம் செய்யக்கூடாமல் போனது; வேறுவழியே இல்லை என்று அவருக்குத்தெரியும்.
நாமெல்லாரும் சூழ்நிலையின் கைதிகள் அன்பு அவர்களே.
நடந்தவை, நடப்பவை, நடக்கப்போவது யாவும் தேவ சித்தம். தேவசித்தம் மட்டுமே. நீங்கள் இந்தக் காலத்தில், தமிழகத்தில், இந்தப் பெற்றோருக்கு பிறந்தாக வேண்டும் என்பது முன்தீர்மானிக்கப்பட்ட விஷயம். அதே போலத்தான் மனுஷ ஜாதியான சகல ஜனங்களுக்கும்.
த்தகைய அற்புதமான தேவன்!!!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யாத்திராகமம் 9:12 ஆனாலும், கர்த்தர் மோசேயோடே சொல்லியிருந்தபடியே, கர்த்தர் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களுக்குச் செவிகொடுக்கவில்லை.

யாத்திராகமம் 10:20 கர்த்தரோ பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடவில்லை.

 

 

யாத்திராகமம் 10:27 கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் அவர்களைப் போகவிட மனதில்லாதிருந்தான்.

 

 

யாத்திராகமம் 14:8 கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.

 

 

ஏன் கர்த்தர் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தவேண்டும்?

அவன் சுபாவமாகவே கடின இருதயமுள்ளவனாக இருந்திருக்கலாமே.

அப்ப தேவன் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுகிறாரா என்றால், ஆமாம். அதற்கு இந்த வசனங்கள் சாட்சி.

பார்வோனுக்கும் சுய சித்தம் இல்லை..



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

யோவான் 9:2 அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.

யோவான் 9:3 இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.

இப்படி அவன் குருடனாய் ஏன் பிறந்தான் என்பதற்கு காரணம் தேவன்.

இன்னும் பார்க்கலாம்,

யோவான் 5:5. முப்பத்தெட்டு வருஷம் வியாதிகொண்டிருந்த ஒரு மனுஷன் அங்கே இருந்தான்.

6. படுத்திருந்த அவனை இயேசு கண்டு, அவன் வெகுகாலமாய் வியாதிஸ்தனென்று அறிந்து, அவனை நோக்கி: சொஸ்தமாகவேண்டுமென்று விரும்புகிறாயா என்று கேட்டார்.

7. அதற்கு வியாதிஸ்தன் ஆண்டவரே, தண்ணீர் கலக்கப்படும்போது என்னைக் குளத்தில் கொண்டுபோய் விடுகிறதற்கு ஒருவருமில்லை, நான் போகிறதற்குள்ளே வேறொருவன் எனக்கு முந்தி இறங்கிவிடுகிறான் என்றான்.

8. இயேசு அவனை நோக்கி: எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்றார்.

9. உடனே அந்த மனுஷன் சொஸ்தமாகி, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, நடந்துபோனான். அந்த நாள் ஓய்வுநாளாயிருந்தது.

ஆக, இயேசுகிறிஸ்து வந்து ஓய்வுநாளில் சொஸ்தமாக்குவதற்கு இவன் முப்பத்தியெட்டு வருஷங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிருந்தே வியாதிப்பட்டிருக்கிறான் பாவம்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இப்படி எல்லாமே தேவ சித்தம் என்று சொல்லுவதால் இதை கால்வனிஸம் (Calvinism) என்று ஒதுக்குவார்கள் இந்த கிறிஸ்தவர்கள், ஏனென்றால் இவர்களுக்கு இவர்கள் மேல் தேவனை காட்டிலும் அதிக நம்பிக்கை இருக்கிறது!!

நான் விசுவசித்தால், நான் ஜெபித்தால், நான் கொடுத்தால், நான் பிரசங்கித்தால், நான் இது செய்தால் நான் அது செய்தால், தேவன் எனக்கு துனை செய்வார்!!! அதாவது தேவனால் இவர்கள் செயல்கள் அல்ல, இவர்களால் தேவன் செயல்ப்படுகிறார் என்கிற மமதையில் இருக்கிறது கிறிஸ்தவம்!! ஆனால் எல்லாவற்றையும் தன் சித்தத்தின் படி, தன் நேரத்தில் நேர்த்தியாக செய்கிறவர் தேவன் தான் என்கிற அறிவு இல்லாத இந்த மந்த புத்திக்காரர்கள் தங்களை மேன்மைப்படுத்துவதை பிரதான நோக்கமாக வைத்திருக்கிறார்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

சோல்சொல்யூஷன்:

//நடந்தவை, நடப்பவை, நடக்கப்போவது யாவும் தேவ சித்தம். தேவசித்தம் மட்டுமே.//

யாத்திராகமம் 32:9 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக் கழுத்துள்ள ஜனங்கள். 10 ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.

11 மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன? 12 மலைகளில் அவர்களைக் கொன்று போடவும், பூமியின்மேல் இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கவும், அவர்களுக்குத் தீங்குசெய்யும்பொருட்டே அவர்களைப் புறப்படப்பண்ணினார் என்று எகிப்தியர் சொல்லுவானேன்? உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். 13 உமது தாசராகிய ஆபிரகாமையும் ஈசாக்கையும் இஸ்ரவேலையும் நினைத்தருளும்: உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்.

14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

இங்கு மனுஷனாகிய மோசேயின் சித்தம் (அதாவது தேவன் தமது கோபத்தை விட்டு திரும்பி, இஸ்ரவேலர் அழியாதிருக்க வேண்டும் என்பது) நடந்ததா? அல்லது தேவசித்தம் (அதாவது இஸ்ரவேலரை அழித்துவிட்டு, மோசேயை பெரிய ஜாதியாக்குவது) நடந்ததா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//14 அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

இங்கு மனுஷனாகிய மோசேயின் சித்தம் (அதாவது தேவன் தமது கோபத்தை விட்டு திரும்பி, இஸ்ரவேலர் அழியாதிருக்க வேண்டும் என்பது) நடந்ததா? அல்லது தேவசித்தம் (அதாவது இஸ்ரவேலரை அழித்துவிட்டு, மோசேயை பெரிய ஜாதியாக்குவது) நடந்ததா? //

ஆக தேவனுடைய 'ஒரிஜினல்' திட்டம் மனிதர்களின் கீழ்ப்படியாமையால் மாறி அவர்களை அழிக்கப்போகும்போது மோசே அதை அவருக்கு ஞாபகப்படுத்தி, அவர் கோபத்தினால் 'மறந்து போயிருந்த' காரியங்களை நினைப்பூட்டி கெஞ்சி பிரார்த்தனை செய்ததால் தேவன் தன் ஒரிஜினல் திட்டத்தை செயல் படுத்தினார் என்று தோன்றுவது இயல்பு. இப்படி மனிதருடைய 'இடைப்படுதல்' இல்லாமல் தேவன் செயல்பட முடியாது என்று எண்ணுவது மனிதனை தேவனாக உயர்த்துவதாகும்.

தேவன் அவ்வாறு கோபப்படவும், மோசே ஜெபிக்கவும் பின்பு அதன்படியே நடக்கவும் வேண்டுமென்பதே தேவசித்தம். சகலமும் தேவசித்தம் என்றால் சகலமும்தான்.... இதில் எந்த நிகழ்வும் விதிவிலக்கல்ல. 

அப்பாடி தேவன் தமது ஜனங்களுக்கு 'தீங்கு' செய்ய நினைத்தார் என்பதையாவது அறிந்துகொண்டீர்களே. சந்தோஷம்.

எபிரேயர்11:39. இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டதை அடையாமற்போனார்கள்.

40. அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையானதொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார்.

அவர்கள் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை இன்னும் அடையவில்லை, வரும் ராஜ்ஜியத்தில்தான் அடைவார்கள். 

ஆதியாகமம் 26:5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் யாவையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள சகல ஜாதிகளும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.

ஆதியாகமம் 28:14 உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரம்புவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.

பூமியின் வம்சங்களெல்லாம், ஒரு குடுப்பம் பாக்கியில்லாமல் ஆசீர்வதிக்கப்படவேண்டும்!



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//அதில் என்ன சந்தேகம்!! தேவனின் சித்தம் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிறது!! அவரின் ஆவியை பெற்ற நான் வேதத்தின்படி எழுதுகிறேன் என்றால் நிச்சயமாக அவரின் சித்தம் இல்லாமல் எழுதமுடியாது!! நான் செய்யும் எதற்கும் தேவனுக்கு க்ரெடிட் தருகிறேன்//

அதாவது நீங்கள் நல்லது/கெட்டது எது செய்தாலும் அதன் பொறுப்பு தேவனையே சாரும் என்கிறீர்கள். ஆனால் வசனம் என்ன சொல்கிறது?

யாக்கோபு 1:14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான். 15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.

(தேவ சித்தத்தால் அல்ல) தன் சுய இச்சையினால் தான் ஒருவன் சோதனைக்குள்ளாகிறான், அவனது சுய இச்சை கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. ஆக ஒரு மனிதனின் பாவத்திற்குக் காரணம் அவனது சுய இச்சையேயன்றி தேவசித்தம் அல்ல என மேற்கூறிய வசனம் தெளிவாகக் கூறுகிறது.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//நீங்கள் உடை அணிவதில் கூட அவரின் சித்தம் இருக்கிறது, நீங்கள் சாப்பிடும் ஆகாரத்திலும் அவர் சித்தம் இருக்கிறது!! நீங்கள் தீமை செய்வதிலும் அவர் சித்தம் தான் இருக்கிறது!!//

இதற்கெல்லாம் வசன ஆதாரம் உண்டா சகோதரரே?

சோல்சொல்யூஷன்:

//அப்17:26 ல் நடப்பவை எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது.//

அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

இவ்வசனம் கூறுகிற காரியங்கள்:

1. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி,

(ஆதாம் எனும் ஒரே மனிதனின் இரத்தத்தால் சகல ஜனங்களையும் தோன்றப் பண்ணினார். ஆனால் இதற்கும் நடப்பவை எல்லாமே தேவசித்தம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?)

2. மனுஷரை பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, (இதற்கும் நடப்பவை எல்லாமே தேவசித்தம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?)

3. முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும், அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.

இக்காரியத்தின் முழு விளக்கம் என்ன? “நடப்பவை எல்லாம் தேவசித்தம்” என இதன் அடிப்படையில் எப்படிச் சொல்ல முடியும்? சற்று விளக்கமாகக் கூறுங்கள் சகோதரரே!




__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

நீதிமொழிகள் 3:5 உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, 6 உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்;

நீதிமொழிகள் 23:4 ஐசுவரியவானாகவேண்டுமென்று பிரயாசப்படாதே; சுயபுத்தியைச் சாராதே.

சுயபுத்தியைச் சாராதே என இவ்வசனங்கள் சொல்வதால், தேவசித்தத்திற்கு மாறாக நம் சுயபுத்தியில் நாம் நடக்க வாய்ப்புண்டு என்றுதானே அர்த்தம்?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

ஆதியாகமம் 1:27 தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்;

தேவன் சுயசித்தம் உள்ளவர். அவ்வாறெனில் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுக்கும் சுயசித்தம் உண்டல்லவா?

ஆதியாகமம் 3:22  பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ, மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்;

மனிதன் நன்மை/தீமை அறிந்து தேவனைப் போல் ஆன பின்னர்கூட தேவனைப் போல் அவனுக்கு சுயசித்தம் கிடையாதா?



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

மத்தேயு 6:7. அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அதிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள். 8. அவர்களைப்போல நீங்கள் செய்யாதிருங்கள்; உங்கள் பிதாவை நோக்கி நீங்கள் வேண்டிக்கொள்ளுகிறதற்கு முன்னமே உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.

மனிதனின் சிந்தையில் ஜெபிக்க வேண்டாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது!! நமக்கு என்ன தேவை என்று அவர் அறிந்திருக்கிறார், அதையே தருகிறார்!!

மத்தேயு 6:26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? 27. கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்? 28. உடைக்காகவும் நீங்கள் கவலைப்படுகிறதென்ன? காட்டுப்புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்பதைக் கவனித்துப்பாருங்கள். அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; 29. என்றாலும் சாலொமோன் முதலாய்த் தன் சர்வ மகிமையிலும் அவைகளில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன். 30. அற்ப விசுவாசிகளே! இன்றைக்கு இருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படும் காட்டுப் புல்லுக்குத் தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? 31. ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். 32. இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டியவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார்.

நீங்கள் உண்ணுவதும் உடுப்பதும் தேவனின் சித்தம் என்று வசனம் சொல்லுகிறது!!

//இக்காரியத்தின் முழு விளக்கம் என்ன? “நடப்பவை எல்லாம் தேவசித்தம்” என இதன் அடிப்படையில் எப்படிச் சொல்ல முடியும்? சற்று விளக்கமாகக் கூறுங்கள் சகோதரரே!//

முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார் என்பது என்ன தான் சொல்லுகிறது என்று உண்மையிலேயே தெரியவில்லையா!!??

//(தேவ சித்தத்தால் அல்ல) தன் சுய இச்சையினால் தான் ஒருவன் சோதனைக்குள்ளாகிறான், அவனது சுய இச்சை கர்ப்பந்தரித்து பாவத்தைப் பிறப்பிக்கிறது. ஆக ஒரு மனிதனின் பாவத்திற்குக் காரணம் அவனது சுய இச்சையேயன்றி தேவசித்தம் அல்ல என மேற்கூறிய வசனம் தெளிவாகக் கூறுகிறது.//

தேவ சித்தம் ஒரு மனுஷனுக்கு இச்சையை கொடுப்பதல்ல, மாறாக அனுமதிப்பதே!! தேவன் தீங்கை படைத்திருக்கிறார், அவர் தீங்கானவர் அல்ல!! தேவன் தீமையை பிசாசின் மூலமாக அனுமதிக்கிறார்!! இச்சை என்பதும் அதில் ஒன்று தான்!! இதை தேவன் அனுமதிக்கிறார்!! சுவிசேஷத்தில் வாசிக்கும் போது, ஒரு விபச்சாரி ஸ்திரி மனந்திரும்புவது தேவனுக்கு சித்தமாக இருந்தது!! விபச்சார பாவத்தில் மாட்டியிருந்த அவள் கிறிஸ்து இயேசுவினால் விடுவிக்கப்படுகிறார்!!

