சமீபத்தில் எங்கள் சிறிய ஊரில் "சமாதானப் பெரு விழா" என்கிற ஒரு நிகழ்ச்சி பிரபலமான ஊழியர்களை கொண்டு நடத்தப்பட்டது. சரி பெருவிழா என்று நாங்கள் நண்பர்கள் அனைவரும் ஆவலுடன் என்ன நடக்கிறது என்று போனால், மேடை ஏறுகிற அனைவரும் தொட்டா சுருங்கி போல் தேவ ஊழியர் (!!) தொட்டவுடன் கீழெ விழுந்து எழும்புகிறார்கள். விழா என்றால் விழமாட்டார்கள் என்று என்னியது தவறு போல், அனைவருமே அந்த ஊழியரின் கை பட்டு கீழெ விழுவதை பெரும் "பாக்கியமும்" ஆசீர்வாதமும் என்று என்னி அப்படி நடந்துக்கொண்டது வேதனையாக இருந்தது.
இப்படி ஆவியில் கீழே விழுவது உண்மையா? அப்படி என்றால் எந்த ஆவியில் கீழே விழுகிறார்கள்!! பரிசுத்த ஆவியினால் என்றால் அது வேதத்திற்கு புறம்பாக இருக்கிறதே!! பரிசுத்த ஆவி பெற்றவர்கள் பலம் கொண்டு எழுந்து தான் நிற்க முடியுமே தவிர விழ முடியாதே!! அசுத்த ஆவி என்றால் அது எப்படி அந்த "தேவ ஊழியர்களும்" ஆவி அசைவாடிக்கொண்டிருக்கும் இடத்திற்கும் வர முடியும்!? பென்னி ஹின் போன்ற வெளிநாட்டு ஊழியர்கள் (!!) செய்யும் சில வித்தைகளை கற்றுக்கொண்டு நம்மவர்களும் இங்கு கலக்கி கொண்டு இருக்கிறார்கள்.
வேதத்தில் விழுந்தவர்கள் முகம் குப்புற விழுந்தார்களே. பின்னீட்டு விழுந்தவர்கள் ஒன்று கெத்சமனே தோட்டத்திலும், ஒரு வேலை இயேசு கிறிஸ்துவின் கல்லறையை காவல் காத்த அந்த ரோம படை வீரர்கள் மாத்திரமே.
அசுத்த ஆவியில் தான் விழுகிறார்கள் என்றால் அதில் பல ஊழியர்களும் இருந்தார்களே, அப்படி என்றால் இத்துனை நாட்கள் அவர்கள் அந்த அசுத்த ஆவியில் தான் சபையை நடத்தி வந்து இருந்தார்கள் என்று சபை மக்களுக்கு முன்பாக ஒப்பு கொள்வார்களா? பரிசுத்த ஆவி என்பது தேவன் ஒருவரால் மாத்திரமே கொடுக்க முடியும் ஒரு காரியம்!! அப்போஸ்தலர்கள் இருக்கும் மட்டும் அவர்களுக்கு அந்த அதிகாரம் இருந்தது. அவர்கள் யார் மீது கைகளை வைக்கிறார்களோ அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று கொள்வார்கள், அதற்கென்று சில அடையளாங்கள் வெளிப்படுத்துவார்கள் என்று தான் வேதத்தில் இருக்கிக்றது, அதற்கு மாறாக இன்று நடப்பது போல் யாரும் யாருக்கும் பரிசுத்த ஆவி கொடுக்க முடியாது.
ராணுவ கமாண்டர்கள் போல் வந்திருந்த இரு ஊழியர்கள்களும் மேடையில் வலம் வர இரு நீண்ட வரிசைகளில் ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் மேடையில் ஏற்றப்பட்டார்கள், ஆண் வரிசைக்கு ஆண் ஊழியரும் பெண்கள் வரிசைக்கு பெண் ஊழியரும் நின்றார்கள். ஆண் ஊழியரிடம் ஆண்கள் அவரிடம் போய் விழுந்து எழுந்தார்கள், பெண் ஊழியரோ வரிசையில் நிற்பவரை வந்து தொட்டவுடன் (தள்ளி விடுவது அப்பட்டமாக தெரிந்தது) பெண்கள் கீழே விழுந்து எழுந்தார்கள். விதவிதமாக விழுந்தார்கள். எனக்கு இருக்கும் பெரும் சந்தேகமே என்னவென்றால், கூட்டத்திற்கு வந்திருந்த பெரும்பாலும்மானோர் வந்து விழுகிறார்களே, அப்படி என்றால் வந்திருந்த ஒருவரிலும் நல்ல ஆவியில் இல்லையா!!
விழுந்து எழுந்து நடந்து வந்த ஒரு முகத்திலும் ஒரு சந்தோஷம் இல்லையே!! பரிசுத்த ஆவி கிடைத்த சந்தோஷமோ அல்லது அசுத்த ஆவி வெளியேறிய சந்தோஷமோ இல்லையே!! அப்படி என்றால் மேடையில் என்ன தான் நடக்கிறது. கீழே விழுந்து எழுந்து போவது வேதத்தில் எந்த வசனத்தின் அடிப்படைஇயில்!?
இதில் விசேஷம் என்னவென்றால் தள்ளி விடுபவர் கீழே விழுவது இல்லை, கீழே விழுபவர்களை தாங்கி கொள்பவர் கீழே விழுவது இல்லை, மேடையில் இருக்கும் மற்றவர்கள் (அபிஷேகம் பெற்றவர்களாம்!!) கீழெ விழுவது இல்லை, அது என்னமோ கீழே விழவேண்டும் என்று வரிசையில் வருபவர்கள் மாத்திரம் கீழே விழுந்து எழுந்து முகத்தை தொங்கப்போட்டு மேடை விட்டு இறங்குகிறார்கள். ஒரு சிலர் மாத்திரம் இவர்கள் எத்துனை தள்ளியும் கீழே விழாமல் வருகிறார்கள்!!
மொத்தத்தில் ஏதோ பீ.சீ சர்கார் மாயாஜால ஷோ பார்த்து வந்த மாதிரியாக இருந்தது. அந்த மைதானத்தில் ஊணமுற்றவர்கள் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தவர்கள் சுகம் பெறாமல் கவனிப்பாரற்று விடப்பட்டார்கள்!! மேடையில் இருக்கும் வல்லமை ஏனோ இவர்களிடம் சென்று அடைவதில்லை என்பது இன்னும் வேதனை!! ஏன் கிறிஸ்தவர்கள் இது போன்ற மாயா ஜாலங்களில் இருந்து வெளிவர தயங்குகிறார்கள்............
இந்த நிகழ்ச்சியை குறித்து இன்னும் விமர்சனம் எழுதுவேன்....
-- Edited by bereans on Tuesday 20th of April 2010 07:27:21 AM
ஒரு சிலர் இரண்டு மூன்று முறை வரிசையில் வந்து விழுந்தது இன்னும் தமாஷாக இருந்தது. மேடைக்கீழ் சில பெண்கள் நின்று கொண்டு, "நான் விழுந்தது சரியாக இருந்ததா"? போன்ற விமர்சனங்கள் செய்துக்கொண்டு இருந்தார்கள். "விழா"வில் விழுந்தவர் ஒருவரிடம் அவர் விழுந்து எழுந்த அனுபவத்தை கேட்டோம். அவர் சொல்லுகிறார், என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அவர் தலையில் கை வைத்தவுடன் கீழே விழுந்துவிடுகிறோம், அவரிடம் அவ்வுளவு வல்லமை இருக்கிறது" என்று தங்களுக்கு இருக்கும் அவிசுவாசத்தையே இன்னும் வெளிப்படுத்துகிறார்கள். மனிதர்களிடம் வல்லமையை எதிர்ப்பார்த்து ஏதோ மந்திரவாதியிடம் போய் வருவது போல் தான் இவர்களும் இருக்கிறார்கள். வேதனை!! சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்று பல முறை மனப்பாடமாக இந்த வசனத்தை சொன்னால் கூட மனிதர்களையே எதிர்ப்ப்பார்த்து வாழ்ந்து (!!) கொண்டு இருக்கிறார்கள்.
இதை விட கொடுமை என்னவென்றால், ஒவ்வொரு ஆறு மாதத்திற்கு ஒரு முறை நல்லா இருக்கிற இந்த ஊரில் இருந்து அசுத்த வல்லமையை விரட்டுகிறார்கள்! ஒரு ஊழியக்காரன் வருவதற்கு மூன்று மாதம் முன்னதாகவே அந்த மைதானத்தில் வந்து "ஜெப வீரர்கள்" ஜெபிப்பது வழக்கம். அதன் பின் அந்த ஊழியர் வந்து அந்த ஊரில் இருக்கும் அசுத்த வல்லமையை துரத்துவார், அவரின் துரத்துதல் ஆறு மாதம் வரை தான் தாங்கும், அதன் பின் அடுத்த ஊழியர் வந்து இதே நாடகத்தை தொடருவார். என் கேள்வியே என்னவென்றால், இந்த ஊரில் 26 சபைகள் இருக்கிறது, தினம் ஜெபிக்கிற ஊழியர்கள் இருக்கிறார்கள், ஏன் அவர்களுக்கு விசுவாசம் இல்லாமல் போய் விட்டதா! ஏன் இந்த அவலநிலை!! ஏன் இந்த ஊரில் இருக்கும் ஊழியர்களுக்கு வல்லமை சரியாக இல்லையா, அப்படி என்றால் அவர்கள் எப்படி அவர்களின் சபை மக்களை வழி நடத்துகிறார்கள்!! ஏன் வெளியில் இருந்து வரும் ஒரு பெரிய (!!) ஊழியரை நம்புகிரார்கள்!! யார் இவர்களுக்கு இந்த அதிகாரம் கொடுத்தது!! அப்படி என்றால் சல்லமை இல்லாத இந்த ஊழியர்களை நம்பி தான் இந்த ஊர் சபை மக்கள் இருக்கிறார்களா!? வெளியில் இருந்து வருகிற ஒரு மாய ஜால ஊழியன் இந்த ஊரில் இருக்கும் கிறிஸ்தவர்களை குறைச்சலாக என்னி ஜெபிக்கிறாரே, இது கேவலமாக இல்லையா?
பென்னி ஹின் ஆரம்பித்து வைத்து பிரபலப்படுத்தின இந்த பழக்கத்தை நம்மவர்களும் கற்றுக்கொண்டு ஜனங்களை விழப்பண்ணுகிறார்கள். இது வேதத்தின்படி சத்தியமா? என்று கேட்க ஒரு ஊழியனுக்கும் நாதியில்லை. ஒன்று அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் அல்லது முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏற்றுக்கொண்டால் அதைத் தானும் கற்பிக்கவேண்டும். ஆனால் இந்த தான் தோன்றி அறிவிலிகள் எல்லாவற்றுக்கும் ஒரு சமாதானத்தைச் சொல்லி வேசித்தனம் செய்துகொண்டிருக்கிறார்களே!
-- Edited by soulsolution on Monday 26th of April 2010 09:21:22 AM