kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அறிந்ததும் அறியாததும்...


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
RE: அறிந்ததும் அறியாததும்...


சகோ அன்பு (என் கருத்தை வெளிப்படுத்தியது):
//ஆதாமின் பாவத்தின் சம்பளமாக எல்லா மனுஷருக்கும் மரணம் (அதாவது முதலாம் மரணம்) கிடைத்தது; அதே வேளையில் நம் சுயபாவங்களுக்கான சம்பளமும் அதே (முதலாம்) மரணம்தான். ஒருவன் துணிகரமாக வேண்டுமென்றே எவ்வளவு கொடிய பாவங்களைச் செய்தாலும் அவற்றிற்கான சம்பளம் (முதலாம்) மரணம் மட்டுமே.

பாவத்தின் சம்பளமாக (முதலாம்) மரணத்தைப் பெற்ற அனைவரும், எல்லா பாவங்களும் சுத்திகரிக்கப்பட்டு, பாவமில்லாதவர்களாக உயிர்த்தெழுவார்கள். அதன்பின்னர் அவர்கள் தேவனை அறியும் அறிவைப் பெற்று நித்தியஜீவனைப் பெறுவார்கள். 2-ம் மரணம் என்பது மனிதனின் மரணம் அல்ல (அல்லது 2-ம் மரணத்திற்கு எந்த மனிதனும் தீர்க்கப்படமாட்டான்).//

கொஞ்சம் திருத்தம்,

ஆதாமின் பாவத்தின் சம்பளமாக மரணம் வந்தது, அந்த பாவத்தின் விளைவு எல்லா மனிதர்கள் மேலும் வந்தது, எல்லா மனிதர்களும் பாவத்தில் பிறக்கிறார்கள், பாவத்தில் பிறக்கும் மனிதன் தொடர்ந்து பாவம் செய்கிறார்கள், என்பதற்கு பல வசனங்களை காட்டினேன்!! இப்ப கிறிஸ்து இயேசு, நிச்சயமாக அந்த ஒரு பாவத்தின் விளைவாக வந்த மரணத்திற்கு ஈடுபலி கொடுக்கிறார்!! ஆனால் ஆதாமின் அந்த பாவத்தினால் தானே மற்ற எல்லாருக்குள்ளும் பாவம் வந்தது!! அதாவது மற்ற எல்லா மனிதர்களும் ஆதாமின் பாவத்தினால் தானே பாவத்தின் வலைக்குள் இருக்கிறார்கள்!! ஒரு வேளை பாவம் இல்லாமல் பிறந்திருந்திருந்து, சுய விருப்பத்தில் பாவம் செய்கிறார்கள் என்றால் நீங்கள் கேட்கும் எல்லாம் சரியே, ஆனால் இங்கே எந்த ஒரு மனிதனும் அவனுக்குள் இருக்கும் அந்த பாவத்தின் விளைவாக தானே பாவத்தின் மேல் பாவம் செய்கிறான், அவனுக்கு பாவம் இல்லாமல் இருக்க ஒரு வாய்ப்பே கிடைக்கவில்லையே!! முதல் பாவம் வேர் என்று வைத்துக்கொள்ளுங்கள், அதிலிருந்து கிளம்பிய பாவத்தின் மரம், துளிர் விட்டு, இப்பொழுது நல்லா செழிப்பாக இருக்கிறாது, கிறிஸ்துவின் ஈடுபலியினால் அந்த வேர் பிடிங்கி எறியப்படுகிறது ஆனால் மரம் மட்டும் பச்சையாக இருக்கும் என்று நீங்கள் கூறுவது எப்படி சரியாகும்!!

அவர் ஆதாமின் பாவத்திற்கு தான் ஈடுபலி கொடுத்தார், ஆனால் அந்த பாவத்தின் விளைவாக வந்த எல்லா பாவங்களும் அதில் அடங்கிவிடும்!! சொல்லப்பட்ட எல்லா வசனங்களுமே "பாவங்கள்" என்பதை சொல்லுவதால், அது அந்த ஒரு பாவம் என்று மாத்திரம் என்று எப்படி எடுத்துக்கொள்வீர்கள்!!??

I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.

பாவங்களுக்கு என்று சொல்லுவது எப்படி ஆதாமின் பாவம் என்பதை மட்டும் குறிக்கிறது என்பதை விளக்குவீர்களா!!??

நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளுக்கும் ஒரே பதில்,

ஏசாயா 26:9 என் ஆத்துமா இரவிலே உம்மை வாஞ்சிக்கிறது; எனக்குள் இருக்கிற என் ஆவியால் அதிகாலையிலும் உம்மைத் தேடுகிறேன்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள்.

பாவம் இல்லாமல், வியாதியில்லாமல் எழும்புவது தானே உயிர்த்தெழுதலாக இருக்க முடியும்!!

1 கொரிந்தியர் 15:42. மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும். அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்;43. கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும்.

ஆனால் உங்களின் கேள்விகளிலிருந்து, உயிர்த்தெழுதல் நடந்த பிறகும் வியாதியஸ்தர் இருப்பார்கள், கொள்ள, கொலையில் ஈடுப்படுவோர் இருப்பர்கள் (சிறைச்சாலைகள்), தரித்திரர் இருப்பார்கள், குறைப்பாடுகளும் இருக்கும் அதற்கு ஆதாரமாக உங்களுக்கு இருக்கும் ஒரே வசன ஆதாரம், நீங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காண்பிக்கும் மத்தேயு 25:31-46 பகுதியில் மாத்திரமே!! இதில் சொல்லப்படுவது உண்மையிலேயே 1000 வருட அரசாட்சியில் அல்லது உயிர்த்தெழுதல் நடந்த பிறகு தான் நடக்கிறது என்றால், மேலே உள்ள வசனங்களும், இதற்கு இனையான பழைய ஏற்பாட்டிலிருந்து சகோ சோல் சொல்யூஷன் தந்திருக்கும் வசனங்கள் எல்லாம் பொய்யாகிவிடுமே!!

சிறைச்சாலை சந்திப்பு, வியாதியஸ்தர் சந்திப்பு, துனிக்கொடுப்பது, உணவு கொடுப்பது போன்றவற்றில் என்ன நீதி கற்றுக்கொள்கிறார்கள், சத்தியம் கற்றுக்கொள்கிறார்கள்!!

2ம் மரணம் என்பது மனிதர்களுக்கு கிடையாது, சாத்தான் கொண்டு வந்த சகல சிஸ்டத்துக்கு (Systems) மாத்திரமே என்பதில் கோவை பெரேயன்ஸ் குழுவினர் நம்புகிறார்கள், வேத வசனத்தின் அடிப்படையில் தான்!!

தொடரும்.............



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு:
//நீங்கள் காட்டியுள்ள ஏராளமான வசனங்கள் சொல்கிறபடி தேவன் இரக்கமுள்ளவர்தான், மன்னிக்கிறதற்கு தயை பெருத்தவர்தான்; ஆனால் அது எப்போது?//

இரக்கமுள்ளவர் என்பது தான் சரி, இரக்கமுள்ளவர்தான் என்பது சரியல்ல!! அது எப்போது என்றால், அவரின் குமாரனாகிய கிறிஸ்து இயேசுவின் மூலமாக அதற்கான விலை கிரயம் செலுத்தியாகிவிட்டது!! அவரின் ஏற்ற காலத்தில் அந்த இரக்கத்தை அனைவரும் புரிந்துக்கொள்வார்கள்!!

1 தீமோத்தேயு 2:6. எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

ஏற்ற காலங்களில் விளங்குவது என்பது இது தான்!! அதாவது கிறிஸ்துவின் ஈடுபலியினால் எல்லாருக்கும் இரட்சிப்பு, யாரும் அழிந்துபோவதில்லை என்கிற நற்செயிதியின் சாட்சி தான் விளங்கிவருகிறது!! சுவிசேஷம் அறிவிக்கப்பட்டது முதல் அது வெளிப்பட்டிருக்கிறது, ஆனாலும் எல்லாரும் அதை புரிந்துக்கொள்ளவில்லை, அது எல்லாராலும் புரிந்துக்கொள்ளும் காலம் ராஜியமாக தான் இருக்க முடியும்!!

நீங்கள் அழிவிற்கான அநேக வசனங்களை சுட்டிக்காட்டியிருப்பது அனைத்தும் மாம்சத்தில் உண்டான மரணத்தை குறித்தான வசனங்கள்!!

உயிர்த்தெழுதல் நடப்பது இரு தன்மைகளில், ஒன்று ஆவிக்குறிய சரீரத்தில் (இது கிறிஸ்துவின் சாயல், சாவாமையை தரித்துக்கொள்ளுதல்), மற்றொன்று நீதியை கற்றுக்கொள்ளும்படியாக நியாயத்தீர்ப்பிற்கு உட்பட்டு அதன் பின் நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளுவர்களாக இருப்பார்கள்!! ஆவிக்குரிய சரீரத்தில் உயிர்த்தெழுந்தவர்கள் தனிப்பட்ட பாவங்கள் செய்திருக்க மாட்டார்களா!! இவர்கள் வெறும் ஆதாமின் பாவத்திற்கு மாத்திரமே மரித்திருப்பவர்களா? அப்படி என்றால் பாவத்துடன் அவர்கள் மாத்திரம் எப்படி பரலோகத்திற்கு ஆவிக்குறிய சரீரத்தில், கிறிஸ்துவின் சாயலில் உயிர்த்தெழுதல் உண்டு!!

பாவத்துடன் எழும்புவர்கள் எப்படி பரலோகம் செல்வார்கள்!! பரலோகம் செல்பவர்கள் ஆதாமின் பாவம் மாத்திரம் அல்ல, சொந்த பாவத்திலும் இருப்பவர்கள் தானே!!

நியாயத்தீர்ப்பு என்பது ஏதோ 1000 வருடங்கள் முடிந்து அதன் பின் சிங்காசனம் போட்டு உட்கார்ந்து நடைபெறும் ஒரு நிகழ்வு அல்ல, மாறாக அந்த 1000 வருடங்கள் முழுவதுமே நியாயத்தீர்ப்பின் நாட்கள் தான்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

விவாதத்தின் ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்த நாம், சற்று முன்னோக்கிச் செல்லும்படியான கருத்தை கடந்த பதிவுக்கு முந்தின பதிவில் கூறியுள்ளீர்கள் சகோதரரே!

நாம் செய்கிற அனைத்து பாவங்களுக்கும் காரணம் ஆதாமின் பாவமே என்கிறீர்கள். உங்களது இக்கூற்று சரி என்றால், உங்களது ஒரு வாதம் சரியே! அதாவது ஆதாமின் பாவத்தின் சம்பளமான மரணம்தான் நமது பாவத்தின் சம்பளமாகவும் இருக்கும்; எனவே அந்த மரணத்திலிருந்து நாம் உயிர்த்தெழுகையில், ஆதாமின் பாவம், நம் பாவம் எல்லாம் நீக்கப்பட்டுவிடும் என்கிற வாதம் சரியே. ஆகிலும், பாவமில்லாமல் உயிர்த்தெழுந்த வெள்ளாட்டு பிரிவினரைப் பார்த்து “சபிக்கப்பட்டவர்களே” எனச் சொல்லி, அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடாமல், நித்திய அக்கினி நித்திய ஆக்கினையை இயேசு கொடுப்பார் என்கிற மத்தேயு 25:46-க்கான விளக்கத்தைச் சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள். அது ஒருபுறம் இருக்கட்டும்.

நாம் செய்கிற அனைத்து பாவங்களுக்கும் காரணம் ஆதாமின் பாவமே எனும் உங்கள் கூற்றின் மீது தற்போது விவாதத்தைத் தொடருவோம்.

இவ்விஷயத்தில் எனது கருத்து: நாம் செய்கிற அனைத்து பாவங்களுக்கும் காரணம், ஆதாமின் பாவம் மட்டுமல்ல, நம் சுயமும் காரணம் என்பதே.

ஆதாமின் பாவம் இல்லாவிட்டால் நாம் யாருமே பாவம் செய்யமாட்டோம் என நீங்கள் சொல்கிறீர்கள். இதற்கு ஆதாரமாகத்தான் “என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பம் தரித்தாள்” எனும் வசனத்தையும் ரோமர் 5:12 மற்றும் 3:10 வசனத்தையும் காட்டுகிறீர்கள்.

இவ்வசனங்கள் கூறுவது எல்லாம் சரிதான். அவற்றின்படி ஆதாமின் பாவத்தின் காரணமாக நாம் எல்லோரும் பாவம் செய்கிறோம் என்பது மெய்தான். ஆனால் அதேவேளையில் ஆதாமின் பாவம் காரணமில்லாமல் நம் சுயமாகவும் சில பாவங்களை நாம் செய்கிறோம் என்பதே எனது கருத்து. இதை நீங்கள் புரிந்துகொண்டால் அல்லது ஏற்றுக் கொண்டால் எனது வாதம் முழுமையாக உங்களுக்குப் புரிந்துவிடும்.

இப்போது உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். நாம் பாவம் செய்வதற்குக் காரணம், ஆதாமின் பாவம்தான் என மிகஎளிதாகச் சொல்கிறீர்கள் அல்லவா? அவ்வாறெனில் ஆதாமின் பாவத்திற்கு யார் காரணம்? ஆதாம் நம்மைப்போல் பாவத்தில் பிறக்கவில்லையே! அவர் தேவனால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டவரல்லவா? அவர் பாவமில்லாதவராகத்தானே சிருஷ்டிக்கப்பட்டார்? பின்னர் அவர் எப்படி பாவம் செய்தார்?

இக்கேள்விக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்களோ, அறியேன்; ஆனால் எனது பதில்: ஆதாம் தன் சுயமாகத்தான் பாவம் செய்தார் என்பதே. இதிலிருந்து நாம் அறிவதென்ன? ஆதாம் எப்படி தன் சுயமாகப் பாவம் செய்யக்கூடியவராக இருந்தாரோ, அதேபோல் நாமும் நம் சுயமாகவும் பாவம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பதே.

நாம் சுயமாகச் செய்யக்கூடிய பாவங்கள் எவை? இக்கேள்விக்கு எனது பதில்: பிறனிடத்தில் அன்புகூருவதன் விளைவாக பிறனுக்குச் செய்யக்கூடிய நன்மைகளைச் செய்யாதிருத்தல் அனைத்தும் நாம் சுயமாகச் செய்கிற பாவங்களே. நன்மை செய்யாதிருப்பது ஒரு பாவமா என நம்மில் சிலர் கேட்கலாம். இக்கேள்விக்கு பின்வரும் வசனம் பதில் தருகிறது.

ஆதியாகமம் 4:6,7 அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார்.