ஆக அந்த சுய இச்சையை அனுமதிப்பது தேவனின் சித்தம் தான், சகோதரரே!! இதற்காக தேவன் தான் இச்சையை தூண்டி விடுகிறாரா என்று எல்லாம் கேட்காதீர்கள்!! அதற்கு தான் பிசாசு இருக்கிறானே!! ஆனால் தேவனின் அனுமதி இல்லாமல் அவனும் செயல்ப்படுவதில்லை!! எடுத்துக்காட்டு யோபுவின் புத்தகத்தில் இருக்கிறது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

/அப்17:26 ல் நடப்பவை எல்லாமே தேவனது சித்தம் என்று தெளிவாக உள்ளது.//

அப்போஸ்தலர் 17:26 மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;

இவ்வசனம் கூறுகிற காரியங்கள்:

1. மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி,

(ஆதாம் எனும் ஒரே மனிதனின் இரத்தத்தால் சகல ஜனங்களையும் தோன்றப் பண்ணினார். ஆனால் இதற்கும் நடப்பவை எல்லாமே தேவசித்தம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?)

2. மனுஷரை பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து, (இதற்கும் நடப்பவை எல்லாமே தேவசித்தம் என்பதற்கும் என்ன சம்பந்தம்?)

3. முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும், அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்.

இக்காரியத்தின் முழு விளக்கம் என்ன? “நடப்பவை எல்லாம் தேவசித்தம்” என இதன் அடிப்படையில் எப்படிச் சொல்ல முடியும்? சற்று விளக்கமாகக் கூறுங்கள் சகோதரரே!//

சகல ஜனங்களையும் அவரே தோன்றப்பண்ணுகிறார், 'தற்செயலாக' யாரும் பிறப்பதில்லை, 

சகல ஜனங்களையும் பூமியின் மீதெங்கும் குடியிருக்கச் செய்து,

சகல ஜனங்களையும், யார் எந்தக் காலத்தில் பிறக்கவேண்டும் என்பதையும், அவர்கள் எங்கெங்கே குடியிருக்கவேண்டும் என்பதையும் முன்னரே அவர் தீர்மானம் செய்துவிட்டதாகத்தான் அர்த்தம். இவ்வளவு நாள் இந்த வசனத்தை என்ன அர்த்தத்தில் விளங்கிக்கொண்டீர்கள் என்று தெரியவில்லை.

இதற்கு வேறு ஏதும் வியாக்கியானம் இருப்பதாகவும் படவில்லை.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//தேவன் சுயசித்தம் உள்ளவர். அவ்வாறெனில் தேவசாயலாக சிருஷ்டிக்கப்பட்ட மனிதனுக்கும் சுயசித்தம் உண்டல்லவா?//

தேவன் சாவாமையுள்ளவரும் தான்!! நாமும் இருக்க வேண்டியது தானே!! தேவன் பாவம் செய்யாதவர் தான்!! நாம்!!?? நம் சுயசித்தம் என்பது தேவ சித்தத்திற்கு அடிபனிந்து தான் இருக்க முடியும்!!

சகோதரர் அன்பு அவர்களே, தேவனின் சித்தம் தானாகவே நடைப்பெறுகிறது!! ஏதோ அவர் ஒவ்வொரு மனிதனிடமும் போய், இன்று நீ காலை 5.00 மணிக்கு எழுந்து நடந்துவிட்டு, அதன் பின் வந்து குழித்து விட்டு, அதன் பின் அடுப்பு பற்ற வைத்து தேநீர் செய்து குடி போன்ற கட்டளைகளாக சொல்லுவதில்லை!! நீங்கள் சுயசித்தம் சுயசித்தம் என்கிறீர்களே, அது தேவனுக்கு கட்டுப்பட்டிருப்பதால், நான் அதை தேவனின் சித்தம் என்கிறேன்!! அப்படி என்றால் நாம் என்ன ரோபோவா என்று கேட்க கூடும்!! நாம் ரோபோக்கள் அல்ல, ஏனென்றால் தேவன் நமக்கு உணர்வுகளை தந்திருக்கிறார்!! அவர் நினைக்கும் போது தான் நாம் சிரிக்கின்றோம் என்று அல்ல, அவர் தீர்மானத்தின்படியே நாம் சிரிக்கிறோம் என்று தான் நான் எடுத்துக்கொள்கிறேன்!! என்ன இது, நீங்கள் சிரிப்பதும் தேவனின் சித்தம் தானா, எங்கே வசனம் என்று கேட்டால் எனக்கு தெரியாது!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//தேவ சித்தம் ஒரு மனுஷனுக்கு இச்சையை கொடுப்பதல்ல, மாறாக அனுமதிப்பதே!! தேவன் தீங்கை படைத்திருக்கிறார், அவர் தீங்கானவர் அல்ல!! தேவன் தீமையை பிசாசின் மூலமாக அனுமதிக்கிறார்!! இச்சை என்பதும் அதில் ஒன்று தான்!! இதை தேவன் அனுமதிக்கிறார்!! //

இதுவேதான் நான் சொல்ல வருவதும். ஆனால் தீமைக்கு யார் காரணம் திரியில் சோல்சொல்யூஷன் இப்படி எழுதியிருந்தார்:

//உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களும், அநியாயங்களும், கொள்ளை நோய், இன்னபிர துர்சம்பவங்கள், இயற்கைப் பேரழிவுகள் எல்லாமே தேவனால் 'ப்ரொக்ராமிங்' செய்யப்பட்டவையே!//

இக்கூற்றில் கொள்ளை நோய், துர்சம்பவங்கள், பேரழிவுகள் எல்லாமே தேவனால் “ப்ரொக்ராமிங்” செய்யப்பட்டவை என்பதை வேண்டுமானால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆகிலும் அவரது அந்த “ப்ரொக்ராம்” களில்கூட சில if else conditions-ம் உண்டு என்பதே உண்மை.உதாரணமாக பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

யோனா 3:1 இரண்டாந்தரம் கர்த்தருடைய வார்த்தை யோனாவுக்கு உண்டாகி, அவர்: 2 நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், நான் உனக்குக் கற்பிக்கும் வார்த்தையை அதற்கு விரோதமாய்ப் பிரசங்கி என்றார். 4 யோனா நகரத்தில் பிரவேசித்து, ஒருநாள் பிரயாணம்பண்ணி: இன்னும் நாற்பதுநாள் உண்டு, அப்பொழுது நினிவே கவிழ்க்கப்பட்டுப்போம் என்று கூறினான்.

5 அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசஞ்செய்யும்படிக் கூறினார்கள்; பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக்கொண்டார்கள். 6 இந்தச் செய்தி நினிவேயின் ராஜாவுக்கு எட்டினபோது, அவன் தன் சிங்காசனத்தைவிட்டு எழுந்து, தான் உடுத்தியிருந்த உடுப்பைக் கழற்றிப்போட்டு, இரட்டை உடுத்திக்கொண்டு, சாம்பலிலே உட்கார்ந்தான்.

7 மேலும் ராஜா, தானும் தன் பிரதானிகளும் நிர்ணயம்பண்ணின கட்டளையாக, நினிவேயிலெங்கும் மனுஷரும் மிருகங்களும், மாடுகளும் ஆடுகளும் ஒன்றும் ருசிபாராதிருக்கவும், மேயாமலும் தண்ணீர் குடியாமலும் இருக்கவும், 8 மனுஷரும் மிருகங்களும் இரட்டினால் மூடிக்கொண்டு, தேவனை நோக்கி உரத்த சத்தமாய்க் கூப்பிடவும், அவரவர் தம்தம் பொல்லாத வழியையும் தம்தம் கைகளிலுள்ள கொடுமையையும் விட்டுத் திரும்பவுங்கடவர்கள். 9 யாருக்குத் தெரியும்; நாம் அழிந்து போகாதபடிக்கு ஒருவேளை தேவன் மனஸ்தாபப்பட்டு, தம்முடைய உக்கிர கோபத்தைவிட்டுத் திரும்பினாலும் திரும்புவார் என்று கூறச்சொன்னான்.

