kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒய்வுநாள் / Sabbath!!


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
ஒய்வுநாள் / Sabbath!!


மத்தேயு 12 :2 "பரிசேயர் அதைக்கண்டு, அவரை நோக்கி: இதோ ஓய்வு நாளில் செய்யத்தகாததை உம்முடைய சீஷர்கள் செய்கிறார்களே என்றார்கள்"

மத்தேயு 12 :10 "ஓய்வு நாளில் சொஸ்தமாக்குகிறது நியாயமா? என்று கேட்டார்கள்"

இப்ப‌டியாக‌ கிரிஸ்துவும் அவ‌ரின் அப்போஸ்த‌ல‌ர்க‌ளும் ஒய்வு நாளை ச‌ரி வ‌ர‌ அனுச‌ரிக்க‌வில்லை என்று குற்ற‌ம் சும‌த்த‌ப்ப‌ட்டார்க‌ள். ஆனால் இன்ரு சில‌ரோ, நியாய‌ப்பிர‌மான‌ம் அப்ப‌டியே தேவை என்று போதித்து வ‌ருகிறார்க‌ள். போக‌ட்டும்,

என் கேள்வியே,

ஏன் இயேசு கிறிஸ்து பெரும்பாலும் ஒய்வுநாளிலே ஜ‌ன‌ங்க‌ளை சுக‌ப்ப‌டுத்தி வ‌ந்தார்? ஏன் வேண்டுமென்றே ஒய்வு நாள் க‌ட்ட‌ளையை மீறீனார்?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Member

Status: Offline
Posts: 147
Date:



-- Edited by chillsam on Wednesday 8th of September 2010 05:02:41 PM

__________________
"Praying for your Success"


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அதாவது அவருக்கே தெரியாமல் தேவனின் சித்தம் இல்லாமல் ஏதோ மீறி விட்டாரா? கேள்வியே அவர் மீறிவிட்டார் என்பது தான்! அதில் என்ன திட்டம் இட்டு திட்டம் இடாமல் என்பது. தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? ஏன் மீறினார் என்பதர்கு பதில் தாருங்கள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

இந்த ஓய்வு நாளில் செய்யப்பட்ட அற்புதங்கள் அனைத்தும் அந்த மகா பெரிய ஒய்வு நாளான 1000 வருட அரசாட்சியில் நடக்கயிருக்கும் இளைப்பாறுதலின் காலத்தை குறிக்கும் ஒரு முன்னோட்டமே, ஒரு Trailor.

அந்த மாபெரும் 1000 வருட ஆரசாட்சியில் எல்லா தீமைகளும் ஒழிந்து போய், ஏசா 35ல் சொல்லப்பட்ட அனைத்தும் நடக்கும். 35:3,4ல் சொல்லப்பட்டது போல், இதோ நம் தேவன் சீக்கிரமாக வருகிறார், அவர் வந்து நம் அனைவருக்கும் சுகம் தருவார், என்று சொல்லி திடப்படுத்துவதே அந்த நற்செய்தி. எத்துனையோ கோடிகள், இந்த சுவிசேஷத்தை அறியாமல் மரித்திருக்கிறார்கள், ஆனால் நமக்கு தெரிந்து எத்துனையோ நோயாளிகள் சுகம் கிடைக்காமல் மரணத்தை நோக்கி பயனித்திக்கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன ஆறுதல், இதை தான் ஏசா சொல்ல சொல்லுகிறார், "தளர்ந்த கைகளை திடப்படுத்தி, தள்லாடுற முழங்கால்களைப் பலப்படுத்துங்கள், மனம் பதறுகிறவர்களைப்ப் பார்த்து; நீங்கள் பயப்படாதிருங்கள், திடன் கொள்ளுங்கள்; இதோ உங்கள் தேவன்.......வந்து உங்களை இரட்சிப்பார் என்று சொல்லுங்கள்".

இதை சொல்லுவதை விட்டு விட்டு, "இப்பொழுதே செய்யும், இப்பொழுதே சுக படுத்தும், Do it now, right now! " போன்ற வார்த்தைகளால் சுவிசேஷம் அல்ல தேவனுக்கு கட்டளை கொடுக்கிரார்கள் இந்த ஊழியர் கூட்டம். அந்த மகா பெரிய ஒய்வு நாளில் (ஒரு நாள் என்பது 1000 வருடங்கள்) தேவன் செய்ய இருக்கும் காரியங்களை இன்று இவர்கள் நாங்கள் நடப்பித்து கான்பிக்கிறோம் என்பது எத்துனை பெரிய அபத்தம் என்றும் இதை நம்பி இருக்கும் கூட்டமும் இதை உணர்ந்துக்கொள்ளாமல் இருக்கிறார்கள். கிறிஸ்து பூமியில் இருக்கும் போது கூட இஸ்ராயேல் அனைத்தும் சுற்றி திரிந்தாலும் அனைவருக்கும் சுகம் தராமல் அநேகருக்கு தான் சுகம் தந்தார். அவருக்கு தெரியும், இந்த சுகம் பெற்றவர்களும் மீண்டும் அதே நிலைக்கு போய் மீண்டும் மரிப்பார்கள் என்று ஆனால் காலம் ஒன்று வருகிறது, அதில் அனைவரும் அனைத்து சுகமும் பெறுவார்கள் என்று. அவர் உயிர்த்தெழ செய்த லாசரு மீண்டும் மரித்து விட்டிருப்பான், ஆனால் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த பின் அதன் பலனாக உயிர்த்தெழ போகும் யாரும் மீண்டும் மரிக்கப்பொவதில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை, ஏனென்றால் உயிர்த்த இயேசு இனி ஒரு போதும் மரிப்பதில்லை, இது தான் நற்செய்தி, இது தான் சோர்ந்து போயிருக்கும் நண்பர்கள், துயறுற்றோர், துன்பம்படுவோர் அனைவருக்கும் மகிழ்சியை தரும் செய்தி." இந்த மாபெரும் ஒய்வு நாளில் நடக்க இருப்பதை காண்பிக்கவே இயேசு கிறிஸ்து அன்று யூதர்களின் ஓய்வு நாளில் சில முன்னோட்டங்களை செய்து யூத சட்டத்தை மீறுவதாக் குற்றம் சுமத்தப்பட்டார்!! அதாவது நியாயப்பிரமான கிரியைகளினால் அல்ல மாறாக கிறிஸ்துவின் ஜெயத்தால் அனைத்தும் ஆகும் என்பதை சொன்னார். காதுள்ள அவரின் சீஷர்கள் அதை புரிந்துக்கொண்டனர், மற்றவர்கள் இன்று வரை "மேசியாவே வாரும்" என்று அவரின் முதல் வருகையை சொல்லி வருகிறார்கள்!!

ஏசா 35ல் சொல்லப்பட்ட அனைத்தும் நடந்தேறும் என்பதில் யாருக்கும் ஏதாவது சந்தேகம் இருக்கிறதா?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard