இன்று இரவு (14/03/2010 இரவு 9.30க்கு) ஆசீர்வாதம் டீவியில் பார்த்த (கேட்ட) ஒரு சம்பவம். ஊழியக்கார் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார், அவரின் பிரசங்கத்தில் அவர் சொன்ன ஒரு காரியம், என்னவென்றால், அவர் ஜெபிக்கும் போது தேவ மகிமை வந்து அவரை மூடுமாம். அந்த மகிமையின் சுற்றளவு 3 கிலோமீட்டராம். அதாவது அந்த 3 கி.மிக்குள் சாத்தான் புக மாட்டானாம், அதற்கு அந்த பக்கம் தான் அவனால் இருக்க முடியுமாம். அதாவது தேவனின் மகிமை சுமார் 3 கி.மி வரை தான் என்று இவர் சொல்லுகிறார். என்ன வேடிக்கையான பிரசங்கம். தேவ மகிமையை இப்படி கொச்சை படுத்தி பேசுவதை மக்களும் அல்லேலூயா, மற்றும் ஆமென் சொல்லி ஆமோதிக்கிறார்கள். இவர்கள் எப்படி நடந்துக்கொண்டாலும், எப்படி பேசினாலும் தேவன் மாத்திரம் இவர்களிடத்தில் பிரசன்னம் ஆகி விடுகிறாரே, எப்படி!? மேலும் தீட்டு உள்ள இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! அதாவது தேவனின் சர்வவல்லமைத்தனத்தை கேலி பண்ணுகிறார்கள் இவர்கள். இவர்களுடன் தேவன் நரகத்திற்கு கூட சென்று இவர்களுக்கு நரகத்தை காண்பித்து வருவாராம், ஆனால் தீட்டு இருக்கும் இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! எப்படி தான் வேதத்தை அறிந்தவர்கள் இதர்கு ஆமென் அல்லேலூயா சொல்லி கேட்கிறார்களோ!
இப்படி பட்ட அநேக வேடிக்கையான பிரசங்கங்கள் இன்னும் இருக்கிறது. இவர்கள் பேசுவதை கேட்பதற்கு பதில் "சிரிப்பொலி" "ஆதித்தியா" போன்ற முழு நேர நகைச்சுவை நிகழ்ச்சிகளை பார்கலாமே. அங்கே இவர்களை போல் தேவனை கொச்சை படுத்துவது கிடையாது. இவர்களின் பிரசங்கங்களில் பெரும்பாலும் இவர்களிடம் தேவன் வந்து பேசி இருப்பார், அல்லது இவர்கள் பரலோகம், அல்லது நரகம் விஸிட் அடித்து விட்டு வந்திருப்பார்கள்.
அன்புள்ளவர்களே தயவு செய்து இப்படி பட்ட பிரசங்கங்களினால் கலங்கி நிற்க வேண்டாம். வேத வசனம் மாத்திரமே உண்மை, மனிதர்கள் பொய்யர்கள் என்கிறது வேதம். வேத சத்தியத்தை நம்புவோம், இப்படி பட்ட போதனைகளை விட்டு விலகி இருப்போம்.
////இன்று இரவு (14/03/2010 இரவு 9.30க்கு) ஆசீர்வாதம் டீவியில் பார்த்த (கேட்ட) ஒரு சம்பவம். ஊழியக்கார் பிரசங்கித்துக்கொண்டிருக்கிறார், அவரின் பிரசங்கத்தில் அவர் சொன்ன ஒரு காரியம், என்னவென்றால், அவர் ஜெபிக்கும் போது தேவ மகிமை வந்து அவரை மூடுமாம். அந்த மகிமையின் சுற்றளவு 3 கிலோமீட்டராம். அதாவது அந்த 3 கி.மிக்குள் சாத்தான் புக மாட்டானாம், அதற்கு அந்த பக்கம் தான் அவனால் இருக்க முடியுமாம். அதாவது தேவனின் மகிமை சுமார் 3 கி.மி வரை தான் என்று இவர் சொல்லுகிறார். என்ன வேடிக்கையான பிரசங்கம். தேவ மகிமையை இப்படி கொச்சை படுத்தி பேசுவதை மக்களும் அல்லேலூயா, மற்றும் ஆமென் சொல்லி ஆமோதிக்கிறார்கள்.////
இந்த வசனத்தை நீங்கள் வேதபுத்தகத்தில் பார்த்திருப்பீர்கள் இதை படித்துவிட்டு நீங்கள் என்ன பதில் சொல்லபோகிறீர்கள் கர்த்தரின் மகிமை ஆலயத்தை மட்டுதான் நிரப்புமாம். தேவனின் மகிமையை சாலமோன் கொச்சை படுத்தினார் என்று சொல்ல போகிறீர்களா?
அம்பானியின் மகன் காசுவேண்டும் என்று அவன் அப்பாவிடம் அடம்பிடித்து கேட்டான். அவனது அப்பாவும் தன் பையனிடம் ஒரு பத்துரூபாயை எடுத்து கொடுத்துவிட்டார். பையன் அதை கையில் எடுத்துகொண்டு "நான் என் அப்பாவிடம் கேட்டபோது அவர் பத்து ரூபாய் எனக்கு கொடுத்துவிட்டார்" என்று சொல்லிக்கொண்டு தெருவில் ஓடுகிறான். அதை பார்த்த ஒருவர் "அவனுடைய அப்பாவின் செலவசெழிப்பை இந்தபயன் கொச்சைபடுத்துகிறான் அவரிடம் வெறும் பத்து ருபாய் மட்டும்தான் இருக்கிறதாம்" என்று சொன்னதுபோல் இருக்கிறது உங்கள் பதிவு.
தேவனிடம் உலகம் முழுவதையும் மூடும் அளவுக்கு மகிமை இருக்கிறது ஆனால் அது எல்லா நேரமும் எல்லோருக்கும் வெளிப்படுவது இல்லை அதை எல்லோருக்கும் காண்பிக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை. அதில் ஒரு சிறு பகுதியை அவருக்கு தேவன் காண்பித்திருக்கிறார் இதில் என்ன தவறிருக்கிறது?
சகோதரர் பெரேயன்ஸ்
///மேலும் தீட்டு உள்ள இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! அதாவது தேவனின் சர்வவல்லமைத்தனத்தை கேலி பண்ணுகிறார்கள் இவர்கள். இவர்களுடன் தேவன் நரகத்திற்கு கூட சென்று இவர்களுக்கு நரகத்தை காண்பித்து வருவாராம், ஆனால் தீட்டு இருக்கும் இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாதாம்! எப்படி தான் வேதத்தை அறிந்தவர்கள் இதர்கு ஆமென் அல்லேலூயா சொல்லி கேட்கிறார்களோ!////
ஒரு நல்ல மனிதனின் மகன் ஒரு மோசமான விபசார விடுதிக்குள் என்ஜாய் பண்ண போய்விட்டான். அவனை தேடிவந்த அந்த மனிதன் அந்த மோசமான இடத்துக்குள் போக அருவருத்து வெளியில் வரட்டும் பார்க்கலாம் என்று வெளியிலேயே அமர்ந்துவிட்டார். அவர் நினைத்தால் உள்ளே போகமுடியும் அதற்க்கு அவருக்கு வல்லமை உண்டு ஆனால் கண்றாவிகளை அவர் பார்க்க விரும்பவில்லை அவ்வளவுதான் அதனால் உள்ளே போகவில்லை.
ஒரு பத்து ரூபாய் காசு சாக்கடையில் விழுந்து விட்டால் அதன் உள்ளே இரங்கி கிரியை செய்து எடுக்க நம்மால் முடியும். ஆனால் அதற்காக அந்த துர்நாற்றத்துக்குள் இரங்க தேவையில்லை என்று விட்டுவிடுவது போலதான் இச்செயலும் இதில் என்ன சர்வவல்லமையை மட்டுபடுத்தும் கருத்து என்ன இருக்கிறது?
தேவனாகிய கர்த்தர் பரிசுத்தராக இருக்கிறார் அவர் "நான் பரிசுத்தர் எனவே நீங்களும் பரிசுத்தராக இருங்கள்" என்று சொன்னதோடு பல இடங்களில் உங்களை தீட்டு படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
எண்ணாகமம் 35:34நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்;
II நாளாகமம் 23:19யாதொரு காரியத்தினால் தீட்டுப்பட்டவன் கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசியாதபடிக்கு, அதின் வாசல்களுக்குக் காவலாளரை நிறுத்தினான். வெளி 21:27தீட்டுள்ளதும் அருவருப்பையும் பொய்யையும் நடப்பிக்கிறதுமாகிய ஒன்றும் அதில் பிரவேசிப்பதில்லை
எசேக்கியேல் 43:8 , என் பரிசுத்த நாமத்தைத் தாங்கள் அருவருப்புகளினால் தீட்டுப்படுத்தினார்கள்; ஆகையால் என் கோபத்திலே அவர்களை நாசமாக்கினேன்.
அதை கவனித்து அவரது விருப்பபடி தீட்டுள்ளதை தவிர்த்து நடப்பதை விட்டுவிட்டு, தீட்டுள்ள இடத்துக்கு தேவன் வர முடியுமா? முடியாதா? என்று கேள்வி கேட்டுகொண்டு இருப்பதுதான் தேவனின் வார்த்தையை அசட்டை செய்து அவரது அனந்த ஞானத்தை குறைகூறுவதுபோல் இருக்கிறது.
இது எதற்கு? மனிதனின் கழிவுகள் மூடப்படாமல் சுத்தம் இல்லாமல் இருந்தால்கூட கர்த்தர் விலகி போய்விடுவார் என்று வசனம் சொல்கிறது
உபாகமம் 23:13உன் ஆயுதங்களோடே ஒரு சிறுகோலும் உன்னிடத்தில் இருக்கக்கடவது; நீ மலஜலாதிக்குப் போகும்போது, அதனால் மண்ணைத் தோண்டி, மலஜலாதிக்கிருந்து, உன்னிலிருந்து கழிந்துபோனதை மூடிப்போடக்கடவாய்
14. உன் தேவனாகிய கர்த்தர் உன்னை இரட்சிக்கவும், உன் சத்துருக்களை உனக்கு ஒப்புக்கொடுக்கவும், உன் பாளயத்திற்குள்ளே உலாவிக்கொண்டிருக்கிறார்; ஆகையால், அவர் உன்னிடத்தில் அசுசியான காரியத்தைக் கண்டு, உன்னைவிட்டுப் போகாதபடிக்கு, உன் பாளயம் சுத்தமாயிருக்கக்கடவது.
அதற்காக கர்த்தரை அசுத்தமான அவ்விடத்திலும் இருந்து கிரியை செய்ய முடியாதவர் என்று வேதம் அவரது மகிமையை குறைத்து சொல்கிறது என்று எழுதுவீர்களா?
ஐயா ராஜ் அவர்களே, தயவு செய்து வேதத்தில் உள்ள பாத்திரங்களை இன்றைய பணப்பித்தர்களும் பண ஆசையில் இருக்கும் ஊழியர்களை ஒப்பீட்டு பேசாதீர்கள்!! இவர்களால் தான் தேவ நாமம் தூஷிக்க படுகிறது என்பதில் உங்களுக்கு சந்தேகம் இருக்கலாம் ஆனால் எனக்கு துளியும் இல்லை!! மேலும் அம்பானியை தேவன் அளவிற்கு உயர்த்தி பேச வேன்டிய அவசியம் ஏன் எழுந்தது என்று விளஙவில்லை. தங்களின் உதாரனங்கள் ஆன்மீக சொற்பொளிவிற்கு வேண்டும் என்றால் நன்றாக இருக்கும், வேத தர்கங்களுக்கு இல்லை. நீங்கள் அனைவரும் தேவனை அனுதினமும் தரிசிக்கும் ஊழியர்களாம இருக்கிறோம் என்று சொல்லுவதையே நான் கடுமையாக எதிர்க்கிறேன். சொந்த அனுபவத்தில் தயவு செய்து குழம்பி போய் மக்களையும் குழப்பாதீர்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.
படிக்கிற பிள்லைகளுக்கு சீடியில் ஜெபத்தை விற்கிறவர்கள் இந்த ஊழியர்கள், இவர்களுக்கு வக்காலத்து வாங்குவதில் என்ன பெருமையோ!! மேடைக்கு மேடை, தேவன் என்னிடத்தில் பேசினார், என்னை பரலோகம் நரகம் கூட்டி காண்பித்தார் என்று தம்பட்டம் அடிப்பவர்களின் பொய்யும் புரட்டும் கற்பனைகளும் கூடிய விறைவில் வெளியரங்கமாகும், அங்கே அவர்கள் அழுகையும் பற்கடிப்புடனும் நீதியை கற்றுக்கொள்ளும் காலம் வெகு சமீபமாக இருக்கிறது, காத்திருக்கிறேன்.
தீட்டு உள்ள இடத்தில் தேவனால் கிரியை செய்ய முடியாது என்று நீங்கள் காண்பித்த வசனம் சொல்ல வில்லை. உங்களுக்கு சாதகமாக இன்னும் தேடி பாருங்கள்!! ஆனால் தேவன் தீட்டு உள்ள இடத்தில் கிறியை செய்ய முடியாது என்று சொல்லுபவர்கள் எப்படி தான் தேவனின் சர்வவல்லமையை ஒப்புக்கொள்கிறார்களோ, நீங்கள் சொல்லும் அதே விபச்சார விடுதியில் பிரசங்கித்து, அங்கு இருப்பவர்களிடமும் சுவிசேஷத்தை சொல்லி அவர்கள் மனதையும் மாற்றி யிருக்கிறார் தேவன், எப்படி கிரியை செய்ய முடிந்தது!! தேவன் உண்டாக்கியதை இவர்கள் தீட்டு உள்ளது என்று சொல்ல துனிந்த மாயக்காரர்கள் இவர்கள்!!
எத்துனை கிறிஸ்தவ பிள்ளைகள் தான் இந்த 12ம் தேர்வில் மாநில அளவில் இடம் பிடித்தார்கள் என்று சொல்ல முடியுமா! இந்த பணப்பித்தர்கள் பனம் பெற்று தானே ஜெபித்தார்கள். தீட்டு இவர்கள் இருதயத்தில் தான் இருக்கிறது.இவர்கள் இயேசு என்கிற கிறிஸ்துவின் நாமத்தை உச்சரிக்க கூட தகுதி இல்லாதவர்கள்
அப். 10: 14. அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாயிருக்கிற யாதொன்றையும் நான் ஒருக்காலும் புசித்ததில்லை என்றான்.15. அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்று இரண்டாந்தரமும் சத்தம் அவனுக்கு உண்டாயிற்று.
தாங்கள் இருப்பது சுவிசேஷ யுகத்தில் அன்றி சாலமோனின் ஆலயத்தில் இல்லை. அந்த ஆலயத்திற்கும் இப்பொழுது இருக்கும் சபைக்கும் சம்பந்தமே இல்லை. மேலும் கிரிஸ்துவின் மகிமையான பிரசன்னத்தை பார்த்து அவர் பயன்படுத்திய பாத்திரங்களான பவுல் குருடாகி விட்டார், யோவான் செத்தவனை போல் விழுந்து விட்டார், ஆனால் நான் ஊழியக்காரன், நான் ஊழியக்காரன் என்று தம்பட்டம் அடிக்கும் பண பித்தர்கள், ஜெபங்களை புத்தகங்களாகவும், குரும்தகடுகளாகவும் விற்று காசு பார்க்கும் இன்றைய ஊழியர்களை தயவு செய்து வேதத்தில் பயன்படுத்தப்பட்ட பாத்திரங்களுடன் ஒரு காலும் ஒப்பீடாதீர்கள்!! இருதயத்தில் பணம் என்று தீட்டை கொண்டிருக்கும் இவர்களிடத்தில் தான் தேவன் வந்து பேசி போகிறார், மகிமையை காண்பித்து போகிறார், அதை நம்ப நாங்கள் ஒன்றும் காதில்லாதவர்கள் அல்ல என்று சொல்லுகிறேன். மேலும் நான் யாரிடமும் நீங்கள் பரிசுத்தமாக வாழாதீர்கள் என்று சொல்லவில்லை, மாறாக முதலில் நம் இருதயத்தில் உள்ள தீட்டை எடுத்து போட்டு, பிறகு மற்றதை சொல்லலாமே.
மாத வருமானத்தை விட்டு விட்டு, தேவனுக்கு ஊழியம் செய்கிற ஊழியன் என்று சொல்லி மக்களை ஏமாற்றி, ஜெபிக்கிறேன் என்று பணம் கேட்கும் இவர்கள் இருதயம் எப்படி தான் சுத்தமாக இருக்குமோ!? மாத வருமானத்தின் போது சைக்கிளோ பைக்கோ வைத்திருப்பவர்கள் அதை விட்ட பிறகு தான் ஹோண்டா அக்கார்ட், பென்ஸ் போன்ற கார்களில் செல்லும் அளவிற்கு வசதியை பெறுக்கி கொண்டு, தேவனுக்கு கொடுங்கள் என்று மக்களை ஏமாற்றி தாங்களும் தங்களின் வாரிசுகளுக்கும் சேர்த்துக்கொண்டிருக்கும் இவர்களா உன்னதமான தேவனின் ஊழியர்களாக இருக்க முடியும். இவர்களிடமா தேவன் பேசுவார். பிசாசும் ஒளியின் தூதனாக இருக்கிறான், அந்த ஒளியை பார்த்து விட்டு தான் இந்த பிதற்று பிதற்றுகிறார்களோ!!
வேத வசனங்களில் உள்ள சத்தியத்தை நம்புங்கள், இந்த மாய ஜால ஊழியர்களின் போதகத்தை ஒரு போதும் நம்பி மோசம் போகாதீர்கள். இவர்கள் சொல்லும் சத்தியம் இவர்களுக்கு வயிற்று பிழைப்பும் தங்கள் சந்ததிகளுக்கு சேர்த்துவைக்கும் பண முடுச்சுமே!! ஏற்கனவே ஒருவர் இங்கு சம்பாதித்து இந்த நாட்டை விட்டு குடும்பத்துடன் வெளியேறினது அநேகருக்கு தெரிந்தது என்றே நினைக்கிறேன். இந்த தளத்தில் இவர்களின் பெயர்களை கூட நான் குறிப்பிட்டு இந்த தளத்தை கெடுக்க விரும்பவில்லை.
இந்த கடைசி காலங்களில் தேவன் மத போர்வையில் செயல் படும் ஒவ்வொரு மதவாதியின் முக திரையை கிழித்துக்கொண்டு இருப்பது நமக்கு தெரிந்ததே. இந்த உத்தம ஊழியர்கள் இவர்கள் காணிக்கையாக பெற்றுக்கொள்ளும் பணத்திற்கு வரி செலுத்தாமல் நாட்டின் சட்டத்தையே மீறுகிறார்கள் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.
கிறிஸ்தவர்களே,.விழிப்பாய் இருங்கள். இது போன்ற ஓநாய்களிடம் சிக்கி ஏமாந்துவிடாதீர்கள்!!
"மரணம்" என்றால் என்னவென்றே விளக்கத்தெரியாத இந்த சுய நீதிப் போதகர்கள், மகிமையைப் பற்றிப் பேசுவது ஆச்சரியம். வேத்த்தின் அடிப்படைசத்தியங்க்களே தெரியாத்வர்கள் மகிமைக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். மரித்தவர்கள் எங்கே என்ற பகுதியை படித்தறிந்து இனியாவது மரணத்தைப் பற்றி அறிந்து கொள்ளட்டும்
யாரிடமும் கற்று கொள்ள பிரியமில்லாததினால் தான் சுய நீதி போதகர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்,. பரவில்லை, அனைவரும் கற்று கொள்ளும் நாள் வருகிறது. இந்த உலகத்தில் இருக்கும் பிரச்சனையே சுயம் என்கிற விஷயம் தான். அந்த சுயம் நம்மை தாழ்ந்து போக செய்ய விடுவதில்லை. இது போன்ற சுய நீதி போதகர்கள் மரணத்தை பற்றி பிரசங்கிக்க தெரியாததினால் தான் இன்ரு புற மதஸ்த்தரும் குறிப்பாக இஸ்லாம் நண்பர்கள் இயேசு கிறிஸ்து சிலுவையில் மரிக்கவில்லை என்று சொல்லுகிறார்கள், ஏனென்றால் கிறிஸ்தவர்களே பலர் இதை தான் நம்புகிறார்கள். போகட்டும், இந்த தளத்திலிருந்து தேவ சித்தத்தின் படி சிலராவது கற்று கொள்ளட்டும், உங்களுக்கு வேண்டுமென்றாள் "ச்சீ..ச்சீ இந்த பழம் புளிக்கும்" என்று இருக்கலாம். சத்தியத்தின் மேல் வாஞ்சை உள்ளவர்களுக்கு இந்த தளம் பிரயஜோனப் படட்டும், நிச்சயமாக கணவுகள், காட்சிகள் பரலோக நரக அனுபவஸ்தர்கள் (விசிட் அடித்தவர்கள் தான்) தங்களை மேன்மை படுத்தும் ஊழியர்கள் (!!) போன்றோருக்கு இந்த தளம் சவுக்கடியாக தான் இருக்கும்.
பிரச்சனையே இந்த அனுபவங்களிலே தான் சகோதரரே! இந்த அனுபவம் என்பது வசனத்திற்கு அப்பாற்பட்டதாக மாறும் போது, விபிரீதங்கள் ஏற்படுகிறது. மார்ட்டீன் லூத்தர் "விசுவாசத்தினால் நீதிமானாகிறோம்" என்கிற வசனத்தின் அடிப்படையில் தான் ஒரு புதிய புரட்சியை உருவாக்கினாரே தவிர, என்னிடத்தில் தேவன் வந்து பேசி இதை செய்ய சொன்னார், அப்படி பேசினார் என்று இல்லை. இப்படி தேவன் வந்து பேசுவது சுமார் 200, 300 ஆண்டுகளாக தான் அதிகரித்து வருகிறது. இந்த அனுபவங்களுக்கு எல்லைகள் இல்லாமல் போய் விட்டது. யாருக்கு மனதில் என்ன தோன்றினாலும் அது தேவனிடத்திலிருந்து வந்தது என்று பிரசங்கிக்கிறார்களே!! ஏன் இந்த நிலை. ஏன் வேதத்தில் உள்ளது சிலருக்கு மாத்திரம் அனுபவங்களாக வரவேண்டும்!! உடனே பவுல் யோவான் போன்றோரை இழுக்கவேண்டாம். அன்று மக்களிடம் வேத புத்தகம் இல்லை, ஆகையால் அந்த தரிசனங்கள் தேவைப்பட்டது. இன்று அப்படி இல்லை, இன்று நாம் அந்த வேதத்தில் உல்ளதை விசுவாசித்தாலே போதும், நமக்கு என்று சொந்தமாக அனுபவங்கள் தேவை இல்லை. வசனத்தை அனுபவமாக வைக்கலாம், ஆனால் தனக்கு வரும், கணவுகள், காட்சிகள், பரலோக நரக தரிசனங்களை கொண்டு வேதத்தை விளக்குவதால் தான் விபரீதம்!!
டாண்டே என்கிற கத்தோலிக்க ஓவியன் "நரகம்" என்கிற ஒரு ஓவியத்தை வரைந்ததன் விளைவு இன்று அநேகர் அதை தரிசனமாக பார்ப்பது. ஒரு விஷயத்தை அதிகமாக நமக்கு தோன்றுகிற படி சிந்தித்துக்கொண்டு உறங்கினாலே போதும், அது நமக்கு கணவாகவோ, தரிசனமாகவோ வர அதிக வாய்ப்பு இருக்கிறது, இது எல்லாம் தேவனிடத்திலிருந்து தான் வந்தது என்பதற்கு ஒரே ஆதாரம் இந்த அனுபவங்களை சொல்லும் அந்த மனிதன் மாத்திரமே!! ஏன் அதை நம்பவேண்டும்!? என் வேதத்தில் கொடுக்கப்படாத ஒரு விஷயத்தை நான் ஏன் நம்ப வேண்டும்.
இன்னும் ஒரு உதாரனம், இன்று பெரும்பாளுமானோரின் வீடுகளில் இயேசு கிறிஸ்துவின் படம் பார்க்க முடியும். யாரோ செய்த கற்பனை இன்று ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு மாதிரியான இயேசு கிறிஸ்துவின் படம் இருக்கிறது, இத்துனை விதங்களாக இயேசு கிறிஸ்து இருந்தாரா!? இல்லையே, முதலாவது இந்த படங்களில் உள்ளது போல் அவர் இல்லவே இல்லை!! இது மனிதர்களின் கற்பனையே தவிர வேற் ஒன்றும் இல்லை. அப்படியே தான் இந்த அனுபவங்கள் சமாச்சாரமும். இந்த பொய்யான அனுபவங்களை குறித்து நானும் பகிர்ந்திருக்கிறேன், ஆனால் அது எல்லாம் ஒரு மாயை ஒரு பொய் என்று இப்பொழுது என்னால் சொல்ல முடியும். மனதில் சுத்தம் இல்லாதவர்கள், அதை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள், அவ்வளவே.
மரணத்தைப் பற்றிய பேச்செடுத்தாலே பொத்துக்கொண்டு வருகிறது. ஏனென்றால் இவர்கள் போதிப்பது சாத்தான் சொன்ன "நீங்கள் சாகவே சாவதில்லை" என்ற உபதேசத்தைத்தானே. மரணத்தைப் பற்றிய தெளிவில்லாதவர்களுக்கு நித்திய ஜீவனைப்பற்றி போதிக்க அருகதை இல்லை. இவர்களுக்கு தரிசனம் காண்பிக்கும் தேவன் எல்லாருக்கும் ஏன் காண்பிப்பதில்லை என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும்.
மேலும் இந்தத் தளத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டாம். வேதத்திலிருந்துதான் கற்றுக்கொள்ளச்சொல்கிறோம். இங்கு பதிக்கப்படும் விஷயங்க்கள் வேத்த்தை மாத்திரம் ஆதாரமாகக் கொண்டவை. பொய்யனான எந்த மனுஷனுடைய 'தரிசனங்களோ, சொப்பனங்க்களோ' அல்ல.
-- Edited by soulsolution on Tuesday 18th of May 2010 07:13:22 PM
நம் ஊழியர்கள் பலரை மரணத்திலிருந்து எழுப்பியிருக்கிறார்கள் என்று தம்பட்டம் அடித்து சபையார் மத்தியில் வலம் வந்துக்கொண்டிருக்கிறார்கள்!! சொந்த கற்பனைகளை தேவன் தந்த காட்சிகளாக சொல்லி வருகிறார்கள். இவர்களுக்கு உண்மையில் காதுகள் இருந்தால், திறந்த மனதுடன் படிக்க சம்மதம் இருந்தால், இதை குறித்து விவாதிக்க என்னம் இருந்தால் தொடர்ந்து வாசிக்கட்டும்.
நேற்றைய இரவு "நிஜம்" என்கிற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த ஊழியக்காரர்கள் சொல்லுவது போல், ஒரு புற மதத்தை சேர்ந்தவருக்கு நிகழ்ந்தது. விபத்தில் அவர் மரித்து விட்டார் என்று சொல்லி போஸ்ட் மார்ட்டம் செய்ய அவரின் உடல் எடுத்து செல்லப்பட்ட போது அவரின் கை அசைந்தது, அதன் பின் சில மாதக்காலம் கோமாவில் இருந்து இப்பொழுது மீண்டும் எழுந்து நடமாடிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர். இது அநேக செய்தித்தாள்களில் வந்த செய்தியாகும் என்பது அந்த தொலைக்காட்சியில் வந்த நிகழ்ச்சியின் போது சொல்லப்பட்டது. இயேசு கிறிஸ்து லாசருவை உயிருடன் எழுப்பிய போது, அது அநேக இடங்களுக்கு செய்தியாக பரவியது. இதன் நிமித்தமாக அநேகர் இயேசு கிறிஸ்துவையும் அவர் எழுப்பிய லாசருவையும் பார்க்க வந்தார்கள் என்கிறது வேதம். ஆனால் கட்டுக்கதைகளாக சொல்லும் நம் ஊழியர்களின் இந்த மரணத்திலிருந்து எழுப்பிய செய்திகள் எங்குமே வருவதில்லையே!! ஏன்!? இப்படி எதேச்சையாக பிழைக்கும் மனிதர்களை இவர்களின் ஜெபங்கள் தான் எழுப்பியது என்று பெயர் எடுத்து அதினால் பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கும் இவர்கள் இயேசுவையா பின் பற்றுகிறார்கள் என்றால் இல்லை என்பது தான் மறுக்க முடியாத உண்மை!!
இந்த சுய நீதி போதகர்கள், தரிசனங்களை காண்போர்களிடம் ஏதாவது பதில் இருக்கிறதா!?