நன்மை செய்யாதிருத்தல் எனும் இப்பாவம்தான் நாம் சுயமாகச் செய்கிற பாவம். ஏனெனில், யாருக்கேனும் நன்மை செய்ய நாம் தீர்மானித்தால், நம் ஜென்ம பாவ சுபாவத்தால் (அதாவது ஆதாமின் பாவத்தால் வந்த ஜென்ம பாவ சுபாவத்தால்) அதை நிச்சயம் தடுக்க இயலாது. ஒரு நன்மையை செய்ய நாம் தீர்மானித்தால், நிச்சயமாக அதைச் செய்யமுடியும். இதை நம் வாழ்வின் அனுபவத்திலிருந்தே நாம் எளிதில் அறிந்துகொள்ளலாம்.

எனது இக்கருத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், மத்தேயு 25:31-46 வசனங்களில் அடங்கியுள்ள நியாயத்தீர்ப்பை நீங்கள் எளிதில் புரிந்துகொள்வீர்கள்.

அவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள 2 பிரிவினராகிய சகல ஜனங்களும் ஆதாமின் பாவத்தின் காரணமான பாவ சுபாவத்தால் பல பாவங்களைச் செய்திருப்பார்கள் என்பது மெய்தான்.
ஆகிலும் செம்மறியாட்டுப் பிரிவினராகிய ஜனங்கள் சுயமாகப் பாவம் செய்திருக்கமாட்டார்கள்; அதாவது பிறருக்கு நன்மை செய்யத் தவறியிருக்க மாட்டார்கள்; அதாவது பிறருக்கு நன்மை செய்ய திராணியிருக்கும்போது அதைச் செய்திருப்பார்கள் (நீதி. 3:27). அவர்கள் என்னென்ன நன்மைகளைச் செய்தார்கள் என்பதைத்தான் மத்தேயு 25:35,36 வசனங்களில் இயேசு கூறுகிறார். அவர்கள் நன்மை செய்கையில், தங்களுக்கு விரோதமாகத் தப்பிதங்களைச் செய்தவர்கள்/செய்யாதாவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் பாராமல் செய்திருப்பார்கள்.

மொத்தத்தில் பிறரிடத்தில் அன்பும் இரக்கமும் உள்ளவர்களாயும், பிறருடைய தப்பிதங்களை மன்னிப்பவர்களாயும் இருந்திருப்பார்கள். எனவே ஆதாமின் பாவத்தின் காரணமாக அவர்கள் செய்த பாவங்களை மத்தேயு 6:14-ன்படி தேவன் மன்னிப்பார். இரக்கமுள்ளவர்களான அவர்கள் மத்தேயு 5:7-ன்படி இரக்கம் பெறுவார்கள்.

இப்படியாக அவர்களின் பாவங்கள் யாவும் மன்னிக்கப்படுவதால்தான் அவர்களுக்கு நித்திய ஜீவன் கொடுக்கப்படும்.

அதே வேளையில், வெள்ளாடுப் பிரிவினராகிய ஜனங்கள் பிறருக்கு நன்மை செய்யத்தவறியிருப்பார்கள். அவர்கள் என்னென்ன நன்மைகளைச் செய்யத் தவறினார்கள் என்பதைத்தான் மத்தேயு 25:42,43 வசனங்களில் இயேசு கூறுகிறார். ஒருவேளை அவர்களில் சிலர் தங்கள் சினேகிதர்களுக்கு/உறவினர்களுக்கு மட்டும் நன்மை செய்துவிட்டு, மற்றவர்களுக்கு குறிப்பாக தங்களுக்கு விரோதமாக தப்பிதங்களைச் செய்தவர்களுக்கு நன்மை செய்யாதிருந்திருப்பார்கள். மொத்தத்தில் அவர்கள் இரக்கமில்லாதவர்களாகவோ, அல்லது பிறரது தப்பிதங்களை மன்னியாதவர்களாகவோ இருந்திருப்பார்கள்.

அவர்களின் இச்செயல்கள் அவர்களின் சுய பாவங்களாகக் கருதப்படும்.

இரக்கமில்லாத அவர்களுக்கு யாக்கோபு 2:13-ன்படி இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு கிடைக்கும்; பிறரது தப்பிதங்களை மன்னியாத அவர்களின் தப்பிதங்களை மத்தேயு 6:15-ன்படி தேவன் மன்னியாதிருப்பார். இப்படியாக, அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படாததால்தான் அவர்களுக்கு நித்திய ஜீவன் மறுக்கப்பட்டு, நித்திய ஆக்கினை கொடுக்கப்படும்.

bereans wrote:
//ஆனால் உங்களின் கேள்விகளிலிருந்து, உயிர்த்தெழுதல் நடந்த பிறகும் வியாதியஸ்தர் இருப்பார்கள், கொள்ள, கொலையில் ஈடுப்படுவோர் இருப்பர்கள் (சிறைச்சாலைகள்), தரித்திரர் இருப்பார்கள், குறைப்பாடுகளும் இருக்கும் அதற்கு ஆதாரமாக உங்களுக்கு இருக்கும் ஒரே வசன ஆதாரம், நீங்கள் மீண்டும் மீண்டும் சுட்டிக்காண்பிக்கும் மத்தேயு 25:31-46 பகுதியில் மாத்திரமே!! இதில் சொல்லப்படுவது உண்மையிலேயே 1000 வருட அரசாட்சியில் அல்லது உயிர்த்தெழுதல் நடந்த பிறகு தான் நடக்கிறது என்றால், மேலே உள்ள வசனங்களும், இதற்கு இனையான பழைய ஏற்பாட்டிலிருந்து சகோ சோல் சொல்யூஷன் தந்திருக்கும் வசனங்கள் எல்லாம் பொய்யாகிவிடுமே!!//

உயிர்த்தெழுதல் நடந்த பிறகு வியாதியஸ்தர்கள் இருப்பார்கள், கொள்ள, கொலையில் ஈடுபடுவோர் இருப்பார்கள் (சிறைச்சாலைகள்), தரித்திரர் இருப்பார்கள் என்றெல்லாம் நான் கூறவில்லை. மத்தேயு 25:31-46 வசனங்களில் இயேசு கூறுகிற கிரியைகள் யாவும் தற்போதைய உலக வாழ்வில் நாம் செய்கிற/செய்யத்தவறிய நன்மைகளே என்றுதான் நான் கருதுகிறேன். 1000 வருட அரசாட்சியில் என்னென்ன காரியங்கள் எப்படியெப்படி நடக்கும் என்பதை என்னால் திட்டமாகக் கூற இயலவில்லை. ஆகிலும் பின்வரும் வசனங்கள், 1000 வருட அரசாட்சியில் நடைபெறும் காரியங்களையே கூறுவதாக நான் கருதுகிறேன்.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். 21 வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். 22 அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

23 அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். 24 அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். 25 ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

இவ்வசனங்களில் “நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்” எனும் வாசகத்தை சற்று சிந்தித்துப்பாருங்கள். இவ்வாசகத்திற்கான விளக்கத்தை முன்பே ஒருமுறை இத்தளத்தில் நான் கேட்டுள்ளேன். ஆனால் அதற்கான பதிலை நீங்கள் இன்னமும் தரவில்லை. இப்போதாவது இவ்வாசகத்திற்கான பதிலைத் தாருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு:
//நாம் செய்கிற அனைத்து பாவங்களுக்கும் காரணம் ஆதாமின் பாவமே எனும் உங்கள் கூற்றின் மீது தற்போது விவாதத்தைத் தொடருவோம்.

இவ்விஷயத்தில் எனது கருத்து: நாம் செய்கிற அனைத்து பாவங்களுக்கும் காரணம், ஆதாமின் பாவம் மட்டுமல்ல, நம் சுயமும் காரணம் என்பதே.//

என் கருத்திற்கு ஆதாரம்,

ரோமர் 5:12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

ஒரு மனுஷனின் (ஆதாம்) பாவத்தினால் தான் எல்லா மனுஷர்களும் பாவஞ்செய்தார்கள் என்கிறது!! நம் சுயத்திற்கு பாவம் செய்ய தோன்றுவது ஆதாமினால் நமக்குள் பாவசிந்தை வந்ததினால் தான்!!

சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

கரு உருவாகும் போதே துர்க்குணத்தில் உருவாகிறான் மனிதன், ஏனென்றால் பாவத்தில் இருக்கும் தாய் கர்ப்பந்தரிக்கிறாள்!! மனிதன் உருவாகும் போதே பாவத்தில் இருக்கிறான், பாவம் அவனில் நிலைத்திருப்பதால் அவன் பாவ சுவபாவமாக இருந்து தொடர்ந்து சுயத்தில் பாவம் செய்கிறான்!! (பாவம் என்பது ஒரு ஜீன் போல், ஒரு மனிதனையும் விடாமல் தொடர்ந்து எல்லாரையும் ஆட்கொள்கிறது)!! நம் சுயத்தில் பாவம் செய்ய ஏன் தோன்ற வேண்டும், அதற்கு காரணம் ஆதாமினால் வந்த பாவமே தவிர வேறு ஒன்றும் இல்லை!!

//இப்போது உங்கள் முன் ஒரு கேள்வியை வைக்கிறேன். நாம் பாவம் செய்வதற்குக் காரணம், ஆதாமின் பாவம்தான் என மிகஎளிதாகச் சொல்கிறீர்கள் அல்லவா? அவ்வாறெனில் ஆதாமின் பாவத்திற்கு யார் காரணம்? ஆதாம் நம்மைப்போல் பாவத்தில் பிறக்கவில்லையே! அவர் தேவனால் நேரடியாக சிருஷ்டிக்கப்பட்டவரல்லவா? அவர் பாவமில்லாதவராகத்தானே சிருஷ்டிக்கப்பட்டார்? பின்னர் அவர் எப்படி பாவம் செய்தார்?//

ஆதாம் சோதிக்கப்படுகிறானே, என்று தான் சபைகள் போதிக்கும், ஆனால் உண்மையில் மனிதனை ஒரு ரோபோ போல் படைத்து, தேவன் மனிதனை ஆட்டிவைக்கவில்லை!! மனிதனுக்கு தீமையின் அனுபவத்தை அந்த மீறுதலினால் தேவன் கொடுக்க விரும்பினார்!! லூசிஃபரின் மீறுதலினால் அவன் பதவியிறக்கப்பட்டதை தேவ தூதர்கள் பார்த்து புரிந்துக்கொண்டார்கள், ஆனால் மனிதன் தேவதூதர்களை விட சற்றே சிறியவனாக படைக்கப்பட்டதினால், நண்மை தீமையை புரிந்துக்கொள்ள அனுபவத்திற்குளாக வேண்டியது தேவனின் நியமனம்!! கீழே தள்ளப்பட்ட பிசாசிடமிருந்து ஆதாமை தப்பிவிக்க தேவனுக்கு கூடாத காரியமாக இருந்திருக்காது, ஆனால் ஆதாமின் மூலமாக நியமிக்கப்பட்ட மனுகுலம் முழுவதும் இந்த நண்மை தீமையின் அனுபவத்திற்குள்ளாக கடந்து செல்ல வேண்டியதாக இருப்பதை நாம் புரிந்துக்கொள்ள முடியும்!! தேவன் தந்த கட்டளையை ஆதாம் நிச்சயமாக மீறுவான், அவன் மூலமாக முழு மனுக்குலமும் மரணத்திற்கு உடபடுத்தப்படும் என்பதை தேவன் அறிந்திருந்ததினால் தான் உலக தோற்றமுதல் கிறிஸ்துவை அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைத்திருந்தார் என்று வேதம் சொல்லுகிறதே!!

பாவம் தேவைப்பட்டது, அது தேவனே அனுமதித்த ஒன்று தான், ஆதாம் பாவத்திற்கு யார் காரணம் என்றால் தேவன் அதை அனுமதித்தார் என்பது தான் சுருக்கமான சுருக்கான பதில்!! இதை அனுமதித்ததே முழு மனுக்குலமும் பாவத்தின் விளைவை கற்றுக்கொள்ளவே!! ஏதோ தேவனுக்கு தெரியாமல் சாத்தான் ஆதாமை சிக்க வைத்து பாவத்தில் விழவைத்துவிட்டான் என்பதெல்லாம் வேதத்தையும், தேவனையும் புரியாதவர்கள் பிரசங்கிப்பவர்கள்!!

//ஆதாம் எப்படி தன் சுயமாகப் பாவம் செய்யக்கூடியவராக இருந்தாரோ, அதேபோல் நாமும் நம் சுயமாகவும் பாவம் செய்யக்கூடியவர்களாக இருக்கிறோம் என்பதே.//

ஆதாம் சுயமாக பாவம் செய்தார் என்றாலும் அது தேவனால் அனுமதிக்கப்பட்ட ஒன்று தானே!! பாவமே இல்லாத ஆதாம் பாவத்தில் விழுவதற்கும், பாவத்தில் பிறக்கும் நாம் பாவத்தில் விழுவதற்கும் வித்தியாசம் இருக்கிறதே!!

தொடரும்......................



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//ஒரு மனுஷனின் (ஆதாம்) பாவத்தினால் தான் எல்லா மனுஷர்களும் பாவஞ்செய்தார்கள் என்கிறது!!//

வேதம் இப்படிச் சொல்லவில்லை. வசனத்தைக் கவனமாகப் படியுங்கள்.

ரோமர் 5:12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

ஆதாமினால் பாவம் உலகத்தில் பிரவேசித்தது என்றுதான் வசனம் சொல்கிறது. நீங்கள் சொல்வதுபோல் “ஆதாமின் பாவத்தினால் தான் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தார்கள்” என வசனம் கூறவில்லை. அதாவது “தான்” எனும் வார்த்தைப் பிரயோகம் வசனத்தில் இல்லை. நீங்களாகச் சேர்த்துக் கொண்டீர்கள்.

மேற்கூறிய வசனத்தில், “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும்” எனும் வரிக்கு என்ன அர்த்தம் என்கிறீர்கள்? எல்லா மனுஷரும் பாவம் செய்ததால்தான் அவர்களுக்கு மரணம் வந்தது என்கிறீர்களா? ஆம் எனில், பிறந்த குழந்தைகள் பல, பிறந்த உடனேயே மரணமடைந்ததாக வேதாகமத்திலேயே ஆதாரம் உள்ளதே, அந்த குழந்தைகள் மரணமடையக் காரணம் என்ன?

இக்கேள்விக்கு “ஆதாமின் பாவம் தான் காரணம்” என பதில் சொல்வீர்கள். அப்படியானால் “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோல” எனப் பவுல் சொல்வது தவறல்லவா? பாவம் செய்யாமலேயே பல குழந்தைகளுக்கு மரணம் வந்துள்ளதே? இக்கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

மீண்டும் மீண்டும் ஆதாமின் பாவம்தான் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் எனச் சொல்லக்கூடாது. ஆதாமின் பாவம்தான் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் எனில், மனிதன் பிறந்தவுடனேயே அவனுக்கு மரணம் தீர்மானிக்கப்பட்டுவிட்டது என அர்த்தம். ஏற்கனவே மரணம் தீர்மானமான மனிதனைப் பார்த்து, “நீ பாவம் செய்தபடியால்தான் மரணம் உனக்கு வருகிறது” எனச் சொல்வதில் என்ன logic இருக்கும்? இப்படி logic இல்லாமல்தானே “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” எனப் பவுல் சொல்கிறார். பவுலின் கூற்றில் logic தவறிப்போனதற்கு என்ன காரணம்? தயவுசெய்து நான் கேட்கிற கேள்வியை கவனமாகப் புரிந்துகொண்டு பதில் சொல்லுங்கள். உண்மையைத் தேடித்தான் நாம் விவாதம் செய்கிறோமேயொழிய “நம் கொள்கையை நிலைநாட்ட” நாம் விவாதம் செய்யவில்லை என்பதை மனதில் வைத்து பதில் சொல்லுங்கள்.