10 அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக் குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

இச்சம்பவத்தை மேலோட்டமாகப் பார்த்தால் நினிவே 40 நாட்களுக்குப் பின் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் தேவனின் திட்டவட்டமான “ப்ரொக்ராமிங்” என நாம் நினைப்போம். ஆனால் உண்மை அதுவல்ல.

ஆனால் உண்மையில் அந்த “ப்ரொக்ராம்”-ல் ஒரு if else condition-ஐ தேவன் சேர்த்திருந்திருப்பார்.

அதாவது If Ninneveh people turn back from their sins then they should not be destroyed,

else (ie if they do not turn back from their sins) they should be destroyed என “ப்ரொக்ராம்” செய்திருப்பார்.

ஆக, தேவனின் “ப்ரொக்ராம்”-ல் நினிவே மக்களின் சித்தம்தான் அதிமுக்கியமான பங்கு வகித்தது. நினிவே மக்கள் மனந்திரும்பினார்கள், தேவனின் “ப்ரொக்ராம்” condition படியே நினிவே மக்களை தேவன் அழிக்கவில்லை.

இதே மாதிரியான condition தான் தேவனின் பல “ப்ரொக்ராம்”-ல் உள்ளது. ஆதியில் ஆதாமிடமும் இதே மாதிரியான condition தான். ஆனால் நீங்களோ “கனியைப் புசித்தால் சாகவே சாவீர்கள்எனும் தேவனின் condition-ஐ உப்புக்குச் சப்பாணியாக்கிவிட்டு, ஆதாம் கனியைச் சாப்பிடத்தான் வேண்டும், அதன் விளைவாக அவன் சாகத்தான் வேண்டும் என்பதே தேவனின் “ப்ரொக்ராம்” என்கிறீர்கள். அதாவது ஆதாம் பாவம் செய்யவேண்டும் என்பதே தேவனின் சித்தம் என்கிறீர்கள். இதைத்தான் நான் மறுக்கிறேன்.

மற்றபடி, மேலேயுள்ள பெரியன்ஸ்-ன் கூற்றுப்படி, ஆதாம் பாவம் செய்ய தேவன் அனுமதித்தார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன். சித்தத்திற்கும் அனுமதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சித்தம் என்பது “இப்படி நடப்பதுதான் தமது விருப்பம்” என்பதாகும். ஆனால் அனுமதித்தல் என்பது, இப்படி நடப்பதை தாம் விரும்பாவிட்டாலும், நடக்கப்போவதை தடுக்காமல் விட்டுவிடுவதாகும். (நடக்கப் போகும் எந்த ஒரு விஷயத்தையும் தடுக்கக்கூடிய வல்லமை தேவனுக்கு உண்டு; ஆனால் அந்த வல்லமையைப் பயன்படுத்தாமல், நடக்கப்போவதை தடுக்காமல் இருப்பதுதான் அனுமதித்தல் என்பதாகும்)

ஆதாமின் காரியத்தில், ஆதாம் பாவம் செய்யவிருப்பதைத் தடுக்கவேண்டும் என தேவன் நினைத்திருந்தால், அதை அவரால் நிச்சயம் செய்திருக்க முடியும். ஆனால் தேவன் அதை விரும்பவில்லை. ஒருவன் பாவம் செய்யவிருப்பதை வலுக்கட்டாயமாகத் தடுத்தால், அவனைப் படைத்த தேவனுக்கு என்ன மேன்மை? ஒருவனை அவனது சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவன் பாவம் செய்யாவிட்டால்தான் அவனைப் படைத்த தேவனுக்கு மேன்மை. அந்த மேன்மையை யோசேப்பு தேவனுக்குக் கொடுத்தார்; யோபு தேவனுக்குக் கொடுத்தார். இப்படி பலரைச் சொல்லலாம். நாமும் அவர்களைப் போலவே தேவனுக்கு மேன்மையைக் கொடுக்கவே அழைக்கப்பட்டுள்ளோம்.

தேவதாசனாகிய தாவீது பாவம் செய்தபோது, கர்த்தருடைய சத்துருக்கள் தூஷிக்க தாவீது காரணமானார் என 2 சாமுவேல் 12:14 கூறுகிறதல்லவா? அவ்வாறெனில் மனிதனைப் பொறுத்தவரை தேவனின் சித்தம் என்னவாக இருக்கும்? மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அதன் மூலம் அவரது நாமம் மகிமைப்படவேண்டும் என்பதுதானே?

ஆனால் நீங்களோ, மனிதன் பாவம் செய்வதுதான் தேவனின் சித்தம் என்பதாகவும், அதன் மூலம் அவரது நாமம் தூஷிக்கப்படவேண்டும் என்பதே அவரது சித்தம் என்பதுபோலவும் கூறுகிறீர்கள்.

மனிதன் பாவம் செய்யத்தான் வேண்டும், அதன் மூலம் பாவத்தின் விளைவை அவன் அறியவேண்டும் என்பதே தேவனின் சித்தம் என்கிறீர்கள். குறிப்பாக மனிதன் எதைச் செய்தாலும் அதற்கு தேவன் தான் பொறுப்பு என்றும், மனிதன் பாவம் செய்வது உட்பட எதுவுமே மனித சித்தத்தின்படி நடக்கவில்லை என்கிறீர்கள்.

இதை யாராவது அப்படியே ஏற்றுக்கொண்டால் என்ன நினைப்பார்கள்? பாவம் செய்யவேண்டும் என சாத்தான் அவர்களைத் தூண்டும்போது, நாம் ஏன் பாவத்துக்கு எதிராகப் போராட வேண்டும்? நாம் பாவம் செய்தால் அது தேவனின் சித்தம்தானே? அப்படித்தானே நம் கோவை பெரியன்ஸ் திட்டமாகக் கூறுகிறார்கள்? எனவே பேசாமல் பாவத்தை செய்துவிடுவோம், மற்றதை தேவன் பார்த்துக்கொள்வார் என நினைக்கக்கூடுமல்லவா?

எனவேதான் உங்கள் சித்தாந்தத்திற்கு எதிராக இத்தனை போராட்டம் செய்கிறேன்.

மறுபடியும் சோல்சொல்யூஷனின் கூற்றுக்கு வருவோம்.

//உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களும், அநியாயங்களும், கொள்ளை நோய், இன்னபிர துர்சம்பவங்கள், இயற்கைப் பேரழிவுகள் எல்லாமே தேவனால் 'ப்ரொக்ராமிங்' செய்யப்பட்டவையே!//

உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களும் அநியாயங்களும் தேவனால் “ப்ரொக்ராமிங்” செய்யப்பட்டவை என்கிறார். அதாவது அக்கிரமங்களும் அநியாயங்களும் இப்படித்தான் நடக்கவேண்டும் என தேவனே சித்தங்கொண்டு, அதை ஒரு திட்டமாக வகுத்து, அத்திட்டத்தின்படியே மனிதன் நடப்பதை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுபோல சோல்சொல்யூஷன் கூறுகிறார். ஆனால் வசனம் என்ன சொல்கிறது?

ரோமர் 2:24 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? 24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

1 பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

மனிதன் செய்யும் அக்கிரமங்களும் அநியாயங்களும் தேவனுக்கு தூஷணத்தையே கொண்டுவருகிறது. இப்படியிருக்க, தாம் தூஷிக்கப்படுவதற்கு தேவன் தாமே சித்தப்படுவாரா? அதற்காக “ப்ரொக்ராமிங்” வகுப்பாரா? நிச்சயம் மாட்டார்.

மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட சுயாதீன சித்தத்தின்படி அவன் நடக்க தேவன் அனுமதிக்கிறார், அவ்வளவே. மனிதனோ அந்த சுயாதீன சித்தத்தில் அக்கிரமத்தையும் அநியாயத்தையும் செய்து (இப்படிச் செய்வதற்கு சாத்தான் தூண்டுகிறான்), தேவனுக்கு தூஷணத்தைக் கொண்டுவருகிறான். தேவனுக்கு தூஷணத்தைக் கொண்டுவரும் இக்காரியத்திற்கு மனித சித்தமே காரணமேயன்றி, தேவசித்தம் காரணமல்ல.

எனவே நடப்பதெல்லாம் தேவ சித்தமே எனும் சித்தாந்தம் தவறானது. நடப்பதையெல்லாம் தேவன் நினைத்தால் தடுக்கமுடியும், ஆனால் அவர் அப்படி தடுக்காமல் அவை நடப்பதற்கு அனுமதிக்கிறார் என்பதே உண்மை.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//இதுவேதான் நான் சொல்ல வருவதும். ஆனால் தீமைக்கு யார் காரணம் திரியில் சோல்சொல்யூஷன் இப்படி எழுதியிருந்தார்:

//உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களும், அநியாயங்களும், கொள்ளை நோய், இன்னபிர துர்சம்பவங்கள், இயற்கைப் பேரழிவுகள் எல்லாமே தேவனால் 'ப்ரொக்ராமிங்' செய்யப்பட்டவையே!//

இக்கூற்றில் கொள்ளை நோய், துர்சம்பவங்கள், பேரழிவுகள் எல்லாமே தேவனால் “ப்ரொக்ராமிங்” செய்யப்பட்டவை என்பதை வேண்டுமானால் ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆகிலும் அவரது அந்த “ப்ரொக்ராம்” களில்கூட சில if else conditions-ம் உண்டு என்பதே உண்மை.உதாரணமாக பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.//

தீமையை செய்ய தேவன் கருவிகளாக பயன்ப்படுத்தவும் செய்கிறார், அதற்கும் பல வசனங்கள் சொல்லியாயிற்று!!  யோனாவின் இந்த ஒரு பகுதியில் உள்ள if else conditions‍ம் அவரே தான் தீர்மானிக்கிறார்!!

//இச்சம்பவத்தை மேலோட்டமாகப் பார்த்தால் நினிவே 40 நாட்களுக்குப் பின் அழிக்கப்படவேண்டும் என்பதுதான் தேவனின் திட்டவட்டமான “ப்ரொக்ராமிங்” என நாம் நினைப்போம். ஆனால் உண்மை அதுவல்ல.//

தேவனின் ப்ரோக்ராமிங் நினேவை 40 நாட்களில் அழிப்பது அல்ல, மாறாக யோனாவிற்கு சில விஷயங்களை புரியவைக்கவே அங்கே கூட்டி வருகிறார்,

யோனா 4:10. அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. 11. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

யோனாவை கூட்டி வந்ததே தேவனின் அன்பை புரிந்துக்கொள்ளவைக்கவே அன்றி நினிவேவை அழிப்பதற்காக இல்லை!! யோனாவிற்கு தேவ அன்பை புரியவைக்க அவர் நினிவே பட்டனத்தை பயன்ப்படுத்திக்கொள்கிறார்!!

மேலும் ஆதாம் பாவம் செய்தால் அதை தேவன் தடுத்திருக்கலாம் என்பது தவறான புரிந்துக்கொள்ளுதல்!! ஆதாம் பாவம் செய்ய வேண்டிய எல்லா சூழலையும் தேவனே உருவாக்கி தந்தார்!! பார்வைக்கு இன்பமும் இச்சையடையத்தக்க மரத்தை வைத்தவர் தேவன், சாத்தானை அனுமதித்தது தேவன், ஆதாம் பாவத்தில் விழுந்து அவன் தீமையின் அனுபவத்தை பெறவேண்டும் என்பதற்காகவே கிறிஸ்து இயேசுவை உலக தோற்றமுதல் நியமித்த தேவன், ஆதாம் பாவம் செய்வதை தடுப்பதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக ஆதாம் பாவம் செய்ய வேண்டும், அவன் மூலமாக முழு மனிதகுலமும் பாவத்தில் வாழ்ந்து தீமையின் அனுபவத்தை பெற வேண்டும், பின்பு கிறிஸ்து இயேசுவின் ஈடுபலியினால் யாவரும் இரட்சிக்கப்பட்டு, நண்மையை அனுபவிக்க நித்திய ஜீவனை பெறவேண்டும் என்பது தான் லாஜிக்!!

தேவன் ஆதாமை பாவம் செய்ய தடுக்க நினைத்திருந்தால் எதற்கு இயேசு கிறிஸ்துவை நியமித்திருக்க வேண்டும்??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

 

//இதே மாதிரியான condition தான் தேவனின் பல “ப்ரொக்ராம்”-ல் உள்ளது. ஆதியில் ஆதாமிடமும் இதே மாதிரியான condition தான். ஆனால் நீங்களோ “கனியைப் புசித்தால் சாகவே சாவீர்கள்” எனும் தேவனின் condition-ஐ உப்புக்குச் சப்பாணியாக்கிவிட்டு, ஆதாம் கனியைச் சாப்பிடத்தான் வேண்டும், அதன் விளைவாக அவன் சாகத்தான் வேண்டும் என்பதே தேவனின் “ப்ரொக்ராம்” என்கிறீர்கள். அதாவது ஆதாம் பாவம் செய்யவேண்டும் என்பதே தேவனின் சித்தம் என்கிறீர்கள். இதைத்தான் நான் மறுக்கிறேன்.

மற்றபடி, மேலேயுள்ள பெரியன்ஸ்-ன் கூற்றுப்படி, ஆதாம் பாவம் செய்ய தேவன் அனுமதித்தார் என்பதை நான் முழுமையாக ஏற்கிறேன். சித்தத்திற்கும் அனுமதிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. சித்தம் என்பது “இப்படி நடப்பதுதான் தமது விருப்பம்” என்பதாகும். ஆனால் அனுமதித்தல் என்பது, இப்படி நடப்பதை தாம் விரும்பாவிட்டாலும், நடக்கப்போவதை தடுக்காமல் விட்டுவிடுவதாகும். (நடக்கப் போகும் எந்த ஒரு விஷயத்தையும் தடுக்கக்கூடிய வல்லமை தேவனுக்கு உண்டு; ஆனால் அந்த வல்லமையைப் பயன்படுத்தாமல், நடக்கப்போவதை தடுக்காமல் இருப்பதுதான் அனுமதித்தல் என்பதாகும்)

உலகில் நடக்கும் எல்லா அக்கிரமங்களும் அநியாயங்களும் தேவனால் “ப்ரொக்ராமிங்” செய்யப்பட்டவை என்கிறார். அதாவது அக்கிரமங்களும் அநியாயங்களும் இப்படித்தான் நடக்கவேண்டும் என தேவனே சித்தங்கொண்டு, அதை ஒரு திட்டமாக வகுத்து, அத்திட்டத்தின்படியே மனிதன் நடப்பதை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதுபோல சோல்சொல்யூஷன் கூறுகிறார். ஆனால் வசனம் என்ன சொல்கிறது?

ரோமர் 2:24 நியாயப்பிரமாணத்தைக்குறித்து மேன்மைபாராட்டுகிற நீ நியாயப்பிரமாணத்தை மீறிநடந்து, தேவனைக் கனவீனம்பண்ணலாமா? 24 எழுதியிருக்கிறபடி, தேவனுடைய நாமம் புறஜாதிகளுக்குள்ளே உங்கள் மூலமாய்த் தூஷிக்கப்படுகிறதே.

 

1 பேதுரு 4:14 நீங்கள் கிறிஸ்துவின் நாமத்தினிமித்தம் நிந்திக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால் தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே தூஷிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.

மனிதன் செய்யும் அக்கிரமங்களும் அநியாயங்களும் தேவனுக்கு தூஷணத்தையே கொண்டுவருகிறது. இப்படியிருக்க, தாம் தூஷிக்கப்படுவதற்கு தேவன் தாமே சித்தப்படுவாரா? அதற்காக “ப்ரொக்ராமிங்” வகுப்பாரா? நிச்சயம் மாட்டார்.//

அன்பு அவர்களே உங்கள் வாதம் சுவாரசியமாக இருந்தாலும் அதில் லாஜிக் இல்லை.

ஆதாம் பாவம் செய்யாமலும் இருந்திருக்கலாம் அல்லவா? பின் ஏன் 'உலகத்தோற்ற‌த்துக்கு' முன்பாகவே அவர் கிறிஸ்துவையும் சபையையும் முன்குறிக்க வேண்டும்? ஓஹோ ஆதாம் பாவம் செய்தாலும் செய்வான் எதற்கும் 'முன்னெச்சரிக்கையாக' குமாரனை ரெடி பண்ணிவைக்கலாம் என்றா? அல்ல சகோதரரே.

சுயசித்தம் என்ற ஒன்று இல்லவே இல்லை! நீங்களும் நானும் மட்டுமல்ல குறிப்பிட்ட கால கட்டத்தில், குறிப்பிட்ட சூழிநிலையில் ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கிறோமென்றால் வேறு வழியே இல்லாததால்தான். நமக்கு ஆயிரக்கணக்கான சான்ஸ் இருந்து அதில் ஒன்றைத் தெரிவு செய்ய நேரிட்டால் அதை ஓரளவு சுயசித்தம் எனலாம். இருக்கும் நிலையில் முடிவுகள் நம் மீது திணிக்கப்படுவதுதான் உண்மை. அதைத் தவர வேறு நடக்க வாய்ப்பேயில்லை.

இயற்கைப் பேரழிவு, துர்சம்பவங்கள், நோய்கள் தேவனால் என்று ஒத்துக்கொண்டீர்கள் நன்றி. ஆனால் இக்காலத்து இயற்கைப் பேரழிவுகள் மனிதன் காடுகளை அழித்ததாலும், இயற்கைக்கு எதிராக (வெப்பமயமாகுதல்) மனிதனுடைய செயல்களால், மனிதன் ஏன் செய்தான்? அவனுக்கு வேறு வழியில்லை. அப்படி செய்யாமலிருந்திருக்க வாய்புள்ளதா? இல்லவே இல்லை. துர்சம்பவங்கள்... ஒரு மனிதன் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி பலர் மடிவது துர்சம்பவம் என்றால் அவன் மதுவருந்ததுவது? Human Error முலமாக பெரும் விமான விபத்துகள் நடக்கின்றதே! அதேபோலத்தான் நோய்களும், மனிதன் செயற்கையாக இரசாயனம், பூச்சிக்கொல்லி, மரபணுமாற்றம் செய்து 'உணவு' என்று உண்மையில் உடலுக்குக் கேடானதை உண்டு நோய்வாய்ப்ப்டுகிறான். ஆக நோயை உண்டாக்க தேவனுக்கு மனிதனின் தயவு தேவைப்படுகிறதா?

இயேசுவின் தாய் மரியாளுடைய தகப்பனுக்கு திருமணத்தில் விருப்பமே இல்லாது போயிருந்தால் கிறிஸ்து எலிசபெத்திடம்தான் பிறந்திருப்பார் என்பதுபோலுள்ளது உங்கள் வாதம்..

மேலும் மனிதனுடைய சித்தம் என்ற உங்கள் கூற்று உண்மையாக இருந்தால் தேவனால் ஒரு தீர்க்கதரிசனம் கூட அறிய முடியாது. அதாவது நடக்கப்போவது தேவனால்கூட அறிய முடியாது, எனும் பட்சம் அவர் சர்வ வல்லவர் என்ற தகுதியை, தேவத்துவத்தை இழந்துவிடுகிறார். என்னைப் பொறுத்தவரை அவருக்கு 'விருப்பமில்லாத' காரியங்கள் நடக்கிறது என்று கூறுவதுதான் தேவதூஷணம். அதை நீங்களே செய்கிறீர்கள் நண்பரே!

ஆதாம் கீழ்ப்படியாமல் போனது தேவனுக்கு மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்குமோ? ஆதாமுக்கு வேறு வழியே இல்லை. உலத்தோற்றத்துக்கும் முன்பாக அவர் சிலரைத் தன் குமாரனுக்கு சாயலாகத் தெரிந்து கொண்டார், குறிப்பிட்ட நோக்கத்துக்காக. அது நிறைவேற வேண்டுமென்றால் ஆதாம் பாவம் செய்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் தேவனுடைய 'ப்ரோக்ராம்' தோற்றுவிடும். உலகம் தோன்றுவதற்கும் முன்பே போட்ட ப்ரொக்ராம் மனிதனால் மாறுவதில்லை.

சகலமும் 100% தேவ சித்தம். "அவனன்றி ஒரு அணுவும் அசையாது" என்று உணர்ந்துதான் சொல்லியிருக்கிறார்கள். முற்றிலும் உண்மை. உலகில் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. அவர் சித்தப்படி எல்லாமே அட்சர சுத்தமாய், மிக நேர்த்தியாக நடைபெறுகிறது. அது மட்டுமே நடக்கும். குழந்தை கையில் அழகாகத் தோன்றும் சாக்லெட் கொடுத்துவிட்டு அதை சாப்பிடக் கூடாது என்று சொல்வதுபோலுள்ளது. மனிதனின் இச்சைக்கு 'தீனி'போடும் சகல சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்திவிட்டு அவன் இச்சைக்கு விலைபோகமாட்டான் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் சரி. 

//இதை யாராவது அப்படியே ஏற்றுக்கொண்டால் என்ன நினைப்பார்கள்? பாவம் செய்யவேண்டும் என சாத்தான் அவர்களைத் தூண்டும்போது, நாம் ஏன் பாவத்துக்கு எதிராகப் போராட வேண்டும்? நாம் பாவம் செய்தால் அது தேவனின் சித்தம்தானே? அப்படித்தானே நம் கோவை பெரியன்ஸ் திட்டமாகக் கூறுகிறார்கள்? எனவே பேசாமல் பாவத்தை செய்துவிடுவோம், மற்றதை தேவன் பார்த்துக்கொள்வார் என நினைக்கக்கூடுமல்லவா?

எனவேதான் உங்கள் சித்தாந்தத்திற்கு எதிராக இத்தனை போராட்டம் செய்கிறேன்.//

அய்யா இதை யாராவது அப்படியே ஏற்றுக்கொண்டால் ...பாவம் செய்துவிடுவோம் என்று எண்ணினால் அதுவே அவனுடைய உண்மை சொரூபம். ஏன் நீங்கள் செய்வீர்களா? எந்தப்போராட்டமும் போராடி எதையும் மனிதனால் சாதிக்க முடியாது. நடப்பது நடந்தே தீரும். மேலும் இது எங்கள் சித்தாந்தம் கிடையாது. தேவனுடைய சித்தம். வேதம் அதைத்தான் சொல்கிறது. நீங்கள்தான் மனிதனுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு தேவனை தூஷிக்கிறீர்கள், அவருக்கு விருப்பமில்லாத காரியங்கள் கூட நடக்கிறதென்று.

