இன்று அநேகர் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிறார்கள். நீங்களும் அப்படித்தானா? ஒருவேளை நீங்கள் இதைக்குறித்து நிச்சயமற்றவர்களாக இருக்கிறீர்களோ! ஒருவேளை நீங்கள் இதைக் குறித்து அதிக நிச்சயமுள்ளவர்களாக இருந்துகொண்டு பிறர் என்ன செய்கிறார்கள் என்று கவனிப்பவர்களாக இருக்கிறீர்களா? ஒன்று கவனித்தோமென்றால், இன்று அமேரிக்காவில் உள்ள கைதிகளில் பெரும்பாலானவர்கள் தங்களை கிறிஸ்துவர்கள் என்று சொல்லுபவர்களாக இருக்கிறார்கள்!
கிறிஸ்தவர்கள் என்று எவ்வுளவு காலம் முன்பாக அறியப்பட்டோம். கிறிஸ்தவர்கள் என்கிற பதம் முதல் நூற்றாண்டில் கொடுக்கப்பட்டது - பெந்தகோஸ்தே நாளிற்கு பிறகு சுமார் ஐந்து வருடங்கள் கழிந்து. முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று. (அப். 11:26). இதில் சீஷர்கள் என்றால் கற்றுக்கொள்பவர் அல்ல தீவிரமாக போதகரை பின்பற்றுபவன் என்று அர்த்தம். அந்தியோகியா பட்டணத்திலுள்ள சபை சபை என்றால் உலகத்திலிருந்து அழைக்கபட்டவர்கள், (அப். 13:1) ஆகையால் கிறிஸ்தவர்கள் என்றால் இயேசுவை பின் செல்லவும் அவருக்கு சீஷர்களாக இருக்கவும் இந்த உலகத்திலிருந்து அழைக்கப்பட்டவர்கள் மாத்திரமே.
இந்தியாவிலிருக்கும் 2.4 சதவித மக்களும் கிறிஸ்தவர்களா? இயேசு சொன்னார், நான் உங்களை உலகத்திலிருந்து தெரிந்து கொண்டபடியினாலும், உலகம் உங்களைப் பகைக்கிறது (யோவான் 15:19). அவர்களை இயேசு சிறு மந்தை என்றே அழைக்கிறார் (லூக். 12:32)
கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள்?
இயேசுவின் சீடர்கள் என்றால் அவர்கள் சத்தியத்தை அறிந்து அதற்கு கீழ்ப்படிபவர்களாக இருப்பார்கள். இயேசு, நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார். இயேசுவின் சீடர்கள் அவரின் வார்த்தையில் நிலைத்திருக்க தினமும் வேதத்தை தியானிப்பார்கள். வேத தியானிப்பதினால் சத்தியத்தை அறிந்தவர்களாக இயேசுவின் சீஷர்களாக தங்களுக்குள்ள எல்லாவற்றையும் துறந்து விடுவார்கள், (லூக். 14:33). மேலும் இயேசு சொல்லுகையில் தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான், என்னிமித்தமாக்கம் சுவிசேஷத்தின் நிமித்தமாகவும் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்வான் என்றார். (மாற். 8:35). என்னவென்றால் நமக்குள்ள எல்லாம் இயேசுவிற்கும் அவர் சொல்லும் காரியங்களுக்கும் பயன்படுத்துவது ஆகும். இன்னும் கடுமையாக சொல்லும் போது, யாதொருவன் என்னிடத்தில் வந்து தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும் தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் (குறைவான அன்பு செலுத்துவது என்பதே இதன் பொருள்) எனக்கு சீஷனாகயிருக்கமாட்டான். என்கிறார் இயேசு (லூக். 14:26). மீண்டும் சொல்லுகையில் ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னை வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் என்றார் (லூக். 9:23).
சீஷத்துவதிற்கு இயேசு போடும் நிபந்தனைகள் சற்று கடினமானதேயாகும். அவரின் தேவை அவரோடு இருக்கும்படியாக ஒரு சிறுமந்தையே. அதேசமயம் அநேகர் இயேசு மத். 7:22.23 தீர்க்கதரிசனமாக சொன்னபிரகராமுள்ள 'கிறிஸ்துவர்களாக' இருப்பார்கள். அந்நாட்களில் அநேகர் என்னை நோக்கி, கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா? என்பார்கள்; அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை (கிறிஸ்தவர்களாக), அக்கிரமச் செய்கைகாரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆம், சீஷத்துவம் என்பது மிகவும் கடினமாக பின்பற்ற வேண்டிய ஒரு காரியமாக இருக்கிறது. ஒரு உண்மையான கிறிஸ்தவன் செல்வங்களோ அல்லது உடல் சுகமோ வேண்டுவது கிடையாது, மாறாக ஆவிக்குரிய ஆசிர்வாதமான நூறு மடங்கு இந்த உலகத்திலும் மறுமையில் நித்திய ஜீவனுக்காகவே ஜெபிப்பான் (மாற். 10:30)
பொதுவாக கிறிஸ்தவர்கள் என்றால் ஒரு சமுதாயம், பெரும்பாலும் அப்படியாகவே இருக்கிறார்கள். மாறாக வேதத்தின் பிரகாரமாக கிறிஸ்தவன் என்றால் ஒரு சிறிய கூட்டத்தின் வாழ்வுமுறையே. எல்லா கிறிஸ்தவர்களும் தங்களுக்கு உண்டானதை விட்டு-விட்டு கிறிஸ்துவை பின் பற்றவில்லையே. நீங்கள் எல்லாவற்றையும் விட்டு பின் பற்றுபவராக இருக்கிறீர்களா?
ஏன் சிலர் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள்?
வரப்போகும் நித்திய நியாயத்தீர்ப்பிற்கு பயந்து சிலர் கிறிஸ்தவர்களாக மாறுகிறார்கள். ஏனேன்றால், பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். (ரோம். 6:23). கர்த்தரோ அவரின் நாமத்தின் நிமித்தம் நம் பாவங்களை மன்னிக்கிறார் (சங். 25:11). அப்படியாக பவுல் எபேசியருக்கு எழுதும் போது, இவருடைய (இயேசுவின்) இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது (எபே. 1:7).
சிலர் கிறிஸ்தவர்களாக இருந்தால் நல்ல ஐஸ்வரியத்துடனும், நல்ல உடல் சுகத்தோடும் வாழலாம் என்றும், இரகசிய இராஜ்ஜியத்தில் இது நிறைவேறும் என்று நினைக்கிறார்கள். என்ன ஒரு எண்ணம்! கிறிஸ்தவம் என்பது தேவன் எனக்கு என்ன செய்தார்? என்று இல்லாமல் நான் தேவனுக்காக என்ன செய்தேன் என்பதே ஆகும். உமது நாமத்தின் நிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும். (சங். 31:3)
சுய கிறிஸ்தவர்களும், கிறிஸ்துவை சார்ந்த கிறிஸ்தவர்களும்.
சுய கிறிஸ்தவர்கள் என்று கொரிந்து சபையில் அனேக கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். பவுல் 1 கொரி 4:8-14ல் அவர்களுக்கு புத்தி சொல்லுவதை நாம் படிக்க முடியும்:
இப்பொழுது திருப்தியடைந்திருக்கிறீர்களே, இப்பொழுது ஐசுவரியவான்களாயிருக்கிறீர்களே, எங்களையல்லாமல் ஆளுகிறீர்களே, நீங்கள் ஆளுகிறவர்களானால் நலமாயிருக்கும்; அப்பொழுது உங்களுடனே கூட நாங்களும் ஆளுவோமே; எங்களுக்குத் தோன்றுகிறபடி தேவன் அப்போஸ்தலர்களாகிய எங்களை மரணத்துக்குக் குறிக்கப்பட்டவர்க்ள் போலக் கடைசியானவர்களாய்க் காணப் படப்பண்ணினார்; நாங்கள் உலகத்துக்கும் தூதருக்கும் மனுஷருக்கும் வேடிக்கையானோம்.; நாங்கள் கிறிஸ்துவின் நிமித்தம் பைத்தியக்காரர், நீங்கள் கிறிஸ்துவில் புத்திசாலிகள்; நாங்கள் பலவீனர், நீங்கள் பலவானகள்; நீங்கள் கனவான்கள், நாங்கள் கனவீனர்.; இந்நேரம்வரைக்கும் பசியுள்ளவர்களும் தாகமுள்ளவர்களும் நிர்வாணிகளும், குட்டுண்டவர்களும், தங்க இடம் இல்லாதவர்களுமாயிருக்கிறோம்; எங்கள் கைகளினாலே வேலைசெய்து பாடுபடுகிறோம், வையப்பட்டு அசீர்வதிக்கிறோம்; துன்பபட்டு சகிக்கிறோம்; தூஷிக்கபட்டு, வேண்டிக்கொள்ளுகிறோம்; இந்நாள்வரைக்கும் உலகத்தின் குப்பையைப்போலவும், எல்லாரும் துடைத்துப்போடுகிற அழுக்கைப்போலவு -மானோம்; உங்களை வெட்கப்படுத்தும்படிக்கு நான் இவைகளை எழுதவில்லை, நீங்கள் எனக்குப் பிரியமான பிள்ளைகளென்று உங்களுக்குப் புத்திசோல்லுகிறேன்.
புத்தி சொல்லியப் பிறகு அவர்களை கிறிஸ்துவை சார்ந்திருக்கும் படி சொல்லுகிறார், ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாக இருங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்; நான் கிறிஸ்துவை பின்பற்றுகிறது போல், நீங்கள் என்னைப் பின்பற்றுகிறவர்களாயிருங்கள். (1 கொரி. 4:16; 11:1). கிறிஸ்துவை உண்மையாக பின் பற்றினபடியே பவுலால் ஏழ்மையிலும், போராட்டங்களிலும் கிறிஸ்துவுக்கு மாதிரியாக இருக்க முடிந்தது. இயேசு ஏழையாக பிதாவின் ஊழியம் செய்தாரா? அவர் ஐசுவரியவமுள்ளவராக இருந்தும், நீங்கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு உங்கள் நிமித்தம் தரித்திரரானாரே (2 கொரி 8:9)
ஆனால் செழிப்பின் உபதேசக்காரர்கள் இந்த வசனத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, தேவன் கிறிஸ்தவர்கள் செல்வந்தரகளாக இருக்க விரும்பினதால் தான் இயேசு கிறிஸ்து தரித்திரர் ஆனார் என்று கூறுவார்கள். மெய்யாகவே இயேசு செல்வந்தர் தான் என்று சொல்லுவார்கள், முந்தைய மகிமையைப் பார்க்கிலும் தான் அவர் ஏழை என்றும் முடிப்பார்கள். தன் ஏழ்மையைக் குறித்து லூக். 9:58ல் இயேசு சொன்னதையே பார்ப்போம், நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனுஷகுமாரனுக்கோ தலை சாய்க்க இடமில்லை என்றார். இந்த வசனம் இன்னும் அதிகமாக இதற்குப் பொருந்துவது ஏனென்றால் இதற்கு முந்தைய வசனத்தில்தான் ஒருவன் இயேசுவிடம் நீங்கள் எங்கு சென்றாலும் பின்பற்றுவேன் என்று சொல்லியிருந்தான். இயேசுவைப் பின்பற்றுவதினால் ஏழையாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லவில்லை, மாறாக நமக்கு உள்ளது அனைத்தையுமே அவரது காரியத்திற்கு செலவிடும்படி நாம் இருக்க வேண்டும். நாம் நம்மிடம் இருக்கும் எல்லாவற்றையும் அவரிடம் ஒப்பு கொடுத்திருக்கிறோமா?
கிறிஸ்தவர்களாக இருந்தால் செல்வந்தர்களாக இருக்க விருப்பப்படும் அனைவருக்கும் இந்த பிரபஞ்சத்தின் தேவன் (2 கொரி. 4:4) வெள்ளி தாம்பூலத்தில் வைத்து உலகத்தின் செல்வங்களை கொடுக்க ஆவலாய் இருக்கிறான் (மத். 4:8-11), இவர்கள் சுய நோக்கம் உள்ள கிறிஸ்தவர்கள், கிறிஸ்துவை நோக்கும் கிறிஸ்தவர்கள் அல்ல.
உண்மையென்னவென்றால், இயேசுவின் ஊழியம், பிதாவின் சித்தம் செய்யும்படி தன் சொந்த மற்றும் பூமிக்குரிய விருப்பங்களை வெறுத்து தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றினார் (எபி. 10:9, எசா. 54:12). இந்த பலியை வேதம் பல உவமைகளின் மூலமாக நமக்கு எடுத்துக் காண்பிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஆசரிப்பு கூடாரத்தில் ஒரு மிருகம் பலியாக்கப் பட்டதைக் குறித்து நாம் வாசிக்க்ிறோம். இயேசு பிதாவின் சித்தத்தில் தன்னை முழுமையாக ஒப்புகொடுத்தத்தின் அடையாளமாக மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கிறார். இந்த ஞானஸ்நானம் எடுத்து மூன்று வருடங்கள் பின்பு இயேசு சொல்லுகிறார், ஆகிலும் நான் மூழ்கவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். (லூக். 12:50) என்று பிதாவின் சித்தத்தின் ஆழத்தை விளங்க செய்கிறார். தன் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றும்படி பிறரின் நலனுக்காக தன்னையே பலியாக்கினார் (அப். 20:35), சத்தியத்திற்காகவும், நீதிக்காகவும் பாடு பட்டு (சங். 69:7-9), சிலுவையை சகித்தார் (எபி. 12:2-3).
யாக்கோபும், யோவானும் இயேசுவிடம் அவரின் இட மற்றும் வலப் பக்கத்தில் அமர இடம் கேட்ட போது இயேசு, நான் குடிக்கும் பத்திரத்தில் நீங்கள் குடிக்கவும் நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் உங்களால் கூடுமா? என்று கேட்டார் (மாற். 10:35-39). யாக்கோபு மற்றும் யோவானிடம் சொன்ன அந்த கோப்பையும் அந்த ஸ்நானத்தையும் பெற நாமும் ஆயத்தமாக இருக்க வேண்டும். ஆகவே அப். பவுல் சொல்லுக்ிறார், நாம் அவரோடு (இயேசுவோடு) கூட மரித்தோமென்றால் அவரோடு கூட பிழைத்துமிருப்போம்; அவரோடுகூட பாடுகளை சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம் (2 தீமோ. 2:11, 12). கிறிஸ்தவன் என்றால் தன்னை தானே உயர்த்தவும், செல்வம் சேர்க்கவும் இல்லாமல் மரணப் பரியந்தம் அவரோடு கூட பாடு பட ஆயத்தமாக இருக்க வேண்டும்.
நாம் கிறிஸ்தவர்களாக இருக்கும் காரணம்
ரோம். 6:3ல் பவுல், கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா? என்று கேட்க்கிறார். ஆம், நாம் இயேசுவை பின் பற்ற வேண்டுமென்றால் நம் சுயத்திற்காக மரிக்க வேண்டும். அது என்னவென்றால் பாவம் இல்லை என்று தோன்றினாலும் இந்த உலக மோகங்களையும் இச்சைகளையும் தேவனுக்காக இழக்கவேண்டும்.
பவுல் 1 கொரி. 15:29ல் மரித்தவர்களுக்காக ஞானஸ்நானம் பற்றி கூறுகிறார். தேவனின் பார்வையில் கிறிஸ்தவர்களை தவிர மற்றவர் அனைவருமே பாவத்தினாலும், அக்கிரமங்களினாலும் மரித்தவர்கள் (எபே. 2:1). ஆகவே தான் இயேசு, மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம் பண்ணட்டும் என்றார் (மத். 8:22). நாம் ஏன் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும்? கிறிஸ்துவின் சிலுவை மரணத்தில் பங்கு கொள்வதினால் இந்த உலகமே பயன் பெறுமே. அவரோடு கூட பாடு பட்டோமென்றால் அவரோடு கூட ஆளுகை செய்வோம் (2 தீமோ. 2:11, 12), இராஜாக்களாகவும் ஆசாரியர்களாகவும் இருந்து ஆயிரம் வருடங்கள் வரை (வெளி. 20:6) மரித்துக் கொண்டிருக்கும் மனித சமூதாயத்தை இயேசுவிற்காக ஆதாயப் படுத்தலாம்.
சுருக்கமாக, வேதம் சொல்லுவது:
(அ) உண்மையான கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள், ஒரு சிறு மந்தையாக. (ஆ) சீஷத்துவம் என்பது மிகவும் கடினமான ஒரு பாதை (இ) கிறிஸ்தவர்கள் இயேசுவுடன் 1000 வருடங்கள் பாவத்தில் மரித்த இந்த உலக மக்கள் மேல் ஆட்சி செய்வார்கள்.
தேவன் இந்த உலகத்தை மாற்றும் முயற்சியில் இருக்கிறாரா?
இயேசு வாக்களித்தார், ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும். (மத். 24:14) என்று. இந்த வசனத்தின் படி இப்பொழுதே எல்லோரும் இரட்சிக்கப் படும் நேரமா? எல்லாம் மற்றும் எல்லோரும் என்கிற வார்த்தைகள் வேதத்தில் அநேக இடங்களில் நாம் வாசிக்க முடியும். லூக். 2:10ல் ஒரு தேவ தூதன் இயேசுவின் பிறப்பின் நற்செய்தி கொடுக்கும் போது, பயப்படாதிருங்கள், இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன் என்று உரைத்தது. 30, 31 வசனங்களிலும் எல்லோரும் பிரகாசமடையும்படி என்று உள்ளது. 1 தீமோ. 4:10ல் எல்லா மனுஷர்களின் இரட்சிப்பு என்று உள்ளது.
மிகவும் மகிமையான வசனம் இயேசு எல்லோருக்காகவும் மரித்தார் என்று 1 கொரி. 15:22ல் உள்ளது, ஆதாமுக்குள் எல்லோரும் மரிக்கிறது போல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கபடுவார்கள். அப்படியே ரோம். 5:18ல் இயேசுவை குறித்து, ஒரே நீதியினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. பிள்ளைகள் பெறுவதற்கு முன்பே அப்பா ஆதாம் பாவத்தில் விழுந்துவிட்டார். ஆகவே எல்லோரும் துர்குணத்தில் உருவாகி பாவத்தில் பிறப்பதினாலே (சங். 51:5), எல்லோரும் மரிக்கும் தகுதி பெருகிறார்கள். ஆதாம் அனுபவமின்மையால் சட்டத்தை மீறுவான் என்று. தேவன் அறிந்திருந்தார், ஆகவே தான் 1பேது. 1:19, 20ன் படி உலகத்தோற்றதிற்கு முன்பே இயேசுவின் இரத்தம் எல்லோருக்காகவும் குறிக்கபட்டுள்ளது. எல்லோரும் ஆதாமில் தொலைந்து போனதால், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும் மரணத்தை ருசிபார்த்தார் (எபி. 2:9).