ஒருபுறம் “எல்லா மனுஷரும் பாவம்செய்தபடியால் மரணம் எல்லாருக்கும் வந்தது” எனப் பவுல் சொல்கிறார்.

ஆனால் “பாவம்செய்யாமலேயே பல குழந்தைகளுக்கு மரணம் வந்ததாக வேதாகமம் சொல்கிறது”. இவ்விரு கூற்றுகளுக்குமிடையேயான முரண்பாட்டை எப்படி தெளிவிப்பீர்கள்?

நிதானமாக பதில் சொல்லுங்கள். அதற்குமுன் என் பதிலைச் சொல்கிறேன்.

ஆதாமின் பாவத்தின் காரணமாக, உலகத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளும் மரணம் எனும் நியமனத்தோடுதான் பிறக்கின்றன. எனவே பிறந்த பச்சிளம் குழந்தையானாலும் சரி, பெரியவரானாலும் சரி, அவர்கள் பாவம்செய்துதான் அவர்களுக்கு மரணம் வரவேண்டிய அவசியமில்லை. இப்படியிருக்க, பவுலோ இப்படிச் சொல்கிறார்: “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது”. அதாவது ஏற்கனவே மரணத்திலிருக்கும் மனிதனுக்கு, “அவன் பாவம்செய்தபடியால் மரணம் வந்தது” என்கிறார். பவுல் சொல்கிற மரணமும், ஏற்கனவே மனிதனுக்கு நியமிக்கப்பட்ட மரணமும் “ஒரே மரணம் தான்” எனில், பவுலின் கூற்று அர்த்தமற்றதாகத்தான் இருக்கும்.

ஏற்கனவே மரண தண்டனையிலிருக்கும் ஒருவனிடம், “நீ சட்டத்திற்குக் கீழ்படியவில்லையெனில், உனக்கு மரண தண்டனைதான் கிடைக்கும்” எனச் சொல்வதில் ஏதேனும் பயன் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவன் மிகவும் சந்தோஷமாக, “அதான் ஏற்கனவே எனக்கு மரணதண்டனைதானே உள்ளது; அப்புறம் ஏன் நான் சட்டத்திற்குக் கீழ்படியவேண்டும்” என்றுதானே கேட்பான்? எனவே ஏற்கனவே மரண நியமனத்திலிருக்கும் மனிதரைக் குறித்து, “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” எனப் பவுல் சொல்வது அர்த்தமற்றதாகத்தான் இருக்கும்.

ஆனால் உண்மையில் பவுல் அர்த்தமற்றதாக அப்படிச் சொல்லவில்லை. எப்படியெனில், பவுல் சொல்கிற அந்த மரணத்திற்கும், மனிதன் பிறக்கும்போதே நியமனமான மரணத்திற்கும் சம்பந்தமில்லை. மனிதன் பிறக்கும்போதே நியமனமான மரணம் “முதலாம் மரணம்”. ஆனால் “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” எனும் வாக்கியத்தில் பவுல் சொல்கிற மரணம், “இரண்டாம் மரணம்”. இரண்டாம் மரணம் என்பது நிரந்தர மரணம். எனவேதான் “துன்மார்க்கர் ஏகமாய் சங்கரிக்கப்படுவார்கள்; அறுப்புண்டு போவதே துன்மார்க்கனின் முடிவு” என மீண்டும் மீண்டுமாக வேதாகமம் சொல்கிறது.

bereans wrote:
//நீங்கள் அழிவிற்கான அநேக வசனங்களை சுட்டிக்காட்டியிருப்பது அனைத்தும் மாம்சத்தில் உண்டான மரணத்தை குறித்தான வசனங்கள்!!//

ஒரு பாவமுமறியாத பச்சிளங்குழந்தைகூட மாம்சத்தில் அழிவைச் சந்திக்கும்போது, துன்மார்க்கனைப் பார்த்து, “நீ மாம்சத்தில் அழிவாய், அறுப்புண்டு போவாய், சங்கரிக்கப்படுவாய்” என்றெல்லாம் சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கும்? சற்று சிந்தித்து பதில் சொல்லுங்கள் சகோதரரே!

துன்மார்க்கனின் அழிவிற்கான அநேக வசனங்களும், பவுல் சொல்கிற மரணமும் “இரண்டாம் மரணமாகிய நிரந்தர மரணத்தையே” குறிப்பிடுகின்றன.

முதலாம் மரணத்திலிருந்தும் நமக்கு விடுதலையுண்டு; இரண்டாம் மரணத்திலிருந்தும் நமக்கு விடுதலையுண்டு.

முதலாம் மரணத்திற்குக் காரணம், நமக்கு சற்றும் சம்பந்தமில்லாத ஆதாமின் பாவமே என்பதால், அந்த மரணத்திலிருந்து நாம் எல்லோருமே விடுவிக்கப்பட்டு உயிர்த்தெழுதலைப் பெறுவோம். அதைத்தான் 1 கொரி. 15:22 கூறுகிறது. ஆனால் 2-ம் மரணத்திற்குக் காரணம் நம் சுயபாவங்கள் என்பதால், 2-ம் மரணத்திலிருந்து நாம் விடுவிக்கப்படவேண்டுமெனில்: நாம் இரக்கமுள்ளவர்களாய் இருக்கவேண்டும், அப்போது மத்தேயு 5:7-ன்படி நாம் இரக்கம் பெறுவோம்; பிறரது தப்பிதங்களை நாம் மன்னிக்கவேண்டும், அப்போது மத்தேயு 6:14-ன்படி நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு 2-ம் மரணத்திலிருந்து நாம் தப்புவிக்கப்படுவோம்.

ஒருசில வாதத்தை மீண்டும் மீண்டும் வைக்கிற நீங்கள், னோ மத்தேயு 5:7 மற்றும் 6:14,15-ன் விளைவுகளை மட்டும் கவனமாக தவிர்த்து வருகிறீர்கள்.

மீண்டுமாக ஒரு விஷயத்தை நினைவூட்டுகிறேன். “நன்மை செய்யாதிருத்தல்” எனும் பாவத்திற்கும் ஆதாமின் மீறுதலால் வந்த பாவசுபாவத்திற்கும் சற்றும் சம்பந்தமில்லை. “நன்மை செய்யாதிருத்தல்” எனும் பாவத்தை முழுக்க முழுக்க நம் சுயவிருப்பத்தால்தான் செய்கிறோம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

தங்களின் கவனத்திற்காக ஏற்கனவே நான் பதித்ததை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

பின்வரும் வசனங்கள், 1000 வருட அரசாட்சியில் நடைபெறும் காரியங்களையே கூறுவதாக நான் கருதுகிறேன்.

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான். 21 வீடுகளைக் கட்டி, அவைகளில் குடியிருப்பார்கள், திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனியைப் புசிப்பார்கள். 22 அவர்கள் கட்டுகிறதும், வேறொருவர் குடியிருக்கிறதும், அவர்கள் நாட்டுகிறதும், வேறொருவர் கனிபுசிக்கிறதுமாயிருப்பதில்லை; ஏனெனில் விருட்சத்தின் நாட்களைப்போல என் ஜனத்தின் நாட்களிருக்கும்; நான் தெரிந்துகொண்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை நெடுநாளாய் அநுபவிப்பார்கள்.

23 அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை; அவர்கள் துன்பமுண்டாகப் பிள்ளைகளைப் பெறுவதுமில்லை; அவர்களும், அவர்களோடேகூட அவர்கள் சந்தானமும் கர்த்தராலே ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததியாயிருப்பார்கள். 24 அப்பொழுது அவர்கள் கூப்பிடுகிறதற்குமுன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்; அவர்கள் பேசும்போதே நான் கேட்பேன். 25 ஓனாயும் ஆட்டுக்குட்டியும் ஒருமித்து மேயும்; சிங்கம் மாட்டைப்போல வைக்கோலைத் தின்னும்; புழுதி சர்ப்பத்துக்கு இரையாகும்; என் பரிசுத்த பர்வதமெங்கும் அவைகள் தீங்குசெய்வதுமில்லை, கேடுண்டாக்குவதுமில்லையென்று கர்த்தர் சொல்லுகிறார்.

இவ்வசனங்களில் “நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்” எனும் வாசகத்தை சற்று சிந்தித்துப்பாருங்கள். இவ்வாசகத்திற்கான விளக்கத்தை முன்பே ஒருமுறை இத்தளத்தில் நான் கேட்டுள்ளேன். ஆனால் அதற்கான பதிலை நீங்கள் இன்னமும் தரவில்லை. இப்போதாவது இவ்வாசகத்திற்கான பதிலைத் தாருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:

//உலக தோற்றமுதல் கிறிஸ்துவை அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைத்திருந்தார் என்று வேதம் சொல்லுகிறதே!!//

நீங்கள் சொல்கிறபிரகாரம் வேதம் சொல்லவில்லை.

வெளி. 13:8 உலகத்தோற்றமுதல் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியினுடைய ஜீவபுஸ்தகத்தில் பேரெழுதப்பட்டிராத பூமியின் குடிகள் யாவரும் அதை வணங்குவார்கள்.

வசனம் இப்படிச் சொல்வதை வைத்து, “உலகத் தோற்றமுதல் கிறிஸ்துவை தேவன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைத்திருந்தார்” என எப்படிச் சொல்லமுடியும்?

உலகத்தோற்றமுதல் கிறிஸ்து அடிக்கப்பட்டார் என்றுதான் வசனம் சொல்கிறது. ஆதாம் பாவம் செய்தால் கிறிஸ்து அடிக்கப்பட வேண்டும் என்பது தேவனின் தீர்மானத்தில் இருந்தது. ஆதாம் பாவம் செய்ததும் கிறிஸ்து அடிக்கப்படுவது உறுதியாக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் உலகத்தோற்றமுதல் கிறிஸ்து அடிக்கப்பட்டார் என வசனம் கூறுகிறது.

மறுதலித்துப் போகிறவர்கள் “கிறிஸ்துவை மீண்டும் சிலுவையில் அறைவதாக” எபிரெயர் 6:6 கூறுகிறது. இதனால் சொல்லர்த்தப்படி கிறிஸ்துவை சிலுவையில் அறைவதாக எடுக்கமுடியுமா? நிச்சயம் முடியாது. அதுபோலவே உலகத்தோற்றமுதல் கிறிஸ்து அடிக்கப்பட்டார் என்பது சொல்லர்த்தமானதல்ல. ஆதாம் பாவம் செய்ததென்பது, கிறிஸ்து அடிக்கப்படப்போவதை உறுதி செய்தது. எனவேதான் உலகத் தோற்றமுதல், அதாவது முதல் பாவமாகிய ஆதாமின் பாவம் முதல், கிறிஸ்து அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக இருக்கிறார் என வசனம் சொல்கிறது.

உலகத் தோற்றமுதல்” எனும் சொற்றொடரின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

லூக்கா 11:50 ஆபேலின் இரத்தம்முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே கொலையுண்ட சகரியாவின் இரத்தம்வரைக்கும், உலகத்தோற்றமுதற்கொண்டு சிந்தப்பட்ட சகல தீர்க்கதரிசிகளுடைய இரத்தப்பழியும் இந்தச் சந்ததியினிடத்தில் கேட்கப்படத்தக்கதாக அப்படிச் செய்வார்கள் என்று சொல்லுகிறது.

உலகத்தோற்றத்திற்குப் பின் முதன்முதலாக சிந்தப்பட்ட இரத்தம் ஆபேலினுடையது. எனவே “உலகத்தோற்றமுதற்கொண்டு” எனும் சொற்றொடர் ஆபேல் இரத்தம் சிந்தின காலத்தையே குறிப்பிடுகிறது. இதேபோல்தான், வெளி.13:8-ன் “உலகத்தோற்றமுதல்” எனும் சொற்றொடர் ஆதாம் பாவம் செய்த காலத்தையே குறிப்பிடுகிறது.

இந்த அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளாததால்தான், ஆதாம் மீறத்தான் வேண்டும், கிறிஸ்து அடிக்கப்படத்தான் வேண்டும் என்பதெல்லாம் தேவனால் முன்குறிக்கப்பட்ட விஷயங்கள் என நீங்களாக ஒரு theory-ஐ உருவாக்கி, அதனடிப்படையில் பல கொள்கைகளை வகுத்துள்ளீர்கள்.

ஆதாம் தமது கட்டளையை மீறத்தான் வேண்டும், கிறிஸ்து அடிக்கப்படத்தான் வேண்டும் என முன்னதாகவே தீர்மானம் செய்துவிட்டு, “இக்கனியை புசிக்காதே” என ஆதாமிடம் தேவன் சொல்வது, தேவனை ஒரு வேஷதாரியாகக் காட்டுகிறது. “கனியை ஆதாம் புசித்துதான் ஆக வேண்டும்” என தேவன் தீர்மானித்துவிட்டு “கனியைப் புசிக்காதே” எனச் சொல்வது தேவனுக்கு எவ்வாறு தகுதியாக இருக்கும் சகோதரரே? இது ஒரு தேவதூஷணம் ஆகாதா?

நான் இப்படிக் கேட்டால், “ஆதாம் கனியைப் புசிப்பான்” என்பது தேவனுக்குத் தெரியாதா, பின்னர் ஏன் “கனியைப் புசிக்காதே” எனக் கட்டளையிட்டார் எனக் கேட்பீர்கள். இக்கேள்விக்கு எனது பதில், “ஆதாம் கனியைப் புசிப்பாரா மாட்டாரா என்பது தேவனுக்குக்கூட suspense-ஆகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்பதே.

இப்படிச் சொன்னால், “பின்னால் நடக்கப் போகிற காரியம் தேவனுக்குத் தெரியவில்லையெனில், அவர் எப்படி தேவனாக இருக்க முடியும்?” எனக் கேட்பீர்கள். இக்கேள்விக்கு எனது பதில், “பின்னால் நடக்கப்போவதை தேவனால் அறியமுடியும்தான், ஆனால் எதை அறியவேண்டும், எதை அறியவேண்டியதில்லை என்பதை அவர் தனது விருப்பப்படியே தீர்மானித்து, எதை அறியவேண்டும் என நினைக்கிறாரோ, அதை அறிகிறார்; எதை அறியவேண்டாம் என நினைக்கிறாரோ அதை அறியாமல் விட்டுவிடுகிறார்” என்பதே.

