1. "மாமிசமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன், முழங்கால்கள் யாவும் முடங்கும், நாவு யாவும் அறிக்கையிடும், சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்" -ன்ற இந்த வசனங்கள் நிறைவேறுமா? ஆம் எனில் எப்போது நிறைவேறும்?
2." தாவீது பரத்துக்கு ஏறிப்போகவில்லையே" (அப்2:34) என்றால் தாவீது இப்போது எங்கே?
3. இதுவரை (கிறிஸ்துவுக்கு வெளியே) மரித்தவர்கள் ஏற்கனவே நரகத்தில் வேதனைப்படும்போது நியாயத்தீர்ப்பு எதற்கு? வேறு பெரிய நரகத்தில் போடப்படவா?, அல்லது தற்போது சரீரம் இல்லாமல் வேதனை அனுபவிக்கும் அவர்கள் நியாயத்தீர்ப்புக்கு பின்னர் சரீரத்துடன் நரகத்தில் தள்ளப்படுவார்களா?
4. இயேசுகிறிஸ்துவின் 1000 வருட பூலோக அரசாட்சியின் நோக்கம்தான் என்ன? யார் அதில் பிரஜைகள்? அதில் மரணம் உண்டா? இரட்சிப்பு உண்டா?
5. ஏறத்தாழ 1300 வருடங்கள் வேதம் கிடைக்காத காலத்தில் கோடா கோடி ஜனங்கள் 'சுவிசேஷம்' இல்லாமலேயே மரித்துள்ள பட்சத்தில், இந்தக் கடைசி காலத்தில் வாழும் மக்கள்மேல் மட்டும் தேவன் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறாரா?
6. இயேசு உயிர்த்தெழுந்தபின் 40 நாட்களாக பரலோகம் போகவில்லை எனும் பட்சத்தில் கள்ளனிடம் "இன்றைக்கு நீ என்னோடு பரதீசிலிருப்பாய்" என்று ஏன் சொன்னார்?
7. பரதீசு என்றால் என்ன? இப்போது அது எங்குள்ளது? வசன ஆதாரம்.
8. பாதாளமும் நரகமும் ஒன்றா? பரதீசு, பரலோகம் என்ன வித்தியாசம்?
10. "லாசருவே வெளியே வா" என்று இயேசு சொன்னபோது 'மரித்த' லாசரு எங்கிருந்து வந்தான்?
A) பாதாளம் B) நரகம்C) பரலோகம் D) பரதீசு E) கல்லறை
11. நாம் வாசிக்கும் வேதாகமம் தேவனுடைய வார்த்தையா அல்லது தேவனுடைய வார்த்தையின் மனித முயற்சியின் மொழிபெயர்ப்பா?
12. ஒரு மொழியிலிருப்பதை 100 சதம் சரியாக இன்னோரு மொழிக்கு மொழிபெயர்க்க முடியுமா?
13. சிறு மந்தை, தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள், உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டவர்கள் என்று சபையைக் குறித்து அது ஒரு சிறிய கூட்டம் என்று வேதம் தெளிவாகக்கூறும்போது ஏன் உலகம் முழுவதையும் சபைக்குள் கொண்டுவர பிரயாசம் நடக்கிறது?
14. பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஏன் பரலோகம் செல்வதில்லை? (அப்3:34)
15. உயிர்த்தெழுந்த இயேசு பூட்டிய வீட்டுக்குள் பிரவேசித்தார், ஆனால் கல்ல்றையை திறந்துதான் வெளியேறினார். ஏன்?
16. இயேசுகிறிஸ்து எல்லா மனிதரும் இரட்சிக்கப்பட கிரயம் (Ransom for all) செலுத்தியிருந்தாலும் மிகக்குறைவான ஜனங்களே இரட்சிக்கப்படுவார்கள். சரியா?
17. இந்த ஆதாமின் சந்ததியில் 99 சதம் மக்கள் நரகத்தில் வாதிக்கப்படுவார்கள், 1 சதம் மட்டும் பரலோகம் செல்வார்கள். இது தான் நற்செய்தியா?
18. "என்னைப் பின்பற்றுங்கள், நான் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்" என்று கூறிய அப். பவுல் போல வாழும் யாரையாவது உங்களுக்குத் தெரியுமா? முகவரி அனுப்புக.
19. அந்நிய பாஷை வரம் இல்லாதவர்கள்தான் இன்றும் வேதத்தை மொழிபெயர்க்கிறார்கள் தெரியுமா?
20. கிறிஸ்துவின் சரீரமான சபையில் ஊழியக்காரன், விசுவாசி என்ற பாகுபாடு கிடையாது தெரியுமா?
21. மிகப்பழமையான தோற்சுருள்களில் மாற்கு16:9-20 வசனங்கள் முதலான அனேக வசனங்கள் இலலை. அறிவீர்களா?
22. "நீங்கள் சாகவே சாவதில்லை" என்ற பிசாசின் உபதேசம்தான் ('நீங்கள் மரிப்பதில்லை, உங்கள் சரீரம்தான் மரிக்கிறது') காலாகாலமாக எல்லா சபைகளிலும் போதிக்கப்படுகிறது தெரியுமா?
23. இத்தனை சபைப்பிரிவுகள் ஏன்? ஒரே வேதத்தை வைத்திருக்கும் போது ஏன் இத்தனை உபதேச வேறுபாடுகள், பிரிவினைகள்?
24. இவ்வளவு குழப்பத்தையும் வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டிருக்கும் 'சபை' உண்மையிலேயே கிறிஸ்துவின் சபைதானா?
25. ஏன் ஒரு சிலருக்கு மட்டும் அற்புதங்கள் நடக்கிறது? பவுலுக்கும், எப்பாப்பிரோதீத்துவுக்கும் கிடைக்காத சுகம் இவர்களுக்கு கிடைப்பது எப்படி?
26. ஞாயிற்றுக்கிழமைகளில் ஆலயம் செல்லுதல், தசமபாகம் போன்ற காரியங்களில் கவனம் செலுத்தும் கிறிஸ்தவர்கள் சக மனிதர்களிடம் கிறிஸ்துவின் அன்பை விட்டுவிட்டதேன்?
27. பழைய ஏற்பாட்டுக் கட்டளைகள் யூதர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது அதை தனக்கு சாதகமாக மாற்றி சபைகளில் 'தசமபாக வேட்டை' நடப்பது ஏன்? 28. அப்போஸ்தலர் பவுல் பிரசங்கித்த உபத்திரவம் மற்றும் பாடுகள் ஒரங்கட்டப்பட்டு ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள் போதிக்கப்படுவது ஏன்?
29. அந்நிய பாஷை என்று கூறிக்கொண்டு உபயோகமேயில்லாமல் எவருக்குமே புரியாத ஓசையெழுப்பி பரவசம் கொள்வது (சில சபைகளில் மாத்திரம்) சரியா? ஏன் எல்லா சபைகளிலும் அது வரவேற்க்கப்படுவதில்லை? (வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் யாருமே ஒரு மொழியைக் கற்றுக் கொண்ட பின்னரே அதை அறிந்தனரேயன்றி அந்நிய பாஷை வரம்பெற்று மொழிபெயர்க்கவில்லை என்று அறிக!)
30. ஏன் பழைய ஏற்பாட்டின் ஒரு சில சட்டங்களை மாத்திரம் (ஓய்வுநாள், தசமபாகம்) 'கைக்கொள்ள' அதிகம் அறிவுறுத்தப்படுகிறது?
31. வேதம் உண்மையில் எபிரேய மற்றும் கிரேக்க மொழிகளில் எழுதப்பட்டிருக்க, அதன் பின் அநேக நூற்றாண்டுகளுக்குப்பின் வந்த மொழிபெயர்ப்புகளை சந்தேகத்திற்கு இடமின்றி அப்படியே ஏற்றுக்கொண்டு ஒரே ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் காலாகாலத்திற்கு உபயோகிப்பது புத்திசாலித்தனமா?
32. பிதாவாகிய தேவன் யார்? அவரது குமாரன் இயேசுகிறிஸ்து யார்? பரிசுத்த ஆவி என்பது யார்? ஏன் இதற்கு வேதத்தின்படி தெளிவான விளக்கங்கள் கொடுக்கப்படுவதில்லை?
34. ஒரு கிறிஸ்தவன் ஜெபிக்காவிட்டால் அநாதி தேவனுடைய மீட்பின் திட்டம் காலதாமதமாகிவிடுமா? அல்லது நிறைவேறாமலேயே போய்விடுமா? தேவன் மனிதனுடைய ஜெபத்தைச்சார்ந்துதான் செயல்படுகிறாரா?
35. இன்றைக்கு சபையின் பெயரிலும், ஊழியத்தின் பெயரிலும் நடக்கும் அக்கிரமங்கள் உண்மையிலேயே பக்திவிருத்திக்கு ஏதுவாக உள்ளதா?
36. நவீன ஊழியக்காரர்களின் படாடோப ஊழியங்கள், வாரிசு அரசியல் போல வாரிசு ஊழியங்கள் அனைத்தும் அப்போஸ்தலர்கள் ஒருபோதும் செய்ததில்லையே?
37. 1யோவான் 5:7 வசனம் ஏன் அடைப்புக்குறிக்குள் [Bracket] ஏன் கொடுக்கப்பட்டுள்ளது? இந்த வசனம் மலையாள வேதாகமத்தில் ஏன் இல்லை?
38. ஒருவர் மரித்தபின்னர் பரலோகத்திற்கு போவார் என்றால் அவருக்கு 'உயிர்த்தெழுதல்' எதற்கு?
39. நவீன பிரசங்கிமார்கள் அடிக்கடி பரலோகத்திற்கோ, அல்லது நரகத்திற்கோ சென்று வருகிறார்களே இது யோவான்3:13க்கு எதிராக இருக்கிறதே எது உண்மை? ஆண்டவரின் வார்த்தையா? மனிதர்களின் மாயையா?
40. வியாதியே இல்லாத அல்லது வராத சுகமளிக்கும் வரம் பெற்ற ஒரு ஊழியர் பெயர் கூறுக?
41. ஆத்துமாவுக்கு வடிவம் உண்டா? இல்லை என்றால் எப்படி அடையாளம் காண்பது?
42. "பாவம் செய்கிற ஆத்துமா சாகும்"
. 'ஆத்துமா' சாகுமா சாகாதா?
43. பரலோகத்தில் விலங்குகள் உண்டா? இயேசுகிறிஸ்து ஏறிவரும் வெள்ளைக்குதிரை பறக்குமா, ஓடிவருமா அதற்கு இறக்கைகள் இருக்குமா?
45. "பாவத்தின் சம்பளம் மரணம்", "பாவத்தின் சம்பளம் நரகத்தில் நித்திய வாதை" இதில் எது வேதத்தின்படி சரி?
46. பாவத்துக்கு தண்டனை நரகத்தில் முடிவில்லா வாதை என்றால் இயேசு அந்த தண்டனையையல்லவா ஏற்றிருக்க வேண்டும்? ஏற்றாரா?
47. தேவன் ஒருவரா மூவரா அல்லது மூன்றான ஒருவரா? வசன ஆதாரம்.(அடைப்புக்குறிக்குள் இருக்கும் வசனங்கள் வேண்டாமே).
48. இயேசுகிறிஸ்துதான் தேவன் என்று அவரோ அப்போஸ்தலரோ எப்போதாவது கூறியதுண்டா?
49. இயேசு மரித்தாரா?
50. ஒருவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படாத நிலையில் அவன் உயிர்த்தெழ முடியுமா? அவனுடைய கணக்கில் பாவமிருந்தால் மரணம் அவனை விடுவிக்குமா?
51. சரியான விடையை தேர்ந்தெடுக்கவும். நவீன காலத்து பிரசங்கிமார்கள் தொலைக்காட்சி ஊழிய நிகழ்ச்சிகளில் ஜெபிக்கிறார்கள். தேவன் அவர்கள் ஜெபத்தை கீழ்கண்ட சமயங்களில் கேட்டு பதில் தருகிறார்.
1. ஊழியர் நிகழ்ச்சியை Record செய்யும்போது. 2. நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது. 3. மறுஒளிபரப்பின்போது. 4. TV ஐப்பார்த்துக்கொண்டே ஒரு விசுவாசி இணைந்து ஜெபிக்கும்போது. 5. மேற்கண்ட நான்கும் சரி. 6. இப்படிப்பட்ட மாய்மால ஜெபங்களை தேவன் ஒருபோதும் கேட்பதில்லை.
52. வல்லமையுள்ள ஊழியர் ஒரு பிசாசை ஒருவரிடத்திலிருந்து துரத்தியதும் அது எங்கு போகும்? 1. நரகத்துக்கு 2. வேறெங்காவது சுற்றும் 3.அமைதியாக ஒரிடத்தில் இருக்கும் 4. இன்னொரு மனிதனுக்குள் போகும்
54. 'சாவுக்கேதுவான யாதொன்றைக்குடித்தாலும் அது உங்களை சேதப்படுத்தாது' என்ற வசனத்தை விசுவாசிக்கும் ஊழியர் உண்டா? ஆம் எனில் நிரூபிக்கத்தயாரா?
55. கர்த்தருடைய பந்தியை எவ்வாறு ஆசரிக்கலாம்? 1. வருடம் ஒரு முறை 2. வாரம் ஒரு முறை 3. தினமும் ஒரு முறை 4. மணிக்கு ஒரு முறை. 5 எப்போதுவேண்டுமானாலும்
56. இஸ்ரவேலர்கள் பாஸ்காவை வருடம் ஒரு முறைமட்டுமே அனுசரித்தார்கள். நமது பாஸ்காவாகிய இயேசுகிறிஸ்துவின் பந்தியில் இவ்வளவு குளறுபடிகள் ஏன்?
57. இதுபோன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடைகாணாமல் ஒரு இயந்திரம் போல 'சுவிசேஷ' பணி செய்ய பணிக்கப்படும் கிறிஸ்தவனின் நிலை என்ன? ஏன் இது போன்ற மிக மிக அடிப்படைக் காரியங்கள் எந்த சபையிலும் போதிக்கப்படுவதில்லை?
சரியா? தவறா?
1. வேதத்தை ஆராய்ந்து பாருங்கள் என்று வேதமே கூறுகிறது.
2. "எல்லாரும் ரட்சிக்கப்படவும் சத்தியத்தை அறிகிற அறிவால் நிரப்பப்படவும் தேவன் சித்தமுள்ளவராக இருக்கிறார்" ஆனால் அவரது இந்த சித்தம் ஒருபோதும் நிறைவேறாது.
3. மனிதன் ஜெபிக்காவிட்டால் தேவனால் ஒன்றும் செய்ய முடியாது.
4. சாதாரணமாக நினைவு நாள் என்பது வருடம் ஒரு முறைதான் வரும்
-- Edited by soulsolution on Tuesday 18th of May 2010 10:30:53 PM
இத்தகைய கேள்விகள் பொதுவாக வேதத்தை ஓரளவாவது வாசித்தறிகிறவர்களுக்கு எழும்பலாம். ஆனால் இத்தகைய கேள்விகள் 'போதகர்மார்களி'டம் வரவேற்பு பெறுவதில்லை. நாங்கள் கற்பிப்பதை மாத்திரம் தெரிந்துகொண்டாலே போதும் என்று பூசி மழுப்பிவிடுவார்கள். இதில் உள்ள கேள்விகளுக்கு எங்கள் தளத்திலேயே பதில்கள் உள்ளன. மேலும் அறிய விரும்புபவர்கள் எங்களைத் தொடர்புகொள்ள உற்சாகப்படுத்தப்படுகிறார்கள். இது எங்கள் கூடுகைக்குக் கூட்டம் சேர்க்க அல்ல. அந்த நோக்கமும் எங்களுக்கில்லை. மேலும் இத்தளத்தை அனேகம் பேர் பார்க்கிறார்கள் என்பதில் மகிழ்கிறோம் என்றாலும் இதில் அவர்கள் பங்க்கேற்காதது வருத்தமே.
தொடர்ந்து பதியும் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துகள்!
இதுக்கும் காரணம் இன்றைய சுய நீதி போதகர்கள் தான் சகோதரரே! இப்படி பட்ட கேள்விகளை வாசித்து, இந்த தளத்தில் இப்படி இருக்கிறது என்று தங்களின் சபை போதகரிடத்தில் தெரிவித்தால், அவர் இப்படி பட்ட தளத்திற்கு போவதே பாவம் என்று சொல்லி நரக பயம் காண்பித்து விடுவார். ஒரு காலத்தில் கத்தோலிக்க சபை, அனைவரையும் கிறிஸ்தவர்களாக மாற்ற நினைத்து பயன் படுத்திய ஆயுதம் தான் "எரி நரகம்". அவர்கள் ஏனோ இன்று அதை விட்டு விட்டார்கள், ஆனால் ஆவிக்குறிய சபை (!!) என்று தங்களை சொல்லிக்கொள்பவர்கள், அந்த விசுவாசத்தில் வந்து விட்டார்கள், அதையே "சுவிசேஷமாக" அறிவிக்கவும் செய்கிறார்கள். ஆக யாராவது இந்த கேள்விகளை வாசித்தீர்களானால், சுய பரிசோதனை முறையில், தாங்களே வேதத்தை மாத்திரம் (போதகரை அல்ல) கையில் வைத்து, இந்த கேள்விகளுக்கு விடை காண பிரயாசியுங்கள். போதகருக்கு விசேஷ ஆவி என்றும், விசுவாசிகளுக்கு சாதாரண ஆவி என்றும் ஒன்றும் இல்லை. விடைகள் வேண்டூம் என்றால் நாங்கள் அவசியம் எங்களுக்கு தெரிந்ததை தெளிவு படுத்துகிறோம்.
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வேறுதளம் நடத்தும் சகோதரர்கள் அவர்கள் தளத்திலேயே பதில் தரலாமே? அல்லது அத்தளங்களில் பதிக்கும் மற்ற சகோதரர்கள் இவற்றுக்கு பதிலளிக்க வற்புறுத்தலாமே. எங்களுக்கும் உதவியாக இருக்கும்.
soulsolution wrote: //இந்தக் கேள்விகளுக்கெல்லாம் வேறுதளம் நடத்தும் சகோதரர்கள் அவர்கள் தளத்திலேயே பதில் தரலாமே? அல்லது அத்தளங்களில் பதிக்கும் மற்ற சகோதரர்கள் இவற்றுக்கு பதிலளிக்க வற்புறுத்தலாமே. எங்களுக்கும் உதவியாக இருக்கும்.//
சகோதரர் கேட்டுக்கொண்டபடி, இத்திரியில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு எனது தளத்தில் பதில் கூறிவருகிறேன். அவற்றைப் படிக்க விரும்புபவர்கள் பின்வரும் தொடுப்பிற்குச் செல்லும்படி வேண்டுகிறேன்.
தங்களின் பதிலுக்கு நன்றி. எங்கள் தளம் என்று அல்ல, எங்காவது சத்தியம் தெரியவந்தால் போதும், அது தான் ஒவ்வொருத்தரின் தேடலுமாக இருக்க வேண்டுகிறேன். இப்பொழுது தங்களின் பதிலை பார்கலாம்.
சகோ அன்பு அவரின் தளத்தின் பதிந்தது:
"ஏசாயா 45:23; ரோமர் 14:11; பிலிப்பியர் 2:10 மற்றும் ஆபகூக் 2:14 ஆகிய வசனங்களில் கூறப்பட்டுள்ள சில வரிகள் இணைக்கப்பட்டு, மேற்கூறிய கேள்வியில் கூறப்பட்டுள்ளன."
யோவேல் 2:28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.
29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்,
மற்றும்
அப். 2:16. தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது.
17. கடைசிநாட்களில் நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரிசனஞ்சொல்லுவார்கள்; உங்கள் வாலிபர் தரிசனங்களை அடைவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களைக் காண்பார்கள்;
18. என்னுடைய ஊழியக்காரர்மேலும், என்னுடைய ஊழியக்காரிகள்மேலும் அந்நாட்களில் என் ஆவியை ஊற்றுவேன், அப்பொழுது அவர்கள் தீர்க்கதரிசனஞ் சொல்லுவார்கள்.
இந்த வசனங்களின் படி, இந்த சுவிசேஷயுகத்தில் யாவர் மேலும் ஆவி ஊர்றப்படவில்லை என்பது தான் சரியாகும், ஏனென்றால் யாவர் மேலும் அவர் ஆவி ஊற்றப்பட்டால், அனைவரும் அவரை தெரிந்துக்கொள்வார்கள். இந்த சுவிசேஷ யுகத்தில் அவரின் ஊழியர்கள் (இதை நுனுக்கமாக பார்த்தோமென்றால், இப்பொழுது இருக்கும் இந்த (அட்)ஊழியர்கள் மேல் அல்ல, மாறாக, இயேசு கிறிஸ்துவால் தெரிந்துக்கொள்ளப்பட்ட பாத்திரங்களும், அவர்கள் மூலமாக தீர்க்கதரிசன வசனங்கள் கிடைத்த அந்த ஊழியர்களை தான் இந்த இடத்தில் குறிப்பிட்டிருக்கிறது வசனம்) மேல் மாத்திரமே ஆவி ஊற்றப்படுகிறது. ஆனால் தாங்கள் புரிந்துக்கொண்டப்படியே, மாம்சமான யாவர் மேலும் அவர் ஆவியை அவரின் அரசாட்சியான 1000 வருட அரசாட்சியில் ஊற்றுவார் என்பதில் எங்களுக்கும் எந்த சந்தேகம் கிடையாது, மாறாக நாங்கள் அதையே தான் போதித்தும் வருகிறோம்.
சகோ அன்பு அவரின் தளத்தில் தந்த பதிலின் ஒரு பகுதி: "இயேசுவின் முதலாம் வருகையின் நாட்களிலிருந்து யாவர் மீதும் அவரது வசனமாகிய ஆவி ஊற்றப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் சத்துருவாகிய பிசாசு தற்போது கிரியை செய்துவருவதால், இயேசுவின் வசனங்களை பலர் ஏற்காமல் இருக்கின்றனர். "
இதன்படி அனைவரின் மேலும் ஆவி ஊற்றப்பட்டு வருகிறது என்றும், ஆனால் பிசாசு தேவனின் அந்த ஆவியையும் மிஞ்சி செயல்படுபவனாக, அதாவது தேவ ஆவி பலவீனம் உள்ளதாயும், பிசாசின் கிரியைகள் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா!? இல்லை, அவர் ஒரு போதும் யாவர் மேலும் இந்த யுகத்தில் ஆவியை ஊர்றுவதாக சொல்லவில்லை, இது எல்லாம் மனிதர்களின் பிரயாசமே (ஊற்றும் ஆண்டவரே, இப்பொழுதே ஊற்றும், இறங்கும்......போன்ற மாயாஜால வார்த்தைகளால் விசுவாசிகளை ஹிப்னொடைஸ் செய்யும் ஊழியர் கூட்டத்தின் பிரயாசம்). மாறாக தேவனின் ஆவியை பெற்ற ஊழியர்களுக்கு சொல்லப்பட்டது என்னவென்றால்,
அப் 1:8. பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
ஆக பெலன் அடையவே அந்த ஆவியே தவிர, பிசாசின் கிரியைகளுக்கு கீழ்ப்படியவோ இல்லை.
அன்று சில ஊழியர்கள் மேல் ஆவி ஊற்றப்பட்டதால் அவர்கள் எப்படி தேவனை அறிந்துக்கொண்டு ஒரே விசுவாசத்தில் சாட்சியாக இருந்தார்களோ (ஆனால் இன்றோ ஒரே ஆவியை தான் பெர்றிருக்கிறோம் என்று சொல்லி பலவிதமான கோட்பாடுகள் நிறைந்த சபைகளை உருவாக்கும் ஊழியர்கள் தான் இருக்கிறார்கள், ஆக இவர்கள் பெற்றது தேவன் தந்த ஆவியை அல்ல, மாறாக பிரிவினையின் ஆவியையே, அது சத்துருவின் ஆவி) அதே போல் 1000 வருட அரசாட்சியில் மாம்சத்தில் உயிர்த்தெழுந்த அனைவரும் (மாம்சமான யாவரும் என்றால் ஒருவர் விடாமல் எல்லோர் மேலும் என்று தான் அர்த்தமே தவிர, அவர் எல்லார் மேலும் தான் ஊற்றுவார், ஆனாலும் துன்மார்கர்கள் இருப்பார்கள் என்பது அர்த்தம் இல்லை) அந்த ஆவியை பெற்றுக்கொள்வார்கள், அனைவரும் அந்த மெய்யான தேவனை அறிந்துக்கொள்வார்கள். ஒருவனும் மற்றொருவனுக்கு போதிக்க வேண்டிய அவசியம் இருக்காது, சமுத்திரம் ஜலத்தினால் நிறம்பியிருக்கிறது போல், பூமி (என்றால் அதில் உள்ள மாம்சமான யாவரும் தான்) தேவனை அறிகிற அறிவால் நிறம்பும் போன்ற தீர்க்கதரிசனங்கள் நிறைவேறும்.
இதுவே வேத வசனத்தின் மேல் இருக்கும் எங்கள் நம்பிக்கை. மற்றபடி இன்று ஊழியர்கள் பிதற்றிகொண்டு இருக்கிறபடி ஆவியை இறங்கும்படி கட்டளை இட இவர்களுக்கு தகுதியே கிடையாது. இவர்கள் மக்களை ஹிப்னோடைஸ் செய்து ஒரு பிரமிப்பையே உருவாக்கிறார்களே அன்றி வேற் ஒன்றும் இல்லை.
எல்லாருக்கும் இப்போதே வசனங்கள் அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இவ்வசனம் சாட்சி. "அவர் யாக்கோபுக்கு(மட்டும்)தம்முடைய வசனங்களையும், இஸ்வேரலுக்கு(மட்டும்) தமது பிரமாணங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜாதிக்கும்(யாருக்குமே) இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலுயா. -சங் 147:19,20. இதைவிட்டுவிட்டு அவர் எல்லாருக்கும் அறிவிக்கிறார் என்று எண்ணுவது அறிவீனம். சத்தியத்தை முழுமையாக அறியாத அனைவருமே ராஜ்ஜியத்தில் கற்றுக்கொண்டு 'பூமி கர்த்தரை அறிகிற அறிவால் நிறைந்திருக்கும்'. இப்போது அல்ல. மற்ற தளத்தில் மரணம் பற்றி விவாதிப்பது உண்மையில் நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் முடிவுக்குதான் வரமாட்டார்கள்.
-- Edited by soulsolution on Thursday 15th of July 2010 09:44:47 PM
புதிதாக அநேகர் இத்தளத்தைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. அன்பர்கள் இதிலுள்ள கேள்விகளை பிரதியெடுத்து அவர்கள் சார்ந்திருக்கும் சபைப் போதகர்மார்களிடமோ, ஆவிக்குரியவர் என்று நம்பிக்கொண்டிருப்பவர்களிடமோ காண்பித்து அவர்கள் பதில் சொல்லத் திணறித் திண்டாடுவதைக் கண்கூடாகக் கண்டு அவர்களை வெளிச்சத்துக்குக் கொண்டுவரலாமே!
[big]தனியே தளம் நடத்தும் வேத விற்பன்னர்களுக்கு ஏற்கனவே விட்ட சவால்தான். மீண்டும் சொல்கிறேன். வேதத்தின்படி இக்கேள்விகளுக்கு விடை சொல்லித்தான் பாருங்களேன். ஏன் தலை தெரிக்க ஓட்டம்?
bereans wrote: //சகோ அன்பு அவரின் தளத்தில் தந்த பதிலின் ஒரு பகுதி: "இயேசுவின் முதலாம் வருகையின் நாட்களிலிருந்து யாவர் மீதும் அவரது வசனமாகிய ஆவி ஊற்றப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் சத்துருவாகிய பிசாசு தற்போது கிரியை செய்துவருவதால், இயேசுவின் வசனங்களை பலர் ஏற்காமல் இருக்கின்றனர். "
இதன்படி அனைவரின் மேலும் ஆவி ஊற்றப்பட்டு வருகிறது என்றும், ஆனால் பிசாசு தேவனின் அந்த ஆவியையும் மிஞ்சி செயல்படுபவனாக, அதாவது தேவ ஆவி பலவீனம் உள்ளதாயும், பிசாசின் கிரியைகள் சக்தி வாய்ந்ததாகவும் இருக்கிறது என்று சொல்ல வருகிறீர்களா!? இல்லை, அவர் ஒரு போதும் யாவர் மேலும் இந்த யுகத்தில் ஆவியை ஊர்றுவதாக சொல்லவில்லை, இது எல்லாம் மனிதர்களின் பிரயாசமே//
இடக்குத் தனமான வாதம் வேண்டாம் சகோதரரே! மத்தேயு 13-ம் அதிகாரத்தில் இயேசு சொன்ன விதைக்கிறவன் உவமை, விதை உவமைகளையெல்லாம் படிக்கவில்லையா? அவற்றில், இயேசுவின் வசனமெனும் விதைகளை சத்துருவாகிய பிசாசு பறித்துச் சென்றதாக வசனம் 19-ல் இயேசு கூறியுள்ளதை படிக்கவில்லையா? முள்ளிலும் பாறையிலும் விழுந்த விதைகள் பலனற்றுப் போனதாக இயேசு கூறியுள்ளதைப் படிக்கவில்லையா?
நான் ஏற்கனவே சொன்னபடி ஆவியாகிய வசனம் இவ்வுலகில் ஊற்றப்பட்டுத்தான் வருகிறது அல்லது விதைக்கப்பட்டுத்தான் வருகிறது. ஆனால் ஊற்றப்பட்ட (அல்லது விதைக்கப்பட்ட) நிலமாகிய மனிதனைப் பொறுத்தே அதன் பலன் கிடைக்கிறது.
மத்தேயு 13:37-42 வசனங்களையும் படித்துப்பாருங்கள். மனுஷகுமாரனாகிய இயேசு, வசனத்தை விதைக்கிற இடம் இவ்வுலகமே என அவை கூறுவதைப் படிக்கவில்லையா?
இவ்வுலகில் யாவர் மீதும் வசனமாகிய ஆவி ஊற்றப்பட்டுத்தான் வருகிறது என்பதற்கு அவை ஆதாரமாயுள்ளன.
முதல் கோணல் முற்றும் கோணல் எனும் கூற்றின்படி, கோணலான ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் வேதத்தை நீங்கள் கண்ணோக்குவதால், உங்கள் புரிந்துகொள்தல் யாவும் கோணலாக உள்ளன.
soulsolution wrote: //எல்லாருக்கும் இப்போதே வசனங்கள் அறிவிக்கப்பட வேண்டிய அவசியமில்லை என்பதற்கு இவ்வசனம் சாட்சி. "அவர் யாக்கோபுக்கு(மட்டும்)தம்முடைய வசனங்களையும், இஸ்வேரலுக்கு(மட்டும்) தமது பிரமாணங்களையும் அறிவிக்கிறார். அவர் வேறே எந்த ஜாதிக்கும்(யாருக்குமே) இப்படிச் செய்ததில்லை; அவருடைய நியாயங்களை அறியாமற்போகிறார்கள். அல்லேலுயா. -சங் 147:19,20.
இதைவிட்டுவிட்டு அவர் எல்லாருக்கும் அறிவிக்கிறார் என்று எண்ணுவது அறிவீனம்.//
சங்கீதம் 147:19,20-ஐப் படித்த சகோதரர், பின்வரும் வசனங்களைப் படிக்கவில்லையா?
மத்தேயு 28:19,20 ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார்.
லூக்கா 24:47 அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது.
அப்போஸ்தலர் 1:8 பரிசுத்தஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்.
-- Edited by anbu57 on Sunday 18th of July 2010 05:55:42 AM
பதில் தரும் முயற்சிக்கு வாழ்த்துகள். நீங்கள் கொடுத்துள்ள வசனங்கள் அவருடைய அப்போஸ்தலருக்கும், சீஷர்களுக்கும் கொடுக்கப்பட்ட கட்டளையாகும். ஏனென்றால் அப்போது புதிய ஏற்பாடு எழுதப்படவில்லை. எனவேதான் அவர்களது வசனம் அற்புத அடையாளங்களோடும், அந்நிய பாஷை வரங்களோடும் உறுதிப்படுத்தப்பட்டது. அதை அவர்கள் முழுமையாக செய்து அறிவித்தார்கள். சபை என்ற சிறுமந்தை தெரிந்துகொள்ளப்பட வசனம் அறிவிக்கவேண்டியது அவசியமாக இருந்தது, சபை என்றாலே உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சிறு கூட்டமாகும். நாம் நினைப்பது போல உலகம் சபைக்குள் வருவதற்கல்ல. அப்போஸ்தலருக்கு இந்த கட்டளை கொடுக்கப்பட்டதால்தான் அவர்கள் வியாதியஸ்தர்களை சுகப்படுத்தினார்கள்; மரித்தவர்களை எழுப்பினார்கள்; வேறு மொழிகளில் பேசி அறிவித்தார்கள். புதிய ஏற்பாடு எழுதிமுடிக்கப்பட்ட பின்னர் இந்தப் பணியும் நின்றுவிட்டது, வரங்களும் ஒழிந்து போயிற்று. மனிதர்களின் சுவிசேஷம் அறிவிக்கும் முயற்சி தேவ திட்டம் அல்ல என்பதற்கு இன்றைய சபைக்குழப்பங்களே சாட்சி....
எல்லா ஜாதிகளுக்கும் (தேசங்களுக்கும்) ஏற்கனவே அறிவிக்கப்பட்டாயிற்று. ஜாதிகள் என்றால் ஒவ்வொரு மனிதனுக்கும் என்று அர்த்தமல்ல. அறுப்பு உலகத்தின் (இந்த யுகத்தின்) முடிவு. அறுப்பின் நேரத்தில் விதைக்கும் வேலையை எந்த ஒரு எஜமானனும் செய்யச்சொல்ல மாட்டான்.
கேள்வி 5. ஏறத்தாழ 1300 வருடங்கள் வேதம் கிடைக்காத காலத்தில் கோடா கோடி ஜனங்கள் 'சுவிசேஷம்' இல்லாமலேயே மரித்துள்ள பட்சத்தில், இந்தக் கடைசி காலத்தில் வாழும் மக்கள்மேல் மட்டும் தேவன் அதிக கரிசனை உள்ளவராக இருக்கிறாரா?
அன்புவின் பதில்:
தேவன் எல்லோர்மீதும் கரிசனை உள்ளவரே! அதனால்தான் ‘சுவிசேஷம்’ இல்லாமல் மரித்த ஜனங்கள் சுவிசேஷத்தைக் கேட்டு மனந்திரும்பும் வாய்ப்பைப் பெறத்தக்கதாக, இயேசுவின் 1000 வருட அரசாட்சி காலத்தை அவர் நியமித்துள்ளார்.
இதைத்தான் நானும் சொல்கிறேன். அப்போது சுவிசேஷம் இல்லாமல் மரித்தவர்களுக்கு ஒரு நியாயம், இப்போது ஒரு நியாயம் அல்ல. இப்போது அறிவிக்கப்படாமல் இருப்போருக்கும் அதேவாய்ப்பு உண்டு எனும்போது. அந்த வாய்ப்பைக் கெடுக்கவேண்டாம் என்கிறோம். ஆக சுவிசேஷம் இல்லாமல் ம்ரிக்கும் ஜனங்கள் 1000 வருட அரசாட்சியில், சாத்தான் கட்டப்பட்ட நிலையில் அறிந்து கொள்ளட்டுமே!
சகோ அன்பு எழுதுகிறார்: "இடக்குத் தனமான வாதம் வேண்டாம் சகோதரரே! மத்தேயு 13-ம் அதிகாரத்தில் இயேசு சொன்ன விதைக்கிறவன் உவமை, விதை உவமைகளையெல்லாம் படிக்கவில்லையா? அவற்றில், இயேசுவின் வசனமெனும் விதைகளை சத்துருவாகிய பிசாசு பறித்துச் சென்றதாக வசனம் 19-ல் இயேசு கூறியுள்ளதை படிக்கவில்லையா? முள்ளிலும் பாறையிலும் விழுந்த விதைகள் பலனற்றுப் போனதாக இயேசு கூறியுள்ளதைப் படிக்கவில்லையா?"
கேட்கப்பட்ட கேள்வி வசனமாகிய ஆவி, சத்திய ஆவி என்றோ அல்ல, அப்போஸ்தலர்கள் மேல் ஊற்றப்பட்ட ஆவி, இன்று கூட்டங்களில் விழச்செயும் ஆவி அல்ல, அப்போஸ்தலர்கள் பெலன் அடைந்து எழுந்து நின்ற ஆவி. அந்த ஆவியை ஊற்றிய பிறகு தான் அவர்கல் வசனம் பேச ஆரம்பித்தார்கள், கிறிஸ்துவை இன்னும் ஆழமாக எழுத ஆரம்பித்தார்கள். அந்த தேவ ஆவியை பெற்றவர்கள் தேவனை அறிந்துக்கொள்வார்கள். எங்கள் கேள்வியே, அந்த ஆவி யோவேல் 2:27,28ல் சொல்லப்பட்டபடி எப்பொழுது ஊற்றப்படும் என்று தான். மாம்சமான யாவர்மீதும் என் ஆவியை ஊற்றுவேன் என்று சொல்லுபவர் அதை செய்யாமல் போவாரோ, இல்லை சாத்தான் தான் அதை தடை செய்வானோ. என்ன, அந்த ஆவி எப்போழுது ஊர்றப்படும், எப்பொழுது ஜனங்கள் தேவனை அறிகிற அறிவை பெற்றுக்கொள்வார்கள்?
மற்றப்படி சத்தியத்தின் ஆவி (சத்தியத்தை, எழுதிய வசனத்தை புரிந்துக்கொள்ள உதவும் சிந்தை, தேவனிடத்திலிருந்து வருவது தான்) வரும் போது, சத்திய வசனம் நமக்கு விளங்கும். விதைக்கிற உவமை ஆவியை ஊற்றுவது பற்றி அல்ல. அது சத்திய வசனங்களை போதிக்கிறது குறித்து சொல்லப்பட்ட உவமை. அநேகர் அன்று முதல் இன்று வரை இந்த சத்தியத்தின் ஆவி இல்லாமலே பெரிய தேவ மனுஷர்களாக (!!) தங்களை பிரபலப்படுத்தி சத்தியத்தை கொலை செய்து வருகிறார்கள், இதை தேவனே அனுமதிக்கிறார் என்பது தான் மத். 13ல் சொல்லப்பட்டபடி இருக்கும் களைகள் மற்றும் கோதுமை ஆகும்.
சகோ அன்பு எழுதுகிறார்: "இவ்வுலகில் யாவர் மீதும் வசனமாகிய ஆவி ஊற்றப்பட்டுத்தான் வருகிறது என்பதற்கு அவை ஆதாரமாயுள்ளன.
முதல் கோணல் முற்றும் கோணல் எனும் கூற்றின்படி, கோணலான ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் வேதத்தை நீங்கள் கண்ணோக்குவதால், உங்கள் புரிந்துகொள்தல் யாவும் கோணலாக உள்ளன."
தாங்கள் வேதத்தை புரிந்துகொண்ட விதம் அபாரம் தான். ஆகவே யோவேல்க்கு தெரியாத "வசனமாகிய ஆவி" என்று புதிதாக சேர்த்து, தங்களின் புரிந்துக்கொள்ளுதலை வெளிப்படுத்தியிருக்கிறீர்கள். வசனத்தை விதைக்கு ஒப்பாக சொல்லிய விஷயத்தை தாங்கள் ஆவியாக "மாற்றி" இருக்கிறீர்களே, சபாஷ்.
அந்த ஆவி எதற்கு ஊற்றப்படுகிறது என்று கூட புரிந்துக்கொள்ளாமல் எங்களை கோணல் கோட்பாடு உள்ளவர்கள் என்பதால் தாங்கள் எத்துனை ஆழத்தில் இருக்கிறீர்கள் என்பதை தான் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்!! மத் 13 உவமைகள் எதை குறித்து சொல்லுகிறது என்று தனியாக விவாதிக்கலாம். யோவேல் தீர்க்கதரிசியும் அதை மீண்டும் சொல்லிய பேதுரு, எதை குறிக்கிறது.
உங்களின் புரிந்துக்க்பொள்ளுதலுக்கு இன்னும் ஒன்றை சொல்லுகிறேன். விதை உலகத்தில் தான் விதைக்கப்படுகிறது, ஆனால் சாத்தான் வந்து களைகளை நடுவது உலகத்தில் இல்லை, சபையில் தான். ஆகவே தான் சத்தியம் சொல்லுவது தங்களின் பார்வைக்கு கோணலாகி விட்டது போல்!!
மத். 13:25. மனுஷர் நித்திரை பண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப் போனான்.
மனுஷர் (அப்போஸ்தலர்கள், சத்தியத்தை நமக்கு வேதம் என்று தந்தவர்கள், இயேசு கிறிஸ்து சொன்னதை சற்றும் பிசகாமல் சொந்த கதைகளை சொல்லாமல் உண்மையை சொன்னவர்கள்) நித்திரை ப்ண்ணுகையில் (இந்த அப்போஸ்தலர்கள் மரித்த பின்பு), சத்துரு (சாத்தான், பிசாசு) வந்து, கோதுமைக்குள் (சத்திய வார்த்தைகள்) களைகளை (இன்று சபைகளில் சத்தியம் சொல்லப்படும் விதம், பொய் உபதேசம், கள்ள உபதேசம், மனித கோட்பாடுகள், இன்னும் பல) விதைத்துவிட்டு போனான் என்கிறது வசனம். வேதமே இல்லாமல் சுமார் 1500 வருடங்கள் நடந்தது இது தான். கத்தோலிக்க சபை மூலமாக வந்த களைகளை தான் இன்று ஆவியில் (!?) நிறம்பிய சபைகள் சத்தியம் என்று நம்பி போதித்தும் பிரசங்கித்தும் வருகிறார்கள்!! அதில் வளர்ந்த தங்களுக்கும் நாங்கள் பின்பற்றும் வேதத்தில் உள்ள கோட்பாடுகள் கோணலாக தெரிவதில் எந்த ஆசரியமும் இல்லை!!
பதில் தெரிந்தால் சரியாக எழுதுங்கள், எங்களை குறை கூற வேன்டுமென்றால் தனியாக ஒரு பக்கம் துவங்குங்கள். ஏன் இரண்டையும் ஒரே இடத்தில் செய்கிறீர்கள்!!
இந்த தளத்தில் வந்த இந்த பதிலை பார்த்தால் பழைய ஏற்பாட்டில் உள்ள அனைவருமே பாதாளத்தில் தான் இருக்கிறர்கள், ஆதாம் தொடங்கி, இயேசு பிறக்கும் முன் வரை உள்ளவர்கள் அனைவருமே. தாவீது, ஆபிரகாம், தானியேல் இன்னும் பலர் தேவனுக்கு உகந்தவர்களாக தான் வாழ்ந்தார்கள் ஆனால் பாவம் அவர்கள் இயேசு கிறிஸ்துவை அறியாததினால் நியாயத்தீர்ப்புக்கு முன் (!!?) உள்ள தண்டனையை தற்போது அனுபவித்து பிறகு நியாயத்தீர்ப்புக்கு பின் (!!?) உள்ள தண்டனையை அனுபவிப்பார்கள் போல்!! லாசரு ஐச்வரியவான் உவமையில் லாசருவும் சரி, ஐசுவரியவானும் சரி இருவருமே இயேசு கிறிஸ்துவை ஏற்றதாக சொல்லவில்லை, பிறகு எப்படி லாசரு மாத்திரம் பரலோகம் (இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தாலும்)?
அநேக பெரிய தேவ ஊழியர்கள் (!!) சாரி தேவ மனிதர்கள் பல பரலோக விஸிட் அடித்து அங்கு தாவீது, தானியேல், ஆபிரகாம் இன்னும் பலரை சந்தித்து பேசி வந்ததாக சொல்லுகிறார்களே (பிதற்றுகிறார்கள்) இவர்கள் சொல்லுவதை பார்த்தால் பரலோகம் செல்ல அல்லது பாதாளம் செல்லாமல் இருக்க இயேசு கிறிஸ்துவை ஏற்கவேண்டியது இல்லை. இந்த ஸோ கால்ட் () தேவ மனிதர்களிடமே ஒற்றுமை இல்லையே!! ஆகவே தான் மக்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். அவர் அவருக்கு பிடித்த ஊழியனை வைத்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவையும் அவரின் வார்த்தையும் மறந்து போய் நிக்கிறார்கள்!!
இவர்களின் விளக்கங்கள் எத்துனை தெளிவாக உள்ளது என்பதை படிப்பவர்கள் புரிந்துகொள்வர். ஒரு குழப்பமும் இல்லை. எல்லாம் இவர்களின் தேவன் கொடுத்த ஞானம்போலும். இன்னும் மரணம் குறித்த விஷயத்திற்கே ஒரே வாக்குவாதம். இதில் ஒருவருக்கு தமிழ் 'பரிசுத்த வேதாகமம்' தவிர வேறு ஒன்றும் வாசிக்கப் பிடிக்காது. ஏனென்றால் இவருக்கு வெளிப்பாடுதரும் இப்பிரபஞ்சத்தின் தேவன் உண்டு. அவன் தான் இவரை நரகத்துக்கு அழைத்துச்சென்று காண்பித்தானே?
பாதாளம் மூன்று அடுக்கு (3 tier) உள்ளது என்று வேதத்தில் சில வசனங்களை வைத்து சில சொந்த காட்சிகளை வைத்து லார்ட் என்கிற தளத்தில் பதிவுகள் இருக்கிறது. இயேசு கிறிஸ்து அனைவரின் பாவங்களுக்காக மரித்தார், ஆதாம் தொடங்கி இனி வர இருக்கும் சந்ததி, என்று எல்லோருக்காகவும். ஆனால் அதன் பலனை எல்லொரும் உயிர்த்தெழுதலின் மூலமாக தான் அனுபவிப்பார்களே தவிர, பாதாளத்தின் வெவ்வேறு அறைகளில் இல்லை. தேவன் சொன்னது போல், நீ மண்ணிலிருந்து வந்தாய், மண்ணிற்கே திரும்புவாய். அவ்வுளவு தான். மரணம் என்னவென்று தெரிய வேண்டும் என்கிற என்னம் இருந்தால் தான் இதை புரிந்துக்கொள்ள முடியும் இல்லாவிட்டால் விட்டலாச்சார்யா படங்கள் போல் கனவுகளும் காட்சிகளும் தான் அலங்கரிக்கும். ஒரு கூட்டம் தாவீது பரலோகத்தில் இருப்பதாக சொல்லுகிறார்கள், ஆனால் வேதம் சொல்லுகிறது அவன் இன்னும் பரலோகம் போகவில்லை என்று. பரலோகத்தில் இருக்கிறார் என்று சொல்லுவது ஒரு வஞ்சிக்கும் கூட்டம் தங்களை தேவ ஊழியர்கள் என்றும் தேவ மனிதர்கள் என்றும் சொல்லி பல விதமான கனவுகளால் மக்களை வஞ்சிக்கிறார்கள். இது போன்ற சத்தியத்தை தங்களின் வயிற்று பிழைப்புக்காக சொல்லி வருகிற தேவ மனிதர்களிடம் இருந்து எச்சரிக்கையாக தங்களை பாதுகாத்து சத்தியத்தின் மேல் வாஞ்சையுள்ளவர்களாக இருப்பது தான் நல்லது. தேவன் அனைவரையும் இரட்சிக்க தான் கிறிஸ்து இயேசுவை பூமிக்கு அனுப்பினார் என்கிற ஒரு உன்னதமான சத்தியத்தை கூட புரிந்துக்கொள்ள இயாலாமல், பாதாளம் அதில் உள்ள அறைகள் அதில் உள்ள இரகசியங்கள் என்று பலவிதமான அலங்காரங்களுடன் கதைகளை சொல்லும் ஒரு கூட்டம். மனிதனால் (அதாவது மனித கிரியைகளினால்) இது (இரட்சிப்பு) கூடாதது தான், ஆனால் தேவனால் கூடும் என்கிறது வேதம். இந்த வசனங்கள் எல்லாம் இந்த ஃபிலிம் கூட்டத்தாரின் கண்களுக்கு தெரியாது, ஏனென்றால் இந்த பிரபஞ்சத்தின் தேவன் இந்த சுவிசேஷத்தின் ஒளி இவர்களிடம் செல்லாத படி இவர்களின் கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான் (2 கொரி 4:4).
II தீமோத்தேயு 2:18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
என்று குறிப்பிடுவதால் அவர் குறிப்பிடும் உயிர்த்தெழுதல் முற்றிலும் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளுக்கு சம்பந்தமானது என்பதை அறியமுடிகிறது.
அதான் சத்தியத்தை விட்டு விலகி போனவர்கள் என்று பவுல் சொல்லியிருக்கிறாரே, இதில் என்ன பழைய, புதிய ஏற்பாட்டு உயிர்த்தெழுதல். இதை தான் வேதத்தை புறட்டுவது என்கிறது.
அப்படியே, பரதீசு என்றால் தோட்டம் என்கிற வார்த்தையின் பாரசீக பதமாகும். இயேசு கிறிஸ்து மரித்து மூன்று நாட்கள் பாதாளத்தில் (கல்லறையில்) இருந்தால் என்கிறது வேதம், கள்ளனை பரதீசு என்கிற ஒரு இடத்திற்கு கூட்டி சென்ற எந்த ஒரு வசனமும் இல்லை. மேலும் அந்த கள்ளனிடம் இயேசு கிறிஸ்து சொன்னதை நம் மொழிபெயர்ப்புகள் (கத்தோலிக்கர்களால் செய்யப்பட்டது, "ஆவிக்குறிய சபைகள்" பின்பற்றுவது) மாற்றி விட்டன. அல்லது இயேசு கிறிஸ்து அந்த கள்ளனிடம் பொய் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இயேசு கிறிஸ்து சொன்னது தான் உண்மை. அவர் சொன்னப்படியே பார்த்தால், இப்படி தான் மொழிப்பெயர்த்திருக்க வேண்டும், "மெய்யாகவே, மெய்யாகவே உன்னிடம் இன்று சொல்லுகிறேன், நீ என்னுடன் பரதீசில் இருப்பாய்" என்று. கத்தோலிக்கர்கள் தங்களுக்கு சாதகமாக "உத்தரிக்கிறாஸ்தலம்" என்கிற ஒரு இடத்தை உறுதுப்படுத்த, இப்படி ஒரு உன்னதமான வசனத்தை புறட்டி எடுத்து, கள்ளன் பரதீசில் இருப்பதாக போதித்து வருகிறார்கள், "ஆவியில்" நிறைந்தவர்கல். அவர்களுக்கு வந்து போதிக்கும் "சத்திய ஆவி" யாரிடமிருந்து தான் வருகிறதோ, ஆகவே தான் "அவர் வந்து இயேசு சொன்னதை சொல்லிக்கொடுப்பார்" என்பதற்கு பதில், இவர்களிடம் வருகிற சத்தியத்தின் ஆவி "கத்தோலிக்கர்கள்" சொல்லிக்கொடுத்ததை வெளிப்படுத்துகிறார் போல்.
அன்பு எழுதியுள்ளார்//14. பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் ஏன் பரலோகம் செல்வதில்லை? (அப்3:34)
அடைப்புக்குறிக்குள் தரப்பட்டுள்ள வசனம் அப். 3:34 என்பது தவறு. அப். 2:34 என்பதே சரி.
உங்கள் கேள்வியில் பழை ஏற்பாட்டுப் பரிசுத்தவான்களை மட்டும் குறிப்பிட்டுக் கேட்பது ஏன்? பழைய/புதிய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் எவருமே தற்போது உயிர்த்தெழவுமில்லை, பரலோகம் செல்லவுமில்லை. வெளி. 20:4,5-ன்படி இயேசுவின் 2-ம் வருகையின்போது முதலாம் உயிர்த்தெழுதல் நடைபெறும்போதுதான் பரிசுத்தவான்கள் உயிர்த்தெழுவார்கள். அவர்கள்தான் பரலோகம் செல்வார்கள்//
வசன திருத்தத்திற்கு நன்றி! கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் தேவை. அப்2:34ல் தாவீது பற்றி மட்டுமே எழுதப்பட்டுள்ளது. புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் தற்போது உயிர்த்தெழவில்லை என்று எப்படி ஆணித்தரமாகக் கூறுகிறாரோ தெரியவில்லை. முதலாம் உயிர்த்தெழுதல் நடந்துகொண்டிருக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். வசன ஆதாரமுண்டு. இன்னொரு பதிவில் வரும். பழைய ஏற்பாட்டுப் பரிசுத்தவான்கள் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடைய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் சபையாகிய சிறுமந்தைக்கு தகுதியாகவில்லை. பூமிக்குரிய சரீரத்தில் பூமிக்குரிய ஆசீர்வாதத்தை மட்டுமே சுதந்தரிப்பார்கள். வாசிக்க முழு பழைய ஏற்பாடு.