யோவான் 1:7ல் இயேசுவைக் குறித்து, அவர் ஒளி, அவரை அனைவரும் விசுவாசிக்கவேண்டும் என்று. சொல்லப்பட்டுள்ளது. வசனம் 9ல் இயேசுவை பற்றி, உலகத்திலே வந்த எந்த மனுஷனையும் (எல்லோரையும்) பிராகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி என்று. இது எப்படி சாத்தியம்? கோடான கோடி மக்கள் இயேசுவின் முதல் வருகைக்கு முன்பே மரித்துப்போய் இருக்கிறார்களே. அவர்கள் இந்த மெய்யான ஒளியை கண்டதில்லையே. அவர்கள் இயேசுவின் பெயரைக்கூட கேள்விப்பட்டது கிடையாதே. இயேசு வந்த பிறகும் நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளே அவருடைய (இயேசுவின்) நாமமேயல்லாமல் வேறோரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்கிற அந்த இயேசுவின் நாமம் அறியாமல் எத்தனையோ கோடி மக்கள் மரித்து போயிருக்கிறார்களே! நீங்கள் வேதம் வாசிப்பவர்கள் என்றால் நாம் இரட்சிக்கப்படும் படி இயேசுவின் நாமம் மாத்திரமே உள்ளது, விருதாவாக இரட்சிப்பு கிடையாது என்று அறிந்திருப்பீர்கள். இது முரண்பாடாகத் தெரியவில்லையா? இதற்கு பதில் 1 தீமோ 2:6ல் நாம் பார்ப்போம், . .. .. எல்லாரையும் மீட்க்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே, இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது. எல்லாருக்காகவும் மரித்தார் இயேசு என்று இதிலிருந்து விளங்குகிறது. எல்லாருக்காகவும் அவர் மரித்திருந்தாலும் அனைவரும் இதை அறிய வாய்ப்பு இல்லாமல் போவது எப்படி? இதற்கும் பதில் அதே வசனத்தில் இருக்கிறது, ஏற்ற காலங்களில் விளங்கும் என்று. சபைக்கு ஏற்ற காலங்கள் என்றால் இந்த கிறிஸ்துவ யுகமே. கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு ஏற்ற காலங்கள் கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சியின் காலமே.
எல்லோரும் கிறிஸ்துவின் நாமத்தை அறியும் காலம் இது அல்ல. இயேசுவின் முதல் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் நடுவே எல்லோரும் கிறிஸ்துவர்களாக மாற வேண்டும் என்பது தேவனின் திட்டம் இல்லை. அப்படி எல்லோருமே கிறிஸ்தவர்களாக மாறவேண்டும் என்றால் இது மாபெரும் தோல்வியே. ஏனென்றால், சுமார் 2000 வருடங்களில் உலகத்திலுள்ள மூன்றில் ஒரு பங்கு தான் கிறிஸ்துவை அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இயேசு சொன்னதே நீங்கள் எல்லோரும் சுவிசேஷத்திற்கு சாட்சியாக இருக்க வேண்டும் என்று, இயேசுவின் இரண்டாம் வருகைக்கு முன்பாக எல்லோரும் கிறிஸ்தவர்களாக மாற வேண்டும் என்று அவர் சொல்லவில்லை.
மாற். 4:11,12ன் படி தேவன் இந்த உலகத்தையே கிறிஸ்தவர்களாக மாற்ற விரும்பவில்லை என்று விளங்குகிறது. இயேசு தன் சீஷர்களிடத்தில் சொல்லும் போது, தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது; அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கபடாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படி சொல்லப்படுகிறது என்றார். இந்த வசனத்தை நன்றாக தியானித்து பாருங்களேன்.
இயேசு எல்லோருக்காகவும் மரித்தது உண்மைதான், ஆனாலும் எல்லோரும் வேதத்தை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறார்களே, அதனால் கிறிஸ்தவர்களாக மாறாமல் பாவ மன்னிப்பு பெறாமல் இருக்கிறார்களே! வேதம் ஏதோ கோர்வையாக எழுதப்பட்ட ஒரு கதைப் புத்தகம் அல்ல,. தேவன் வேண்டுமென்றே வேதத்தை உவமைகளாகவும், அடையாளங்களாகவும் எழுதியிருக்கிறார், ஏனென்றால் அநேகர் மாறாமல் பாவ மன்னிப்பு பெறாமல் போவார்கள். அதனால்தான் இன்று கிறிஸ்தவர்களுக்குள்ளே 250 பிரிவினர்கள் இருக்கிறார்கள் ஏனென்றால் வேதத்தை தங்களுக்கு விரும்பியபடியே அர்த்தம் எடுப்பதனால். தேவன் இந்த உலகத்தை மாற்ற நினைக்கவில்லை, மாறாக தன் சிறு மந்தையை மாத்திரமே தெரிந்துகொண்டு இருக்கிறார். வேதத்தை புரிந்துக்கொள்வதனால் மாத்திரம் நித்தியஜீவன் உண்டாகும் என்று இருந்தால் நம் அன்பின் ஆண்டவர் (1 யோவான் 4:8) வேதம் அனைவரும் புரிந்துகொள்ளும்படியே மிகவும் எளிமையாக எழுதியிருப்பாரே.
அப். 15:14-17 வெளிப்படுத்துவது என்னவென்றால், தேவன் புறஜாதிகளிலிருந்து தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை (எல்லோரையும் அல்ல) தெரிந்துகொள்ளும்படி முதலில் அவர்களிடத்தில் கடாச்ட்சித்தருளினார். தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களும் ஒத்திருக்கிறது. இயேசுவின் இரண்டாம் வருகையின் போது விழுந்துபோன தாவவீதின் கூடாரத்தை (தேவனின் ராஜ்யத்தை) எடுப்பித்து அதிலே பழுதாய்ப்போனவைகளை (மீதமுள்ளவர்கள்) மறுபடியும் சீர்ப்படுத்துவார். இயேசு பரம் ஏறின பிறகு தேவன் இந்த மனித சமூதாயமே மாறவேண்டும் என்று அல்லாமல், அவரின் நாமத்திற்கு என்று சிலரை கூப்பிடுகிறார். ராஜ்யத்தில் திரும்பும் போது, இப்போது வாய்ப்பு பெறாதவர்கள் அப்போழுது தேவனை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.
-- Edited by soulsolution on Sunday 16th of May 2010 07:38:38 PM
புதிய ஏற்பாடு தொடர்ந்து கிறிஸ்தவர்களை - சபையை அழைத்துக் கொண்டிருக்கிறது. சபை - 'எக்ளீஷியா' என்கிற கிரேக்க வார்த்தையின் அர்த்தம் உலகத்திலிருந்து அழைக்கபட்டவர்கள் உலகம் எனும் இந்த பெரும் கூட்டத்திலிருந்து ஒரு சிறிய கூட்டம் உலகத்தை விட்டு வெளியே அழைக்கப்ட்டவர்கள். இவர்களையே வேதம் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், அழைக்கப்பட்டவர்கள், முன்குறிக்கப்பட்டவர்கள் என்கிற வார்த்தைகளால் அழைக்கிறது. மத். 24:31, ரோம் 8:33, 1 பேது. 1:2, 2 பேது. 1:10 ஆகிய வசனங்களில் நாம் இப்படி வாசிக்கலாம். மனித ஜாதிக்கு முன்பாக இந்த சிறிய மந்தையே மீட்கப்படும் என்றும் அறிந்து கொள்கிறோம்.
இது என்ன சபைக்கு ஒரு வித்தியாசமான அழைப்பு? கிறிஸ்தவர்கள் (சபையார்) ஒரு விசேஷமான காரியத்திற்கு அழைக்கபடுகிறார்கள், கிறிஸ்துவின் ராஜ்யத்தில் நீதிபதிகளாக, ஆசாரியர்களாகவும், இராஜக்களாகவும் அழைப்பு பெறுகிறார்கள். என்ன ஒரு பெருமை! முதலில் நம் விசுவாசம் தடுமாறும். ஆனால் வேதமோ இதைக் குறித்து தெளிவாகக் கூறுகிறது. 1 கொரி 6:2ன் படி பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? என்று உள்ளது. 1 பேது 2:9ன் படி கிறிஸ்தவர்க்ள் (சபையார்) ராஜரீகமான ஆசாரியக்கூட்டம் என்று சொல்லபட்டிருக்கிறது. அப்படியே, வெளி. 1:6 மற்றும் 5:10 சொல்லுவது என்னவென்றால் நாம் தேவனால் இராஜாக்காளாகவும் ஆசாரியர்களாகவும்அழைக்கப்பட்டு அவரோடு ஆட்சி செய்வோம் என்று உள்ளது. வெளி. 20:6ன் படி கிறிஸ்தவர்கள், தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக இராஜாக்களாக இருந்து அவரோடு 1000 வருடங்கள் ஆட்சி புரிவார்கள் என்று. அறியலாம்.
நியாயதிபதிகள், ஆசாரியர்கள், இராஜாக்கள்! எப்படியான ஒரு வேலைக்காக கிறிஸ்தவர்கள் அழைக்கபட்டு இருக்கிறார்கள்! ஆனால் இந்த வேலையை பெறுவதற்கு எவ்வளவோ கடுமையான பயிற்சியில் கிறிஸ்தவர்கள் ஈடுபடவேண்டும் என்றும் அறிந்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு கிறிஸ்தவராக இருந்து தேவன் உங்களை இப்படியான ஒரு வேலைக்கென்று ஆயத்த படுத்துகிறார் என்று புரிந்துக் கொள்ள முடிகிறதா?
நியாயதிபதிகள்
கிறிஸ்துவோடு சேர்ந்து கிறிஸ்தவர்களும் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள் (1 கொரி. 6:2; யோவான் 5:22). யோவான் 5:28,29ன் படி, பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தை கேட்டு.. .. .. அப்பொழுது நன்மைசெய்தவர்கள் (கிறிஸ்தவர்கள்(சபை)) ஜீவனை அடையும்படியும், தீமை செய்தவர்கள் (மீதி உள்ள மனித சமுதாயம்) நியாயதீர்ப்பு (கிரேக்க க்ரைஸிஸ்-Krisis) அடையும்படி எழும்புவார்கள். இங்கு க்ரைஸிஸ் என்ன என்பதை பார்ப்போம். க்ரைஸிஸ் என்பது ஒரு நோயாளி I.C.Uவில் இருக்கும் ஒரு நிலைக்கு ஒப்பாக எடுக்கலாம். அந்த நோயாளி ஒன்று தேறி வருவார் அல்லது மரணத்தை சந்திக்கலாம். I.C.Uவில் இருப்பதாலே நோயாளி இறந்து விடுவான் என்று என்ன கூடாது. ஆக இந்த க்ரைஸிஸ் காலத்தில் பூமியில் எழும்பிய மனிதனுக்கு ஒரு பயிற்சிக் காலம் என்று சொல்லலாம். அதன் பின்பே நியாயதீர்ப்பு, அது அவர்களின் பழைய வாழ்க்கையின் செயல்களால் அல்லாமல் இயேசுவின் இராஜ்யத்தில் கிடைக்கும் இந்த வாழ்க்கையின் கிரியைகளின்படியே இருக்கும். வேறு வேத பகுதிகளில் (லூக். 12:47,48 மற்றும் 1 தீமோ 5:24) சொல்லுவது என்ன வென்றால், இப்படியாக எழுந்த மனிதர்கள் தேவனை அறிய விரும்பாத ஒரு ஞானத்தில் இருந்தால் அதற்காக அவர்களின் நித்திய ஜீவன் (பூமிக்குரிய) கிடைக்காமல் போகும் வாய்ப்பும் இருக்கும். வேதம் ஒரு விஷயத்தில் நிச்சயமாக கூறுகிறது என்னவென்றால் பூமியில் எழும்பும் மனிதர்களின் (தீமைசெய்தவர்கள் யோவான் 5:29, மீதமானோர்கள் அப். 15:14-17) நித்திய ஜீவன் கடைசியில் தானே நிச்சயமாகும். உயிர்தெழுந்த ஆண்டவர் வெளி. 22:12ல் சொல்லுவது, இதோ சீக்கிரம் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது கிறிஸ்தவர்கள் (சபையார்) கிறிஸ்துவோடு அரசாளுவார்கள், மீதமானவர்கள் (அவிசுவாசியானவர்கள்) தேவனின் ராஜ்யத்தில் கற்றுக்கொள்வார்கள்.
க்ரைஸிஸ் என்கிற இந்த வார்த்தை பல மொழிகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. சீனா வில் வார்த்தைகளை அடையாளமாக (symbols) எழுதுவார்கள். இந்த வார்த்தைக்கு (க்ரைஸிஸ்) இரண்டு அடையாளங்கள் உள்ளது. ஒன்று அபாயத்தை குறிக்கும் மற்றொரு அடையளம் வாய்ப்பை குறிக்கும்.
ஆசாரியர்களாகவும், இராஜாக்களாகவும்
கிறிஸ்தவர்கள் (சபை) நியாயாதிபதிகளாக மாத்திரம் இல்லாமல் தயவும் காருண்யம் நிறைந்த ஆசாரியர்களாகவும் இருந்து, பூமியில் க்ரைஸிஸ் காலத்தில் இருக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் நித்திய ஜீவன் அடையும் படி ஆசீர்வதித்து நடத்துவார்கள். ஆக வேதம் சொல்லுகிறபடியே, இயேசுவும் அவரின் சரீரமாகிய சபையும் அரசாட்சி மாத்திரம் செலுத்தாமல் மீதியான மக்களை ஆசாரியர்களாக இருந்து ஆசிர்வதிப்பவர்களாகவும் இருப்பார்கள் (1 பேது. 2:9, வெளி. 1:6, 4:10, 20:6).
எபி 9:23ன் படி இஸ்ரவேலரின் கூடாரம் பரலோகத்தில் இருந்து வர இருக்கும் அந்த உன்னதமான கூடாரத்திற்கு முன்மாதிரியானதாக இருக்கிறது. இஸ்ரேலின் பிரதான ஆசாரியன் பாவ நிவாரண நாளாகிய வருடத்தின் அந்த ஒரு நாளில் பலிகளை செலுத்தி வந்த பிறகு மீதமான நாட்களெல்லாம் அவரும் மற்ற ஆசரியர்களும் இஸ்ரேல் ஜனங்களை ஆசீர்வதிப்பதிலும், கற்றுக்கொடுப்பதிலும், நியாயம் விசாரிப்பதிலும் செலவிடுவார்கள். நம்மைப் போல் பலவீனமான ஒரு பிரதான ஆசாரியனே பாவங்களுக்காக பலிகளை செலுத்தும் படி இரக்கம் கொண்டிருந்தார். (எபி 5:1-2). இயேசுவோ பூரணமானவராக நம் பிரதான ஆசாரியனாக இருந்து நம் பலவீனங்களுக்காக மன்றாடாடுகிறவராக இருக்கிறார், ஏனென்றால் அவர்தாமே எல்லாவற்றிலும் சோதிக்கப்பட்டும் பாவம் இல்லாமல் இருந்தார் என்று வேதம் கூறுகிறது. (எபி. 2:27,18)
கிறிஸ்துவிற்கு ஒப்பாவது
இயேசுவைப் போல் அல்லாமல் நமக்கு சரீர குறைபாடுகளும் மாம்சீக பலவீனங்களும் இருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலகாத்தாருகு இிருக்கும் எல்லா துக்கங்களும், துன்பங்களும் கூடவே கிறிஸ்தவர்களுக்கு (சபை) இருக்கிறது (1 கொரி. 10:13). சோதனை என்பதற்கு பரீட்சை என்றும் அர்த்தம் உண்டு, அதாவது, தேவன் நம்மை சீர் படுத்தும்படி பரீட்சிக்க அனுமதிக்கிறார். ஆனால் தேவன் உண்மையுள்ளவராய் இருப்பதால், நம் திராணிக்கு மேல் சோதிக்கப்பட விடமாட்டார். நாம் கிறிஸ்துவிற்குள் குழந்தைகளாக இருந்தால் தேவன் நம் மேல் வரும் பாடுகளையும் துன்பங்களையும் நீக்கிப் போடுவார். தப்பி செல்ல நமக்கு வழி சொல்லி நம் உண்மையுள்ள ஆண்டவர் நம் பாடுகளில் நமக்கு உதவி செய்ய வல்லவராக இருக்கிறார். அவருடைய பரிசுத்த ஆவி நமக்குள் ஆவிகுரிய அறிவை வளர்த்து, எல்லா சோதனைளை தாங்கிக் கொள்ளும் திடம் கிடைக்கும். தேவன் நம் சோதனைகளை நீக்கி போடுவதற்கு பதிலாக ஏன் தாங்கிக் கொள்ளத் திடம் தருகிறார்? ஞாபகத்தில் வைத்திருங்கள், நாம் அனுதாபம் உள்ள ஆசாரியர்களாக உருவாகும் படி நமக்குப் பயிற்சி தருகிறார். அப்படியே பேதுரு சொல்லுகிறார், 1 பேது. 1:7ல், அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். என்கிறார். கிறிஸ்தவர்கள் அனுபவிக்கும் இந்த பாடுகளினால் தேவனின் கிருபையால் அவர்கள் மகிமை மேல் மகிமை அடைந்து அவரது குமாரனான கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக மாற்றுவார். (ரோம். 8:29; 2 கொரி 3:18). கிறிஸ்துவின் ஆவியினால் கொடுக்கப்படும் இந்த பயிற்சியினால் தாங்கும் துன்பங்கள் மற்றும் பாடுகளினால் கிறிஸ்தவர்கள் (சபை) அவர்கள் சக மனிதர்கள் மேல் அன்பிலும், காருண்யத்திலும் புரிந்து கொள்ளுதலிலும் அதிகமாக வளருவார்கள்.
எப்படி இஸ்ரயேல் தேசத்தில் முதற்பெலன்" ஆக இருப்பவர் தலைமை தாங்குவாரோ, அப்படியே சபையில் முதற்பெலனானவர்கள் (எபி. 12:23) எல்லா விதமான சோதனைகளையும், பாடுகளையும் துன்பங்களையும் சகித்தர்வர்களாக இருப்பார்கள். இந்த சிட்சையே அவர்களை இரக்கம் மற்றும் தயவு நிறைந்த ஆசாரியர்களாகவும், நியாயாதிபதிகளாகவும் மாற்றி அவர்கள் தேவனின் ராஜ்யத்தில் ஆட்சியாளராக இருக்கச்செய்கிறது. உங்களுக்கு நேரிடும் துன்பங்களும் பாடுகளும் உங்களை இப்படியாக வளரச் செய்கிறதா?
கிறிஸ்துவை ஏற்றது போக கிறிஸ்தவனாக இருக்க இன்னும் அநேக தகுதிகள் தேவைகளாக இருக்கிறது. 2 பேது 1:5-11ன் படி, விசுவாசம், தைரியம், ஞானம், இச்சையடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு.. ஆகியவை. இவைகளை நாம் கொண்டிருந்தால் மட்டுமே நாம் கிறிஸ்துவுடன் ராஜாக்களாகவும், ஆசாரியர்களாகவும் ஆட்சி செய்ய தகுதியடைகிறோம் (வெளி. 20:6).
இந்த நம்பிக்கையில் இருக்கும் போது, இயேசு சொன்னபடியே நாமும் முடிக்கலாம், என்னவென்றால் எந்த ஒரு பாடும், துன்பமும் சகிப்பதை பார்க்கிலும் அதிகமாக இல்லை. (எபி. 12:2-4), அவருக்கு முன்பாக இருக்கும் சந்தோஷத்தின் பொருட்டு, அவமானத்தை என்னாமல் சிலுவையை சகித்து தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்...
இப்படி ஒரு நம்பிக்கைக் கொண்டு அவரின் பாதச்சுவடை நாம் பின்பற்றினால், பலவித சோதனைகளில் அகப்படும்போது.. .. சந்தோஷப் படுங்கள். (யாக். 1:2-3)
ராஜ்யம்
1 தீமோ 4:10ல் பார்த்த பிரகாரமே தேவன் எல்லா மனிதர்களும் மீட்புபெரும்படி திட்டம் வைத்திருக்கிறார் என்று அறிவோம். அப்படியே 1 தீமோ. 2:3-4ன் படி எல்லாரும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையும்படி தேவன் சித்தம் கொண்டிருக்கிறார் என்றும் அறிவோம். சத்தியத்தை அறிகிற அறிவை அடைவதே மீட்புக்கு முன்பாக நடக்க வேண்டியது. இயேசு எல்லோருக்காகவும் மீட்கும்பொருளானதால் (1 தீமோ. 2:6) ஆதாமுக்குள் மரித்த அனைவரும் ஆதாமினால் கிடைத்த மரணத்திலிருந்து விடுவிக்கப் படுவார்கள் என்று நிச்சயம் அடைகிறோம். அதாவது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபைக்காக அழைப்பு பெறாத அனைவருமே சத்தியத்தை அறியும்படி மரணத்தை விட்டு எழும்புவார்கள். இதுவே அந்த தீமை செய்தவர்களாவார்கள் (யோவான். 5:28,29) அவர்கள் நியாயத்தீர்ப்பிற்காக (க்ரைஸிஸ்) எழும்புவார்கள்.
ராஜ்யத்திலே, இயேசுவும் அவரின் சபையும் இந்த உலகத்தில் இது வரை சரித்திரத்தில் ஏற்படாத பாடதிட்டத்தை செயல்படுத்துவார்கள். ஏசா. 11:9ன் படி, .. .. சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருகிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் (ஆபக். 2:14). மேலும் எரே. 31:34ல், .. .. .. அவர்களில் சிறியவன் முதல் பெரியவன் மட்டும் எல்லாரும் என்னை அறிந்துகொள்வார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.. ..
சபை ஏன் முதலில் அழைக்கபடுகிறது?
ஏன் உண்மையான சபை முதலில் தெரிந்துகொள்ளபட்டு கிறிஸ்துவோடு அவரது ராஜ்யத்தில் மனித சமுதாயத்தை ஆசீர்வதிக்கும் காரியத்தில் செயல்படுகிறது. இது எப்படிவென்றால், ஒரு திருந்திய குடிகாரன் மற்ற ஒரு குடிகாரனின் வேதனையைப் புரிந்து கொண்டு அவனை அதிலிருந்து விடுவிக்க சிறந்தவனாக இருக்க முடியும். மற்றவர்களைக் காட்டிலும் திருந்திய குடிகாரன்தான் இதற்கு சரியான உதவி செய்ய முடியும்.
கிறிஸ்துவின் ராஜ்யத்தில், மனிதர்கள் கல்லறையைவிட்டு எழும்பி வரும் போது, அவர்கள் அனைவரும் கிறிஸ்துவின் இரத்ததினால் விலைக்கு வாங்க பட்டவர்கள் என்று அறிவிக்கபட்டு, இப்பொழுது அனைவரும் கிறிஸ்துவும் அவரது சபையின் அரசாட்சியில் இருக்கிறீர்கள் என்று உணர்த்தப்படும் (1 கொரி. 6:2). மக்களின் பிரச்சனைகளை இந்த சபை தீர்த்துவைக்கும் என்று ஒரு நம்பிக்கை மனிதர்களுக்கு பிறக்கும். ஏன்? ஏனென்றால் ஒரு காலத்தில் சபையில் இருப்போரும் பாவிகளாகவே இருந்தனர். மேலும் சபை எல்லா விதமான பாடுகள், துன்பங்கள் வேதனைகள் சோதனைகள் எல்லவற்றையும் கடந்து வந்திருக்கிறது என்று மனிதர்கள் உணர்ந்து கொள்வார்கள். ஏனென்றால், தேவன் தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜேவனை அடையும்படிகு, அவரைத் தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார் (யோவன். 3:16) என்பதினால், சபையில் உள்ளவர்களும் மனித ஜாதியிலுள்ள ஒவ்வொருவரையும் உற்சாகபடுத்தவார். சபை தானும் ஒரு காலத்தில் பாவிகளாக இருந்து எப்படி அதை மேற்கொண்டார்களோ (2 கொரி. 10:4,5; எபி 12:3,4) அதே அறிவினாலே மனிதஜாதியின் கஷ்ட்டங்களை புரிந்துக் கொண்டு அதற்கு ஏற்ற படி கற்றுதருவார்கள் (எபி 5:2; லூக். 12:48). இந்த சீர்படுத்தும் திட்டம் செயல் படும். பெரும்பான்மையான மனிதஜாதி இந்த சொல்லிதருதலையும், கற்றுதருதலையும் ஏற்றுக்கொண்டு நித்தியஜீவனுக்கு தகுதி அடைவார்கள்.
இந்த திட்டமே எல்லாம் நிறைவேறித் தீருங்காலங்கள் (சீர்படுத்தும்) பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் மூலமாக உறைக்கப் பட்டதாக நிறைவேறுகிறது (அப். 3:20, 21). இப்படியாக கிறிஸ்துவோடு சேர்ந்து சபையாக சீர்படுத்தும் திட்டதில் பங்கெடுக்க நீங்களும் நல்ல ஒரு கிறிஸ்தவனாக ஆயத்தமா?
ஒரு நீண்ட செயற்திட்டம்
மீதமானவர்களில் விரும்புகிறோரை சீர்படுத்தும் காலம் (அப். 15:17; வெளி. 22:17) அதாவது, புத்தியில், நேர்மையில், மனிதன் ஏதேனில் இழந்து போன சரீர பிரகரமான சுகத்தில் ஆகிய இவைகள் சீர்திருத்தப்படுவது கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சியின் முடிவிலேயாகும்.
வெளி. 20:5, மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை என்கிறது. பழைய தோல்சுருள்களில் (manuscripts) இந்த வசனமே இல்லை. இந்த வார்த்தை உண்மையென்றால், அவை மரணத்திலிருந்து உயிர்தெழுவதை பற்றி சொல்லுவதாக இல்லை ஏனென்றால், வெளி. 11:15-18ல் சொல்லுவது என்னவென்றால், ஏழாம் எக்காளம் ஊதப் படும் போது அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை குறிக்கும், அந்த நேரமே மரித்தவர்கள் நியாயந்தீர்க்கப்படும் காலம் என்கிறது. யோவான். 5:28-29ல் சொல்லப்படுவது போலவே தானி. 12:2ம் இரண்டு வகுப்புகளான நல்லோர் மற்றும் தீயோர்களின் உயிர்தெழுதலைக் குறித்து சொல்லப்பட்டுள்ளது. தானி. 12:1ன் படி இந்த இரு வகுப்பாரும் மரணத்திலிருந்து உயிர்த்தெழும் காலம் பெரும் உபத்திரவ காலத்தின் சமீபத்தில் தான். இந்த மகா உபத்திரவம் 1000 வருட ஆட்சியின் ஆரம்பத்தில் தான் தவிர முடிவிலே இல்லை. தானி.12:2ன் படி தீயோரின் வகுப்பு நித்திய நிந்தைக்கு எழும்புவார்கள் என்று உள்ளது.
ராஜ்யத்தின் ஆசிர்வாதங்கள்
ஏசா. 35 ராஜ்யத்தின் சில ஆசீர்வாதங்களைப் பிரதிபலிப்பதை வாசிக்கலாம், வனாந்தரம் வறண்ட நிலம் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும் (வச. 1). .. அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுப்போம்; அப்பொழுது முடவன் மானைப் போல் குதிப்பான், ஊமையின் நாவும் கெம்பீரிக்கும்.. .. (வச. 5,6). வச. 8,9ல் பரிசுத்தமான பெரும்பாதையான வழி பற்றி உள்ளது, தீட்டுள்ளவர்கள் அதில் நடப்பதில்லை என்றும், பேதைகள் அதில் நடக்கும் போது திசைக்கெட்டுப் போவதில்லை என்றும் உள்ளது. ஒழுக்கம் இல்லாதவர்கள்கூட அந்த வழியில் நடக்கும் போது ஒழுக்கத்தை கற்றுக் கொள்வார்கள். வச.9ல் அங்கே சிங்கம் இருப்பதில்லை (சிங்கம் - சாத்தான் (1 பேது. 5:8)) மேலும் வெளி. 20:1-3 சாத்தான் 1000 வருட ஆட்சியில் கட்டப்படுவான் (மனிதகுலத்தை சோதிக்காதபடி). மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள் என்றூம் வச. 10ல் கர்த்தரால் மீட்கப்பட்டவர்கள் (இயேசு எல்லோருக்காகவும் மீட்க்கும் பொருளானார் - 1 தீமோ 2:6) திரும்பி சீயோனுக்கு (தேவனின் ராஜ்யத்திற்கு) வருவார்கள் மேலும் வெளி. 21:4ல், அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை, முந்தினவைகள் (பாவங்கள், சாபங்கள்) ஒழிந்து போயின என்று விளம்பினது
தேவன் இயேசுவையும் அவரது சபையைமே மேலே சொன்ன ஆசீர்வாதங்களை மனித ஜாதி மேல் பொழியும் படி பயன்படுத்துவார். நீங்கள் இயேசுவிற்கு அப்படி ஒரு சீடர் என்றால் நீங்களும் அந்த சபையில் இருந்து கொண்டு ஆசீர்வாதத்தைப் பொழியும் ஒரு பாத்திரமாக பயன் படுத்தப்படுவீர்கள்!
உங்கள் அழைப்பை பாருங்கள், சகோதரரே!
எப்படியெனில், சகோதரரே, நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்பைப் பாருங்கள், மாம்சத்தின்படி ஞானிகள் அநேகரில்லை, வல்லவர்கள் அநேகரில்லை, பிரபுக்கள் அநேகரில்லை; ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார், பலமுள்ளவைகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பலவீனமானவைகளைத் தெரிந்துகொண்டார்; உள்ளவைகளை அவமாக்கும்படி, உலகத்தின் இழிவானவைகளையும், அற்பமாய் எண்ணப்பட்டவைகளையும் இல்லாதவைகளையும் தேவன் தெரிந்துகொண்டார்; மாம்சமான ஒருவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாரட்டாதபடிக்கு அப்படி செய்தார். 1 கொரி 1:26 - 29.
பெரும்பகுதியாக, தேவன் இந்த உலகம் கருதும் பெருமையான காரியங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, சாதாரண மனித ஜாதியை தன் சிறு மந்தைக்காக தெரிந்து கொண்டிருக்கிறார். எப்படி இது இருக்கிறதை இல்லாமையாக கொண்டு வர முடியும்? சரித்திரத்தை பின் நோக்கிப் பார்த்தோமென்றால், மனிதனின் ஞானம் எல்லா விதமான மனோதத்த்துவங்கள், அரசியல் சட்டங்கள் போட்டும், மனித சமூதாயத்தின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருந்தது. சரித்திரத்தின் ஒவ்வொரு பக்கமும் மனிதன் சக மனிதனுக்கு செய்த அக்கிரமங்களையே நாம் பார்க்கலாம். இது தத்துவங்களின் தப்பிதங்களாலே அல்ல மாறாக மனிதனின் சுயத்தினாலே வந்தது. மனிதன் பாவத்தில் பிறந்து அக்கிரமத்தில் உருவாகிறான் (சங். 51:5) என்கிற வேதத்தின் வார்த்தைகள் சரித்திரத்தை நிரூபிக்கின்றது. 20வது நூற்றாண்டு மிக எதிர்ப்பார்புடன் தொடங்கியது. இந்த நூற்றாண்டில் கம்யூனிஸம் தோற்றுப் போனது. காபிடலிஸம் தோற்றுப் போனது. நினைத்துப் பார்க்க முடியாத தப்பிதங்கள், போதை வஸ்துகள், அதன் அடிமைகள், வேசித்தனம் ஆகியவை நல்ல ஒரு சமுதாயத்தை அழிவை நோக்கி அழைத்துச் செல்வதை நாம் காணலாம். அசுத்தத்தினால் பூமியும் ஒரு வனாந்தரமாக மாறி வருகிறதைப் பார்க்கலாம். பெரும்பாலான மனிதர்கள் சுயத்தை மாத்திரமே சிந்தித்துக் கொண்டிருந்தால் இப்படி இல்லாமல் போகுமா?
ஆகவே தேவன், இருந்ததை இல்லாமல் ஆக்கி கொண்டிருக்கிறார். மனித சரித்திரம் மனிதனின் முயற்சிகளினால் மனிதனின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது. எந்த ஒரு ஜனாதிபதியோ, பிரதமமந்திரியோ, இல்லை அரசியல்வாதியோ தன்னிடம் தனி மனிதனுக்கோ அல்லது முழு மனித சமூதயத்திற்கோ தேவையான திட்டங்கள் இருக்கிறது என்று பெருமையாக பேச முடியாது.
ஆனால் இந்த உலகில் சிலர் இருக்கிறார்கள்/ இருந்தார்கள், அவர்கள் மாம்சத்தின் மேல் நம்பிக்கையற்றவர்களாக இருந்தவர்கள். தேவன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையினால், தேவனின் ராஜ்யம் தான் எல்லா பிரச்சினைகளுக்கும் முடிவு கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை உள்ளவர்கள். அவர்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு தேவ சித்தம் செய்ய தங்களையே ஒப்புக் கொடுத்தவர்கள். அவர்கள் நியாயாதிபதிகளாக, இராஜாக்களாக மற்றும் ஆசாரியர்களாக ஆகும் படி அழைக்கபட்டவர்கள். இவர்கள் சாதாரண மக்களுக்கு வரும் பாடுகளில் இருந்து விலகியவர்கள் அல்ல (1 கொரி 10:13). எத்தனை பாடுகள் வந்தாலும், எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் இவர்கள் இதயங்களை இயேசுவுகுள்ளாக காத்துக் கொள்ளும் (பிலி. 4:7). இது போன்ற பாடுகளை தேவன் அனுமதிப்பதால் அவர்கள் ஒரு பக்குவம் உள்ள இருதயம் கொண்டவர்களாக வளர உதவுகிறது என்பதே இவர்களின் விசுவாசம்
தன் அன்புக்குரியவர்கள் - கணவன், மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகள் - இறந்து போனால் இருதயத்தில் ஒரு வடு உண்டாகிறது. உடற் ஊனமுற்றவர்களாக உள்ளவர்கள் கூட குடும்பத்திலிருந்து மறக்கப் பட்டவர்களாக இருக்கலாம். போதைக்கு அடிமையானவர்களோ, மூளை வளர்ச்சி இல்லாதவர்களும் தங்களை எல்லாராலும் மறக்கப்பட்டவர்கள் என்று எண்ணுவார்கள். இன்னும் பல்வேறு குறைகளால் (செல்வ குறைச்சல், ஏமாற்றங்கள் போல்) நாம் மறக்கப்பட்டவர்களாக இருக்கலாம். சிலரது தனிமை யாரும் புரிந்து கொள்ள முடியாதபடி மிகவும் கோரமாக இருக்கும், இவைகளெல்லாம், ஒப்புகொடுத்த கிறிஸ்தவர்களுக்கு (சபை) தங்களை பலப்படுத்த உதவுகிறது, கிறிஸ்துவின் ஆவி அவர்களை நாள்தோறும் உருமாற்றி கிறிஸ்துவின் சாயலுக்கு கொண்டு வருகிறது. (1 பேது. 1:7; 2 கொரி. 4:16-18)
மாம்சத்தின் இச்சைகளினால் தோன்றுகிற பாவங்களை மேற்கொள்வது தான் பிரதானமானது. இதுவே பாவங்களுக்கு விரோதமாக போராடுவது (2 கொரி. 7:5; 10:4-6; எபி. 12:4). தன் மாம்சத்துக்கு விரோதமாக கிறிஸ்தவன் போராடுவதால் பிற மனிதனின் பாவத்தில் விழும் காரியத்தின் மேல் கிறிஸ்தவனுக்கு (சபை) இரக்கமும், தயவும் அதை மேற்கொள்ளும்படி சொல்லி தர பாடமாக இருக்கிறது. ஒரு ஆசாரியன் என்பவன், தானும் பலவீனமுள்ளவனானபடியினாலே, அறியாதவர்களுக்கும் நெறிதப்பிப் போனவர்களுக்கும் இரங்கத்தக்கவனாயிருக்கிறான். எபி 5:2
இறுதியாக, கிறிஸ்துவோடு சேர்ந்து சபை அவரது ராஜ்யத்தின் மகிமையில் பங்கு கொள்ளும். அவருக்கு ஒப்பாக (1 யோவான் 3:2) இரங்கும் ஆசாரியர்களாகவும், புரிந்துகொள்ளும் நியாயதிபதிகளாகவும், அரசாளும் ராஜாக்களாகவும் (வெளி. 20:6; 1 கொரி. 6:2) இருப்பார்கள். சபையாக அவர்கள் ஒன்று சேர்ந்து எல்லா வேதனையுள்ளவர்கள், நோயாளிகளை, கஷ்டத்தில் உள்ளவர்க்ள் யாவரையும் புரிந்து கொண்டு ஆட்சி செய்வார்கள்.
நீங்கள் ஏன் கிறிஸ்தவர்கள்? நீங்கள் தேவனை மகிமைப் படுத்தும்படி பிறருக்கு ஆசிர்வாதமாக இருந்து அவரை சேவிப்பதினால் - தேவன் நீங்கள் கிறிஸ்தவர்களாக இருக்க உதவி செய்வார். - ஆமென்.
-- Edited by soulsolution on Sunday 16th of May 2010 07:36:54 PM
உங்களது இந்த கட்டுரை மிகவும் நன்றாக உள்ளது. வேத வசனங்களின்படி உண்மையாக இருப்பது போன்றும் இருக்கிறது. ஆனாலும் சில கேள்விகள் ..
அனேகர் கொலை, கொள்ளை, பெண்களை ஏமாற்றுதல் போன்ற பாவம் செய்துவிட்டு அதற்கேற்ற தண்டனை அடையாமல் சுகமாக வாழ்ந்து விட்டு இறப்பதை பார்க்கிறோம். அதிலும் சிலர் பூரணமான ஆயுளுடன் இறக்கின்றனர். இவர்களுக்கு தண்டனை சரிக்கட்டப்படுவது எங்கே? நீங்கள் சொல்லுவதுபடி பார்த்தால் இவர்கள் ஆயிரம் வருட அரசாட்சி வரும் வரைக்கும் இளைப்பாறி விட்டு எந்த தண்டனையும் அடையாமல் சொர்க்க பூமியான ஆயிரம் வருட அரசாட்சிக்கு சென்று அங்கும் சுகத்தை அனுபவித்து வாழ்வார்கள் என்று தெரிகிறது. அப்படியானால் இந்த உலகில் நல்லது செய்ய வேண்டும் என்ற அவசியம் என்ன? இங்கே நீதி சரிக்கட்டப்படுவது எப்படி?
-- Edited by SANDOSH on Friday 21st of May 2010 07:38:27 PM
மிக நல்ல கேள்வி சகோதரரே! உங்களில் பாவம் செய்யாதவன் இப்படிப் பட்டவர்கள் மேல் முதல் கல் எறியட்டும் என்று இயேசு சொன்னால் நீங்கள் எறியத்துணிவீர்களா? என்பது என் கேள்வி. 'பாவத்தின் சம்பளம் மரணம்' மட்டுமே. எல்லாரும் பாவம் செய்து எல்லாரும் அந்த மரண தண்டனைக்குள்ளாகிவிட்டோம். ஒருவனும் அதற்குத் தப்பமுடியாது. மேலும் கிறிஸ்து உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்தார். நீங்கள் சொன்ன அனைவருமே அதில் அடங்குவர். அதனிமித்தமே அவர்கள் உயிர்த்தெழ தகுதியாகிறார்கள். அதுதான் தேவனுடைய மகோன்னத அன்பு.
எல்லாரும் ரட்சிக்கப்படுவது அவரது சித்தம், திட்டம் எல்லாம். அவையெல்லாம் வரப்போகும் ராஜ்ஜியத்தில் நிறைவேறும். "பாவிகளை ரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்" வெறும் கிறிஸ்தவப் பாவிகளை மட்டுமல்ல.
வாருங்கள் சந்தோஷ் அவர்களே, மீண்டும் இந்த தளத்திற்கு பயனம் வந்திருக்கிறீர்கள். கருத்தையும் பதிந்திருக்கிறீர்கள்!! வருக!!
வேத வசனத்தின்படி நாம் வாழ்ந்துக்கொண்டிருப்பது, "பொல்லாத பிரபஞ்சத்தில்" என்பதை முதலில் நிச்சயித்துக்கொள்ளுங்கள் (கலா 1:4). இந்த பொல்லாத பிரபஞ்சத்தின் அதிபதியானவன் சாத்தான் என்பதையும் தாங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டபடியும், அதற்கும் மேலாகவும் தீமைகள் நிறைந்த உலகத்தில் தான் நாம் வாழ்ந்து வருகிறோம் என்பது வேதமே தீர்க்கதரிசனமாக சொல்லியிருக்கிறது. (2 தீமோ 3:17) அப்படி இருக்க வேதத்தை நம்புகிறவர்கள், உலகம் இப்படி ஏன் இருக்கிறது என்பதில் ஆச்சரியபட தேவையில்லை! தீர்க்கதரிசனமாக சொல்லப்பட்டது நிறைவேறியாகனும், அது நிறைவேறிக்கொண்டு இருக்கிறது.
சரி, அடுத்ததாக, இப்படி தீமை செய்கிறவர்கள் சுகமாக இருந்து மரித்து போகிறார்களே, நீங்கள் நண்மை செய்கிறீர்கள் என்றால் அது ஒன்றும் உங்களின் சொந்த முடிவு என்று மாத்திரம் தப்பு கனக்கு போட்டு விடாதீர்கள். இப்படி செய்வது தேவன் கொடுத்த ஈவு, அதுவே அவரது சித்தம்.தேவன் இப்பொழுதே இந்த உலகத்தில் இருப்பவர்கள் அனைவரும் நல்லவர்களாக மாறுங்கள் என்றால் அனைவரும் மாறி விட்டு போவார்கள், இதில் சந்தேகம் ஒன்றும் இல்லை, ஆனாலும், தன் குமாரனின் சாயலுக்கு ஒப்பாக சிலரை (சபையை) அவர் தெரிந்துக்கொண்டிருக்கும் காலம் தான் இந்த சுவிசேஷ யுகம். இதற்கு அவர் அநேகரை அழைத்திருக்கிறார் (அது தான் கிறிஸ்தவர்கள் என்கிற பெரும் கூட்டம்) ஆனால் அதில் மிகவும் சிலரையே அவர் தெரிந்துக்கொள்ள போகிறார் (அது தான் சபை). ஆக நீங்கள் கிறிஸ்தவர்களாக இருப்பது, பிறர் பாவம் செய்தும் அனுபவித்து இருக்கிறார்களே, அவர்களுக்கு ஏன் தண்டனை இருக்காது என்று நினைக்க அல்ல, மாறாக நீங்கள் அழைக்கபபட்டவராக இருக்கிறீர்களே, இன்னும் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களாக இருக்கும்படியாக அவரிடமே இருந்து பெற்றுக்கொள்ள தான். தீமை செய்வோர் மேல் நாம் ஏன் இத்துனை எரிச்சல் அடைய வேண்டும். அவர்களையும் தேவன் தானே படைத்தார்! அவர்களுக்கு ஒரு நண்மையை அவர் கொடுப்பார் என்றால் நாம் ஏன் அதற்கு விரோதமாக பேச வேண்டும். கிறிஸ்தவர்கள் இப்பொழுது செய்யும் தவரே அது தான், அதாவது தேவன் 1000 வருட அரசாட்சியில் செய்ய நினைப்பதை இவர்கள் இப்பொழுதே செய்து முடிக்க வீன் பிரயாசம் படுகிறார்கள்!!
வெளி 22:11 "அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும்; அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்; நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்." என்று சொல்லுகிறது. அப்படி என்றால் உங்கள் பங்கு என்னவோ அதை செய்ய முயற்சியுங்கள். சபையில் இருப்போமென்றால் என்றென்றும் தேவனை தரிசிப்பவர்களாக பரலோகத்தில் இருக்கும் வாய்ப்பு, இதுவே பந்தயத்தில் முதலாவது வருபவனுக்கு கிடைக்கும் கிரிடம். மற்றவர்களுக்கு கிரிடம் இல்லாவிட்டாலும், பங்கு கொண்டதிற்கான மதிப்பு கிடைக்கிறது அல்லவா, அது போலவே சபையில் இல்லாதவர்களுக்கு தேவன் ஒரு நண்மையை வைத்திருக்கிறார் என்றால் அதினால் நாம் ஏன் எரிச்சல் அடைய வேண்டும். நாம் ஏன் அவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று பேச வேண்டும். நாம் எல்லாவற்றிலும் பரிபூரணமாக இருக்கிறோமா!!
எல்லா மனிதர்களுமே பாவிகள் தான், இதில் சிறிய பாவம் என்றும் பெரிய பாவம் என்றும் ஒன்றும் இல்லை. பாவத்தின் சம்பளம் மரணம், அந்த மரணத்திலிருந்து இயேசு கிறிஸ்து செலுத்திய "மீட்கும் பொருளின்" பயனாக நாம் அனைவரும் எழுந்து வர போகிறோம், அதில் தெரிந்துக்கொள்ளப்பட்டவர்களான சிலர் சபையாக ஆவியிலும், மற்ற அனைவரும் வரிசையின்படி பூமியிலும் எழுந்து வருவார்கள். அனைவரும் தேவனை அறிகிற அறிவில் வளரச்செயப்படுவார்கள்.
தேவனை தெரிந்திருக்கிறோம் என்று சொல்லுவோரே இன்று இத்துனை சபைகளாக பிரிந்து ஒற்றுமையும் ஒரே விசுவாசமும் இல்லாதவர்களாக இருக்கும் போது, தேவனை அறியாதவர்கள் அப்படி இருப்பதில் என்ன ஆச்சரியம்.
தேவன் அன்பாக இருப்பது போல், அவரின் சாயலில் இருக்கும் நாமும் அந்த அன்பை வெளிப்படுத்தலாமே! தீமை செய்வோர் (என்று நாம் நினைப்போர்) என்ன ஆவார்கள் என்று தேவன் முடிவு செய்யட்டுமே!!
(அ) உண்மையான கிறிஸ்தவர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள், ஒரு சிறு மந்தையாக.
மிக சரியான கருத்து
(ஆ) சீஷத்துவம் என்பது மிகவும் கடினமான ஒரு பாதை
இதுவும் சரியான கருத்து
(இ) கிறிஸ்தவர்கள் இயேசுவுடன் 1000 வருடங்கள் பாவத்தில் மரித்த இந்த உலக மக்கள் மேல் ஆட்சி செய்வார்கள்.
இது வேத வசனத்தின் அடிப்படையில் முற்றிலும் தவறான கருத்து
வெளி 20:6முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
வெளி 20:5மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை. இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
முதலாம் உயிர்தெழுதலுக்கு பரிசுத்தவான்களே பாத்திரவான்கள் என்றும் மற்ற (பாவத்தில்) மரித்தவர்கள் அந்த ஆயிரம் வருஷம் உயிரடையவில்லை என்றும்
வேதம் தெளிவாக கூறும்பட்சத்தில் தங்களின் கருத்துக்கள் மாறுபாடாக இருக்கிறதே!
வெளி. 20:4. அன்றியும், நான் சிங்காசனங்களைக் கண்டேன்; அவைகளின்மேல் உட்கார்ந்தார்கள்; நியாயத்தீர்ப்புக் கொடுக்கும்படி அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது. இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், மிருகத்தையாவது அதின் சொரூபத்தையாவது வணங்காமலும் தங்கள் நெற்றியிலும் தங்கள் கையிலும் அதின் முத்திரையைத் தரித்துக்கொள்ளாமலும் இருந்தவர்களையும் கண்டேன். அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
5. (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.) இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்.
6. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை. இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.
இந்த வசனத்தை தெளிவாக நிதானமாக அர்த்தத்துடன் வாசித்து பாருங்கள். உயிர்தெழுந்த சிலர் கிறிஸ்துவுடன் சேர்ந்து சிங்காசனத்தில் அமர்ந்து 1000 வருடம் அரசாண்டார்களாம்? யாரை? வசனம் 5ன் முதல் பகுதி உண்மை என்றாள் யாரை அவர்கள் அரசாண்டார்கள் என்கிற கேள்வியே உங்களுக்கு எழுந்ததில்லையா? சம்பந்தமே இல்லாமல் "மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை" இந்த வார்த்தைகள் வர என்ன காரணம். இந்த வார்த்தைகளை கத்தோலிக்க சபையார் தங்களின் அரசாட்சியை உறுதி செய்ய சேர்த்துக்கொண்ட ஒரு வசனமாகும். இந்த பகுதியை மாத்திரம் எடுத்து விட்டு வாசித்து பாருங்கள். வசனங்கள் தெளிவாக இருக்கிறது.மேலும், உயிரடையவில்லை என்று எழுதிவிட்டு இதுவே முதலாம் உயிர்த்டெழுதல் என்று வந்திருப்பது அபத்தமாக இல்லை? மாறாக, "அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள். இதுவே முதலாம் உயிர்த்தெழுதல்" என்று வாசித்து பாருங்கள் எத்துனை தெளிவாக இருக்கும் என்று.
உயிர்த்தெழாதவனை எப்படி முதலாம் உயிர்த்தெழுதல் உள்ளவன் என்று சொல்ல முடியும்!? யோசிப்பதே கிடையாதா!? யாருமே உயிர்த்தெழாத பட்சத்தில், உயிர்த்தெழுந்து கிறிஸ்துவுடன் சேர்ந்து யாரை அவர்கள் அரசாளுவார்கள்?
இந்த ஆயிரம் வருடங்கள் நீதியை கற்றுக்கொடுக்கும்படி தான் கிறிஸ்துவின் சரீரமான சபை இன்று தேர்வு செய்யப்படுகிறது. பூமியில் உயிர்த்தெழுந்துவருபவர்கள், இவர்களின் அரசாட்சியின் கீழ் நீதியை கற்றுக்கொள்வார்கள்."அப்பொழுது சமுத்திரம் ஜலத்தினால் நிறம்பியிருப்பது போல் பூமி தேவனை அறிகிற அறிவால் நிரம்பியிருக்கும்" என்று ஏசாயா தீர்க்கதரிசியின் தீர்க்கதரிசனம் நிறைவேறும். அந்த நாட்களில் சாத்தான் கட்டிவைக்கப்பட்டிருப்பான், 1000 வருட அரசாட்சியின் முடிவில் அவன் மீண்டுமாக மக்களை சோதிக்கும்படியாக அவிழ்த்துவிடப்படுவான்.வசனத்தை கவனியுங்கள்,
வெளி. 20:7. அந்த ஆயிரம் வருஷம் முடியும்போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி,
8. பூமியின் நான்கு திசைகளிலுமுள்ள ஜாதிகளாகிய கோகையும் மாகோகையும் மோசம்போக்கும்படிக்கும், அவர்களை யுத்தத்திற்குக் கூட்டிக்கொள்ளும்படிக்கும் புறப்படுவான்;
இத்துனை தெளிவான வசனங்கள் இருந்தும் அதை நம்ப மனம் இல்லாமல்பிடிவாதமாக, நான் தெரிந்ததே சரி என்று இருந்தால் ஒன்றுமே செய்ய முடியாது.
5. (மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை.)
இப்போது உள்ள வேதத்தில் மேற்கண்ட வசனம் உள்ளது. ஆனால் நீங்களோ இதன் மூலப் பதிப்புகளில் இந்த வசனம் இல்லை என்று மறுக்கிறீர்கள். இது போலவே ஒவ்வொருவரும் தனக்கு சாதகமாக இல்லாத வசனங்களை மூலப் பிரதியில் இல்லை என்று சொல்லக் கூடும். இது போல சொல்வதும் ஒரு சுய நீதி போதனையே (நீங்கள் மற்றவர்களை குற்றம் சாட்டுவது போல்)
அப்படியே இந்த வசனம் மூலப் பிரதிகளில் இல்லை என்று சொல்வீர்களானால் அது பற்றி தகவல்களை தரக் கூடிய வலை பின்னல் இணைப்பு அல்லது புத்தகத்தின் தலைப்புபோன்றவற்றை தர முடியுமா? ஏனெனில் நீங்கள் இருவர் சொல்லுவதால் மட்டுமே நம்ப முடியாது.
-- Edited by SANDOSH on Saturday 22nd of May 2010 08:18:14 PM
நாங்கள் சொல்லுவதற்காக நம்ப வேண்டாம் நாங்கள் அதை நம்ப சொல்லவும் இல்லை. வேதத்தில் உள்ள வசனங்கள் இங்கே கொஞ்சம் அங்கே கொஞ்சம் என்று மறைத்து தான் கொடுக்கப்பட்டிருக்கிறது. யாக்கோபு 1:5ஐ பிரபல ஊழியர்கள் பரீட்சை நேரத்தில் சீ.டீ போட்டு காசு பன்ன பயன்படுத்துகிறார்கள், ஆனால் அந்த வசனமே உண்மையிலே சத்தியத்தை தேடுவோருக்கு தான், இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நாங்கள் சொல்லுவதை நீங்கள் நம்பாமல், வெளி. 20:4 முதல் 8 வரை நிதானமாக வாசியுங்கள், புரிந்துவிடும். பெரும்பாலுமான வேத புத்தகங்களில் வெளி. 20:5ன் முதற் பகுதி அடைப்புகுறியில் () தான் இருக்கும்.
Revelation 20:4-6 (New International Version)
4I saw thrones on which were seated those who had been given authority to judge. And I saw the souls of those who had been beheaded because of their testimony for Jesus and because of the word of God. They had not worshiped the beast or his image and had not received his mark on their foreheads or their hands. They came to life and reigned with Christ a thousand years. 5(The rest of the dead did not come to life until the thousand years were ended.) This is the first resurrection. 6Blessed and holy are those who have part in the first resurrection. The second death has no power over them, but they will be priests of God and of Christ and will reign with him for a thousand years.
Revelation 20:4-6 (Today's New International Version)
4 I saw thrones on which were seated those who had been given authority to judge. And I saw the souls of those who had been beheaded because of their testimony about Jesus and because of the word of God. They had not worshiped the beast or his image and had not received his mark on their foreheads or their hands. They came to life and reigned with Christ a thousand years. 5 (The rest of the dead did not come to life until the thousand years were ended.) This is the first resurrection. 6 Blessed and holy are those who have part in the first resurrection. The second death has no power over them, but they will be priests of God and of Christ and will reign with him for a thousand years.
Revelation 20:4-6 (New Century Version)
4 Then I saw some thrones and people sitting on them who had been given the power to judge. And I saw the souls of those who had been killed because they were faithful to the message of Jesus and the message from God. They had not worshiped the beast or his idol, and they had not received the mark of the beast on their foreheads or on their hands. They came back to life and ruled with Christ for a thousand years. 5 (The others that were dead did not live again until the thousand years were ended.) This is the first raising of the dead. 6 Blessed and holy are those who share in this first raising of the dead. The second death has no power over them. They will be priests for God and for Christ and will rule with him for a thousand years.
Revelation 20:4-6 (New Century Version)
4 Then I saw some thrones and people sitting on them who had been given the power to judge. And I saw the souls of those who had been killed because they were faithful to the message of Jesus and the message from God. They had not worshiped the beast or his idol, and they had not received the mark of the beast on their foreheads or on their hands. They came back to life and ruled with Christ for a thousand years. 5 (The others that were dead did not live again until the thousand years were ended.) This is the first raising of the dead. 6 Blessed and holy are those who share in this first raising of the dead. The second death has no power over them. They will be priests for God and for Christ and will rule with him for a thousand years.
நீங்கள் வேதத்தை ஆறாய்ந்து படிப்பவராக இருந்தால் தயவு செய்து, வேதத்தில் சில வசனங்கள் ஏன் அடைப்புகுறிக்குள் போடப்பட்டிருக்கிறது என்று யோசித்து பாருங்கள்!! மேலும் என் முந்தய பதிப்புள் உள்ள கேள்வியான , "உயிர்த்தெழாதவனை எப்படி முதலாம் உயிர்த்தெழுதல் உள்ளவன் என்று சொல்ல முடியும்!? " என்பதற்கு முடிந்தால் பதில் எழுதுங்கள்!! இன்னும் விவாதிப்போம். ஒன்று மட்டும் நிச்சயம், நாங்கள் எங்கள் கருத்துக்களை யார் மேலேயும் தினிப்பதில்லை. அல்லது தேவன் இதை எங்களிடத்தில் வந்து சொன்னார் என்றும் பலர் இன்று சொல்லிக்கொண்டிருப்பது போல் சொல்லுவதில்லை.தேவன் நமக்கு புரியவைப்பதே வேதத்தில் மறைந்திருக்கும் வசனத்தில் மூலமாகவே!!
இது மாத்திரம் இல்லை சகோதரரே, இன்னும் அனேக வசனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதற்காகத்தான் வேதத்தை ஆராய்ந்து அறிவது அவசியமாகிறது. முதலாவது நாம் பயன்படுத்தும் தமிழ் 'பரிசுத்த வேதாகமம்' என்ற புத்தகத்தில் முதல் பக்கத்திலேயே அபத்தம் உள்ளது என்றறியுங்கள். "இது மூல பாஷைகளாகிய எபிரேயு, கிரேக்கு என்னும் பாஷைகளிலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்டது" என்ற ஒரு மாபெரும் பொய்யை அச்சிட்டுள்ளனர். இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. King James Version என்று சொல்லப்படும் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்துவிட்டு பொய்யான தகவலைத் தந்திருக்கிறார்கள். மேலும் இது குறித்த தகவல்களை The Bible Translated என்ற ஆங்கில பகுதியில் பதித்துள்ளேன். நேரம் செலவு செய்து நீங்களே ஆராயலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.