இப்படிச் சொன்னால் அதைப் பரிகசிக்க கொல்வின் போன்றவர்கள் வந்துவிடுவார்கள். ஆனால் நீங்கள் உட்பட யாருக்குமே பின்வரும் வசனத்திற்கு பதில் கூறமுடியாது.

ஆதியாகமம் 6:5,6 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

மனுஷனுடைய அக்கிரமம் பூமியில் பெருகின பின்தானே, மனுஷனுடைய இருதய நினைவுகள் பொல்லாததே என தேவன் கண்டார்? அவ்வாறெனில், மனுஷனுடைய அக்கிரமம் பெருகுமென்றும் அதற்குக் காரணம் அவனது இருதய நினைவுகள் பொல்லாததே என்றும் முன்னமேயே தேவன் அறியவில்லை என்றுதானே அர்த்தம்?

அதனால்தானே அவர் மனஸ்தாபப்பட நேர்ந்தது? முன்னமே அறிந்ததும், தமது சித்தப்படியே நடப்பதுமான விஷயத்திற்காக தேவன் ஏன் மனஸ்தாபப்பட வேண்டும்? அதற்காக ஏன் விசனப்படவேண்டும்?

ஒரு காலத்தில் மனுஷனைப் படைத்து அவனை மனநிறைவோடு ஆசீர்வதித்த தேவன் (ஆதி. 1:28), பின்னொரு காலத்தில் அதே மனிதனைப் படைத்ததற்காக ஏன் மனஸ்தாபப்படவேண்டும், விசனப்படவேண்டும்?

பின்வரும் வசனத்தையும் படியுங்கள்.

1 சாமுவேல் 15:11 நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்;

சவுலின்மீது தேவன் வைத்திருந்த நம்பிக்கை குலைந்துபோனதால்தானே, அவனை ராஜாவாக்கினது தேவனுக்கு மனஸ்தாபத்தைக் கொடுத்தது? இன்னும் படியுங்கள்.

1 சாமுவேல் 13:13,14 சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்; மற்றப்படி கர்த்தர் இஸ்ரவேலின்மேல் உம்முடைய ராஜ்யபாரத்தை என்றைக்கும் ஸ்திரப்படுத்துவார். இப்போதோ உம்முடைய ராஜ்யபாரம் நிலைநிற்காது;

சவுலின் ராஜ்யபாரம் ஸ்திரப்படுவதும், நிலைநிற்காமல் போவதும் முழுக்க முழுக்க சவுலின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. கர்த்தரின் கட்டளைப்படி நடந்திருந்தால், சவுலின் ராஜ்யபாரம் என்றென்றும் ஸ்திரப்பட்டிருக்கும். ஆனால் சவுல் தேவகட்டளைப்படி நடக்கவில்லை. எனவே அவரது ராஜ்யபாரம் நிலைநிற்காமல் போனது.

இச்சம்பவத்திலும் சவுல் தமது கட்டளைப்படி நடப்பாரா மாட்டார என்பதை தேவன் அறியவில்லை என்றுதான் கூறவேண்டும். இதையெல்லாம் நீங்கள் ஏற்பது கடினம்தான் என்பதை நான் அறிவேன். இதையெல்லாம் ஏற்கனவே நாம் விவாதித்துள்ளோம். ஆனாலும் புதியவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இவற்றை நான் பதிக்கிறேன்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ரோமர் 5:12. இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று.

சகோ அன்பு:
//ஆதாமினால் பாவம் உலகத்தில் பிரவேசித்தது என்றுதான் வசனம் சொல்கிறது. நீங்கள் சொல்வதுபோல் “ஆதாமின் பாவத்தினால் தான் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தார்கள்” என வசனம் கூறவில்லை. அதாவது “தான்” எனும் வார்த்தைப் பிரயோகம் வசனத்தில் இல்லை. நீங்களாகச் சேர்த்துக் கொண்டீர்கள்.//

தான் என்கிற வார்த்தையை நான் வசனத்துடன் சேர்த்துக்கொள்ளவில்லை, விளக்கத்துடன் தான் சேர்த்திருக்கிறேன்!! இந்த வசனத்தில் இப்படியாக ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் வந்தது பொலவும், எல்லா மனுஷரும்....என்று இருக்கும் போதே ஆதாமின் பாவத்திற்கும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்கிறதற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக உங்களுக்கு தெரியவில்லையா!!

சங்கீதம் 51:5 இதோ, நான் துர்க்குணத்தில் உருவானேன்; என் தாய் என்னைப் பாவத்தில் கர்ப்பந்தரித்தாள்.

ஆதாம் ஏவாள் மாத்திரமே இந்த வசனத்திற்கு உட்படாதவர்களாக இருந்திருப்பார்கள்!! இவர்களுக்கு பிறகு வந்த முழு மனுகுலத்திற்கும் பாவம் என்பது ஒரு ஜீன் (Gene) போல் தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கிறது!! இதை சின்ன குழந்தைகளிடமும் நான் பார்க்க முடிகிறது, ஆனால் சின்ன குழந்தைகள் இது போன்ற பாவத்தில் ஈடுப்படும் போது அதை சேஷ்ட்டை என்றோ, விளையாட்டு தனம் என்றோ நாம் தட்டிக்கழித்து விடுகிறோம்!! இந்த துர்குணம் ஒரு மனிதனுக்குள் வருவதற்கு என்ன காரணம் என்று யோசித்திருக்கிறீர்களா?? ஆகவே தான் ரோமர் 5:12ல் அந்த ஒரே மனுஷனான ஆதாமின் பாவத்தினால் தான் அனைவரும் பாவம் செய்கிறார்கள் என்று என் விளக்கத்தை தைரியமாக எழுதினேன்!!

//மேற்கூறிய வசனத்தில், “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும்” எனும் வரிக்கு என்ன அர்த்தம் என்கிறீர்கள்? எல்லா மனுஷரும் பாவம் செய்ததால்தான் அவர்களுக்கு மரணம் வந்தது என்கிறீர்களா? ஆம் எனில், பிறந்த குழந்தைகள் பல, பிறந்த உடனேயே மரணமடைந்ததாக வேதாகமத்திலேயே ஆதாரம் உள்ளதே, அந்த குழந்தைகள் மரணமடையக் காரணம் என்ன?//

நான் முதலில் எழுதியது போலவே இப்பவும் எழுதுகிறேன், அதாவது, ஆதாமின் பாவம் எல்லாருக்குள்ளும் வந்தது, இதினால் எல்லாரும் துர்க்குணத்தில் உருவாகி, எல்லாரும் பாவம் செய்கிறார்கள்!! மரணம் என்பது (அது ஒரே மரணம் தான், நீங்களாகவே இதை இரண்டாம் மரணம் என்று பெயர் சூட்டிக்கொண்டு இருக்கிறீர்கள்) நிச்சயமாக ஆதாம் செய்த பாவம் எல்லா மனிதர்களுக்குள்ளும் வந்ததினால் உண்டாவது தான், ஆகவே தான் நீங்கள் கேட்டப்படியே பிறந்த குழந்தை, இறந்தே பிறக்கும் குழந்தைகள் எல்லாம் அதில் அடங்குகிறார்கள்!! ஆனால் மரணத்திற்கு காரணமான அந்த ஆதாமின் பாவமே, நம்மை துர்க்குணத்தில் வைத்து இன்னும் பாவங்கள் செய்ய வைக்கிறது என்பது என் கருத்து!! தன்னை பரிசுத்தவான் என்று கூறுபவம் நிச்சயமாக எல்லாரையும் ஏமாற்றுகிறான்!! சுய பாவம் இல்லாத ஒரு மனிதனினும் கிடையாது!! மூலமாக இருக்கும் ஆதாமின் பாவத்தின் விளைவு மனிதர்களை பாவங்கள் செய்ய வைத்திருப்பதினால் எல்லா பாவங்களுக்கும் தான் மன்னிப்பே தவிர, தேவன், ஆதாமின் பாவத்தை மாத்திரம் மன்னித்துவிட்டு, மற்ற பாவங்களை பதுக்கி வைத்து, உயிர்த்தெழசெய்து அதன் பின் அதற்கு தண்டனை கொடுப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? பாவத்துடன் எப்படி உயிர்த்தெழுதல் சாத்தியம் என்பது தான் உங்களிடம் நான் கேட்கும் கேள்வி?

ஆதாமின் பாவம் என்றும் சுயமாக செய்யும் பாவம் என்றும் தேவன் தனியாக பிரித்து வைத்து அதற்கு தண்டனை கொடுக்கவில்லை, மாறாக ஆதாமின் நிமித்தம், எல்லாரும் தண்டிக்கப்படுகிறார்கள் என்றால், எல்லாரும் துர்க்குணத்தில் உருவாகி பாவத்தில் வளர்கிறார்கள்!! தாவீது தன் சிறு வயதின் பாவத்திற்கு மன்னிப்பு கேட்கிறான் என்றால் அவன் என்ன சிறு வயதில் மாத்திரமே பாவம் செய்தானா, இல்லையே, அதன் பின் பெரியவனான பிறகும் அவன் விபச்சாரம் செய்திருக்கிறானே!! இந்த பாவம் அவன் சுயத்தில் தான் செய்தான், ஆனால் அதற்கு காரணமே எல்லாரும் போல் அவனும் துர்க்குணத்தில் உருவானது தானே!! அந்த துர்க்குணத்தில் உருவானது தான் ஆதாமின் பாவத்தின் தொடர்ச்சியாகும்!! இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பினைந்து இருக்கும் விஷயங்கள்!!

மன்னிப்பு பெறுவது ஆதாமின் பாவம் மாத்திரம் இல்லை, அவன் மூலமாக உலகில் வந்த எல்லா பாவங்களும் தான்!!

I யோவான் 2:12 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.

கிறிஸ்துவின் நாமத்தின் நிமித்தம், "பாவங்கள்" மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் என்றால் என்ன ஆதாமின் பாவம் மாத்திரமா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆனால் “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” எனும் வாக்கியத்தில் பவுல் சொல்கிற மரணம், “இரண்டாம் மரணம்”. இரண்டாம் மரணம் என்பது நிரந்தர மரணம். எனவேதான் “துன்மார்க்கர் ஏகமாய் சங்கரிக்கப்படுவார்கள்; அறுப்புண்டு போவதே துன்மார்க்கனின் முடிவு” என மீண்டும் மீண்டுமாக வேதாகமம் சொல்கிறது.//

அப்படி என்றால் திரும்ப முடியாத இரண்டாம் மரணத்திற்கு எல்லா மனிதர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்!! ஏனென்றால் எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், அது மன்னிப்பு பெறாமல், எல்லாரும் மரணத்திற்குள் போகிறார்கள் என்றால் அது இரண்டாம் மரணம் என்கிறீர்கள்!! அதான் எல்லாரும் உயிர்த்தெழ முடியாத இரண்டாம் மரணத்திற்கு போகிறார்களே, அதற்கு ஏன் இயேசு கிறிஸ்து இரத்தம் சிந்த வேண்டும், ஏன் நியாயத்தீர்ப்பு என்கிறா ஒரு "நாடகம்" நடக்க வேண்டும்? துன்மார்க்கர் அறுப்புண்டு போவார்கள் என்பது இரண்டாம் மரணம் என்று முடிவு செய்திருக்கிரீர்கள், அப்படி என்றால் யாரும் இதற்கு தப்ப முடியாது என்று இரண்டாம் மரணம் என்கிற ஒரு "மரணத்தை" நிரந்தர மரணம் என்று எழுதி, எல்லா மனிதர்களும் அதற்கு தான் லாயக்கு என்று தீர்ப்பு செய்திருக்கிறீர்கள்!!

//ஏற்கனவே மரண தண்டனையிலிருக்கும் ஒருவனிடம், “நீ சட்டத்திற்குக் கீழ்படியவில்லையெனில், உனக்கு மரண தண்டனைதான் கிடைக்கும்” எனச் சொல்வதில் ஏதேனும் பயன் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவன் மிகவும் சந்தோஷமாக, “அதான் ஏற்கனவே எனக்கு மரணதண்டனைதானே உள்ளது; அப்புறம் ஏன் நான் சட்டத்திற்குக் கீழ்படியவேண்டும்” என்றுதானே கேட்பான்? எனவே ஏற்கனவே மரண நியமனத்திலிருக்கும் மனிதரைக் குறித்து, “எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்தது” எனப் பவுல் சொல்வது அர்த்தமற்றதாகத்தான் இருக்கும்.//

நீங்கள் கேட்கும் இந்த கேள்வி வேதத்திற்கு உட்பட்டதில்லையே!! ஏனென்றால்,

எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

என்கிறது வசனம்!! ஒரு ஒரேதரம் அனைவருக்கும் மரணம் இருக்கிறது, ஆனால் அந்த மரணத்திலிருந்து நடைப்பெறும் உயிர்த்தெழுதல் தான் இரண்டு விதமாக இருக்குமே என்று வேதம் சொல்லுகிறதே தவிர, மரணம் இரண்டு விதமாக இருக்கும் என்பது சொந்த கருத்து!! முதலாம் தர உயிர்த்தெழுதலில், அதாவது ஆவிக்குரிய சரீரத்தோடு, கிறிஸ்துவின் சாயலில், சாவாமையை தரித்துக்கொள்ள நடைபெறும் உயிர்த்தெழுதல் தான் முதலாம் தர உயிர்த்தெழுதல், இது சபைக்கு மாத்திரமே நியமிக்கப்பட்டிருக்கும் உயிர்த்தெழுதல்!! இந்த உயிர்த்தெழுதலில் பங்கு பெற தான் கிறிஸ்தவம் அழைக்கிறது!! இந்த கிறிஸ்தவம் என்கிற ஒரு பெரிய கடலிலிருந்து தேவன் தனக்கு சித்தமானவர்களுக்கு அந்த பதவியை கொடுப்பார், நாம் பிரயாசிக்கிறோம், கிடைப்பதும் கிடைக்காமல் போவதும் அவர் கைய்யில் தான் இருக்கிறது!! ஆனாம் மீதமானவர்கள் அனைவரும் அந்த ஒரே தரம் மரித்து நியாயத்தீர்ப்படைய எழும்புவார்கள்!! நியாயத்தீர்ப்பு என்றவுடன், வெள்ளை சிங்காசனம், வெள்ளாடு, செம்மறியாடு என்று தான் கிறிஸ்தவர்களுக்கு நினைவு வரும், ஆனால் நியாயத்தீர்ப்பின் நாட்கள் என்பது நீதியை கற்றுக்கொள்ளும் நாட்கள் என்பது வேதத்தையும் வசனத்தையும், தேவனின் நீதியை வாஞ்சிப்பவர்கள் புரிந்துக்கொள்கிறார்கள்!!

எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால் மரண‌ம் எல்லாருக்கும் வந்தது என்று பவுல் சொல்லுவது எந்த விதத்தில் அர்த்தமற்றதாக இருக்கிறது, மரணம் எப்படி, ஏன் வருகிறது என்று விளங்காதவர்களுக்கு விளக்கவே இப்படி சொல்லுகிறார், மற்றபடி நீங்கள் சொல்லுவது போல், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால எல்லா மனுஷரும் "இரண்டாம்" மரணத்திற்குள் போவார்கள் என்பது வேதத்தில் இல்லாத விஷயங்கள்!! ஏனென்றால் எல்லா மனுஷர்களும் பாவம் செய்தப்படியால் யாவரும் இரண்டாம் மரணத்திற்கு போகிறார்கள் என்றால், எதற்கு நியாயத்தீர்ப்பு!!

//துன்மார்க்கனின் அழிவிற்கான அநேக வசனங்களும், பவுல் சொல்கிற மரணமும் “இரண்டாம் மரணமாகிய நிரந்தர மரணத்தையே” குறிப்பிடுகின்றன.//

மன்னிக்கனும், பவுல் இரண்டாம் மரணமாகிய நிரந்தர மரணத்தை போதிக்கவில்லை!! நீங்கள் அப்படி எடுத்துக்கொண்டு போதிக்கிறீர்கள்!! உங்களின் இந்த போதனையின்படி பார்த்தோமென்றால், எல்லாருமே பாவம் செய்கிறபடியால், எல்லாருக்குமே "இரண்டாம்" மரணம் வந்து, யாருமே உயிர்த்தெழ முடியாது!! பிறகு யார் தான் சபை, யார் தான் இந்த பூமியில் வாழ்வார்கள், யார் தான் கிறிஸ்துவின் சாயலில் வருவார்கள், யார் யாருக்கு நியாயத்தீர்ப்பு நடத்துவார்கள், ஏனென்றால் இரண்டாம் மரணமான நிரந்தர மரணத்திற்குள் பவுல் சொல்லுகிறபடி அனைவரும் சென்றுவிடுவார்களே!! எனக்கு உங்களின் இந்த கருத்தில் துளியும் உடன்பாடு கிடையாது சகோதரரே!!

//முதலாம் மரணத்திலிருந்தும் நமக்கு விடுதலையுண்டு; இரண்டாம் மரணத்திலிருந்தும் நமக்கு விடுதலையுண்டு.//

இதுவும் முறனான ஒரு வாக்கியம் தான்!! நிரந்தர மரணம் இரண்டாம் மரனம் என்று சொல்லிவிட்டு, அதிலிருந்து நமக்கு விடுதலையுண்டு என்று எழுதுவது சரியாகுமா!!

மத். 5:7, மற்றும் 6:14,15ன் படி மனிதர்களின் கிரியைகளை மாத்திரமே நீங்கள் மேன்மைப்படுத்த விரும்புகிரீர்கள்!! நம்மில் நிச்சயமாக மன்னிக்கும் சுபாவம் இருக்கிறது, ஏனென்றால் தேவ சாயலில் படைக்கப்பட்டிருக்கும் ஆதாமின் சந்ததிகள் தான் நாம்!! மன்னிக்கும் சுபாவம் மாத்திரம் இல்லை, நம்மில் கானும் அன்பு, வைராக்கியம், நன்மை செய்வது, இது எல்லாம் நம்மில் கொஞ்சம் இருக்க தான் செய்கிறது!! ஆனால் கிறிஸ்துவின் உபதேசம் இரக்கம் காட்டுவதிலும், மன்னிப்பு கொடுப்பதிலும் அடங்கிவிடவில்லையே!! நாம் பிறரை மன்னிப்பது என்றால், பிதாவிடம் அவர்களுக்காக பரிந்து பேசுவது!! சிலுவையில் இருக்கும் கிறிஸ்து, யாரையும் பார்த்து உங்களை மன்னிக்கிறேன் என்று சொல்லவில்லை, மாறாக, பிதாவே இவர்களுக்கு மன்னியுங்கள் என்று தான் வின்னப்பம் செய்கிறார்!! மன்னிக்கிறவர் பிதா ஒருவரே, கிறிஸ்து பரிந்து பேசுகிறார்!! நம் சுபாவம் என்ன, நாம் மண் என்று தேவன் அறிந்திருக்கிறார், நம் நீதி அவருக்கு முன் கந்தையாக இருக்கிறது என்றும் அவருக்கு தெரியும்!!

நன்மை செய்யாதிருப்பது மாத்திரமே பாவம் என்பது தங்களின் கருத்தாக இருக்கிறது, என்று நினைக்கிறேன்!!

நன்மை செய்வது ஒன்றே நித்தியஜீவன் பெற்றுக்கொள்ள வழி என்றால், சீஷர்களும் அப்போஸ்தலர்களும் இரத்தசாட்சியாக மரிக்கும் அளவிற்கு கிறிஸ்து என்கிற நாமத்தை போதித்திருக்கவேண்டியது கிடையாதே!! நன்மை செய்வது கிறிஸ்தவ ஜீவியத்தின் ஒரு பகுதியே அன்றி நன்மை செய்வது மாத்திரமே கிறிஸ்தவம் கிடையாது!! ஏனென்றால் கிறிஸ்தவர்களை காட்டிலும் நன்மை செய்வதில் கிறிஸ்துவை அறியாத அநேகர் இருக்கிறார்களே!! பிறகு எதற்கு சுவிசேஷம், பேசாமல் நன்மை செய்துக்கொண்டு மாத்திரமே இருக்கலாமே!! நன்மை செய்வதை குறித்து எல்லா மதங்களும் போதிக்கிறதே!! பிறகு கிறிஸ்தவத்திற்கு என்ன தனி சிறப்பு!!??



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோ.பெரியன்ஸ் அவர்களே!

“ஆதாமின் பாவத்தின் காரணமாக நாம் எல்லோரும் பாவம் செய்கிறோம் என்பது மெய்தான்” என ஏற்கனவே தெளிவாக நான் எழுதிவிட்டேன். அதன் பின்னும், “ஆதாமின் பாவத்திற்கும் எல்லா மனுஷரும் பாவஞ்செய்கிறதற்கும் ஒரு தொடர்பு இருப்பதாக உங்களுக்கு தெரியவில்லையா!!” எனக் கேட்பது என்னை சலிப்படையச் செய்கிறது. ஆதாமின் பாவத்திற்கும் நமது பாவத்திற்கும் தொடர்பு இல்லை என நான் ஒருபோதும் சொல்லவில்லை.

ஆனால் நமது எல்லா பாவங்களுக்கும் ஆதாமின் பாவம் தான் காரணம் என்பதைத் தான் நான் மறுக்கிறேன். அதாவது ஆதாமின் பாவத்தின் காரணமான ஜென்மசுபாவத்தாலும் நாம் பல பாவங்களைச் செய்கிறோம்; அதோடுகூட ஜென்ம பாவசுபாவத்திற்கு சம்பந்தமில்லாத முழுக்க முழுக்க நம் சுயாதீனத்தின்படியும் பல பாவங்களைச் செய்கிறோம் என்பதுதான் எனது வாதம். இதைப் புரிந்துகொள்ளாமல் சொன்னதையே சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்.

நம் சுயாதீனத்தின்படியும் நாம் பாவம்செய்ய முடியும் என்பதற்குத்தான் ஆதாமின் சுயாதீன பாவத்தை உதாரணம் காட்டினேன். நீங்களோ ஆதாம் சுயாதீனமாகப் பாவம் செய்யவில்லை; தேவன் தான் ஆதாம் பாவம் செய்யவேண்டும் எனத் திட்டம் போட்டு அதை சாத்தான் மூலம் செயல்படுத்தினார் என்கிறீர்கள்.

எவ்வளவோ எழுதுகிற நீங்கள், மத்தேயு 5:7 மற்றும் மற்றும் 6:15-க்கு மட்டும் விளக்கம் சொல்ல மறுக்கிறீர்கள்.

முதலாவது இவ்விரு வசனங்களுக்கும் உங்கள் விளக்கத்தைக் கூறுங்கள். குறிப்பாக மத்தேயு 6:15-ல் நம் தப்பிதங்களை பரமபிதா மன்னியாதிருப்பார் என இயேசு சொல்வதற்கு விளக்கம் தாருங்கள். பரமபிதா நம் தப்பிதங்களை மன்னியாடிருக்கும்போது நாம் எப்படி உயிர்த்தெழ முடியும்?

அடுத்து, மத்தேயு 25-ம் அதிகாரத்தில் வெள்ளாட்டுப் பிரிவினரைப் பார்த்து “சபிக்கப்பட்டவர்களே” எனச் சொல்லி அவர்களை பிசாசுக்கு நியமிக்கப்பட்ட நித்திய அக்கினிக்கு அனுப்புவதைக் குறித்து விளக்குங்கள்.

இறுதியாக, ஏசாயா 65:20 கூறுகிற நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான் எனும் கூற்றுக்கு விளக்கம் தாருங்கள். மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//அப்படி என்றால் திரும்ப முடியாத இரண்டாம் மரணத்திற்கு எல்லா மனிதர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லுங்கள்!!//

ஆமாம், நிச்சயமாக. இப்போதுதான் வாதத்தின் சரியான பாதைக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். எல்லோரும் பாவம் செய்துள்ளதால் எல்லோரும் 2-ம் மரணத்திற்கு போக வேண்டியவர்கள்தான் (முதாலம் உயிர்தெழுதலுக்கு பங்குள்ளவர்களைத் தவிர ...). ஆனாலும் மற்றவர்களிடம் இரக்கம் பாராட்டி, மற்றவர்களின் தப்பிதங்களை நாம் மன்னித்தால், மத்தேயு 5:7 மற்றும் 6:14-ன் படி நாம் இரக்கத்தைப் பெற்று, மன்னிப்பைப் பெற்று, 2-ம் மரணத்திலிருந்து தப்புவிக்கப் படுவோம்.

மாறாக, மற்றவர்களிடம் இரக்கம் பாராட்டாமலும், மற்றவர்களின் தப்பிதங்களை மன்னியாமலும் இருந்தால், மத்தேயு 6:15 மற்றும் யாக்கோபு 2:13-ன்படி, நம் பாவங்கள் மன்னிக்கப்படாமல், இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பைப் பெற்று 2-ம் மரணத்தைப் பெறுவோம்.

இதனால் தான் பிரதான கற்பனையாக அன்பையும் இரக்கத்தையும் திரும்பத் திரும்ப வேதாகமம் சொல்கிறது.

இவ்வுண்மையை நீங்கள் புரிந்துகொள்ளத்தான் மத்தேயு 5:7 மற்றும் மத்தேயு 6:14,15 வசனங்களின் விளக்கத்தைப் புரிந்துகொள்ளும்படி மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.



-- Edited by anbu57 on Sunday 26th of June 2011 10:08:12 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//வசனம் இப்படிச் சொல்வதை வைத்து, “உலகத் தோற்றமுதல் கிறிஸ்துவை தேவன் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியாக வைத்திருந்தார்” என எப்படிச் சொல்லமுடியும்?//

இதில் எந்த குறையும் தவறும் கிடையாது!! உலக தோற்ற முதல் கிறிஸ்து இயேசு என்று மாத்திரம் இருந்திருந்தால் நீங்கள் சொல்லுவது சரியாக இருக்கலாம், ஆனால் வசனம் அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டி என்று சொல்லுவது, கிறிஸ்து ஈடுபலிக்காக முன்குறிக்கப்பட்டவர் என்பதை தான் விளக்கியிருக்கிறேன்!! அதை நான் வசனமாக எழுதவில்லையே!!

சகோ அன்பு அவர்களே, உலகத்தோற்றமுதல் கிறிஸ்து இயேசு சிலுவையில் சிந்தி இரத்தம் சிந்துவதாக நானும் சொல்லவில்லை, அப்படி ஒரு அர்த்தத்தையும் கொள்ளவில்லை, ஆனால் உலகத்தோற்ற முதல் கிறிஸ்து இயேசு அந்த ஈடு பலியாக முன்குறிக்கப்பட்டவராக இருக்கிறார் என்பது தான் நான் கொண்டிருக்கும் அர்த்தமும்!! தேவனின் ஆதீனத்தில் அதற்கான நேரம் வந்த போது தான் கிறிஸ்த் இயேசு ஸ்திரியினடித்தில் பிறந்தார்!! இந்த ஈடுபலியாக முன்குறிக்கப்பட்டிருப்பதையே தான் நான் எழுதியிருக்கிறேன்!!

//இந்த அர்த்தத்தை நீங்கள் புரிந்துகொள்ளாததால்தான், ஆதாம் மீறத்தான் வேண்டும், கிறிஸ்து அடிக்கப்படத்தான் வேண்டும் என்பதெல்லாம் தேவனால் முன்குறிக்கப்பட்ட விஷயங்கள் என நீங்களாக ஒரு theory-ஐ உருவாக்கி, அதனடிப்படையில் பல கொள்கைகளை வகுத்துள்ளீர்கள்.//

அப்படி என்றால்,

ஆதியாகமம் 3:15. உனக்கும் ஸ்திரீக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.

இந்த வசனம் யாரை குறித்து சொல்லுகிறார் தேவன்!! இதுவும் எங்கள் சொந்த தியரியா!! அது மாத்திரம் இல்லை, தேவன் நினைத்திருந்தால், ஆதாம் பாவம் செய்யாதிருந்திருக்க முடியும்!! ஆனால் ஆதாம் பாவத்தில் விளைவுகளை அனுபவித்து, அவன் மூலம் முழு மனுக்குலம் அந்த அனுபவத்தில் கடந்து வந்து, ஏற்ற காலத்தில் கிறிஸ்து வந்து, மீட்பின் திட்டத்தை பகிரங்கப்படுத்தி, அதினால் அவரின் சாயலில் சிலரை உருவாக்கி தேவனின் திட்டத்தை நிறைவேற்ற, மீதியான (முன்குறிக்கவோ, தெரிந்துக்கொள்ளப்படாதவர்களையோ) மனிதர்கள் அனைவரையும் தேவனின் ராஜியத்தின் நன்மையை விளங்க செய்து, அதன் பின் நித்திய ஜீவனை தருவதாகவே வேதம் சொல்லுகிறது!!

எங்கள் பார்வையில் வேதத்தில் தேவனின் இப்படி பட்ட ஒரு திட்டத்தை தான் தெர்நிதிருக்கிறோம்!! இந்த திட்டம் ஒன்று மாத்திரமே தேவனின் தன்மையான அன்புக்கு இசைவாக இருக்கிறது!! நடப்பது எதுவும் தேவனின் தீர்மானத்தின்படி அல்லாமல் நடப்பதில்லை என்பது எங்கள் புரிந்துக்கொள்ளுதல்!!

//இக்கேள்விக்கு எனது பதில், “ஆதாம் கனியைப் புசிப்பாரா மாட்டாரா என்பது தேவனுக்குக்கூட suspense-ஆகத்தான் இருந்திருக்க வேண்டும்” என்பதே.//

இது தான் தேவதூஷனமாக இருக்க முடியும்!! அப்படி என்றால் ஒவ்வொரு நொடியும் மனிதர்கள் என்ன செய்வார்கள், அதற்கு என்ன மாற்று திட்டம் போடலாம் என்கிற மனிதத்தன்மையில் தான் தேவனை அறிந்திருக்கிறீர்கள் என்று அர்த்தமாகிறது!! ஒரு சாதாரன மனிதன் தன் அறிவில் எட்டிய ரோபோவை அல்லது ஒரு இயந்திரத்தை கண்டுபிடித்து அதை இயக்குகிறான், அதற்கு முழு பொறுப்பு ஏற்றுகொள்கிறான், ஆனால் தேவாதி தேவன், சர்வ வல்லமையுள்ளவரும், ஆதி முதல் அனைத்தையும் அறிந்து அதை செயல்ப்படுத்துபவருக்கு மனிதன் என்ன செய்வான் என்பது சஸ்பென்ஸாக இருக்கும் என்பது தேவனின் எல்லாம் அறிந்தவராக இருக்கிறவர் என்கிற தன்மையை மட்டுப்படுத்துவது போல் இருக்கிறது!!

ரோமர் 8:21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

சிருஷ்டி என்பது சிருஷ்டிக்கப்பட்ட அனைத்தையுமே குறிக்கும், ஆவிக்குறிய ஜீவிகள் தொடங்கி உயிரற்ற பொருட்கள் வரை!! இதில் மனிதனும் தான் அடங்குகிறான்!! பலர் இதை கால்வனிஸம் (Calvinism) என்பார்கள்!! இதில் என்ன தவறு இருக்கிறது!!

அப்போஸ்தலர் 1:7 அதற்கு அவர்: பிதாவானவர் தம்முடைய ஆதீனத்திலே வைத்திருக்கிற காலங்களையும் வேளைகளையும் அறிகிறது உங்களுக்கு அடுத்ததல்ல.

பிதாவுக்கு சகலமும் தெரிந்திருக்கிறது, நமக்கு அது தெரியவில்லை என்பதால் பிதாவுக்கும் அது தெரியாது என்று பொருள் கொள்வது அவரின் சர்வவல்லமை என்கிற தகுதியை தூஷிப்பதாகும்!! ஒரு கடலின் அழைக்கூட இவ்வுலவு தான் வரவேண்டும் என்று எல்லை போட்டிருப்பவருக்கு, மனிதன் என்ன செய்வான் என்பது சஸ்பென்ஸாக இருக்கிறது என்று சொல்லுவது சரியாக படவில்லையே!!

கலாத்தியர் 4:5 காலம் நிறைவேறினபோது, ஸ்திரீயினிடத்திற் பிறந்தவரும் நியாயப்பிரமாணத்திற்குக் கீழானவருமாகிய தம்முடைய குமாரனை தேவன் அனுப்பினார்.

இது ஏதோ மனிதன் பாவம் செய்து அதன் பின் யோசித்து அவனை மீட்டு எடுக்க அதிரடியாக ஒரு திட்டத்தை போட்டு, அதை எப்ப நிறைவேற்றுவது என்று தெரியாமல் சஸ்பென்ஸாக வைத்து, பிறகு ஏதோ ஒரு சமயத்தில் திடீரென்று கிறிஸ்துவை அனுப்பவில்லை!! தேவனின் ஆதீனத்தின் உள்ள காலங்களை திட்டங்களை அறிவது நம் அறிவுக்கு ஒரு வேலை கம்மியாக இருக்கலாம், அதற்காக அவருக்கும் அது தெரியாது என்பது சரியான வாதம் இல்லை சகோதரரே!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆதியாகமம் 6:5,6 மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு, தாம் பூமியிலே மனுஷனை உண்டாக்கினதற்காகக் கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்; அது அவர் இருதயத்துக்கு விசனமாயிருந்தது.

//மனுஷனுடைய அக்கிரமம் பூமியில் பெருகின பின்தானே, மனுஷனுடைய இருதய நினைவுகள் பொல்லாததே என தேவன் கண்டார்? அவ்வாறெனில், மனுஷனுடைய அக்கிரமம் பெருகுமென்றும் அதற்குக் காரணம் அவனது இருதய நினைவுகள் பொல்லாததே என்றும் முன்னமேயே தேவன் அறியவில்லை என்றுதானே அர்த்தம்?//

"பின்" என்கிற வார்த்தையை விளக்கத்தில் சேர்த்து வசனத்தின் சரியான அர்த்தத்தை மாற்றிவிட்டீர்களே சகோதரரே!! இது ஒரு தந்தையின் பரிதவிப்பின் வெளிப்பாடே அன்றி வேறு ஒன்றும் இல்லை!! இதன் பின் தான் அவருக்கு தெரிந்தது என்பதே தேவனின் சர்வவல்லமையுள்ள தன்மையை கேலி செய்வது போல் இருக்கிறது!!

லூக்கா 19:41 அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது,

இங்கே இயேசு கிறிஸ்து அந்த நகரத்திற்கு நடக்கவிருக்கும் கதி ஏதோ நடந்து முடிந்துவிட்டதற்காக கண்ணீர் விடவில்லை, தேவனின் ஆவியில் நிறைந்திருந்த அவருக்கு முன்க்கூட்டிய என்ன நடக்க போகிறது என்பது தெரியும்!!

தேவன் மனஸ்தாபப்பட்டார் என்பது அவரின் அன்பையே வெளிப்படுத்துகிறது, இந்த நிகழ்வு அவருக்கு தெரியாமல் நடந்துவிட்டது என்று நினைக்க வேண்டாம்!!

//இச்சம்பவத்திலும் சவுல் தமது கட்டளைப்படி நடப்பாரா மாட்டார என்பதை தேவன் அறியவில்லை என்றுதான் கூறவேண்டும். இதையெல்லாம் நீங்கள் ஏற்பது கடினம்தான் என்பதை நான் அறிவேன். இதையெல்லாம் ஏற்கனவே நாம் விவாதித்துள்ளோம். ஆனாலும் புதியவர்கள் அறிந்துகொள்ள ஏதுவாக இவற்றை நான் பதிக்கிறேன்.//

தேவனுக்கு அறியவில்லை என்பதை ஏற்பது எனக்கு நிச்சயமாக கடினமாகத்தான் இருக்கிறது!! அநாதி காலத்திற்கும் உள்ள திட்டங்களை தன் ஆதீனத்தில் வைத்திருக்கும் தேவனுக்கு, அடுத்து என்ன நடக்கும், யார் என்ன செய்வார்கள் என்பது தெரியாமல் இருக்கிறார் என்பது சற்று ஆச்சரியமாக இருக்கிறது!! மோசேயை பார்வோனிடத்தில் போய் பேச சொல்லும் போது தேவன் பார்வோனை இருதயத்தை கடினப்படுத்துவார் என்பது தேவனுக்கு தெரியாதா!! அப்படி என்றால் மோசேயிடம் தேவன் பொய் சொன்னாரோ!! நம் நினைவுகளுக்கு எட்டாத விஷயங்களை ஏன் தேவனுக்கு தெரியாது என்று சொல்ல வேண்டும்!! தேவனை மனிதனின் தன்மையில் பார்க்காதீர்கள்!! தாயின் கருவின் தோன்றும் முன் தெரிந்திருக்கிறவர், தன் கைய்யில் நம்மை வரைந்துவைத்திருக்கிறவர், நம் தலைமயிரை என்னி வைத்திருக்கிறவருக்கு, அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாமல் இருப்பது ஜீரனிக்க முடியாத ஒரு தியரி!!

//எனக் கேட்பது என்னை சலிப்படையச் செய்கிறது.//

மன்னிக்கவேண்டும் சகோதரரே, உங்களை சலிப்படைய செய்வது என் நோக்கம் இல்லை, மாறாக என் புரிந்துக்கொள்ளுதலை உறுதியாக எழுதுவது தான் என் நோக்கம்!! உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!!

//முதலாவது இவ்விரு வசனங்களுக்கும் உங்கள் விளக்கத்தைக் கூறுங்கள். குறிப்பாக மத்தேயு 6:15-ல் நம் தப்பிதங்களை பரமபிதா மன்னியாதிருப்பார் என இயேசு சொல்வதற்கு விளக்கம் தாருங்கள். பரமபிதா நம் தப்பிதங்களை மன்னியாடிருக்கும்போது நாம் எப்படி உயிர்த்தெழ முடியும்?//

நிச்சயமாக பிதாவிடம் மன்னிப்பு கேட்பவார்கள் மன்னிப்பு பெறுவார்கள், இதில் எந்த சந்தேகமும் இல்லை, இதை ஏற்க மருக்கவும் இல்லை!! அப்படி என்றால் சகல் லோகத்தின் "பாவங்களுக்காக" கிறிஸ்து இயேசு சிந்திய இரத்தம் வீண் என்று சொல்லுகிறீர்களா!! கிறிஸ்துவர்களுக்கு அவர் பரிந்துரையாளராகவும், உலகத்திற்கு அவர் மத்தியஸ்தராகவும் இருக்கிறாரே!! முன்பு தேவனிடத்தில் நேரடியாக பலிகளை செலுத்தி மன்னிப்பு கேட்டவர்களுக்கு கிறிஸ்து இயேசுவின் பலி ஆறுதலை தந்திருக்கிறதே!!

அவரிடம் மன்னிப்பு கேட்பதற்கும் உயிர்த்தெழுதலுக்கும் எப்படி தொடர்பு படுத்துகிறீர்கள் என்பதை விளக்குங்கள்!!

//அடுத்து, மத்தேயு 25-ம் அதிகாரத்தில் வெள்ளாட்டுப் பிரிவினரைப் பார்த்து “சபிக்கப்பட்டவர்களே” எனச் சொல்லி அவர்களை பிசாசுக்கு நியமிக்கப்பட்ட நித்திய அக்கினிக்கு அனுப்புவதைக் குறித்து விளக்குங்கள்.//

சபிக்கப்பட்டவர்களே என்பதை நிச்சயமாக அழிந்துபோவார்கள் என்கிற அர்த்தத்தில் இல்லை என்பது என் புரிந்துக்கொள்ளுதல்!! ஏனென்றால் நியாயத்தீர்ப்பின் நாட்களில் கிறிஸ்து இயேசுவின் ஆட்சியில், தேவனின் ராஜியத்தில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்றும், நீதி வாசமாகும் பூமி என்றும் மற்ற வசனங்கள் சொல்லியிருக்கிறது!! இந்த பகுதிக்கு இனை அல்லது ஜோடு வசனம் இல்லாததால், நிச்சயமாக இன்னும் ஆறாயப்படவேண்டியதாக இருக்கிறது!! இந்த ஒரு வசனத்தை தவிர அனைத்து வசனங்களுமே நான் புரிந்துக்கொண்ட கருத்திற்கு சாதகமாக இருக்கிறது!! இந்த பகுதியில் நிச்சயமாக இன்னும் தெளிவு தேவையாக இருக்கிறது!! ஆனால் இந்த ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மனிதர்கள் பாவத்தில் உயிர்த்தெழுவார்கள் என்பது சரியாகாதே!!

//இறுதியாக, ஏசாயா 65:20 கூறுகிற நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான் எனும் கூற்றுக்கு விளக்கம் தாருங்கள். மற்றதை பிறகு பேசிக் கொள்ளலாம்.//

இந்த வசனமும் அந்த பகுதியுடன் தொடர்பில்லாத ஒரு வாக்கியமாக இருக்கிறது, நிச்சயமாக தெளிவானதும் என் கருத்தை பதிவு செய்கிறேன்!! மற்ற எல்லா வசனங்களை பார்த்த பிறகு இந்த வசனம் பொறுத்தம் இல்லாததாக தெரிகிறது!! ஆகவே கவனம் செலுத்தாமல் விட்டு விட்டேன், இது சம்பந்தமாக நிச்சயம் பதிவு செய்கிறேன்!!

//நம் சுயாதீனத்தின்படியும் நாம் பாவம்செய்ய முடியும் என்பதற்குத்தான் ஆதாமின் சுயாதீன பாவத்தை உதாரணம் காட்டினேன். நீங்களோ ஆதாம் சுயாதீனமாகப் பாவம் செய்யவில்லை; தேவன் தான் ஆதாம் பாவம் செய்யவேண்டும் எனத் திட்டம் போட்டு அதை சாத்தான் மூலம் செயல்படுத்தினார் என்கிறீர்கள்.//

நாம் துர்க்குணத்தில் உருவாகிறோம், ஆனால் ஆதாம் அப்படி இல்லையே!! ஒரு குழந்தை எப்படி பாவம் செய்கிறது!! அது செய்வதை நாம் பாவம் இல்லை என்று தள்ளி விடுகிறோம், அவ்வளவே!! மற்றோரு குழந்தையிடம் விளையாட்டு பொம்மையை திருடிக்கொண்டு வருவது எல்லாம் சுயத்தில் செய்யும் பாவமா, அது துர்க்குணத்தில் உருவானதற்கு எடுத்துக்காட்டு, அவ்வளவே!! அந்த குழந்தைக்குள் இருக்கும் பாவ சுவபாவமே பாவங்களுக்கு காரணமாகிவிடுகிறது!! ஆதாம் பாவம் செய்யக்கூடாது என்றால், தேவன் அந்த கனியை புசிக்கவோ வேண்டாமோ என்கிற ஒரு கட்டளையை வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லையே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//ஆமாம், நிச்சயமாக. இப்போதுதான் வாதத்தின் சரியான பாதைக்கு நீங்கள் வந்துள்ளீர்கள். எல்லோரும் பாவம் செய்துள்ளதால் எல்லோரும் 2-ம் மரணத்திற்கு போக வேண்டியவர்கள்தான் (முதாலம் உயிர்தெழுதலுக்கு பங்குள்ளவர்களைத் தவிர ...). ஆனாலும் மற்றவர்களிடம் இரக்கம் பாராட்டி, மற்றவர்களின் தப்பிதங்களை நாம் மன்னித்தால், மத்தேயு 5:7 மற்றும் 6:14-ன் படி நாம் இரக்கத்தைப் பெற்று, மன்னிப்பைப் பெற்று, 2-ம் மரணத்திலிருந்து தப்புவிக்கப் படுவோம்.//

அதாவது தேவன் ஆதாமிற்கு கொடுத்த தண்டனை நீங்கள் சொல்லும் "இரண்டாம் மரணம்" என்கிறீர்கள் அப்படியா? அதாவது இயேசு கிறிஸ்து எந்த மரணத்திலிருந்து உயிர்த்தெழ இரத்தம் சிந்தினார் என்று விளக்கினார் சரியாக இருக்கும்!!

ஆதாமுக்குள் "எல்லாரும்" மரிக்கிறது போல் கிறிஸ்துவிற்குள் "எல்லாரும்" உயிர்த்தெழுவார்கள் என்பதெல்லாம் சும்மா வேதத்தில் அப்படியே கொடுத்திருக்கிறார்கள் போல்!! என்ன சகோதரரே, ஒரு சிலர் முதலாம் உயிர்த்தெழுதல் (!!) அடைவார்கள் என்றால் உயிர்த்தெழுதலே அடையாதவர்கள் எப்படி இரண்டாவது மரணத்திற்கு போகிறார்கள்!! அல்லது முதலாவது மரணம் என்பதே கிடையாது, நேரடியாக இரண்டாம் மரணம் தானா!! நீங்கள் மனிதர்களின் செயலின் மேல் அதிக விசுவாசம் வைத்திருப்பதால் இப்படி எழுதுகிறீர்கள், நான் தேவனால் ஆகாதது ஒன்றும் இல்லை என்று விசுவசிப்பதால் என் கருத்தை பதிவு செய்கிறேன்!!

எபிரெயர் 9:27 அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,

இந்த ஒரேதரம் மரிப்பது என்பது பவுல் ரோம் 5:12ல் சொல்லும் "இரண்டாம்" மரணமா? எப்படி ஒன்னாம், இரண்டாம் மரணம் என்று தரம் பிரிக்கிறீர்கள்!! இது எல்லாம் வேதத்தில் எங்கே இருகிறது?? ஆதாமிற்கு வந்தது முதல் மரணமா, இரண்டாம் மரணமா??

கிறிஸ்துவிற்குள் எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்றால் அது முதலாம் மரணத்திலிருந்தா, இரண்டாம் மரணத்திலிருந்தா!! இரண்டாம் மரணம் நிரந்திர மரணம் என்கிறீர்கள், முதலாம் மரணத்திலிருந்து சிலர் மாத்திரமே உயிர்த்தெழுவார்கள் என்கிறீர்கள்!! நம் செயல்களினால் தான் உயிர்த்தெழுதல் என்றால் கிறிஸ்து எதற்கு வந்தார், ஏன் சிலுவை சுமந்தார், ஏன் இரத்தம் சிந்தினார், யாருக்கு ஈடுபலியாக மரித்தார்!!

தீத்து 2:14 அவர் நம்மைச் சகல அக்கிரமங்களினின்று மீட்டுக்கொண்டு, தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்ய பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி, நமக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்.

I தீமோத்தேயு 2:6 எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.

கலாத்தியர் 3:22 அப்படியிராதபடியால், இயேசுகிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கிற வாக்குத்தத்தம் விசுவாசமுள்ளவர்களுக்கு அளிக்கப்படும்படி வேதம் எல்லாரையும் ஏகமாய்ப் பாவத்தின்கீழ் அடைத்துப்போட்டது.

யோவான் 12:32 நான் பூமியிலிருந்து உயர்த்தப்பட்டிருக்கும்போது, எல்லாரையும் என்னிடத்தில் இழுத்துக்கொள்ளுவேன் என்றார்.

இந்த வசனங்கள் எல்லாம், மனிதனின் செயலால அல்ல, கிறிஸ்துவினால் எல்லா மனிதர்களும் உயிர்த்தெழுவார்கள் என்பதை காண்பிக்கிறது, நீங்கள் சுட்டி காண்பிக்கும் மத். 5:7, 6:14,15ல் உயிர்த்தெழுவதற்கு இது எல்லாம் செய்யவேன்டியதாக இருக்கிறது என்று ஒன்றும் சொல்லுவதில்லையே!!

நம் சுயத்தினால் மாத்திரமே பாவம் செய்கிறோம், தேவனுக்கும் இதற்கும் சபந்தமே கிடையாது என்றீர்களே,

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

மத். 5:7; 6:14,15ல் மீட்பை குறித்து ஒன்றுமே சொல்லப்படவில்லையே!! இது நல்ல கிரியைகள், இந்த கிரியைகளை செய்ய மதம் ஒரு தடை இல்லையே, இது எந்த மதத்தினரும் செய்வார்கள்!! நமக்கு இருக்கும் மூன்று படிகள், நம்பிக்கை, விசுவாசம், அன்பு இந்த மூன்றில் அன்பு தான் பெரியது (1 கொரிந்தியர் 13:13), ஆனால் அந்த அன்பு இப்பொழுது ஆளுகையில் இல்லை, வரும் உலகத்தில் தேவனின் அன்பால் உயிர்த்தெழுந்த பிறகு அன்பு தான் பிரதானமாக இருக்கும்!! அது வரையில் வரயிருக்கும் ராஜியத்தின் மேல் நம்பிக்கை உள்ளவர்களாகவும் அங்கு செல்ல கிறிஸ்துவின் மூலம் தேவனிடத்தில் விசுவாசமாக இருப்பதற்காகவே நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம்!!

ஆதாமின் பாவத்தினால் ஒரே மரணம் தான் வந்தது, அந்த பாவம் எல்லா மனிதர்களையும் ஆண்டுக்கொண்டு, எல்லாரும் பாவங்கள் செய்கிறார்கள், மரிக்கிறார்கள், இந்த ஒரே மரணத்திலிருந்து விடுவித்து ஒரு சிறு கூட்டத்தை கிறிஸ்துவின் சாயலில் சபையாகவும், மீதமான அனைவரையும் எந்த பாகுபாடுமின்றி எந்த நிபந்தனையுமின்றி, கிறிஸ்து சிந்திய இரத்தத்தினால் உயிர்த்தெழுகிறார்கள், உயிர்த்தெழுந்தவர்கள் நீதியையும் சத்தியத்தையும் கற்றுக்கொள்வார்கள்!! இந்த பூமிய தேவன் என்றென்றும் மனிதன் வாழும்படியாகவே படைக்த்திருக்கிறார், அவரின் இந்த சித்தம் நிறைவேறுவது தான் நியாயம், இதை தவிர, சிலர் உயிர்த்தெழுவார்கள், மற்றவர்களை அனைவருமே "நரகம்" என்கிற ஒரு கண்டுபிடிப்பான இடத்திற்கு தன் சொந்த முயற்சியால் இரட்சிப்பு அடையாமள் போய்விடுவார்கள் என்பது எல்லாம், தேவனையும் அவர் அனுப்பிய கிறிஸ்துவையும் தூஷிப்பதாகும்!!

இந்த இரண்டாம் மரணத்தின் இதே கருத்தை தான் சுந்தர் அவர்களின் தளத்தில் நேற்று எதேச்சையாக போனபோது காண நேர்ந்தது!! நீங்களும் அதையே எழுதியிருக்கிறீர்கள் சகோதரரே!!

தேவனின் அன்பை புரிந்துக்கொள்வதற்கே இது எல்லாம் நடைபெறுகிறது என்பது தான் வசனம் சொல்லுகிறது,

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

ரோமர் 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

நம் விவாதம் சற்று சரியான பாதையில் சென்றால் அடுத்த பதிவிலேயே பாதை மாறிவிடுகிறது.

1 கொரி. 15:22-ன்படி எல்லோரும் உயிர்த்தெழுவார்கள் என எத்தனையோ முறை கூறியுள்ளேன். ஆனாலும் சம்பந்தமில்லாமல் ஏதேதோ கேள்விகளைக் கேட்கிறீர்கள்.

//ஆதாமுக்குள் "எல்லாரும்" மரிக்கிறது போல் கிறிஸ்துவிற்குள் "எல்லாரும்" உயிர்த்தெழுவார்கள் என்பதெல்லாம் சும்மா வேதத்தில் அப்படியே கொடுத்திருக்கிறார்கள் போல்!! என்ன சகோதரரே, ஒரு சிலர் முதலாம் உயிர்த்தெழுதல் (!!) அடைவார்கள் என்றால் உயிர்த்தெழுதலே அடையாதவர்கள் எப்படி இரண்டாவது மரணத்திற்கு போகிறார்கள்!! அல்லது முதலாவது மரணம் என்பதே கிடையாது, நேரடியாக இரண்டாம் மரணம் தானா!!//

முதலாம் உயிர்த்தெழுதல் பற்றிய பின்வரும் வசனத்தை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

இவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் இல்லை என்பதால்தான் இவர்களை exempt செய்து அடைப்புக்குறிக்குள் போட்டு பின்வருமாறு கூறியிருந்தேன்.

anbu57 wrote:
//எல்லோரும் பாவம் செய்துள்ளதால் எல்லோரும் 2-ம் மரணத்திற்கு போக வேண்டியவர்கள்தான் (முதாலம் உயிர்த்தெழுதலுக்கு பங்குள்ளவர்களைத் தவிர ...).//

இப்படி எழுதினால் நீங்கள் வேறுவிதமாகப் புரிந்துகொண்டு ஏதேதோ கேட்கிறீர்கள்.

எனது எழுத்துக்கள் உங்களை மிகவும் குழப்பிவிட்டன என நினைக்கிறேன். உங்களைப்போல் மற்றவர்களும் குழம்பியிருக்கக்கூடும். எனவே இவை எல்லாவற்றையும் விட்டுவிட்டு, ஏற்கனவே நான் கேட்டிருந்த 3 விஷயங்களுக்கான உங்கள் பதில்களுக்கு வருகிறேன்.

1. மத்தேயு 5:7 மற்றும் 6:15 வசனங்களுக்கு உங்கள் விளக்கத்தைக் கூறுங்கள். குறிப்பாக மத்தேயு 6:15-ல் நம் தப்பிதங்களை பரமபிதா மன்னியாதிருப்பார் என இயேசு சொல்வதற்கு விளக்கம் தாருங்கள். பரமபிதா நம் தப்பிதங்களை மன்னியாதிருக்கும்போது நாம் எப்படி உயிர்த்தெழ முடியும்?

இதற்கு உங்கள் பதில்:

//நிச்சயமாக பிதாவிடம் மன்னிப்பு கேட்பவார்கள் மன்னிப்பு பெறுவார்கள், இதில் எந்த சந்தேகமும் இல்லை, இதை ஏற்க மறுக்கவும் இல்லை!! அப்படி என்றால் சகல லோகத்தின் "பாவங்களுக்காக" கிறிஸ்து இயேசு சிந்திய இரத்தம் வீண் என்று சொல்லுகிறீர்களா!! கிறிஸ்துவர்களுக்கு அவர் பரிந்துரையாளராகவும், உலகத்திற்கு அவர் மத்தியஸ்தராகவும் இருக்கிறாரே!! முன்பு தேவனிடத்தில் நேரடியாக பலிகளை செலுத்தி மன்னிப்பு கேட்டவர்களுக்கு கிறிஸ்து இயேசுவின் பலி ஆறுதலை தந்திருக்கிறதே!!//

பிதாவிடம் மன்னிப்பு கேட்பவர்களைப் பற்றி மத்தேயு 6:15 எதுவும் சொல்லவில்லை. மேலும், மன்னிப்பு பெறுபவர்களைப் பற்றியும் அவ்வசனம் எதுவும் கூறவில்லை. வசனத்தை சற்று கவனமாகப் படியுங்கள்.

மத்தேயு 6:15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

எவர்களுடைய தப்பிதங்களை பிதா மன்னியாதிருப்பார் என்பதைத்தான் இவ்வசனத்தில் இயேசு கூறுகிறார். இப்பொழுது உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். தப்பிதங்கள் மன்னிக்கப்படாத இவர்கள் உயிர்த்தெழுவார்களா மாட்டார்களா? உயிர்த்தெழுவார்கள் எனில் உயிர்த்தெழுதலின்போது இவர்கள்மீது அவர்களின் பாவம் இருக்கும்தானே? நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.

(வசனம் சொல்வதை எடுத்துரைத்தால், “கிறிஸ்து சிந்திய இரத்தம் வீண் என்று சொல்கிறீர்களா?” என என்னைக் கேள்வி கேட்கிறீர்கள்)

மத்தேயு 6:15-க்கு இணை வசனம் தேவையா? இதோ தருகிறேன்.

மாற்கு 11:25,26 நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள். நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார்.

2. மத்தேயு 25:41,46 வசனங்களில், வெள்ளாட்டுப் பிரிவினரைப் பார்த்து “சபிக்கப்பட்டவர்களே” எனச் சொல்லி அவர்களை பிசாசுக்கு நியமிக்கப்பட்ட நித்திய அக்கினிக்கும் நித்திய ஆக்கினைக்கும் அனுப்புவதைக் குறித்து விளக்குங்கள்.

இதற்கு உங்கள் பதில்:

//சபிக்கப்பட்டவர்களே என்பதை நிச்சயமாக அழிந்துபோவார்கள் என்கிற அர்த்தத்தில் இல்லை என்பது என் புரிந்துக்கொள்ளுதல்!! ஏனென்றால் நியாயத்தீர்ப்பின் நாட்களில் கிறிஸ்து இயேசுவின் ஆட்சியில், தேவனின் ராஜியத்தில் நீதியை கற்றுக்கொள்வார்கள் என்றும், நீதி வாசமாகும் பூமி என்றும் மற்ற வசனங்கள் சொல்லியிருக்கிறது!! இந்த பகுதிக்கு இணை அல்லது ஜோடு வசனம் இல்லாததால், நிச்சயமாக இன்னும் ஆராயப்படவேண்டியதாக இருக்கிறது!! இந்த ஒரு வசனத்தை தவிர அனைத்து வசனங்களுமே நான் புரிந்துகொண்ட கருத்திற்கு சாதகமாக இருக்கிறது!! இந்த பகுதியில் நிச்சயமாக இன்னும் தெளிவு தேவையாக இருக்கிறது!! ஆனால் இந்த ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மனிதர்கள் பாவத்தில் உயிர்த்தெழுவார்கள் என்பது சரியாகாதே!!//

சபிக்கப்பட்டவர்கள் என்றால் அழிந்துபோவார்களா இல்லையா என்பது இப்போது கேள்வியல்ல. பாவம் இல்லாமல் உயிர்த்தெழுந்தவர்களைப் பார்த்து இயேசு எப்படி அவ்வாறு கூறுவார்? எப்படி அவர்களை பிசாசுக்கு நியமிக்கப்பட்ட நித்திய அக்கினிக்கும் நித்திய ஆக்கினைக்கும் அனுப்புவார்? என்பதுதான் இப்போது கேள்வி.

//இந்த ஒரு பகுதியை வைத்துக்கொண்டு மனிதர்கள் பாவத்தில் உயிர்த்தெழுவார்கள் என்பது சரியாகாதே!!//

ஆக, இந்த வசனத்தின்படி பார்த்தால், மனிதர்கள் பாவத்தில் உயிர்த்தெழுவார்கள் என்றுதான் அர்த்தம் வருகிறது என ஒத்துக்கொள்கிறீர்கள். அது போதும்.

இதற்கு இணை வசனம் இல்லை என்கிறீர்கள். பின்வரும் வசனத்தை இணை வசனமாக எடுத்துக்கொள்ளலாமா எனப் பாருங்கள்.

யோவான் 5:29 அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.

ஆராய்ந்து தெளிவு பெற்று கூடிய விரைவில் பதில் தாருங்கள். அதுவரையில், உயிர்த்தெழுகிற அனைவரும் பாவமில்லாமல்தான் உயிர்த்தெழுவார்கள் எனும் உங்கள் கருத்தை suspense-ல் வைத்திருங்கள்.

3. ஏசாயா 65:20 கூறுகிற நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான் எனும் கூற்றுக்கு விளக்கம் தாருங்கள்.

இதற்கு உங்கள் பதில்:

//இந்த வசனமும் அந்த பகுதியுடன் தொடர்பில்லாத ஒரு வாக்கியமாக இருக்கிறது, நிச்சயமாக தெளிவானதும் என் கருத்தை பதிவு செய்கிறேன்!! மற்ற எல்லா வசனங்களைப் பார்த்த பிறகு இந்த வசனம் பொருத்தம் இல்லாததாக தெரிகிறது!! ஆகவே கவனம் செலுத்தாமல் விட்டு விட்டேன், இது சம்பந்தமாக நிச்சயம் பதிவு செய்கிறேன்!!//

இந்த வசனத்தையும் ஆராய்ந்து தெளிவு பெற்று கூடிய விரைவில் பதில் தாருங்கள்.

உங்கள் ஆராய்ச்சியில் பின்வரும் வசனத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஏசாயா 26:10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//தேவ அன்பை உணராமல் செம்மறியாடு பகுதியை பிடித்துக்கொண்டு ஒரு கூட்டத்தை நான் அழித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறீர்கள். அதை நீங்கள் அப்படியே ஏற்றுக்கொண்டால் ஏகப்பட்ட வசனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும்.//

“அழித்தே தீருவேன்” என நான் கங்கணம் கட்டவில்லை சகோதரரே. ஒரு கூட்டம் நித்திய அக்கினிக்கு அனுப்பப்படுவார்கள் என இயேசு சொன்னதை நான் கூறுகிறேன், அவ்வளவே.

நான் பதில்சொல்லும்படி நீங்கள் பட்டியலிட்டுள்ள குறிப்புகளுக்கு/வசனங்களுக்கு என்னாலியன்ற பதிலைத் தருகிறேன்.

1.கிறிஸ்துவைப்பற்றியோ, பரிசுத்தமான வாழ்க்கைபற்றியோ அதில் குறிப்பிடப்படவில்லை. கிறிஸ்துவின் அன்பின் ராஜ்ஜியத்தில் பாவம் இருக்குமா? அந்த சாத்தானற்ற ராஜ்ஜியத்திலும் மனிதன் பாவம் செய்ய ஏதுவுண்டு என்றால் தேவன் அவனை என்ன நோக்கத்துக்காக உயிர்த்தெழுப்ப வேண்டும்?

மீண்டும் மீண்டும் நான் சொல்ல விரும்புவது: மத்தேயு 5:7 மற்றும் 6:14,15 ஆகியவைகளே.

நாம் அனைவரும் பரிசுத்தத்தில் குறைவுள்ளவர்களாக இருக்கக்கூடும் என்பதும் மெய்தான்; நம்மில் அநேகர் கிறிஸ்துவை அறிந்திருக்க முடியாது என்பதும் மெய்தான். ஆனால் யாராயிருந்தாலும், அவர்களிடம் தேவன் மிக முக்கியமாக எதிர்பார்ப்பது, அன்பு, இரக்கம் மற்றும் பிறரை மன்னிக்கும் சுபாவம்.

இவையிருந்தால், மத்தேயு 5:7-ன்படி நாம் இரக்கத்தையும் பெறுவோம், மத்தேயு 6:14-ன்படி நம்முடைய பாவங்களுக்கு மன்னிப்பையும் பெறுவோம். எனவேதான் மத்தேயு 25:31-46 வசனங்களில் இரக்கம், அன்பு, மன்னித்தல் சம்பந்தமான கிரியைகள் மட்டும் கூறப்பட்டுள்ளன. அக்கிரியைகளை பின்வரும் வசனங்களோடு இணைத்துப் பாருங்கள்.

சங்கீதம் 112:9 வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்; அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்.

சங்கீதம் 41:1 சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு:
//எவர்களுடைய தப்பிதங்களை பிதா மன்னியாதிருப்பார் என்பதைத்தான் இவ்வசனத்தில் இயேசு கூறுகிறார். இப்பொழுது உங்கள் விளக்கத்தைச் சொல்லுங்கள். தப்பிதங்கள் மன்னிக்கப்படாத இவர்கள் உயிர்த்தெழுவார்களா மாட்டார்களா? உயிர்த்தெழுவார்கள் எனில் உயிர்த்தெழுதலின்போது இவர்கள்மீது அவர்களின் பாவம் இருக்கும்தானே? நேரடியாகப் பதில் சொல்லுங்கள்.//

இந்த வசனம் கிறிஸ்து இயேசு ஈடுபலியாக செலுத்தும் முன் உறைக்கப்பட்டது!! கிறிஸ்துவின் ஈடுபலி நம் பாவங்களை கழுவ வல்லமையுள்ளதாக இருப்பதால், பாவங்களுக்கு தனியாக நீங்கள் மன்னிப்பு கேட்டு பெற்று தான் மன்னிப்பு பெறவேன்டிய அவசியம் இல்லை!! இது கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின்!! இந்த ஒரு விஷயம் வேதத்தில் இருப்பதால், வேதத்தை வாசித்தவர்கள் கேள்விப்பட்டவர்கள் பின்பற்ற ஏதுவாக இருக்கலாம், இதையே வேதத்தை அறியாதவர்கள் எப்படி பின்பற்றுவார்கள்!?

ஆக, என் கருத்து என்னவென்றால், நீங்கள் மீண்டும் மீண்டும் செக் வைக்கும் அந்த வசனம், கிறிஸ்துவின் ஈடுபலிக்கு முன் சொல்லப்பட்டது, கிறிஸ்துவின் ஈடுபலிக்கு பின் பாவங்கள் மன்னிக்கப்படுகிற நிச்சயம் ஏற்பட்டிருக்கிறது!! ஏனென்றால் கிறிஸ்துவிற்குள் எல்லாரும் உயிர்த்தெழுவார்கள் என்பதில் எந்த கண்டிஷனும் கிடையாது, அதாவது நீங்கள் தப்பிதங்களை மன்னித்தீர்களா, இல்லையா போன்ற எந்த கண்டிஷனும் இல்லை!! இப்படியே நாம் பார்த்துக்கொண்டு போனால், சிலர் 10 கற்பனைகளை காண்பிப்பார்கள், சிலர் யூதர்களின் மிருகபலியை குறித்து கேள்வி எழுப்புவார்கள்!! எல்லாருக்கும் ஒரே பதில் தான், கிறிஸ்துவிற்குள் அனைவரும் உயிர்த்தெழுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது!!

//முதலாம் உயிர்த்தெழுதல் பற்றிய பின்வரும் வசனத்தை நீங்கள் அறிவீர்கள் அல்லவா?//

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை; இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.

முதலாம் உயிர்த்தெழுதல் என்பது தமிழில் மாத்திரமே புரிந்துக்கொண்டு இப்படி சொல்லுகிறீர்கள்!! ஆனால் முதலாம் என்பது வரிசையை மாத்திரம் அல்ல, தரத்தை குறிக்கவும் உபயோகப்படுகிறது!! முதலாம் உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவின் சாயலில் சாவாமையில், ஆவிக்குறிய சரீரத்தில் உயிர்த்தெழுவதாகும்!! சாவாமையை தரித்துக்கொள்ளும் இவர்கள் நிச்சயமாக முதல் தரமான உயிர்த்தெழுதல் தானே!! மற்றவர்கள் பூமியில் உயிர்த்தெழுவார்கள், அவர்களுக்கு நித்திய ஜீவன் உண்டு, ஆனாலும் சாவாமைக்கும் நித்திய ஜீவனுக்கும் வித்தியாசம் உண்டு!! நித்தியம் என்கிற வார்த்தைக்கு கிரேக்கத்தில் இயோன் () என்று உள்ளது!! இதற்கு பல அர்த்தங்கள் இருக்கிறது, அதாவது என்றென்றும் தொடங்கி ஒரு குறிப்பிட்ட காலத்தை குறிக்கவும் பயன்ப்படுத்தப்பட்ட வார்த்தையாகும்!! பூமியில் நித்திய ஜீவனை பெறுகிற மக்களுக்கு அதன் பின் தேவன் என்ன திட்டம் வைத்திருக்கிறார் என்பது நமக்கு தெரியவில்லை, அவர்களுக்கு எது நடந்தாலும், சாவாமைக்கு, கிறிஸ்துவின் சாயலுக்கு உயிர்த்தெழுந்தவர்களை அது பாதிக்காது!!

//சபிக்கப்பட்டவர்கள் என்றால் அழிந்துபோவார்களா இல்லையா என்பது இப்போது கேள்வியல்ல. பாவம் இல்லாமல் உயிர்த்தெழுந்தவர்களைப் பார்த்து இயேசு எப்படி அவ்வாறு கூறுவார்? எப்படி அவர்களை பிசாசுக்கு நியமிக்கப்பட்ட நித்திய அக்கினிக்கும் நித்திய ஆக்கினைக்கும் அனுப்புவார்? என்பதுதான் இப்போது கேள்வி.//

அதான் சகோதரரே, இந்த பகுதி தனித்து எந்த ஒரு இனைவசனமும் இல்லாமல் இருக்கிறது என்கிறேன்!! அதன் உன்மை நிச்சயமாக என்னால் இன்னோரு வசனம் இல்லாமல் சொல்ல முடியவில்லை!! ஆனால் ஆக்கினை என்பதும் அக்கினி என்பதும் கற்றுக்கொடுக்கப்படுவது, சுத்திகரிக்கப்படுவது என்கிற அர்த்தத்தை கொண்டிருக்கிறது!! 41வது வசனத்தில் இருந்த அக்கினி 46ம் வசனத்தில் ஆக்கினையாக மாறியிருக்கிறது!! அக்கினி சுத்திகரிப்பு, ஆக்கினை தண்டனை, சுத்திகரிப்பு, நீதியை கற்றுக்கொள்ளுவது!!

ஆனால் ஏன் சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்லப்படுகிறார்கள் என்பதை நிச்சயமாக பார்க்கிறேன்!! ஏனென்றால் உயிர்த்தெழுதவர்களை சபிக்கப்பட்டவர்கள் என்று சொல்லுவதற்கு வேறு வசனம் இல்லை!!

//உங்கள் ஆராய்ச்சியில் பின்வரும் வசனத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.//

ஏசாயா 26:10 துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

சாத்தனை குறிக்கும் வசனம் இது!! இதில் எந்த சந்தேகமும் கிடையாது!! தேவனுடன் இருக்கும் போதும் சரி, ஆயிரம் வருடத்தின் நீதியை கற்றுக்கொடுக்கும் போதும் இவன் ஒருவனே அதற்கு விதிவிலக்கு, ஏனென்றால் அவன் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டான் என்கிறது வேதம்!! ஆகவே அவன் கர்த்தருடைய மகத்துவத்தை கவனியாதே போகிறான்!! 1000 வருட அரசாட்சியின் முடிவில் அவிழ்ந்துவிடப்பட்ட பிறகும் அவன் மோசம்போக்கும் குணத்தில் தான் இருப்பான் என்கிறது வேதம்!! ஆக நீங்கள் கொடுத்த இந்த வசனம் சாத்தான் ஒருவனுக்கே பொருந்தும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:

//2. தீமைக்குக் காரணம் தேவன் என்று ஒரு திரியில் கூறியுள்ளேன். ஏன் சகலமும் தேவனுடைய சித்தமே என்றும் கூறியிருக்கிறேன். தேவன் உண்டாக்கிய மனிதன் எக்காலத்திலும் தவறு செய்தாலும் அதற்கு முழுப்பொறுப்பு தேவனே. பழியை மனிதன்மீது போடவே முடியாது.//

உங்கள் கூற்றை என்னால் நிச்சயமாக ஏற்க இயலாது சகோதரரே!

மனிதன் செய்கிற அனைத்துக்கும் தேவனே பொறுப்பு என்கிறீர்கள். அவ்வாறெனில், உங்கள் வேதாகமக் கருத்துக்களுக்கு எதிராகப் பேசுவோரிடம் நீங்கள் ஏன் இவ்வளவாய் கோபப்படவேண்டும்? யார் என்ன சொன்னாலும் அதற்கு அவர்கள் பொறுப்பல்லவே! பழியை அவர்கள் மீது போடமுடியாது எனத் திட்டவட்டமாகக் கூறுகிறீர்களே! இவ்வளவாய் தெரிந்து வைத்துள்ள நீங்கள், ஏன் ஒவ்வொருவரின் எழுத்துக்களுக்கு எதிராக இத்தனை போராட வேண்டும், இவ்வளவு கோபப்படவேண்டும்?

இன்றைய ஊழியர்களின் வஞ்சகம் பணஆசை வேதப்புரட்டு துருபதேசம் எல்லாமுமே தேவசித்தப்படித்தானே நடக்கிறது! பின்னர் ஏன் அவைகளுக்கெதிராக இவ்வளவாய் சாடுகிறீர்கள்?

நீங்கள் குறிப்பிட்டுள்ள 2 திரிகளிலும் விரைவில் எனது கருத்தைக் கூறுகிறேன். தயவுசெய்து பொறுத்திருங்கள்.



__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//“அழித்தே தீருவேன்” என நான் கங்கணம் கட்டவில்லை சகோதரரே. ஒரு கூட்டம் நித்திய அக்கினிக்கு அனுப்பப்படுவார்கள் என இயேசு சொன்னதை நான் கூறுகிறேன், அவ்வளவே.//

மத்தேயு 25ம் அதிகாரத்தில் 41வது வசனத்தில் சொல்லப்படுகிற "அக்கினி"யும் 46வது வசனத்தில் சொல்லப்படுகிற "ஆக்கினை"யும் ஒன்றா!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

//மனிதன் செய்கிற அனைத்துக்கும் தேவனே பொறுப்பு என்கிறீர்கள்//

 

ரோமர் 11:32 எல்லார்மேலும் இரக்கமாயிருக்கத்தக்கதாக, தேவன் எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள்ளே அடைத்துப்போட்டார்.

ரோமர் 8:19 மேலும் தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. 20 அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்கிற நம்பிக்கையோடே, 21 அந்தச் சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது. 22 ஆகையால் நமக்குத் தெரிந்திருக்கிறபடி, இதுவரைக்கும் சர்வ சிருஷ்டியும் ஏகமாய்த் தவித்துப் பிரசவவேதனைப்படுகிறது.

 

இந்த இரு வசனங்களும் வாசித்து என்ன சொல்லுகிறது என்று எழுதுங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 3 4 5 6  >  Last»  | Page of 6  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard