இதோ மற்றும் ஒரு ஈஸ்டர் பண்டிகை நாள் கிறிஸ்தவர்களுக்கு வந்து விட்டது. இந்த பண்டிகைக்கு நாள் குறித்த சபை கொஞ்சக்காலம் முன்பு வரை மற்ற சபைகளுக்கு எதிரி சபையாகவும், துருபதேசங்கள் தந்த சபையாகவும், விக்கிரக ஆராதனை செய்யும் சபையான கத்தோலிக்க சபையே!! ஆனால் இன்று கதை மாறி விட்டது. இன்று சபைகள் அனைத்தும் ஒன்று கூட பிரயாசம் செய்கிறது. இது வெளிப்படுத்தின விசேஷம் சொல்லுவது போலவே நடந்தேறுகிறது என்பதில் தான் வேதத்தை தியானிக்கும், சத்தியத்தை விரும்பும் கூட்டத்தாருக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
வெளி. 13:"11. பின்பு, வேறொரு மிருகம் பூமியிலிருந்து எழும்பக் கண்டேன்; அது ஆட்டுக்குட்டிக்கு ஒப்பாக இரண்டு கொம்புகளையுடையதாயிருந்து, வலுசர்ப்பத்தைப்போலப் பேசினது.
12. அது முந்தின மிருகத்தின் அதிகாரம் முழுவதையும் அதின் முன்பாக நடப்பித்து, சாவுக்கேதுவான காயம் ஆறச்சொஸ்தமடைந்த முந்தின மிருகத்தைப் பூமியும் அதின் குடிகளும் வணங்கும்படி செய்தது.
13. அன்றியும், அது மனுஷருக்குமுன்பாக வானத்திலிருந்து பூமியின்மேல் அக்கினியை இறங்கப்பண்ணத்தக்கதாகப் பெரிய அற்புதங்களை நடப்பித்து,
14. மிருகத்தின்முன்பாக அந்த அற்புதங்களைச் செய்யும்படி தனக்குக் கொடுக்கப்பட்ட சத்துவத்தினாலே பூமியின் குடிகளை மோசம்போக்கி, பட்டயத்தினாலே காயப்பட்டுப் பிழைத்த மிருகத்திற்கு ஒரு சொரூபம் பண்ணவேண்டுமென்று பூமியின் குடிகளுக்குச் சொல்லிற்று"
இப்படியாக ஆட்டுகுட்டி போல் இருந்துக்கொண்டு மிருகத்தின் சத்தத்தில் பேசும் காரியம் இப்பொழுது நிகழ்ந்துக்கொண்டு தான் வருகிறது. தன்னை தாய் திருச்சபை என்று சொல்லி வந்த சபையை எதிர்த்த அனைத்து சபைகளும் இன்று அந்த சபையோடு ஒன்று கூட பிரயாசம் நடந்து வருவதை யாராலும் மறுக்க முடியாது. கொஞ்ச காலம் முன்பு வரை அந்த சபையில் அனைத்தும் தப்பிதங்களாக இருந்தது, ஆனால் பிற சபைகளோ இன்று அவர்கள் முடிவு செய்த குறுத்தோலை ஞாயிறு பெரிய வெள்ளி, மற்றும் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதில் தவறுவதில்லையே!!
மார்ட்டின் லூத்தரால் அந்திகிறிஸ்து (மிருகம்) என்று சொல்லப்பட்ட சபையின் பண்டிகை நாட்களை பின் பற்றுவதில் தவறில்லை என்கிற அளவிற்கு மற்ற சபைகள் (ஆட்டுக்குட்டி) வந்து விட்டது. தீர்க்கதரிசனங்கல் அனைத்தும் நடந்தேறுவதற்கு தேவனுக்கு நன்றி செலுத்துவோம்.
இன்றும் ப்ரோட்டஸ்டாண்டு என்று அழைக்கப்படுகிற பாரம்பரிய CSI, லுத்தரன் போன்ற சபைகள் மறைமுகமாக கத்தோலிக்க சபையை அங்கீகரித்தாலும் வெளிப்படையாக எதிர்ப்பதில்லை. தேவைப்பட்டால் கூட்டுசேர தயங்குவதுமில்லை. இது இப்படியிருக்க தங்களை ஆவிக்குரிய சபைகளாகக் காண்பித்துக்கொண்டிருக்கும் பெந்தேகோஸ்த் சபைகள் இந்த இரண்டு பிரிவுகளையுமே (R.C, Protastant) மறைமுகமாக கேலிசெய்வதுமட்டுமன்றி இந்த சபைகளிலிருந்துதான் தங்கள் சபைகளுக்கு ஆள் சேர்க்கின்றனர். நான் CSI யிலிருந்து 'இரட்ச்சிக்கப்பட்டவன்' என்று சாட்சி சொல்லும் அநேகரைக் காணமுடியும்.
ஆனாலும்,
இவர்கள் எல்லாருமே தேவைப்படும்போது சுயலாபத்துக்காக ஒன்றுகூடத் தயங்குவதில்லை. ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்த்து எவனுமே பேசுவதில்லை. கேட்டால் போப் மன்னிப்பு கேட்டுவிட்டார் என்பார்கள். அதேபோல ஆவிக்குரிய பெந்தேகோஸ்தே (அட்)ஊழியர்கள் பாரம்பரிய சபைகளில் போய் செய்திகொடுக்கிறார்கள். இந்த லூசு பாரம்பரியங்களும் ஏதோ இவர்களிடத்தில் இல்லாத ஆவிக்குரிய காரியங்கள் ஆவிக்குரிய பெந்தேகோஸ்த்காரன்களிடம் இருப்பதாக எண்ணிக்கொண்டு அவர்களை 'கனம்' பண்ணுகிறார்கள். ஒன்றுமட்டும் நிச்சயம் இந்த எல்லா குழப்பவாதிகளும் ஒன்றாக சேர்ந்துகொண்டிருக்கும் இந்தக்காலம் வேதத்தில் முன்னுரைக்கப்பட்டு நிறைவேறிவருகிறது.
இவை மொத்தமாக விழுந்து போகும் காலமும் வெகுதூரத்தில் இல்லை.
எல்லா மதங்களிலும், எல்லா மார்கங்களிலும் நடக்கும் சில அற்புதங்கள் அடையாளங்கள் நாங்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செய்கிறோம் என்று பிதற்றி தள்ளுகிற இன்றைய (அட்)ஊழியர்கள் ஒரு பெரிய மாபெரும் அற்புதம் அதையும் கிறிஸ்து இயேசுவே செய்ய இருக்க போவதை சொல்ல மறுக்கிறார்களே!!
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நாளாக "ஈஸ்டர்" என்கிற புறமதத்திலிருந்து வந்த பண்டிகையை கொண்டாடும் இவர்களுக்கு, இவர்களை பெரிய ஊச்ழியர்கள் என்று என்னிக்கொண்டு கண்மூடித்தனமாக இவர்கலை தலை மேல் தூக்கி வைத்திருக்கும் கூட்டத்தாரே, இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலினால் மாம்சமான யாவரும் உயிர்த்தெழுவார்கள், இதை காட்டிலும் ஒரு பெரிய அற்புதத்தை எந்த ஒரு மதமோ மார்கமோ (கிறிஸ்துவை போதிக்கிறோம் என்று சொல்லுபவர்கள் உட்பட) போதிப்பதில்லை, ஏன், இதை விசுவாசிப்பதுக்கூட இல்லையே!!
நாங்களோ கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலும் அதன் பலனாக எந்த ஒரு மனுஷனும் உயிர்த்தெழுவான் என்கிற நற்செய்தியை இந்த நாளில் மீண்டும் தெரிவித்துக்கொள்கிறோம்.