மீண்டும் அப்17:6 வாசிக்கவும். யார் யார் எந்தக் காலத்தில் எங்கே பிறந்து 'குடியிருக்கவேண்டும்' என்பது அவர் 'ப்ரோக்ராமிங்' என்றுதான் வசனம் சொல்கிறது.

//(நடக்கப் போகும் எந்த ஒரு விஷயத்தையும் தடுக்கக்கூடிய வல்லமை தேவனுக்கு உண்டு; ஆனால் அந்த வல்லமையைப் பயன்படுத்தாமல், நடக்கப்போவதை தடுக்காமல் இருப்பதுதான் அனுமதித்தல் என்பதாகும்)//

ஆக நடக்கும் எல்லா அநியாய, அக்கிரமங்கள், கொள்ளைநோய், பேரழிவுகள், மனிதன் பாவம் செய்வது இதெயெல்லாம் தடுக்கக்கூடிய வல்லமை இருந்தும் சரி நடப்பது நடக்கட்டும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்று வேடிக்கைபார்க்கும் ஒரு குரூரமான தேவனைத்தான் நீங்கள் சித்தரிக்கிறீர்கள்! அய்யா தடுக்காமல் இருப்பது அனுமதித்தல் என்று நீங்கள் சொல்கிறீகள், தடுப்பதற்கு வல்லமையிருந்தும் அதை அனுமதித்தால் என்ன அர்த்தம்? அந்த விஷயம் அவ்வாறே நடந்த்தாக வேண்டும் என்பதுதானே? அதைத்தான் தேவ சித்தம் என்கிறோம், நீங்கள் மனிதசித்தம் என்கிறீர்கள்.

எல்லா செயல்களுக்கும் அவரே பொறுப்பு ஆகவேதான் எல்லாருக்கும் இரட்சிப்பு என்று வேதம் கூறுகிறது.

 

 



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ரோமர்8:19. மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது.

20. அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே,

21. அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

அந்த 'சிருஷ்டி'யில் அனைவரும் அடங்குவார்கள், 'நீதிமானகள்'உட்பட, யாரும் விதிவிலக்கல்ல‌...

இதோ 'மாயை' பற்றியும் சகலமும் தேவன் கையில்தான் இருக்கிறது என்பதையும் ஞானி விளக்குகிறான்.

பிரசங்கி5:19. தேவன் ஐசுவரியத்தையும் சம்பத்தையும் எவனுக்குக் கொடுத்திருக்கிறாரோ, அவன் அதிலே புசிக்கவும், தன்பங்கைப் பெறவும், தன் பிரயாசத்திலே மகிழ்ச்சியாயிருக்கவும் அவனுக்கு அதிகாரம் அளிப்பது தேவனுடைய அநுக்கிரகம்.

20. அவனுடைய இருதயத்திலே மகிழும்படி தேவன் அவனுக்கு அநுக்கிரகம்பண்ணுகிறபடியினால்,அவன் தன் ஜீவனுள்ள நாட்களை அதிகமாய் நினையான்.

6:1. சூரியனுக்குக் கீழே நான் கண்ட வேறொரு தீங்குமுண்டு. அது மனுஷருக்குள்ளே பெரும்பாலும் நடந்து வருகிறது.

2. அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.

7:13. தேவனுடைய செயலைக் கவனித்துப்பார்; அவர் கோணலாக்கினதை நேர்மையாக்கத்தக்கவன் யார்?

9:2. எல்லாருக்கும் எல்லாம் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; சன்மார்க்கனுக்கும் துன்மார்க்கனுக்கும், நற்குணமும் சுத்தமுமுள்ளவனுக்கும் சுத்தமில்லாதவனுக்கும், பலியிடுகிறவனுக்கும் பலியிடாதவனுக்கும், ஒரேவிதமாய்ச் சம்பவிக்கும்; நல்லவனுக்கு எப்படியோ பொல்லாதவனுக்கும் அப்படியே; ஆணையிடுகிறவனுக்கும் ஆணையிடப் பயப்படுகிறவனுக்கும் சமமாய்ச் சம்பவிக்கும்.

3. எல்லாருக்கும் ஒரேவிதமாய்ச் சம்பவிக்கிறது சூரியனுக்குக் கீழே நடக்கிறதெல்லாவற்றிலும் விசேஷித்த தீங்காம்;

12. தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

11:5. ஆவியின் வழி இன்னதென்றும், கர்ப்பவதியின் வயிற்றில் எலும்புகள் உருவாகும் விதம் இன்னதென்றும் நீ அறியாதிருக்கிறதுபோலவே, எல்லாவற்றையும் செய்கிற தேவனுடைய செயல்களையும் நீ அறியாய்.

8. மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.

இந்த மாயைக்குத்தான் சர்வசிருஷ்டியும் கீழ்ப்படுத்தினவராலே கீழ்ப்படுத்தப்பட்டுள்ளது.




__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

பெரியன்ஸ்:

//நீங்கள் உண்ணுவதும் உடுப்பதும் தேவனின் சித்தம் என்று வசனம் சொல்லுகிறது!!//

இதையெல்லாம் நான் எதிர்க்கவில்லை சகோதரரே! நாம் உண்ணுவதும் உடுப்பதும் நம் சுயசித்தப்படி நடந்தாலும் சரி, அல்லது தேவசித்தப்படி நடந்தாலும் சரி. அதில் பிரச்சனையே இல்லை.

ஆனால் நாம் பாவம் செய்வதுகூட தேவசித்தம்தான் எனச் சொல்வதைத்தான் ஏற்கமுடியவில்லை. அதாவது பாவம் செய்யாதே என தேவன் ஒருபுறம் சொல்லிவிட்டு, தமது கட்டளைக்குக் கீழ்ப்படியாமல், மனிதன் பாவம் செய்யத்தான் வேண்டும் என அவரே சித்தப்படுவதாக சொல்வதைத்தான் என்னால் ஏற்கமுடியவில்லை.

பெரியன்ஸ்:

//தேவனின் ப்ரோக்ராமிங் நினேவை 40 நாட்களில் அழிப்பது அல்ல, மாறாக யோனாவிற்கு சில விஷயங்களை புரியவைக்கவே அங்கே கூட்டி வருகிறார்,//

இதெல்லாம் உங்கள் கற்பனையேயன்றி, வசன ஆதாரம் எதுவுமில்லை.

//யோனாவை கூட்டி வந்ததே தேவனின் அன்பை புரிந்துகொள்ளவைக்கவே அன்றி நினிவேவை அழிப்பதற்காக இல்லை!!//

நினிவேயை அழிக்கப்போவதைக் குறித்து ஜனங்களிடம் சொல்லி அவர்களை எச்சரிக்கை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில்தான் தேவன் யோனாவை அழைத்து வந்ததாக வசனம் கூறுகிறது. ஆனால் நீங்களோ, நீங்களாக கற்பனை செய்து இதற்காகத்தான் யோனாவை அழைத்து வந்தார் என்கிறீர்கள். உண்மையில், தேவனின் அன்பை ஏற்கனவே யோனா புரிந்திருந்தார். அதற்கு ஆதாரமான பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

யோனா 4:1 யோனாவுக்கு இது மிகவும் விசனமாயிருந்தது; அவன் கடுங்கோபங்கொண்டு, 2 கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: ஆ கர்த்தாவே, நான் என் தேசத்தில் இருக்கும்போதே நான் இதைச் சொல்லவில்லையா? இதினிமித்தமே நான் முன்னமே தர்ஷீசுக்கு ஓடிப்போனேன்; நீர் இரக்கமும் மன உருக்கமும் நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவரும், தீங்குக்கு மனஸ்தாபப்படுகிறவருமான தேவனென்று அறிவேன்.

நினிவே சங்கதிக்கு முன்பாகவே தேவனின் அன்பை, இரக்கத்தை யோனா நன்கு புரிந்திருந்ததால்தான், ஆரம்பத்தில் தேவன் சொன்னதை அவர் செய்யாமல் தர்ஷீசுக்கு ஓடிப்போனார். மனிதர்களின் நடவடிக்கேற்றபடி தேவன் தமது தீர்மானத்தை மாற்றுகிறார் என்பதற்கு நினிவே சம்பவம் சிறந்த உதாரணமாயுள்ளது.

நான் என்னதான் சொன்னாலும், உங்கள் கருத்தை நீங்கள் மாற்றப்போவதில்லை; அவ்வாறே நீங்கள் என்னதான் சொன்னாலும், எனது கருத்தை நான் மாற்றப்போவதில்லை.

இதுவரை நீங்களும் நானும் நமது கருத்துக்களைக் கூறியுள்ளோம். இத்தளத்திற்கு வருபவர்கள் அவற்றைச் சோதித்துப்பார்த்து நலமானதை தெரிந்துகொள்ளட்டும்.



-- Edited by anbu57 on Thursday 14th of July 2011 03:51:16 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

தேவ சித்தத்துக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு யோனாவின் புத்தகம்,

யோனா தர்ஷீசுக்கு ஓடியது, கப்பலில் 'தற்செய்லாக' அவன்பேரில் சீட்டு விழுந்தது,

தற்செயலாக ஒரு மீன் அவனை விழுங்கியது,

தற்செயலாக மூன்று நாட்கள் அவன் மீன் வயிற்றில் உயிரோடிருந்தது,

தற்செயலாக அவனை கக்கிப்போட்டது எல்லாமே தற்செயல்தான்...

 

நினிவே பட்டணமும் தற்செயலாக மனந்திரும்பி இரட்டுடுத்தி சாம்பலில் அமர்ந்து வேண்டிக்கொண்டது...

ஆமணக்குச் செடி தற்செயலாக ஓங்கி வளர்ந்தது,

தற்செயலாக ஒரு பூச்சி அதை அரித்துப்போட்டது,

உஷ்ணமான கீழ்க்காற்று அடித்தது எல்லாம் தற்செயல்தான்...

ஏன் வலது கைக்கும் இடதுகைக்கும் வித்தியாசமறியாதவர்களை 40 நாட்களில் அழிக்க திட்டம் போட வேண்டும்? 

3:10. அவர்கள் தங்கள் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பினார்களென்று தேவன் அவர்களுடைய கிரியைகளைப் பார்த்து, தாம் அவர்களுக்குச் செய்வேன் என்று சொல்லியிருந்த தீங்கைக்குறித்து மனஸ்தாபப்பட்டு, அதைச் செய்யாதிருந்தார்.

பொல்லாதவர்கள் மனந்திரும்பி வலதுகைக்கும் இடதுகைக்கும்கூட வித்தியாசம் தெரியாத அளவுக்கு மாறிவிட்டார்களா? இல்லை அதுதான் தேவன் அவர்கள் மேல் முன்னமே வைத்திருந்த அபிப்ராயம்.

யோனாவுக்கு மட்டுமல்ல நமக்கும் கற்றுக்கொடுக்கவே இந்த சம்பவத்தை நடத்திக்காட்டியிருக்கிறார் தேவன்.

இது போன்ற ஒரு சில வேளைகளில் தேவன் அவர் சித்தப்படி செய்விக்கிறார் மற்றபடி மனித சித்தம்தான் நடக்கிறது என்ற கேள்வி வந்தால் கூட ஆச்சரியப்பட மாட்டேன்.



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

யோனாவை நினிவேக்கு கூட்டிகிட்டு போனது நாம் எல்லாரும் வாசிக்கிறபடி நினிவேக்கு விரோதமாக தீர்க்கதரிசனம் சொல்ல தான்!! இது தெளிவாக வாசிக்கும் யார் கண்களுக்கும், புரியக்கூடும்!! தேவனின் அன்பை யோனா ஏற்கனவே புரிந்து வைத்திருந்தால் அவன் அப்படி ஒரு கேள்வியை கேட்டிருக்க மாட்டான், இதை என் கற்பனை என்று சொல்லுகிறீர்கள்,

யோனா 4:10. அதற்குக் கர்த்தர்: நீ பிரயாசப்படாததும், நீ வளர்க்காததும், ஒரு இராத்திரியிலே முளைத்ததும், ஒரு இராத்திரியிலே அழிந்துபோனதுமான ஆமணக்குக்காகப் பரிதபிக்கிறாயே. 11. வலதுகைக்கும் இடதுகைக்கும் வித்தியாசம் அறியாத இலட்சத்து இருபதினாயிரம்பேருக்கு அதிகமான மனுஷரும் அநேக மிருகஜீவன்களும் இருக்கிற மகா நகரமாகிய நினிவேக்காக நான் பரிதபியாமலிருப்பேனோ என்றார்.

நீங்கள் அந்த யோனாவை போல் தான் அவரின் அன்பை புரிந்தவராக இருக்கிறீர்கள், ஆனால் நாங்கள் கர்த்தர் யோனாவிற்கு சொன்ன அன்பை புரிந்திருக்கிறோம்!! உங்களை பொறுத்தவரையில் தேவன் நீடிய சாந்தமும் தயவும் அன்பும் நிறைந்தவர் தான், ஆனாலும் அழிப்பார்!! எங்களை பொறுத்தவரை தேவன் காப்பார், ஜீவனை கொடுப்பார், நித்திய ஜீவனை தருவார், எல்லாருக்கும்!!

//நான் என்னதான் சொன்னாலும், உங்கள் கருத்தை நீங்கள் மாற்றப்போவதில்லை; அவ்வாறே நீங்கள் என்னதான் சொன்னாலும், எனது கருத்தை நான் மாற்றப்போவதில்லை.//

நாங்கள் மனிதர்களின் போதனையை நம்பியிருக்கவில்லையே!! கிறிஸ்துவின் பிரசன்னத்தின் வெளிச்சம் எல்லா இருளையும் போக்கி தெளிவை தரும்!! எனது கருத்தை நான் மாற்றப்போவதில்லை என்பதிலிருந்து நீங்கள் எந்த அளவிற்கு உங்களையும் உங்களுக்கு தெளிவான போதனையில் இருக்கிறீர்கள் என்று உங்கள் மேல் நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள்!! ஆனால் நாங்களோ தேவனை நம்பியிருக்கிறோம், இல்லாவிட்டால் இது வரையில் கத்தோலிக்க சபையிலேயே இருந்திருப்போம்!! மேலும் இந்த விவாதத்தின் மூலம் எங்களுக்கு இன்னும் அதிகமாக வசனங்களை தேவன் தெளிவடைய செய்திருக்கிறார்!! இதுவும் தேவ சித்தமே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard